தவக்காலம் / LENTEN SEASON
மனித உடம்பு உலகிற்கு வரும்போது களங்கம் இல்லை. வாழ்க்கை என்னும் ஓட்டத்தில், வாழ்வுப்பயணத்தில், சிலவற்றை அனுபவத்தில் இவ்வுலக வாழ்வு நிரந்தரம் இல்லை என்பதை அறிந்து வாழ்வை ஒரு கற்பனை அற்ற நிஜத்திட்குள் வாழத்துடிக்கும் துடிக்கும்போது பாதி வாழ்வு முடிந்து விடுகின்றது. மீதி வாழ்வை உண்மையோடு வாழ மனிதன் விரும்பும்போது நெற்றியில் வந்து திலகமிடுகின்றது சாம்பல். வாழ்வின் நிலையாமையை எடுத்துச்சொல்லும் விபூதிப்புதன் இன்று. இவ்வுலகில் தரித்துவிட இது இது உண்மையான இருப்பிடம் அல்ல என்பதை மெய்ப்பிக்கும் காலம் வந்து விட்டது. மனிதன் பூவுக்கும் புழுவுக்கும் சமனானவன் அவனது வாழ்வு காலையில் மலர்ந்து மாலையில் வாடிவிடும் மலருக்கு ஒப்பானது. ஒருநாளுக்கும் குறைவான ஆயுள் காலத்தை கொண்டு இராத புழுவைப்போல அவனது இவ்வுலக வாழ்வு நிலையாமையை கொண்டுள்ளது என்பதை இதயத்திலும், மனதிலும் அறைந்து சொல்லும் காலத்தில் நாம் காலடி எடுத்து வைத்துள்ளோம்.
ஆக நாற்பது நாட்கள்
வழமைக்குள் பழமையாக வந்து விட்டது தவக்காலம். என்ன கோணி உடுத்தி சாம்பலில்
அமர்ந்து உணவைத்துறந்து நாம் அமரப்போகின்றோமா என்ன? தவக்காலம் தன்பாட்டில் வந்து
விட்டுபோகின்றது. நாம் எம்பாட்டில் இருந்து விட்டு போகப்போகின்றோம். பெரிதாக ஒரு
வித்தியாசம் காணக்கிடைக்கப்போவது இல்லைத்தானே. என்ன அப்படிசொல்லிவிட்டால் இந்த
நாற்பது நாளை அப்படியே விட்டு விடமுடியுமா? தீர்க்கமாக எப்படி கழிப்பது என்று இதன்
முந்தின பதிவில் தந்து உள்ளோம் அதையும் இதனுடன் சேர்த்து ஒன்றை
சொல்லிவிடவிரும்புகின்றோம் நம் ஆண்டவரின் அன்பு அவரின் பாடுகள் மரணம் உயிர்ப்பு
என்பவற்றால் மனித குலத்திற்கு தரப்பட்ட ஒப்பற்ற விலையை எத்தனை நாற்பது நாட்கள்
கொண்ட தவக்காலம் வந்தாலும் மனிதனால் பிரதி விலை கொடுத்து எதுவுமே
செய்துவிடமுடியாது என்பது திண்ணமான உண்மை.
1. தவக்காலத்தின் ஆரம்பத்தில்
இருந்தே ஒவ்வொரு நாளும் முப்பது நிமிடங்கள் செபிக்க செலவிடுங்கள். இதற்கு தூய
ஆவியானவரின் பரிசுத்த வழிகாட்டுதலை கேளுங்கள். நடைமுறைக்கு சாத்தியமான சில
தீர்மானங்களை எடுங்கள். அதிகம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.
முப்பது நிமிடங்கள் செபிக்க முன்பு உங்கள் தொலைபேசி மற்றும் கம்ப்யூட்டர்
என்பனவற்றை ஓய்வில் வையுங்கள். உங்கள் முப்பது நிமிடங்களுக்கு தயவு செய்து எந்த
இடையூறும் வராமல் முன்பே பார்த்துக்கொள்ளுங்கள்.
2. அதிகாலை வழமைக்கு முன்பாக
பதினைந்து நிமிடங்கள் எழுந்து விடுங்கள். அந்த பதினைந்து நிமிடங்களில் கடவுளுக்கு அவர் செய்த எல்லாவற்றுக்கும்
நன்றி மட்டும் சொல்லுங்கள்.குறிப்பாக உங்கள் வாழ்வு என்னும் கொடைக்காக இந்த நன்றி
அமைதல் நன்று. அந்த நாளை கடவுளுக்கு முழுமையாக ஒப்புகொடுங்கள்.
3. ஒவ்வொரு நாளும் தவறாமல்
திருப்பலியில் கலந்து கொள்வது நல்லது.
4. அப்படி ஒவ்வொரு நாளும்
திருப்பலியில் கலந்து கொள்ளமுடியாவிடால் ஞாயிறு திருப்பலியோடு மேலதிகமாக
வெள்ளிகிழமையன்றும் திருப்பலியில் கலந்து கொள்ளவது நன்று. வெள்ளிகிழமை குறிப்பாக
உங்களுக்காக கடவுள் மகன் உயிர் கொடுத்ததை எண்ணி நன்றி சொல்லுங்கள்.
5. கிழமையில் ஒருநாள் நற்கருணை
அரைமணி ஆராதனை செய்யுங்கள். நற்கருணை முன்பாக செலவழிக்க இது வழி செய்யும்.
6. கத்தோலிக்க பாரம்பரியத்தில்
அடிக்கடி நற்கருணை சந்திக்கும் வழமை உண்டு. இதை ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐந்து
நிமிடங்கள் கடவுளுக்கு கொடுக்கலாம்.
7. இந்த நாற்பது நாட்களில்
குறைந்தது ஒருமுறை என்றாலும் நல்லதொரு பாவசன்க்கிர்த்தனம் செய்யுங்கள். ஆன்ம
பரிசோதனை செய்து கடவுள் முன் இன்னும் தூய்மைக்காக மன்றாடிக்கொள்ளலாம்.
8. பாவசங்கிர்த்தனத்தில்
தரப்பட்ட உண்மையான பாவத்திற்கான பிரதிக்கினையை முழுமனதோடு நிறைவேற்றுங்கள்.
10. இன்னும் மேலதிகமான தப
செயல்கள் செய்யலாம். இது ஆழமாக கடவுளோடு நம்மை நெருக்கமாக கொண்டுபோய்ச்சேர்க்கும்.
11. வேதாகமம் அதாவது இறைவார்தையை
வாசிக்க கற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐந்து நிமிடங்கள் இறைவார்தையை
வாசிக்க நேரம் ஒதுக்குங்கள்.
12. உங்களால் திருப்பலியில்
கலந்து கொள்ள முடியாவிட்டால் கம்ப்யூட்டரில் உள்ள ஆன்லைன் வேதாமாக பக்கங்களை
திறந்து அங்கு தரப்பட்டுள்ள நாளாந்த வாசகங்களை முழுவதும் தியானத்தில் சித்தித்து
கழியுங்கள். குறிப்பாக இந்த தவக்காலத்தில் வாசகங்கள் ஒழுங்கு முறையாக ஒவ்வொருநாள்
தலைப்புகளில் அமைத்திருக்கும். உங்களுக்கு பிடித்த வாசக வார்த்தை வசனங்களை
உங்களுக்கு தெரிவதுபோல எழுதி ஒட்டி விடலாம், போகும்போதும் வரும்போதும் அந்த வசனம்
வார்த்தையைத்தியானிக்கலாம்.
13. திருச்சபை அமைத்துள்ள
செபத்தைமுழுமனதோடு ஒருமித்து சொல்லலாம். அல்லது அப்படி செபிக்க முடியாவிட்டால்
திருஇரத்தம் பிரார்த்தனை சொல்லலாம்.
14. திருச்சபையின் தந்தையர்கள்
எழுதிய தவக்காலத்தைப்பற்றி பற்றிய மறையுரைகளை தியானித்து மனதுருக்கத்துடன் மெளனமாக
வாசித்து தியானிக்கலாம்.
15. ஒவ்வொரு வெள்ளியும்
திருசிலுவைப்பாதை செய்யலாம். இதை குழுவாகவோ அல்லது தனியாகவோ செய்யலாம். அல்லது
குடும்பமாக செய்யலாம்.
16. துக்கமறை இரகசிய செபமாலையை
மிகவும் பக்தியோடு செபிக்கலாம்
17. இறைவார்த்தை அடங்கிய செபமாலை
ஒன்றை சொல்லலாம். குறிப்பாக செபமாலை சொல்லும்போது வேதாமாக சிந்தனையை உள்ளடக்குவது
நன்று.
18. குடும்பமாக திருசெபமாலை
சொல்லாது இவ்வளவு காலமும் இருந்தால் உடனே அதை ஆரம்பிப்பது நன்று. அதை கிழமையில்
ஒரு அல்லது இருநாட்கள் சொல்லுவது நன்று.
19. ஒவ்வொருநாளும் ஒருமுறை
அல்லது இருமுறை எந்த இடத்தில் இருந்தாலும் கண்களை மூடி ஒருவினாடி “யேசுவே நான்
உம்மை அன்பு செய்கிறேன்” என்று சொல்லுவது நன்று.
20. திருத்தந்தையின்
கருத்திற்காக ஒரு பரலோகமந்திரம் சொல்லுவது நன்று. அவரின் நல்ல உடல் நலனுக்காக
செபிப்பது நன்று.
21. உமது மறைமாவட்ட
ஆயருக்காகவும், எல்லா ஆயர்களுக்காகவும் செபிப்பது நன்று
22. பல லட்சக்கணக்கான
கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ விசுவாசத்தினை பெற்றதினால் பலவிதமான துன்பங்களுக்கு
ஆளாகுகின்றார்கள். அவர்களுக்காக செபிக்கலாம்.
23. கிறிஸ்தவர்களே பல சபைகளாக
பிரிந்து செயற்படுகின்றார்கள். அவர்கள் ஒருமித்து வரவேண்டும் என கிறிஸ்தவ
ஒற்றுமைக்காக செபிக்கலாம்.
24. நற்செய்தியை இன்னும்
ஆர்வத்தோடு அறிவிக்கவேண்டும் என்னும் கருத்தை முன்வைத்து செபிக்கலாம்.
25. உங்களுக்கு பிடிக்காத
நபர்களுக்காக செபிக்கலாம். குறிப்பாக உங்களை மனரீதியாக காயப்படுத்தியவர்களுக்காக
செபிக்கலாம்
26. கருவில் சிதைத்து மரணிக்கும்
உயிர்களுக்காக செபிக்கலாம்.
27. உள்நாட்டு கலவரங்களில்
சிக்கி துன்புறும் மக்களுக்காக செபிக்கலாம்
28. மரண தண்டனை எதிர்நோக்கி
உள்ளவர்கள், சிறையில் உள்ளவர்கள், வன்கொடுமைக்கு உள்ளானவர்கள், வீடுவாசலை
இழந்தவர்கள், வீதிகளில் தூங்குபவர்கள், உணவு உடை இருக்க வீடு என துன எதுமே இல்லாது
துன்புறு கின்றவர்களுக்காக செபிக்கலாம்.
29. உண்ணா நோன்பினை மனதுருகி
உண்மையான உள்ளத்தோடு செய்யலாம்.
30. இந்த தவக்காலத்தில் ஒரு நாளை
ஞானவொடுக்கத்தில் செலவழிக்கலாம்.
31. ஒரு புனிதரின் சுயசரிதையை
வாசிக்கலாம். புனித திரேசா அவிலாவின் சுயசரிதை நன்று.
32. திரைப்படங்கள் பார்ப்பதை
நிறுத்தி உண்மையான அர்த்தம் தரும் இயேசு என்னும் பொருளில் உள்ள
திரைப்படங்ககளை வீட்டில் இருந்தவாறே பார்க்கமுடியும்.
33. தவக்காலம் சார்ந்த உரைகளை
கேட்கலாம்.
34. ஆடம்பர களியாட்ட செலவுகளை
வெட்டி அல்லது குறைத்து அந்த பணத்தை ஒரு அப்போஸ்தல பணிக்காக கொடுக்கலாம்.
35. பொதுப்பணி மன்றங்கள் அல்லது
பெற்றோரின் அன்பை இழந்த பிள்ளைகளின் இல்லங்கள், வயோதிப முதியவர்கள் இல்லங்கள்
என்பனவற்றை தரித்து சிரமதானம், உதவு, என்பனவற்றுக்கு உழைக்கலாம்.
36. மருத்துவமனையில் உள்ள
நோயாளர்களை ஒருநாள் சந்திக்கலாம். அங்கு ஒரு சிரமதானம் செய்துகொடுக்கலாம்.
37. உங்களுக்கு அயலில் வசிக்கும்
ஒரு கணவனை இழந்த அல்லது மனைவியை இழந்த அல்லது பெற்றோரை இழந்த அல்லது விவகாரத்தில்
தனிமையில் உள்ள ஒருவரை அழைத்து ஒரு நேர உணவு ஒன்றை கொடுக்கலாம்.
38. இயேசுவின் பாடுகள் என்னும்
திரைப்படதைப்பார்த்து அதில் ஆண்டவர் இயேசுவின் பாடுகளை மனதுருகி தியானிக்கலாம்.
அல்லது வன்முறை அல்லாத ஒரு மனித சமுதாயம் மலர என ஒரு தொடர் உரையாடலை நடத்தலாம்.
39. திருயாத்திரைப்பயணம் ஏதாவது
சென்று ஒருநாள் முழுவதையும் அங்கு செலவழிக்கலாம்.
40. பரிசுத்த வாரம் முன்பதாக
முழுமையான வகையில் மேற்சொன்னவைகளை பின்பற்றலாம்.
jtf;fhyk; Vd; 40 ehl;fs;?
1. 40
ehl;fs; kio nga;jJ:
njh. E}y; 7:17. “ehw;gJ ehs;fshfg; ngU nts;sk;
kz;Zyfpy; te;J nfhz;bUe;jJ…”
2. 40
ehl;fs; NkhNr rPdha; kiyapy; nrgk; nra;jhh;:
tpL.g.
24:18 “NkhNr Nkfj;jpd; ,ilNa GFe;J kiyNky;
Vwpr; nrd;whh;. NkhNr kiyapy; ehw;gJ gfYk; ehw;gJ ,uTk; jq;fpapUe;jhh;.
3. 40
Mz;Lfs;> ,];uhNay; kf;fs; ghiytdj;jpy; gazk; nra;jdh;
(,izr;rl;lk; 9:9> jpU.gzp 7:30):
,izr;rl;lk; 2:7 “Vnddpy;… ,g; ngUk; ghiyepyk; topahf ePq;fs;
ele;J te;jpUg;gij
mth; mwpthh;. ,e;j ehw;gJ Mz;LfSk; cq;fs;
flTshfpa Mz;lth; cq;fNshL ,Ue;jhh;.”
4. 40
ehl;fs; - ,iwthf;fpdh; vypah Nehd;G ,Ue;jhh;.
1 murh; 19:8 “mg;nghOJ…
mt;Tztpdhy; typik mile;j mth;> ehw;gJ gfYk; ehw;gJ
,uTk; ele;J> xNuG vd;w flTspd; kiyia
mile;jhh;.
5. 40
ehl;fs; - vr;rhpf;if
Nahdh 3:4 “Nahdh efUf;Fs; nrd;W> xU ehs; KOJk; ele;j gpd;>
cuj;jFuypy; “,d;Dk;
ehw;gJ ehspy; epdpNt mopf;fg;gLk;”
6. 40
ehl;fs; ,NaR Nehd;gpUe;jhh;:
kj; 4:2 “mth; ehw;gJ ehs; ,uTk; gfYk; Nehd;gpUe;jhh;…”
7. 40
ehl;fs; caph;j;j ,NaR rPlh;fSf;Ff; fhl;rp je;jhh;.
jpU.gzp 1:3 “,NaR Jd;Gw;W ,we;j gpd;G ehw;gJ ehshf mth;fSf;F
Njhd;wp>
,iwahl;rpiag; gw;wpf; fw;gpj;jhh;…”
மனித
உடம்பு உலகிற்கு வரும்போது களங்கம் இல்லை. வாழ்க்கை என்னும் ஓட்டத்தில்,
வாழ்வுப்பயணத்தில், சிலவற்றை அனுபவத்தில் இவ்வுலக வாழ்வு நிரந்தரம் இல்லை என்பதை
அறிந்து வாழ்வை ஒரு கற்பனை அற்ற நிஜத்திட்குள் வாழத்துடிக்கும் துடிக்கும்போது
பாதி வாழ்வு முடிந்து விடுகின்றது.
தவக்காலத்தை நம்மில் சிலர்
· சேமிப்புக்காலமாக,
· தம்பட்டக்காலமாக
· நடிப்புக்காலமாக
· உடல் எடையை குறைக்கும் காலமாக
· நேரத்தை மிச்சப்படுத்தும் காலமாக
பார்க்கின்றோம்.
ஆனால் நம்மில் எத்தனை பேர் தவக்காலத்தை ஒரு
Ø தவத்தின் காலமாக,
Ø தயாரிப்புக்காலமாக
Ø உறவின் காலமாக பார்க்கின்றோம்.
தவத்தின் காலம்
தவக்காலம் என்ற உடன் ‘பரிகாரம்’ ‘ஒறுத்தல்’
‘வேதனை’ இவைகள் தாம் நமது மனதிற்கு வருகின்றது. It
is not a season of / for penance.தவக்கால திருப்பலியின் முதல் தொடக்கவுரை தவக்காலத்தை மகிழ்ச்சியின் காலமாக
சித்தரிக்கின்றது. தவம் என்பது ஐம்பலன்களின் அடக்கம். இக்காலத்தில் நம்
ஐம்புலன்களையும் நமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து நெறிப்படுத்த வேண்டிய காலம்.
தயாரிப்புக்காலம்
தொடக்கத்தில் உயிர்ப்புப் பெருவிழாவிற்கான தயாரிப்புக்காக
ஒரு நாள் நோன்பு மட்டும் தான் இருந்தது. ஆனால் பின்னர்
அதுவேபடிப்படியாக இரண்டு நாட்கள், ஏழு நாட்களென்று இறுதியாக நாற்பது நாட்களாக மாறியுள்ளது.இயேசு
பாலைவனத்தில் கழித்த நாற்பது நாட்கள் இதற்கு ஆதாரமாக நிற்கின்றது.
இந்த நாற்பது நாட்களும் திருச்சபையின் முதன்மையான விழாவான
உயிர்ப்பு விழாவிற்கு தயாரிக்கின்ற காலமாக திருச்சபை தந்துள்ளது.
உறவின் காலம்
தவக்காலம் அர்த்தமுடன் இருந்திட திருச்சபை நம்மை நோன்பு
இருக்கவும், தானம் செய்யவும், ஜெபிக்கவும் அழைக்கின்றது. இவை மூன்றுமே உறவினை
வலுப்படுத்துகின்றது.
நோன்பு -
என்னொடு உள்ள உறவினை வளர்க்கின்றது
தானம் -
பிறரோடு உள்ள உறவினை வளர்க்கின்றது
ஜெபம் -
கடவுளோடு உள்ள உறவினை வளர்க்கின்றது
ஆக இந்த தவக்காலத்தை
தவத்தின்
காலமாக
தயாரிப்பின்
காலமாக
உறவின்
காலமாக மாற்றுவோம்.