மனமாற்றமா? மதமாற்றமா?
விழித்திருக்க கல்வி, தனித்திருக்க சிந்தனை, விலகிருக்க மதம்
கல்லூரியில் எங்கடா மதம் என்று நாம் சொல்லிக் கொள்கின்றோம் ஆனால் அங்கு தான் மதம் பார்க்கப்பட்டு சேர்கை நடக்கின்றது. வகுப்பில் ஒரே பெஞ்சில் இந்து கிரிஸ்டியன் முஸ்லிம் என்று உட்கார்ந்து கல்லூரி இளங்களை படிப்பை தொடர்ந்த காலம.; ஆனால் முதுகலை படிப்பை தொடர்ந்த நேரத்தில் என்னிடம் பயிலும் மாணவர் பலமுறைக்கேட்ட கேள்வி என்னை சிந்திக்க வைத்தது. நான் கிருஸ்தவன் என் நண்பர் (மாணவன்) இந்து, அவன் என்னிடம் அடிக்கடி கேட்பது ஏன் நீங்கள் மதம் மாற்றுகின்றீர்கள்? என்று, என்பதில்களை அவன் ஏற்றுக்கொள்வதாக இல்லை. இறுதியில் நீங்கள் மதம் மாற்றுகின்றீர்கள் என்றான். பல செய்திகளை தகவல்களைப்பற்றி பேசினாலும் அவன் இறுதியாக கேட்பது ஏன் மதம் மாற்றுகின்றீர்கள் என்று? மீண்டும் என் விவாதத்தை எடுத்துவைத்தாலும் அவன் ஏற்றுக்கொள்வதாக இல்லை என்பதை தின்னமாக அவன் உடற் சைகையிலும் வார்த்தையிலும் தொரிந்தது.
என் நண்பனிடம் கேட்டேன் ஏன் நீங்கள் இதை தொடர்ந்து கேட்டுகொண்டிருக்கின்றாய் என்றபோது அவன் சொன்னது. என்னுடை உறவினரினுடைய குழந்தை கிருத்தவ நிறுவனத்தில் பகில்கின்றது நாங்கள் கோயிலுக்கு சென்றபோது அவன் இயேசுவே, அல்லோலூயா என்று கத்துகின்றான் அந்த அளவுக்கு அவனை மாற்றி வைத்திருக்கின்றார்கள். அதற்கு பதில் நான் கூறினேன், எங்கள் கிறித்தவ நிறுவனங்களில் ஒழுக்கம், ஆன்மீகம் மற்றும் கல்வி இது மூன்றும் முக்கியமானது அதனால் நாங்கள் இவற்றை கொடுக்கின்றோம். ஆனால் நான் பதிய விரும்புவது “எந்த மதத்தையும் அறிவிக்க கூடிய அடிப்படை சட்டம் உள்ளது, உரிமையுள்ளது” எனவே நாங்கள் செய்வது சரியே யாரையும் நாங்கள் வற்ப்புறுத்துவது கிடையாது. நண்பனிடம் கூறினேன் நீங்கள் கிருஸ்தமல்லாத நிறுவனத்தில் அல்லது அரசு கல்வி கூடங்களில் சேர்க்கலமே அங்கு மனம் மாற்றப்படுவதில்லை என்றேன். அவன் அமைதி காத்தான் பள்ளியினாலே படிப்பதற்குமட்டும் தானே அப்பரம் எதற்கு கிருஸ்துவை பற்றி கூறிகின்றீர்கள் என்று. நல்ல கிருஸ்தவர்களை உருவாக்க நாங்கள் முன்னுரிமை கிருஸ்தவர்களுக்கு கொடுக்கவும் அவர்களை நல்ல குடிமக்களாக உருவாக்குவதே எங்கள் கடமை என்றேன். எத்தனை இந்து சார்ந்த நிறுவனங்கள் மற்ற மதத்தினரையும் பாராது வழிபாடு செய்கின்றார்கள் மற்ற மதத்திற்கும் வழிபாட்டுக்கும் இடமில்லை. எங்கே மும்மத பிரத்தனை பள்ளியிலும் கல்லூரியிலும் நடைபெறுகின்றது? இளங்களை படித்தபோது தினமும் இந்துக்கள் பாடல்கள்தான் கேட்டேன் எனக்கு கற்பித்த பேராசிரியர்கள் இந்துகளே, நான் மாறவில்லை ஆனால் இந்துமதத்தின் கோட்பாடுகளை கற்றுக்கொண்டேன். எனக்கு நல்ல மாணவ மாணவியர் ஆசிரியர்கள் நண்பர்கள் கிடைத்தார்கள்.
மேற்படிப்பு சென்ற கல்லூரியில் படித்த மற்ற மாணவர்களும் பேச முன்வரவில்லை என்ன என்று நான் ஆராய்ந்த போது நான் கிருஸ்தவன் மற்றவர்கள் எல்லாம் இந்துக்கள். நான் என்னிடத்தில் நான் சொல்லிக் கொண்டது நான் படிக்க வந்தோன் மதமாற்ற அல்ல. மறுபக்கம் என் சிந்தனை நான் அவர்களைவிட வயதில் முதியவன் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று என்னினேன்.
என் நண்பருக்கு நாங்கள் மதம்மாற்ற வில்லை மனதை மாற்றுகின்றோம் நல்ல குடிமகனாக வாழ என்பதை புரிய வைப்பதற்காக என் கல்லூரி நண்பருக்கு ஒரு யூ டீயூப் விடியோவை அனுப்பினோன், அதில் எம்.பி. திரு, பியூஷ் கோயல்
தொன் போஸ்கோ முன்னால் மாணவர்கள் கருத்தரங்கில் அவர் பகிர்ந்து கொண்டார். அவர் கிருஸ்தவ பள்ளியில் படித்ததால் அவர் மதம் மாறவில்லை மாறாக அவர் மனம் மாறினார் என்றும் பள்ளியிலுள்ள சிற்றாலயம் எப்போதும் திறந்திருக்கும் ஆனால் நாங்கள் அங்கு விளையாட சென்று இருக்கின்றோம். பலமுறை அவர் அச்சிற்றாலயத்திற்கு சென்றதாகவும் அதனால் நான் மதம் மாறவில்லை. பள்ளியிலுள்ள அருட்தந்தையர்கள் அவர் தவறு செய்தபின் அவரை பலமுறை மன்னித்து மேலும் அவருடைய திறமையை வளப்பதற்கு உந்து சக்தியாக இருந்தனர் என்று கூறினார். ஆதனால் தான் நான் இன்று உயர்ந்த இடத்தில் எல்லோரும் மதிக்கும் வன்னம் இருப்பதாக கூறினார்.
என்னுடை கருந்து என்னுடைய நண்பருக்கு யாரும,; அவர்களுடைய மதத்திலிருந்து விட்டு எளிதாக மாறிவிடுவதில்லை அவர்கள் அவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் நல்ல மதிப்பீடுகளை எடுத்து சொல்கிறார்கள். கிறிஸ்துவையல்ல, கிருஸ்தவனாக அல்ல மாறாக நல்ல குடிமாகனாக உலகத்தில். இதுவே கிருஸ்துவம் விரும்பிகிறது. முனிதனை மனிதன் மதிக்கும் போது அவன் அவனாக இருக்கின்றான் ஆனால் மனிதனையே மனிதன் மிதிக்கும் போது மன்மட்டும் மாறுவதில்லை மதத்தையும் மாற்றிவிடுகின்றான். எங்கு மனிதன் மதிக்கப்படுகின்றானோ அங்குதான் கடவுள் வாழ்கிறார். கடவுள் எல்லோரையும் தம் சாயலில் படைத்தார் மனிதருக்குள் வேறுபாடுகள் ஏன்? மதம், பணம், சாதி, பதவி என்று மனிதன் பாகுபடுத்தி பாமரமக்களை அடிக்கியாள கையாளுகின்ற உத்தியாக நான் கருதுகின்றேன். ஆதிக்கவர்கம் செய்யும் அனைத்தையும் வெளிப்டுத்தும், விழிப்புணர்வையும் கல்வியையும் புகட்டும் கிருஸ்தவன் மதம் மாற்றுகிறான் எனவே அவனை கிருஸ்து எவன்? என்று ஒதுக்கி பிரித்து ஆழும் வர்க்கம் செய்யும் சூழ்ச்சியம் எனலாம். வாசியுங்கள் பல நூல்களை அது உங்கள் அறிவு கண்களைத் திறக்கும் அப்போது உங்கள் உரிமைக்காக நீங்கள் போராடுவீர்கள். பெரியார், அம்பேத்கர் காட்டிய வழிகளை கையாளுங்கள் இளம் உள்ளங்களே அப்போது புரியும் கிருஸ்தவன் மதம் மாற்றுகின்றானா? அல்லது மனதை மாற்றி புதிய சமூதாயத்தை படைக்க விரும்பிகின்றானா? எல்லோரும் நலமாக வழமாக வாழ்வதே நான் விரும்புகின்றேன்.
என் கிருஸ்துவை ஏற்றுக்கொள்கிறார்கள்? என்று சிந்தனை செய்யும்போது விவிலியத்திலிருந்து நான் மேற்கோள் காட்ட விரும்புகின்றேன். மத்தேயு 5: 3-12 உணவில்லாத நபருக்கு உணவு, உடையில்லாருக்கு உடை, சிறையிலிருந்தபோது சந்திப்பு என்று இயேசு போதித்ததை செயலாக்குவது எம் கிருஸ்தவர்களி;ன் கடமை.
கல்வியில்லாருக்கு கல்வி, உண்மையை விலக்கி கூறி அவர்களுடைய உரிமைகளை தக்க வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல். ஆதிக்க வர்க்கத்திற்கு எதிராக அவர்கள் தங்கள் உரிமைகளை கேட்கும்போது அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத சூழலில் யார் இதை இவர்களுக்கு சொல்லியிருக்க கூடும் என்று அறியும்போது அங்கு தான் கிருஸ்தவன் மதம் மாற்றுகின்றான் என்ற தப்பறையை கொண்டு வந்து கீழ்தட்ட படிக்காத மக்கள் அப்படியே இருக்க வேண்டும் என்று என்னுகிறான். இதையும் இனியுமா நம்பும் நம் சமூகம் என்று நினைத்தேன் வளரும் இளம் தலைமுறையினர் மனதில் விதைக்கப்பட்டு இருக்கிறது என்பதை உணர்ந்தேன். பல்வேறு கிருஸ்தவ நிறுவனங்கள் தன் கடமையை செய்து கொண்டிருக்கிறது மேலும் சேவை மனப்பாண்மையோடு செய்கிறது? கிருஸ்தவ நிறுவனத்தை தவிர்த்து மற்ற நிறுவனங்கள் இலவசமாக, சலுகை கொடுத்து படிக்கவைக்கிறது. எந்தனை நிறுவனங்கள் ஆதறவற்றவர்களையும், ஊனமுற்றவர்களையும், விதவைகளையும், மனநலம் பாதித்தவர்களையும் கண்கானிக்கிறது? மருத்துவ சேவை கொடுக்கிறது? எத்தனை நபர்கள் மருத்துவமணைக்கும் கல்வி நிறுவனத்திற்கும் பயன் பெற்று செல்கிறார்கள் அவர்கள் ஏன் மாறவில்லை ஏன் கிருஸ்தவர்கள் மதம் மாற்றவில்லை? அவர்கள் கிருஸ்துவின் கேட்பாடுகளை கடைபிடிக்கின்றனர். கிருஸ்தவர்களாக அல்ல, உண்மையை உறைக்கின்ற காரணத்தினால் உருகுலைகின்றது ஆதிக்க வர்க்கம் அதனால் பொய்யான கருத்தை விதைக்கிறது. எங்கு பாமரன் விழிப்படைந்து விடுவார்களோ என்ற பயம்தான். நாட்கள் வருகிறது அப்போது இந்த நிலை மாறும். மதம் மாற்றுகிறார்கள் என்று கூறுபர்கள் சமூதாயப்பணி செய்து பார்க்கட்டும், இலவச கல்வி மருத்துவம் கொடுத்து பார்க்கட்டும்.
மதம் மாறுகிறார்கள் என்றால் அவர்கள் அரசு உதவித்தொகை இழக்கிறார்கள், அவர்கள் நிலை பி.சி ஆக அவர்களுடைய சாதி மாறுகிறது. எல்லோரும் ஒரே மனித இனம் என்று கூறும் வகையில் இருக்கின்றது. சமூதாயத்தில் மதிக்கப்படுகின்றார்கள்.
சுறண்டும் நபர்களின் உண்மையை உரிமையோடு எடுத்துரைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் கிறிஸ்தவர்கள் மதமாற்றுகின்றார்களா? அல்லது உரிமையை கேட்க மக்களை உணரவைக்கின்றார்களா? மதம் மாறுகின்றார்களா? மதம் மாற்றப்படுகின்றார்களா?
ரோமன் கத்தோலிக்க கிருஸ்தவர்கள் எத்தனை நபர்களை கட்டாயமாக மதம் மாற்றிருக்கிறார்கள்?
தனி மனித உரிமை இருக்கின்றது எம்மதத்தையும் கடைபிடிக்க: கட்டாயமாக மாற்றப்பட்டவர்கள் ஏன் கிருஸ்தவத்தில் நிலைத்திருக்கிறார்கள் இன்னும் மாறாமல்.
என் நண்பனுக்கு: சரியான விழிப்புணர்வு கொடுங்கள் உங்கள் மதத்திற்கு மதம் மாறாதீhக்;ள் ஆனால் அதற்கு நீங்கள் மனம் மாற வேண்டும். மனிதனை மனிதன் மதிக்க வேண்டும்.
பொருட்களையும் பணத்தையும் கொடுத்து மாற்றுகின்றார்கள் என்று: சுனாமி பேரிடர் வந்தபோது சேவை செய்தபோது யாரையும் கட்டாயம் மதமாற்றவில்லை, சென்னை வெல்ல நிவாரணம் உதவிசெய்தபோது யாரையும் கட்டாயமாக மதம் மாற்றவில்லை, கெரனா வைரஸ் வந்ததினால் 144 இருப்பதனால் பாதிக்;கப்பட்டவர்கள் உணவு கொடுக்கும் போது யாரும் மதமாற்றம் செய்யபட வில்லை நண்பா.
தக்க நேரத்தில் உதவிகின்றவன் தான் மனிதன், உதறி தள்ளுபவனல்ல
பணம் இருந்தால் மட்டும் போதாது அதற்குண்டான பகிர்தல் வேண்டும் - கருணை உள்ளம்
எத்தனை நபர்கள் அன்னை தெரொசாவால் கட்டாய மதம் மாற்றபட்டு இருக்கின்றார்கள்? – கடவுளை ஏழையின் இடத்திலே கட்டவர் இவர்.
எம் கிருஸ்தவ நிறுவனத்தில் லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் கல்வி கற்று கொண்டு சென்றிருக்கின்றார்கள் எத்தனை நபர்கள் மாற்றப்பட்டு இருக்கின்றார்கள்? மாற்றியிருந்தாள் தற்போது கிருஸ்தவர்கள் தான் இந்தியாவில் அதிகம் இருப்பார்கள் ஆனால் வளரவில்லையே, ஏன்?
கடவுளை மனித உருவில் பார்க்கின்ற மனது இருந்தால் போதுமானது. மாறுவதும் மாறாததும் அவர் அவருடைய உரிமை விருப்பம்.
அவர்களாகவே மாறிவிடுகிறார்கள் பழனி இல்லனா என்ன! திருப்பதி இருக்குல!
ஏம் கலப்பணி அனுபவத்தில் இரண்டு ஆண்டுகள் தொழிற்கல்வி நிறுவனத்தில் பணியாற்றினேன் 97 சதவிகிதம் இந்துக்கள் 1 சதவீதம் முஸ்லிம் 2 சதவிகிதம் கிருஸ்தவர்கள்
3 ஆண்டுகள் சமூதாயப்பணியிலும் செய்திருக்கின்றேன் பயனாலர்கள் அதிகம் என் நண்பர்களைப் போன்று இந்துக்கள் தான் ஆனால் அவர்கள் கட்டாயமாக மணம் மாற்றப்படவில்லை ஆனால் அவர்கள் மனம் மாறியிருக்கிறார்கள். நானும் கிருஸ்தவர்களைப் போன்று தேவையிலிருப்போருக்கு உதவவேண்டும் என்று.
மதங்கள் பெரிதல்ல மாறாக மனிதம் தான் பெரியது – அங்கு தான் - மனிதனிடத்தில் தான் நாம் வணங்கும் கடவுள் இருக்கின்றார்.
பணி. குமார் ச.ச