மலரும் மண உறவு WWME Tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலரும் மண உறவு WWME Tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மலரும் மண உறவு இயக்கம் தம்பதியர் அனுபவ பகிர்வு WWME India

மலரும் மண உறவு இயக்கம் சென்னை தம்பதியர் திரு .சுவாமிநாதன் திருமதி. ஸ்டெல...

மலரும் மண உறவு இயக்கம் சென்னை தம்பதியர் அனுபவ பகிர்வு WWME

Couples Accompaniment

 

Couples Accompaniment

 

“Love one another as I have loved you”

 

Worldwide Marriage Encounter is a movement that helps couples to live out their commitment of their profession of love they have made on the wedding day.  WWME is a pastoral ministry that would help married couples to renew/to enrich/ to live the sacrament as a Christian family and to proclaim the value of Marriage and Holy Orders in the Church and in the world. This program is organized on weekends for the couples. I had attended the weekends trainings and found it very useful to me. It may be useful for the other religious who are all involved in the pastoral ministry and building their respective religious communities.  There are enormous challenges to married life and commitment today. There are ups and downs, joys and sorrows, success and disappointments in marriage. Pope Francis said, “Marriage is not easy. It is never easy… but it is so beautiful… it is beautiful.” The most beautiful part is when a man and woman pledge their love for life. A movement like Worldwide Marriage Encounter helps to promote weekends to enhance growth and happiness in married relationships and to make good marriages great.

 

To Note: Marriage Encounter is designed to give married couples the opportunity to examine their lives together ... a time to share their feelings, their hopes, disappointments, joys and frustrations ... and to do so openly and honestly in a face-to-face, heart-to-heart encounter with the one person they have chosen to live with for the rest of their life. The emphasis of Marriage Encounter is on communication between husband and wife, who spend the weekend together away from the distractions and the tensions of everyday life, to concentrate on each other.

Divine Call is the Source of Inspiration for ME

 

My journey with WWME, is a great inspiration for me and to know about Marriage encounter (ME) from the sharing by the couples. I have seen many of the couples leading a holy life, showing good example for the other couples, in the Church and more than that in their Marriage encounter ministry. As I have seen their struggle in leading a holy life because they have many challenges in the family living but they are together because they have understood each other. It is a God’s gift that each and every member of ME is called by God to bear witness as couples and to be a source of inspiration for other couples. I feel that God called me through Mr. Dorairaj and Ms. Mary Alphonsa to encounter the couples. It is a call within a call to do Marriage Encounter ministry as a Salesian of Don Bosco (SDB). I had the opportunity to attend weekend programmes and have undergone many changes being a religious priest living in communities.  At present Fr. Arulkumar SDB has appointed as the National Ecclesial Team (NET) coordinating priest. There are 5 units in Tamil Nadu as the active ME Unit Coordination Team (UCT) and planning to reach out the other diocese.

 

Importance of  Worldwide Marriage Encounter Weekends

Couples and priests are invited to take part in a marriage encounter weekend which is set in a loving atmosphere. It is designed to help married couples communicate more intimately with each other in order to deepen and enrich their relationship. We all live in a very busy world, constantly on the move from one activity to another and very often do not have time for our spouse or ourselves.

A marriage encounter weekend helps a couple to be together alone, to be away from all the distractions, to take time out, to focus on their relationship and to reconnect with the spouse. The effect of the weekend will leave a couple renewed in their commitment, restore communication and rekindle romance in their married relationship. The weekend fans the flames of the amber of love and leaving a couple refreshingly all over in love again. In the marriage encounter we believe that a couple does not ‘need’ a weekend but rather ‘deserves’ a weekend because they are spending the time for the most important and precious relationship with their spouse. It reminds them of how special a couple’s love is for each other and how strong they can grow together.

Continual Renewal of Love

A priest or a religious is also a part of the Marriage Encounter weekend. Just as a couple has made a lifelong commitment, so too a priest has made a lifelong commitment to the Church, the people of God. The sacrament of matrimony and priesthood are parallel sacraments. It deepens his relationship with his people as he encounters himself in the weekend and is better able to understand the struggles of his people, the joys and sorrows of his people and helps in communication at a deeper level.

Pastoral Accompaniment

            Pastoral care must take the priority in the church and the couples have a special attention in this. We must be patient and merciful to those who find themselves living in grave danger of breaking their relationships. They are to be treated as Jesus did to the poor, weak, suffering, and wounded. However, the pastoral priority, indicated by Amoris Laetitia for the present time, is to prevent as far as possible wounds, divisions, and marriage failures. “Today, more important than before, the pastoral care of failures is the pastoral effort to strengthen marriages and thus to prevent their breakdown” (AL 307; cf. ibid., 211).

We must confidently and patiently develop organic family pastoral care, including remote and immediate marriage preparation and, after the wedding, the formation of the couple and especially the young spouses  (cf. AL 200; 202; 207; 208; 227; 229; 230). For this, personal closeness and family encounters, small groups and communities are more beneficial than convoked assemblies and crowded meetings. With this aim, it is necessary to promote the protagonism of the families themselves and their missionary responsibility (“families which go forth”), while emphasizing, among other things, the cooperation of movements and ecclesial associations.

To conclude …

Marriage Encounter couples share the incredible gift of their “couple power” to the world around. Worldwide Marriage Encounter hopes to reach out to many more married couples, priests and religious bringing Marriage Encounter to many more countries and dioceses. When I did a Marriage Encounter weekend it changed my perspective of my priesthood, it helped me to grow in the conviction of being there for my people. In every weekend programme I had experienced that I was rejuvenated and invariably at the end of the weekend programme I could sense the energy and vibrancy of the entire atmosphere that had changed because of the sharing of the participants. It is an amazing experience that refuels and renews the love that God has placed in our hearts for Jesus himself says, “Love one another as I have loved you,” and was expressed by giving his life for his bride the Church.

The ME couples, priest and religious are chosen by God for a great mission to take forward the marriage encounter programme to the couples.

 

 

 

கொரோனா வைரஸ் தோற்று காலத்திலே புதிதாய் திருமணமான தம்பதிகள் நிலை

ஒரே இடத்தில் தம்பதியர்கள் வகுப்பறைகள், அலுவலகம், சமையல், உறங்கும் அறை, ஆலயம் மற்றும் பொழுதுபோக்கு, வீட்டு வேலை என்ற நிலையில் அடங்கிக் கிடக்கும் நான்கு சுவருக்குள்ளே அவர்களுடைய வாழ்க்கை  நிலை இந்த கொரோனா வைரஸ் காலத்திலேயே அதிக நீடித்ததால் அவர்களிடையே அந்த மகிழ்ச்சியும் சந்தோஷமும் அன்பும் அதிகமாக இல்லாத ஒரு சூழல் அவர்களிடையே மன அழுத்தத்தை தந்து கொண்டு இருந்தது இதனால் அவர்கள் வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உறவுக்கு இரண்டாம் நிலையை கொடுத்து  வாழ்ந்து வருகின்ற ஒரு சூழலில்தான் இந்த கொரோனா காலகட்ட நிலை. தம்பதிகள் இருவருக்கும்  இடையேயான நேரம் மிகவும் சொற்பமே ஏனென்றால் இருவருமே வெவ்வேறு நேரங்களில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்கிறர்கள். வீட்டிலிருந்தே வேலை என்ற சூழ்நிலை அவர்கள் வேலைக்கு அடிமையாகி பல மணி நேரம் வேலை செய்து கொண்டே இருக்கின்ற ஒரு சூழலானது இந்த  காலகட்டத்திலேயே உறவுகளை கொரோனா  நோய்த்தொற்று வழியாக பிரிவு ஏற்பட்டிருக்கின்றது. தம்பதிகளுக்கான அந்த நேரத்தை செலவழிக்க செலவு செய்திட நீங்கள் முற்பட முன் வருகின்றீர்களா? மலரும் மண உறவு வார இறுதி இதிலே நீங்கள் பங்கு பெற்று நீங்கள் உங்களுடைய வாழ்வில் ஆன்மீக  புத்துணர்ச்சியையும் அன்பு  உறவு  வளர இருவருமாய் சேர்ந்து 
வார இறுதியை செலவிடும் பொழுது நீங்கள் உண்மையிலேயே ஒரு புது வாழ்வு பெற்றவர்களாக மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, ஒருவரை ஒருவர் முழுதுமாக புரிந்துகொண்டு அன்பு வாழ்வுக்கு அதிகமான நேரத்தை செலவழிக்க உங்களுக்கு இந்த மலரும் மண உறவு ஒரு வாய்ப்பு கொடுக்கின்றது. கடவுள் ஒவ்வொருவரையும் நிறைவாக ஆசீர்வதித்து வழிநடத்துகின்றார் உங்கள் துணை யின் வழியாக அந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார் நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அன்பு  மேலும் மேலும் வளர உங்களுக்கு இது ஒரு வாய்ப்பளிக்கிறது கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும் என்று வசனத்தை நாம் விவிலியத்தில் வாசிக்கின்றோம் வாசிக்க கேட்கின்றோம் இந்த வேலைப்பளுவின் வழியாக நமது பொருள்களின் வழியாக மற்றும் நமது சொந்த தேவைகளை தேடிச் செல்வது வழியாக நாம் உறவுக்கு முதலிடம் கொடுக்காமல் பொருளுக்கு முதலிடம் கொடுத்து நமது உறவை சரி செய்யாமல் விட்டு விடுகின்றோம் அன்பு ரவை புதிப்பிக்க  தம்பதிகளாக இணைந்து இந்த மலரும் மண உறவு வார இறுதியில் பங்கு பெறுங்கள் . உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுது நீங்கள் அந்த வாய்ப்பை நழுவ விட்டுவிடாதீர்கள் ஏனென்றால் கடவுள் உங்களுக்கு மீண்டும் ஒரு ஆசீர்வாதத்தை இந்த கருத்தரங்கு வழியாக  கொடுக்கின்றார் நீங்கள் புத்துணர்வு பெற உங்களுக்கு வாய்ப்பு அளிக்கின்றது.
அருட்திரு. அருள்குமார் ச.ச

மலரும் மண உறவு இயக்கம் - தமிழ் நாடு வார இறுதிப் பயிற்சி Worldwide Marriage Encounter Tamil Nadu Weekend notice

 

  மலரும் மண உறவு இயக்கம் - தமிழ் நாடு

Worldwide Marriage Encounter Tamil Nadu

மணவாழ்வு மலர்ந்திட, மலரும் மண உறவு வார இறுதிப் பயிற்சி

 

‘நான் உங்களை அன்பு செய்தது போல’ கணவன் மனைவி அன்பு செய்து ஒருவருக்கொருவர் அன்புறவின்     தினமும் மகிழ்வுடன் வாழ்ந்திட இந்த பயிற்சியானது உருவாக்கப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் உலக அளவிலும்   தேசிய அளவிலும் குறிப்பாக தமிழ் நாட்டிலும் மிகவும் வெற்றிகரமாக இந்த பயிற்சியானது தம்பதியர்களுக்கு   வளங்கப்பட்டு வருகிறது. கடவுளின் திட்டப்படி திருமண அருளடையாள உடன்படிக்கையில் கணவன் மனைவி   நெருக்கமாக, பெறுப்பாக, மகிழ்வுடன் வாழ மண உறவு பயிற்சி அவசியமாகிறது.

 மலரும் மண உறவு பயிற்சி திருமணமான தம்பதியர்களுக்காகவே உருவாக்கப்பட்டது. எடுத்துக்காட்டான தம்பதியர்களாக வாழவும், தங்களுடைய திருமண வாழ்வை சுய ஆய்வு செய்து பார்க்கவும், தங்கள் கருத்துக்களையும், எதிர்பார்ப்புகளையும், அன்பையும், பாசத்தையும் உணர்வுகளையும் உரையாடல் வழியாக பகிர்ந்து கொள்ளவும், தங்களுக்குள்ள தொடர்பினை சீர்படுத்தி வளப்படுத்திட தங்களுடைய ஏமாற்றம், விரக்தி, ஏக்கம் இவற்றை மனம் திறந்து தயக்கமின்றி பகிர்ந்து கொள்ளவும் செவிமடுத்து அன்புறவை ஏற்படுத்தவும், துணையோடு நேரத்தை செலவிடவும் இந்த பயிற்சி உதவியாக இருக்கும். ஒவ்வொரு திருமணத்திற்கும் இதுபோன்ற ஒரு பயிற்சி அவசியமாக இருக்கிறது.   தங்களின் ஆளுமை தன்மைகளைக் கண்டறிந்து அதன்படி செயல் படவும் தேவையற்றதை விலக்கி தம்பதியர்களின் இல்வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவுகிறது. தங்கள் உணர்வுகளை புரிந்து, பகிர்ந்து கொண்டு வாழ்வை வளமாக்க செய்கிறது.

மலரும மண உறவு பயிற்சி தம்பதியர்களுடைய தனிமைக்கு மதிப்பு கொடுக்கிறது. பயிற்சியானது தம்பதியினர் ஒருவருக்கொருவர் முழுமையாக அக்கறைக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியானது தம்பதியினராலும், குருவானராலும் வழங்கப்படுகிறது. தம்பதியர் தங்களுடைய திருமண அன்பில் மேலும் வழுபெறவும் உதவிகிறது.

o    உங்கள் திருமண வாழ்வில் மகிழ்வையும் அன்பையும் ஆழப்படுத் விரும்புகிறீர்களா?

o    உங்கள் திருமண வாழ்வில் அன்பு உரையாடல் ஏற்படுத்த விரும்புகின்றீர்களா?

o    உங்கள் திருமண உடன்படிக்கையை நிணைவு கூர்ந்து, நெருக்கம், உணர்வு,

 அன்பு இவற்றை புதுப்பிக்க விரும்புகின்றீர்களா?

பயிற்சி பங்கு பெற அழைப்பு

-     திருமணமான தம்பதியர்கள் தங்கள் அன்பைப் புதுப்பித்துக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள்

-     ஐந்து ஆண்டுகளுக்கு மேல் திருமணமான  தம்பதியர்கள்

-     குருவானவுகளும்- துறவரத்தாறும் இதில் கலந்து கொள்ளலாம் - குருத்துவ வாழ்வை மேம்படுத்திக் கொள்ளவும், அழைத்தலை ஆழப்படுத்தவும் உதவும்.

வாழ்க்கைத் துணையோடு வளமாக, மகிழ்ச்சியாக வாழ விரும்பும் தம்பதியர்கள் இதில் பங்கேற்றால் தங்களின் திருமண வாழ்வு மேலும் சிறப்பானதாக்க உங்களுக்கு அமையும்.

தமிழ்நாடு மலரும் மண உறவு இயக்கம் உங்களை இப்பயிற்சிக்கு தம்பதியர்களாக உங்களை வார இறுதி பயிற்சிக்கு அழைக்கிறது.

பயிற்சி    சனிக்கிழமை காலை 7: 00 மணி தொடங்கி ஞாயிறு மாலை 5:00 மணிக்கு நிறைவு பெறும்

             உங்கள் பங்குகளிலும் மலரும் மண உறவு பயிற்சியானது நடத்தப்படும்

                                                  

                                               தமிழ்நாடு மண உறவு இயக்கம்

 

அருட்பணி. அருள்குமார் .              84898 91394           National Ecclesial Team                                       

Oliver & Annie   National Ecclesial team couple

           விலை உயர்ந்ததை அன்பானவர்களுக்கு கொடுக்க முன்வருதல்

தம்பதியர்களிடையே உரையாடல் மலரும் மண உறவு பயிற்சி

 

தம்பதியர்களிடையே உரையாடல்

மலரும் மண உறவு பயிற்சி

தமிழ்நாடு மண்டல ஒருங்கிணைப்பாளர்

                                          அருட்பணி. அருள் குமார் ச.ச

உரையாடல்

உரையாடல் என்பது தம்பதியர்களிடையே நடக்கக் கூடிய பரிமாற்ற நிகழ்வு இது தினந்தோரும் நடக்கக்கூடிய நிகழ்வுதான் எனினும், கருத்துக்களை பகிர்தலும் பெற்றுக்கொள்ளுதளும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதில் சரிசமமாக பகிர்தல் நடைபெறவேண்டும். இல்லையேல் தம்பதியர்களிடையே உறவு விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த உரையாடல் அறிவு பூர்வமானதாக, சிந்திக்கக் கூடிய உரையாடலாக இல்லாமல் இருந்தால் அந்த உரையாடல் உணர்வுகள் கொண்ட உரையாடலுக்கு கொண்டு சேர்க்கின்றது.

உணர்வுபூர்வமான உரையாடல்

உரையாடல்கள் என்று பார்த்தால் சாதாரண உரையாடல், உள்ளார்ந்த உரையாடல், உணர்வுபூர்வமான உரையாடல் என்று வகைப்படுத்தலாம். ஆனால் தம்பதியர்களிடையே உள்ள உரையாடல் உணர்வுமிக்கதாக இருக்கவேண்டும். இந்த உரையாடலை தினந்தோறும் செய்ய வேண்டும்.  ஏன் இந்த உரையாடல் என்றால்? உணர்வுபூர்வமான உரையாடல் திறந்த மனதுடன் உணர்வுகளை வெளிப்படுத்தவும் ஒருவர் ஒருவரை முழுவதுமாக அறிந்து கொள்ளவும் மேலும் எளிதாக பழகுவதற்கும், மகிழ்வுடன் வாழவும், உற்சகத்துடனும், துடிப்புடனும் இல்வாழ்வில் இருக்கவும் இந்த உரையாடல் தம்பதியர்களுக்கு உதவுகின்றது.

தம்பதியர்களின் தனிப்பட்ட சிந்தனைகள் என்ன இருக்கின்றது என்பதனை அறியவும் அதனை எடுத்துச்சொல்ல துணையை அனுமதிப்பது பற்றியும் மேலும் இருவரும் எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆழமான சிந்தனை தாகம் கொண்டிருக்க வேண்டும். இதிலே தான் நம்பிக்கை பிறக்கின்றது. அப்போது திறந்த மனதுடன் உரையாட துணையினுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடியதாக உரையாடல் அமைகின்றது.

உணர்வுபூர்வமான உரையாட தூண்டுதல் அளித்தல்:  உணர்வுகளை பகிரும்போதுதான் தம்பதியர்கள் உள்ளத்தின் ஆழத்திற்கு செல்கின்றார்கள். இதில்தான் உரையாடல் வளமுள்ளதாக அமைகின்றது. சில நேரங்களில் உரையாடலின் போது எதிர்பாராத உணர்வுகள் வெளிப்படும் அதனை முறைப்படுத்தி உறவு வாழ்விற்கும அன்பு வாழ்விற்கும் உதவும் எனில் அதனை வெளிப்படுத்துதல் தம்பதியர்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. நல்ல உணர்வுகள் தம்பதியர்களுக்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும தரக்கூடியதாக அமைகின்றது. இதனை பகிர தூண்டுதல் மிக அவசியமாகிறது.

 

உரையாடலின் பலன்கள் என்ன என்பதை பற்றி பார்த்தால். உறவை புதுப்பிக்கவும், உறவு வாழ்வுக்கு உயிரோட்டம் கொடுக்கவும், மண வாழ்வில் நெருக்கமடையவும் பயனுள்ளதாக அமைவதுமட்டுமல்லாமல், தம்பதியர்களின் வாழ்வில் மகிழ்ச்சி அமைதி புரிதல் அன்பு பகிர்தல் அதிகமாகின்றது.

திருதந்தை பிரான்சிஸ் அவர்கள் அன்பின் மகிழ்ச்சி என்ற திருத்தூதுரையிலே தம்பதியர்களின் உரையாடலின் அவசியத்தைப் பற்றி 136-141 உள்ள பத்திகளில் குறிப்பிடுகின்றார். உரையாடலில் அன்பை அனுபவிக்க உணர அதனை வெளிப்படுத்தி பேனிக்காப்பதற்கும் உதவுகிறது உரையாடல் வார்த்தை பரிமாற்றம் மட்டுமல்ல உடல் மொழி உள்ளமொழி தேவை என்பதை உரைக்கின்றார், உரையாடல் நிகழ்த்த தகுந்த நேர்த்தியான  நேரத்தை தேர்ந்தொடுத்து உரையாடல் செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்துகின்றார்.

உரையாடலிலே கவனமாக கேட்க வேண்டும், செவிகொடுக்க வேண்டும் மேலும் கவனச்சிதறல்கள் இருக்கக்கூடாது என்கிறார். தம்பதியர்களிடையே என் குறலை கேட்பதற்கு ஒருவர் இருக்கின்றார் என்ற நம்பிக்கை உறுதி தருகின்ற வகையில் கேட்டல் மிகவும் அவசியமாகிறது. கேட்கும் போது இடையே பேசாமல் அமைதிகாத்து அவர்கள் பேசுவதை கேட்டு அவர்களுடைய கருத்தை மாற்ற முயலாமல் கேட்பது அவசியம் என்கிறார்.

பிரச்சனைகளை முன் வைத்து உரையாடுவதை தவிர்த்தல்  

உரையாடலில் பிரச்சனைகளை முன் வைத்தது உரையாடுவது அல்லது விவாதிப்பதை தவிற்பது நலம் பயக்கும். தம்பதியர்களுக்கு பயன் தரக்கூடிய மகிழ்வான நிகழ்வுகளை உரையாடலில் கொண்டுவந்து பேசுவது சிறந்த உரையாடலாக உறவை வழர்க்கக்கூடியதாக அமையும். வாழ்வை பற்றிய நேர்மறை எண்ணங்களை உரையாடலில் நிகழ்த்துவது அதிக பலன் தரக்கூடியதாக தம்பதியர்களுக்கு உதவும்.

உரையாடலில் தடைகளை நீக்க

உரையாடலில் வரும் தடைகளை நீக்க அல்லது தேக்கத்தை நீக்க நாம் முன் வரவேண்டும். இந்த குறுக்கீடு நிகழ்வுகள் உரையாடலை வேறு திசைக்கு திருப்பி எதிர்மறையான உணர்வுகளை வெளிப்படுத்த முயலும் இதற்கு இந்த தடைகளை தகற்க நுண் திறமை தேவைப்படுகின்றது. தம்பதியர்கள் கசப்புணர்வுகளை களைந்தும் காயப்படுத்துகின்ற வார்த்தைகளை தவிற்த்தும் புத்துணர்வு ஊட்டுகின்ற வகையிலே வார்த்தைகளை  கையாள வேண்டும். அப்போது தான் அன்பு செய்கிறவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள் என்பதை அனுபவித்து உணர்வுபூர்வமாக உணரமுடியம். தம்பதியர்கள் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொள்ள வாய்ப்பாக அமைகின்றது.

இதிலே தம்பதியர்கள் கேள்விகளை கேட்டள், கண்களை நேராகப் பார்த்து தொடர்பு கொள்ளுதல், உடலளவில் உடனிருத்தல், கவனிப்பதற்கான அக்கறையை வெளிப்டுத்துதல், ஆழமான நெருக்கத்தைது தேர்ந்தெடுதத்தல், தனிமையான இடத்தை தேர்வுசெய்தல் முக்கிய பங்க வகிக்கின்றது.

 

தினசரி உரையாடல் பத்து - பத்து: தினசரி உரையாடலில் மலரும் மண உறவு பயிற்சியில் 10-10 முக்கியத்துவம் வகிக்கின்றது.

WEDS

W - Write  எழுதுதல்

E - Exchange  பரிமாற்றம்

D - Dialogue  உரையாடல்

S - Select the question கேள்வியை தேர்ந்தெடுத்தல்

துணையின் உள்ளார்ந்த வளமையை அறிந்து கொள்ள. வாசித்தல் சிந்தித்தல் உரையாடுதல் இது சிறப்பாக உதவும் மேலும் நம்மை சுற்றி உள்ளவர்களை திறந்த மனதுடன் உரையாடல் வழியாக தான் பேணி வளர்க்க முடியும். உரையாடலில் உணர்வுகளை வெளிப்படுத்துவது முக்கிய பங்கு வகிக்கின்றது.

எழுதுதல்: தம்பதியர்கள் தங்கள் காதல் கடிதங்களை தங்களுடைய துணைக்கு எழுதும்போது கவணிக்க வேண்டியது. செல்லப் பெயரிட்டு அன்புடன் எழுதக்கூடிய காதல் கடிதம். இது விவாத கடிதம் இல்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும் அதுமட்டுமல்ல கசப்பான நிகழ்வுகளை தவிற்ப்பது நல்லது. இக்கடிதம் உணர்வுகளந்த அன்பு கடிதமாக இருக்க வேண்டும் இதன் மூலம் உங்கள் துணையை எவ்வளவுக்கு அதிகமாக அன்பு செய்கின்றீர்கள் என்பதனை உங்கள் துணை உங்களை அறிந்து கொள்ள உதவுகிறது அன்பு வாழ்விற்கு ஆணிவேறாக அமைகின்றது. எழுதுதல் பத்து நிமிடம் மட்டுமே போதுமானது.

பரிமாற்றம் செய்தல்:  எழுதிய அன்புக்கடிதத்தை தம்பதியர்கள் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும். இதில் மனைவி எழுதியதை கணவனிடமும், கணவன் எழுதியதை மனைவிடமும் கொடுத்தல் அவசியம் அதன் பிறகு அமைதியான முறையில் தன் துணை என்ன காதல் கடிதம் எழுதியிருக்கின்றார்கள் என்பதை வாசிக்க வேண்டும். தங்கள் துணை எழுதியது உண்மைதான என்று உணரமுடிகின்றதா? என்று உங்கள் உணர்வுகளை வைத்து பாருங்கள் அது உங்களுக்கு ஏற்றதாக அமைகிறது என்றால் உங்கள் துணை உணர்வுகளை வெளிப்படுத்தியது சரியானதே என்று ஏற்றுக்கொள்ளுங்கள்.

உரையாடல்: இப்போது நீங்கள் எழுதிய காதல் கடிதத்தை துணையிடம் பகிருங்கள் கணவன் ஐந்து நிமிடமும் மனைவி ஐந்து நிமிடமும் பகிர்தல் அவசியம். இதிலே தம்பதியர்கள் தங்களின் காதல் கடிதத்தில் உள்ள ஓர் ஆழமான உணர்வைத் தேர்ந்தெடுத்து, ஒருவரையொருவர் பார்த்து  அந்த உணர்வைப்பற்றி உரையாடலை பகிரலாம். உரையாடலில் உடல் மொழியையும் பார்க்கவேண்டும். உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் உடல் மொழியில் அதிகம் வெளிப்படுத்தப்படுகின்றது. இது தன் துணையை உணர்வுபூர்வமாக புரிந்து கொள்ள உதவுகிறது.

கேள்வியை தேர்ந்தெடுத்தல்:  அடுத்த உரையாடலுக்கான தலைப்பைத் தெரிவு செய்தல் முக்கியம் எனவே உங்களுக்கு தற்சமயம் பொருத்தமாக உள்ள ஒரு தலைப்பைத்  தெரிவு செய்யுங்கள் அது உதவியாக இருக்கும். நீங்கள் உரையாடலுக்கு எடுத்துக் கொள்ளும் தலைப்புகளில் கடவுள், பாலுணர்வு, நிதிநிலைமை, உடைமைகள், குழந்தைகள், உறவிணர்கள், உத்தியோகம், இவற்றை கொண்டிருக்க வேண்டும். மற்ற ஏற்ற தலைப்புகளையும் விணாக்களையும் தேர்வு செய்து உரையாடுவது ஏதுவாக அமையும்.

நிலையை மதிப்பீடு செய்தல்

உரையாடலில் உணர்வு நிலையை மதிப்பீடு செய்தல் அதற்குண்டான விளக்குகள் குறியீட்டையே அல்லது எண்களை வைத்து மதிப்பீடு கொடுத்தல் தம்பதியரின் உணர்வு நிலை எந்த நிலையில் இருக்கன்றார்கள் என்பதை வண்ணங்களினாலும், எண்கள் மூலம் வெளிப்படுத்துதல் உணர்வினுடைய ஆழநிலையை வெளிப்படுத்துகிறது.

உரையாடல் கட்டமைப்பு  - WEDS

உரையாடல் கட்டமைப்பு தம்பதியர்கள் என்ன எதிர்பார்க்கின்றார்கள் என்பதனை எழுத்து மூலமாக எழுதி விவரிக்கலாம். தம்பதியர்கள் பற்றிய ஒரு வினா எடுத்து அதனை காதல் கடிதமாக ஒருவருக்கொருவர் எழுதுதல். இதை எழுதுவதற்கு தம்பதியர்கள் தனித்தனியாக சென்று எழுதுவது அதிக பயன் கொடுக்கக்கூடியதாக அமையும். இதில் தனியாக எழுதும் பொழுது கவனச்சிதரல்கள் ஏற்பட வாய்ப்பில்லை எனலாம். தேர்ந்தொடுக்கப்பட்ட வினாக்கு உரிய கடிதத்தை உணர்வுபூர்வமாக எழுத முற்படவேண்டும். அந்த உணர்வை அதிகமாக விவரித்து எழுதுதல் அதிக பலனைக் கொடுக்கும். எழுதி முடித்த பிறகு அவர்கள் தனிமையிலே கடிதத்தை பரிமாற்றிக் கொள்கின்றார்கள். அதனை வாசிக்கும் போது துணையினுடைய உணர்வுபூர்வமான வரிகள் உள்ளுணர்வை தூண்ட கூடியதாக இருக்க வேண்டும். இந்த உணர்வுகள் ஏற்கக்கூடிய உணர்வாக துணையினுடைய உணரப்படவேண்டும்.

 

அருட்பணி. அருள் குமார் ச.ச

அகில உலக மலரும் மண உறவு இயக்கம் தமிழ்நாடு