Youcat Bible இளையோருக்கான
திருவிவிலியம் திருஅவையின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டுருக்கிறது. Youth
Bible of the Catholic Church
திரு தந்தையின் முகஉரையோடு
வெளியிடப்பட்டுருக்கின்றது. Youcat Bible விவிலியயத்தின் முன்னரையாக விவிலியத்திலே தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்
இந்த விவிலியத்தியே கொடுக்கப்பட்டடுருக்கிறது. இது 2018 ஆம் ஆண்டில் ஜெர்மன் ஆஸ்ரியன் conference
of bishops மூலம் வெளியிடப்பட்டுருக்கின்றது. இளையோர்களின்
ஒத்துழைப்பால் அவர்களால் விவிலியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விவிலியபகுதிகள்
Youcat Bible லாக நம் கைகளில்
வந்தடைந்துள்ளது. இது ஆங்கிலத்திலே கிடைத்திருக்கிறது தமிழிலே பிரதி வரும் போது
நம் இளையோருக்கு பெரும் உதவியாக அமையும் என்பதில் அய்யம் ஏதுமில்லை.
இளையோர் கத்தோலிக்க நம்பிக்கையிலே தினமும் வளர 5 நிமிடமாவது வாசிக்க உதவியாக இருக்கம். திருதந்தை
பிரான்சிஸ் முன்னுரையிலே அவர் கூறுகையிலே எனக்கு விலைமதிக்கமுடியாத ஒரு விவிலியம்
எனக்கு கொடுத்தால் வேண்டாம் என்பேன் ஏன்
என்றால் நான் வைத்திருக்கக் கூடிய பழைய> கிழிந்துபோன> மேற்கொள்கள்
செய்யப்பட்ட விவிலியம் எனக்கு ஒரு பொக்கிஷம் என்கிறார்.
Youcat
Bible
வண்ணப்படத்துடனும் நம்பிக்கையில்
சாட்சியங்களும்>
புனிதர்களின் மற்றும் மேதைகள்> மெய்யியலாளர்கள் மற்றும் இறையியலாளர்கள் மேற்கொள்கள்
கொடுக்கப்பட்டுரப்பது மிகவும் உற்சாகம் ஊட்டக்கூடியதாக இருக்கின்றது. திருதந்தை
கூறும் போது>
இந்த விவிலியத்தை முழுவதுமாக வாசித்து
விடமுடியும் ஆனால் வாசித்த பிறகு இந்த விவிலியத்தை அலமாரியில் வைப்பீர்கள் இந்த
விவிலியம் தூசி படிந்து பழைய புத்தகமாக மாறி உங்கள் பிள்ளைகள் பாழைய புத்தகக்
கடைக்கு போடக்கூட தயங்கமாட்டார்கள் எனவே இதை இந்நிலைக்கு தள்ளிவிடாதீர்கள். எனவே
நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் விவிலியத்தை அடையாளச் சின்னமாக வையுங்கள்
எவ்வாறு நம்முன்னோர்கள் திருசிலுவை அனிந்து சாட்சியம் பகர்ந்தார்களே அதைப்போன்று
நீங்களும் இருங்கள் உங்கள் கைகளில் இருப்பது ஒரு அற்புதமான வல்லமைமிக்க புத்தகம்> திருவிவிலியம் இதை வைத்திருப்பவாகள் துன்பப்பட்டார்கள்> வேதனைப்பட்டார்கள் அதிகம் நபர்கள்.
கடவுள் விவிலியத்தில் உள்ள வார்த்தைகள் தம் கைகளில் இருக்கிறது. நாம்
கடவுள் இறைவார்த்தை வழியாக பேச ஏங்க வேண்டும் அந்த இறைவர்த்தை நம் கைகளிலே
இருக்கிறது. இந்த புத்தகம் புனிதமானது> தீயைப் போன்றது கடவுள் வார்த்தையில் வழியே பேசுகின்றார். இந்த விவிலியம்
எப்போதும் உங்கள் கைகளில் இருக்க வேண்டும் அடிக்கடி இதை எடுத்து வாசியுங்கள்> கவனமாக வாசியுங்கள்> கடவுள் என்ன சொல்கின்றார் என்று சிந்தித்து தியானியுங்கள்> நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க இந்த
இறைவார்த்தைய உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த இறைவார்த்;;;;தையின் வழியாக சக்தி பிறக்கின்றது அதுமட்டுமல்லாது
உங்கள் வாழ்வை மாற்றமடையச் செய்து மகிழ்சியாக இருக்க உதவுகிறது.
திருதந்தை பிரான்சிஸ் அவருடைய பழைய திருவிவிலியத்தை வாசித்து
தியாணிக்கையில் அவர் கூறுகின்றார் ஒரு சில நேரங்களில் நான் அமைதியாக இறைவனுடைய
வார்த்தையை கேட்பதற்காக இருந்திருக்கின்றேன். கடவுளின் வார்த்தை வழியிலே பேசி பல
செய்திகளை கொடுக்கின்றார். சில நேரங்களில் நான் வேறுமையை உணர்ந்திருக்கின்றேன்
மற்றும் ஒரு சில நேரங்களில் உறங்கி விட்டதாகவும் அவர் பதிவிட்டுருகின்றார் ஏன்
என்றால் நான் என் தந்தையினுடைய இடத்திலே> இல்லத்திலே இருக்கின்றேன். நான் அவருடைய மகன் என்று கூறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா அப்படியானால் நீங்கள் விவிலியத்தை
எடுத்து வாசியுங்கள் என்று திருதந்தை அழைப்பு கொடுக்கின்றார். இளையோர் ஆண்டிலே
இளையோர்களே உங்களுக்க கிடைத்த போக்கிஷம் திருவிவிலியம் எடுத்து வாசியுங்கள்
தியாணியுங்கள் அதனை வாழ்;வாக்குங்கள்.
இறையரசைக் கட்டி எழுப்புங்கள்.
விவிலியத்தை வாசிக்கும் முறை:
1. தூய
ஆவியாரின் செபம் செய்து தூய ஆவியாரின் பாதுகாப்பையும் பரிந்துரையையும் வேண்டுதல்
2. முழு
ஈடுபாடுடன் நம்மையே அர்ப்பணித்தல் மூலம் அதிசயமும் அற்புதங்களும் நிகழும்
3. இறைவார்த்தையை
வாசிப்பதனால் மகிழ்ச்சி நம்மில் குடிகொள்ளும்
4. நாம்
தினமும் இறைவார்த்தையை வாசிக்க காலமும் நேரமும் கொடுக்க வேண்டும்
5. விவிலியவார்த்தையை
சிந்திக்க அதனை செயலாக்கவும் நேரம் தேவை படுகிறது
6. பொருமையாக
இருங்கள் கடவுள் இறைவார்த்தை வழியாக நம்மிடத்தில் பேசுகிறார்
7. நம்
நண்பர்களையும் அழைத்து அவர்களோடு விவிலியத்தை வாசியுங்கள்
8. திறந்த
மனத்துடன் வாசியுங்கள்
9. நம்
அனுபவித்ததை மற்றவர்களுக்கும் கூறுங்கள்
10. இறைவார்த்தையை
பகிருங்கள்
எம்மாவுசு அனுபவம் நாம் பெற்றதை மற்றவர்களுக்கம் எடுத்துரைக்க
அழைக்கப்பட்டிருக்கின்றோம்.
இறையோர்களாகிய நாம் வாசித்து தியானித்து வாழ்வாக்கிட இந்த திரு விவிலிய
முன்னுரை உதவியாக இருக்கும். நமக்கு ஏற்றார் போல் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைவார்த்தை
நமக்கு பிடித்தாக இருக்கும் இறைவார்த்தை மீண்டும் மீண்டும் வாசிக்க துண்டுவகையில்
நம் உள்ளத்தில் உற்சாகம் ஊட்டக்கூடிய இறைவார்த்தை நம்மை ஆட்கொள்ளட்டும்
இறைவார்த்தையில் இறைவன் பிரசன்னத்தை உணர்வோம்.
இளையோர் விவிலியம் Youcat Bible வாசிப்போம் வாசிக்க இளையோரை உற்சாகப்படுத்துவோம் இறைவார்தை இளையோருக்கு
ஏற்றதாக இருக்கின்ற படியினாலே எல்லோரும் இந்த விவிலியத்தை வாசித்து இறை
பிரசன்னத்தில் வளர்வோம்.
Reading the Bible should be a form of
prayer. The Bible should be read in God’s presence and as the unfolding of His
mind. It is not just a book but God’s love letter to you.
அருட்பணி. அருள்குமார் ச.ச