மலரும் மண உறவு இயக்கம் - தமிழ் நாடு Worldwide Marriage Encounter - Tamil Nadu

 


மலரும் மண உறவு இயக்கம்

 

மணவாழ்வு மலர்ந்திட மலரும் மண உறவு வார இறுதிப் பயிற்சி

விலை உயர்ந்ததை அன்பானவர்களுக்கு கொடுக்க முன்வருதல்

‘நான் உங்களை அன்பு செய்தது போல’ கணவன் மனைவி அன்பு செய்து ஒருவருக்கொருவர் அன்புறவின் தினமும் மகிழ்வுடன் வாழ்ந்திட இந்த பயிற்சியானது உருவாக்கப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் உலக அளவிலும் தேசிய அளவிலும் குறிப்பாக தமிழ் நாட்டிலும் மிகவும் வெற்றிகரமாக இந்த பயிற்சியானது தம்பதியர்களுக்கு வளங்கப்பட்டு வருகிறது.

கடவுளின் திட்டப்படி திருமண அருளடையாள உடன்படிக்கையில் கணவன் மனைவி நெருக்கமாக, பெறுப்பாக, மகிழ்வுடன் வாழ மண உறவு பயிற்சி அவசியமாகிறது.

 மலரும் மண உறவு பயிற்சி திருமணமான தம்பதியர்களுக்காகவே உருவாக்கப்பட்டது. எடுத்துக்காட்டான தம்பதியர்களாக வாழவும், தங்களுடைய திருமண வாழ்வை சுய ஆய்வு செய்து பார்க்கவும், தங்கள் கருத்துக்களையும், எதிர்பார்ப்புகளையும், அன்பையும், பாசத்தையும் உணர்வுகளையும் உரையாடல் வழியாக பகிர்ந்து கொள்ளவும், தங்களுக்குள்ள தொடர்பினை சீர்படுத்தி வளப்படுத்திட தங்களுடைய ஏமாற்றம், விரக்தி, ஏக்கம் இவற்றை மனம் திறந்து தயக்கமின்றி பகிர்ந்து கொள்ளவும் செவிமடுத்து அன்புறவை ஏற்படுத்தவும், துணையோடு நேரத்தை செலவிடவும் இந்த பயிற்சி உதவியாக இருக்கும். ஒவ்வொரு திருமணத்திற்கும் இதுபோன்ற ஒரு பயிற்சி அவசியமாக இருக்கிறது.  

 

தங்களின் ஆளுமை தன்மைகளைக் கண்டறிந்து அதன்படி செயல் படவும் தேவையற்றதை விலக்கி தம்பதியர்களின் இல்வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவுகிறது. தங்கள் உணர்வுகளை புரிந்து, பகிர்ந்து கொண்டு வாழ்வை வளமாக்க செய்கிறது.

பயிற்சி பங்கு பெற அழைப்பு:

-    திருமணமான தம்பதியர்கள் தங்கள் அன்பைப் புதுப்பித்துக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள்

-    ஐந்து ஆண்டுகளுக்கு மேல் திருமணமான  தம்பதியர்கள்

-    குருவானவுகளும்- துறவரத்தாறும் இதில் கலந்து கொள்ளலாம் - குருத்துவ வாழ்வை மேம்படுத்திக் கொள்ளவும், அழைத்தலை ஆழப்படுத்தவும் உதவும்.

மலரும மண உறவு பயிற்சி தம்பதியர்களுடைய தனிமைக்கு மதிப்பு கொடுக்கிறது. பயிற்சியானது தம்பதியினர் ஒருவருக்கொருவர் முழுமையாக அக்கறைக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியானது தம்பதியினராலும், குருவானராலும் வழங்கப்படுகிறது. தம்பதியர் தங்களுடைய திருமண அன்பில் மேலும் வழுபெறவும் உதவிகிறது.

o   உங்கள் திருமண வாழ்வில் மகிழ்வையும் அன்பையும் ஆழப்படுத் விரும்புகிறீர்களா?

o   உங்கள் திருமண வாழ்வில் அன்பு உரையாடல் ஏற்படுத்த விரும்புகின்றீர்களா?

o   உங்கள் திருமண உடன்படிக்கையை நிணைவு கூர்ந்து, நெருக்கம், உணர்வு, அன்பு இவற்றை புதுப்பிக்க விரும்புகின்றீர்களா?

வாழ்க்கைத் துணையோடு வளமாக, மகிழ்ச்சியாக வாழ விரும்பும் தம்பதியர்கள் இதில் பங்கேற்றால் தங்களின் திருமண வாழ்வு மேலும் சிறப்பானதாக்க உங்களுக்கு அமையும்.

தமிழ்நாடு மலரும் மண உறவு இயக்கம் உங்களை இப்பயிற்சிக்கு தம்பதியர்களாக உங்களை வார இறுதி பயிற்சிக்கு அழைக்கிறது.

 

பயிற்சி: சனிக்கிழமை காலை 7:0 மணி தொடங்கி ஞாயிறு மாலை 5:00 மணிக்கு நிறைவு பெறும்

உங்கள் பங்குகளிலும் மலரும் மண உறவு பயிற்சியானது நடத்தப்படும்.

 

அருட்பணி. அருள்குமார் ச.ச       84898 91394

Regional Ecclesial Team Priest

திரு. ஜெயகுமார் திருமதி. கிரிஜா    93442 17427

RET - Head Coordinating Couple