அன்பியங்கள் நடத்த வழிமுறைகள் Procedure for conducting Anbiam
பங்கோற்புத் திருஅவையாக வாழ்வதற்கு
இறையாட்சிச் சமூகங்களை உருவாக்குவதற்கான அன்பியங்கள் நடத்த வழிமுறைகள்
1. ஆண்டவருடைய துணையை நாடி செபித்தல்:
தூய ஆவியானவர் பாடல் பாடி துவங்குதல்
குழுவிலுள்ளவர்கள் ஒவ்வொருவரும் இறைவனுக்கு துதியும் தோத்திரமும் நன்றியும் சொல்வோம்
தந்தையே இறiவா! உம்மைப் போற்றுகிறோம். புகழுகிறோம். நன்றி கூறுகிறோம்.
தூய ஆவியானவரே! உமது அருட்கொடையால் எங்களை நிரப்பும்
இயேசுவே! எங்கள் மத்தியில் எழுந்தருளி வாரும். எங்களை வழி நடத்தும்
2. இறைவார்த்தைக்குச் செவிமடுத்தல்
விவிலியத்தை திறந்து ----------------------------------------- எழுதிய நற்செய்தி, அதிகாரம்----- எடுங்கள், தயவு செய்து யாராவது ------------------ வசனங்களை வாசியுங்கள்.
3. இதயத்தைத் தொட்ட திருவாக்கு
மனதைத் தொட்ட இறைவார்த்தைகளை அல்லது சிறு சொற்றொடர்களைத் தேர்வு செய்கின்றோம். அவற்றை சப்தமாகக் செபிக்கும் மனநிலையில் வாசிக்கின்றோம். மூன்று முறை வாசிக்கின்றோம். ஓவ்வொரு முறையும் சொற்றொடரை வாசித்தபின், மற்றவர்கள் அந்த வசனத்தைத் திரும்பச் சொல்வார்கள். கூடுமானவரை எல்லாரும் பகிர்ந்தபின், யாராவது இன்னொரு முறை அப்பகுதியை வாசிக்கின்றார்.
4. அமைதியில் இறைவனோடு - தியானித்தல்
கடவுள் தம்மிடம் பேசுவதைக் கேட்க, அமைதியாகச் சற்று நேரம் தியானிப்போம். இரண்டு நிமிடங்கள் அமைதியாக தியானித்தபின். கடவுள் நம்மிடம் பேசுவதற்குச் செவிமடுப்போம்.
5. இறைவார்த்தையின் இறையனுபவத்தை பகிர்வோம்
இறைவன் நம்மிடம் பேசியதை பிறருடன் பகிர்ந்து கொள்வோம். நம் உள்ளத்தை ஆழமாகத் தொட்ட வார்த்தை என்ன? நமது ஆன்மீக அனுவபத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
(உ.ம்: இறைவார்த்தையின் கருத்தை வாழ்க்கையில் இது தொடர்பாக அனுபவத்தை ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொள்வோம். சொற்பொழிவுகள் வேண்டாம். நீண்ட பேச்சுகளால் மற்றவர் பகிர்ந்து கொள்வதைத் தடுக்க வேண்டாம்.)
கவனிக்க: விசுவாசப் பகிர்விலேயே இதுதான் மிக முக்கியமான கட்டம். இதற்கென 25 நிமிடங்கள்.
6. செயல்திட்டம்
நமது குழு ஏதாவது ஒரு பணியை நிறைவேற்ற, ஆண்டவரால் அழைக்கப்படுகிறது. அதைப்பற்றி பேசுவோம்.
தனி மனிதர் மனமாற்றத்திற்கான செயல்திட்டம் என்ன?
சமூக மாற்றத்திற்கான செயல்திட்டம் என்ன? யார் செய்வது? எப்போது?
முந்திய பணியைப் பற்றி அறிக்கை சமர்ப்பித்தல்
அடுத்த கூட்டம் எங்கே? எப்போது? எந்த நாளில்?
7. விசுவாசிகளின் மன்றாட்டு
ஒவ்வொருவரும் தனித்தனியாக இறைவேண்டுதல் செய்வோம்.
(பலரும் மன்றாட்டுகளைச் சொல்வது இறுதியாக எல்லாருக்கும் தெரிந்த மாதா பாட்டுடன் கூட்டம் நிறைவு பெறுகிறது)
மதிப்பீடு: இந்தக் கூட்டம் எவ்வாறு நடந்தது. எவ்வழியில் அடுத்த முறை மேலும் சிறப்பாகக் கூட்டம் நடத்தலாம் என்பதைப் பற்றிய, ஒரு சிறு மதிப்பீட்டுடன் கூட்டம் கலைகிறது.
விசுவாசப் பகிர்வின் நோக்கங்கள்
உயிர்த்த இயேசுவின் பிரசன்னத்தை அனுபவிப்பது.
குழுவின் உறுப்பினர் ஒவ்வொருவரும் இறை வார்த்தையால் தூண்டப்பெறுவது.
ஒருவர் ஒருவருடன் இறை அனுபவத்தைப் பகிர்;ந்து கொள்வதால் அவர்களது விசுவாசத்தை ஆழப்படுத்துவது.
ஒருவர் ஒருவருடன் நல்லுறவை வலிமையுள்ளதாக வளர்த்துக் கொள்வது பிறருக்கு உதவ முற்படுவது.
குழுக்குள்ளே ஒருவர் ஒருவரை நம்பி, ஏற்றுக்கொள்வது. இக்குழுவின் செயல்முறைகளைத் திட்டமிட ஒரு செபக் சூழ்நிலையை ஒருவாக்குவது.
குறிப்பு: செபம் செய்;ய சரியான நேரத்தை தேர்வு செய்தல்
முன்கூட்டியே அன்பிய கூட்டம் நடைபெற இருக்கும் இடத்தையும் தேதியையும் அறிவித்தல். முன்னதாக வந்த நபர்கள் எல்லோரும் வரும் வரை செபமாலை செபிக்கலாம். சிற்றுண்டி இவைகள் முடிந்தால் கொடுக்கலாம். தேர்வு செய்யப்பட்ட விவிலிய வார்த்தையை மட்டும் தியானித்து பகிர்தல் நலம் பயக்கும். தேவையில்லாத கருத்துகளும் சம்பந்தமில்லாத கருத்துரைகள், பிறரைப்பற்றி தாழ்வாக பேசுதல், பலிசுமத்துதல், தீர்பிடுதல் இவற்றைத் தவிற்பது நலம் பயக்கும். ஆண்களும் கலந்துகொள்வது மிகுந்த ஆன்மீக அனுபவமாக மாறும். பொதுவான இடத்தில் வைப்பது மிகுந்த பயன்தரும். வீடுகளில் வைத்தால் எல்லோரும் எல்லாருடைய வீட்டிற்கும் செல்லவேண்டும்.
-
மணமக்களின் மன்றாட்டு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையே உள்ள ஒன்றிப்பைப்போன்று, உலகில் மக்களின் வளர்ச்சிக்காகவும், அ...