Love is at the Service of Others - think the term of couples

Love is at the Service of Others

 

"You shall love your neighbor as yourself" ( Lk 19:18)

 

We say,“I love this person.”It means I see him or her with the eyes of God, who gives us everything for our happiness. This helps me more to find ways to help the outcast in the society. Love helps others and is ever ready to do anything for others. In this way,thecouples promise love everyday by the simple gesture of doing good to one another without hurting.

 

The sacrament of marriage is intended “to perfect the couple’s Love” as scripture says, “Even if I have faith, so as to remove mountains but have not love, I am nothing.”Love must be the first priority for the couples. Love is experienced and nurtured in the daily life of the couple and their children. It is helpful to thrust more deeply the meaning of this Pauline text (1 Cor15:4-7) and its relevance to the concrete situation of every family. God’s love is proclaimed through conjugal love and through their children.The family extendsits love for the neighbors around.Love shows compassion and acceptance. It welcomes people as they are.Sometimes people act differently because they need love.The family welcomes and reaches out to others, especially the poor and the neglected where they can share their love.

 

Jesus asks us to share our love towards the neighbor who is in need. Is it possible for us to extend our hands to help needypeople?Jesus asks us not to decide who is close enough to be our neighbour, but rather we ourselves become neighbours to all. Pope Francis says in the encyclical FratelliTutti:The Parable of Good Samaritan shows the best example to share the love for neighbours (Lk 10:25-37). Love does not care where the wounded brother comes from.Because it is love that breaks the chains that isolate and separate us, building bridges; love that allows us to build a big family where we all can feel at home. Love that smacks of compassion and dignity.Love does not care whether a brother or sister in need comes from one place or another. St. Ignatius of Loyolasaid that Love is shown more by deeds than by words. It thus shows its fruitfulness and allows as to experience the happiness of giving.It manifests the nobility and grandeur of spending ourselves unstintingly, without asking tobe repaid. Ultimately, love ispurely for the pleasure of giving and serving.

 

I would like to narrate what happened during this pandemic to the migrant workers. The epidemic made the migrant workers to beg food for their survival because the companies shut the doors of canteens and there is no more service to them. They were looking forward for the companies to help but that never happened.When we came to know about their situation, we support them by providing food and food grains as package for cooking.We also arrangedtransportation for them to reach their hometown. In this way, we can share love towards the needy people and care for our own brothers and sisters. Love is shown to neighbors in such acts of random kindness and thoughtfulness.

The modern era has givena lot of space for the couple wherein they can free themselves from the marriage bond and enjoy individual life.This questions the promise that was made on the wedding day. Though there are misunderstanding between couples, they can come together for a dialogue.It showsthat there is love binding them together in spite of all inabilities. People may hate you, but there is good in them that help us to love them. Above all, they are images of God.The scripture says, “Love one another as I have loved you.” We must love ourselves first, thenwe can to extend it to others. “Let each of you look not only to his own intentions, but also to the intentions of others” (Phil 2:4).

 

How can we help the couplesto understand their love for each other? Howcould they share their love towards the neighbors or the needy people?

Can we take care of the people in need love and show care for each other?

Will we bend down to touch and heal the wounds of others? Will we bend down to shoulder each other?

 

Fr. Arulkumar SDB

Regional Ecclesial Team Tamil Nadu

Worldwide Marriage Encounter 

 

 


தம்பதியர்களிடையே உரையாடல் மலரும் மண உறவு பயிற்சி

 

தம்பதியர்களிடையே உரையாடல்

மலரும் மண உறவு பயிற்சி

தமிழ்நாடு மண்டல ஒருங்கிணைப்பாளர்

                                          அருட்பணி. அருள் குமார் ச.ச

உரையாடல்

உரையாடல் என்பது தம்பதியர்களிடையே நடக்கக் கூடிய பரிமாற்ற நிகழ்வு இது தினந்தோரும் நடக்கக்கூடிய நிகழ்வுதான் எனினும், கருத்துக்களை பகிர்தலும் பெற்றுக்கொள்ளுதளும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதில் சரிசமமாக பகிர்தல் நடைபெறவேண்டும். இல்லையேல் தம்பதியர்களிடையே உறவு விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த உரையாடல் அறிவு பூர்வமானதாக, சிந்திக்கக் கூடிய உரையாடலாக இல்லாமல் இருந்தால் அந்த உரையாடல் உணர்வுகள் கொண்ட உரையாடலுக்கு கொண்டு சேர்க்கின்றது.

உணர்வுபூர்வமான உரையாடல்

உரையாடல்கள் என்று பார்த்தால் சாதாரண உரையாடல், உள்ளார்ந்த உரையாடல், உணர்வுபூர்வமான உரையாடல் என்று வகைப்படுத்தலாம். ஆனால் தம்பதியர்களிடையே உள்ள உரையாடல் உணர்வுமிக்கதாக இருக்கவேண்டும். இந்த உரையாடலை தினந்தோறும் செய்ய வேண்டும்.  ஏன் இந்த உரையாடல் என்றால்? உணர்வுபூர்வமான உரையாடல் திறந்த மனதுடன் உணர்வுகளை வெளிப்படுத்தவும் ஒருவர் ஒருவரை முழுவதுமாக அறிந்து கொள்ளவும் மேலும் எளிதாக பழகுவதற்கும், மகிழ்வுடன் வாழவும், உற்சகத்துடனும், துடிப்புடனும் இல்வாழ்வில் இருக்கவும் இந்த உரையாடல் தம்பதியர்களுக்கு உதவுகின்றது.

தம்பதியர்களின் தனிப்பட்ட சிந்தனைகள் என்ன இருக்கின்றது என்பதனை அறியவும் அதனை எடுத்துச்சொல்ல துணையை அனுமதிப்பது பற்றியும் மேலும் இருவரும் எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆழமான சிந்தனை தாகம் கொண்டிருக்க வேண்டும். இதிலே தான் நம்பிக்கை பிறக்கின்றது. அப்போது திறந்த மனதுடன் உரையாட துணையினுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடியதாக உரையாடல் அமைகின்றது.

உணர்வுபூர்வமான உரையாட தூண்டுதல் அளித்தல்:  உணர்வுகளை பகிரும்போதுதான் தம்பதியர்கள் உள்ளத்தின் ஆழத்திற்கு செல்கின்றார்கள். இதில்தான் உரையாடல் வளமுள்ளதாக அமைகின்றது. சில நேரங்களில் உரையாடலின் போது எதிர்பாராத உணர்வுகள் வெளிப்படும் அதனை முறைப்படுத்தி உறவு வாழ்விற்கும அன்பு வாழ்விற்கும் உதவும் எனில் அதனை வெளிப்படுத்துதல் தம்பதியர்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. நல்ல உணர்வுகள் தம்பதியர்களுக்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும தரக்கூடியதாக அமைகின்றது. இதனை பகிர தூண்டுதல் மிக அவசியமாகிறது.

 

உரையாடலின் பலன்கள் என்ன என்பதை பற்றி பார்த்தால். உறவை புதுப்பிக்கவும், உறவு வாழ்வுக்கு உயிரோட்டம் கொடுக்கவும், மண வாழ்வில் நெருக்கமடையவும் பயனுள்ளதாக அமைவதுமட்டுமல்லாமல், தம்பதியர்களின் வாழ்வில் மகிழ்ச்சி அமைதி புரிதல் அன்பு பகிர்தல் அதிகமாகின்றது.

திருதந்தை பிரான்சிஸ் அவர்கள் அன்பின் மகிழ்ச்சி என்ற திருத்தூதுரையிலே தம்பதியர்களின் உரையாடலின் அவசியத்தைப் பற்றி 136-141 உள்ள பத்திகளில் குறிப்பிடுகின்றார். உரையாடலில் அன்பை அனுபவிக்க உணர அதனை வெளிப்படுத்தி பேனிக்காப்பதற்கும் உதவுகிறது உரையாடல் வார்த்தை பரிமாற்றம் மட்டுமல்ல உடல் மொழி உள்ளமொழி தேவை என்பதை உரைக்கின்றார், உரையாடல் நிகழ்த்த தகுந்த நேர்த்தியான  நேரத்தை தேர்ந்தொடுத்து உரையாடல் செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்துகின்றார்.

உரையாடலிலே கவனமாக கேட்க வேண்டும், செவிகொடுக்க வேண்டும் மேலும் கவனச்சிதறல்கள் இருக்கக்கூடாது என்கிறார். தம்பதியர்களிடையே என் குறலை கேட்பதற்கு ஒருவர் இருக்கின்றார் என்ற நம்பிக்கை உறுதி தருகின்ற வகையில் கேட்டல் மிகவும் அவசியமாகிறது. கேட்கும் போது இடையே பேசாமல் அமைதிகாத்து அவர்கள் பேசுவதை கேட்டு அவர்களுடைய கருத்தை மாற்ற முயலாமல் கேட்பது அவசியம் என்கிறார்.

பிரச்சனைகளை முன் வைத்து உரையாடுவதை தவிர்த்தல்  

உரையாடலில் பிரச்சனைகளை முன் வைத்தது உரையாடுவது அல்லது விவாதிப்பதை தவிற்பது நலம் பயக்கும். தம்பதியர்களுக்கு பயன் தரக்கூடிய மகிழ்வான நிகழ்வுகளை உரையாடலில் கொண்டுவந்து பேசுவது சிறந்த உரையாடலாக உறவை வழர்க்கக்கூடியதாக அமையும். வாழ்வை பற்றிய நேர்மறை எண்ணங்களை உரையாடலில் நிகழ்த்துவது அதிக பலன் தரக்கூடியதாக தம்பதியர்களுக்கு உதவும்.

உரையாடலில் தடைகளை நீக்க

உரையாடலில் வரும் தடைகளை நீக்க அல்லது தேக்கத்தை நீக்க நாம் முன் வரவேண்டும். இந்த குறுக்கீடு நிகழ்வுகள் உரையாடலை வேறு திசைக்கு திருப்பி எதிர்மறையான உணர்வுகளை வெளிப்படுத்த முயலும் இதற்கு இந்த தடைகளை தகற்க நுண் திறமை தேவைப்படுகின்றது. தம்பதியர்கள் கசப்புணர்வுகளை களைந்தும் காயப்படுத்துகின்ற வார்த்தைகளை தவிற்த்தும் புத்துணர்வு ஊட்டுகின்ற வகையிலே வார்த்தைகளை  கையாள வேண்டும். அப்போது தான் அன்பு செய்கிறவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள் என்பதை அனுபவித்து உணர்வுபூர்வமாக உணரமுடியம். தம்பதியர்கள் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொள்ள வாய்ப்பாக அமைகின்றது.

இதிலே தம்பதியர்கள் கேள்விகளை கேட்டள், கண்களை நேராகப் பார்த்து தொடர்பு கொள்ளுதல், உடலளவில் உடனிருத்தல், கவனிப்பதற்கான அக்கறையை வெளிப்டுத்துதல், ஆழமான நெருக்கத்தைது தேர்ந்தெடுதத்தல், தனிமையான இடத்தை தேர்வுசெய்தல் முக்கிய பங்க வகிக்கின்றது.

 

தினசரி உரையாடல் பத்து - பத்து: தினசரி உரையாடலில் மலரும் மண உறவு பயிற்சியில் 10-10 முக்கியத்துவம் வகிக்கின்றது.

WEDS

W - Write  எழுதுதல்

E - Exchange  பரிமாற்றம்

D - Dialogue  உரையாடல்

S - Select the question கேள்வியை தேர்ந்தெடுத்தல்

துணையின் உள்ளார்ந்த வளமையை அறிந்து கொள்ள. வாசித்தல் சிந்தித்தல் உரையாடுதல் இது சிறப்பாக உதவும் மேலும் நம்மை சுற்றி உள்ளவர்களை திறந்த மனதுடன் உரையாடல் வழியாக தான் பேணி வளர்க்க முடியும். உரையாடலில் உணர்வுகளை வெளிப்படுத்துவது முக்கிய பங்கு வகிக்கின்றது.

எழுதுதல்: தம்பதியர்கள் தங்கள் காதல் கடிதங்களை தங்களுடைய துணைக்கு எழுதும்போது கவணிக்க வேண்டியது. செல்லப் பெயரிட்டு அன்புடன் எழுதக்கூடிய காதல் கடிதம். இது விவாத கடிதம் இல்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும் அதுமட்டுமல்ல கசப்பான நிகழ்வுகளை தவிற்ப்பது நல்லது. இக்கடிதம் உணர்வுகளந்த அன்பு கடிதமாக இருக்க வேண்டும் இதன் மூலம் உங்கள் துணையை எவ்வளவுக்கு அதிகமாக அன்பு செய்கின்றீர்கள் என்பதனை உங்கள் துணை உங்களை அறிந்து கொள்ள உதவுகிறது அன்பு வாழ்விற்கு ஆணிவேறாக அமைகின்றது. எழுதுதல் பத்து நிமிடம் மட்டுமே போதுமானது.

பரிமாற்றம் செய்தல்:  எழுதிய அன்புக்கடிதத்தை தம்பதியர்கள் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும். இதில் மனைவி எழுதியதை கணவனிடமும், கணவன் எழுதியதை மனைவிடமும் கொடுத்தல் அவசியம் அதன் பிறகு அமைதியான முறையில் தன் துணை என்ன காதல் கடிதம் எழுதியிருக்கின்றார்கள் என்பதை வாசிக்க வேண்டும். தங்கள் துணை எழுதியது உண்மைதான என்று உணரமுடிகின்றதா? என்று உங்கள் உணர்வுகளை வைத்து பாருங்கள் அது உங்களுக்கு ஏற்றதாக அமைகிறது என்றால் உங்கள் துணை உணர்வுகளை வெளிப்படுத்தியது சரியானதே என்று ஏற்றுக்கொள்ளுங்கள்.

உரையாடல்: இப்போது நீங்கள் எழுதிய காதல் கடிதத்தை துணையிடம் பகிருங்கள் கணவன் ஐந்து நிமிடமும் மனைவி ஐந்து நிமிடமும் பகிர்தல் அவசியம். இதிலே தம்பதியர்கள் தங்களின் காதல் கடிதத்தில் உள்ள ஓர் ஆழமான உணர்வைத் தேர்ந்தெடுத்து, ஒருவரையொருவர் பார்த்து  அந்த உணர்வைப்பற்றி உரையாடலை பகிரலாம். உரையாடலில் உடல் மொழியையும் பார்க்கவேண்டும். உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் உடல் மொழியில் அதிகம் வெளிப்படுத்தப்படுகின்றது. இது தன் துணையை உணர்வுபூர்வமாக புரிந்து கொள்ள உதவுகிறது.

கேள்வியை தேர்ந்தெடுத்தல்:  அடுத்த உரையாடலுக்கான தலைப்பைத் தெரிவு செய்தல் முக்கியம் எனவே உங்களுக்கு தற்சமயம் பொருத்தமாக உள்ள ஒரு தலைப்பைத்  தெரிவு செய்யுங்கள் அது உதவியாக இருக்கும். நீங்கள் உரையாடலுக்கு எடுத்துக் கொள்ளும் தலைப்புகளில் கடவுள், பாலுணர்வு, நிதிநிலைமை, உடைமைகள், குழந்தைகள், உறவிணர்கள், உத்தியோகம், இவற்றை கொண்டிருக்க வேண்டும். மற்ற ஏற்ற தலைப்புகளையும் விணாக்களையும் தேர்வு செய்து உரையாடுவது ஏதுவாக அமையும்.

நிலையை மதிப்பீடு செய்தல்

உரையாடலில் உணர்வு நிலையை மதிப்பீடு செய்தல் அதற்குண்டான விளக்குகள் குறியீட்டையே அல்லது எண்களை வைத்து மதிப்பீடு கொடுத்தல் தம்பதியரின் உணர்வு நிலை எந்த நிலையில் இருக்கன்றார்கள் என்பதை வண்ணங்களினாலும், எண்கள் மூலம் வெளிப்படுத்துதல் உணர்வினுடைய ஆழநிலையை வெளிப்படுத்துகிறது.

உரையாடல் கட்டமைப்பு  - WEDS

உரையாடல் கட்டமைப்பு தம்பதியர்கள் என்ன எதிர்பார்க்கின்றார்கள் என்பதனை எழுத்து மூலமாக எழுதி விவரிக்கலாம். தம்பதியர்கள் பற்றிய ஒரு வினா எடுத்து அதனை காதல் கடிதமாக ஒருவருக்கொருவர் எழுதுதல். இதை எழுதுவதற்கு தம்பதியர்கள் தனித்தனியாக சென்று எழுதுவது அதிக பயன் கொடுக்கக்கூடியதாக அமையும். இதில் தனியாக எழுதும் பொழுது கவனச்சிதரல்கள் ஏற்பட வாய்ப்பில்லை எனலாம். தேர்ந்தொடுக்கப்பட்ட வினாக்கு உரிய கடிதத்தை உணர்வுபூர்வமாக எழுத முற்படவேண்டும். அந்த உணர்வை அதிகமாக விவரித்து எழுதுதல் அதிக பலனைக் கொடுக்கும். எழுதி முடித்த பிறகு அவர்கள் தனிமையிலே கடிதத்தை பரிமாற்றிக் கொள்கின்றார்கள். அதனை வாசிக்கும் போது துணையினுடைய உணர்வுபூர்வமான வரிகள் உள்ளுணர்வை தூண்ட கூடியதாக இருக்க வேண்டும். இந்த உணர்வுகள் ஏற்கக்கூடிய உணர்வாக துணையினுடைய உணரப்படவேண்டும்.

 

அருட்பணி. அருள் குமார் ச.ச

அகில உலக மலரும் மண உறவு இயக்கம் தமிழ்நாடு