மணமக்களின் மன்றாட்டு
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கும்
திருச்சபைக்கும் இடையே உள்ள ஒன்றிப்பைப்போன்று, உலகில் மக்களின்
வளர்ச்சிக்காகவும், அன்பு வழி வாழ்வுக்காகவும்
திருமணத்தைப் புனிதப்படுத்தியுள்ள இறைவா, நாங்கள் இருவரும் திருமணத்தின்
அருளாசீரை வணக்கமுடன் ஏற்றுள்ளோமாகையால் எங்கள் கடமைகளைக் குறைவின்றி நிறைவேற்ற
அருள்வீராக. ஒரே உடலகா இணைக்கப்பட்டுள்ள நாங்கள் பிரமாணிக்கத்ததுடன் வாழ்ந்திடச்
செய்வீராக. எஙகள் அன்பின் பிணைப்பை உடைக்கக்கூடிய
அனைத்து குறைபாடுகளிலிருந்தும் எங்களைப் பாதுகாத்தருளும். எங்களிடம் காணப்படக்கூடிய
சிறு குறைகளை ஒருவருக்கொருவர் மன்னித்து மறந்துவிட்டு, நீங்கா அன்பில் நாங்கள்
இருவரும் நிலைத்திருக்கச் செய்வீராக. பொறுமையும் தாழ்ச்சியும், மற்றவர்களிடம்
இரக்கமும், தியாக உள்ளமும் எங்கள் வாழ்வின் அணிகலனாக விளங்கச் செய்தருளும். இன்பத்தை ஏற்பதுபோன்று, துன்பம் வரும்போது அதனை
உமது திருவுளத்திற்குப் பணிந்து ஏற்று கிறிஸ்துவில் அதனை மாண்புள்ளதாக்கிட மன
உறுதியை எங்களுக்குத் தந்தருளும். இதனால் பாவப் பிடியில் சிக்குண்டிருக்கும்
குடும்பங்களைக் காத்து, அருள் வாழ்வை வழங்கிட நாங்கள் ஒத்துழைப்பதாக உறுதியளிக்கிறோம்.
தூய்மையும், இறையன்பும், எங்களின் திருமண அன்பும் ஒவ்வொரு நாளும் வளர்ந்திடச்
செய்விராக, திருக்குடுமபத்தை நாங்கள் பின்பற்றி உம்முடைய திருவுளத்தைச் செயலாற்ற
உதவியாருளும். - அமென்.
திருக்குடும்பத்தை நோக்கி மன்றாட்டு
இயேசு, மரியா,
யோசேப்பே, உண்மை அன்பின் பேரொளியை நாங்கள் உங்களில் தியானிக்கிறோம்:
நம்பிக்கையுடன் உங்களை நோக்குகிறோம். நாசரேத்தூர்த் திருக்குடும்பமே, எங்கள் குடும்பங்களும்
அன்புறவு, இறைவேண்டல் ஆகியவற்றின் இல்லங்களாகவும் நற்செய்தியின் உண்மையான பள்ளிகளாகவும்
குட்டித் திருஅவைகளாகவும் திகழ்ந்திட அருள் தாரும். நாசரேத்தூர்த்
திருக்குடும்பமே, வன்முறை, புறக்கணிப்பு, பிளவுகள் ஆகியவற்றைக் குடும்பங்கள்
ஒருபோதும் சந்திக்காது இருக்கட்டும்: காயப்பட்டோர், பாதிக்கப்பட்டோர் ஆகிய
அனைவரும் உடனடியாக ஆறுதலும் நலமும் பெறுவார்களாக. நாசரேத்தூர்த் திருக்குடும்பமே,
குடும்பத்தின் புனிதத்தையும் மாண்பையும் இறைத் திட்டத்தில் அதன் அழகையும் நாங்கள்
மீண்டும் நினைவில் கொள்ளச் செய்யும், இயேசு, மரியா, யோசேப்பே, எங்கள் மன்றாட்டைக்
கனிவுடன் கேட்டருளும். - ஆமென்.
குடும்பத்தின் பாதுகாப்புகாகச் செபம்
அதிதூதரான புனித மிக்கேலே, எங்கள்
போரட்டத்தில் எங்களைக் காத்தருளும். பசாசின் கெட்ட கருத்தையும் சோதனைகளையும்
அகற்றி எங்களுக்குத் துணையாயிரும் தாழ்மையான எங்கள் மன்றாட்டைக் கேட்டு இறைவன்
பசாசுக்குக் கட்டளையிடுவாராக. விண்ணக சேனைக்குத் தலைவரான நீரும், ஆத்துமங்களை
அழிக்கிறதற்கு இவ்வுலகில் சுற்றித் திரியும் பசாசுக்களையும் மற்ற கெட்ட
சக்திகளையும் இறைவல்லமையின் பலத்தால் நரகத்தில் தள்ளுவீராக, எங்கள் குடும்பங்களை
உமது பாதுகாப்பில் வைத்து எல்லாத் தீமைகளிலிருந்தும், ஆபத்துக்களிலிருந்தும்
விடுவித்து காத்தருள்வீராக. - ஆமென்.
மலரும் மண உறவு தம்பதியர்களுக்குச் செபம்
திருகுடும்பமாக
எங்களை ஆசீர்வதித்து வழிநடத்தும் அன்பு இறைவா, நாங்கள் குடும்பமாக அன்பை சுவைக்க
எங்களுக்கு உமது கொடைகளைக் கொடுத்துள்ளீர். அதே அன்பை நாங்கள் மற்ற தம்பதியர்களோடு
பகிரவும் மலரும் மண உறவு வழியாக நாங்கள் பெற்றுக்கொண்ட அனுபவத்தைப் பகிரவும்
எங்களுக்கு உமது ஆசீரைக் கொடுத்தருளும். தம்பதியராகிய எங்கள் மீது இரங்கி
இல்லரத்தின் புண்ணியங்களிலும் அன்பின் உறவுகளிலும் நாங்கள்
மகிழ்ந்திருக்கச் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக