கொரோனா வைரஸ் தோற்று காலத்திலே புதிதாய் திருமணமான தம்பதிகள் நிலை
நம்பிக்கை விட்டு செல்லுதல் Passing on Faith
நம்பிக்கை விட்டு செல்லுதல்
அருட்பணி. அருள்குமார் ச.ச
மண்டல ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு
மலரும் மனஉறவு இயக்கம்
“நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். ஊன் வீட்டில் இருக்கும்போதும் உன் வழிப்பயணத்தின்போதும்> நீ படுக்கும்போதும், எழும்போதும் அவற்றைப் பற்றிப்பேசு” இ.ச 6:7
கடவுளின்மீது நம்பிக்கை:
எல்லாத் தம்பதியரும் தங்கள் குழந்தைகளுக்கு கடவுள் நம்பிக்கையை எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கின்றதே அப்போதெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும். கடவுள் நம்பிக்கையில் அவர்கள் தினந்தோறும் வளர இது உதவுகின்றது. அவர்களது எதிர்காலம் இதனால் சிறப்பாக அமைகின்றது. தம்பதியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆலயத்திலும் மற்றும் மற்ற இடங்களிலும் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் கடவுளின் நம்பிக்கையில் வளர்கின்றார்களா என்பது அவர்களுடைய செபவாழ்வு உதவகின்றது. ‘தம்பதியர்கள் ஆண்மிக வழிகாட்டியாகவும் இருக்கவேண்டும். குடும்ப மறைக்கல்வி அதிகமான மாற்றத்தைக் கொடுக்கின்றது அதனால் குடும்பத்தில் திருத்தூது பணியை செய்ய முற்படவேண்டும்.” (அ.ம 278)
திருவிழா நேரங்கள்:
ஒவ்வொரு வருடமும் எங்கள் குடும்பத்தில் வழக்கமாக நடைபெறுகின்ற நிகழ்வு என்னவென்றால்: எங்கள் ஊர் புனித அந்தோணியார் திருவிழாவின் போது குடும்பமாக ஒன்று சேர்ந்து கொண்டாடுவது வழக்கம். திருவிழாவின் போது என் தாய் எங்களை கூப்பிட்டு புனித அந்தோணியாரின் சுருபத்தை பார்த்து தொட்டு முத்தம் கொடுக்க சொல்வார் நாங்களும் அதை செய்வோம் இது வழக்கம்போல் ஒவ்வொருவருடமும் நடைபெறுகின்ற நிகழ்வுதான். அந்த செயலில் எவ்வளவு அன்பு இருக்கின்றது என்பதனை நான் இப்போது நினைத்துப்பார்க்கும் பொழுது எனது எளிய செப வாழ்வு என்னை மேன்மை படுத்துகிறது என்பதை நான் உணர்கின்றேன். இவ்வாறு நமது பெற்றோர்கள் கடவுள் நம்பிக்கையடையவர்களாக இருக்க வேண்டும். திருவிழாக்காலங்களில் நாங்கள் அனைவரும் கலந்துரையாடலில் ஈடுபட்டுடிருப்போம் அதனைத் தொடர்ந்து ஒன்றாக விருந்துணவு தயார்செய்து உண்பது வழக்கம் இந்நிகழ்வு நாங்கள் அன்பாக இனைந்து வாழ அதிகமாக உதவிசெய்கின்றது என்பதை நான் உணர்கின்றேன்.
குடும்பம் சக்கியை தருகின்றது:
குடும்ப சம்பரதாயங்கள் சடங்குகளும் ஒவ்வொருவருடமும் குடும்பத்தில் ஒற்றுமையையும் சக்தியையும் தருகின்றது. இந்த கலாச்சாரமும் குடும்ப பாரம்பரியமும் எப்பொழுதும் குடும்பத்தை கட்டிக்காக்கின்றது. இது உலகத்தோடு தன்னிலை பெற்று பயணிக்க உதவிகின்றது. குடும்ப பாரம்பரியம் சட்டத்திட்டங்கள் விதிமுறைகள் குடும்பத்தில் கட்டுக் கோப்புடன் வாழ உதவுகின்ற கருவியாக இருக்கின்றது. இந்த குடும்ப பாரம்பரியம் தம்பதியர்களுக்கு வருகின்ற பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க உதவுகின்றது.
கற்ற நல்லவற்றை அடுத்த தலைமுறைக்கும் விட்டுச்செல்வது:
பொதுவாக எல்லா குடும்பங்களிலும் குடும்ப முரைகள் கலாச்சாரம் உணவு சேர்ந்து உட்கொள்ளுதல் போன்றவைகளை கற்றுக்கொடுத்தல் வளரும் தலைமுறைக்கு உதவியாக இருக்கும். குடும்பங்கள் ஒற்றுமையாக இருக்க விடுமுறை நாட்களில் குடும்ப விழாக்களிலும் சிறப்பாக பிறந்தநாள் நினைவு நாட்கள் திருமண நாள் இவைகள் குடும்பத்தில் ஒற்றுமையை பிரதிபலிக்கின்றன. இந்த குடும்ப கலாச்சாரம் நெருக்கமடையவும் பாதுகாப்புக்கும் உதவிகிறது. குடுப்பத்தில் உதவுகின்ற மனப்பாண்மை எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றது. சிறப்பாக குழப்பங்கள் மற்றும் தனிமையில் இருக்கும்போதும் மற்ற குடும்பத்தில் உள்ள நபர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்றனர். குடும்ப பாரம்பரியம் எப்படி குடும்பத்தை முன்னேற்றப்பாதையில் வளர்க்கவும் குழந்தைகளை நல்ல குழந்தைகளாக வளர்த்தெடுப்பதில் உறுதியாக இருக்கின்றார்கள்.
குடும்ப பாரம்பரியத்தை காத்தல்:
குடும்பத்தில் வயதான பெற்றோரை நன்முறையில் பாதுகாத்து வருதல் கடமை அதுமட்டுமல்ல அவர்களுடைய உடைமைகளுக்காக மட்டுமல்ல மாறக அவர்களில் அன்பு கூர்ந்து பாதுகாத்தல் கடமையாகும். சிலர் பொருளாதாரத்தை மையப்படுத்தி பெற்றோர்களையும் முதியவர்களையும் பாதுகாக்கக்கூடிய சூழல் இருந்துகொண்டுதான் இருக்கின்றது ஆனாலும் இளம் தம்பதியர்கள் நமது கலாச்சாரத்திற்கேற்ப பெரியவர்களை தம்மோடு வைத்து பாதுகாப்பதின் வழியாக அவர்களிடமிருந்து பாரம்பரியத்தையும் நல்ல கலாச்சாரத்தையும் கற்றுக்கொடுப்பவர்களாக இருக்கின்றார்கள். தம்பதியர்கள் சற்று சிந்தித்துப் பார்த்தால் நன்கு புரியும் குடும்பத்தில் ஒற்றுமை பலம் பாதுகாப்பு மற்றும் அடையாளப்படுத்துதல் இவை அனைத்தும் பாரம்பரியம் கற்றுத் தருவதாக பெரியவர்கள் இருக்கின்ற சூழலில் அவர்கள் இருக்கும் போது தம்பதியர்களுக்கு திருப்தியையும் மன நிறைவையும் குடும்பத்தில் நம்பகத்தன்மையையும் ஏற்படுத்துகின்றனர். குடும்த்தில் பழையவற்றை மாற்றி அல்லது அதை ஏற்றுக்கொண்டு புதிதாக ஏற்படுத்தப்பட்ட குடுப்பத்தில் மகிழ்ச்சியாக வாழ வழிவகை கலாச்சாரம் செய்கின்றது.
பாரம்பரியம் ஒரு அழகான அடையாளமாக நாம் ஏற்படுத்தி அனுபவங்களை வாழு முயற்சி செய்யும் போதுதான் அதை மற்றவர்களுக்கு நாம் கொடுக்கின்றோம். – டிபனீ கேகன்.
சிந்திக்க வினாக்கள்: உங்களுடைய சிறப்பான குடும்ப பாரம்பரியம் ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கின்றீர்களா? விடுமுறை நாட்களில் சிறப்பாக குடும்பத்துடன் கொண்டாடிகின்றீகாளா? நீங்கள் சிறப்பான நிகழ்வுகளை நடத்துகின்றீர்களா?
குடும்ப பாரம்பரியம் முக்கிமாக இருக்க 5 காரணங்கள்:
1. குடும்ப பாரம்பரிய நினைவுகள் நீங்காத ஒன்றாக இருக்கின்றது. நமது குழந்தைகள்பருவ நினைவுகள் குடும்பத்தில் பகிர்கின்றோம். நமது குடும்ப பி;ரச்சனைகளில் விடைக்கான நமது பாரம்பரிய படி விடைகான உதவுகின்றது.
2. குடும்ப பாரம்பரியம் குடும்பத்தில் பொறுப்புக்களை முன்னோடுத்து நடக்கின்றது. உளவியளாலர்கள் கூறுவது மனிதன் சார்ந்திருப்பது ஒற்றுமைக்கு வழிவகை செய்கின்றது.
3. நூம் சார்ந்திருப்பது உணவு நீர் வீடு இந்த நலனே கலாச்சாரத்தில் குடும்ப பாரம்பரியம். நம் முகமுகாய் பார்த்து பரிமாறிக்கொள்வதில்தான் அமைகின்றது.
4. கும்பம் பாரம்பரியம் மதிப்பீடுகளை வளர்க்க உதவுகின்றது. ஒவ்வொரு குடும்பத்திலும் தனித்தன்னை கொண்டதாக மாறா பற்றுருதியுடன் குடும்பங்கள் தனித்தன்மையுடன் செயல்படுகின்றது.
5. குடும்ப பாரம்பரியம் குழந்தைகளுக்கு பாதுகாப்பைக் கொடுக்கின்றது. பல்கழைகழக குடும்ப பயிற்றுனர் எபி கிரிஸவோல்டு எகல்டகர் கூறுகின்றார் இவ்வுலகில் நடைமுறை நிகழ்வுகள் பாரம்பரியமும் குடும்பத்திற்கு நல்லதை கொடுக்கின்றது. பாரம்பரியம் இளம் தலைமுறைக்கு பாதுகாப்பையும் கொடுக்கின்றது. இது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டேதான் இருக்கின்றது. குழந்தைகள் பொம்மைகளையும் மற்றும் பரிசுபொருட்களையும் நினைவில் வைத்திருப்பதில்லை மாறாக அவர்களுக்கு கிடைந்த சிறந்த குடும்ப அனுபவங்களை அவர்கள் நினைவு கூறுகின்றார்கள்.
நான் நம்புகின்றேன் உங்கள் குடும்பத்தில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். உங்கள் குடும்பம் தனித்தன்னை வாய்ந்த பாரம்பரியத்தை நீங்கள் கடைபிடித்துக் கொண்டுதான் இருக்கின்றீர்கள் அதை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள் அதற்கான நேரத்தை செலவிடுங்கள் குறிப்பாக கிருஸ்தவ மறையை போதியுங்கள் அப்பொழுதுதான் அவர்கள் இறைநம்பிக்கையிலே எப்பொழும் வளர்வார்கள் அதுமட்டுமல்ல அவர்கள் சந்திக்க இருக்கும் சவால்கள் அனைத்தும் இறைவனுடைய துணையால் எல்லாம் அவர்கள் தைரியத்துடன் சந்திப்பார்கள் வெற்றி பெறுவர்கள்.
பாரம்பரியத்தை இறைநம்பிக்கை நம்முடைய குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து விட்டுச்செல்வோம்
-
COME O SPIRIT PRAYERS TO THE HOLY SPIRIT 1 Come, Holy Spirit, Creator of all things; Come, visit our hearts with your power....
-
Couples Accompaniment “Love one another as I have loved you” Worldwide Marriage Encounter is a movement that helps couples to ...