வார இறுதியை செலவிடும் பொழுது நீங்கள் உண்மையிலேயே ஒரு புது வாழ்வு பெற்றவர்களாக மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, ஒருவரை ஒருவர் முழுதுமாக புரிந்துகொண்டு அன்பு வாழ்வுக்கு அதிகமான நேரத்தை செலவழிக்க உங்களுக்கு இந்த மலரும் மண உறவு ஒரு வாய்ப்பு கொடுக்கின்றது. கடவுள் ஒவ்வொருவரையும் நிறைவாக ஆசீர்வதித்து வழிநடத்துகின்றார் உங்கள் துணை யின் வழியாக அந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார் நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அன்பு மேலும் மேலும் வளர உங்களுக்கு இது ஒரு வாய்ப்பளிக்கிறது கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும் என்று வசனத்தை நாம் விவிலியத்தில் வாசிக்கின்றோம் வாசிக்க கேட்கின்றோம் இந்த வேலைப்பளுவின் வழியாக நமது பொருள்களின் வழியாக மற்றும் நமது சொந்த தேவைகளை தேடிச் செல்வது வழியாக நாம் உறவுக்கு முதலிடம் கொடுக்காமல் பொருளுக்கு முதலிடம் கொடுத்து நமது உறவை சரி செய்யாமல் விட்டு விடுகின்றோம் அன்பு ரவை புதிப்பிக்க தம்பதிகளாக இணைந்து இந்த மலரும் மண உறவு வார இறுதியில் பங்கு பெறுங்கள் . உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுது நீங்கள் அந்த வாய்ப்பை நழுவ விட்டுவிடாதீர்கள் ஏனென்றால் கடவுள் உங்களுக்கு மீண்டும் ஒரு ஆசீர்வாதத்தை இந்த கருத்தரங்கு வழியாக கொடுக்கின்றார் நீங்கள் புத்துணர்வு பெற உங்களுக்கு வாய்ப்பு அளிக்கின்றது.
அருட்திரு. அருள்குமார் ச.ச