திருமறைச் சுவடி

 

கத்தோலிக்க

திருமறைச் சுவடி

 “சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. மாற்கு 10:14,

இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும். நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். இச.6:6-7

சிறுவர் மறைக்கல்வி

இறைவனுக்கு பிரியமான இறைவனின் செல்லக்குழந்தைகளே பெற்றோர்களே மேற்காணும் இரு இறைவாக்குகளும் சிறுவர் மறைக் கல்வியின் அவசியத்தையும் பரிமானத்தையும் நமக்கு உணர்த்துகின்றன.  இந்த சுருக்கமான மறைக்கல்வி நூல் நீங்கள் இயேசுவுக்கு உகந்த பிள்ளைகளாக அவரது அன்பிலும் ஆசீரிலும் வாழ பெரிதும் உதவும். இந்த சிறிய நூலில் கத்தோலிக்க கிறிஸ்தவம் பற்றிய அடிப்படை கருத்துக்களும், சட்டங்களும், கோட்பாடுகளும் சுருக்கமாக எளிய தமிழில் கேள்வி பதில் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் நாம் செபிக்க உதவும் பக்தியான சில செபங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அன்புப் பெற்றோரே இதனை நிங்களும் வாசித்து புரிந்து இதன்படி உங்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக வாழ்ந்துகாட்டுவதும், மறைஉண்மைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்துவதும், செபிக்க வழிகாட்டுவதும், உங்கள் கிறிஸ்தவ கடமை ஆகும்.

1.      மறைக் கல்வி என்றால் என்ன?

i.          கிறிஸ்துவ வேதசத்தியங்களின் அடிப்படை உண்மைகளை திருச்சபை உருவக்கியுள்ள ஆவணங்களின்படி கற்பிப்பதே மறைக் கல்வி எனப்படும். 

ii.        கேள்வி - மறுமொழி வடிவத்தில் வேதசத்தியங்களைக் கற்றுக்கொடுகும் இலகுவான கல்விமுறை.

2.      மறைக்கல்வியில் உள்ள பகுதிகள் யாவை?

i.       நம்பிக்கை அறிக்கை (Profession of faith)

ii.      கிறிஸ்துவ மறைபொருளின் கொண்டாட்டம் (Celebration of the Christian Mystery)

iii.    கிறிஸ்துவில் வாழ்வு (Life in Christ)

iv.    கிறிஸ்துவ இறைவேண்டல் (Christian Prayer)

3.      குழந்தைகளுக்கு மறைக்கல்வியை போதிக்கும் கடமை யாருக்கு?

i.       வேதியர்

ii.      மறைக்கல்வி ஆசிரியர்கள்

iii.    பெற்றோர்கள்

4.      எந்த அதிகாரத்தல் இவர்கள் மறைக்கல்வியை போதிக்கிறார்கள்?

Papal Magisterium’ என்று அழைக்கப்படும் திருத்தந்தையின் அப்போஸ்தலிக்க  அதிகாரத்தின் கீழ் இவர்கள் மறைக் கல்வியை போதிக்கிறார்கள்

5.      மறைக் கல்வியில் சிறுவர்களின் பங்கு என்ன?

i.       மறைக்கல்வியை அறிவது

ii.      மறைக்கல்வியில் கற்றவற்றில் நம்பிக்கை வைப்பது.

iii.    மறைக்கல்வியை தமதாக்கிக்கொள்வது

iv.    மறைக்கல்வியை வாழ்வது

v.      மறைக்கல்வியை பிறருக்கு அளிப்பது.

6.      முதல் மறைக்கல்வி யாரால் யாருக்கு நடத்தப் பட்டது?

லூக் 24:27.  “மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார்”. ஆம் நம் ஆண்டவராம் இயேசுகிறிஸ்துவே நம் திருச்சபையின் முதல் மறைக்கல்வி ஆசிரியர்.  அவர் மறைக்கல்வியை போதித்தது எம்மாவுஸ் சீடர்களுக்கு.

7.      இரண்டாவது மறைக்கல்வி யாரல் யாருக்கு எப்போது, நடத்தப் பட்டது?

திப-2: 22-36 திருவசனங்களின்படி பேதுருவால், பெந்தகோஸ்தெ நாளன்று யூதருக்கு மறைக்கல்வி கற்பிக்கப்பட்டது.

இத்தகைய சிறப்புமிக்க மறைக் கல்வியைத்தான் இந்த  கத்தோலிக்கத் திருமறைச் சுவடியின் (மறைக்கல்வி நூலின்) வழியாகக் கற்கப் போகிறோம்.

பாகம் 1

நம்பிக்கை அறிக்கை

நம்பிக்கை அறிக்கை-1: விண்ணையும் மண்ணையும் படைத்த எல்லாம்வல்ல தந்தையாம் இறைவனை நம்புகிறேன்.

8.     கடவுள் (இறைவன்) என்பதன் பொருள் என்ன?

v  தானாய் உள்ளவர்; உண்டாக்கப்பட்டவர் அல்ல;

v  தொடக்கமும் முடிவும் இல்லாதவர்; நித்தியத்திற்கும் வாழ்பவர்

v  அனைத்தையும் கடந்த ஆற்றல் கொண்டவர்

v  அனைத்து நண்மைகளையும் முழு நிறைவாய்க் கொண்டவர்

9.     கடவுள் ஒருவரா?

ஆம். கடவுள் ஒருவரே.

10.  கடவுள் எவ்வாறு உள்ளார்?

தந்தை மகன் தூய ஆவியார் ஆகிய மூன்று ஆட்களாக இருந்தாலும் ஒரே கடவுளாக இருப்பவர்.

11.  கடவுள் எல்லாம் வல்லவர் என்பதின் பொருள் என்ன?

கடவுளால் அனைத்தும் இயலும். அவரால் இயலாதது எதுவும் இல்லை.

12.  கடவுளை மனிதரால் அறிந்து கொள்ள முடியுமா?

v  முடியும். நமது புலன்களால் அல்ல, அறிவாற்றல் கொண்டு அல்ல; நம்பிக்கையின் ஆற்றல் கொண்டு.  

v  இதனையே இறைவன் மறைபொருளாக இருக்கிறார் என்று நம்பி அறிக்கையிடுகிறோம்.

13.  இறைவன் விண்ணையும் மண்ணையும் படைத்தவர் என்பதின் பொருள் என்ன?

எண்ணிலடங்கா கோள்களை உள்ளடக்கிய விண்ணையும் பூமியில் உள்ள அனைத்து உயிருள்ளவை உயிரற்றவைகளையும் தம் வார்த்தையால் உண்டாக்கியவர் என்பதே அதன் பொருள்.

14.  கடவுள் எங்கு இருக்கிறார்?

கடவுள் எங்கும் நிறைந்துள்ளார்

15.  கடவுள் எங்கும் நிறைந்துள்ளார் என்றல் அனைத்தையும் காண்கிறாரா? நிகழும் அனைத்தையும் அறிவாறா?

ஆம்.  அனைத்தையும் காண்பவராகவும் அறிபவராகவும் உள்ளார்.  நம் உள்ளத்தில் எழும் சிந்தனையைக்கூட அறிபவராக உள்ளார்.  நாம் மறைவாய் செய்யும் செயல்களைக்கூட காண்பவராக இருக்கிறார்.

16.  கடவுளுக்கு தொட்டு உணரக்கூடிய உடல் உள்ளதா?

இல்லை. சொரூபியாக(ஆவியாக) எங்கும் நிறந்துள்ளார்.

17.  தூய தமத்திருத்துவ மறைபொருளை நமது ஆன்மா எவ்வாறு பிரதிபலிக்கிறது?

தந்தை மகன் தூய ஆவியார் மூன்றுஆட்களாய் இருந்தாலும் ஒரே கடவுளாய் இருப்பதற்கு இணையான புரிதல்,ஞாபகம், சுயவிருப்பம் ஆகிய மூன்று கூறுகளைக் கொண்ட்துதான் நமது ஆன்மா.

18.   இறைவன் நம்மை ஏன் படைத்தார்? எதற்காக நாம் இந்த பூமியில் படைக்கப்பட்டோம்?

இறைவனை நாம் அறியவும், அவரை அன்பு செய்யவும், அவரது சித்தத்தின் படி நன்மை செய்து வாழவும், ஒரு நாள் அவரை அடைந்து, பரலோக ராஜியத்தில் நித்தியத்திற்கும் அவரோடு வாழவும் கடவுள் நம் மேல் வைத்துள்ள  அளவற்ற, நிபந்தனையற்ற அன்பால் நம்மைப் படைத்தார்.

19.   அளவற்ற, நிபந்தனையற்ற அன்பால் நம்மைப் படைத்தார் என்று கூறப்பட்டதின் அர்த்தம் என்ன? 

 உலகின் போக்கின்படியும் பாவநாட்டங்களிலும் வாழ்ந்து இறைவனை விட்டு பிரிந்துபோய் விடுகிறோம். தம் ஒரே மகன் இயேசுவை இவ்வுலகதிற்கு அனுப்பி அவரின் பாடுகளாலும் சிலுவை மரணத்தாலும் நம்மை  பாவங்களிலிருந்து மீட்டு விண்ணக மாட்சியிலும் பேரின்பத்திலும் வாழ நம்மை தகுதியுள்ளவர்களாக ஆக்கும் அளவுக்கு அன்பு கூர்ந்தார் என்பதே அதன் பொருள். 

20.   மற்றனைத்து படைப்புகளிலிருந்து நாம் எவ்வாறு மாறுபட்டுள்ளோம்?

Ø  கடவுளின் சாயலில் படைக்கப்பட்டோம்.

Ø  சுய மதிப்பும், சுயசிந்தனையும், சுய அறிவும், கொண்டு சுயமுடிவு எடுக்கக் கூடியவர்கள்.

Ø  பிறரோடு சமூகமாகவும் சமூகத்திற்காகவும் சுதந்திரத்தோடு செயல்படக் கூடியவர்கள். 

Ø  அவரின் இரக்கத்தில் அவரோடு வாழ்பவர்கள்.

Ø  அவரில் நம்பிக்கை கொள்வதிலும், அவருக்கு பதில் அன்பு செய்வதிலும் நமக்கு இணையாக அல்லது மாற்றாக எந்தப் படைப்பையும் கடவுள் படைக்கவில்லை.

21.   ஆன்மா, ஆன்மீகம் என்றால் என்ன? அதன் நோக்கம் என்ன?

X ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏதோ ஒன்று இது நல்லது இது தீயது என்று அவனுக்கு ணர்த்துகிறதே; அது என்ன?  நம்மை நல்லதைச்செய்ய தூண்டுகிறதே, தீயது செய்ய முற்படும்போது நம்மை எச்சரிக்கிறதே, தடுக்கிறதே; அது என்ன? அதுதான் ஒருவரின் ஆன்மா.

X அதன் வழியில் நடப்பதுதான் ஆன்மீகம்.

X இந்த ஆன்மீக பயணத்தின் முடிவில் நாம் காணப்போவது இறைவனை.  நாம் வாழப்போவது விண்ணக மாட்சியில் அவருடன்.

22.   ஆன்மாவை மனிதன் எங்கிருந்து பெறுகிறான்?

நம் உடலை பெற்றோர் வழியாக நமக்குக் கொடுத்த இறைவன் ஞானம் நிறைந்த, அழிவற்ற ஆன்மாவை மட்டும் நேரடியாகவே நம்முள் வைத்துள்ளார்.

 

23.   இறைவனின் அனைத்து சுபாவங்களையும் உய்த்துணர முடியுமா?  அவரைப்பற்றி முழுமையாக எடுத்துரைக்க நாம் தகுதி பெற்றுள்ளோமா?

X  எல்லையற்ற வல்லமையையும் நன்மைத்தனத்தையும் கொண்டுள்ள இறவனை நம் குறைபாடுள்ள மனித புத்திக்குள் உணரவோ புரிந்துகொள்ளவோ, அடக்கவோ முடியாது. 

X  இருப்பினும் அவரிடம் நாம் கொண்டுள்ள விசுவாசத்தை முன்னிட்டு; அவரைப்பற்றி  தெரிந்துகொள்ளும் மற்றும் பேசும் தகுதியையும், ஆற்றலையும் அவரிடமிருந்து பெற்றுள்ளோம். 

X  அதனால் அவரின் அளப்பரிய குணங்களை மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்லமுடியும். அதற்காக நமது உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் அவசியம். 

24.   இறைவன்  தனது இறைத்தண்மையை மனிதராகிய நமக்கு வெளிப்படுத்துவதின் பொருள் என்ன?

மனிதன் தனது பகுத்தறியும் பண்பால் இறைவன் இருப்பதைப் புரிந்துகொள்ள முடியும்.  இருப்பினும்  இறைத்தன்மையின் முழு பரிமாணத்தையும் அறிந்துகொள்ளும் ஆற்றல் அவனுக்கு இல்லை. தனது இறை பண்புகளை மனிதன் அறிந்துகொள்ளவேண்டிய அவசியத்தால் இறைவனே தனது இறைப் பண்புகளை நமக்கு வெளிப்படுத்திக்கொண்டு வருகிறார்.

25.   பழையஏற்பாட்டு காலத்தில் கடவுள் எவ்வாறு தம்மை வெளிப்படுத்தினார்?

இந்த பூமியை படைத்தவராக; தாம் படைத்தவற்றை நேசிப்பவராக; மனிதன் பாவம்செய்து தன்னை விட்டு விலகிச்சென்ற போதும் அவனை மன்னித்து  ஏற்று அன்பு செய்பவராக. தொநூ.9:9-10;   தொநூ 17: 5;  விப 3:7;  விப.3:14

26.   இறை வெளிப்பாட்டின் நிறைவு எது?

வார்த்தை மனிதராகி (இயேசு கிறிஸ்து) இவ்வுலகில் பிறந்தபோது இறை வெளிப்பாடு முழுமையாகவும் உறுதியாகவும் நிறைவடைந்தது.

27.   தன் ஏக மகனான இயேசுகிறிஸ்துவை இவ்வுலகுக்கு அனுப்பியதின் மூலம் தந்தையாம் கடவுள் நமக்கு எதை வெளிப்படுத்துகிறார்?

தன் ஏக மகனான இயேசு கிறிஸ்துவை இவ்வுலகுக்கு அனுப்பியதின் மூலம் தந்தையாம் கடவுள் மனுக்குலத்தின் மட்டில் தான் கொண்டிருந்த ஆழமான, இரக்கம் நிறைந்த அன்பை வெளிபடுத்துகிறார்.

28.   திருத்தூது மரபு என்றால் என்ன?

பெந்தகோஸ்த்தே நாளில் திருத்தூதர்கள் தூய ஆவியாரைப் பெற்றுக்கொண்டபின் தாங்கள் கிறிஸ்துவிடம் இருந்தும், தூய ஆவியாரிடம் இருந்தும் கற்றுக்கொண்ட மறை உண்மைகளை

v தங்களின் போதனைகளாலும்

v சாட்சிய வாழ்வாலும்

v இறை ஏவுதல் பெற்று எழுதப்பட்ட நூல்களாலும்

பாதுகாத்து, பிறருக்கு வழங்கி வந்த செயலையே திருத்தூது மரபு என்று அழைக்கிறோம்.  

29.   உண்மையான இறை நம்பிக்கையை எங்கிருந்து பெற்றுக்கொள்கிறோம்?

திருவிவிலியத்திலிருந்தும் கத்தொலிக்கத் திருச்சபையின் பாரம்பரியத்திலிருந்தும் (திருத்தூது மரபு) பெற்றுக்கொள்கிறோம்.

30.   ஏன்  நாம் பெற்றுக்கொண்ட நம்பிக்க்கையை பிறருக்கு அளிக்க வேண்டும்?

நாம் தூய ஆவியால் திருமுழுக்கும் உறுதி பூசுதலும் பெற்றுள்ளேன்.  எனவே உயிரும், வாழ்வும், வழியுமான இறைவனை நமக்கு அடுத்திருப்பவர்களுக்கு அறிவிப்பது நமது கடமை.  இந்த பணியில் எனது பங்களிப்பை இறைவன் வேண்டுகிறார்.

31.   நமக்குத் தன்னையே வெளிப்படுத்திய கடவுளுக்கு நமது கைமாறு என்ன?

X முதலில் அவர்மேல் நம்பிக்கைக் கொள்வது.

X மென்மேலும் அவரை அறிந்துகொள்ள ஆவல் கொள்வது மற்றும் முயற்சிப்பது.

X முழுமையாக, எவ்வித தயக்கமும் இன்றி, அவரை ஏற்றுக்கொள்வது.

X அவர் குறலுக்கு செவிசாய்ப்பது மற்றும் அவர் திருவுளத்திற்குக் கீழ்ப்படிவது.

X நம்மையே அவருக்கு கையளிப்பது.

32.   நம்பிக்கை என்றால் என்ன? 

இறைவனைப்பற்றிய அறிதலும் அவரை ஏற்றுக்கொள்ளுதலும்.

33.    இறை நம்பிக்கை கொட்பாடுகளில் கதோலிக்க திருஅவை தவறிழைக்க முடியுமா?

திருஅவை கிறிஸ்துவின் மறை உடல். தூய ஆவியால் வழிநடத்தப்படும் திருஅவை என்றும் தவறிழைக்கவே முடியாது.

34.   திருவிவிலியத்தில் எழுதப்பட்டுள்ளது அனைத்தும் உண்மையா?

உறுதியாக, முற்றிலும் உண்மையாக , பிழையில்லாத நூல்தான் திருவிவிலியம்.  அது போதிப்பது உண்மை மட்டுமே.  காரணம் திருவிவிலியம் பரிசுத்த ஆவியாரின் தூண்டுதலால் எழுதப்பட்டது; இறைவனே அதன் ஆசிரியர்.

35.   திருவிவிலியத்தை எவ்வாறு வாசிக்க வேண்டும்?

      திருவிவிலியம் புனிதமான இறை வார்த்தையைக் கொண்டுள்ள நூல்.  பரிசுத்த ஆவியின் வல்லமையால் எழுதப்பட்டது.  நமக்கும் இறைவனுக்கும் இடையே ஒரு உறவின் பாலமாக இருந்துவருகிறது.  எனவே பரிசுத்த ஆவியின் துணையோடும் ஆழ்ந்த ஜெபத்தோடும் பயபக்தியோடும் வாசிக்க வேண்டும்

36.   கிறிஸ்தவர்களுக்குப் பழைய ஏற்பாட்டின் முக்கியத்துவம் என்ன?

37.  பழைய ஏற்பாட்டு நூல்கள் அனைத்தும் இறை ஏவுதலால் எழுதப்பட்டவை.  பழைய ஏற்பாடு இல்லை என்றால் புதிய ஏற்பாடும் இல்லை; இயேசுகிறிஸ்துவின் பிறப்பு மற்றும் மீட்பின் வரலாற்றையும் புரிந்து கொள்ளவும் முடியாது.

38.  கிறிஸ்தவர்களுக்குப் புதிய ஏற்பாட்டின் முக்கியத்துவம் என்ன?

இயேசு கிறிஸ்துவை மையமாகக்கொண்ட நூல் மற்றும் இறைவெளிப்பாட்டின் முழுமை. 

39.   திருச்சபையின் வாழ்வில் விவிலியத்தின் பங்கு என்ன?

திருவிவிலியம்

i.     திருஅவையின் பணிகளுக்கு வேண்டிய சக்தியையும் வழிகாட்டுதலையும் தருகிறது.

ii.   இறைமக்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்துகிறது.

iii.  இறையியலுக்கும் மறை போதனைக்கும் ஊற்றாகவும் உயிர்நாடியாக உள்ளது

40.   ‘இறைவார்த்தைக்கு கீழ்ப்படிதல்’ – எடுத்துக்காட்டாக  மறை நூலில் யாரைக்கூறலாம்?

பலர் உண்டு.  இருப்பினும் மிகச்சிறந்த இருவர்

i.       விசுவாசத்தின் தந்தை என்ப் போற்றப்படும் அபிரகாம்

ii.      உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் என்று கூறிய அன்னை மரியாள்.

 

நம்பிக்கை அறிக்கை 2: தந்தையின் ஒரே மகனும் நம் இறைவனுமாகிய இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன்

41.            நம்பிக்கை என்றால் என்ன?

எபிரேயர் 11:1. நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை.

v  நாம் காணமுடியாத ஒன்றைப் (இறைவனை)பற்றி உறுதியான நம்பிக்கை.

v  வாக்களிக்கப்பட்ட ஒன்றை (விண்ணக மாட்சி)அடைவதற்கு சாத்தியமே இல்லை எனினும் அதனை உறுதியுடன் எதிநோக்குவது.

அதாவது நம்பிக்கை என்பது நம் புத்தியையும் புரிதலையும் கடந்தது.

42.            நாம் ஏன் இறைவனை நம்பவேண்டும்?

Ø இறைவன் சகல நண்மையும் நிறைந்தவர்

Ø சகல வல்லமை உடையவர்

Ø நிபந்தனையின்றி அன்பு செய்பவர்.

Ø வார்த்தை தவறாதவர்.

 

41.   கடவுளை நான் நம்புகிறேன் என்றால் நடைமுறையில் அதன் பொருள் என்ன?

  i.     கடவுளோடு ஒன்றித்து என்னையே அவரிடம் ஒப்படைப்பது

 ii.     அவர் வெளிப்படுத்திய எல்லா உண்மைகளையும் ஏற்றுக்கொள்ளுதல்

iii.     தந்தை மகன் தூய ஆவி ஆகியோர் மூன்று ஆட்களாய் இருந்தாலும் ஒரே இறைவன் என்பதை நம்பி ஏற்றுக்கொள்ளுதல்.

42.   இறைநம்பிக்கைக்கும் அறிவியலுக்குமிடையே முறண்பாடு இருக்க முடியுமா?

இறை நம்பிக்கையும் அறிவியலும் உண்மையின் இரு பரிமாணங்கள்; இவை இரண்டுமே கடவுளிடமிருந்தே வருகின்றன. எனவே (அறிவியல் மனித பண்புகளையும், மனித நேயங்களையும் சீர்குலைக்காதவரை) இவ்விரண்டுக்கும் இடையே ஏற்றுக்கொள்ளத்தக்க முறண்பாடுகள் இருக்க வாய்ப்பில்லை.

43.   இறை நம்பிக்கை வாய்ப்பாடுகள் (definitions and formulas) என்றால் என்ன?

கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் நம்பிக்கை கொள்ளவும், அறிக்கையிடவும் வேண்டிய, மறை உண்மைகளை இரத்தினச் சுருக்கமாக இறைமக்கள் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் திருச்சபை நமக்கு அமைத்து கொடுத்துள்ள பிரமாணம் ஆகும். இதனை நம்பிக்கை வாய்பாடுகளின் தொகுப்பு எனவும், நம்பிக்கைக் கோட்பாடுகள் எனவும் நம்பிக்கை அறிக்கை எனவும் கூறலாம்.

44.   நாம் இப்போது பயன்படுத்தும் நம்பிக்கை அறிக்கை.

X விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த / எல்லாம் வல்ல தந்தையாகிய / கடவுளை நம்புகிறேன்.

X அவருடைய ஒரே மகனாகிய / நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறேன்.  இவர் தூய ஆவியாரால் கருவாகி /தூய கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். 

X பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு / சிலுவையில் அறையப்பட்டு / இறந்து அடக்கம் செய்யப்பட்டார். 

X பாதாளத்தில் இறங்கி / மூன்றாம் நாள் / இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.

X விண்ணகம் சென்று / எல்லாம் வல்ல தந்தையாகிய / கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். 

X அவ்விடத்திலிருந்து / வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் /தீர்ப்பு வழங்க மீண்டும் வருவார். 

X தூய ஆவியாரை நம்புகிறேன். 

X தூய கத்தோலிக்கத் திருச்சபையையும் /  புனிதர்களுடைய சமூக உறவையும் நம்புகிறேன். 

X பாவ மன்னிப்பை நம்புகிறேன். 

X உடலின் உயிர்ப்பை நம்புகிறேன். 

X நிலை வாழ்வை நம்புகிறேன்.

X  ஆமென்.

45.   கடவுள் தமக்கென்று ஒரு பெயரை வைப்பதற்கு என்ன கரணம்?

கடவுள் தான்

X உணரமுடியாத ஒருவராகவோ;  அழைக்கமுடியாத ஒருவராகவோ;  உய்த்துணர வேண்டிய ஒருவராகவோ; கற்பனைக்கு மட்டுமே உட்பட்ட ஒருவராகவோ,  இருக்க விரும்பவில்லை. 

X மாறாக இருக்கிறவராகவும்; அறியப்படக் கூடியவராகவும்; ஆற்றல் மிக்கவராகவும்; அழைக்கப்படக் கூடியவராகவுமே இருக்கவிரும்புகிறார்.

46.   கடவுள் தாம் “அன்பாக”இருப்பதை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்?

பழைய ஏற்பாடு காலத்தில் தன் வார்த்தைகளாலும் செயல்களாலும் புதிய ஏற்பாடு காலத்தில் தம் மகன் வழியாகவும் கடவுள் தாம் அன்பாய் இருப்பதை ஆழமாகவும் திட்டவட்டமாகவும் வெளிப்படுத்தியுள்ளார்

47.   “மூவொரு கடவுள்” என்ற மறைபொருளை மனிதனின் பகுத்தறிவினால் அறிய இயலுமா?

கடவுள் ஒருவரே மூன்று ஆட்களாய் இருக்கிறார் என்பது ஒரு மறைபொருள்.  இதை மனித அறிவாலோ, முயற்சியாலோ அல்லது மனித சக்தியாலோ புரிந்துகொள்ள முடியாது;  மாறாக நம்பிக்கை கொள்ளவேண்டிய ஒன்று. இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளின் வழியாகத்தான் இந்த மறைபொருளை அல்லது பேருண்மையை நாம் அறிய முடியும்; அறிந்துள்ளோம்; விசுவசிக்கிறோம்.

48.   கடவுளை ஏன் தந்தை என்று அழைக்கிறோம்?

i.     மனிதர் தம் பெற்றோரை ‘தந்தை’ ‘தாய்’ என்றே அழைக்கிறார்கள்.  காரணம் நம்மை தோற்றுவித்தவர்களும், பாதுகாத்து வளர்ப்பவர்களும் அவர்கள் ஆவர். நம்மை படைத்தவரும் பாதுகாப்பவரும் கடவுள் என்பதால் கடவுளை நாம் தந்தை என அழைக்கிறோம்.

ii.     இயேசுவே தன் தந்தையை நம் தந்தை என அழைக்க நமக்குப் படிப்பித்திருக்கிறார். லூக்11:2 “தந்தையே உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக” என்று நமக்குக் கற்பித்திருக்கிறார்.

49.   தூய ஆவி என்பவர் யார்?

i.        மூவொரு கடவுளின் மூன்றாவது ஆள்

ii.        இவர் தந்தையோடும் மகனோடும் சமநிலையில் ஒன்றித்து இறைவனாக இருக்கிறார்

iii.        என்றும் உள்ள கொடையாக மகனுக்குத் தந்தையால் கொடுக்கப்பட்டவர்

iv.        தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் வல்லமை. 

v.        முழு உண்மையை நோக்கி திருச்சபையை வழிநடத்துபவர்.

50.   இயேசு கடவுளா? மூவொரு கடவுளில் ஒருவராக ஏற்றுக்கொள்கிறோமா?

‘தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே’ என்று சொல்லும்போது இயேசுக்கிறிஸ்துவை மூன்று ஆட்களில் ஒருவராகவும், அதன் வழி கடவுளாகவும் அறிக்கை இடுகிறோம்; ‘ஆமென்’ என்று சொல்லும்போது அதையே உறுதிப்படுத்துகிறோம்.

51.   உலகைப் படைத்தது யார்?

ஆதியும் அந்தமும் இல்லாதவரும், எங்கும் வியாபித்திருப்பவருமாகிய கடவுளால் மட்டுமே உலகையும் அதில் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்தையும் உண்டாக்க முடியும். உலகில் உள்ள அனைத்தும் அவர் விருப்பத்தினாலேயே இவ்வுலகில் உள்ளன; அவரை சார்ந்தே உள்ளன.

52.   படைப்பின் வேலையை 6 நாட்களில் இறைவன் செய்து முடித்தார் என்று தொடக்கநூலில் வர்ணித்திருப்பதின் பொருள் என்ன?

இறைவன் அழகானவற்றையும் நன்மையானவற்றையும் ஞானத்தோடு வரிசைப்படுத்தி  படைத்துள்ளார் என்பதை விளக்குவதாகவும் கொள்ளலாம். உதாரணமாக

படைப்புக்களின் உயர்வில் உள்ள வரிசைக்கிரமத்தில்

i.        உயிரற்றவைகளைவிட உயிருள்ளவை உயர்ந்தவை

ii.        உயிருள்ளவற்றுள் தாவரங்களைவிட மிருகங்கள் உயர்ந்தவை.

iii.        மிருகங்களைவிட மனிதன் உயர்ந்தவன் என்பதை ஒவ்வொரு நாளும் எதைப் படைத்தார் என்ற வரிசையில் காட்டப்பட்டுள்ளது.

53.  கடவுள் ‘ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்’ என்பதன் பொருள் என்ன?

i.     கடவுள் தனது படைப்பின் வேலையை நிறைவு செய்துவிட்டார் என்று உணர்த்துகிறது.

ii.   நமக்கு ஓய்வு நாள் என்பது நமது இறப்பிற்கு பின் கிடைக்கும் விண்ணக வாழ்வாகும். அதாவது நாம் இந்த உலகில் வாழும் நாட்களை படைப்பின் ஆறு நாட்களுக்கு ஒப்பிடப்படுகிறது. இறைவன் படைத்த அனைத்தும் நல்லவையாக இருந்ததுபோல் நாம் உலகில் வாழும் நாட்களில் இறைவனுக்கு ஏற்புடைய செயல்களைச் செய்துவந்தால் நமக்கு ஏழாம் நாள் விண்ணக நித்திய பேரின்பமாகும்.

54.   இறைப் பராமரிப்பு என்றால் என்ன?

மனிதன் எந்த நோக்கத்திற்காகப் படைக்கப் பட்டானோ (இறைவனை நாம் அறியவும், அவரை அன்பு செய்யவும், அவரது சித்தத்தின் படி வாழவும், ஒரு நாள் பரலோக ராஜியத்தில் அவரோடு வாழவும் நாம் இந்த பூமியில் படைக்கப்பட்டுள்ளோம்.)  அந்த இலக்கை நோக்கி அவனை அன்போடும், தாய்க்குறிய பாசத்தோடும் இறைவன் அவனை வழி நடத்திச் செல்வதையே இறைப் பராமரிப்பு என்கிறோம். 

55.   விண்ணகம் ஏன்றால் என்ன?

விண்ணகம் என்பது ஒரு இறை சூழல்.  வான தூதர்கள் மற்றும் புனிதர்களின் உறைவிடம்.  படைப்புக்கள் அனைத்தும் சென்றடைய வேண்டிய இலக்கு.

56.   நரகம் என்றால் என்ன?

நரகம் என்பது கடவுளிடமிருந்து நித்தியத்திற்கும் பிரிந்திருக்கும் ஒரு நிலை.  இறைவனின் அன்பையும் நன்மைத்தனங்களையும் அறிந்திருந்தும் தன் சுய சிந்தனையாலும்,  தீய செயல்களாலும் இறைவனை புறக்கணித்து மறு வாழ்வில் அவரை விட்டகன்று வாழும் நிலை.

57.   வானதூதர்கள் யார்?

விண்ணகத்தில் வாழும், தூய்மையான இறைவனின் படைப்புக்களே வானதூதர்கள்.  அவர்களை நம் கண்களால் பார்க்க முடியாது.  அவர்களுக்கு உடல் கிடையது, இறப்பு இல்லை.  அவர்கள் நித்தியத்திற்கும் இறைவனோடு வாழ்பவர்கள். 

58.   நாம் வானதூதர்களோடு உறவில் இருக்க முடியுமா?

முடியும்.  அவர்களை நம் உதவிக்கு அழைக்கலாம்.  நமக்காக இறைவனிடம் பரிந்துபேசும்படி கேட்கலாம்.

59.   மிருகங்களையும் மற்ற உடன் படைப்புக்களையும் மனிதன் எவ்வாறு நடத்த வேண்டும்?

அன்பால் மனிதனைப் படைத்த இறைவன்தான் அனைத்து உயிருள்ள உயிரற்ற படைப்புக்களையும் அதே அன்பாலேயே  படைத்தார் என்ற உண்மையை உணர்ந்து அவற்றை கவனமுடனும், பொறுப்புடனும் கையாள வேண்டும்.

59.  மனிதன் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டான் என்பதன் பொருள் என்ன?

(அ) மனிதரில் மட்டுமே ஆன்மா என்ற பொக்கிஷத்தை வைத்துள்ளார்

(ஆ) மூவொரு கடவுள் சமூக உறவில் இணைந்திருப்பதுபோல் மனிதரும் அடுத்திருப்பவரோடு சமூக உறவில் வாழ படைத்துள்ளார்.

60.  கடவுள் நம்மைப்படைத்ததின் நோக்கம் எப்போது முழுமை பெறுகிறது?

நம்மைப் படைத்தவரை அறிந்து, அன்பு செய்து, அவருக்கு ஊழியம் செய்து நன்றியுடன் வாழும்போதுதான் கடவுள் நம்மை  படைத்ததின் நோக்கம் முழுமைபெறுகிறது.

61.   மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை எவ்வாறு அறியப்படுகிறது?

v அனைவரும் ஒரே கடவுளால் ஒரே அன்பால் படைக்கப் பட்டவர்கள்.

v இயேசுக்கிறிஸ்துவே அனைவரின் மீட்பர். 

v அனைவருக்கும் ஒரே இலக்கு – நித்தியத்திற்கும் கடவுளோடு விண்ணக மாட்சியில் வாழ்வது.

62.   பாவம் என்றால் என்ன?

இறைவனைப் புறக்கணிக்கும் மற்றும் அவரது அன்பை உதறித்தள்ளும் செயல்களே பாவம் எனப்படுகிறது.  இறவன் நமக்குக் கொடுத்த கட்டளைகளையும் இறவனின் உடலாகிய திருச்சபையின் கட்டளைகளையும் மீறுவதே இறைவனையும் அவரது அன்பையும் புறக்கணிக்கும் செயல் அல்லது பாவம் ஆகும்.

63.   ஜென்ம (பிறப்பு நிலை) பாவம் என்றால் என்ன? 

          i.     கடவுள் மனிதனைத் தன் சாயலில் படைத்து தனது நட்புறவில் அவனை நிலை நிறுத்தினார்.  மனிதனுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டது; அதேசமயம் சில தடைகளும் வகுக்கப்பட்டிருந்தன; தடையை மீறினால் என்ன தண்டனை என்பதும் தெளிவாக்கப் பட்டிருந்தது.

        ii.      அந்த தடையை மதித்துக் கீழ்படியவும் அல்லது மீறவும் அவனுக்கு முழு சுதந்திரம் தரப்பட்டிருந்தது.

      iii.       மனிதன் சாத்தானின் ஆசை வார்த்தைகளை நம்பினான்; படைத்தவரின் மேல் வைத்திருந்த நம்பிக்கையை இழந்தான்; கடவுளின் கட்டளையை மீறினான்;  இதுவே மனுக்குலத்தின் முதல் பாவம். இதுவே ஜென்ம (பிறப்பு நிலை) பாவம் என்று அழைக்கப் படுகிறது.

64.   ஆதாம் செய்த பாவம் இந்த உலகில் பிறக்கும் அனைவரும் செய்த பாவமாக ஏன் கருதப்படுகிறது?

Ä  இறைவன் மனிதனைப் படைத்த போது புனிதத்தையும், நீதியையும் ஆதாமுக்கு மட்டுமல்ல அதாமின் வழியாக மனுக்குலம் முழுமைக்கும் அழித்தார். அவன் கீழ்படியாமையால் பாவம் செய்தபோது அந்த புனிதத்தை இழந்தான். அதன் பின் பாவ நிலையில் வாழ்ந்தான்.   அந்த பாவ நிலையில் அவன் சந்ததியினரைப் பெற்றெடுத்ததால் அவனது சந்ததியினர் அந்த பாவ நிலையிலேயே பிறக்கவேண்டியிருந்தது. 

Ä  எனவே முதல் பாவம் / பிறப்புநிலை பாவம் ஒருவனின் தீய செயலால் கட்டிக்கொண்ட பாவம் அல்ல மாறாக பாவநிலையில் பிறந்ததால் வந்த பாவம் அல்லது புனித நிலையை இழந்த நிலையில் பிறத்தல் ஆகும்.

65.   நாம் பாவம் செய்யும்போது இறவனின் மனநிலை எப்படியிருக்கும்?

நாம் பாவத்தால் கடவுளை பிரிந்து செல்லும் போது அவரது மனநிலை எப்படி இருக்கும் என்பதை இயேசு ‘ஊதாரிமந்தன்’ உவமையில் விளக்குகிறார் (லூக்15:20 தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார்).மேலும் உரோ.5:20-21ல் திருத்தூதர் பவுல் “பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது…….அந்த அருள்தான் மனிதர்களைக் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக்கி, நிஒலைவாழ்வு பெற வழிவகுக்கிறது”. பாவிகளாகிய நம்மேல் கடவுள் இரக்கமும், பரிவும் கொள்கிறார். தமது அருளால் நம்மை பாவங்களிலிருந்து மீட்டு விண்ணக வாழ்வுக்கு தகுதியுள்ளவர்களாக ஆக்குகிறார்.

பிரிவு இரண்டு - தந்தையின் ஏக மகனான இயேசுக்கிறிஸ்துவை விசுவசிக்கிறேன்

66.   இயேசு கிறிஸ்து யார்?

இறைவனின் ஒரே மகனும் , நம்மை பாவங்களிலிருந்து மீட்க இவ்வ்வுலகில் கன்னிமரியாள் வழியாக மனிதனாகப் பிறந்தவர்தான் இயேசு கிறிஸ்து.

43.  இயேசு உண்மையான கடவுள் என எவ்வாறு நம்புறோம்?

இறைதந்தையோடு ஒரே பொருளாகவும் ஒரே சாயலாகவும் இருப்பதாலேயே இயேசுவை உண்மையான கடவுள் என நம்புகிறோம், அறிக்கையிடுகிறோம்.

44.  இயேசு எப்போதும் கடவுளாக உள்ளாரா?

ஆம். தந்தையோடும் தூய ஆவியாரோடும் நித்தியத்திற்கும் மூவொரு கடவுளாக இருப்பதால் இயேசு எப்போதுமே கடவுளாக உள்ளார்.

45.  தூய தமத்திருத்துவத்தில் இயேசு கிறிஸ்து எந்த நிலையில் இருக்கிறார்?

தூய தமத்திருத்துவதில் இயேசு கிறிஸ்து இரண்டாம் ஆளாக இருக்கிறார்.

46.  இவ்வுலகில் இயேசு கிறிஸ்து உண்மையான மனித இயல்புகளில் வாழ்ந்தாரா?

ஆம்.  நம்மைப்போலவே உடலும் உயிரும் ஆன்மாவும் கொண்டு ஒரு பெண்ணிடம் பிறந்தார். பாவம் தவிர நம்மைப் போலவே பசி, துன்பம், வலி, வேதனை போன்ற அனைத்து மனித பண்புகளையும்   கொண்டு வாழ்ந்தார்.

47.  இயேசு கிறிஸ்து நித்தியத்திற்கும் மனித பண்புகளில் வாழ்கிறாரா?

இல்லை. அன்னை மரியளின் உதிரத்தில் கருத் தரித்த நாள் முதல் உயிர்த்து விண்ணேற்றம் அடைந்த நாள் வரை மட்டுமே மனிதனாக வாழ்ந்தார்.

48.  வார்த்தை மனிதரானார் என்பதின் பொருள் என்ன?

மூவொரு இறைவனில் இரண்டாம் ஆளாகிய கிறிஸ்து மனித உருவிலும் இயல்பிலும் ஒரு பெண்ணின் வாழியாக இவ்வுலகில் பிறந்தார் என்பதே அதன் பொருள்.

49.  இயேசு கிறிஸ்துவில் எத்தனை இயல்புகள் உள்ளன?

இயேசு கிறிஸ்துவில் இறைவன், மனிதன் என்ற இரண்டு இயல்புகள் உள்ளன.

50.  இறைவனின் மகனாகிய இயேசு மனிதனாக இவ்வுலகிற்கு வந்ததின் நோக்கம் என்ன?

பாவிகளாகிய நம்மை மீட்டு தந்தையாம் இறைவனுடன் விண்ணக மாட்சியில் நித்தியத்திற்கும் வாழச் செய்யவே இயேசுகிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்தார். 

51.  இயேசு என்ற வார்த்தையின் பொருள் என்ன?

மீட்பர்

52.  கிறிஸ்து என்ற வார்த்த்தையின் பொருள் என்ன?

அபிஷேகம் செய்யப்பட்டவர்

53.  இயேசு எங்கு இருக்கிறார்?

இறைவனாக எங்கும்; இறைவனின் மகனாக விண்ணகத்தில்; உடலோடும் உயிரோடும் நற்கருணையில்; பலிபொருளாக ஆலய பலிபீடத்தில்.

54.   இயேசுவைப்பற்றிய செய்திகள் ஏன் ‘நற்செய்தி’ என அழைக்கப்படுகிறது?

X மரணபடுக்கையில் உள்ள ஒருவரிடம் ‘நீங்கள் முழுவதும் குணமடைந்துவிட்டீர்கள்;  வீட்டிற்கு செல்லலாம்’ என்பதுதானே அந்த நோயாளிக்கு நல்ல செய்தி. பிறவிமுடவனிடம் ‘உன் கட்டிலைத் தூக்கிகொண்டு போ’ என்பது அவனுக்கு நல்ல செய்திதானே.

X அதேபோல் அலகையால் உலகில் நுழைந்துவிட்ட எண்ணற்ற பாவங்களினால் மனித குலம் அழிவின் விளிம்பில் இருந்த நிலையில்,  கடவுள் நம் மேல் வைத்திருந்த அன்பால் தன் ஒரே மகனை உலகத்திற்கு அனுப்பி ‘பாவிகளான நம்மை மீட்டெடுத்து நித்தியத்திற்கும் கடவுளோடு அன்புறவோடு வாழச்செய்துவிட்டார்’ என்ற செய்தியைவிட நல்லசெய்தி நமக்கு வேறென்ன இருக்கமுடியும்.  நமக்காக இயேசு கிறிஸ்து பிறந்து, மரித்து, உயிர்த்தார் என்பதைவிட மனிதருக்கு பெரிய நற்செய்தி வேறெதுவும் இருக்க முடியாது.

55.   இயேசுவை ஏன் கடவுள் அல்லது ஆண்டவர் என ஏன் நாம் அழைக்கிறோம்?

 “இயேசு பாதம் கழுவும் நிகழ்வின் போது “நீங்கள் என்னைப் ‘போதகர்’ என்றும் ‘ஆண்டவர்’ என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான்” (யோவா13:13). ஆம் இந்த மறையுண்மை இயேசு கிறிஸ்துவால் நமக்குக் கற்பிக்கப் பட்டது.

தூய ஆவியாரல் கருவுற்று கன்னிமரியிடம் பிறந்தவர்

56.   எதற்காக் கடவுள் இயேசுவின் வடிவில் மனிதரானார்?

  i.     கடவுள் நம்மை அதிகம் அன்பு செய்ததால், நமக்காகவும், நமது மீட்புக்காகவும் தன் ஒரே மகனை உலகத்திற்கு அனுப்பினார்

நம்மை பாவத்திலிருந்து மீட்கவும், தந்தையாம் கடவுளோடு நம்மை ஒப்புறவாக்கவும் கிறிஸ்து பாவம் தவிர மற்றனைத்திலும் (உலக வாழ்க்கை, துன்பம், சாவு) நம்மை போலவே மனிதனாய் வாழ சித்தமானார்.

81.  இயேசு கிறிஸ்து எவ்வாறு உண்மையான இறைவனாகவும், உண்மையான மனிதராகவும் உள்ளார்?

i.     இயேசு கிறிஸ்து கன்னி மரியிடமிருந்து பிறந்தவர், உண்டாக்கப் பட்டவர் அல்ல’ -  எனவே இவர் உண்மையான மனிதராக உள்ளார்.    

ii.   ‘வார்த்தை மனுவுருவானார் (மாமிசமானார்)’ என்ற மறைபொருளின் படி இயேசுவுக்கு வரையறுக்கப்பட்ட மனித உடலமைப்பும் அடையாலம் கண்டுகொள்ளக்கூடிய முகச் சாயலும்  அவருகிருந்தது.

iii.  மேலும் மனிதராக வாழ்ந்த காலத்தில் இயற்கை மேலும், அலகை மேலும், சாவின் மேலும் வல்லமை (அதாவது இறைத்தன்மை) கொண்டிருந்தார்.

iv.  மாற்கு 2:8 உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, “உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்?” என்றார். இயேசு மனித அறிவாற்றலோடு இருந்தாலும் மற்றவர் மனதில் மறைவாய் உள்ளவற்றை ஊடுருவி காணும் தெய்வீக ஆற்றலையும் பெற்றிருந்தார். 

எனவேதான் அவர் உண்மையான இறைவனாகவும், உண்மையான மனிதராகவும் இந்த உலகில் வாழ்ந்தார் என்பதை நாம் விசுவாச சத்தியமாக ஏற்று விசுவசிக்கிறோம்.

57.   கிபி 451 ஆம் ஆண்டில் நடைபெற்ற கால்செதோன் பொதுசங்கம் இது பற்றி என்ன போதிக்கிறது?

     i.     இறைதந்தையின் ஒரே மகனும், நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்து இந்த உலகில் வாழ்ந்த போது தமது மனித தன்மையில் நிறைவானவர். 

   ii.      அவர் உண்மையான (முழுமையான) கடவுளும், உண்மையான (முழுமையான) மனிதரும் ஆவார். 

 iii.      தமது இறைத்தன்மையில் தந்தையோடு ஒரே பொருளானவர்;  தனது மனிதத் தன்மையில் நம்மோடு ஒரே பொருளானவர்.

  iv.     இறைத்தன்மையில் காலங்களுக்கு முன்பே அவர் தந்தையிடமிருந்து பிறந்தவர்;  மனித தன்மையை பொருத்தவரை இந்த இறுதி நாட்களில் நமக்காகவும், நமது மீட்புக்காகவும் அன்னை மரியாளிடமிருந்து பிறந்தவர்.

58.   இயேசு நம்மைப் போல் உடல், அறிவு மற்றும் ஆன்மாவைக் கொண்டிருந்தாரா?

லூக்2:52 இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார். ஆம் அவர் தன் கைகளால் உழைத்தார்; தன் புத்தியால் சிந்தித்தார்; தாம் விரும்பிய செயல்களைச் செய்தார்;  மனித இதயத்தோடு பிறரை அன்பு செய்தார்.

59.   மரியாளை ஏன் கன்னி என்று விசுவசிக்கிறோம்?

i.       கடவுள் இயேசுவை உண்மையான (முழுமையான) மனிதராக உலகில் பிறக்கவைக்க சித்தமானார்.  எனவே மனித தாயார் வழியாகவே இயேசுவை பிறக்கவைக்க முடிவு செய்தார்.  அதே சமயம் இயேசுவுக்கு தான் மட்டுமே தந்தையாக இருக்கவேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார். காரணம் மனிதரின் மீட்புச் செயல் எந்த உலக சக்தியாலுமல்ல தன்னால் மட்டுமே நிகழ்ந்தது என்பதே.

ii.      இயேசுவின் பிறப்பால் மரியாவின் கன்னிமை குறைவுபடவில்லை மாறாக புனிதமடைந்தது. திருச்சபையின் கோட்பாடுகளின் படி மரியாளின் கன்னித்தன்மை என்பது உண்மையானது;  கத்தோலிக்க வேத சத்தியமானது.

60.   மரியாளை இறைவனின் தாய் என்று அழைப்பது தவறா?

இல்லை.  மரியாள் சாதாரண ஆண் மகவை பெற்றெடுத்து, பிறந்தபின் அந்த குழந்தை இறை மகனாக மாறவில்லை.  மத்1:20ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்;  லூக்1:35 வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். 

விவிலியத்தில் மிக உறுதியாக உள்ள செய்தி “மரியாளின் உதிரத்தில் கருத்தரிக்கும் போதே இயேசு இறைமகனாக இருந்தார்.  மரியாள் பெற்றெடுத்ததும் இறைமகனையே.  எனவே மரியாளை இறைவனின் தாய் என்றழைப்பது முற்றிலும் முறையே.

61.   மரியாள் அமல உற்பவி என்பதன் பொருள் என்ன?

i.     மரியாள் அனைத்து பெண்களையும் விட அருள் நிறைந்தவள்; பேறு பெற்றவள் என்பது இறை வார்த்தை மட்டுமல்ல (லுக்1:28) திருச்சபையின் நம்பிக்கையும்கூட. 

ii.   கடவுளின் ஏக மகனும், உலகத்தின் மீட்பருமான இயேசுவை தன் உதிரத்தில் சுமந்து பெற்றெடுக்க வேண்டியவர் மரியா. 

iii.  எனவே கடவுள் தனது அருளாலும் வல்லமையாலும் மரியாள் கருத்தரித்த அந்த தருணத்திலேயே அனைத்து ஜென்ம பாவக் கறைகளிலிருந்தும் மரியாளைக் காத்தார் என்று கத்தோலிக்கத் திருச்சபை விசுவசிக்கிறது

62.   மரியா இயேசுவை பெற்றெடுக்க இறைவன் தெரிந்துகொண்ட ஒரு கருவி மட்டும்தானா?

லூக்1:30-33 இறை வார்த்தைகளில் இரண்டு நிகழ்வுகளைக் காணலாம்:

       i.     இறைவன் தன் மீட்பு திட்டத்திற்கு மரியாளின் உதவியை வேண்டுகிறார்.

      ii.     மரியா இறைவனின் வார்த்தைகளுக்கு முழுவதுமாகத் தன்னை அற்பணிக்கிறார்.

நாம் உபயோகிக்கும் கருவியிடம் “நான் உன்னை என் வேலைக்கு உபயோகித்துக்கொள்ளவா” என்று யாராவது ஒருவர் அதன் சம்மதத்தைக் கேட்பாரா?

ஆம்; இறைவன் மரியாளை தன் மீட்புத்திட்டத்தின் ஒரு சதாரண கருவியாக மட்டும் பயன்படுத்தவில்லை மாறாக தன் மீட்புத்திட்டத்தின் உடன் பங்காளியாகவே மரியாளை உயர்த்தினார்.  எனவேதான்  “மீட்பின் நுழைவாயில்” என திருச்சபை மரியாளைப் பெருமைப்படுத்துகிறது.

 

63.  தூய ஆவியாரால் கருவுற்று கன்னிமரியிடம் பிறந்தவர் என்பதின் பொருள் என்ன?

இறைமகன்

Ø  தூய ஆவியாரின் வல்லமையால்

Ø  கன்னி மரியாளின் உதிரத்தில் கருத்தரித்து

Ø  நம்மைப்போல் உடலையும் ஆன்மாவைகொண்டு

Ø  இவ்வுலத்தில் பிறந்தார்

என்பதே இந்த நம்பிக்கை அறிகையின் பொருள்.

64.  இயேசுவுக்கு இந்த உலகத்தில் தந்தை இருக்கிறாரா?

இல்லை. மூவொரு கடவுளில் முதல் ஆளாய் விளங்கும் தந்தையாம் இறைவனே இயேசுவின் தந்தை.  புனித யோசேப்பு இவ்வுலகில் இயேசுவை பேனிகாத்த வளர்ப்புத் தந்தை மட்டுமே.

65.  இயேசு எங்கு பிறந்தார்?

நமது மீட்பர் பெத்லகேமில் உள்ள ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்.

66.  இயேசு பிறந்த நாளை திருஅவை எவ்வாறு அழைக்கிறது?

கிறிஸ்துமஸ் அல்லது கிறிஸ்து பிறந்த நாள் என அழைக்கிறது.

67.  கிறிஸ்து பிறப்பு செய்தி முதன் முதலில் யாரால் யாருக்கு அறிவிக்கப்பட்ட்து?

வானதூதரால் இடையர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

68.   அன்னை மரியாளை ஏன் நமது தாயாகவும் போற்றுகிறோம்?

X  யோவா19:26-27  “இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்பு சீடரையும் கண்டு தம் தாயிடம் “அம்மா இவரே உம் மகன் என்றார்.  பின்னர் தம் சீடரிடம் “இவரே உம் தாய்” என்றார்”  

X  தான் மரிப்பதற்கு முன் கிறிஸ்துவே அன்னை மரியாளை நமக்குத் தாயாகக் கொடுத்துச் சென்றதால் அவரை நமது தாயாகவும் போற்றுகிறோம்.

X  இயேசுவின் இந்தச் செயலால் அன்னை மரியாளை திருச்சபைக்குத் தாயாகவும், திருச்சபையை அன்னை மரியாளின் குழந்தையாகவும் ஏற்படுத்தினார் என்பது கத்தோலிக்கத் திருச்சபையின் நம்பிக்கை.

69.   அன்னை மரியாள் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகம் எடுத்துக் கொள்ளப்பட்டதின் அர்த்தம் என்ன?

X  அன்னை மரியாள் பிறப்புநிலை பாவத்தின் எல்லா கறைகளிலிருந்தும் தூய்மைப் படுத்தப்பட்டதுபோலவே அன்னையின் இவ்வுலக வாழ்வு முடிந்ததும் விண்ணக மாட்சியில்  விண்ணக மண்ணக அரசியாக முடிசூட்டப்பட உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார். 

X  அன்னையின் விண்ணேற்பு தனது மகனின் உயிர்த்தெழுதலில் பங்குபெறுவதாகவும் கிறிஸ்தவர்கள் அனைவரும் இறுதிநாளில் உயிர்த்தெழுவார்கள் என்ற நம்பிக்கையின் முன் நிகழ்வாகவும் உள்ளது.

இயேசுவின் குழந்தைப் பருவம் மற்றும் மறைந்த வாழ்வு

70.   இயேசு தனது பகிரங்க வாழ்க்கையையும் மீட்புப்பணியையும் துவங்க ஏன் முப்பது ஆண்டுகள் காத்திருந்தார்?

i.       இயேசு தனது மீட்புப் பணியினைத் தொடங்குமுன் மனிதரின் எல்லா நிலைகளிலும் எல்லா தேவைகளிலும் வாழ்ந்து முழுமையான மனித வாழ்வின் பண்புகளில் தேர்ந்து தெளிய விரும்பினார். 

ii.      ஒரு குழந்தையாய் தன் பெற்றோரின் அன்பு, பாசம் அரவணைப்பு, தியாகம் அனைத்தையும் பெற்று, ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ விரும்பினார்.

iii.     தன் வாழ்வின் உணவிற்காகவும் மற்ற தேவைகளுக்காகவும் ஒருவன் உழைக்கவேண்டும் என்ற நியதியின் படி தன் தந்தையின் தச்சுத்தொழிலை நன்கு கற்று, உழைத்தார்’. 

iv.    இறை மகன் உலகத்தில் ஒரு குடும்பத்தில் பிறந்து வளர சித்தமானதால் குடும்பங்களை இறை பிரசன்னம் இருக்கும் ஒரு அமைப்பாக ஆக்கினார். 

v.      தான் வாழ்ந்த சமுதாயத்திற்கு தான் ஆற்றவேண்டிய கடமையையும்,  பணியினையும் ஆற்றினார். 

vi.    தன் பெற்றோர் தனக்கு நிபந்தனையற்ற அளவற்ற அன்பு செலுத்தியது போல தானும் பெற்றோரை நிபந்தனையற்ற அளவற்ற வகையில் அன்பு செய்தார். 

vii.   பிறர் தன்னை மதித்தது போலவே அவரும் பிறரை மதிக்கக் கற்றுக்கொண்டார்  பெற்றோரின் அன்பிலும், நற்பண்புகளிலும் இறைபண்புகளின் வெளிப்பாட்டை கண்டுணர்ந்தார்.

viii. இத்தகையய மனித மாண்புகளில் முழுமை பெற அந்த முப்பது ஆண்டுகளைப் பயன்படுத்திக்கொண்டார்.

71.   இயேசு தனது முப்பது ஆண்டுகால மறைந்த வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய நற்பண்புகள் யாவை?

i.        தனது மாண்பை, வல்லமையை வெளிக்காட்டாத ஒரு யூத தொழிலாலியின் வாழ்வையே வாழ்ந்தது.

ii.        ஆன்மீக (religious) வாழ்வை பொருத்தமட்டில் கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து யூத சட்ட திட்டங்களைக் கடைப்பிடித்தது. 

iii.        அவர் பெற்றோருடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தது.  52

iv.        இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தது.

v.        அதில் அன்னை மரியாள், தந்தை யோசேப்பு மற்றும் இயேசு வாழ்ந்த நாசரேத் இல்லம் இயேசுவுக்கும் நமக்கும் நல்ல பாடங்களைக் கற்றுக்கொடுத்த ஒரு ஆரம்ப பள்ளியாகவே திகழ்ந்தது.

vi.         அங்குதான் இயேசு

Ø அமைதி என்ற குடும்பத்தின் முதல் பாடத்தைக் கற்றுக்கொண்டார்.  சமூக உறவில் அன்பின் ஆற்றலை தெரிந்து கொண்டார்.

Ø ஆடம்பரமின்மையின் சுகம், எளிமையின் அழகு, ஒற்றுமையின் புனிதம் ஆகிய குடும்ப மாண்புகளில் வாழ்ந்தார்.

vii.        தன்னை ஒரு தச்சனின் மகன் என்று அழைத்ததின் வழியாக உழைப்பின் மேன்மையை உணர்ந்திருந்தார்.

viii.        நமது குடும்பங்களில் நாம் வாழவேண்டிய அனைத்துபண்புகளில் தானும் வாழ்ந்து நமக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

பகிரங்க வாழ்வின் மறைபொருள்

72.   இயேசு தான் பாவமற்ற நிலையில் பிறந்து பாவமற்ற நிலையில் வாழ்ந்தாலும் ஏன் யோவானை தனக்கு திருமுழுக்கு அளிக்கும்படி கேட்டார்?

X இயேசு தான் பாவமற்ற நிலையில் பிறந்து பாவமற்ற நிலையில் வாழ்ந்ததால் அவருக்கு இத்தகைய திருமுழுக்கு அவசியமற்ற ஒன்று.

X இயேசு தண்ணீரில் மூழ்குவது மனித குலத்தை பாவத்தினிறு மீட்க, மனிதரின் பாவங்களுக்காக அவர் இறப்பதைக் குறிக்கின்றது.  அவர் தண்ணீரில் இருந்து எழுவது தந்தையின் சித்தத்தாலும், வல்லமையாலும் உயிர்தெழுதலைக் குறிக்கின்றது. 

X இவ்வாறு இயேசு திருமுழுக்குப் பெற்றது மனுக்குலத்தின் பாவங்களுக்காகப் பாடுகளையும் சிலுவை மரணத்தையும் ஏற்க உறுதியான முடிவெடுத்துள்ளதின் அடையாளம். லூக்கா 12:50.

X ஆதாமின் பாவத்தால் மனித இனத்திற்கு மூடப்பட்ட விண்ணகம் இயேசுவின் இந்த திருமுழுக்கால் திறக்கப்பட்டது. மத்3:16- 17

73.  நமது திருமுழுக்கு எதனை உணர்த்துகிறது?

i.       திருமுழுக்கின் போது நாம் கிறிஸ்துவுக்குள் ஐக்கியமாகிறோம். 

ii.      தாழ்ச்சியாலும் பாவ பரிகாரத்தாலும் கிறிஸ்துவோடு இணைந்து தண்ணீரில் மூழ்கி (இறந்து) அவரோடு (உயிர்த்து) எழுகிறோம்; கடவுளின் மகன் என்ற புதுப்பிறப்படைகிறோம்.

iii.    திருமுழுக்கின் வழியாக அவரோடு (பாவத்திற்கு) மரிக்கிறோம்; விண்ணக மாட்சியில் நுழைய அவரோடு உயிர்த்தெழுகிறோம்.

74.  இயேசு சோதிக்கப்பட்டதின் உட்பொருள் என்ன?

இயேசு இவ்வுலகில் உண்மையான, முழுமையான மனிதப் பண்புகளில் வாழ்ந்தவர்.  எனவே பாவத்தில் விழக்கூடிய பவீனம் அவரிடமும் இருந்தது.  எனவே சாத்தான் அவரையும் சோதித்தலுக்கு உட்படுத்த முடியும்.  அவரிடமும் பாவத்தில் விழக்கூடிய பவீனம் இருந்ததாலும், அவரும் அலகையினால் சோதிக்கப்பட்டதாலும்

அ) நாம் பவத்தில் விழும்போது நமது பலவீனத்தை புரிந்துகொள்கிறார்.

ஆ) எனவே பாவிகளாகிய நம் மேல் இரக்கம் கொள்ள முடிகிறது

இ) எனவேதான் பாவிகளாகிய நம்மை மீட்கத் தம்மையே தந்தைக்கு பலியாக ஒப்புக்கொடுத்தார்.

99.  இயேசு புதுமைகள் செய்ததின் பொருள் என்ன?

அ)                இயேசு மனுக்குலத்தை நேசிக்கிறார் என்பதை உலகுக்குக் காட்ட.

ஆ)    தான் இவ்வுலகிற்கு வந்ததன் நோக்கத்தை மக்களுக்கு எடுத்துரைக்க. 

இ)                 அவர்களுக்கு கடவுளால் வாக்களிக்கப்பட்ட மெசியா தான் என்பதை மெய்ப்பிக்க. 

ஈ)      எனவே தன் வழியாக இறையாட்சி உலகில் வந்துவிட்டது என்பதை உணர்த்த.

உ)     பேய்களை விரட்டியதின் மூலம் சாத்தான் மேல் (உலக தீய சக்திகள் மேல்) தனக்குள்ள அதிகாரத்தை காட்ட. 

ஊ)   பசியிலிருந்தும்,அநீதிகளிலிருந்தும், வியாதிகளிலிருந்தும், சாவிலிருந்தும் மக்களை விடுவித்ததின் மூலம் இறை ஆட்சியின் விடியலை மக்கள் கண்டுணரவும்

இயேசு புதுமைகளைச் செய்தார்.

75.   இயேசு ஏன் அப்போஸ்தலர்களை (திருத்தூதர்களை) அழைத்தார்?

i.     இறை அரசைப் போதிக்கவும் வியாதியஸ்தர்களை குணப்படுத்தவும். 

ii.   இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சிகளாகவும், அவரைப்பற்றிய உண்மைகளுக்கு சான்று பகர்பவர்களாகவும் (guarantors) இருக்க. 

iii.  இயெசுவின் இறப்பிற்குப்பின் அவரின் பணியைத் தொடர்ந்து ஆற்ற.  

iv.  திருத்தூதர்கள் தொடங்கி  இந்த  ‘அப்போஸ்தலிக்க தொடர் பணி’  (Apostolic succession) அமைப்புதான் (திருத்தந்தை→கர்தினால்மார்கள்→ஆயர்கள்→குருக்கள்) திருச்சபையின் ஒற்றுமைக்கும், ஸ்திரத்தன்மைக்கும் அடித்தளம்.

v.   இந்த திருச்சபையின் உள்கட்டமைப்பின் மணிமகுடமாக இயேசு திருத்தூதர் பேதுருவை தலைமைப் பீடத்தில் வைத்து சிறப்பு அதிகாரத்தை அவருக்குக் கொடுத்தார்.

vi.  இன்றுவரை இவர்கள் கிறிஸ்து அளித்த அப்பொஸ்தலிக்க அதிகாரத்தினால் திருச்சபையை ஆளவும், போதிக்கவும், திருப்பலி மற்றும் அருட்சாதனங்களை நிறைவேற்றவும் பணியாற்றி வருகிறார்கள்.

vii.   திருத்தூதர் பேதுருவில் தொடங்கி இந்த சிறப்பு திருத்தூது பணி (Papal Ministry) அடுத்தடுத்து வந்த, வரும் திருத்தந்தையர்களால் நிறைவேற்றப்படுகிறது.

76.  இறை அரசை இயேசு யாருக்கெல்லாம் வாக்களிக்கின்றார்?

இயேசு எல்லா மனிதரும் இறை அரசை உரிமைச்சொத்தாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்றே விரும்புகிறார் (1திமோ2:4).  இருப்பினும் மனிதர் அந்த பொக்கிஷத்தை உரிமையாக்கிக்கொள்ள தகுதியுள்ளவர்களாக இருப்பது அவசியமாகிறது. நாம் தகுதியுள்ளவர்களாக ஆவதற்கான எளிய வழிகளையும் இயேசுவே மத்.5:3-10; மத்.25:34-45 ல் கூறியுள்ளார்.

77.  பேதுருவுக்கு அப்போஸ்தலிக்க முதன்மை இடம் அளித்ததின் பொருள் என்ன?

தன்னை கடவுளின் மகன் என்று பேதுருவுக்கு வெளிப்படுத்தியது தனது தந்தை என்பதை அறிந்துகொண்ட இயேசு அந்த சிற்ப்பான இடத்தையும் பணியையும் பேதுருவிடம் ஒப்படைத்தார்.  

  i.     பாதாளத்தின் எந்த தீய சக்திகளாலும் அசைக்கமுடியாத பாறையாகவும், அடித்தளமாகவும்  பேதுருவை கொண்டு அதன்மேல் தனது திருச்சபையை கிறிஸ்து நிறுவினார்.

 ii.     திருச்சபை சந்திக்கவிருக்கும் அத்தனை துன்பங்கள், சோதனைகள், இடறல்கள், எதிப்புகள், வீழ்ச்சிகளிலும் தனது நம்பிக்கையில் உறுதியாய் இருப்பதோடு தனது சகோதரர்களையும் அதே நம்பிக்கையில் நிலைத்திருக்க உற்திப்படுத்துவதே பேதுருவின் தலையாய பணி.

iii.     இறவனின் உறைவிடமாகிய திருச்சபையை நிர்வகிக்கும் அல்லது வழிநடத்தும் அதிகாரத்தைக் தனது உயிர்ப்பிற்குப்பின் பேதுருவுக்கு அளித்தார். யோவா21:15-17.

78.             தாபோர் மலையில் இயேசுவின் உரு மாற்றத்தின் நோக்கம் என்ன?

i.       தந்தையாம் கடவுள் தனது மைந்தனின் விண்ணக மாட்சியை அவர் உலகில் வாழும்போதே சீடர்கள் வழியாக உலகுக்கு வெளிப்படுத்த விரும்பினார். 

ii.      இயேசுவின் இறப்பு மற்றும் உயிர்ப்பின் மறைபொருளை அப்போஸ்தலர்கள் புரிந்துகொள்ளவும் அதனை ஏற்றுக் கொள்ளும் வலிமையையும், மனப்பக்குவத்தையும் அவர்களுக்குக் கொடுப்பதே இயேசுவின் உருமாற்றாத்தின் நோக்கம்.

போன்சுபிலாத்து அதிகாரத்தில் சிலுவையில் அரையுண்டு

மரித்து அடக்கம் செய்யப்பட்டார்

79.            இயேசு பாஸ்கா கொண்டாட எருசலேமை நோக்கி செல்லும் போது தன் சாவைப் பற்றி அறிந்திருந்தாரா? 

ஆம் அறிந்திருந்தார்.  இயேசு தன் சீடர்களுக்கு மூன்றுமுறை தனது சிலுவைப்பாடுகள், இறப்பு மற்றும் உயிர்ப்பு பற்றி முன்னறிவித்திருந்தார்.

80.             இயேசுவின்  எருசலேமின் நுழைவு எதைக் குறிக்கிறது?

i.        இறையரசின் வருகையைக் குறிக்கிறது

ii.        அரசரும் மெசியாவுமான இயேசு தனது பாஸ்காவான மரித்தலையும் உயிப்பையும் நிறைவேற்றப் போகிறார் என்பதைக் குறிக்கிறது.

iii.        எனவேதான் திருச்சபை குருத்து ஞாயிறு அன்று புனித வார வழிபாட்டு கொண்டாட்டங்களை (கிறிஸ்துவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு) அர்த்தத்தோடு துவங்கி வைக்கிறது.

81.             இயேசு தனது இறப்பிற்கும் உயிர்ப்புக்கும் ஏன் யூதர்களின் பாஸ்கா திருநாளைத் தெரிவு செய்தார்?

X பாஸ்கா என்பது இஸ்ரயேல் மக்கள் எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்டதை கொண்டாடும்  திருவிழா.

X பஸ்கா திருவிழாவின் போது இஸ்ரயேல் மக்கள் எகிப்தியரின் அடிமைத்தனத்தில் இருந்து மீட்கப்பட்டது போல் கிறிஸ்து மனித குலத்தை பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்தும் சாவின் பிடியிலிருந்தும் மீட்டார். 

X இந்த மீட்புச் செயலுக்கு பாஸ்காத் திருவிழாவே அர்த்தமுள்ள நாட்கள் என்பதால் இயேசு  தனது இறப்பிற்கும் உயிர்ப்புக்கும் யூதர்களின் பாஸ்கா திருநாளைத் தெரிவு செய்தார்

82.            உலகத்திற்கு அமைதியையும் மீட்பையும் கொணர்ந்த இயேசுவுக்கு ஏன் மரண தண்டனை? அதுவும் கொடூரமான சிலுவைச் சாவு?

i.     தான் செய்வதனைத்தும் கடவுள் அளித்த அதிகாரத்தால் என்பதைத் தெளிவுபடுத்தினார்.

ii.   இயேசுவின் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த யூத சட்டதிட்டங்கள் பாரம்பரியங்கள் சம்பிரதாயங்கள் அனைத்தையும் இயேசு வண்மையாகக் கண்டித்தார். 

iii.  கடவுள் மட்டுமே பாவங்களை மன்னிக்க முடியும் அப்படியிருக்க இவர் எப்படி உன் பாவங்கள் மன்னிக்கலாம்.  

iv.  ஓய்வுநாள் சட்டதிட்டங்கள் மீற முடியாதவை.  இவர் எப்படி அவற்றை மீறலாம்.

இவைஅனைத்தும் யூத மதத்திற்கு எதிரான தப்பறை கொள்கைகள்.  எனவே இவன் ஒரு போலி இறைவாக்கினன்.  இத்தகைய குற்றங்களுக்கு யூத சட்டத்தின்படி மரண்தண்டனை. 

83.             யூதர்கள்தான் இயேசுவின் சிலுவைச் சாவுக்குக் காரணமான குற்றவாளிகளா?

தனி ஒரு மனிதரையோ (கயபா, யூதாஸ், ஏரோது, போஞ்சு பிலாத்து), ஒரு இனத்தவரையோ (யூதர்கள்) இயேசுவின் சிலுவைச் சாவுக்குக் காரணமான குற்றவாளிகள் எனக் கூறமுடியாது.  உலகத்தில் உள்ள அனைத்து பாவிகளும்தான் இயேசுவின் சிலுவைச் சாவுக்கு காரணமானவர்கள் என்பது திருச்சபையின் நிலைப்பாடு.

84.             தன் ஒரே அன்பு மகன் சிலுவையில் அறையுண்டு இறக்க வேண்டும் என்பது தந்தையின் சித்தமா?

ஆம்.

Ä இயெசுவின் கொடூரமான சாவு சந்தர்ப்ப சூழ்நிலையால் நிகழ்ந்த ஒன்று அல்ல. மாறாக தந்தையால் முன்குறித்த திட்டத்தின் படியும் தந்தையின் சித்தத்தின் படியுமே நிகழ்ந்தது.  

Ä நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார் (2கொரி5:21). 

Ä தந்தை எந்த அளவிற்கு கொடூரமான சாவை தம் மகனுக்குக் கொடுத்தாரோ அந்த அளவு கிறிஸ்துவிற்கு தந்தைமேல் கொண்ட அன்பும், கீழ்படிதலும் இருந்தது. 

Ä தந்தையும் மகனும் மனிதரிடம் கொண்டிருந்த அன்பு சிலுவைச் சாவால் என்பிக்கப்பட்டுள்ளது. 

85.             கடைசி இரவு உணவின் போது நிகழ்ந்தவை யாவை?

கடைசி இரவு உணவின் போது தனது அளவற்ற அன்பை மூன்று வழிகளில் வெளிப்படுத்தினார்

i.        தன் சீடர்களின் பாதங்களைக் கழுவினார்: இயேசு நம்மில் ஒருவர் என்பதையும் நமக்கு பணிவிடை புரியவுமே இந்த்த உலகத்திற்கு வந்ததை உணர்த்தினார்.  நம்மையும் அவ்வாறே பணி செய்ய வேண்டினார்.

ii.        நற்கருணையை ஏற்படுத்தினார். 

அ) உலக முடிவுபரியந்தம் உடலோடும், உயிரோடும் நம்மொடு வாழ சித்தமானார் ஆ) கடவுளுக்கும் நமக்கும் நித்தியத்துக்குமான  ஓர் உடன்படிக்கையை தனது இரத்தத்தால் ஏற்படுத்தினார்.

iii. குருத்துவத்தை நிறுவினார். தந்தையின் மீட்புத்திட்டத்தை உலகம் முடியும்மட்டும் முன்னெடுத்துச் செல்லவும்,  நற்கருணையை ஏற்படுத்திய தனது செயலை உலகம் முடியும் மட்டும் செய்யவும்  தனது சீடர்களுக்குப் பணித்தார்.  உலகம் முடியுமட்டும் குருக்கள் திருபலியில் இதை நிறைவேற்றி வருகின்றனர். 

86.             தான் கொலை செய்யப்படுவதற்கு முதல் நாள் கெத்சமனித் தோட்டதில் இயேசு சாவின் பயத்தை உணர்ந்தாரா?

Ä இயேசு உண்மையான மனித சுபாவத்தில் வாழ்ந்ததால் நம்மிடம் இருந்த எல்லா பலவீனங்களும் அவரிடம் இருந்தன.  எனவே தன் சிலுவைச் சாவை எண்ணிப் பயந்தார். 

Ä அந்த இரவில் தன் தந்தையாலும் நண்பர்கள் மற்றும் சீடர்களாலும் கைவிடப்பட்ட நிலையில் அவர் அனுபவித்த பயத்தாலும், வேதனையாலும் இரத்த நாளங்கள் வெடித்து இரத்தம் பெரும் வியர்வைத்துளிகளாய் வெளிவந்தன.

87.          இயேசு நம்மை மீட்பதற்காக ஏன், மற்றெந்த வழிகளையும் விட, சிலுவைச் சாவை தேர்ந்தெடுத்தார்? 

  i.     இயேசுவின் காலத்தில் சிலுவையில் அறைந்து கொல்வது என்பது மற்றெல்லா தண்டனைகளைக் காட்டிலும் அவமானத்துக்குரியதாகவும், மிகக் கொடூரமானதாகவும் கருதப்பட்டது. 

ii.      இயேசுவை கொலை செய்த இடமும் (சிலுவை), விதமும், மிகவும் அவமானத்துக்குறியதாக மட்டுமல்ல, மிகவும் கொடூரமானதாகவும் இருந்தன.

iii.      மனிதர் அனைவரின் பாவங்களையும் போக்கி அனைவரையும் தந்தையுடன் ஒப்புரவாக்கவும், விண்ணரசை அவர்கள் உரிமையாக்கிக்கொள்ளவும், இதுவே உச்சக்கட்ட பரிகாரப்பலியாக இயேசு, நமது மீட்பர், கருதினார்.

 

88.            கிறிஸ்து நமக்காக பட்ட துன்பங்கள் எத்தகையது?

Ø  கெத்சமனி தோட்ட்த்தில் மனத்துயர் அடைந்து இரத்தம் பெரும் வியர்வைத்துளிகளாக வழிந்தது

Ø  கற்றூனில் கட்டிவைத்து கசையால் அடிக்கப்பட்டுது, முள்முடி சூட்டப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது

Ø  கல்வாரிமலைக்கு பாரமான சிலுவையை சுமந்துசென்றது, ஆடைகள் களையப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது,

Ø  சிலுவையில் அறையப்பட்டது, இரு கள்வர்கள் நடுவே தொங்கவிடப்பட்டது, ஈட்டியால் குத்தப்பட்டது, மரித்தது

89.            கிறிஸ்துவின் பாடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 கிறிஸ்துவின் லட்சியம்” [Passion of Christ]

90.            தாங்கமுடியாத துன்பங்களையும் சிலுவை மரணத்தையும் கிறிஸ்து மனமுவந்து ஏற்றுக்கொண்ட்து எதற்காக?

Ø  நாம் கட்டிக்கொண்ட பாவங்களுக்குப் பரிகாரமாக

Ø  விண்ணக நிலைவாழ்வுக்கு நம்மைத் தகுதியுள்ளவர்களாக ஆக்க

91.            இயேசு கிறிஸ்துவை ஏன் நமதுமீட்பர்என்று அழைக்கிறோம்?

நமது பாவக்கறைகளை கழுவி, தந்தையுடன் ஒப்புறவாக்க தமது விலைமதிப்பற்ற திருஇரத்தத்தை விலையாகக் கொடுத்து நம்மை மீட்டதால்.

92.            இயேசு கிறிஸ்து என்று மரித்தார்?

புனித வெள்ளியன்று.

93.            இயேசு கிறிஸ்து எங்கு இறந்தார்?

கல்வாரி மலையில்

94.            நாம் செபிக்கும்போது சிலுவை அடையாளம் வரைவதின் பொருள் யாது?

v  மூவொரு கடவுளாக விளங்கும் தந்தை மகன் தூய ஆவியார் நம் உள்ளத்தில் இருப்பதை வெளிப்படுத்த.

v  கடவுளின் மகனான இயேசு கிறிஸ்து என் பாவங்களுக்காக சிலுவைச்சாவை ஏற்று என்னை மீட்டார் என்பதை ஏற்று அறிக்கையிட.

95.            சிலுவை அடையாளம் வரையும் போது மூவொரு கடவுளை எவ்வாறு மாட்சிப்படுத்துகிறோம்?

சிலுவை அடையாளம் வரையும்போது நமது நாவால்தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே ஆமேன்என்று சொல்லி மூவொரு கடவுளை மாட்சிப்படுத்துகிறோம்.

96.            சிலுவை அடையாளம் வரையும்போது நம் உள்ளம் நமக்கு நிணைவுறுத்துவது யாது?

பாவம் செய்தது நான். ஆனால் நான் அடையவேண்டிய தண்டனையை கிறிஸ்து ஏற்று துன்புற்று சிலுவையில் அரையப்பட்டு மரித்து என்னை விண்ணக மாட்சிக்குத் தகுதியுள்ளவனாக தகுதியுள்ளவளாக ஆக்கினார் என்பதை   நம் உள்ளத்திலிருந்து அகலாமல் இருக்கச் சிலுவை அடையாளம் நினைவுறுத்துகிறது.

97.             “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்”. கிறிஸ்தவர்கள் துன்பப்பட வேண்டும் என கடவுள் விரும்புகிறாரா?

கிறிஸ்தவர்கள் துன்பத்தை நாடிச்செல்லவேண்டும் என்பது இதன் பொருள் அல்ல;  கடவுள் மனிதர்கள் துன்பப்பட வேண்டும் என்று விரும்புவதும் இல்லை.  ஆனால் எதிர்பாராமல் அல்லது எதிர்பாராத சூழலில் நாம் துன்புற நேர்ந்தால் அந்த துன்பத்தை இயேசுவின் துன்பங்களோடு இணைத்து கடவுளுக்கு ஒப்புக்கொடுப்பது இறைவனுக்கு ஏற்புடைய செயலாகும். இஒத்தகைய செயல் நமது மீட்புக்கு உதவக்கூடியது.

98.             இயேசு இறந்தது உண்மையா?  அல்லது இறந்தது போல் ஒரு மாயையை உண்டாக்கி உயித்ததுபோல் எழுந்து வந்தாரா?

இயேசு இறந்ததும் அடக்கம் செய்யப்பட்டதும் முற்றிலும் உண்மை என்பது பல ஆதாரங்கள் வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளன; அவற்றிர்க்கு நம்பத்தகுந்தவர்களால் சான்றும் பகரப்பட்டுள்ளன.

99.             இயேசு அடக்கம் செய்யப்பட்டார் என்பதன் அர்த்தம் என்ன?

v  மரித்த கிறிஸ்து கல்லறையில் எந்த நிலையில் இருந்தார் என்பதும், எவ்வாறு பாதாளத்திற்கு இறங்கிச் சென்றார் என்பதும் மறைபொருளாகவே உள்ளது.

v  கடவுள் தனது படைபுச் செயலை முடித்து ஏழாம் நாள் ஓய்ந்திருந்ததையும், கிறிஸ்து தனது மீட்புச் செயலை முடித்து இறந்தபின் கல்லறையில் ஓய்ந்திருந்ததையும் புனித சனிக்கிழமை மறைபொருளாக நமக்கு உணர்த்துகிறது.

100.         கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்ட நிகழ்வு நமக்கு விடுக்கும் செய்தி என்ன?

இறந்த கிறிஸ்துவை மாட்சி மிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம். அவர் இறந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம்.

பாதாளத்திற்கு இறங்கிச் சென்று மூன்றாம் நாள் உயித்தெழுந்தார்

101.    பாதாளத்திற்கு இறங்கிச் சென்றார்என்பதன் பொருள் யாது?

 கிறிஸ்து இறந்தவுடன் அவரது பரிசுத்தமான ஆன்மா நரகத்தின் ஒரு பகுதியான பாதாளத்திற்கு (Limbo) இறங்கிச் சென்றது.

102.   பாதாளம் என்றால் என்ன?

கிறிஸ்து இவ்வுலகிற்கு வரும்முன் இறந்த நீதிமான்களின் ஆன்மாக்கள் இளைப்பாரிய ஒரு அடைபட்ட நிலை. நரகம் அல்ல.

 [பாரம்பரிய நம்பிக்கை: மனிதர் பாவம் செய்தபின் விண்ணகம் மனிதருக்கு அடைக்கப்பட்டது. எனவே அபிரகாம், மோசே போன்ற நீதிமான்களின் ஆன்மாக்கள்கூட விண்ணகம் செல்லமுடியாமல் இந்த பாதளத்தில் அடைபட்டுக்கிடந்தன. இயேசுக்கிறிஸ்து தனது பாடுகளினாலும் திருமரணத்தாலும் அதாவது தன் தந்தைக்குக் கீழ்படிந்து பரிகாரப்பலியாக தன் உயிரையே தந்ததின் மூலம் அடைபட்ட விண்ணகத்தைத் திறந்துவிட்டு பாதாளத்தில் அடைபட்டுக்கிடந்த நீதிமான்களின் ஆன்மாக்களை விண்ணகம் அழைத்துச் சென்றார்]

103.   மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்என்பதின் பொருள் என்ன?

கிறிஸ்துவின் ஆன்மா பாதாளம் சென்றபின் அவரது திருவுடல் கல்லறயில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் மூன்று நாட்கள் இருந்த்தது.  மூன்றாம் நாள் தமது பரிசுத்த ஆன்மாவை தமது திருவுடலுடன் இணைத்து உயிர்த்து வெற்றி வீரராக கல்லரையிலிருந்து வெளிவந்தார்.

104.        இயேசு உயிர்த்தெழுந்த நாள் எது?

பாஸ்கு ஞாயிறு.

105.         இயேசு உயிர்த்தபின், அவர் உலகில் வாழ்ந்தபோது மனிதரால் தொட்டு உணரக்கூடிய, உடலைப் பெற்றிருந்தாரா?

ஆம்

v  இயேசு தம் சீடர்களை தன் உடலை தொட்டு உணர அனுமதித்தார்

v  அவர்களோடு உணவருந்தினார்

v  தனது பாடுகளின் போது ஏற்பட்ட காயங்களைக் காட்டினார்

v  இருப்பினும் அது இந்த உலகைச் சார்ந்த உடல் அல்ல, மாறாகத் தன் தந்தையின் விண்ணக அரசைச் சார்ந்த உடலாக  அது இருந்தது.

v  இடம் மற்றும் காலத்தின் நியதிகளுக்கு உட்பட்ட மனித உடல் அல்ல அது. எனவேதான்  அவரால்

q மூடிய கதவுகள் வழியாக உள்ளே வரமுடிந்தது.

q சீடர்களுக்கு பல இடங்களில் காட்சியளிக்க முடிந்தது. 

q பல சமயங்களில் சீடர்களால் அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை

106.         இயேசுவின் உயிர்ப்பு இந்த உலகத்தில் எத்தகைய மாற்றத்தைக் கொண்டுவந்தது?

சாவு என்பது நமது வாழ்வின் முடிவல்ல என்ற நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொண்டுவந்தது.  சாவு இயேசுவின் மீது மட்டுமல்ல அவரில் நம்பிக்கை வைத்துள்ள நம் அனைவரின் மீதும் கூட ஆட்சி செலுத்த முடியாது என்பதை அவரது உயிர்ப்பு உணர்த்தியது.

வாணகத்திற்கு எழுந்தருளி

எல்லாம்வல்ல தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார்.

107.         இயேசுவின் விண்ணேற்றம் என்பதன் பொருள் என்ன? இயேசுவின் விண்ணேற்றம் நமக்கு விடுக்கும் செய்தி என்ன?

X இறைத்தன்மை மறைக்கப்பட்டு, சாதாரண மனிதத் தோற்றத்தோடு நாற்பது நாட்களாக தம்மைத் திருத்தூதர்களுக்குக் காண்பித்த பிறகு கிறிஸ்து விண்ணேற்றம் அடைந்து தந்தையின் வலப்பக்கத்தில் அமர்ந்தார்.

X தந்தையோடும் தூய ஆவியாரோடும் நித்தியத்திற்கும் வாழ்கிறார். 

X இயேசுவின் விண்ணேற்றத்தோடு நம் கண்களால் மனிதத் தோற்றத்தில் இந்த உலகில் அவரைப் பார்ப்பது முடிவுக்கு வருகிறது.

X தனது விண்ணேற்றத்தால் இயேசு மனுக்குலம் முழுவதோடும் கடவுளின் மாட்சியில் நுழைகிறார். 

108.        தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார்என்பதன் பொருள் என்ன?

ந்தையாம் இறவனுக்கு நம்மைப்போன்ற உடல் கிடையாது. எனவே வலப்பக்கம் என்பதை வலதுகைப்பக்கம் என்று பொருள் கொள்ளக்கூடாது. வலப்பக்கம் என்பதற்கு  விண்ணகத்தில் தந்தையோடு ஒன்றித்து இருக்கும் உயர்ந்த உன்னத நிலைஎனப் பொருள் கொள்ளவேண்டும்.

அவ்விடமிருந்து வாழ்வோரையும் இறந்தோரையும்

நடுவராய் இருந்து தீர்ப்பிட மீண்டும் வருவார்

 

109.         இயேசு உலகனைத்திற்கும் ஆண்டவர் என ஏன் கூறுகிறோம்?

உலகமும் அதில் உள்ள அனைத்தும் அவருக்காகவே படைக்கப்பட்டன.   மனுக்குலத்தை மீட்டவரும், அதை தீர்ப்பிட இருப்பவரும் அவரே.  அனைவரும் மண்டியிட்டு ஆராதிக்கப்பட வேண்டியவரும் அவரே.

110.        தமது விண்ணேற்றத்திற்குப்பிறகு   மீண்டும் எப்போது உலகிற்கு வருவார்?

உலகத்தின் இறுதி நாளில் மாந்தர் அனைவரையும் தீர்ப்பிட கிறிஸ்து மீண்டும் வருவார். 

111.        எதன் அடிப்படையில் கிறிஸ்து மாந்தர் அனைவரையும் தீர்ப்பிடுவார்?

Ø  எண்ணங்கள்

Ø  சொல்

Ø  செயல்

Ø  நண்மை தீமைகள்

Ø  செய்யத்தவறிய நற்செயல்கள்

112.        தீயோரை நோக்கி இயேசு என்ன சொல்வார்?

சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்.

113.        நல்லோரையும் நீதிமான்களையும் நோக்கி என்ன சொல்வார்?

என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.

114.        ஒருவர் இறந்தபின்பும் (தனித்தீர்வை) உலகம் முடியும் நாளிலும்  தீர்ப்பிடப்படுவாரா?

இல்லை. தனித்தீர்வையில் விண்ணரசுக்கோ நரகத்திற்கோ தீர்ப்பிடப் பட்டவர்களுக்கு மீண்டும் தீர்ப்பு இராது.அதுவே இறுதித் தீர்ப்பு. கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது அதாவது உலகம் முடியும் போது இறந்தவர்கள் மட்டுமே பொதுத் தீர்வையில் தீர்ப்பிடப்படுவார்கள்.

தூய ஆவியாரை நம்புகிறேன்

115.        தூய ஆவியார் யார்?

தூய மூவொரு கடவுளில் மூன்றாம் ஆள்

116.        தூய ஆவியார் எங்கிருந்து வருகிறார்?

தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் வருகிறார்.

117.        தூய ஆவியானவர் தந்தைக்கும் மகனுக்கும் அனைத்து குணங்களிலும் இணையானவரா?

ஆம்

118.        தூய ஆவியானவர் திருத்தூதர்கள்மீது எப்போது இறங்கி வந்தார்?

பெந்தகோஸ்து நாள் அன்று.

119.        தூய ஆவியானவர் எவ்வாறு திருத்தூர்கள்மீது இறங்கி வந்தார்?

v திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது.

v நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் வடிவில் தூய ஆவியார் திருத்தூதர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தார்.

v அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர்.

120.         தூய ஆவியானவர் திருத்தூதர்கள் மீது இறங்கி வந்தபின் என்ன நிகழ்ந்தது?

தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள்.

121.        தூய ஆவியானவர் திருத்தூதர்கள் மேல் இறங்கிவந்ததின் நோக்கம் என்ன?

i.          திருத்தூதர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்த.

ii.           அவர்களைப் புனிதப்படுத்த.

iii.           திருஅவையை நிறுவ தேவையான ஆற்றலைத் தர.

122.         தூய ஆவியாரின் பல்வேறு பெயர்கள் யாவை?

Ø தமத்திருத்துவத்தின் மூன்றாம் ஆளுக்கு உரித்தான பெயர் ‘தூய ஆவியார்’

Ø இயேசு அவரைத் ‘துணையாளர்’, ‘தேற்றுபவர்’,  ‘பரிந்துரையாளர்’, உண்மையின் ஆவியானவர் என்றும் அழைத்தர்.

Ø புதிய ஏற்பாட்டில் ‘கிறிஸ்துவின் ஆவியார்’, ‘ஆண்டவரின் ஆவியார்’,  ‘கடவுளின் ஆவியார்’, ‘மாட்சியின் ஆவியார்’, ‘வாக்குறுதியின் ஆவியார்’ மற்றும்  ‘கண்டித்து உணர்த்தும் ஆவியார்’ எனவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Ø ஆதிக்கிறிஸ்தவர்கள் தூய ஆவியாரை குணப்படுத்தும் தைலமாகவும், உயிருள்ள ஊற்றுத் தண்ணீராகவும், சுழல் காற்றாகவும், சுட்டெரிக்கும் நெருப்பாகவும் உணர்ந்தனர்.

123.         தூய ஆவியாரைக் குறித்துக்காட்ட என்னென்ன அடையாளங்கள் பயன் படுத்தப் படுகின்றன?

v கிறிஸ்துவின் குத்தித் திறக்கப்பட்ட இதயத்திலிருந்து பொங்கி வழிவதும், திருமுழுக்குப் பெற்றவர்களின் தாகம் தீர்ப்பதுமான உயிருள்ள தண்ணீர்.

v உறுதிப்பூசுதல் மற்றும் நோயில்பூசுதல் போன்ற அருள் அடையாளங்களில்  ‘எண்ணெய்’

v தூய்மைப்படுத்தும் ‘தீ சுவாலை’

v இறைமாட்சியை வெளிப்படுத்தும் ‘ஒளிரும் /இருண்ட மேகம்’,  ‘புயல் காற்று’

v தூய ஆவியாரை பொழியும் ‘கைகள்’

v வெள்ளப்பெருக்கு வடிந்துவிட்டதை நோவாவுக்கு வெளிப்படுத்தவும், இயேசுவின் திருமுழுக்கின்போது  இயேசுவை கடவுளாக சான்றுபகர ‘புறா’ .

124.         இறைவாக்கினர் வழியாகத் தூய ஆவியார் பேசியுள்ளார்” என்பதன் பொருள் என்ன?

தூய ஆவியால் தூண்டப்பட்டு இறைவன் பெயரால் பேசுபவரே “இறைவக்கினர்”.  பழைய ஏற்பாட்டு காலத்தில் இறைவன் தன் சார்பாகத் தயக்கமின்றி பேசவும், இஸ்ரயேல் மக்களை அவர்கள் எதிபார்த்திருந்த மெசியாவின் வருகைக்காக தயார்ப் படுத்தவும் தான் தேர்ந்துகொண்ட மனிதர்களை பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிரப்பினார்.

125.         பெந்தக்கோஸ்த்து நாளில் நிகழ்ந்தது என்ன?

இயேசு தாம் உயிர்த்த ஐம்பதாம் நாளான பெந்தக்கோஸ்த்து நாளன்று தூய ஆவியை அன்னை மரியாள் மீதும், திருத்தூதர்கள் மீதும் (திருச்சபையின் மீதும்) நிறைவாகப் பொழிந்தார். அதனால் கோழைகளாக இருந்த திருத்தூதர்கள் துணிவுடன் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்ந்தார்கள். அன்றுதான் தாய் திருச்சபையின் பிறந்த நாள்; கத்தொலிக்கத் திருச்சபை என்ற சகாப்த்தத்தின் துவக்க நாள்.

126.          திருச்சபையில் தூய ஆவியார் எவ்வகையில் செயலாற்றுகிறார்?

தூய ஆவியார் திருச்சபையை  

ü கட்டி எழுப்புகிறார்

ü உயிரூட்டுகிறார்,

ü புனிதப்படுத்துகிறார்.

ü வழிநடத்துகிறார்

ü தூண்டுகோலாய் இருக்கிறார்

ü  நம்மை மூவொரு கடவுளோடு இன்னும் அதிகமாக ஐக்கியப்படுத்துகிறார். 

ü  மக்களைத் திருச்சபையின் பணிகளுக்கு அழைத்து அவர்கள் பணிக்குத் தேவையான கனிகளைக் கொடுத்து அவர்களை உறுதிப் படுத்துகிறார்.

ü  பிறப்பு நிலை (ஜென்ம) பாவத்தால் நாம் இழந்த இறைச் சாயலை திருமுழுக்கு வழியாக மீண்டும் பெற்றுத் தருகிறார்.

ü   ஒப்புறவு அருட்சாதனம் வழியாக நம்மை மூவொரு கடவுளுக்குள் ஐக்கியமாக்குகிறார்.

ü  திருவருட்சாதனங்களால் நம்மை பலப்படுத்தி நம்மை இறைச்சயலில் வளர்த்து வருகிறார். 

ü  நற்செய்தியை நம் வாழ்வாக்குகிறார். 

ü  இன்றும் தூய உள்ளத்தோடு அவரிடம் கேட்பவர்களுக்கு அவரது கனிகளைப் பொழிகிறார்.

“தூய கத்தோலிக்கத் திருச்சபையை நம்புகிறேன்”

இறைத் திட்டத்தில் திருச்சபை

தூய கத்தோலிக்கத் திருஅவையும் புனிதர்களின் உறவும்

“திருஅவை” என்னும் சொல்லின்பொருள் என்ன?

i.       kyriake  என்ற கிரேக்கச் சொல்லின் பொருள்: அனைத்து நாடுகளிலிருந்தும் “அழைக்கப்பட்ட  கடவுளின் பிள்ளைகள்”  என்பதாகும் .  

ii.     ekklesia  என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் திருமுழுக்கின் வழியாக  கிறிஸ்து என்ற உடலின் உருப்புக்கள்” என்பதாகும். 

iii.   இந்த இரு அர்தங்களை மையமாக வைத்தே ஆங்கிலத்தில்  “Church” என்ற சொல்லும்,  தமிழில்  “திருஅவை” என்ற சொல்லும் பெறப்பட்டுள்ளன.

iv.    மூவொரு கடவுளை விசுவசித்து தூய ஆவியாரால் திருமுழுக்குப் பெற்றவர்களே “அழைக்கப் பட்டவர்கள்” ஆவர். இவர்கள் கடவுளின் பிள்ளைகளாகவும், கிறிஸ்துவின் உறுப்புக்களாகவும், தூய ஆவியாரின் கோவில்களாகவும் திகழ்கின்றனர்

127.        கதோலிக்கத் திருஅவை என்பதன் அர்த்தம் யாது?

ஒரே தலைமையில் (திருத்தந்தை)  ஒன்றித்திருக்கும் இறைமக்களே (கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்) திருஅவையாகும்.

128.        இயேசு திருச்சபையை ஸ்தாபித்ததின் மற்றும் பராமரிப்பதன் நோக்கம் என்ன?

i.        நம்மை, தனியொரு மனிதனாக அல்ல மாறாக ஒட்டுமொத்த மனுக்குலத்தையும் மீட்க. 

ii.        மனுக்குலம் முழுவதையும் “ஒரே மந்தையும் ஒரே ஆயனும்” என நடத்திச் செல்ல.

129.         திருச்சபை கிறிஸ்துவின் உடல்” என்பதின் பொருள் என்ன?

திருமுழுக்கும் திவ்யநற்கருணையும் கிறிஸ்தவர்களையும் கிறிஸ்துவையும் பிரிக்க இயலாத உறவில் இணைக்கின்றன. மனித உடலும் தலையும் எவ்வாறு பிரிக்க இயலாதவாறு இணைந்துள்ளதோ அதேபோல் திருச்சபை கிறிஸ்துவோடு ஒன்றாய் உள்ளது.

130.          திருச்சபையின் பணி என்ன?  

       i.          இயேசு கிறிஸ்து தொடங்கி வைத்த இறையாட்சியை அனைத்து நடுகளின் மக்களுக்கும் அறிவித்து அதை நிறுவுவது. 

      ii.          இறை வார்த்தையை உலகின் கடையெல்லை வரை அறிவிப்பது.

131.        கத்தோலிக்க திருஅவையின் தலைவர் யார்?

நம் மீட்பரும் இறைவனுமான இயேசு கிறிஸ்து.

132.        உரோமையின் ஆயர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

கத்தோலிக்க திருஅவையின் திருத்தந்தை என அழைக்கப்படுகிறார்.

133.        திருஅவையின் நாம் காணக்கூடிய தலைவர் யார்?

கிறிஸ்துவுக்கு அடுத்த நிலையில் இருப்பவரும், உரோமை ஆயருமான நம் திருத்தந்தையே.

134.        உரோமை ஆயரே திருத்தந்தையாக ஏன் உயர்த்தப்படுகிறார்?

Ø  கிறிஸ்து தான் நிறுவிய திருஅவைக்கு பேதுருவை தலவராக நியமித்தார்.

Ø  உரோமை ஆயர் திருத்தூதர் பேதுருவின் நிலையில் இருப்பவர் என்பது திருஅவையின் கோட்ப்படு.

Ø  எனவேதான் உரோமை ஆயர் கத்தோலிக்கத் திருஅவையின் தலைவர் (திருத்தந்தை) ஆகிறார்.

135.        எதன் அடிப்படையில் கிறிஸ்து பேதுருவை திருஅவையின் தலைவராக நியமித்தார் என்பதை ஏற்றுக்கொள்ள்கிறோம்?

மத்.16:18-19: எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். ----------- விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். -------- என்றார்.

136.          “கடவுளின் மக்கள்’ என்பதின் தனித் தன்மை அல்லது தனிச் சிறப்பு என்ன?

“கடவுளின் மக்கள்” “திருச்சபை” இவை ஒரே அர்த்தமுள்ள இரு சொற்கள் எனக் கொள்ளலாம் (synonemes). இறைவனே இதை ஏற்படுத்தியவர்.  இயேசுவே இதன் தலைவர்.  பரிசுத்த ஆவியாரே அதன் வல்லமை.  திருமுழுக்கே இதன் நுழை வாயில்.  நாம் அனவரும் கடவுளின் மக்கள் என்பதே அதன் மாட்சி.  அன்பே அதன் சட்டம்.  கடவுளின் பிள்ளைகளுக்குறிய மாண்பையும், சுதந்திரத்தையும் தங்கள் தனித்துவமாகக் கொண்டவர்கள்.

137.       கத்தோலிக்கக் கிறிதவர்களைன் இலக்கனம் யாது?

v  மூவொரு இறைவனில் நம்பிக்கை உள்ளவர்கள்.

v  இறை ஆட்சியைத் தேடுபவர்கள்; இறை ஆட்சியை இந்த மண்ணில் மலரச் செய்பவர்கள்.

v  இந்த உலகிற்கு உப்பாக வாழ்பவர்கள்.

v  உலகின் இருளை அகற்றும் ஒளி அவர்கள்.

v  இறை ஆட்சியை தங்கள் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டவர்கள். .

v  கிறிஸ்துவின் குருத்துவப் பணியிலும் இறைவாக்குப் பணியிலும் அவருக்கு உடன் உழைப்பாளர்களாக வாழ்பவர்கள்.

v  ஏழைகளுக்கும் துன்புறுவோருக்கும் கிறிஸ்துவின் வழியில் தொண்டு செய்பவர்கள். 

v  சாவோ, வாழ்வோ, கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்ற உறுதியான நம்பிக்கை கொண்டிருப்போர்.

138.          “திருச்சபை தூய ஆவியாரின் கோவில்” என்பதன் பொருள் என்ன?

இந்த உலகில் தூய ஆவியாரின் வல்லமை முழுமையாக நிறைந்துள்ள இடம்தான் கத்தோலிக்கத் திருச்சபை. எனவேதான் கத்தோலிக்கத் திருச்சபையை தூய ஆவியார் வாழும் கோவில் என்று ஏற்றுக்கொள்கிறோம்.

139.       இன்றைய எருசலேம் எது?

யூதர்கள் எருசலேம் தேவாலயத்தில் இறைவனை வழிபட்டார்கள்.  இப்போது அந்த தேவாலயம் இல்லை.  திருச்சபைதான் இன்றைய ‘எருசலேம் தேவாலயம்’ எனக் கருதப் படுகிறது. 

140.         தூய ஆவியாரின் தனி வரங்கள் என்றால் என்ன? அவை யாவை?

Ä தனிப்பட்டவர்கள் மீது பொழியப்படும் தூய ஆவியாரின் சிறப்பான கொடைகளே  ‘தனிவரங்கள்’ எனப்படும்.  

Ä அவை ஞானம், அறிவு, நம்பிக்கை, வல்ல செயல், இறைவாக்குரைத்தல், பகுத்தறிவு, பரவசப் பேச்சு, அப்பேச்சை விளக்கும் ஆற்றல் என்பன.

Ä இவை பிறர் நலன்களுக்காகவும், உலகின் தேவைகளுக்காகவும், குறிப்பாகத் திருச்சபையைக் கட்டி எழுப்புவதற்காகவும் பொழியப்படுகின்றன.

141.        கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் யாரை தங்கள் ஆன்மீக தந்தையாக ஏற்றுகொள்கிறார்கள்?

திருஅவையின் திருத்தந்தையை.

142.        திருதந்தை அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் மேய்ப்பரும் ஆசிரியரும் ஆவார்என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறோம்?

i.       யோவான் 21:15-17 மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், “யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?” என்று கேட்டார். ------------ இயேசு அவரிடம், என் ஆடுகளைப் பேணிவளர் என்றார்இயேசு திருத்தூதர் பேதுருவுக்கு இட்ட கட்டளையின்படி திருத்தந்தையை நமது மேய்ப்பராக ஏற்றுக்கொள்கிறோம்.

ii.        திருஅவையின் கோட்பாடுகளையும் மறை உண்மைகளையும் போதிக்கும் முழுஅதிகாரம் (Majesterium) கொண்டவர் திருத்தந்தை. எனவே திருத்தந்தையை திருஅவையின் ஆசிரியராகவும் ஏற்றுக்கொள்கிறோம்.

143.           திருத்தந்தை வழுவாவரம்கொண்டவரா?

ஆம்

144.        வழுவாவர்ம் என்றால் என்ன?

திருஅவையின் நம்பிக்கை மற்றும் ஒழுக்கநெறி சார்ந்த கோட்பாடுகளை வரையறுப்பதற்கும் அதனை திருத்தந்தையின் அதிகார இருக்கையில் இருந்து பிரகடனப்படுத்துவதற்கும்  திருத்தந்தை வழுவா வரம் பெற்றுள்ளார்.

145.         கத்தோலிக்கத் திருஅவையை தனித்துவமாகக் காட்டும் அடையாளங்கள் யாவை?

திருஅவை

     i.        ஒன்றே

   ii.        புனிதமானது

  iii.        உலகின் அனைத்து நாடுகளிலும் இருப்பது

  iv.        திருத்தூது மரபு வழி வருவது

146.        திருஅவை ஒன்றேஎவ்வாறு

v ஏற்றுக்கொண்ட்து ஒரே நம்பிக்கை

v திருப்ப்பலி ஒன்றே

v திருவருள் சாதனங்கள்

v ஒன்றித்திருப்பது ஒரே தலைமையில்

147.        கத்தோலிக் என்பதன் பொருள் என்ன?

உலகெங்கும் உள்ள திருஅவை

148.        திருஅவை எவ்வாறு கத்தோலிக திருஅவை என அழைக்கப்படுகிறது?

i.       எல்லா காலங்களிலும் நிலைத்திருப்பது

ii.     அனைத்து நாடுகளிலும் பரவி இருப்பது; அனைத்து நாடுகளிலும் நற்செய்தியை அறிவிப்பது

iii.   அனைத்துமக்களின் மீட்புக்கும் ஒரே வாயில்

 

149.        திருஅவையை அப்போஸ்தலிக்க திருஅவை என அழைக்க காரணம் என்ன?

 அப்போஸ்தலிக்கஎன்ற சொல்லின் பொருள்  திருத்தூது”. 

X திருத்தூதர்கள் வகுத்துக்கொடுத்த கிறிஸ்துவின் கோட்பாடுகளை  திருஅவை தனது நம்பிக்கையாகவும் வாழ்வாகவும் கொண்டு இயங்கி வருவதாலும்

X அவர்களுடைய வழித்தோன்றல்களாகிய திருத்தந்தை மற்றும் ஆயர்களால் திருச்சபை ஆளப்படுவதாலும்

அதனை அப்போஸ்தலிக்க திருஅவை என்று அழைக்கிறோம்.

150.        திருத்தூது மரபு (Apostolic Tradition) என்றால் என்ன?

திருத்தூதர்கள் வகுத்துக்கொடுத்த நம்பிக்கை மற்றும் கிறிஸ்துவின் கோட்படுகள் இன்றுவரை மாறுபடாமலும் சிதைவுறாமலும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள். மறைக்கல்வி போதகர்களால் காக்கப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன, கற்பிக்கப்படுகின்றன. இந்த நடைமுறையையே திருத்தூது மரபு என அழைக்கிறோம்.

151.        திருஅவை தன் போதனைகளில் தவறிழைக்க முடியுமா?

தவறிழைக்க முடியாது.  திருஅவையின் நம்பிகைகளும் ஒழுக்க நெறி கோட்பாடுகளும் இறைவன் திரு அவைக்கு (திருத்தைக்கு) கொடுத்த வழுவாவரத்தல் வழிநடத்தப்படுகின்றன.

152.        திருஅவை தனது போதனைகளில் தவறிழைக்கமுடியாது என்பதனை எவ்வாறு அறிகிறோம்?

இதற்கான பதிலை தெரிந்துகொள்ள கீழ்காணும் நற்செய்தி பகுதிகளை  கவனமுடன் வாசிப்போம். மத்.16:18; யோவா.14:16-26; மத்.28:20.

v பாதாளத்தின் வாயில்கள் (தீய சக்திகள்) அதன்மேல் (திருஅவையின்மேல்) வெற்றி கொள்ளமுடியாது என்று இயேசு கிறிஸ்து திருத்தூதர்களுக்கு வாக்குக் கொடுத்துள்ளார்.

v உலகம் முடியும் வரை இயேசு கிறிஸ்து திருஅவையோடு இருக்கிறார்.

v தந்தை உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியாரை திருஅவைக்கு அளித்துள்ளார்.

153.        திருஅவையின் உறுப்பினர்கள் யார்?

கிறிஸ்துவை தனது கடவுளாகவும் மீட்பராகவும் ஏற்று திருமுழுக்கு வழியாக திருஅவையின் உறுப்பினர்களாகி இப்போது இவ்வுலகில், விண்ணகத்தில் மற்றும் உத்தரிக்கும் நிலையில் உள்ள அனைவரையும் ஒன்றினைத்ததுதான் திருஅவை.

154.          திருச்சபைக்கும் யூதர்களுக்கும் உள்ள உறவு எத்தகையது?

இறைவன் அவர்களை

v தனது மக்களாகத் தேர்ந்துகொண்டதாலும்,

v அவர்களை அன்பு செய்ததாலும்

v முதன்முதலில் அவர்களோடு பேசியதாலும் (இறைவனுடைய வார்த்தைகளை முதன் முதலில் பெற்றுக்கொண்டவர்கள்.)

v அவரே ஒரு யூதராகப் பிறந்ததாலும்

யூதர்களை நமது மூத்த சகோதரர்களாகக் கருதுகிறோம்.  இந்த உண்மைகளே நம்மையும் யூதர்களையும் இணைக்கிறது. 

Ø நமது விசுவாசத்தின் துவக்கம் அவர்களது விசுவாசம்

Ø அவர்களுடைய வேத நூல் நமது விவிலியத்தின் பழையஏற்பாடாகவும் முதல் பகுதியாகவும் அமைந்துள்ளது.

155.          நமது திருச்சபை மற்ற மதங்களை எவ்வாறு கண் நோக்குகிறது?

நமது திருச்சபை

q மற்ற மதங்களில் உள்ள நன்மை மற்றும் உண்மைகளை மதிக்கிறது.

q ‘மத சுதந்திரம் ஒரு மனித உரிமை’  என்ற கோட்பாட்டை மதிக்கிறது. 

இருப்பினும் ‘கிறிஸ்து ஒருவரே மனித குலத்தின் மீட்பர்; அவரே வழியும், உண்மையும், வாழ்வும்’ என்பதை விசுவசித்து அறிக்கையிடுகிறது.

156.          பரிசுத்த கத்தோலிக்க அப்போஸ்தலிக்கத் திருச்சபையின் கட்டமைப்பு எவ்வாறு அமைந்துள்ளது?

திருச்சபை அங்கத்தினர்களை பொது நிலையினர் மற்றும் குருக்கள்/துறவரத்தார் என இரு வகைப்படுத்தலாம்.

v பொதுநிலையினர்: உலகில் உள்ள மாந்தர் அனைவரையும் இறையரசின் பாதையில் இட்டுச் செல்வதே பொதுநிலையினரின் பணியாகும். 

v அருட்பொழிவுசெய்யப்பட்ட பணியாளர்கள்: திருச்சபை ஆளுகை, போதித்தல் மற்றும் அர்ச்சித்தல் ஆகிய பணிகள் இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

157.       பொதுநிலையினர் எதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்?

சமுதாயத்தில் மக்கள் நடுவே தங்களது கிறிஸ்தவ வாழ்வாலும், பிறர் அன்பு சேவையாலும் (மத்25:35-40) இறையாட்சியை வளரச் செய்யவே அழைக்கப்பட்டுள்ளார்கள். 

158.          கிறிஸ்தவர்கள் என்றால் என்ன?

திருமுழுக்கின் வழியாக  கடவுளின்  மக்களாகி, கிறிஸ்துவுக்குள் ஓருடலாக ஆக்கப்பட்டவர்கள் அனைவரையும் கிறிஸ்தவர்கள் என அழைக்கிறோம்.

159.          திருச்சபை ஏன் ஜனநாயக அமைப்பாக விளங்க முடியாது?

ஜனநாயக அமைப்பில் ஆள்பவர்களுக்கு ஆள்வதற்கு வேண்டிய அதிகாரம் மக்களிடமிருந்து வருகிறது.  ஆனால் திருச்சபையில் அனைத்து அதிகாரங்களும்  கிறிஸ்துவிடமிருந்து வருகிறது.  எனவேதான் திருச்சபையில் அதிகாரம் கிறிஸ்து>திருத்தந்தை>ஆயர்கள்>குருக்கள் என்ற “படிநிலைக் கட்டமைப்பு” (Hierarchical Structure) முறையில் செயல்படுகிறது. இருப்பினும் “கூட்டுப் பொறுப்பு” அல்லது ”பொறுப்புப் பகிர்வு” (Collegial Structure) என்ற விதிமுறையில் கிறிஸ்து திருச்சபையை நடத்திச் செல்கிறார்.

160.         திருத் தந்தையின் பொறுப்பு யாது?  

தூய பேதுருவின் ஸ்தானத்தில் அவர் பணியாற்றுவதாலும், ஆயர்கள் கல்லூரியின் / கூட்டமைப்பின்  தலைவராக இருப்பதாலும்

    i.      அகில உலக ஆயர்களுக்குத் தலைவராக விளங்குகிறார்.

   ii.     திருச்சபையின்  முழுமையான ஒருமைப்பாட்டிற்கு முலமும், ஆதாரமும், உத்திரவாதமும் அவரே.

 iii.     கீழ் கண்ட பணிகளுக்கு முதன்மை அதிகாரியாக அதிகாரம் பெற்றவராக இருக்கிறார்

a.   மேய்ப்புப் பணி / ஆயர் பணி

b.   கத்தோலிக்கக் கோட்பாடுகளில் இறுதி முடிவெடுத்தல்.

c.   ஒழுங்கு நடவடிக்கைகள் மீது இறுதி முடிவெடுத்தல்.

161.          புனிதர்கள் யார்?

இவ்வுலகில் இறைவனுக்கு ஏற்ற வாழ்வு வாழ்ந்து அல்லது கிறிஸ்துவுக்கு சாட்சிகளாக மரித்து இறைவனால் புனித நிலைக்கு உயர்த்தப்பட்ட திருஅவை உறுப்பினர்கள்.

162.         புனிதர்களின் உறவு என்றால் என்ன?

Ø திருமுழுக்கின் வழியாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவரை முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் அன்புசெய்யும் அனவரும் (அதாவது நாமும் விண்ணகத்தில் இறைவனோடு வாழும் புனிதர்களும்) ஒரே உறவில் வாழ்கிறோம். 

Ø இந்த உறவையே அல்லது இந்த மறை உண்மையையே புனிதர்கள் உறவு என்கிறோம். 

Ø இந்த உறவின் (Reachout) பரிமாணம் விண்ணகத்தையும், மண்ணகத்தையும் உள்ளடக்கியது. 

Ø நாம் அனைவரும் கிறிஸ்துவுக்குள் ஒரே உடலாய் இருக்கிறோம் என்பதே இந்த மறை உண்மையின் பொருள்.

163.         விண்ணகத்தில் இருக்கும் புனிதர்களோடு நாம் எவ்வாறு உறவில் இருக்கிறோம்?

i.  கிறிஸ்துவே திருஅவையின் தலை;  இறைமக்கள் திருஅவையின் உடல்.

ii. திருஅவை என்பது  

v  கிறிஸ்தவ நம்பிக்கையை ஏற்று திருமுழுக்குப் பெற்று இவ்வுலகில் வாழும் நாம்

v  விண்ணகத்தில் உள்ள ஆன்மாக்கள் (புனிதர்கள்)

v  உத்தரிக்கும் நிலியில் உள்ள ஆன்மாக்கள்

அனைவரையும் உள்ளடக்கியது.

iii.           இந்த நமது நம்பிக்கையின்படி இவ்வுலகில் வாழும் நாமும்   விண்ணகத்திலும் உத்தரிக்கும் நிலியில் உள்ள ஆன்மாக்களும் ஒருவரோடு ஒருவர்  உறவில் உள்ளோம்.

164.         புனிதர்கள் உறவில் அன்னை மரியாளுக்கு ஏன் அனைவருக்கும் மேலான இடம் அளிக்கப்பட்டுள்ளது?

i.     மரியாள் இறைவனின் தாய்.

ii.   எனவே அன்னை மரியாளை விட அல்லது அவருக்கு இணையாக இந்த உலகில் எவருமே கிறிஸ்துவோடு பந்தத்தில் இருந்திருக்க முடியாது. இந்த பந்தம் விண்ணகத்திலும் உள்ளது.  

iii.  கிறிஸ்து தான் மரிக்கும் முன் ‘இதோ உன் தாய்’ எனக்கூறி, நம்மை அன்னை மரியாளின் பிள்ளைகளாக தாயாக உயர்த்தினார். 

iv.  இந்த தாய் உறவினால்தான் அன்னை மரியாளுக்கு புனிதர்கள் உறவில் அனைவருக்கும் மேலான நிலை அளிக்கப்பட்டுள்ளது.

165.          அன்னை மரியாளை நாம் ஆராதிக்கலாமா?

v கண்டிப்பாகக் கூடாது. 

v அராதனை என்பது படைத்தவரை, படைப்புக்கள் அனைத்தின் மீதும் அதிகாரம் கொண்டவரைக் கடவுள் என்று ஏற்று அவரை மட்டுமே வழிபடுவது. அன்னை மரியாள் நம்மைப் போல ஒரு படைப்பே.

v அன்னை மரியாள் இறை இயேசுவின் தாய் என்பதாலும், அவர் விண்ணக மண்ணக அரசியாகப் போற்றப்படுவதாலும் புனிதர்கள் அனைவருக்கும் செலுத்தக்கூடிய சாதாரண வணக்கத்தைக் காட்டிலும் சிறப்பான வணக்கத்தை அன்னை மரியாளுக்கு செலுத்துகிறோம்.

166.          நாம் எவ்வாரெல்லாம் அன்னை மரியாளை மகிமைப் படுத்துகிறோம்?

v  அன்னைக்கு திருச்சபையால் அங்கிகரிக்கப்பட்ட திருத்தலங்கள் உள்ளன; 

v  திருயாத்திரை செல்லும் இடங்கள் உள்ளன;

v  திருச்சபை அன்னைக்கு திருநாட்களை குறித்துக் கொடுத்துள்ளது;

v  அன்னைக்கு பாடல்களையும் செபங்களையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது

v அத்தகைய சிறந்த செபங்களில் ஒன்றுதான் செபமாலை. 

167.          செபமாலையின் சிறப்பு யாது?

இது ஒரு மறை உண்மைகளின் தொகுப்பு ஆகும்; கிறிஸ்து வழியாக நமது மீட்பையும் அதில் அண்ணையின் முழுமையான பங்களிப்பையும் செபமாலையில் தியானிக்கிறோம்.  எனவேதான் செபமாலை செபங்கள் அனைத்திலும் சிறந்ததாகவும் அன்னைக்கு பிடித்த ஒன்றாகவும் கருதப்படுகிறது.

 

168.        இந்த உலகில் வாழும் கிறிஸ்தவர்களாகிய நாம் எவ்வாறு ஒருவரோடு ஒருவர் உறவில் உள்ளோம்?

Ø  நாம் அறிக்கையிடுவது ஒரே நம்பிக்கை

Ø  திருத்தந்தையின் அதிகாரத்தின் கீழ் உள்ளோம்

Ø  இறைவேண்டலிலும் நற்செயல்கள் புரிவதிலும் ஒருவரோடு ஒருவர் இணைந்துள்ளோம்.

169.        விண்ணகத்தில் உள்ள புனிதர்களோடு நாம் எவ்வாறு உறவில் உள்ளோம்?

Ø  இறைவனால் புனித நிலைக்கு உயர்த்தப்பட்ட திருஅவை உறுப்பினர்களாக

Ø  நமக்கு ஒரு முன்மாதிரியாக

Ø  நாம் அவர்கள் வழியாக இறைவனிடம் வேண்டுபவர்களாக

Ø  அவர்கள் நமக்காக இறைவனிடம் பரிந்துபேசுபவர்களாக

170.        உத்தரிக்கும் நிலையில் உள்ள ஆன்மாக்களுக்கு உதவ முடியுமா?

முடியும்.  நமது செபங்களாலும், ஒறுத்தல் மூயற்சிகளாலும், தர்மம் செய்தல்,  ஏழைகளுக்கு உதவுதல் போன்ற நற்செயல்களாலும் அந்த ஆன்மாக்களை பவங்களிலிருந்து தூய்மைப்படுத்தி விண்ணகம் சேர்க்க முடியும்.

171.        உத்தரிக்கும் நிலை என்றால் என்ன?

இது நரகம் அல்ல.  இறந்த பின் தங்களின் பாவங்களுக்கான தண்டனையை அனுபவிக்கும் நிலை. தண்டனைகாலம் முடிந்தபின் தங்கள் பாவங்கள் முற்ற்லும் கழுவப்பட்டவர்களாக விண்ணக பேரின்பத்திற்குள் நுழைவார்கள்.

172.        எத்தகைய ஆன்மாக்கள் உத்தரிக்கும் நிலைக்கு செல்கிறார்கள்?

Ø  அற்ப பாவங்களோடு இறந்தவர்கள்.

Ø  சாவான பாவத்திற்கு ஒப்புறவு அருள்சாதனத்தின் வழியாக பாவமன்னிப்பைப் பெற்றிருப்பார்கள்; ஆனால் அதற்குரிய தண்டனைகளை முழுமையாக அனுபவிக்காதவர்கள்.

173.        Temporal தண்டனை என்றால் என்ன?

இத்தகைய தண்டனைகள் ஒரு கால எல்லைக்குள் மட்டுமே அனுபவிக்க வேண்டிய தண்டனைகள். அது இந்த உலகிலோ அல்லது உத்தரிக்கும் நிலையிலோ இருக்கலாம்.

174.        உத்தரிக்கும் நிலை என்று ஒன்று உள்ளது என எவ்வாறு நம்பி ஏற்றுக்கொள்கிறோம்?

v  திருஅவையின் படிப்பினைகள்

v  திருவிவிலியத்தில் காணப்படும் கருத்துகள். மத்,16:27; 1கொரி.3:15.

பாவ மன்னிப்பை நம்புகிறேன்

175.        பாவம் என்றால் என்ன?

கடவுளுக்கு எதிராக, திருஅவையின் கோட்பாடுகளுக்கும் சட்டங்களுக்கும் எதிராக நமது எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் நடந்துகொள்வது/ வாழ்வது.

176.         பாவம் எத்தனை வகைப்படும்?

ஜென்மப்பாவம், செயல்வழி (கர்ம) பாவம் என இருவகைப்படும்.

177.        ஜென்ம பாவம் என்றால் என்ன?

ஆதாம் கடவுளுக்குக் கீழ்படியாமல் கட்டிக்கொண்ட பாவத்தின் கறை மனுக்குலம் முழுவதிலும் படிந்துள்ளது.  இதன் தாக்கமாக இவ்வுல்கில் பிறக்கும் அனைத்து குழைந்தகளும் பாவத்தின் கறையோடு பிறக்கின்றன. இதனையே ஜென்ம பாவம் என அழைக்கிறோம்.

178.        ஆதாம் கட்டிக்கொண்ட பாவம் யாது?

இறைவனால் விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்டு கீழ்படியாமை என்ற பாவத்தைக் கட்டிகொண்டான்.

179.        இந்த உலகில் பிறக்கும் அனைவரு ஜென்மப்பாவத்தோடுதான் பிறக்கின்றனரா?

அமல உற்பவியாகிய அன்னை மரியாளைத் தவிர இந்த பூமியில்பிறக்கும் அனைவரும் ஜென்ம பாவத்தின் கறையோடுதான் பிறக்கின்றனர்.  இறைவனின் மகனாகிய இயேசுவை  தன் உதிரத்தில் தாங்கவேண்டிருந்த்தால் இறைவனின் அருளால் அன்னை மரியாள் கருவிலேயே ஜென்ம பாவக் கறையின்றி துய்மைப்படுத்த்பட்டார். எனவேதான் அன்னையை அமல உற்பவி என போற்றுகிறோம்.

180.        கர்மப்பாவம் என்றால் என்ன?

நாம் சுய நினைவோடு, சுயவிருப்பத்தோடு, பாவம் என்று அறிந்திருந்தும் கட்டிக்கொள்ளும் பாவ்த்தையே கர்மப்பாவம் என் அழைக்கிறோம்.

181.        கர்மப்பாவம் எத்தனை வகைப்ப்டும்?

அற்ப்பபாவம், சாவானபாவம் என இருவகைப்படும்.

182.        சாவான பாவம் என்றால் என்ன?

கடவுளுக்கு எதிராகச் செய்யப்படும் கொடூரமான பாவம்

183.        இத்தகைய பாவத்தை சாவான பாவம் என்று அழைக்கக் காரணம் என்ன?

v  இத்தகைய பாவம் நமது ஆன்மாவின் புனிதத்தை முற்றிலும் அழிக்கவல்லது.

v  நித்துயத்திற்கும் நம்மை இறைவனிடமிருந்து பிரிக்கவல்லது.

v  நித்திய நரகத்திற்கு நம் ஆன்மாவை உறுதியாக இட்டுச் செல்லக்கூடியது.

v   அனைத்துத் தீமைகளிலும் கொடியது சாவான பாவத்தில் விழுவது.

v  மத்.5:29-30

184.        சாவான பாவத்தைக் கட்டிக்கொண்டவர்கள் இறந்தபின் எங்கு செல்வார்கள்?

முடிவில்லா நரகத்திற்கு.

185.        அற்ப்பாவம் என்றால் என்ன?

v  நம் ஆன்மாவின் புனித்த்தை அழித்து நம்மை நித்திய நரகத்தில் தள்ளவல்லது அல்ல.

v  இருப்பினும் இறைவனை மனம் நோகச் செய்யக்கூடியது.

v  பெரும்பாலும் நம்மை சாவான பாவத்திற்கு இட்டுச்செல்லக் கூடியது.

186.        இதனை ஏன் அற்ப்ப்பாவம் என அழைக்கிறோம்?

இவை இறைவனால் எளிதில் மன்னிக்கக்கூடியவை என்பதால்

187.         பாவங்கள் எவ்வாறு மன்னிக்கப் படுகின்றன?

X கிறிஸ்து உயிர்த்து விண்ணகம் செல்லும் முன் தூய ஆவியை திருத்தூதர்கள் மேல் பொழிந்து உலகில் மனிதரின் பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை அவர்களுக்குக் கொடுத்தார் (யோவா 20:22-230). 

X திருமுழுக்கு வழியாக நாம் பிறப்புநிலை பாவத்திலிருந்து கழுவப்பட்டு கிறிஸ்துவோடு இணைக்கப் படுகிறோம்.  

X திருமுழுக்கு பெற்றபின் நாம் உலகில் வாழும் நாட்களில் உலக தீய நாட்டங்களினால் கட்டிக்கொள்ளும் பாவங்களுக்கு ஒப்புறவு அருட்சாதனம்  (Sacrament of Penance) வழியாக மன்னிப்பைப் பெற்று  மீண்டும் இறைவனோடு இணைகப்படுகிறோம்.

188.         திருச்சபை பாவத்தை மன்னிக்க முடியுமா?

முடியும். 

i.     இயேசு தானே பாவங்களை மன்னித்தார். அதோடு பாவங்களை மன்னித்து மனிதரை பாவத்திலிருந்து விடுவிக்கும் பணியையும் அதிகாரத்தையும் திருச்சபைக்கு வழங்கியுள்ளார்.

ii.   பாவத்தை ஏற்று, அதற்காக மனம் வருந்தி, அதனை அறிக்கயிட்டு, மன்னிப்புப்பெற முன்வரும் எவருக்கும் தனது குருத்துவப் பணியின் அதிகாரத்தால் குருவானவர் அவரின் பாவங்களை மன்னிக்க முடியும்.

iii.  குருவானவர்  பாவக்கறைகளை முழுமையாகா நீக்கியதின்விளைவாக ஒருவர் பாவத்தைக் கட்டிக்கொள்ளாத போது எத்தகைய பரிசுத்தத்தோடு இருந்தாரோஅதே பரிசுத்தமாக அவர் தூய்மையாக்கப்படுகிறார். 

iv.  இயேசு பாவங்களை மன்னிக்கும் இறைவல்லமையில் குருவானவருக்கு பங்களித்திருப்பதால் மட்டுமே இது சாத்தியமாகிறது.

உடலின் உயிர்ப்பை நம்புகிறேன்

189.        உடலின் உயிர்ப்பு என்பது என்ன?

உலகம் முடிந்த்தும் நான் எனது உடலோடு உயிர்பெற்று எழுந்து இறைவனின் தீர்ப்புக்காக அவர்முன் கொண்டுவரப்படுவேன்.

190.         இறந்தோர் உயிர்த்தெழுவர் என்று ஏன் விசுவசிக்கிறோம்.

கிறிஸ்து மரித்து உயிர்த்தார், நித்தியத்திற்கும் வாழ்கிறார்,  தனது நித்திய வாழ்வில் நமக்கும் பங்கு அளிக்கிறார்.  கிறிஸ்துவின் இந்த வாக்குறுதியின் அடிப்படையில்தான்  “இறந்தோர் உயிர்த்தெழுவர்” விசுவசிக்கிறோம்

191.         நாம் இறக்கும் போது என்ன நிகழ்கிறது?

நாம் இறக்கும் போது

i.     நமது ஆன்மா நமது உடலில் இருந்து பிரிக்கப்படுகிறது.

ii.      உடல் உருக்குலைய ஆரம்பிக்கிறது

iii.      அதே சமயம் ஆன்மா இறைவனிடம் செல்கிறது.

iv.      இறுதி நாளில் உயித்தெழப்போகும் தன் உடலுடன் இணையக் காத்திருக்கிறது.

 

 

நிலைவாழ்வை நம்புகிறேன்

192.        நிலைவாழ்வு என்றால் என்ன?

நமது நற்செயல்களால் இந்த உலகில் இறைவனுக்கேற்ற வாழ்வு வாழ்ந்த்திற்குப் பரிசாக நமது இறப்பிற்குப்பின் விண்ணகத்தில் மூவொரு இறைவனோடு அவரது மாட்சியில் நித்தியத்திற்கும் வாழும் வாழ்வே நிலைவாழ்வு ஆகும்.

193.        விண்ணக மாட்சி என்பதின் அர்த்தம் என்ன?

Ø  இறைவனை முகமுகமாய் முடிவில்லா காலத்திற்கும் பார்ப்போம்

Ø  இறைவனின் அன்பில் மகிழ்ச்சியோடு வாழ்வோம்

Ø  அன்னை மரியாளோடும் அனைத்து விண்ணக தூதர்களோடும் புனிதர்களோடும் இறைவனை போற்றி புகழ்ந்துகொண்டிருப்போம்.  

194.        விண்ணக மாட்சிபற்றி திருவிவிலியம் கூறுவது எண்ண?

1கொரி.2:9. ஆனால் மறைநூலில் எழுதியுள்ளவாறு, “தம்மிடம் அன்பு கொள்ளுகிறவர்களுக்கென்று கடவுள் ஏற்பாடு செய்தவை கண்ணுக்குப் புலப்படவில்லை; செவிக்கு எட்டவில்லை; மனித உள்ளமும் அதை அறியவில்லை. அதாவது நாம் கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாத ஒரு மகிழ்ச்சியை, பேரின்பத்தை ஏற்பாடுசெய்து நமக்காக இறைவன் ஆவலோடு காத்திருக்கிறார்.

195.        தீயோருக்கும் நிலை வாழ்வு உண்டா?

உண்டு. ஆனல் அது நரகத்தில் முடிவில்லா காலத்திற்கும் தீய ஆவிகளோடு சொல்லமுடியாத வேதனையில்.

196.          தீர்ப்பு எத்தனை வகைப்படும்? அவை யாவை?

தீர்ப்பு இரண்டு வகைப்படும். 

v  தனித் தீர்ப்பு: ஒரு மனிதன் இறந்த அந்த நொடியில் அவன் ஆன்மாவுக்கு வழங்கப்படுவது தனித் தீர்ப்பு.  தனித்தீர்ப்பு இருவகைப்படும்.

i.       உடனடியாகவோ அல்லது தகுந்த தூய்மையாக்குதலுக்குப் பிறகோ (உத்தரிக்கும் நிலையின் முடிவுக்குப் பிறகோ) விண்ணகப் பேரின்பத்தை  அடைவர். 

ii.      நரகத்தின் முடிவில்லா தண்டனையை அடைவர்.

v  பொதுத் தீர்ப்பு: இது இறுதித் தீர்ப்பு எனவும் அழைக்கப் படுகிறது. உலகின் இறுதி நாளில் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை இருக்கும்.  அப்போது கிறிஸ்து நடுவர் இருக்கையில் அமர்ந்து அளிக்கும் தீர்ப்பே பொதுத் தீர்ப்பு என அழைக்கப் படுகிறது. மத்25:31-46. [1021-1022]

v  தனித் தீர்ப்பில் ஆன்மா ஏற்கனவே கைமாறாகப் பெற்றுக்கொண்ட வெகுமதியிலோ அல்லது தண்டனையிலோ உயிர்த்த உடல் நித்தியத்திற்கும் வாழும்.

197.         விண்ணகம் என்றால் என்ன?

தூய மூவொரு கடவுளின் அன்பிலும், உறவிலும், மாட்ச்சியிலும், மற்றும் அன்னை மரியாள், வானதூதர்கள், புனிதர்கள் அனைவரோடும் நித்தியத்திற்கும் முடிவில்லா பேரின்பத்தில் வாழும் ஒரு உன்னத நிலையையே விண்ணகம் என்று அழைக்கிறோம்.

198.         உத்தரிக்கும் நிலை அல்லது தூய்மைபெறும் நிலை என்றால் என்ன?

இறந்தவர்களிடம் இன்னும் கழுவப்பட வேண்டிய, பாவ கறைகள் இருக்கக் கூடும்.  இவை விண்ணக பேரின்பத்தில் நுழைய தடயையாய் இருக்கும், இத்தகையவர்களின் ஆன்மா விண்ணக பேரின்பத்தில் நுழைய அவசியமான புனிதத் தன்மையை அடைய தூய்மைப் படுத்தும் நிலைக்கு  உட்படுத்தப் படுகிறார்கள்.  இந்த நிலையைத்தான்  “உத்தரிக்கும் நிலை” அல்லது  “தூய்மை பெறும் நிலை” என்று அழைக்கிறோம்.

199.          தூய்மை பெறும் நிலையில் உள்ள ஆன்மாக்களுக்கு நாம் உதவ முடியுமா? எவ்வாறு?

முடியும். 

Ä திருமுழுக்கால் புதுப்பிறப்படைந்த அனைவரும் கிறிஸ்துவுக்குள் ஒரே உறவில்,ஒரே உடலாய் இணைக்கப் பெற்றுள்ளோம்.

Ä இந்த மறைஉண்மையின்படி தூய்மை பெறும் நிலையில் வேதனைப் பட்டுக்கொண்டிருக்கும் ஆன்மாக்களுக்கு நாம் உதவ முடியும்.

எவ்வாறு

Ø இற்ந்தோரை நினைவுகூறல்

Ø செபித்தல்

Ø அனைத்திலும் உயர்ந்ததான திருப்பலி ஒப்புக்கொடுத்தல்

Ø பிறருக்கு தான தர்மம் செய்தல்

Ø தவ முயற்சிகளைக் கடைப்பிடித்தல்

ஆன்மாக்களுக்காக அவர்களின் மீட்ப்புக்காக இத்தகைய உதவிகளைச் தாராளமாகச் செய்வது நமது கடமையும் ஆகும்.

200.         நரகம் என்றால் என்ன?

நாம் இறைவனுக்கு எதிராகவும், தனக்கு அடுத்திருப்பவருக்கு எதிராகாவும் பாவம் செய்துவிட்டு அதற்காக வருந்தாமலும், இறைவனின் இறக்கம் மிகுந்த மன்னிப்பையும் அன்பையும் நாடாமலும், பெறாமலும் இறந்தால் அவர் ‘தன் சொந்த விருப்பத்தின்’ பேரிலேயே நித்தியத்திற்கும் கடவுளை விட்டு பிரிந்திருக்கிறார்.  இவ்வாறு இறைவனையும் விண்ணுலகவாசிகள் அனைவரையும் நித்தியத்திற்கும் பிரிந்திருக்கும் நிலைதான் நரகம் என்பது.

201.      நாம் மீட்படைவதற்கு இயேசுகிறிஸ்துவின் மீது கொண்டுள்ள நம்பிக்கை மட்டும் போதுமா?

உறுதியாக போதாது.  இறைநம்பிக்கைய்யோடு, பாவமற்ற வாழ்வும், பிறரன்பு நற்செயல்களும் அவசியம்.

202.        நமது நற்செயல்களால் மட்டும் விண்ணாரசுக்கு உரிமை கொண்டாட முடியுமா?

முடியாது.  இறைவனின் இரக்கத்தை முன்னிட்டே விண்ணரசைப் பெறமுடியும்.

203.        இறை இரக்கம் என்றால் என்ன?

நம்மை பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தி நித்திய விண்ணக வாழ்வுக்கு தகுதியுள்ளவர்களாக ஆக்க அளிக்கப்படும் இறைவனின் அருள்கொடை.  இதனை நாம் இறைவனிடமிருந்து இலவசமாகவே பெற்றுக்கொள்கிறோம்.

204.         இறை இரக்கத்தை நாம் ஏவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்?

நமது செபங்களின் மூலமாகவும் திருவருள் சாதன்ங்கள் மூலமாகவும் இறை இரக்கத்தை அல்லது இறை அருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

205.         நம்பிக்கை அறிக்கையின் முடிவில்  மற்றும் அனைத்து இறைமன்றாட்டின் முடிவிலும் வரும் “ஆமென்”என்பதன் பொருள் என்ன?

v  “ஆமென்” என்று சொல்லும் போது ஒவ்வொரு நம்பிக்கை அறிக்கையையும்  ‘உண்மை’ என்று பிரகடனப் படுத்துகிறோம்; 

v  “ஆமென்”  என்று சொல்லும் போது முழுமன சம்மதத்தோடும், மகிழ்வோடும் இறைவனை ஏற்று அறிக்கையிடுகிறோம்.

v  ஆமென் என்பது ஒரு எபிரேயச் சொல். இச்சொல் நம்பிக்கை, ஈடுபாடு, நம்பகத்தன்மை, நேர்மை,  மற்றும் நிபந்தனையற்ற கீழ்படிதல் ஆகிய சொற்களின் அர்த்தங்களை உள்ளடக்கியது.

v  ஆமென் என்று சொல்லும்போது கிரிஸ்துவின் வழியாக நாம் இறைவனை மகிமைப் படுத்துகிறோம்.

 

திருவழிபாடு

206.   திருவழிபாடு என்றால் என்ன? 

கிறிஸ்துவின் மறைபொருளை சிறப்பாக பாஸ்கா மறைபொருளைக் கொண்டாடுவதே திருவழிபாடு ஆகும்.  திருச்சபையின் அதிகாரபூர்வமான இறை வழிபாட்டு முறைகள் எனவும் கூறலாம்.

207.   திருவழிபாட்டில் செயல்படுவது யார்?

திருவழிபாட்டில் தலையும் உடலும் இணைந்த முழு கிறிஸ்துவே செயல்படுகிறார்.  இங்கு தலை என்பது கிறிஸ்துவையும் உடல் என்பது விண்ணகமற்றும் மண்ணக திருச்சபையையும் குறிக்கிறது.

208.     திருவழிபாடு எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

i.          அருங்குறிகளும், அடையாளங்களும்

ii.           தெய்வீக இசையும், பாடல்களும்

iii.           புனித சுருபங்களும், படங்களும்

209.    திருச்சபையின் வாழ்விலும், கிறிஸ்வர்களின் தனிமனித வாழ்விலும் திருவழிபாடு சிறப்பிடம் பெறுவது ஏன்?

Ø  திருவழிபாடு நம்மை மீட்பின் பாதையில் பயணிக்க வைக்கிறது.

Ø  திருவழ்பாட்டில் கிறிஸ்து நமக்கு ஆன்ம விருந்தாகிறார்,

Ø  நம்மைத் தூய்மையாக்குகிறார்,  நம்மை குணப்படுத்துகிறார்

Ø  திருப்பலியில் நம்மோடு ஒன்றாகிறார்.

210.    விண்ணக திருவழிபாட்டை கொண்டாடுவது யார்?

இறைவனின் தாய் கன்னி மரியாளோடும், திருத்தூதர்களோடும், அனைத்து புனிதர்களோடும் மரித்து விண்ணகம் சென்றுள்ள எண்ணற்ற ஆன்மாக்களோடும் இணைந்து நம் தலைமைக் குருவாம் கிறிஸ்துவே விண்ணக திருவழிபாட்டை இடைவிடாது கொன்றாடுகிறார்.

211.    திருவழிபாட்டிற்கும் தூய ஆவியாருக்கும் உள்ள தொடர்பு என்ன?

Ø  திருவழிபாடுகளில் ஆவியானவர் உடன் இருந்து புனிதப்படுத்துகிறார்.

Ø  திருவழிபாடுகளின் வழியாக இறை தந்தையை சந்த்திக்க திருஅவையைத்  தயாரிக்கிறார்.

212.    திருவழிபாட்டில் யாரெல்லாம் பங்குகொள்ளலாம்?

v  தந்தை, மகன்,  தூய ஆவியின் பெயரால் திருமுழுக்குப் பெற்ற அனைவருமே, (பொதுகுருத்துவத்தில் பங்கெடுப்பதால்)  திருவழிபாட்டு கொண்டாட்டங்களில்  பங்கெடுக்கலாம்.

v  இத்திருக்கூட்டத்தில் அருள் பொழிவு செய்யபட்டு, அர்ப்பண வாழ்வை தெரிந்துகொண்ட குருக்கள் கிறிஸ்துவின் இடத்தில் இருந்து திருவழிபாட்டு கொண்டாட்டங்களை தலைமை ஏற்று நடத்துகிறார்கள்.  [உரோ.13:6; 15:16; பிலி.2:25; எபி.1:7 ; 8:2 ]

213.    திருச்சபையின் திருவழிபாட்டு கொண்டாட்டங்களில் நாம்  பங்கெடுப்பதின் நோக்கம் என்ன?

  i.        நாம்  வாழ்வைப்பெறுவதற்கு அதையும் நிறைவாய் பெறுவதற்கும். [யோவா. 10:10

ii.        வழியும் உண்மையும் வாழ்வும் நானேஎன்று உரைத்தவரின் அனுபத்தைப் பெறுவதற்கு. யோவா,14:6 

ii.        வாழ்வில் துன்பத்தால் நிலைகுலைந்து நிற்கும்போது கிறிஸ்துவின் துணையையும் ஆறுதலையும் பாதுகப்பையும் பெறுவதற்கு 

214.    பாஸ்கா மறைபொருள் என்றால் என்ன?

கிறிஸ்துவின் பாடுகள், இறப்பு மற்றும் உயிர்ப்பின் வழியாகமடுமே நமது மீட்பு.  மேலும்இயேசுவே மனுக்குலத்தை பாவம் மற்றும் சாவின் அடிமைத் தளையிலிருந்து மீட்ட உண்மையான பாஸ்கா செம்மறிஎன்பதே பாஸ்கா மறைபொருள் ஆகும்.

215.   திருவாழிபாட்டில் ஞயிற்றுகிழமைக்கு முக்கியத்துவம் கொடுப்பதின் காரணம் என்ன?

o  கடவுளின் நாள்

o  திருப்பலி கொண்டாட்டங்களுக்கு முதன்மையான நாள் ஏனெனில் அது கிறிஸ்துவின் உயிர்ப்பு நாள்.

o  கிறிஸ்தவர்களை ஒரே குடும்பமாக உணரவைக்கும் நாள்

216.   அன்னை மரியாள் மற்றம் புனிதர்களின் நினைவு நாட்களை திருவழிபாட்டில் திருஅவை நினைவுகூறுவதின் அர்த்தம் என்ன?

அன்னை மரியாள், திருத்தூதர்கள், வேதசாட்சிகள் மற்றும் அனைத்து புனிதர்கள் என்று ஒவ்வொருவருக்கும் திருவழிபாட்டு ஆண்டில் ஒரு நாளை குறித்துவைத்து சிறப்பு செய்கிறது.  இவர்களை நம் திருவழிபாடுகளில் சிறப்பு செய்யும்போது

v விண்ணக திருவழிபாட்டில் அவர்களோடு நாமும் இணைந்துகொள்கிறோம்.

v மீட்புத் திட்டத்தை இவர்களில் நிறைவேற்றி விண்ணக மாட்சியில் அவர்களுக்கு பங்களித்தமைக்காகவும்,  இப்புனிதர்களுடைய வாழ்வை நமக்கு நம்பிக்கை அளிக்கும் உதாரணங்களாகக் கொடுத்தமைக்காகவும் கிறிஸ்துவை மகிமைப்படுத்துகிறோம்.

117.  பூமியில் தேவாலயங்கள் அமைப்பதின் நோக்கம் என்ன?

i.   மக்கள் சமூகமாக ஒன்று சேர்ந்துவந்து செபிக்க, திருவழிபாடுகளில் பங்கெடுக்க

ii.  இறைவார்த்தைக்கு செவிமடுக்க,

iv. நற்கருணைப்பேழையில் உயிரோடும் உடலோடும் நமக்காக வீற்றிருக்கும் கிறிஸ்துவோடு உறவாட.

v.  தனிமையில் செபிக்க மற்றும் இறைவனை தியானிக்க.

118,  ஆலயங்களுக்குள் தனிச் சிறப்புக்குரிய இடங்கள் யாவை?

         பலிபீடம், நற்கருணைப் பேழை, கிறிஸ்மா திருத்தைலமும் பிற எண்ணெய்களும் வைக்கப்படும் இடம், ஆயர் அல்லது இறைபணியாளர்களின் இருக்கை, வாசக மேடை, திருமுழுக்குத் தொட்டி, ஒப்புரவு அருள்சாதன இருக்கை

119.    திருச்சபை ஏன் திருப்பலியை எண்ணிலடங்காமுறை கொண்டாடி வருகிறது?

v  திருஅவையின் வாழ்வுக்கு திருவழிபாடு சுவாசக் காற்று போன்றது.

v  திருப்பலி மற்றும் இறைவார்த்தை வழியாக இறைவன் திருஅவையைப் புதுப்பித்து தனது அருட்கொடைகளால் அதனை வளப்படுத்தி வருகிறார்.

v  எனவேதான் திருச்சபை திருப்பலியை எண்ணிலடங்காமுறை கொண்டாடி வருகிறது

திருவருள் சாதனங்கள்

120.    திருவருள் சாதனம் என்றால் என்ன?

i.      ஒருவருக்கு வழங்கப்படும் , [நாம் காணக்கூடிய, அல்லது நம் புலன்களுக்கு எட்டக்கூடிய] புனிதமான, ஆற்றல்மிகு அருள் அடையாளங்கள். 

ii.       இவை கிறிஸ்துவால் ஏற்படுத்தப்பட்டு, திருச்சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

iii.       திருவருள்சாதனங்கள் வழியாக அதனைப் பெறுபவர்கள்  இறைவனின் உடனிருப்பை உணர்கிறார்கள்

iv.      மன்னிப்பு, உடல் உள்ள நலன்கள், ஆன்மீக வாழ்விற்கு ஊட்டம், வலிமை  ஆக்கியவற்றை  நமக்கு அளிக்கும் ஆற்றல் கொண்டவை

121.    திருவருள் சாதன்ங்களைப் பெறுவதற்கு நிபந்தனை உண்டா?

அதனைப் பெறுபவர் விருப்பமும் தகுதியும் தாகுந்த தயாரிப்பும் உள்ளவராக இருத்தல் வேண்டும்

122.    திருவருள் சாதன்ங்களின் ஆற்றல் எங்கிருந்து வருகிறது?

கிறிஸ்து நம் பாவங்களுக்காக சிந்திய திருஇரத்தத்தின் பேறுபலன்களிலிருந்து திருவருள் சாதன்ங்களின் ஆற்றலைப் பெறுகிறோம்.

123.    திருஅவையின் திருவருள் சாதனங்கள் எத்தனை? அவை எவ்வாறு வகைப்படுத்தப் பட்டுள்ளன?

திருவருள் சாதனங்கள் மொத்தம் ஏழு.  அவை கீழ்கண்டவாறு வகைப்படுத்தப் பட்டுள்ளன:

i.          புகுமுக அருள்சாதனங்கள்

1.     திருமுழுக்கு

2.     உறுதிப்பூசுதல்

3.     நற்கருணை

ii.          நலமளிக்கும் அருள் சாதனங்கள்

4.     ஒப்புரவு

5.     நோயில்பூசுதல்

iii.          சமூக, திருத்தூதுப்பணி அருள்சாதனங்கள்

6.     குருத்துவம்

7.     திருமணம்

124.     இந்த ஏழு திருவருள் சாதங்களுல் மூன்று நமது ஆன்மாவில்நித்தியத்திற்கும் அழியாத முத்திரைகளாகப் பதிக்கப்படுகிப்றன. அவையாவை?

   i.          திருமுழுக்கு

 ii.          உறுதிப்பூசுதல்

iii.          குருத்துவம்

இவை நித்தியத்திற்குமான முத்திரை என்பதால் வாழ்வில் ஒருமுறைதான் பெறமுடியும்.

125.    புகுமுக அருள்சாதனங்கள் என்றால் என்ன? அவற்றின் ஆற்றல்கள் யாவை?

கிறிஸ்தவ வாழ்வில் நுழைவதற்கு  மூன்று திருவருள்சாதனங்கள் ஆதாரமாக உள்ளன. இவைகளை புகுமுக அருள்சாதனங்கள் என்று அழைக்கிறோம்.  அவை

) திருமுழுக்கு :புதுவாழ்வின் நுழைவாயில்

) உறுதிப்பூசுதல்: புதுவாழ்வில் வாழும் சக்தியை அளிப்பது

) நற்கருணை:புதுவாழ்வில் மென்மேலும் வளர ஊட்டமளிப்பது.

இந்த மூன்று திருவருள் சாதனங்களுமே ஒன்றிலிருந்து மற்றொன்றை பிரித்துப் பார்க்க முடியாதவை.

126.     திருவருள் சாதன்ங்களில் சில  நித்தியத்திற்கும் அழிக்கமுடியாத முத்திரையாக அதனைப் பெறுபவரின் ஆன்மாவில் பொறிக்கப்படுகிறது. அவை யாவை?

திருமுழுக்கு, உறுதிப் பூசுதல், குருத்துவம்.

 

திருமுழுக்கு அருள்சாதனம்

127.    திருமுழுக்கு என்றால் என்ன?

     i.          திருமுழுக்கு என்பது  மூழ்கி எழுவது என்பதாகும்.  இதன் பொருள் திருமுழுக்குபெறும் ஒருவர் கிறிஸ்துவின் சாவுக்குள் மூழ்கி கிறிஸ்துவோடு புதுப்படைப்பாக வெளியே வருகிறார். 

   ii.           அனைத்து திருவருள் சாதனங்களுக்கும் அடித்தளமானது மட்டுமல்ல அவற்றைப் பெறுவதற்கு முன்நிபந்தனையான ஒன்றும்கூட.            

 iii.           இறைவனோடு நித்தியத்திற்குமான ஒரு உடன்படிக்கை இது. 

  iv.          அந்த உடன்படிக்கைக்கு சம்மதம் என்று நமக்குப் பதிலாக நம் பெற்றோரும், ஞானபெற்றோரும் கூறுகிறார்கள்.

127.    திருமுழுக்கு எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது?

குருவானவர் மூன்றுமுறை தலையில் தண்ணீர் ஊற்றிதந்தை மகன் தூய ஆவியின் பெயரால் நான் உன்னை கழுவுகிறேன்என்று கூறி திருமுழுக்கு அருள் சாதனத்தை நிறைவேற்றுகிறார்.

128.    பழைய ஏற்பாட்டில்  திருமுழுக்கு வழியாகத்தான் மீட்புஎன்பதை எத்தகைய நிகழ்வுகள் மூலம் முன்கணித்து வைக்கப்பட்டுள்ளது  (prefigured)?

Ø  நோவாவின் பெட்டகம்[எட்டு பேர் மட்டுமே தண்ணீர் வழியாக மீட்கப்பட்டனர்].

Ø  செங்கடலைக் கடத்தல் [இஸ்ரயேல் மக்கள் எகிப்திய அடிமைத்தளையிலிருந்து செங்கடல் வழியாக மீட்கப்பட்டனர்].

Ø  யோர்தான் ஆற்றைக் கடத்தல் [ஆபிரகாமின் வழிவந்தவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாட்டை (நித்திய வாழ்வு) அடைவதற்கு யோர்தான் நதியைக் கடத்தல்]  

129.     திருமுழுக்கு பெறுபவரிடமிருந்து எதிர்பார்க்கப்படுவது என்ன?

திருமுழுக்குப் பெறும் ஒவ்வொருவரும் கிறிஸ்தவ நம்பிக்கையை அறிக்கையிட வேண்டும்.  வயது வந்தோர் எனில் தாங்களே இதை அறிக்கையிடவேண்டும்.  குழந்தைகள் என்றால் பெற்றோரும் ஞானப்பெற்றோரும் இதை அறிக்கையிட வேண்டும்.  ஞானப்பெற்றோர்  திருச்சபைக்குத் தாங்கள் அறிக்கையிட்ட நம்பிக்கையில் அந்த குழந்தை வளர்வதற்கு பொறுப்புள்ளவர்களாய் இருக்கிறார்கள்.

130.    திருமுழுக்கின் பயன்கள் யாவை?

i)      பிறப்பு நிலை (ஜென்ம) பாவம் மற்றும் செயல் வழி (கர்ம) பாவங்கள் நீக்கப்படுகின்றன

ii)     கிறிஸ்துவின் சிலுவைப்பலியில் நம்மை இணைத்துக்கொள்கிறோம்.

iii)   சாவின் ஆதிக்கத்தில்  இருந்து விடுபட்டு கிறிஸ்துவோடு வாழ்வுக்குள் அடியெடுத்து வைக்கிறோம்.  

iv)   இறைவனோடு நித்தியத்திற்குமான உறவில் வாழ துவங்குகிறோம்.

v)     இறைத்தந்தை மீட்டுக்கொண்ட மகனாக, மகளாக ஆகிறோம். 

vi)   தூய ஆவியாரின் ஆலயமாகிறோம்,

vii)  திருச்சபையின் அங்கத்தினராக ஆகிறோம்,

viii)                    கிறிஸ்துவின் உடலில் அங்கமாகிறோம்,.

ix)   இறைவனின் திட்டப்படி மீட்புக்கு இது அத்தியாவசியமான ஒன்று.

131.     திருமுழுக்கு பெறும்போது என்ன நிகழ்கிறது?

திரு எண்ணையால் அபிஷேகம் செய்தல், தூய வெண்ணாடை, எரியும் மெழுகுதிரி ஆகியவற்றை பயன்படுத்துவதன் வழி மனமாற்றம், தூய்மைப்படுத்துதல், மனந்திரும்புதல் ஆகியவை நிகழ்கின்றன.

132.    யாரெல்லாம் திருமுழுக்குப் பெறலாம்?

         இதுவரை திருமுழுக்குப் பெறாத எவரும் திருமுழுக்குப் பெறலாம்.  ஒரே ஒரு முன்நிபந்தனைஇறை நம்பிக்கை”.

133.     யாரெல்லாம் திருமுழுக்கு கொடுக்கலாம்?

Ø  பொதுவாக ஆயர், குரு, திருத்தொண்டர்

Ø  எதிர்பாராத அல்லது நெருக்கடியான சூழலில்

v எந்த ஒரு கிறிஸ்தவரும்

v கிறிஸ்தவர் அல்லாதவர்கூட

134.    திருமுழுக்கின்போது நாம் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிகள் யாவை?

i.      இறைமக்களுக்குறிய சுதந்திரத்துடன் வாழ நான் பாவத்தை விட்டுவிடுகிறேன்.

ii.       பாவம் என் மீது ஆதிக்கம் செலுத்தாமலிருக்க நான் பாவத்தின் மாய கவர்ச்சிகளை விட்டுவிடுகிறேன்.

iii.       பாவத்திற்கு காரணனும்  தலைவனுமாகிய சாத்தானை விட்டுவிடுகிறேன்,

135.    நமது மீட்புக்கு திருமுழுக்கு அவசியமா?

கண்டிப்பாக அவசியம் யோவா,3:5

136.    திருமுழுக்கின்போது நமக்கு பெயர் வைப்பதின் சிறப்பு யாது?

திருமுழுக்கின்போது இறைவன் எனக்கு பெயர் வைத்து அந்த பெயரால் என்னை அழைக்கிறார். [எசா.43:1 “உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்தேன்; நீ எனக்கு உரியவன்”.] 

137.    கிறிஸ்தவர்கள் புனிதர்களின் பெயரை தங்களுக்கு வைத்துக்கொள்வதின் காரணம் என்ன?

v  நாம் முன்மாதிரியாகக் கொள்வதற்கும், நமக்காக இறைவைனிடம் பரிந்து பேசுவதற்கும். 

v  புனிதர்களில் ஒருவர் எனக்கு நண்பராக கடவுள் அருகில் இருக்கிறார் என்ற நினைவு பலத்தையும், மகிழ்ச்சியையும் தருகிறது.

உறுதிப்பூசுதல்

 

138.     உறுதிப்பூசுதல் என்றால் என்ன?

இதனை பெறுபவர் மீது தூயஆவியானவரின் கொடைகளை பொழியும்

ஒரு அருள்சாதனம்.

139.    இதன் அர்த்தம் என்ன?

கடவுளின் பிள்ளையாக வாழ சுய முடிவெடுத்து அதற்காக இறைவனின் தூய ஆவியாரை விரும்பி கேட்கும் ஒருவர் தலையின்மேல் ஆயர் தன் கரங்களை வைத்தும், கிறிஸ்மாதைலம் மூலம் அபிஷேகம் செய்தும் தூய ஆவியாரின் கனிகளை/கொடைகளை அவர்மீது பொழியச் செய்யும் நிகழ்வையே உறுதிப்பூசுதல் என்று அழைக்கிறோம்.  இவ்வாறு ஆவியானவரை பெறும் ஒருவர் இறைவனை தன் சொல்லாலும், செயலாலும்  பறைசாற்றுவதற்குறிய சக்தியைப் பெறுகிறார்.  இப்பொது அவர் திருஅவையின் ஒரு முழுமையான அங்கத்தினர் ஆகிறார்.

140.    யாரெல்லாம் உறுதிப்பூசுதல் பெறமுடியும்? இத்திருவருள் சாதனத்தை பெறுவதற்கான நிபந்தனை என்ன?

ஏற்கெனவே திருமுழுக்குப் பெற்றவர்களே உறுதிப்பூசுதல் அருள் சாதனத்தைப் பெறமுடியும்.  இந்த அருள் சாதனத்தை ஒரே ஒரு முறை மட்டுமே பெற முடியும். பாவமற்ற மற்றும் இறையருள் நிலையில் இருக்கவேண்டும் என்பதுதான் ஒரே நிபந்தனை.  

141.    உறுதிப்பூசுதலை யார் வழங்கலாம்?

v  ஆயர்

v  தவிர்க்கமுடியாத தருணங்களில் ஆயரால் நியமிக்கபடும் குருவானவர்

v  ஆபத்தான, அசாதாரண சூழலில் ஒரு குருவானவர்.

142.     திருத்தூது மரபின்படி உறுதிப்பூசுதல் எவ்வாறு வழங்கப்படுகிறது?

v  திருமுழுக்குப் பெற்றவர்கள்மீது திருத்தூதர்கள் தங்கள் கைகளை வைத்து ஆவியாரின் கொடைகளைக் கொடுத்தார்கள். இதுவே கத்தோலிக்க மரபில் உறுதிப்பூசுதலின் துவக்கமானது. 

v  சிறிது காலத்தில் தலைமேல் கைகளை வைப்பதோடு கிறிஸ்மா எண்ணையால் அபிஷேகம் செய்யும் சடங்கும் திருச்சபையால் சேர்த்துக்கொள்ளப்பட்டது. இதனால் கிறிஸ்தவன் என்ற சொல்லுக்கு  அபிஷேகம் செய்யப்பட்டவன்என்ற பொருளும் தரப்பட்டது.

v  அன்றைய காலம்தொட்டு இன்றுவரை தலையில் ஆயர் தன் கைகளை வைத்து தூய ஆவியாரின் கொடைகளை பொழிவதும் கிறிஸ்மா தைலம்பூசி அபிஷேகம் செய்வதும்  உறுதிப்பூசுதலின் அடையாளங்களாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 

143.     உறுதிப்பூசுதலின்போது என்ன நிகழ்கிறது?

i.    ஒருவர் உறுதிப்பூசுதல் பெறும்போது அவர் ஆன்மாவில்இவர் ஒரு கிறிஸ்தவர்என்ற நித்தியத்திற்கும் அழிக்க இயலாத முத்திரையிடப்படுகிறது. 

ii.    கிறிஸ்தவ வாழ்வில் நிலைத்து வாழ தேவையான பலத்தை அவர் பெறுகிறார்.

iii.    தனது வாழ்வால் மற்றும் செயல்களால் கிறிஸ்துவுக்கு சாட்சியாய் வாழத் துவங்குகிறார்.

144.     உறுதிப்பூசுதலை யாரெல்லாம் நிறைவேற்றலாம்?

v  பொதுவாக ஆயர் உறுதிபூசுதலை நிறைவேற்றுகிறார்.

v  தகுந்த காரணங்கள் இருந்தால் ஆயரால் நியமிக்கப்பட்ட குருவானவரும் உறுதிப்பூசுதலை நிறைவேற்றலாம்.

v  ஆபத்தான, அசாதாரண சூழலில் ஒரு குருவானவர்.

நற்கருணை அருள்சாதனம்

 

145.    நற்கருணை என்றால் என்ன?

நற்கருணை என்பது இயேசு கிறிஸ்துவின் உண்மையான உடலாகவும் இரத்தமாகவும் மாறிய அப்பமும் திராட்சை இரசமும் ஆகும். நற்கருணையில் ஆன்மாவோடும் தெய்வீகத்தோடும் இயேசுக்கிறிஸ்து வீற்றிருக்கிறார்.

கிறிஸ்து தம்மையே (தம் உடலையும், இரத்தத்தையும்) நமக்கு உணவாகவும் பானமாகவும் வழங்கும் எல்லையில்லா அன்பையே நற்கருணை அருள்சாதனம் என்று அழைக்கிறோம்.  இதில் கிறிஸ்து உயிரோடும் தெய்வீகத்தோடும் வாழ்கிறார்.

146.    சாதரன அப்பமும் இரசமும் எவ்வாறு இயேசு கிறிஸ்துவின் உண்மையான உடலாகவும் இரத்தமாகவும் மாறுகின்றன?

திருப்பலியின்போது குருவானவர் வசீகர வார்த்தைகளை [அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள்,  எனெனில் இது உங்கலுக்காக கையளிக்கப்படும் என் சரீரம்] சொல்லும் போது இறைவனின் ஆற்றலால் அப்பமும் இரசமும் எவ்வாறு இயேசு கிறிஸ்துவின் உண்மையான உயிருள்ள உடலாகவும் இரத்தமாகவும் மாறுகின்றன

147.    நற்கருணையின் சிறப்பு யாது?

இது புகுமுக (திருமுழுக்கு, உறுதிப்பூசுதல்) அருள்சாதனங்களை முழுமைபெறச் செய்கிறது. திருமுழுக்கின் வழியாக அரசகுருத்துவ நிலைக்கு உயர்த்தப்பட்டு உறுதிபூசுதலில் தூய ஆவியாரின் வல்லமையால்  கிறிஸ்துவுக்குள்  ஒன்றினைக்கப்பட்டபின் நற்கருணை வழியாக கிறிஸ்துவின் பாஸ்காபலியில் கிறிஸ்துவையே உணவாகவும் பாணமாகவும்  உட்கொள்வதின் வழியாக அவரோடு இணையும் பேற்றினை பெறுகிகிறோம்.  இதற்கு அடிப்படையாக அமைந்திருப்பது இயேசுவின்இறுதி இரவு உணவுஆகும்.

148.     இயேசு நற்கருணையை ஏற்படுத்தியதின் நோக்கம் என்ன?

Ø  சிலுவையில் தாம் நிகழ்த்திய பலியை (மீட்பின் திட்டத்தை) தமது இரண்டாம் வருகையின் மட்டும் என்றும் நிலைத்திருக்கச்செய்வதற்காக கிறிஸ்து நற்கருணையை ஒரு அருள்சாதனமாக ஏற்படுத்தி அதனை தம் மனையாளான திருச்சபையிடம் ஒப்படைத்தார். 1கொரி.11: 23-26

Ø  நாம் நிலைவாழ்வை (விண்ணக வாழ்வை) பெறுவதற்காக கிறிஸ்து தமது உடலை ஆன்ம உணவாகவும் தமது இரத்தத்தை ஆன்ம பானவாகவும் அளித்துள்ளார். யோவா.6:57,59.

149.    கிறிஸ்து எப்போது எவ்வாறு நற்கருணையை ஏற்படுத்தினார்?

­  தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில் (பெரிய வியாழனன்று)தம் திருத்தூதர்களோடு இறுதி இரவு உணவைக்கொண்டாடியபோது இயேசு நற்கருணையை ஏற்படுத்தினார்.

­   அப்போது இயேசு தம் கைகளில் அப்பத்தை எடுத்து அதைப்பிட்டு அவர்களுக்குக் கொடுத்துஅனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள்; இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல்”. பிறகு திராட்சை இரசம் நிறைந்த கிண்ணத்தை தம் கைகளில் எடுத்துஅனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள்;  ஏனெனில் இது புதிய நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம்.  இது பாவ மன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் எல்லாருக்காகவும் சிந்தப்படும். இதை என் நினைவாகச் செய்யுங்கள்என்று கூறி நற்கருணையை ஏற்படுத்தினார். 

150.     கிறிஸ்தவ தனி மனித வாழ்வில் நற்கருணையின் சிறப்பு யாது?

¦ நற்கருணை கிறிஸ்தவ வாழ்வின் ஆதாரமும் முழுமையும் ஆகும்

¦ விண்ணக வழிபாட்டில் (கிறிஸ்துவோடு இணைந்து)நம்மையும் பங்கு கொள்ள வைக்கிறது.

¦ நற்கருணை ஒருவரை தெய்வீக வாழ்வில் ஊன்றியிருக்கக்கூடிய  ஆற்றலைத் தருகிறது

151.     பலியிடுவது என்றால் என்ன? திருப்பலி என்றால் என்ன?139

பழைய உடன்படிக்கை சட்டத்தின்படி ஒருவர் செய்த பாவங்களுக்கு பரிகாரமாக ஒரு உயிரை (செம்மறியை) பலிகொடுத்து அவரை பாவங்களிலிருந்து மீட்பது. புதிய ஏற்பாட்டு சட்டத்தின்படி இயேசு நம்மை பாவங்களிலிருந்து மீட்க தன்னையே செம்மறியாக கல்வாரியில் பலியாக்கினார். கல்வாரி பலியை கிறிஸ்துவே ஆலய பலிபீடத்தில் உண்மையாகவே நிறைவேற்றுகிறார். இதுவே திருப்பலி ஆகும். இது நினைவு அல்ல நிகழ்வு.

152.    திருப்பலிக்கும் நற்கருணைக்கும் உள்ள தொடர்பு யாது?

திருப்பலியின் மையப்பகுதியில் இயேசு கூறிய வசீகர வார்த்தைகளைக் குருவானவர் கூறும்போது           சாதாரன அப்பமும் இரசமும் இயேசுவின் திருவுடலாகவும் திருஇரத்தமாகவும் மாறுகின்றன. அதனால்தான் திருப்பலியை நற்கருணைப்பலி எனவும் திருஅவை அழைக்கிறது.

153.     நற்கருணை பலியை நிறைவேற்றுவது யார்?

அடிப்படையில் கிறிஸ்து தாமே திருப்பலியை நிறைவேற்றுகிறார் என்பது நமது நம்பிக்கை. அதாவது கிறிஸ்து திருஅவையின் தலைவராக இருந்து குருவானவர் வழியாக திருப்பலியை நிறைவேற்றுகிறார்

154.    இயேசு உயிரோடு இருக்கும் திவ்யநற்கருணைக்கு எத்தகயை உயர்ந்த மரியாதையையும், வணக்கத்தையும் கொடுக்கவேண்டும்?

கிறிஸ்து நற்கருனையில் உண்மையிலே உயிரோடு வீற்றிருக்கிறார் என்பது நமது உறுதியான நம்பிக்கை.   எனவே திவ்யநற்கருணையை மிகுந்த வணக்கத்துக்குரிய விதத்தில் புனிதமான நற்கருணை பாத்திரத்தில் வைத்து நற்கருணை பேழையில் பாதுகாத்து நம் மீட்பரும் ஆண்டவருமான கிறிஸ்துவை ஆராதிக்க வேண்டும்.  எனவேதான் ஆலயத்தினுள் நுழைந்தவுடன் நற்கருணை பேழையின் முன் மண்டியிட்டு தலை வணங்கி ஆராதிக்கிறோம்.

155.    நற்கருணை பேழையில் நற்கருணையை வைத்து பாதுகாப்பதின் நோக்கம் என்ன?

¦ நோயுற்று படுக்கையில் இருப்போருக்கும், திருப்பலிக்கு வரமுடியாத நிலையில் இருப்போருக்கும் நற்கருணையை வழங்க ஏதுவாய் இருப்பதற்கு.

¦ உயிரோடு நமக்காக வீற்றிருக்கும் இயேசுவோடு   தனிமையில் உறவாடவும்,  அமைதியில் ஆராதிப்பதற்கும் ஏற்ற இடத்தை அளிப்பது

156.     நற்கருணையை உட்கொள்வதற்கு ஒருவர் தன்னை எவ்வாறு தகுதி உள்ளவராக ஆக்கிக்கொள்ளவேண்டும்?

v  கத்தோலிக்க கிறிஸ்தவராக இருக்க வேண்டும்.

v  சாவான பாவம் இல்லாமல் ஆன்மா தூய்மையான அருள் நிறைந்த நிலையில் இருக்க வேண்டும்.ஆன்மா தூய்மையான அருள் நிறைந்த நிலையில் இருக்க வேண்டும்.

v  பாவ நிலையில் இருந்தால் ஒப்புரவு அருள் சாதனத்தின் வழியாக தன்னை தூய்மைப்படுத்திக் கொள்ளவேண்டும்.

v  அடுத்திருப்பரோடு கோபம், பகைமை, மனவருத்தம் கொண்டிருந்தால் அவரோடு நட்புறவில் இருக்கவேண்டும்.

v  திருப்பலிக்கு முன் ஒரு மணிநேரம் எதுவும் உண்ணாமல் இருப்பதை திருஅவை பரிந்துரை செய்கிறது.  இது நற்கருணையின் தெய்வீகத்திற்கு நாம் அளிக்கும் முக்கியத்துவத்தையும் மரியாதையையும் காட்டுகிறது.

v  நம்மிடமுள்ள சிறந்த உடைகளில் ஒன்றை அணிந்து செல்லலாம், காரணம் இந்த உலகைப் படைத்து அதை ஆண்டுவரும்  பேரரசாராம் நம் கடவுளை சந்திக்கச் செல்கிறோம்.

157.     சாவான பாவத்துடன் ஒருவர் நற்கருணை உட்கொள்ளலாமா?

கூடாது. சாவான பாவத்துடன் ஒருவர் நற்கருணை உட்கொள்வது  சாவான் பாவத்தைவிட பெறிய பாவம்.[1கொரி.11:29.

158.    கிறிஸ்துவின் திருப்பாடுகளையும், திருமரணத்தையும், உயிர்ப்பையும் திருப்பலி வழியாக ஏன் நாள்தோரும் கொண்டாடாடுகிறோம்?

i)      இறைவனை மாட்சிப்படுத்தவும், அவரை ஆராதிக்கவும்

ii)     நம்மீது கொண்டிருக்கும் அளவில்லா அன்பிற்கும், இரக்கத்திற்கும், செய்துவரும் அனத்து நண்மைகளுக்கும் நன்றி கூற

iii)   நமது பாவங்களுக்க்காக மனம் வருந்தி இறைவனின் பரிவிரக்கத்தை முன்னிட்டு அவரின் மன்னிப்பைவேண்ட

iv)   இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவனிடமிருந்து நமக்குத் தேவையான அருளையும் ஆசீரையும் பெற்றுக்கொள்ள.

v)   லூக்.22:19. பின்பு அவர் அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்துஇது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்றார். எனவேதான் திருப்பலியை உலகமெங்கும் எண்ணிலடங்காமுறை கொண்டாடுகிறோம்.

159.    கத்தோலிக்கர் அல்லாதவர்கள் நற்கருணை திருவிருந்துல் பங்கெடுக்க வேண்டாம் என அறிவிப்பதின் காரணம் என்ன?

நற்கருணை நம் அனைவரையும் கிறிஸ்துவின் உடலில் இணைக்கிறது;  இருப்பினும்

Ø அதனைப் பெறுபவர் கத்தோலிக்க திருஅவை கொடுக்கும் திருமுழுக்கைப் பெற்றிருக்கவேண்டும்

Ø நற்கருணையில் கிறிஸ்து உடலோடும் உயிரோடும் இருக்கிறார் என்ற கத்தோலிக்க விசுவாசத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டவராய் இருத்தல் வேண்டும்.

Ø கத்தோலிக்கத் திருஅவையின் அங்கமாக இருக்கவேண்டும்.

Ø இல்லையெனில் நற்கருணை கிறிஸ்துவின் உயிருள்ள உடல் என்ற நமது நம்பிக்கைக்கு முரண்பாடாகும்.

160.    கிறிஸ்து தன்னையே நமக்கு உணவாக்க் கொடுப்பதின் நோக்கம் என்ன?

இவ்வுலக வாழ்விற்குப்பின் நாம் முடிவில்லா காலத்திற்கும் மூவொரு கடவுளோடு விண்ணக மாட்சியில் வாழ.

 

நலமாக்கும் அருள்சாதனங்கள்

 

161.    நலமாக்கும் அருள்சாதனங்கள் யாவை?

i)    ஒப்புரவு, ii)நோயில் பூசுதல்

162.     திருமுழுக்கின் வழியாக நாம் கடவுளின் பிள்ளைகளாக ஆகிவிட்டோமே;  அதற்குமேலும் நம்மை இறைவனோடு ஒப்புரவாக்க தனியாக ஒரு திருவருள்சாதனம் ஏன்?

திருமுழுக்கின் வழியாக அனைத்து பாவங்களிலிருந்தும் தூய்மையாக்கப்பட்டு கடவுளின் பிள்ளைகளாகிவிட்டோம் என்பது உண்மைதான்; இருப்பினும் மனித பலவீனத்தினாலும் உலகு சார்ந்த தீமைகளின் ஈர்ப்பாலும் நாம் பாவத்தைக் கட்டிக்கொள்ள வாய்ப்புகள் நிறைய உள்ளன.  அத்தகைய பாவங்களிலிருந்து நம்மை தூய்மைப் படுத்திக்கொள்ளவும் மீண்டும் இறைவனோடு நட்புறவில் வாழவுமே கிறிஸ்து ஒப்புரவு அருள்சாதனத்தை நமக்குக் கொடையாகக் கொடுத்துள்ளார்.

163.    ஒப்புறவு அருள்சாதனம் என்றால் என்ன?

­  நாம் திருமுழுக்கு பெற்றபின் கட்டிக்கொண்ட சாவான மற்றும் அற்ப பாவங்களுக்கு மன்னிப்பு பெற்று மீண்டும் இறைவனின் பிள்ளைகளாக ஆக்கும் அருள்சாதனம்.

­  பாவங்களை மன்னிப்பதோடு நம் ஆன்மாவை இறைவனின் அருளால் நிறப்ப வல்லது.

164.    இயேசு கிறிஸ்து ஒப்புறவு அருள் சாதனத்தை எப்போது நிறுவினார்?

இயேசுகிறிஸ்து உயிர்த்தபின் தம் சீடர்களுக்குத் தோன்றி அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படாஎன்றார். இவ்வாறு இயேசு கிறிஸ்து தமது விண்ணேற்றத்திற்கு முன் ஒப்புறவு அருள் சாதனத்தை நிறுவி தம் சீடர்களுக்கு பாவன்களை மன்னிக்கும் அதிகாரத்தை அளித்தார்.

165.    யார் நமது பாவங்களை மன்னிக்க முடியும்?

இறைவன் மட்டுமே பாவங்களை மன்னிக்க முடியும்.

v  கிறிஸ்து பாவங்களை மன்னித்தார் (மாற்.2:5) – அவர் கடவுளின் மகனாகவும் கடவுளாகவும் இருப்பதால்

v  குருக்கள் பாவங்களை மன்னிக்க முடியும்: இயேசுவிடம் இருந்து மன்னிக்கும் அதிகாரத்தை பெற்றிருப்பதால்,

166.    நமது பாவங்கள் எப்போது மன்னிக்கப்படுகின்றன?

   i.      ஒப்புறவு அருள்சாதனத்தின்போது நமது பாவங்கள் எதையும் மறைக்காமல் குருவிடம் அறிக்கையிட்டு இனிமேல் இத்தகைய பாவங்களை செய்யவதில்லை என்று தீர்மானம் எடுத்து இறைவனின் மன்னிப்பயும் இரக்கத்தையும் இறைஞ்சவேண்டும்.

 ii.       அதன்பின் குருவானவர்தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே நான் உன் பாவங்களைக் கழுவுகிறேன் என்று கூறும்போது நம் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

167.     நான் கடவுளிடமே என் பாவங்களை அறிக்கையிட்டு அவரிடமிருந்தே நேரடியாக எனது பாவங்களுக்கு மன்னிப்பை பெற்றுக்கொள்வேன்;  இடையில் குருக்கள் எதற்குஎன்று பலர் கூறுகிறார்களே, இது கத்தோலிக்கக் கோட்பாடுகளின்படி ஏற்புடையதா?

¦ இல்லை

¦ பகுத்தறிவுவாதிகளாக தம்மைக் காட்டிக்கொள்ளவும், தனது பாவங்களை பிறர் அறிந்தால்  நம்மைப் பற்றிய நன்மதிப்பு போய்விடும்,  என்ற எண்ணமே ஒப்புரவு அருள்சாதனம் அவசியம் இல்லை என்று கூறுவதின் அடிப்படை. 

¦ இதற்கு ஒரு சிறந்த ஒப்புவமை: வீட்டில் குப்பையை கூட்டி கம்பளத்தின் கீழ் மறைப்பது (sweep things under the rug) என்று கூறுவார்கள்.  வீடு பார்க்க சுத்தமாக இருக்கும்.  அனால் குப்பை அங்கேயேதான் இருக்கும்

¦ நான் பாவம் செய்தேன் என்பதை முதலில் ஏற்றுக்கொள்ளவேண்டும்,   பாவங்களை மன்னிக்க அதிகாரம் பெற்ற குருக்களிடம் நேருக்குநேர் அறிக்கையிட்டு, மன்னிப்பை கேட்கவேண்டும்.  அப்போதுதான் பாவமன்னிப்பு கிடைக்கும்  என்பதை இயேசு  (யோவா. 20:23) மிகத்தெளிவாகக் கூறியுள்ளார் .

168.    ஒப்புறவு அருள் அடையாளம் பெறுவோர் செய்யவேண்டியவை யாவை?

  i.     ஆன்ம சோதனை:தான் செய்து பாவங்களை  நினைவுகூர்தல்

 ii.     உண்மையாகவே மனம் வருந்துதல்

iii.     பாவமன்னிப்பு பெற்றபின் மீண்டும் அந்த பாவங்களை செய்யமாட்டேன் என தீர்மானம் செய்தல்

iv.     எந்த ஒளிவு மறைவுமில்லாமல் பாவங்களை அறிக்கையிடல்.

 v.     குருவானவர் கட்டளையிடும் பரிகாரங்களை நிறைவேற்றல்.

169.    எத்தகைய பாவங்களை அறிக்கையிட்டு பாவமன்னிப்பு கேட்கவேண்டும்?

நல்ல ஆன்மசோதனை செய்து நினைவிற்கு வருகின்ற, இதுவரை அறிக்கையிடப்படாத, சாவான பாவங்கள் அனைத்தையும் அறிக்கையிட்டு பாவ மன்னிப்பு கேட்கவேண்டும்.

170.     எப்பொழுது ஒருவர் சாவானபாவத்தை அறிக்கையிட்டு பாவமன்னிப்பை பெற கடமைப்பட்டுள்ளார்?

v  நான் செய்தது சாவான பாவம் என்று பகுத்தறியும் வயதை அடைந்தபின்

v  குறைந்தது ஆண்டுக்கு ஒரு முறையாவது

v  கண்டிப்பாக சாவான பாவத்துடன் நற்கருணைஉட்கொள்ளும் முன்

171.     நான் பாவமற்ற நிலையில் இருக்கும் போதும் ஒப்புரவு அருள்சாதனத்தைப் பெறலாமா?

பெறவேண்டியதில்லை

172.     அற்பப் பாவத்தையும் அறிக்கையிட வேண்டுமா?

தேவையில்லை என்றாலும் திருஅவை அவற்றை அறிக்கையிடுவதை பெரிதும் பரிந்துரைக்கிறது.

173.    பாவமன்னிப்பைப் பெறுவதற்கான மூன்று நிபந்தனகள் யாவை?

i.      Contrition என்னைப் படைத்து அன்பு செய்து அனைத்து நன்மைகளையும் வழ்ங்கிவரும் இறவனுக்கு எதிராக குற்றம் புரிந்துவிட்டேனே என்று உண்மையிலேயே மனம் நொந்து வேதனைப்பட வேண்டும்.அத்தோடு இறைவனை நோகச் செய்யும் இத்தகைய பாவத்தை இனிமேல் செய்வதில்லை என தீர்மானம் எடுக்க வேண்டும்.

ii.       Confession நாம் செய்த பாவங்கள் எதையும் மறைக்காமல் குருவிடம் அறிகையிட்டு இறைவனிடமிருந்து மன்னிப்பைப் பெற்றுத்தரும்படி கேட்கவேண்டும். மனத்துயர் செபத்தை சொல்ல வேண்டும்.

iii.       Satisfacation  குருவானவர் அளிக்கும் பாவ பரிகாரத்தை நிறைவேற்ற வேண்டும்.

174.     ஒப்புரவில் சொல்லத்தகும் மனத்துயர் செபம்:

என் இறைவா, நன்மை நிறைந்தவர் நீர்,

அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவர் நீரே,

என் பாவங்களால் உம்மை மனநோகச் செய்து விட்டேன்.

ஆகவே நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும், நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும் மனம் நொந்து வருந்துகிறேன்.

உமது அருள் துணையால் நான் மனம்திரும்பி இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கொண்டிருக்கிறேன்.

எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் பயனாக, இறைவா, என்மேல் இரக்கமாயிரும். ஆமென்.

175.    குருவானவர் கூறிய பரிகாரத்தை நிறைவேற்றியபின் நாம் செய்த பாவங்களுக்கான தண்டனையை முழுவதையும் செலுத்திவிட்டோமா?

இல்லை.  நமது செபங்களாலும். ஒறுத்தல்/தவ முயற்சிகளாலும், தர்மங்கள் செய்வதாலும், பிறர் அன்பு செயல்களாலும் மட்டுமே பாவ பரிகாரத்தை முழுமையாகச் செலுத்தமுடியும். இவற்றையே திருஅவை தண்டனை குறைப்பு செயல்கள் (indulgence)எனக் குறிப்பிடுகிறது

176.    ஒப்புரவு அருள்சாதனத்தின் நன்மைகள் யாவை?

v பாவமன்னிப்பை அருள்கிறது

v இறைவனின் இரக்கத்தை மீண்டும் பெற்றுத்தருகிறது

v இறைவனோடு ஆழமான நட்புறவில் இணைக்கிறது

v தாழ்ச்சியான இதயத்தைக் கொடுக்கிறது

v மனஅமைதியையும்,சலனமற்ற மனச்சான்றையும் ஆழமான  ஆன்மீக ஆறுதலையும் பெறுகிறார்கள். அவர்களுக்கு இது ஒரு ஆன்மீக உயிர்ப்பு  எனவும் கூறலாம்.

v கடவுளின் பிள்ளைகளுக்குறிய அந்தஸ்த்து, ஆசீர்வாதங்கள். நட்புறவு ஆகியவை கிடைக்கப்பெறுகிறோம்

v நமது இவ்வுலக மரணத்திற்குபின் விண்ணரசில் நுழைவது உறுதிசெய்யப்படுகிறது. 

v சாவிலிருந்து வாழ்வுக்கு இப்போதே கடந்து செல்கிறோம்.

நோயில் பூசுதல் அருள்சாதனம்

177.     நோயில் பூசுதல் என்றால் என்ன?

Ø வயது முதிர்வாலோ அல்லது ஆபத்தான வியாதியாலோ அல்லது இறக்கும் தருவாயிலோ ஒரு கிறிஸ்தவர் துன்பப்படும் போது கிறிஸ்துவின் சிறப்பான அருள்பலன்களை அவருக்கு  அளிக்கும் அருள்சாதனமே நோயில்பூசுதல்.

Ø  அவரின் இவ்வுலக வாழ்விலிருந்து நித்திய வாழ்வுக்குக் கடந்து செல்ல உதவும் ஒரு சடங்கு. 

Ø இதுவே ஒருவர் தன் வாழ்நாளில் பெறும் (ஏழு திருவருள்சாதனங்களில்) இறுதி திருவருள்சாதனமும்  ஆகும்.

178.    நோயில் பூசுதல் திருவருள் சாதனம் எவ்வாறு நிகழ்த்தப்படுகிறது?

இரண்டாம் வத்திகான் சங்க அறிவுறுத்தலின்படிஒருவர் நோயுற்று மரிக்கும் தருவாயில் இருக்கும்போது அவரின் நெற்றியிலும் கைகளிலும் அர்ச்சிக்கப்பட்ட ஆலிவ் எண்ணையைத் தடவி ஒருமுறை இவ்வாறு கூறப்படுகிறது:  இப்புனித பூசுதலினாலும், தம் அன்புமிகுந்த இரக்கத்தாலும்,  ஆண்டவர் பரிசுத்த ஆவியின் அருளைப் பொழிந்து, உமக்கு துணை புரிவாராக…. இவ்வாறு உம் பாவங்களைப்போக்கி உமக்கு நலம் அளித்து தயவாய் உம்மைத் தேற்றுவாராக’.

179.     யார் நோயில் பூசுதல் அருள்சாதனத்தை பெற முடியும்?

i.          அவர் கத்தோலிக்க திருமுழுக்கைப் பெற்ற கிறிஸ்தவராக இருத்தல் வேண்டும்.

ii.          கடுமையான நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கும் போது;

iii.         மரண ஆபத்தில் இருக்கத் துவங்கும்போதே இத் திருவருள்சாதனத்தைப் பெறும் சரியான நேரம்.

iv.         ஒருவர் ஆபத்தான அறுவைசிகிச்சைக்குமுன்னும் இந்த திருவருள்சாதனத்தைக் கொடுக்கலாம்

180.     நோயில் பூசுதல் திருவருள் சாதனம் எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது

v  மற்ற திருவருள் சாதனங்களைப் போலவே நோயில் பூசுதலும் ஒரு திருவழிபாடாகவும் சமூக நிகழ்வாகவும் நிறைவேற்றப்படுகிறது.

v  இதனை வீட்டிலோ, மருத்துவமனையிலோ அல்லது ஆலயத்திலோ நிறைவேற்றலாம்.

v  தனிப்பட்ட ஒருவருக்காகவோ, நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழுவுக்கோ நிறைவேற்றலாம்.

v  நற்கருணை வழிபாட்டோடு நடத்துவது சிறப்பாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும்.

v  அவசியமிருப்பின் இந்நிகழ்வுக்குமுன் நோயுற்றவர் தகுந்த தயாரிப்போடு ஒப்புரவு அருள்சாதனத்தையும் நிகழ்வுக்குப்பின் திவ்யநற்கருணையும் பெறலாம். 

v  இரண்டாம் வத்திகான் சங்க அறிவுறுத்தலின்படிஒருவர் நோயுற்று மரிக்கும் தருவாயில் இருக்கும்போது அவரின் நெற்றியிலும் கைகளிலும் அர்ச்சிக்கப்பட்ட ஆலிவ் எண்ணையைத் தடவி ஒருமுறை இவ்வாறு கூறப்படுகிறது:  இப்புனித பூசுதலினாலும், தம் அன்புமிகுந்த இரக்கத்தாலும்,  ஆண்டவர் பரிசுத்த ஆவியின் அருளைப் பொழிந்து, உமக்கு துணை புரிவாராக…. இவ்வாறு உம் பாவங்களைப்போக்கி உமக்கு நலம் அளித்து தயவாய் உம்மைத் தேற்றுவாராக’. இவ்வாறாக நோயில் பூசுதல் திருவருள் சாதனம் நிகழ்த்தப்படுகிறது.

181.    நோயில் பூசுதல் திருவருள்சாதானத்தை யாரெல்லாம் நிறைவேற்றலாம்?

குருக்கள், ஆயர்கள்,

மட்டுமே நிறைவேற்ற முடியும். இத்திருவருள் சாதனத்தின் நன்மைகளையும் பலன்களையும் வேதியர் இறைமக்களுக்கு தெளிவாக விளக்கவேண்டும். 

182.     நோயில் பூசுதலின் இறுதியில் நற்கருணை வழங்கப்படுவதின் அர்த்தமும் பலனும் யாது?

v  இதனை திருப்பயண உணவு என்றும் கருதலாம். 

v  நாம் பயணம் மேற்கொள்ளும் போது நாம் சென்றடைய வேண்டிய இடம் மட்டும் நமக்குத்தேவையான உணவு தண்ணீரை நம்முடன் எடுத்துச் செல்கிறோம். 

v  அதேபோல் நாம் இவ்வுலகவாழ்வை நீத்து நித்தியத்திற்கும் இறைதந்தையிடம் செல்வதை திருப்பயணம் என்று கருதுகிறோம். இந்த திருப்பயணத்திற்கான சக்தியை தரவல்ல உணவே (‘viaticum = provision for a journey’) நோயில்பூசுதலின்போது ஒருவருக்கு வழங்கப்படும் திவ்ய நற்கருணை என்பது நமது நம்பிக்கை.    

183.     நோயில் பூசுதலினால் ஒருவர் அடையும் ஆன்ம சரீர நன்மைகள் யாவை?

Ø  தூய ஆவியாரின் கொடைகளை பெறுவது முதன்மையான சிறப்பு.

Ø  தீய சக்திகளின் சோதனைகளை மேற்கொள்ள துணிவையும் வலிமையையும் தருகிறது.

Ø  மரணத்திற்குமுன் ஏற்படும் வியாதி துன்பம் பலவீனம் மரணபயம் இவற்றை தாங்கிக்கொள்ளும் வலிமையைத் தருகிறது.

Ø  ஆன்மாவை தூய்மைப்படுத்துகிறது

Ø  கிறிஸ்துவின் மீட்புப்பணியில்/பாடுகளில் பங்கு பெறச்செய்கிறது.

Ø  விண்ணகத் தந்தையின் இல்லத்தை நோக்கிய  பயணத்திற்கு அவரை தயார் செய்கிறது.

Ø  ஒப்புரவு அருட்சாதனத்தின் வழியாக தனது பாவங்களுக்கு மன்னிப்பு பெறாதிருந்தால் நோயில்பூசுதல் அவருக்கு பாவ மன்னிப்பை பெற்றுத்தருகிறது.

Ø  திருமுழுக்கு கிறிஸ்தவ வாழ்வின் நுழைவாகவும் நோயில் பூசுதல் அதன் நிறைவாகவும் செயல் படுகிறது.

சமூகபணி/அர்ப்பண வாழ்வின் அருள்சாதனங்கள்

184.     திருஅவையின் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பும் அருள்சாதனங்கள் யாவை?

i)     குருத்துவம் / அர்ப்பணவாழ்வு /  திருத்தூது பணிகளின் - அருள்சாதனம்

ii)   திருமண அருள்சாதனம்.

இவை இரண்டுமே  கடவுளின் பணிக்காகபிரத்தியேகமாக (exclusively) ஏற்படுத்தப்பட்ட அருள் சாதனங்கள்.

185.     இந்த இரு திருவருள் சாதனங்களுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

Ø  இவ்விரண்டுமே பிறரின் நன்மைக்காக ஏற்படுத்தப்பட்டவை - உதாரணமாக

            i.     குருத்துவம்: கிறிஸ்துவ மக்களுக்கு திருப்பலி நிறைவேற்ற,  அருள்சாதனங்களை வழங்க. எந்த ஒரு குருவும் தனது வாழ்வுக்காக குருப்பட்டம் பெறுவதில்லை.

           ii.     திருமணம்: திருஅவைக்கு தொடர்ந்து இறைவன் கொடுக்கும் மக்களைப் பெற்றெடுத்து அவர்களை நல்ல கிறிஸ்தவர்களாக உருவாக்குதல்

Ø இவ்விரு அருள்சாதனங்களுமே இறைமக்களுக்கு பணிபுரிவதற்கும், திருஅவையின் அங்கத்தினர்களை அல்லது கடவுளின் மக்களைக் கட்டி எழுப்புவதற்கும் ஏற்படுத்தப்பட்டவை.

Ø இவ்விரு அருள்சாதனங்களுமே கடவுளின் அன்பை இந்த உலகிற்கு கொண்டுவரும் வாய்க்கால்கள் ஆகும்.  தொநூ. 12:2

Ø குருப்பட்டம் மீட்பின் ஒரு கருவிகுருப்பட்டம் வழங்கப்படுவது தனி ஒரு மனிதன் வாழ அல்ல மாறாக ஒட்டுமொத்த திருஅவையின் வாழ்விற்காகபுனித தாமஸ் அக்வினாஸ்

குருத்துவ அருள்சாதனம்

186.    குருத்துவம் எத்தனை வகப்படும்? அவற்றிற்குள்ள வேறுபாடு யாது?

v குருத்துவம் இரு வகைப்படும். 1. பொதுகுருத்துவம் 2. பணிக்குருத்துவம்

¦பொதுகுருத்துவம்: கிறிஸ்து நம் குருவும், ஆசிரியரும், மீட்பரும் ஆவார்.  ஒவ்வொரு கிறிஸ்தவளும், கிறிஸ்தவனும் கடவுளின் மகள், மகன்.  எனவே  நாம் நமது வாழ்வால் கிறிஸ்துவை இவ்வுலகில் பிரதிபலிக்கிறோம் /கிறிஸ்துவாக வாழ்கிறோம்.  இவ்வாறு திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவருமே இயேசுவின் குருத்துவத்தில் பங்குபெறுகிறோம். இதனையே பொது குருத்துவம் என அழைக்கிறோம்.

¦ பணிக்குருத்துவம்: பொதுக்குருத்துவத்தில் பங்குபெறும் நம்மில் சிலரை  கிறிஸ்து அழைத்து               

 i)‘போதித்தல்’ (munus docendi),

ii)திருப்பலி போன்ற திருவழிபாடுகளை நிறைவேற்றல்,

iii)விசுவாசிகளுக்கு திருவருள்சாதனக்களை வழங்குதல்(munus liturgicum)

iv)மேய்ப்பர்களாக ஆளும் ஆற்றல், அதிகாரம் (munus regendi)

ஆகிய பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படைத்து விசுவாசிகளுக்கு உதவும்படி பணித்திருக்கிறார்.

இருப்பினும் இன்றைய சொல்வழக்கில் பணிக் குருத்துவத்தையே குருத்துவம் என அழைக்கிறோம். இங்கு நாம் தெரிந்துகொள்ளப்போவது பணிக்குருத்துவத்தைப் பற்றியே.

 

187.    குருத்துவம் என்றால் என்ன?

கிறிஸ்து தனது திருத்தூதர்களிடம் ஒப்படைத்த மீட்புத் திட்டத்திற்கான  பணிகள் உலகம் முடியும் மட்டும் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். இதனையே திருத்தூதுப் பணி(apostolic ministry) என்றுஅழைக்கிறோம்

இப்பணிக்குத் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், தகுந்த தயாரிப்புகளுக்குப்பின் அப்பணிக்கான அங்கீகாரத்தையும் அதிகாரத்தையும் தூய ஆவியின் கொடையாக பெறும் அருள் அடையாளமே குருத்துவம் ஆகும்.

 

188.    அர்ப்பணவாழ்விற்கு திருநிலைப்படுத்தும்போது / குருத்துவ அருள்சாதனத்தைப் பெறும்போது என்ன நிகழ்கிறது?

Ä  ஒருவர் குருப்பட்ட திருவருள் சாதனத்தைப் பெறும்போது  புனித அதிகாரமான’ (sacred authority)  தூய ஆவியாரின் கொடையை ஆயர் வழியாக கிறிஸ்துவே அவருக்கு வழங்குகிறார்.

Ä  தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள, பொதுநிலையினருக்கு ஆன்மீகப் பணியாற்ற வரையறுக்கப்பட்ட (a definite power and a mission)  அதிகாரத்தையும், ஆற்றலையும் (உம். அப்பரசத்தை கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாற்றுதல், பாவங்களை மன்னித்தல்) பெறுகிறார்.

189.     குருத்துவத்தின் படிநிலை (degrees of the sacrament) யாது?

ஆயர் (episcopate) → குருவானவர் (presbyterate) → திருத்தொண்டர் (diaconate)

190.      குருத்துவ திருநிலைப்பாட்டின்போது என்ன நிகழ்கிறது?

குருத்துவ திருநிலைப்பாட்டின் போது ஆயர் குருவாக ஆவதற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள்மீது இறைவனின் அருளையும், ஆற்றலையும் இறங்கச்செய்கிறார். இதன்மூலம் அவர் ஆன்மாமீது நித்தியத்திற்கும் அழிக்க இயலாத குருவாக திருநிலைபடுத்தப்பட்டவர் (குருவாக அபிஷேகம் செய்யப்பட்டவர்)” என்ற முத்திரை பதிக்கப்படுகிறது.

191.     யாரெல்லாம் குருத்துவ அருள்சாதனத்தைப் பெற முடியும்?

திருஅவையால் திருத்தொண்டராகவோ, குருவாகவோ,  ஆயராகவோ திருநிலைப்படுத்த அழைக்கப்படும் திருமுழுக்குப் பெற்ற எந்த ஒரு ஆண் கத்தோலிக்க கிறிஸ்தவரும், முறையான தயாரிப்புக்குப் பின் இந்த திருவருள்சாதனத்தைப் பெற முடியும்.

திருமண திருவருள்சாதனம்

108.   திருமண உடன்படிக்கை”,   திருமண அருள்சாதனம்என்றால் என்ன?

¦  ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தங்கள் வாழ்நாள் முழுவதும்

¦  எந்த ஒரு சூழலிலும், எந்த ஒரு காரணத்திற்காகவும் இணைபிரியாது

¦  ஒருவர் மற்றவருக்காக வாழ்ந்து

¦  இறைவன் அருளும் மக்களைப் பெற்றெடுத்து

¦  அவர்களை நல்வழியில் பேணி வளர்ப்போம்

என்று தங்களுக்குள் ஒரு மண ஒப்பந்தத்தை  ஏற்படுத்திக்கொள்வதே  திருமண உடன்படிக்கைஆகும். 

v  திருமுழுக்குப் பெற்ற ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படுத்தப்படும்  இந்த திருமண (பந்தத்தை) உடன்படிக்கையை  கிறிஸ்து புனிதம் மிக்க  திருவருள்சாதனமாகஉயர்த்துகிறார்.

192.    திருமண அருள்சாதனத்தால் இணைக்கப்பட்ட கணவன் மனைவியை இந்த உலக சட்டத்தாலோ சக்தியாலோ பிரிக்க இயலுமா?

இயலாது. திருமணம் நித்தியத்திற்குமான ஒரு ஒப்பந்தம்.

கிறிஸ்துவில் வாழ்வு

193.    கிறிஸ்துவில் வாழ்வது நமது கடமை. ஏன்?        

i.     நாம் இறைவனின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டுள்ளோம்.

ii.      நாம் நமக்கு உரியவர்கள் அல்ல. கிறிஸ்து நம்மை விலை கொடுத்து மீட்டுள்ளார் (கொரி. 6:19-20)

iii.      கிறிஸ்துவை தலையாகக் கொண்ட உடல் உறுப்புகள் நாம்.

iv.     கிறிஸ்து நம்மை அலகையின் ஆதிக்கத்திலிருந்து மீட்டு இறையாட்சியின் மாட்சிக்கு தகுதியுள்ளவர்களாக ஆக்கினார் (கொலோ. 1:13; உரோ. 13:12)

இவை அனைத்துமே நமக்கு தெளிவுபடுத்துவது  நாம் கிறிஸ்துவில் வாழவேண்டும்என்பதே.

194.    கிறிஸ்துவில் வாழ்வுஎன்பதன் பொருள் என்ன?

  கிறிஸ்துவில் வாழ்வுஎன்பதின் விளக்கத்தை ஒரு குறிப்பிட்ட பொருளால் விளக்குவது இயலாத காரியம். மாறாக புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள பல கிறிஸ்துவின் விழுமியங்களின் தொகுப்பாகவே இதனை புரிந்துகொள்ள முடியும்.

[யோவா. 1:12; 1 யோவா. 3:1;  2 பேது. 1:4;  பிலி. 1:27;  யோவா.8:29;  மத். 6:6;  மத். 5:48; உரோ. 6:11;  கொலோ. 2:12; யோவா 15:5;  எபே. 5:1-2; பிலி. 2:5.; யோவ 13:12-16;  2 கொரி. 6:11;  1 கொரி. 1:2;  1 கொரி. 6:19;  கலா. 4:6;  கலா.5:22, 25;  எபே. 4:23;  எபே. 5:8, 9;  மத். 7:13;  இச. 30: 15-20;  உரோ. 6:4;  யோவா. 14:6;  பிலி. 1:21].

மேலே கொடுக்கப்பட்டுள்ள விவிலிய குறிப்புகளிலிருந்துகிறிஸ்துவில் வாழ்வுஎன்பதன் பொருளை தெரிந்துகொள்ள முடியும். 

சுருக்கமாக அவை

v  நம் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டுதல். அவரைப் பின்பற்றி அவரது வழியில் நட்த்தல். அவரது கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் கடைப்பிடித்தல்.

v  கடவுளின் பிள்ளைகள் என்ற உறவில் வாழ்தல்.

v  தீய நாட்டத்தால் சீரழிந்துள்ள உலகைவிட்டு விலகியோடி இறைத்தன்மையில் பங்கு பெறுதல்.

v  கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளுதல்.

v  நற்செய்தியில் கொண்டுள்ள நம்பிக்கைக்கையில் ஒரே உள்ளத்தோடு நிலைத்திருத்தல்

v  கடவுளுக்கு உகந்தவற்றையே எப்போதும் செய்வது.

v  தொடர்ந்து செபிப்பது

v  பாவ வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இறந்தவர்களாய் வாழ்தல்

v  கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ்தல் 

v  கிறிஸ்து நம்மிடம் அன்புகூர்ந்தது போல, நாமும் நமக்கு அடுத்திருப்பவரோடு அன்பு கொண்டு வாழ்தல்.

v  கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையிலேயே (தாழ்ச்சி, கீழ்படிதல்) நாமும் வாழ்தல்

v  இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத் தூயோராக்கப்பட்ட நிலையில் வாழ்வது.

v  நம் உடல்  தூய ஆவி தங்கும் கோவில் என்று உணர்ந்து அதை மாசு படுத்தாமல் வாழ்தல்.

v  தூய ஆவியாரின் கனிகளான, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, ஆகியவற்றில் நிலைத்திருத்தல்

v  தூய ஆவியார் காட்டும் நெறியிலேயே வாழ்வது.

v  உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு; அவரது குரலுக்குச் செவிகொடு; அவரையே பற்றிக் கொள். ஏனெனில், அவரே உனது வாழ்வு; அவரே உன் நீடிய வாழ்வு. [1691]

நாம் மேற்கூறிய மதிப்பீடுகளின்படி வாழ்வதேகிறிஸ்துவில் வாழ்வுஎன்பதன் பொருள்.

195.     கிறிஸ்துவில் வாழ் நமக்கு அடிப்படையாகத் தேவைபடுவது யாது?

இறை நம்பிக்கை, திருவருள் சாதன்ங்கள்.

196.     பேறுபெற்றவர்கள் என திருவிவிலியம் (மத்.5:3-11)சுட்டிக்காட்டுவது யாரையெல்லாம்?

i)ஏழையரின் உள்ளத்தோர்; ii) துயருறுவோர்; iii) கனிவுடையோர்; iv) நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர்; ; v) இரக்கமுடையோர்; ; vi) தூய்மையான உள்ளத்தோர்; vii)அமைதி ஏற்படுத்துவோர்; viii) நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர்; xi) இயேசுக்கிறிஸ்துவின் பொருட்டு இகழப்பட்டு, துன்புறுத்தப்படுவோர்

197.    மலைபொழிவின் பேறுபெற்றோர் பகுதியில் காணப்படும் படிப்பினைகளுக்கும் கிறிஸ்துவில் வாழ்வதற்கும் உள்ள தொடர்பு யாது?

இறைமக்களிடம் இருக்கவேண்டிய  மனநிலையையும் மற்றும் செயல்பாடுகளையும் மலைப்பொழிவு தெளிவுபடுத்துகிறது. அதாவது உண்மையான கிறிஸ்தவ வாழ்வின் கூறுகளை முன்னிலைப்படுத்துகின்றன அல்லது கோடிட்டு காட்டுகின்றன.

198.     சுதந்திரம் என்றால் என்ன?

தன் சுய விருப்பம்/ வெறுப்பின்படி செயலாற்றும் ஆற்றலே சுதந்திரம் ஆகும்.

199.     இந்த ஆற்றலை யார் நமக்குக் கொடுத்தது?

இறைவனே இந்த ஆற்றலை நமக்குக் கொடுத்துள்ளார். 

200.    சுதந்திரம் எதற்க்காகக் கொடுக்கப்பட்டது

இறைவன் மனிதனை மதிப்பும் மாண்பும் உள்ளவனாக படைக்க விரும்பினார்.  எனவே

¦ நன்மை தீமைகளை பகுத்தறிந்து முழு விருப்பத்தோடு நன்மையை தெரிவு செய்யவும்

¦ அதன் வழி அனைத்து நன்மைகளின் ஊற்றாகிய இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றவும்,

¦ தன் சுய விருப்பத்தால் அவரை நாடிச் செல்லவுமே இந்த (சுதந்திரத்தை)ஆற்றலை இறைவன் மனிதனுக்குக் கொடுத்துள்ளார்

201.     சுதந்திரத்தின் நன்மைகள்/தீமைகள் யாவை?

¦ மனிதன் தன் வாழ்வை சுயமாக வடிவமைக்கும் ஆற்றலைப் பெறுகிறான்.

¦ மனித பண்புகளில் (உண்மையிலும், நன்மையிலும்) வளரவும், நிறைவு பெறவும் தேவையான சக்தியை அளிக்கிறது.

¦ நற்செய்தி பேறுகளையும், அதன் வழியாக இறைவனை சென்றடையவும் உறுதுணையாக உள்ளது. 

¦ இந்த சுதந்திரத்தை தவறான வழிகளில் பயன்படுத்தும் தருணங்களில் மனிதன் பாவத்தில் விழுந்து இறைவனை விட்டு அகன்று செல்கிறான். 

202.        தான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் மனிதன் பொறுப்பாளி ஆகின்றானா?

சுய நினைவோடு,சுயவிருப்பத்தோடு தன்னிச்சையாக செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் மனிதன் பொறுப்பாளி ஆகிறான். 

203.        ஒருவன் தன் சுயவிருப்பப்படி முடிவெடுக்க, செயலாற்ற (அது தீமையான ஒன்று என்றாலும்) சுதந்திரம் உள்ளதா?

சுதந்திரம் என்பது மனித மாண்பின் ஒரு அங்கம். எனவே சுதந்திரம் என்பது ஒருவரது அடிப்படை உரிமை.

204.         ஒருவரின் சுதந்திரத்திற்கு எல்லை இருக்கிறதா?

ஆம் இருக்கிறது.  அடுத்தவரின் சுதந்திரத்தை பாதிக்காதவரைதான் ஒருவருக்கு சுதந்திரம் உள்ளது. உதாரணமாக: மத நம்பிக்கை, நல்லொழுக்கம்.

205.         ஒருவரின் சொல்லும் செயலும் மற்றவரின் சுதந்திரத்தை பாதிக்கும் போது அதனை வரைமுறை படுத்துவது யாருடைய கடமை?

மக்களின் அடிப்படை உரிமைகளையும், சுதந்திரத்தையும் (உம். மத சுதந்திரம், கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம, எழுத்து சுதந்திரம்)கட்டிக்காப்பது ஒரு அரசின் தலையாகிய கடமைகளில் ஒன்று.     

 

206.         சுதந்திரத்தில் தீமைவிளைவிக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளனவா?

ஆம்.

v  தான் நினைத்த எதைவேண்டுமானாலும் பேசலாம்,  செய்யலாம் என்பது சுதந்திரத்தின் பொருள் அல்ல.

v  பொருளாதாரம், சமூகம், அரசியல், கலாச்சாரம் போன்ற துறைகளில் வலிமை மிக்கவர்கள் வலிமையற்றவர்களின் உரிமைகளை பறிப்பது சுதந்திரத்தில் உள்ள தீமைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

v  தனி மனித சுதந்திரத்தை தவறாக கையாளுதல் தனக்கும், மற்றவருக்கும் தீங்கை விளைவித்து  இறுதியில் இறைவனுக்கு எதிரானதாக (பாவமாக) அமைகிறது.

207.          தான் செய்வது சரி அல்லது தவறு என்று ஒரு மனிதனால் பகுத்துணர இயலுமா?

மனிதனிடம் சிந்திக்கும் ஆற்றலும் மனசாட்ச்சியும் உள்ளது.  இதனால் அவனால் தான் செய்வது சரி அல்லது தவறு என்று தெளிவாக பகுத்து உணர முடியும்.

208.        நோக்கம், செயல் இரண்டுக்கும் உள்ள தொடர்பு யாது?

v  ஏழைகளுக்கு உதவுவதற்காக வங்கியை கொள்ளை அடிப்பது சரியா தவறா? இங்கு நோக்கம் நல்லது ஆனால் அதற்கு எடுத்துக்கொண்ட வழி தீயது.

v  ஒருவன் வயதான மூதாட்டியை பத்திரமாக வீட்டுக்குச் செல்ல உதவுகிறான். அனால் அவன் நோக்கம் அவர் வீட்டை கொள்ளையிட அவ்வீட்டைப்பற்றி அறிந்துகொள்வது.  இங்கு செயல் நல்லது; நோக்கம் தீயது.

v  நோக்கமும் செயலும் ஒன்றை ஒன்று பிரித்துப் பார்க்க முடியாது. எனவே  இரண்டுமே நன்மையை அடிப்படையாகக்கொண்டிருக்கவேண்டும். இந்த இரண்டில் ஒன்று(அது எதுவாயினும்) தீயதாயிருந்தாலும் அது முற்றிலும் தீயதே.

209.       வேட்கை/ஆர்வம்/ தாகம்/ இலச்சியம்  (Passion) என்றால் என்ன?

v  வேட்கை மனித உணர்வுகளைக் குறிக்கிறது. 

v  ஒரு செயலை பகுத்துணர்ந்து நன்மையானவற்றைச் செய்யவும் தீமையானவற்றை செய்யாமல் விட்டுவிடவும் ஒருவரைத் தூண்டவல்லது.

v  இது அன்பை அடிப்படையாகக்கொண்டது. 

v  இது தன்னிச்சையானது;  நமது உள்ளத்தின் ஆழத்திலிருந்ந்து தன்னிலே ஊற்றெடுத்து வெளிப்படுபவது.

210.         இயேசுகிறிஸ்துவின் இலட்சியம் எதுவாய் இருந்தது?

தமது சிலுவைப் பாடுகள் மரணம் வழியாக உலக மாந்ந்தர் அனைவரின் பாவங்களை போக்கி அவர்களை தந்தையோடு நித்தியத்திற்கும் வான்வீட்டில் வாழச்செய்வதே இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்ததின் இலட்சியமாக இருந்தது.

211.         மனச்சாட்சி என்றால் என்ன?

Ø மனச்சாட்சி என்பது நம் ஆன்மாவின் குரல்

Ø எப்போதும் அன்பை வெளிப்படுத்தவும், நன்மைகளைச் செய்யவும் தீமைகளை விலக்கவும் தூண்ட வல்லது;

Ø இதன் வழியாகத்தான் இறைவன் நம்மோடு பேசுகிறார். தன்னை வெளிப்படுத்துகிறார்.

Ø ஒரு கிறிஸ்தவர் “இது எனது மனச்சாட்சிக்கு எதிரானது” என்று கூறும் போது  “இறைவன் பார்வையில் இது தவறு” என்று பொருள்படும்.

212.         தூய மனச்சாட்சி எவ்வாறு உருவாகிறது?

v  இறைநம்பிக்கையினால்

v  நற்செயல்கள் அல்லது இரக்கச்செயல்களால்

v  தவறான பாதையைத் தவிர்த்து நல்லொழுக்கப் பாதையில் வாழும்போது;

v  இறைவார்த்தையின்படி  வாழும்போது.

v  இறைவேண்டலில் நிலைத்திருக்கும்போது.

213.         ஒருவன் ஒழுக்கத்தில் தவறுவதற்கான காரணிகள் யாவை?

v  கிறிஸ்துவையும் அவரது நற்செய்தியையும் அறியாமை

v  மற்றவரின் துர்மாதிரிகை

v  தீய நாட்டங்களுக்கு அடிமை அடிமைப்பட்டிருத்தல்

v  மனச்சாட்சியின் சுதந்திரத்தை பற்றி தவறான புரிதல்

v  திருஅவையின் அதிகாரத்தையும் போதனையையும் நிராகரித்தல்

v  மனமாற்றம் மற்றும் இரக்கச் செயல்களில் ஆர்வமின்மை

214.         நற்பண்புகள் என்றால் என்ன? அவற்றின் சிறப்புகள் என்ன?

ஒருவருள் இருக்கும் உள்ளார்ந்த மனநிலை, நேர்மறையான பழக்க வழக்கங்கள், நன்மை செய்யவதில் உள்ள வேட்கை, இவற்றை உள்ளடக்கியதே நற்பண்பு எனப்படும். 

மேலும் எதுவெல்லாம் உண்மையானதோ, மதிப்புக்குரியதோ, மரியாதைக்குரியதோ, நீதியானதோ, தூய்மையானதோ, அழகுள்ளதோ, கருணை நிறைந்ததோ, சிறப்பானதோ, புகழப்பட தகுதியுள்ளதோ அத்தகைய பண்புகளை உள்ளடக்கியதே நற்பண்பு.

ஒருவர் நற்பண்புகளைக் கொண்டிருக்கும்போது அவரை நிறைவுள்ளவர் என்று கருதுகிறோம்.  கிறிஸ்துவின் விருப்பமும் அதுவே.

இத்தகைய நற்பண்புகள் நமது வாழ்வை கடவுளை நோக்கி இட்டுச்செல்கின்றன. 

215.        எவ்வாறு நமது நடத்தையை நல்லதாக உருவாக்க முடியும்?

i)    இறைவனின் துணையோடு நற்பண்புகளை நமக்குள் வளர்த்து அவற்றை கடைப்பிடிப்பதன் வழியாக.

ii)  நற்பண்புகளைக் கடைப்பிடிப்பதில் உறுதியான மனநிலையைக் கொண்டிருப்பதோடு, தீயவேட்கைகளுக்கு அடிபணியாமல் இருத்தலின் வழியாக.

iii) நமது அறிவாற்றல் மற்றும் மனநிலையை நன்மைத்தனத்தில் தொடர்ந்து இருக்கச் செய்தல் வழியாக.

216.         மனித நற்பண்புகளை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்? அவற்றை முக்கியத்துவத்தின் அடிப்படையில் பட்டியலிடு?

வகைகள்: 1. முதன்மையான நற்பண்புகள் 2. அடிப்படையான நற்பண்புகள்

v முதன்மையான நற்பண்புகள்: மதிநுட்பம்/ அறிவுக் கூர்மை, நீதி, மனோபலம், தன்னடக்கம்

v அடிப்படையான நற்பண்புகள்: உறுதியான மனப்பான்மை , நல்ல பழக்கவழக்கங்கள்,  விருப்பங்களையும் , செயல்களையும் நெறிப்படுத்தும் மன உறுதி, அறிவு மற்றும் இறைநம்பிக்கையின் அடிப்படையில் வாழ்தல்.

217.         நற்பண்புகளை எவ்வாறு நாம் பெறமுடியும்?

மறைக்கல்வியில் கற்றவற்றை தீர்மானமாக கடைப்பிடித்தல், இயேசுகிறிஸ்து போதித்த நற்செயல்களில் உறுதியாக நிலைத்திருத்தல்.

218.        நற்பண்புகளில் வாழ நாம் செய்யவேண்டியவை யாவை?

முன்மதி, நீதி, மன உறுதி, சுயகட்டுப்பாடு ஆகிய நான்கு அடிப்படை குணங்களை கொண்டிருக்க வேண்டும். கல்வி, உறுதியான நிலைப்பாடு, தளாராது முயற்ச்சித்தல் ஆகியவை நற்பண்புகளில் வாழ பெரிதும் உதவுபவை. அதேசமையம் பாவத்தால் சீர்கெட்டுப்போன ஒருவர் நல்லொழுக்கத்தை கடைப்பிடிப்பது அத்துனை எளிதல்ல.  அருட்சாதனங்களை அடிக்கடி பெறுவதாலும் தூய ஆவியாரின் தோழமையோடும் பாவத்தை விலக்கி நன்மையை நாட இயலும்.

219.        முன்மதியின் பண்புகள் யாவை?

i.        அவசியமானது எது, அவசியமற்றது எது, சரியானது எது, தவறானது எது  என்பதை உய்த்துணர்ந்து தனக்கு ஏற்ற இலக்கை நிர்நயித்தல், அந்த இலக்கை அடையும் வழியை தெரிவு செய்யவல்லது.

ii.        நன்மைசெய்வதற்கு தேவையான நீதி, மன உறுதி, நிதானம் தவறாமை ஆகிய நற்பண்புகளை  தக்க நேரத்தில் பயன்படுத்தவல்லது.

iii.        நல்லொழுக்க நெறிகளை எல்லா சூழ்நிலைகளிலும் கடைப்பிடிக்க

நமக்கு துணை நிற்க வல்லது. 

220.        நீதி என்பது என்ன?

ஒருவருக்கு சேரவேண்டியதை அது எதுவாயினும், எந்த சூழலாயிருந்தாலும்,  அதை அவருக்கு அளிப்பதே நீதி.

221.         சமய நற்பண்பு என்றால் என்ன?

இறைவன் நீதியெனக் கருதுவதை நாம் செய்வதே “சமய நற்பண்பு” எனப்படும். உதாரணமாக பசித்திருப்பவருக்கு உணவளிப்பது கடவுளின் பார்வையில் நீதி எனப்படுகிறது (மத். 25:35-36).

222.         நீதியுடன்  நடப்பது என்றால் என்ன? அதன் நன்மைகள் யாவை?

அடுத்தவரின் உரிமைகளை மதித்து செயல்படுவதே நீதியுடன் நடப்பது.  இது சமூக ஒற்றுமைக்கும், சமத்துவத்திற்கும், மனித நேயத்திற்கும், பொது நன்மைக்கும் ஏற்றதாகும்.

223.         “மனோபலம்” என்றால் என்ன?

i.     நன்மை செய்வதில் உறுதியாய் இருத்தல்

ii.     சோதனைகளையும், மனித பலவீனங்களையும் எதிர்த்துப் போராடும் ஆற்றல்.

iii.     அச்சத்தை மேற்கொள்ளவும், துன்பங்களை சந்திக்கவும் தேவையான ஆற்றல்.

iv.     நியாயமான காரணத்திற்காக உயிரையே தியாகம் செய்யும் துணிவு

224.         தன்னடக்கம் (புலனடக்கம்) என்றால் என்ன?

ü இது ஒரு ஆன்மீக நற்குணம்

ü தற்பெருமை கொள்ளாதிருத்தல்

ü சிற்றின்ப நாட்டங்களை தனது ஆன்மீக பலத்தால் மேற்கொள்ளுதல்.

ü புலன்களின் இச்சைகளுக்கு அடிமையாகாமல் தன்னை பாதுகாத்துக் கொள்ளுதல்;

ü உள்ளுணர்வுகளை தனது ஆளுமைக்குள் வைத்திருத்தல்;

225.        சிறந்த கிறிஸ்தவ வாழ்வு என்றால் என்ன? அத்தகைய வாழ்வு வாழ நாம் எவற்றைத் தவிர்க்க வேண்டும்? எவற்றைச் செய்ய வேண்டும்?

இறைப்பற்றின்மையையும் உலகுசார்ந்த தீய நாட்டங்களையும் விலக்கி கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ்வதே சிறந்த கிறிஸ்தவ வாழ்வு”. இதற்கே இறைவனால் நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

Ø  உலக நாட்டங்களுக்கும் வலிமைக்கும் அடிமையாகக் கூடாது;

Ø  நம் உள்ளத்து விருப்பங்களைக் கண்மூடித்தனமாக பின்பற்றக் கூடாது.

Ø  கீழான உணர்வுகளின்படி நடக்கக் கூடாது;

Ø  சிற்றின்ப உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

Ø  மத்.5:3-12 பேறுபெற்றோர் பகுதியிலும் மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு பகுதியிலும் மத்.25:34-49 மற்றும் கிறிஸ்து நமக்குக் கற்பித்த இறைவனுக்கு எற்ற அனைத்து நல்ல மதிப்பீடுகளின்படி வாழவேண்டும்.

226.         அருள் வாழ்வு (ஆன்மீகம்) சார்ந்த நற்பண்புகள் யாவை?

i.     நம்பிக்கை

ii.      எதிர்நோக்கு

iii.      பிறர் அன்பு மற்றும் இரக்கச் செயல்கள்

எபி.11:1.  நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை.

i)      நம்பிக்கை: நாம் காண இயலாத ஒன்றை “இறைவனை” உறுதியாக நம்பி அவரை அனைத்திற்கும் மேலாக அன்பு செய்வது.

ii)     எதிர்நோக்கு: ”விண்ணகவாழ்வு”க்கு நாம் தகுதியற்றவர்கள் ஆனாலும் இறைவனின் பேரிரக்கத்தால் அதனை எதிநோக்கிக் காத்திருப்பது.

iii)   அன்பு: கடவுளால் அன்புசெய்யப்படும் நாம் நம்மையே கடவுளுக்கு கையளித்து அதன் வழியாக நம்மை அவரோடு இணைத்துக்கொள்ளவைக்கும் ஆற்றல்

இவ்வாற்றலின் வழியாக நமக்கு அடுத்திருப்பவரையும் சகோதரர்களாக ஏற்றுக்கொண்டு நிபந்தனை ஏதுமின்றி அவர்களுக்கு உதவுவதின் மூலம் உண்மையாக அவர்களை அன்பு செய்வது. அன்பின் உயர்வை அறிந்துகொள்ள 1கொரி13:1-13.

227.        தூய ஆவியாரின் கனிகள் மற்றும் கொடைகள் யாவை?

தூய ஆவியின் கனிகள்

அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம்[கலா.5:22-23]

தூய ஆவியாரின் கொடைகள்

ஞானம் நிறைந்த சொல்வளம், அறிவு செறிந்த சொல்வளம், பிணிதீர்க்கும் அருள்கொடை, வல்ல செயல் செய்யும் ஆற்றல், இறைவாக்கு உரைக்கும் ஆற்றல், ஆவிக்குறியவற்றை பகுத்தறியும் ஆற்றல், பல்வகை பரவசப் பேச்சு பேசும் ஆற்றல்

அப்பேச்சை விளக்கும் ஆற்றல்[1கொரி.12:8-10]

 

228.         தூய ஆவியாரின் கொடைகள் மற்றும் கனிகள் இடையே உள்ள வேற்றுமைகள் யாவை?

தூய ஆவியாரிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் வரங்களை தூய ஆவியாரின் கனிகள் என அழைக்கிறோம்.  தூயஆவியாரின் கனிகளைப் பெற்ற ஒருவரிடமிருந்து வெளிப்படும் ஆவிக்குறிய ஆற்றல்களையும் செயல்பாடுகளையும் தூய ஆவியாரின் கொடைகள் என அழைக்கிறோம்.

229.         தூய ஆவியாரின் கொடைகளும்  மற்றும் கனிகளும் நமக்கு அளிக்கப்படுவதின் நோக்கம் யாது?

இவ்வுலகில் மனித இயல்பால் மட்டுமே ஆற்றமுடியாத அதாவது மனித இயல்பையும் கடந்து இறைவனின் சிறப்பு கருவிகளாக செயல்படத் தேவையான வாய்ப்பையும் ஆற்றலையும் தருவதே கிறிஸ்தவர்களுக்கு ஆவியார் தனது கனிகள் மற்றும்  கொடைகளை அளிப்பதன் நோக்கம்.

230.        பாவம் என்றால் என்ன?

பாவம் என்பது இறைவனின் கட்டளைகளுக்கு எதிராக எண்ணுவது, பேசுவது, ஆசைப்படுவது, செயல்படுவது.  கடவுளின் கட்டளைகளை மீறுவது, இறைவனின் பார்வையில் தீச்செயல் புரிவது, மனச்சான்று தவறு எனச் சுட்டிக்காட்டுவதை செய்வது.

231.        பாவங்களின் வகைகள் யாவை?

பாவங்களை பொதுவாக இறைவனுக்கு எதிரானவை (இறைப்பற்று இல்லாமை, கடவுளை வெறுத்தல், இழித்துரைத்தல்), மனிதருக்கு எதிரானவை (பில்லி சூனியம், பகைமை, சண்டை, சச்சரவு, பொறாமை, சினம், சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, அழுக்காறு,), தனக்கு எதிரானவை (குடிவெறி, களியாட்டம், நெறிகேடு, பேராசை, ) என்று மூன்று வகைகளாக பிரிக்கலாம்.

கனாகனத்தின் அடிப்படையில் பாவங்கள் சாவான பாவம், அற்பப்பாவம் என இரு வகையாக பிரிக்கப்படுகின்றன.

232.          சாவான பாவம் என்றால் என்ன?

i)    முழு அறிவுடனும், முழு விருப்பத்துடனும் இறைவனுக்கு எதிராக பெரியதொரு தீச்செயலைச் செய்யும் போது அது சாவான பாவமாகும்.

ii)  சாவான பாவம் நம்மில் இருக்கும் அன்பு,  இரக்கம் மற்றும் புனிதத்தை இழக்கச் செய்கிறது.

iii) திருமுழுக்கு மற்றும் ஒப்புறவு அருள்சாதனங்கள் வழியாக மட்டும் மன்னிக்கப்படுகிறது.

iv) நாம் மனம் திருந்தி இறைவனின் மன்னிப்பை பெறாவிட்டால் முடிவில்லா நரகத்திற்கு நம்மை இட்டுச்செல்கிறது.

233.        அற்பப்பாவம் என்றல் என்ன?

கடவுளுடன் நாம் கொண்டுள்ள நல்லுறவை முறிப்பதில்லை ஆனால் அது இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவை வலுவிழக்கச் செய்கிறது.  இறைவேண்டல், அன்பு மற்றும் இரக்கச்செயல்கள் அற்பப்பாவத்திலிருந்து நம்மைத் தூய்மைப் படுத்துகின்றன.

234.         சாவான பாவத்திற்கு உதாரணமாக எத்தகைய பாவங்களைக் கூறலாம்?

பத்துக்கட்டளைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவைகளையே நல்ல உதாரணமாகக் கூறலாம். உன் "ஆண்டவராகிய கடவுள் நாமே"நம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை, கடவுளுடைய திருப்பெயரை வீணாக சொல்லாதே, கடவுளின் திருநாள்களை புனிதமாக அனுசரி, தாய் தந்தையை மதித்து நட, கொலை செய்யாதே, மோகப்பாவம் செய்யாதே, களவு செய்யாதே, பொய்ச்சாட்சி சொல்லாதே, பிறர் தாரத்தை விரும்பாதே, பிறர் உடமையை விரும்பாதே. இவைகளை மீறுதல் சாவான பாவங்கள் ஆகும்.

235.          தலையான பாவங்கள் யாவை?

தற்பெருமை, சீற்றம், காமவெறி, பேராசை, பெருந்தீனி,பொறாமை,சோம்பல்

336.      பாவத்தின் விளைவுகள் யாவை?

­  பாவங்கள் கடவுளின் சினத்தை வரவழைக்கின்றன.

­  பாவிகள் சாவுக்குரியவர்கள்

­  பாவத்தில் ஈடுபடுவோர் விண்ணரசை இழந்துவிடுவர்;  மாறாக நித்திய நரகத்தில் தள்ளப்படுவார்கள்.

மானிட சமூகம்

237.         இறைவன் மனிதனைப் படைத்ததின் நோக்கம் யாது?

மனிதன் மூவொரு கடவுளின் சாயலைப்போல் (Divine community)  சமூகமாக நல்லுறவுடன் (human community) வாழ்ந்து இறுதியில் விண்ணக பேரின்பத்தில் தம்மோடு சமூகமாக நித்தியத்திற்கும் வாழவேண்டும் என்பதற்காகவே மனிதனைப் படைத்தார். [1877] 

238.          பொது நலன் என்றால் என்ன?

பொதுநலன் என்பது ஒரு சமூகத்தில் உள்ள பலருக்கும் அல்லது அனைவருக்கும் நன்மை பயக்கக்கூடிய செயல்களை ஆர்வத்துடன் செயல்படுவது .

239.     பொது நலனை எவ்வாறு கட்டிக்காப்பது?

ஒவ்வொருவரும் தனக்கு அடுத்திருப்பவரின் நலனில் அக்கரையுடன்  நடந்துகொள்ளும்போது பொதுநலன் கட்டிக்காக்கப்படும்.

 

240.         பொதுநலனை மேம்படுத்துவதில் நமது பங்கு யாது?

நாம் நமது சக்திக்கேற்ப, திறமைகளுக்கேற்ப நம்மால் முடிந்தமட்டும் பொதுவாழ்வில், சமூக முன்னேற்றத்தில் பங்கேற்க வேண்டும்.

241.          சமூக நீதி என்றால் என்ன?

சமூகத்தில் எல்லாநிலை மக்களுக்கும், எந்நாளும் மனித உரிமைகள் பாரபட்சமின்றி கிடைக்கச் செய்வதே சமூக நீதியாகும்

242.         சமூக ஒற்றுமைக்கு அவசியமானவை யாவை?

நட்பு, அன்பு, பகிர்வு

243.         ஒருமைப்பாடு என்றால் என்ன?

நட்பு, அன்பு, பகிர்வு ஆகிய பண்புகளின் அடிப்படையில் ஒருவருக்கொருவர் சகோதர உறவில் ஒன்றித்திருப்பதே ஒருமைப்பாடு ஆகும்.

244.         ஒரு பாவி ஏன் கடவுளிடம் திரும்பிவந்து அவரின் மன்னிப்பை இறைஞ்ச வேண்டும்?

பாவம் நம்மிடமுள்ள புனிதத்தை இழக்கச்செய்து இறைவனின் அன்பையும் அருளைப்பெற  தகுதியற்றவர்களாக ஆக்குகிறது. எனவே அவரது அன்பையும் பரிவையும் மீண்டும் பெற செய்த பாவத்திற்கு வருந்தி அதை விலக்கி  அவரோடு ஒப்புறவாக வேண்டியது அவசியமாகிறது.

245.         நமது மீட்புக்கு நாம் என்ன செய்யவேண்டும்?

X  இறைவன் நமது சம்மதம் இல்லாமல் நம்மைப் படைத்தார்;  அனால் நமது அனுமதி அல்லது விருப்பம் இல்லாமல் நம்மை மீட்க இயலாது.

X  எனவே அவரது இரக்கத்தைப் பெற நாம் பாவிகள் என்பதை உணர்ந்து முழுமனதோடு ஏற்று அறிக்கையிடவேண்டும்.

X  ஒப்புறவு அருள்சாதனம் வழியாக பாமன்னிப்பைப் பெற்று இறவனோடு ஒப்புரவாக அவரது அன்பில் நிலைத்திருக்க வேண்டும்.

246.         இறைவன் மனிதனைப் படைத்ததின் நோக்கம் யாது?

மனிதன் மூவொரு கடவுளின் சாயலைப்போல் (Divine community)  சமூகமாக நல்லுறவுடன் (human community) வாழ்ந்து இறுதியில் விண்ணக பேரின்பத்தில் தம்மோடு சமூகமாக நித்தியத்திற்கும் வாழவேண்டும் என்பதற்காகவே மனிதனைப் படைத்தார்.

247.         பொதுநலனின் அடிப்படை பண்புகள் யாவை?

  i.      சேவைகளும், பொருட்களும், முன்னுரிமைகளும் அனைவருக்கும் சமமாக கிடைக்கப்பெறுதல்

 ii.       பொருளாதாரத்திலும், அதிகாரத்திலும், ஆளுமையிலும் சமத்துவம்

iii.     சட்டத்தில், தொழில் முனைவதில், அரசியலில், ஆட்சியில் உரிமைகள்

iv.     : தங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கக்கூடிய கொள்கைகளை வரையறுப்பதில் பங்கேற்பு

248.         இறைவனின் அருள் என்றால் என்ன?

இறைவனிடமிருந்து வரும் கொடை, உதவி, நன்மைத்தனம், ஆற்றல்.  இவை அனைத்துமே இறைவன் நம்மேல் வைத்த பேரன்பால் நமக்கு தந்தவை.

249.         கடவுளின் அருள் நம்மில் எவ்வாறு செயலாற்றுகிறது?

கடவுளின் அருள் நமக்கு திருமுழுக்கின்போது கொடையாகக் கொடுக்கபடுகிறது. இவ்வருள் நம்மைப் புனிதப்படுத்தி நம்மை புதுப்படைப்பாக்கி நம்மை கடவுளுக்கு ஏற்புடையவர்களாக ஆக்குகிறது. 2கொரி.5:17-18

250.         பேறுபலன் என்றால் என்ன?

கிறிஸ்துவ  வாழ்க்கை நெறியில் ஒருவர் இரக்கச் செயல்கள், நற்செயல்கள், பிறர் அன்பு சேவைகள்  புரிந்தால் அவருக்குக் கிடைக்கும் வெகுமதியையே பேறுபலன் என அழைக்கிறோம்.  கிறிஸ்தவர்களாகிய நமக்கு பேறுபலன் என்பது விண்ணக மாட்சியில் இறைவனுடன் நித்தியத்திற்கும் வாழ்வது ஆகும்.

251.         விண்ணக மாட்சியை  நமது நற்செயல்களால் மட்டுமே பரிசாகப் பெற முடியுமா?

நாம் நமது நற்செயல்களால் இறைவனின் பிரதிபலனுக்கு தகுதியுடையவார்களாக இருந்தாலும் விண்ணரசு என்ற பேறுபலனுக்கு உரிமை கொண்டாட முடியாது.  விண்ணகமாட்சி என்ற பேறுபலன் நமக்குக் கிடைக்க முழுமுதற் காரணம் இறைவனின் இரக்கம். இரண்டாவது அதனைப் பெற இறைவனுக்கு நாம் அளிக்கும்  ஒத்துழைப்பு அதாவது நாம் வாழும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை.

252.         புனிதம் என்றால் என்ன? நாமும் புனிதர்கள் ஆக முடியுமா?

இறைவனின் வாழ்வை அல்லது இறைவனுக்கு உகந்த வாழ்வை நாம் இவ்வுலகில் வாழ்ந்தால் அதுவே புனிதம்.    

X  நாமும் நம்மையே (உலகு, சரீரம் சார்ந்த நாட்டங்களை) மறுத்து

X  நமது சிலுவையை நிர்பந்தத்தால் இல்லாமல் மகிழ்வுடன் சுமந்து

X  கிறிஸ்துவை பின்பற்றுவதின் வழியாக 

கிறிஸ்துவில், அவரின் அன்பில் நம்மை இணைத்துக்கொண்டு  வாழ்வின் நிறைவை அடைய வேண்டும்.  அப்போது நாமும் புனிதர்கள் ஆவது உறுதி.

253.           திருஅவையின் ஒழுங்குமுறைகள் யாவை?

தமிழக ஆயர்களின் முடிவுப்படி திருஅவையின் ஒழுங்குமுறைகளாவன:

1)     ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடன்திருநாள்களிலும் திருப்பலியில் முழுமையாகப் பங்கேற்க வேண்டும்.

2)     ஆண்டிற்கு ஒருமுறையாவது தகுந்த தயாரிப்புடன் ஒப்புரவு அருள்சாதனத்தில் பங்கேற்க வேண்டும்.

3)     பாஸ்கா காலத்தில் ஒப்புரவு அருள்சாதனத்தில் பங்கேற்று நற்கருணை உட்கொள்ள வேண்டும்.

4)     திருஅவை குறிப்பிட்டுள்ள நாள்களில் இறைச்சி உண்ணாதிருக்க வேண்டும்; நோன்பு நாட்களில் ஒருவேளைமட்டும் முழு உணவு உண்ணலாம்.

5)     குறைந்த வயதிலும் திருமணத்தடை உள்ள உறவினரோடும் திருமணம் செய்யாதிருக்கவேண்டும்.

6)     திருஅவையின் தேவைகளை நிறைவேற்ற நம்மால்முடிந்த உதவி செய்யவேண்டும்.

254.           திருஅவையின் போதிக்கும் அதிகாரம் (Authority of the Magisterium) எத்தகையது?

X  இந்த அதிகாரம் கிறிஸ்துவால் திருத்தூதர்கள் வழியாக திருஅவைக்கு அளிக்கப்பட்டது.

X  நமது மீட்புக்கு அடிப்படையான அவசியமான இயற்கச் சட்டங்களை போதிக்கும் அதிகாரம் இதில் அடங்கும்.

255.           திருஅவையின் கட்டளைகளின் நோக்கம் யாது? அவற்றை கடைப்பிடிக்க நமக்குக் கட்டாய கடமை உண்டா?

நோக்கங்கள்:

i.    நாம் கிறிஸ்தவ வாழ்வு வாழ குறைந்தபட்ச தேவைகளை  இவை வரையறுக்கின்றன.

ii.   இக்கட்டளைகளை நாம் கடைப்பிடிப்பதின் மூலம் கிறிஸ்துவோடும், திருஅவையோடும் நம்மை ஒன்றித்திருக்கச் செய்கின்றன.

எனவே திருஅவையின் கட்டளைகளைக் கடைப்பிடிக்க ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் கட்டாய கடமை உண்டு.

256.        பத்துக் கட்டளைகள் யாரால் யாரிடம் எங்கு கொடுக்கப்பட்டது?

இறைவன் சினாய் மலையில் மோசேயிடம் பத்துக்கட்டளைகளைக் கொடுத்தார்.

257.           பத்துக்கட்டளைகள் யாவை?

1.     நாமே உன் கடவுளாகிய ஆண்டவர்.  எம்மைத்தவிர வேறு தெய்வங்கள் உனக்கு இருத்தல் ஆகாது.

2.     உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைவீணாகப் பயன்படுத்தாதே.

3.     ஓய்வு நாலைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாய் இரு.

4.     உன் தந்தையையும் தாயையும் மதித்து நட.

5.     கொலை செய்யாதே.

6.     விபச்சாரம் செய்யாதே.

7.     களவு செய்யாதே.

8.     பிறருக்கு எதிராகப் பொய்சாட்சி சொல்லாதே.

9.     பிறர் மனைவிமீது ஆசைகொள்ளாதே.

10.  பிறருக்கு உரியது எதையும் கவர்ந்திட விரும்பாதே.

258.       பத்துக்கட்டளைகள் கொடுக்கப்பட்டதின் நோக்கம் யாது?

இறைவனின் பண்புகளை உணர்த்த; ii) இறைவனுக்கு எதிராக எத்தகைய பாவங்களை செய்து எவ்வளவு தொலைவு இறவனைவிட்டு பிரிந்து சென்றுள்ளார்கள் என்பதை உணர்த்த iii) இஸ்ரயேல் மக்கள் சமூக நல்உறவில்  வாழ எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதை உணர்த்த.

259.      பத்துக்கட்டளைகள் இன்றைய சூழலில் பொருளற்றவையா?

இறைவனுக்கும், நமக்கு அடுத்திருப்பவர்களுக்கும் நாம் ஆற்றவேண்டிய அடிப்படை கடமைகளின் சாரமாக பத்துக்கட்டளைகள் அமைந்துள்ளன என்பதால்  பத்து கட்டளைகள் காலத்தாலோ இடத்தாலோ மாற்றத்த்திற்கு உட்படுத்த முடியாதவை, என்றென்றும் எங்கும் எல்லோராலும் கடைப்பிடிக்கபட வேண்டியவை.

முதல் கட்டளை

நாமே உன் கடவுளாகிய ஆண்டவர். 

எம்மைத்தவிர வேறு தெய்வங்கள் உனக்கு இருத்தல் ஆகாது.

 

260.      முதல் கட்டளை நமக்கு வலியுறுத்துவது யாது (விப20:2)?

“ உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனதோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புசெலுத்து” [மத்.22:37]

261.      முதல் கட்டளையின் உட்பொருளும் விளக்கமும் யாது?

“நான் மட்டுமே கடவுள்” என்பதை இறைவனே நமக்கு வெளிப்படுத்தியுள்ளதால்

Ä இறைவனைவிட உயர்வான இடத்தை யாருக்கும் எதற்கும் கொடுக்கக்கூடாது.

Ä கடவுளை அறிவதற்கும்,  அவரை வழிபடுவதற்கும் அவருக்கு பணிசெய்வதற்கும் மட்டுமே நம் வாழ்வில் முதலிடம் கொடுக்கவேண்டும்.

Ä நம்பிக்கை,எதிர்நோக்கு, அன்பு/இரக்கம் ஆகிய பண்புகளே இந்த கட்ட்ளையின் மையம்.

Ä இறைவனை நம் முழு பலத்தோடும் ஆற்றலோடும் அன்பு செய்யவேண்டும்

Ä இறைவனின் ஆற்றலின்பேரில் நம்பிக்கை இழத்தலைப் பற்றியும், தன் ஆற்றலின்மேல் நம்பிக்கைவைத்தலைப் பற்றியும் முதல் கட்டளை எச்சரிக்கிறது.

இவை அனைத்தும் மற்றனைத்து கட்டளைகளைவிட முதன்மையானதும் அடிப்படையானதும் என்பதாலேயே இறைவன் இதனை முதல் கட்டளையாக வைத்துள்ளார்.

262.         முதல் கட்டளை எவற்றையெல்லாம் தடைசெய்கிறது?

X  வேற்று தெய்வங்களையோ, படைப்புகளையோ, சிலைகளையோ, உலகு சார்ந்த பணம் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களையோ  கடவுளாகக் கருதி வழிபடக்கூடாது.

X  மூட நம்பிக்கை,குறி கேட்டல்,மாயவித்தை, பில்லிசூனியம், ஆவியுலகத் தொடர்பு.

X  இன்றைய கால கட்டத்தில் திருப்பணியாளர்களையும் நற்கருணை போன்ற புனித பொருட்களை அவமதிதல்.

X  நாத்தீகக் கொள்கை

X  இறை மற்றும் திருஅவை படிப்பினைகளை கடைப்பிடிப்பதில் மெத்தனப் போக்கு.

263.      முதல் கட்டளைக்கு (இறைவனின் அன்புக்கு) எதிரான பாவத்தை எப்போது கட்டிக்கொள்கிறோம்?

Ø  சுயநினைவோடு கடவுள் இருக்கிறாரா என சந்தேகிப்பது அல்லது ஏற்றுக்கொள்ள மறுப்பது.

Ø  கடவுள் வெளிப்படுத்தியதையும் திருஅவை கற்பிப்பதையும் ஏற்றுக்கொள்ள மறுப்பது.

Ø  இறைவனின் அன்பை அலட்சியப்படுத்துதல், புறக்கணித்தல், நிராகரித்தல்

Ø  நமது நன்றிகெட்ட தனத்தால் அவரது அன்புக்கு பதில் அன்பு காட்டாதிருத்தல்

Ø  இறைவனின் அன்புக்காக தன்னையே இழக்கத் தயங்கும் போது

Ø  இவை அனைத்திற்கும்  முக்கிய காரணம் ஒருவரின் தற்பெருமையும் அகந்தையும் தான்

264.      ஆராதனை என்றால் என்ன? இறைவனை நாம் ஆராதிக்கும்போது எதனை வெளிப்படுத்துகிறோம்?

ஆராதனை என்பது  நாம் இறைவனை வழிபடும் முறைகளிலேயே மிகச்சிறந்தது.  ஏனெனில் கடவுளை நாம் வழிபடும்போது அவர் நம்மைப் படைத்தவராகவும், நாம் செய்த பாவங்களின் தண்டனைகளிலிருந்து நம்மை மீட்பவராகவும், எல்லையற்ற அன்பும் இரக்கமும் உள்ளவராகவும் ஏற்று அறிக்கையிடுகிறோம்.

265.      செபம் என்றால் என்ன?  அதன் சிறப்பு யாது?

Ä  நமது இதயத்தையும் ஆன்மாவையும் இறைவனை நோக்கி எழுப்புவதே செபம் ஆகும்.

Ä  செபத்தின் வழியாகத்தான் நாம் இறைவனின் மாட்சியை போற்றுகின்றோம், நமக்கு செய்த அனைத்து நன்மைகளுக்கும் நன்றி சொல்கிறோம், நமது ஆன்ம சரீர நன்மைகளுக்காக மன்றாடுகிறோம்.  

Ä  கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடப்பதற்கு வேண்டிய பலத்தை செபம் அளிக்க வல்லது.

Ä  விண்ணகம் நோக்கிய நமது பயணத்தில் தளர்ச்சி அடையாமல் பயணிக்க வைக்க வல்லது. [லூக்.18:1]

266.      பழைய ஏற்பாட்டு காலத்தில் யூதமக்கள் பலி செலுத்தியதின் நோக்கம் என்ன? எவ்வாறு பலிசெலுத்தினர்?

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரயேல் மக்கள் ஆட்டுக்குட்டியை எரிபலியாகக் கடவுளுக்குச் செலுத்தினர் (லேவி.4:32-35).  மனிதர் செய்த பாவங்களுக்கு மன்னிப்புப்பெறவே இஸ்ரயேல் மக்கள் இத்தகைய எரிபலிகளை செலுத்தினர்.

267.      பழைய ஏற்பாட்டு பலிகளில் குரு ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை பீடத்தின்மீதும் மக்கள் மீதும் தெளித்ததின் உட்பொருள் என்ன?

X  எபி.9:22. இரத்தம் சிந்தாது பாவ மன்னிப்பு இல்லை என்பதை உணர்த்தவே இறைவன் எரிபலி செலுத்தச் சொன்னார்.

X  பலிகளிலேயே உன்னதமான பலி பாவங்களில் இருந்து நம்மை மீட்க இயேசு கிறிஸ்து சிலுவையில் தம் உயிரையே கடவுளுக்கு மாசற்ற பலியாக அளித்தது. இதனையே திருப்பலியில் தினமும் நாம் கொண்டாடுகிறோம்.[எபி.9:13-14; 10:1-14; உரோ.5:7-8]

268.      நாம் எத்தகைய பலியை இறைவனுக்குச் செலுத்தவேண்டும் என இயேசு கூறியுள்ளார்?

நம்மிடமிருந்து இறைவன் விரும்பும் பலி நமது பிறர் அன்பு சேவைகளும், இரக்க செயல்களுமே என்று இயேசு  மத்.12:7ல் தெளிவு படுத்தியுள்ளார்.

269.      “இறைவனை யாதொன்றின் சிலையாகவோ ஓவியமாவோ உருவாக்க வேண்டம்” என பழைய ஏற்பாடு சட்டங்கள்  ஏன் தடைசெய்கின்றன?

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் இறைவன் உருவமற்று ஒரு மறைபொருளாகவே இருந்தார். எனவே இஸ்ரயேல் மக்கள் இறைவனுக்கு தாங்களாகவே ஒரு உருவத்தைக்கொடுத்து அதனை வழிபடுவதிலிருந்து அவர்களைத் தடுக்கவே இத்தகைய ஒரு சட்டத்தை இறைவன் அவர்களுக்குக் கொடுத்திருந்தார்.

270.      பழைய ஏற்பாடு இவ்வாறிருக்க கிறிஸ்தவர்களாகிய நாம் ஏன் அதனைக் கடைப்பிடிப்பதில்லை?

காலம் நிறைவுற்றபோது இறைவனே இயேசுகிறிஸ்து வழியாக மனித உடலெடுத்து இவ்வுலகிற்கு வந்தார்.  [கொலோ.1:15]. அதாவது இறைவன் நம் கற்பனைக்கு அப்பார்ப்பட்டவர் என்ற கருத்து முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.  இறைவன் இயேசுக்கிறிஸ்துவின் மனித அவதாரத்தால் நம் கண்களால் இறைவனைக் காணும் பேற்றினை அளித்துள்ளார்.  அதனால் கிறிஸ்துவத்தில் அந்த சட்டம் பொருளற்றதாகிவிட்டது.  இந்த இறை வெளிப்பாட்டின் அடிப்படையில்தான் கிபி நான்காம் நூற்றண்டிலிருந்து திருஅவை திருசுருபங்களையும் திருப்படங்களையும் ஆலயங்களிலும் வழ்பாட்டுத் தலங்களில் வைக்கும் மரபைக் கடைப்பிடித்து வருகிறது.  எனினும்  திருசுருபங்களையும் திருப்படங்களையும் கடவுளாக நம்பி வழிபடக்கூடா து என்றும் எச்சரிக்கிறது.

271.      அன்னை மரியாளையோ, புனிதர்களையோ, வான தூதர்களையோ வழிபடலாமா?

கண்டிப்பாகக் கூடாது. வணக்கம் மட்டும்மே செலுத்தலாம்

இரண்டாம் கட்டளை

உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே.

272.      உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே என்பதை ஒரு கட்டளையாகக் கொடுத்திருப்பது எதைக் குறிக்கிறது?

கடவுளின் பெயர் தூயது, மாட்சி மிக்கது (என்பதால் அதனைத் தவறாகப் பயன்படுத்துவது பெரும்பாவம்) என்பதைக் குறிக்கிறது.

273.      கடவுள் தம் பெயர் தூயதாக  போற்றப்பட வேண்டும் என்பதைக் கட்டளையாகக் கொடுத்திருப்பதின் பொருள் என்ன?

இறைவனின் திருப்பெயர்

X  நம் உள்ளத்தின் ஆழத்தில் பதித்து அவரை ஆராதிக்கவும் மாட்சிப்படுத்தவும் மட்டுமே உபயோகிக்கப்பட வேண்டும்.

X  பொய்யான ஒன்றுக்கு கடவுளை சாட்சியாக குறிப்பிடுவது மிகப்பெரிய பாவம்.

X  அவர் பெயரை அவமரியாதையாக உச்சரிக்கக் கூடாது.

X  அவரின் பெயரால் ஒருவருக்கு சாபம் இடுவதோ, ஒருவரிடம் ஆணையிடுவதோ,  பொய்ச் சான்று சொல்வதோ  இறைவனைப் பழித்துரைப்பதற்கு சமம்மட்டுமன்றி மிகப் பெரிய பாவவுமும் ஆகும்.

X  இறைவனின் தூய பெயருக்கு மதிப்பளித்து அவரது பெயரை போற்றி மாட்சிப்படுத்துவது நமது கடமை என இரண்டாம் கட்டளை வலியுறுத்துகிறது. [செக்.2:13; திபா. 29:2; 96:2; 113:1-2]

274.      நாம் சிலுவை அடையாளம் வரைவதின் அர்த்தம் என்ன?

இதன் அர்த்தம்: மூவொரு கடவுள் நம்மைச்சுற்றி எங்கும் நிறைந்திருக்கிறார். நாம் சிலுவை அடையாளத்தை வரையும்போது நம் இல்லத்தை, நம் வீட்டில் நடக்கும் நல்ல நிகழ்வுகளை, நாம் செய்யும் செயலையும் மூவொரு கடவுள் ஆசீர்வதித்து புனிதப்படுத்துகிறார்கள், நமது துன்பங்களில், இக்கட்டு நேரங்களில் நம்மைத்தேற்றி நமக்கு ஆறுதல் அளித்து

உதவுகிறார்கள். 

மூன்றாம் கட்டளை

ஓய்வுநாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாய் இரு.

 

 

275.      ஓய்வு நாள் ஏன் புனிதமான நாளாக இஸ்ரயேல் மக்கள் கொண்டாடினர்?

கடவுள் அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசி வழங்கி அதனைப் புனிதப்படுத்தினார். விப.31:15; விப.20:11.  எனவேதான் எழாம் நாளில் இஸ்ரயேல் மக்கள் தாங்க ஆறு நாட்கள் செய்தவேலைகளை அன்று செய்யாமல் ஓய்ந்திருந்து அந்நாளை புனிதமான நாளாகக் கடைப்பிடித்தனர்.

276.      இஸ்ரயேல் மக்கள் ஓய்வு நாளுக்குக் கொடுத்த அர்த்தம் யாது?

i.          தங்களைப் படைத்தவரும்  மீட்பருமாகிய இறைவனை நினைவுகூறும் அடையாளமாகவும்.

ii.          எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து பெற்ற விடுதலையை நினைவு கூறும் நாளாகவும்,

iii.          ஆள்பவர் அடிமை என்ற கோட்பாடு ஒழிக்கப்பட்ட நாளாகவும்; இச.5:15; நெகே.13:15-22

iv.          கடவுள் தங்களோடு செய்துகொண்ட நித்தியத்திற்குமான உடன்படிக்கையை கொண்டாடும் நாளாகவும் விப.31:16

v.          இறைவன் ஏழாம்நாள் ஓய்ந்திருந்ததை போற்றும் விதமாக யூத பாரம்பரியத்தில் அந்நாளில் எந்த ஒரு வேளையையும் செய்யாமல் ஓய்ந்திருந்தனர். கடின உழைப்பின் களைப்பிலிருந்து மீண்டு  மறுபடியும் உழைப்பதற்கு வேண்டிய புதிய ஆற்றலை பெறுவதற்காக ஓய்வுநாள் அளிக்கப்பட்டதாகவும். விப.31:17; 23:12

vi.          தங்களின் இறப்பிற்குப்பின் நித்தியத்திற்கும் (விண்ணக பேரின்பத்தில்) இறைவனோடு ஓய்ந்திருக்கும் காலத்தின் முன்சுவையாகவும்

இஸ்ரயேல் மக்கள் இந்நாளை மதித்தனர்.

277.      ஓய்வுநாளைப் பற்றிய இயேசுவின் போதனை யாது?

இயேசு ஓய்வு நாளை கடைப்பிடித்தார்.  இருப்பினும் மனிதரை முன்னிலைப் படுத்தி மனிதருக்காகத்தான் ஓய்வுநாள்; ஓய்வுநாளுக்காக மனிதர் உண்டாக்கப்படவில்லை  என்று(மாற்.2:27).ஓய்வுநாளுக்கு ஒரு புதிய அர்த்தத்தையும் பரிமாணத்தையும் அளித்து இறைமகன் என்ற அதிகாரத்துடன் போதித்தார். 

தன்னலமற்ற நற்செயல்கள் செய்வதும்,  பிற உயிர்களைக் காக்கும் செயல்களைச் செய்வதுமே ஓய்வுநாளின் அர்த்தமும் நோக்கமும் ஆகும் என்று வாழ்ந்துகாட்டினார்.. .[மத்.12:5; மாற்.3:4;யோவா.7:23]

278.      கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுகிழமையை ஓய்வுநாளாகக் கொண்டாடுவதின் காரணம் என்ன?

i.     ஞாயிற்றுகிழமை  இறந்தோரிடமிருந்து (சாவிலிருந்து) இயேசு உயிர்த்த நாள். எனவே அது கடவுளின் நாள்.

ii.     கிறிஸ்தவர்களாகிய நமக்கு திருஅவை “ஓய்வு நாள்” என்பதற்கு மூன்று கூறுகளைக் கொடுத்துள்ளது.

X கடவுள் தனது நன்மைத்தனத்தால் உலகை படைத்ததை நினைவுகூறும் நாள்.

X கிறிஸ்துவின் உயிர்ப்பின் வழியாக உலகை புதுப்பித்து புனிதப்படுத்திய நாள். 

X வாரத்தின் ஆறு நாட்கள் நாம் இந்த உலகில் வாழும் நாட்களைக் குறிக்கின்றன.  ஏழாம் நாள் என்பது நம் இறப்பிற்குப்பின் மூவொரு கடவுளோடு நித்தியத்திற்கும் வாழ்வதைக் குறிக்கிறது. இதுவே நமது ஓய்வுநாளாகும். எனவே ஞாயிற்றுகிழமை நமது வாழ்வின் ஏழாம் நாளான விண்ணக வாழ்வை நினைவில் கொள்ளும் நாள்.

எனவே கிறிஸ்தவர்களாகிய நாம் ஞாயிற்றுக் கிழமையை வாரத்தின் முதல் நாளாகவும் திருநாட்களில் முதன்மையானதாகவும் கடைப்பிடிக்கிறோம்.

279.      ஞாயிற்றுக் கிழமை திருப்பலியில் கண்டிப்பாகவும், முழுமையாகவும்  பங்கெடுக்கவேண்டும் என்பதின் பொருள் யாது?

i.       ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் (கத்தோலிக்கத் தேவாலயங்களில் நிறைவேற்றப்படும்) முழு திருப்பலியிலும் முழுமையாகப் பங்குகொள்ள வேண்டும். 

ii.      ஏனெனில் ஞாயிறு திருப்பலியில் பங்கெடுக்கும்போது நாம் கிறிஸ்துவோடு ஒன்றித்திருக்கிறோம், அவரது மாட்சியை போற்றுகிறோம், அவரே நமது மீட்பர், என்பதை அறிக்கையிடுகிறோம்.

iii.   தூய ஆவியாரின் ஆற்றலோடு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் ஓருடலாய் இருக்கிறோம் என்பதை அறிக்கையிடுகிறோம்.

280.      ஞாயிற்று கிழமைகளை இறைவனுக்கு உகந்தவாறு எவ்வாரெல்லம் செலவிடலாம்?

i.       கடவுள் தமது படைப்பின் வேளைகளை நிறைவுசெய்து ஏழாம் நாள் ஓய்ந்திருந்ததுபோல நாமும் நமது அன்றாட பணிகளை செய்யாது ஓய்வெடுக்கலாம்.

ii.      நமது குடும்ப, சமூக மற்றும் ஆன்மீக காரியங்களில் நேரத்தை செலவிடலாம்.

iii.    நமக்கு அடுத்திருப்பவர்கள் நலம், தேவை சார்ந்த பணிகளில், பொதுநல சேவைகளில் ஈடுபடலாம்.

iv.    நோயால் வறுமையால் வாடுவோருக்கு, முதியோருக்கு,  கைவிடப்பட்டோருக்கு, நமது நேரத்தாலும், உழைப்பாலும், பொருளுதவிகளாலும் ஆறுதல் அளிக்கலாம்.

v.     தனித்திருந்து இறைவனோடு நேரத்தை செலவிடலாம். பெற்றுக்கொண்ட நண்மைகளுக்கு இறைவனுக்கு நன்றி செலுத்தலாம், தவறிய தருணங்களுக்காக இறைவனிடம் மன்னிப்பு வேண்டலாம்.

281.      இஸ்ரயேல் மக்களின் ஓய்வு நளுக்கும் கிறிஸ்தவர்களின் ஞாயிற்றுக்கிழமைக்கும் உள்ள தொடர்பு என்ன?

இருவருக்குமே அது கடவுளின் நாள். இஸ்ரயேல் மக்கள் வாரத்தின் இறுதிநாளை ஓய்வு நாளாக அனுசரித்து வந்தனர். அதனையே நாம் ஞாயிற்றுக்  கிழமையாகவும், வாரத்தின் முதல் நாளாகவும் கருதுகிறோம்.

பத்துக் கட்டளைகளின் இரண்டாம் பகுதி

உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக

‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். யோவா.13:34

282.       பத்துக் கட்டளைகளின் இரண்டாம் பகுதி (கட்டளைகள் 4-10) நமக்கு வலியுறுத்துவது என்ன?

Ä நமக்கு அடுத்திருப்பவர் என்ற உறவில் அனைத்திற்கும் முதன்மையாக வைக்கப்படுபவர்கள் நமது தந்தையும் தாயும் ஆவார்கள்

Ä அடுத்து நாம் யாருக்கெல்லாம் நன்றிக்கடன்பட்டுள்ளோமோ, நம் நல்வாழ்வுக்கு யாரெல்லாம் காரணமோ, நம்மீது யாரெல்லாம் அன்புகொண்டுள்ளார்களோ, நமது நம்பிக்கைக்குறியவர்கள், நமக்கு நல்வழி காட்டுபவர்கள்.

Ä இதையெல்லாம் தாண்டி இயேசுகிறிஸ்து சுட்டிக்காட்டுவது “நாம் முன்பின் அறியாதவர்கள் ஆனால் நம் அன்பும் உதவியும் தேவைப்படுபவர்கள்”  இவர்களே நமக்கு அடுத்திருப்பவர்கள்.

இவர்கள் அனைவருக்கும் நாம் மதிப்பும் மரியாதையும் அளிக்கவேண்டும்; நிபந்தனையற்ற அன்பை செலுத்தவேண்டும். நாம் ஒரு நல்ல சமாரித்தனாக வாழவேண்டுமென்பதே இரண்டாம் பகுதியின் சாரம்.

நான்காம் கட்டளை

உன் தந்தையையும் தாயையும் மதித்து நட

283.      நான்காம் கட்டளை நமக்கு உணர்த்துவது யாது?

கடவுளுக்கு அடுத்து ஒருவர் தன் தாய்க்கும் தந்தைக்கும் மதிப்பளிக்கவேண்டும், அன்புசெய்யவேண்டும், கீழ்ப்படிய வெண்டும், அவர்களைப் பேணிக் காக்கவேண்டும்.

284.      நான்காம் கட்டளை  “தன் தாய்க்கும் தந்தைக்கும் மதிப்பளிக்கவேண்டும்” என்று கூறுவதின் காரணங்கள் யாவை?

i)    இக்ட்டளையை பத்துக்கட்டளையின் இரண்டாம் பகுதியின் துவக்கமாக வைக்கப்பட்டுள்ளதிலிருந்து நமது அன்புக்கும் மதிப்புக்கும் முன்னுரிமை பெறுபவர்கள் நம் தாயும் தந்தையும் என இறைவன் தெளிவுபடுத்தியுள்ளார்.

ii)  இவர்களே இறைவனைப்பற்றிய அறிவை நமக்குக் கொடுத்தவர்கள். நம்மை வளர்த்து நல்லநிலைக்குக் கொண்டுவரும் பொறுப்பையும் அதிகாரத்தையும் இறைவனிடமிருந்து பெற்றவர்கள்.

iii) தாய் தந்தையை மதிப்பது நமக்கு ஆசீர்வாதத்தையும் நன்மைகளையும் பெற்றுத்தர வல்லது.

iv) தாய் தந்தையை மதிப்பவர் இவ்வுலகில் அமைதி, மற்றும் செல்வங்களை நிரம்பப் பெருவார். சீரா.3:2-16. 

285.      குழந்தைகள் தம் பெற்றோரை எவ்வாறு மதித்து நடக்கவேண்டும்?

வளர்ந்து ஆளாகிவிட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை நான்காம் கட்டளை நினைவு படுத்துகிறது.

Å   நமக்கும் நமது பெற்றோருக்கும் உள்ள உறவு இறைத்தந்தை நமக்கு அளித்தது. பெற்றோர் நம்மை இவ்வுலகிற்குக் கொண்டுவந்தவர்கள், நம்மை வளர்த்து ஆளாக்கியவர்கள். 

Å   கணக்கற்ற தியாங்களைச் செய்து நம்மை நல்ல மதிப்புமிக்க நிலைக்கு உயர்த்தியவர்கள்.

Å   நாம் என்னதான் அவர்களுக்குக் கைமாறு செய்தாலும் தாய் நமக்கு செய்தவற்றுக்கு ஈடுசெய்யவே முடியாது.

Å   பெற்றோர் நம்மோடு இருக்கும் காலம்வரை நாம் நமது அன்பாலும்,அவர்களுக்கு அளிக்கும் மதிப்பாலும், மரியாதையாலும், கீழ்ப்படிதலாலும்  அவர்களுக்கு நமது நன்றியை வெளிப்படுத்த வேண்டும்.

Å      நமது உதவி தேவைப்படும் சமயங்களிலும், நோய்வாய்ப்பட்டு துன்புறும்போதும், முதுமையின் இயலாமையிலும் அவர்களை பாரமாகக் கருதாமல் அவர்களுக்கு உண்மையான அன்போடும் அக்கறையோடும் துணை நிற்கவேண்டும், உதவவேண்டும்.  

நற்பண்புகளைக் கொண்ட மகன் தந்தைமுன் தன்னைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும். தந்தையின் கட்டளைகளை விருப்பத்தோடு நிறைவேற்ற வேண்டும்.

நான்காம் கட்டளையின் மற்றைய பரிமாணங்கள்

குடும்பம் – சமூகம் - ஆட்சிபுரிவோர்

286.      குடும்பம் என்றால் என்ன? இறைவனின் படைப்பு மற்றும் மீட்புத்திட்டத்தில் குடும்பத்தின் பங்கு என்ன?

Ø குடும்பம் என்பது தாய், தந்தை, அவர்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளை உள்ளடக்கிய உன்னத அமைப்பாகும்.  இது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட புனிதமான அமைப்பாகும்

Ø படைப்பின் துவக்கத்திலிருந்தே குடும்ப உறவு தந்தை மகன் தூய ஆவியார் ஆகிய மூவொரு கடவுளாக ஒன்றித்திருப்பதின் பிரதிபலிப்பாக இறைவனால் உருவாக்கப்பட்டது.

Ø இந்த அமைப்பில் அன்பு, பாசம், மரியாதை, பொறுப்பு ஆகிவற்றை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து ஒன்றித்து வாழ இறைவனால் அழைக்கப்பட்டுள்ளோம்.

287.      ஒருவர் தன் குடும்பத்தைவிடவும் ஏன் கடவுளை அதிகம் மதிக்கவும் அன்பு செய்யவும் வேண்டும்?

i) மத்.10.37.என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் என கருதப்படத் தகுதியற்றோர். என்னைவிடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.

ii)               தாய் தந்தை நம்மைப் பெற்றெடுத்து வளர்த்திருந்தாலும் நாம் இறைவனுக்கு மட்டுமே சொந்தமானவர்கள் என்பதே மத்.10:37லில் காணப்படும் இறைவார்த்தைகளின் பொருள்.

iii) இவ்வுலகில் நாம் வாழப்போவது சிறிது காலமே. ஆனால் முழுமையாகவும், நித்தியத்திற்கும் ஒன்றித்திருக்கப்போவது விண்ணுலகில் இறைவனோடு மட்டுமே.

எனவே நமக்கு உள்ள உறவுகளில் (கணவன், மனைவி, தாய், தந்தை, பிள்ளைகள், சகோதரர், சகோதரிகள்) மிகவும் முதன்மையானது இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவே.

அதனால் தங்கள் பிள்ளைகள் குருத்துவத்தையோ, அர்ப்பணவாழ்வையோ தெரிவுசெய்தால் பெற்றோர் அவர்களுக்கு மகிழ்வுடன் ஆதரவு அளிக்கவேண்டும்.

288.            பல்வேறு சமூக உறவுகளைப்பற்றி  நான்காம் கட்டளையின் வழிகாட்டுதல் யாது?

i.       நான்காம் கட்டளை மனித உறவுகளின் மாண்பை  வெளிக்கொணர்கிறது.

ii.      நாம் அனைவரும் ஒரே இறைவனின் பிள்ளைகளாக இருப்பதால் அவரை “விண்ணுகில் இருக்கிற எங்கள் தந்தையே என அழைக்கிறோம்.  இவ்வாறு நாம் அயலானோடு கொண்டுள்ள உறவு நெருங்கிய உறவாக மாறுகிறது.

iii.    மேலும் சமூக உறவுகளை எந்த கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும் என்பதை நான்காம் கட்டளை கோடிட்டு காட்டுகிறது.

iv.    நம் உடன்பிறவா சகோதர சகோதரிகளையும் நம் பெற்றோர்களுக்கு பிறந்தவர்களைப்போல் கருதி பாசத்தையும் கனிவையும் காட்டவேண்டும்.

v.      நம் நாட்டில் உள்ள அனைவரும் இந்தியத் தாயின் குழந்தைகள், எனவே அனைவரும் எனது சகோதர சகோதரிகள் என்ற பாகுபாடற்ற பார்வை வேண்டும்.

vi.    திருமுழுக்குப் பெற்ற அனைவரும் “விண்ணகத்திலிருக்கும் எங்கள் தந்தையே” என்று செபிக்கும்போது கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒரே தந்தையின் பிள்ளைகள், கத்தோலிக்கத் திருஅவையாகிய தாயின் பிள்ளைகள் என்ற உறவில் வாழவேண்டும்.

289.      குழந்தைகள் தம் பெற்றோரை ஏன் மதித்து நடக்கவேண்டும்?

i.  நமக்கும் நமது பெற்றோருக்கும் உள்ள உறவு இறைத்தந்தை நமக்கு அளித்தது. இதுவே நாம் நமது பெற்றோரை மதிப்பதற்கு மற்றனைத்திற்கும் மேலான காரணம்.

ii. பெற்றோர் நம்மை இவ்வுலகிற்குக் கொண்டுவந்தவர்கள், நம்மை வளர்த்து ஆளாக்கியவர்கள்.  கணக்கற்ற தியாங்களைச் செய்து நம்மை கண்ணும் கருத்துமாக வளர்த்து நமக்குத் தேவையான கல்வியைக் கொடுத்து, நாம் விரும்பிக்கேட்ட அனைத்தையும் கொடுத்து நல்ல மதிப்புமிக்க நிலைக்கு உயர்த்தியவர்கள்.

எனவே நம் முழு உள்ளத்தோடும் பெற்றோருக்கு மரியாதை செலுத்த வேண்டும், இதுவே நான்காம் கட்டளை நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது. [எபே.3:14பழ.1:8; தோபி.4:3-4; விப.20:12]

290.      குழந்தைகள் தம் பெற்றோரை எவ்வாறு மதித்து நடக்கவேண்டும்?

i.       ஒரு குழந்தை தன் பெற்றோரை அன்பு செய்வதும் நன்றியுடன் இருப்பதுமே அது தன் பெற்றோரை மதிப்பதற்கு அடையாளம்.

ii.     தங்களால் முடிந்த அளவு அவர்களது விருப்பங்களையும்  தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும். தங்களது அன்பால் அவர்களுக்கு ஆறுதலையும் மனநிறைவையும் கொடுக்க வேண்டும் [மாற்.7:10-12].

iii.   நமது உதவி தேவைப்படும் சமயங்களிலும், நோய்வாய்ப்பட்டு துன்புறும்போதும், முதுமையின் இயலாமையிலும் அவர்களை பாரமாகக் கருதாமல் அவர்களுக்கு உண்மையான அன்போடும் அக்கறையோடும் துணை நிற்கவேண்டும், உதவவேண்டும்

ஐந்தாம் கட்டளை

கொலை செய்யாதே

 

291.         கொலை செய்வதற்கும் தற்கொலை செய்துகொள்வதற்கும் ஏன் யாருக்கும் உரிமை கிடையாது?

i)      மனித வாழ்வு கடவுளுடையது, எனவே அது புனிதமானது. நமது உடலையும் உயிரையும் கடவுள் நமக்குக் கொடையாகக் கொடுத்துள்ளார். கொடுத்த அவருக்கு மட்டுமே அதனை எடுத்துக்கொள்ளும் உரிமை உண்டு.

ii)     எனவே பிறரை கொலை செய்யவோ தன்னை அழித்துக்கொள்ளவோ யாருக்கும் அதிகாரம் இல்லை. அப்படிச் செய்தால் அது இறைவனுக்கு எதிரான சாவான பாவம்.

292.        மனிதன் கொலை செய்வதின் அடிப்படைக் காரணம் என்ன?

காயின் ஆபேல் காலம் தொட்டே கொலையைப் பற்றி திருவிவிலியத்தில் காண்கிறோம். கோபமும் பொறாமையுமே கொலை செய்வதற்கும்; மனிதன் தனக்கு அடுத்திருப்பவனை எதிரியாக நினைப்பதற்கும் அடிப்படைக் காரணமாக இருந்துள்ளது

293.        எத்தகைய செயல்களை திருஅவை  ‘சாவான பாவத்திற்குறிய கொலை’ என வகைப்படுத்துகிறது?

Ø  சுயமாக முடிவெடுத்து திட்டமிட்டு செய்யும் கொலை மேலும் அத்தகைய கொலைக்கு உடந்தையாக இருத்தல்.

Ø  கருக்கலைப்பு: கரு உருவான தருணத்திலிருந்து எப்போது செய்தலும் மேலும் அதற்கு துணைபோதலும்

Ø  தற்கொலை, வேண்டுதல் பரிகாரம் என தன் உடலை சேதப்படுத்துதல், இறக்கும் அளவுக்கு போதைப் பொருட்களுக்கு அடிமையாதல்.

Ø  கருணைக் கொலை என்றபெயரில் உடல் ஊனமுற்றோரை, வியாதியால் மரண வேதனையில் துன்பப்படுவோரை செயர்க்கையாக இறக்கச் செய்தல். [ இன்றைய காலக்கட்டத்தில் இதனை இரக்கச் செயலாகவும் மனித நேய தீர்வாகவும் முன்வைக்கின்றனர்.]

Ø  ஒருவரை வேண்டுமென்றே தற்கொலை செய்துகொள்வதற்குத் தூண்டுதல், அதற்குக் காரணமாக இருத்தல், அல்லது அவர் அறியாதவாறு (slow poisoning) அவர் இறப்பதற்கு காரணமாக இருத்தல்

Ø  ஒருவர் மரண ஆபத்தில் இருக்கும்போது அவர் சாகட்டும் என உதவாதிருத்தல்.

Ø  தண்ணீர் மற்றும் உணவு பஞ்சத்தால் மனிதர் இறக்கப் போவதை அறிந்தும் அவர்களைக் காக்க முன்வராமல் இருப்பது சமூக அநீதி மட்டுமல்ல.  அது மாபெரும் குற்றமும்  ஆகும்.

Ø  அதிக/ கந்துவட்டி சுமையாலோ அல்லது ஒருவரின் பேராசையாலோ பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம் இறக்கவோ தற்கொலை செய்துகொள்ளவோ நேர்ந்தால் அதுவும் கொலைக்குச் சமம்.

294.        கொலையைப் பற்றிய பழைய ஏற்ப்பாட்டு காலத்து கருத்துக்கும் கிறிஸ்துவின் போதனைக்கும் உள்ள வேறுபாடு யாது?

‘கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்’ என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள்.  ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ ‘முட்டாளே’ என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; ‘அறிவிலியே’ என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார். மத்.5:21-22

கிறிஸ்து நம் பகைவரை பழிக்குப்பழி வாங்குவதை தவிர்த்து அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்வது கடவுளுக்கு ஏற்ப்புடையது என்பதை புதிய கட்டளையாகப் போதித்தார்.

295.        

 

 

 

 

 

 

 

 

 

செபம் 1

காலை எழுந்தவுடன் செபிக்க

இறைவா உம்மை நான் வணங்கித் தொழுகிறேன்.

என் முழுமனதோடு உம்மை நான் அன்பு செய்கிறேன்.

என்னைப்படைத்து கிறிஸ்தவனாக்கி/கிறிஸ்தவளாக்கியமைக்கு நன்றி கூறுகிறேன்

 கடந்த இரவில் என் உடலுக்கும் ஆத்துமத்துக்கும் யாதொரு தீங்கும் நேரமல் காத்து காலையில் கண்விழிக்கவைத்து இந்த நல்ல நாளை கொடுத்தமைக்காக நன்றி கூறுகிறேன். 

இந்நாளின் செயல்களையெல்லாம் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்

உமது விருப்பத்திற்கேற்ப நடக்க அருள்புரிவீராக.

உமது மாட்சிக்காக என்னை பாவத்திலிருந்தும் எல்லா திமைகளிலிருந்தும் காப்பீராக ஆமென்.

செபம் 2

தானாய் அனாதியாய் சகல நண்மை சொரூபியுமாய் 

ஞானத்தினாலும் பலத்தினாலும் காரனத்தினாலும் எங்கும் வியாபித்திருப்பவருமாய் யாவருக்கும் கதியுமாய்

பொல்லாதவர்களை நரகத்திலே தள்ளி நல்லவர்களுக்கு மோட்சம் கொடுக்கிறவருமாகிய

தந்தை மகன் தூய ஆவியார் ஆகிய மூன்று ஆட்களாய் இருந்தாலும் ஒரே இறைவனாக இருக்கிற  என் ஆண்டவரே தேவரீர் மாத்திரமே மெய்யான கடவுளாய் இருக்கிறபடியினாலே உமக்கு மாத்திரம் செய்யத்தக்க தேவ ஆராதனயை உமக்கே செலுத்துகிறேன்.

இறைவனின் படைப்புகளுக்குள்ளே மேலானவளாய் இருக்கிற புனித மரியாளே நீர் விண்ணுலகவாசிகள் யாவரையும் பார்க்க எண்ணில்லா வரங்களால் நிறப்பப்பட்டு அனைத்துலகுக்கும் அரசியாய் இருப்பதாலும் இயேசுக்கிறிஸ்துவுக்கு திவ்ய தாயாராய் இருப்பதாலும்  புனிதர்கள் அனைவருக்கும் செலுத்த்தக்கூடிய  சாதாரன வணக்கத்தைக்காட்டிலும் சிறப்பான வணக்கத்தை உமக்கு மாத்திரமே செலுத்துகிறோம்.

சகல விண்ணுலக வாசிகளே இறைவனை முகமுகமாய் தரிசித்துக்கொண்டு ஆண்டவருக்கு உகந்தவர்களாய் இருக்கிறபடியாலும், நன்மையிலே நிலைகொண்டவரகளாய் இருப்பதாலும் உங்கள் வேண்டுதல்மன்றாட்டுக்களை  முன்னிட்டு இறைவன் எங்களுக்கு அநேக உதவிகளை அருளுகிறதினாலேயும் திருச்சபையின் ஒழுங்கு முறைப்படி உங்கள் அனைவருக்கும் வணக்கம் செலுத்துகிறோம்.

இறைவா தேவரீர் என் ஆத்துமத்தையும் சரீரத்தையும் ஒன்றுமில்லாமையில்ருந்து உண்டாக்கி இந்த ஆதுமமும் உடலும் பிழைக்கிறதற்குஎன்ன இயலா நன்மைகளை தந்தருளிதினாலே சுவாமி

சுவாமி உமக்கே தோஸ்திரம் உண்டாக்க்கடவது.

மேலும் தேவரீர் இந்த மண்ணுலகிலே வந்து மனிதவராம் செய்து பாடுபட்டு  சிலுவையில் அரையுண்டு மரணத்தை அடைந்த்தினாலே சுவாமி

மேலும் உம் திருமரணதினாலே வந்த அளவில்லத பலனை ஞானஸ்நானத்தின் வழியாக கொடுத்தருளினீரே சுவாமி

சுவாமி உமக்கே தோஸ்திரம் உண்டாக்க்கடவது.

ஞானஸ்நானம் பெற்றபிறகு நான் அநேக முறை பாவங்களைச் செய்திருக்க  அந்த பாவங்களையெல்லாம் பாவசங்கீதன முகாந்திரமாகப் பொறுத்து தெய்வீக உணவாகிய நற்கருணையையும் கொடுத்து காவல் தூதரையும் கட்டளையிட்டு இவை முதலான எண்ணிக்கைக்குள் அடங்காத அநேக சகாய உபகாரங்களை வழங்கிக்கொண்டுவருகிறதினாலே  சுவாமி

சுவாமி உமக்கே தோஸ்திரம் உண்டாக்க்கடவது.

இறைவா தேவரீர் அருளிச்செய்த கற்பனைகளின் படி அடியேன் நடக்கத் தீர்மானித்திருக்கிறபடியாலே என்னிடமுள்ள தீய குணங்களை நீக்கி புண்ணியத்தில் வளர அருள்வீராக.

இதுவெல்லாம் என் சொந்தபலத்தினாலே இயலாதென்பதினாலே தூய கன்னிமையாயே எனக்காக உமது திருக்குமாரனிடம் வேண்டிக்கொள்ளும்.

எனக்கு காவலாக இருக்கிற ஆண்டவரின் தூதரே இறைவனின் திருவருளால் உம்மிடம் ஒப்படைக்கப்பட்ட என்னை ஞான ஒளியில் நட்த்தியருளும்.

நாங்கள் பெயர்கொண்ட புனிதர்களே உங்களைப்போலவே இவ்வுலகில் இறைவணை அன்புசெய்து அவரை வாணகத்தில் கண்ணாரக்கண்டு துதிக்கும் திருவருள் கிடைப்பதாக ஆமென்.

திருச்செபமாலை

ஆரம்ப ஜெபம்

அளவில்லாத சகல நன்மையும் சுரூபியாயிருக்கிற சர்வேசுவரா சுவாமி நீச மனிதருமாய் நன்றியறியாத பாவிகளுமாயிருக்கிற அடியோர்கள் மட்டில்லாத மகிமைப் பிரதாபத்தைக் கொண்டிருக்கிற தேவரீருடைய திரு சந்நிதியிலே இருந்து செபம் பண்ண பாத்திரமாகாதவர்களாயிருந்தாலும் தேவரீருடையஅளவில்லாத தயையை நம்பிக் கொண்டு ,தேவரீருக்கு ஸ்துதி வணக்கமாகவும் புனித தேவமாதாவுக்குத் தோத்திரமாகவும் ஐம்பத்து மூன்று மணிச் செபம் பண்ண ஆசையாயிருக்கிறோம் . இந்தச் செபத்தை பக்தியோடே செய்து பராக்கில்லாமல் முடிக்கத் தேவரீருடைய ஒத்தாசை கட்டளை பண்ணியருளும் சுவாமி . ஆமென் .

பரிசுத்த ஆவி ஜெபம் :

பரிசுத்த ஆவியே தேவரீர் எழுந்தருளி வாரும். பரலோகத்திலே உம்முடைய திவ்விய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும்.

தரித்தர்களுடையே பிதாவே, கொடைகளைக் கொடுக்கிறவரே, இதயங்களின் பிரகாசமே எழுந்தருளி வாரும்.

உத்தம ஆறுதலானவரே, ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தாளியே, பேரின்ப இரசமுள்ள இளைப்பாற்றியே, பிரகாசத்தின் சுகமே, வெயிலின் குளிர்ச்சியே, அழுகையின் தேற்றரவே எழுந்தருளி வாரும்.

 வெகு ஆனந்தத்தோடே கூடியிருக்கின்ற பிரகாசமே உமது விசுவாசிகளுடைய இதயங்களின் உற்பனங்களை நிரப்பும்.

உம்முடைய தெய்வீகமின்றியே மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை.

அசுத்தமாயிருக்கிரதைச் சுத்தம் பண்ணும்.

உலர்ந்ததை நனையும்.

நோவாயிருக்கிரதைக் குணமாக்கும்.

வணங்காதை வணங்கப் பண்ணும்.

குளிரோடிருக்கிரதைக் குளிர்போக்கும்.

தவறினதை செம்மையாய் நடத்தும்.

உம்மை நம்பின உம்முடைய விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும்.

புண்ணியத்தின் பேறுகளையும், நல்ல மரணத்தையும், நித்திய மோட்சானந்த சந்தோசத்தையும் எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.

நம்பிக்கை அறிக்கை

·        விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த / எல்லாம் வல்ல தந்தையாகிய / கடவுளை நம்புகிறேன்.

·        அவருடைய ஒரே மகனாகிய / நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறேன்.

·        இவர் தூய ஆவியாரால் கருவுற்று / தூய கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார்.

·        பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு / சிலுவையில் அறையப்பட்டு / இறந்து அடக்கம் செய்யப்பட்டார்.

·        பாதாளத்தில் இறங்கி / மூன்றாம் நாள் / இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.

·        விண்ணகம் சென்று / எல்லாம் வல்ல தந்தையாகிய / கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.

·        அவ்விடத்திலிருந்து / வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் / தீர்ப்பு வழங்க மீண்டும் வருவார்.

·        தூய ஆவியாரை நம்புகிறேன்.

·        தூய கத்தோலிக்கத் திருச்சபையையும் /

·        புனிதர்களுடைய சமூக உறவையும் நம்புகிறேன்.

·        பாவ மன்னிப்பை நம்புகிறேன்.

·        உடலின் உயிர்ப்பை நம்புகிறேன்.

·        நிலை வாழ்வை நம்புகிறேன். / ஆமென்.

செபமாலை மறைபொருள்கள்

மகிழ்ச்சி மறைபொருள்கள்

1.     கபிரியேல் தூதர் கன்னி மரியாவுக்குத் தூதுரைத்த்தைத் தியானித்து தாழ்ச்சி என்ற வரத்தைக் கேட்டு செபிப்போம்.

2.     மரியாள் எலிசபெத்தைச் சந்தித்ததைத் தியானித்து பிறரன்பு என்ற வரத்தைக்கேட்டு செபிப்போம்.

3.     இயேசு பிறந்ததைத் தியானித்து எளிமை என்ற வரத்தைக் கேட்டு செபிப்போம்.

4.     இயேசுவைக் கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததைத் தியானித்து பணிவு என்றவரத்தைக் கேட்டு செபிபோம்.

5.     காணாமற் போன இயேசுவை தேவாலயத்தில் மூன்றாம் நாள் கண்டுபிடித்த்தைத் தியானித்து இறைவனை எந்நாளும் தேடும் வரத்தைக் கேட்டு செபிபொம், 

ஒளியின் மறைபொருள்

1.     இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்றது. (மத்தேயு 3:16-17 - வரம்:குணப்படுத்தும் ஆவியானவர்)

2.     கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியது. (யோவான் 2:11 - வரம்:நம்பிக்கை)

3.     இயேசு இறையரசை பறைசாற்றி, மனந்திரும்ப அழைத்தது. (மாற்கு 1:14-15 - வரம்:மனம்மாற்றம்)

4.     இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்தது. (மாற்கு 9:3,7 - வரம்:புனிதம்)

5.     இயேசு இறுதி இரவுணவின்போது நற்கருணையை ஏற்படுத்தியது. (மத்தேயு 26:26-28 - வரம்:ஆராதணை)

துயர மறைபொருள்கள்

1.     இயேசு இரத்த வியர்வை சிந்தியது. (மத்தேயு 26:42 - வரம்:பாவங்களுக்காக மனத்துயர் அடைய)

2.     இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிப்பட்டது. (மாற்கு 15:15 - வரம்:புலன்களை அடக்கி வாழ)

3.     இயேசு முள்முடி தரித்தது. (மத்தேயு 27:29-30 - வரம்: ஒறுத்தல், நிந்தை தோல்விகளை மகிழ்வுடன் ஏற்க)

4.     இயேசு சிலுவை சுமந்து சென்றது. (யோவான் 19:16-17 - வரம்: வாழ்க்கைச் சுமையை பொறுமையோடு ஏற்று வாழ)

5.     இயேசு சிலுவையில் அறையப்பட்டது. (யோவான் 19:30 - வரம்:இயேசுவை அன்பு செய்யவும், பிறரை மன்னிக்கவும்)

மகிமை மறைபொருள்கள்

1.     இயேசு உயிர்த்தெழுந்தது. (மத்தேயு 28:5-6 - வரம்:உயிருள்ள விசுவாசத்துடன் வாழ)

2.     இயேசுவின் விண்ணேற்றம். (லூக்கா 24:50-51 - வரம்:நம்பிக்கையுடன் விண்ணக வாழ்வைத் தேட)

3.     தூய ஆவியாரின் வருகை. (திருப்பாடல் 2:4 - வரம்: ஆவியாரின் ஒளியையும் அன்பையும் பெற)

4.     இறையன்னையின் விண்ணேற்பு. (திருவெளிப்பாடு 12:1 - வரம்:நாமும் விண்ணக மகிமையில் பங்குபெற)

5.     இறையன்னை விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப் பெற்றது. (லூக்கா 1:49,52 - வரம்:அன்னையின் மீது ஆழ்ந்த பக்தி கொள்ள)

 

 

 

 

செபமாலையின் வெவ்வேறு மறைபொருள்களை தியானிக்கும் கிழமைகள் பின்வருமாறு:

கிழமை

காலங்கள்

மறைபொருள்கள்

ஞாயிற்றுக்கிழமை

பொதுக் காலம் & பாஸ்கா காலம்:

மகிமை மறைபொருள்கள்

திருவருகைக் காலம் &

கிறிஸ்து பிறப்புக் காலம்:

மகிழ்ச்சி மறைபொருள்கள்

தவக் காலம் முதல் ஞாயிறு → குருத்து ஞாயிறு:

துயர மறைபொருள்கள்

திங்கட்கிழமை

அனைத்துக் காலங்களிலும்

மகிழ்ச்சி மறைபொருள்கள்

செவ்வாய்க்கிழமை

அனைத்துக் காலங்களிலும்

துயர மறைபொருள்கள்

புதன்கிழமை

அனைத்துக் காலங்களிலும்

மகிமை மறைபொருள்கள்

வியாழக்கிழமை

அனைத்துக் காலங்களிலும்

ஒளியின் மறைபொருள்கள்

வெள்ளிக்கிழமை

அனைத்துக் காலங்களிலும்

துயர மறைபொருள்கள்

சனிக்கிழமை

அனைத்துக் காலங்களிலும்

மகிமை மறைபொருள்கள்

 

செபமாலை முடிவில்

அதிதூரான புனித மிக்கேலே, தேவ தூதர்களான புனித கபிரியேலே, ராபேலே, திருத்தூதர்களான புனித ராயப்பரே, சின்னப்பரே அருளப்பரே, நாங்கள் எத்தனைதான் பாவிகளாக இருந்தாலும் நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த ஐமத்து மூன்று மணி செபத்தை உமது தோஸ்ர\திரங்களுடன் ஒன்றாகக்கூட்டி தேவமாதாவின் பாதத்தில் காணிக்கையக வைக்க உம்மை மன்றாடுகிறோம். கற்தர் கற்பித்த செபம்.

நற்கருணை வாங்கியபின்

கிறிஸ்துவின் ஆத்துமமே என்னை அர்ச்சித்தருளும்

கிறிஸ்துவின் திருச்சரிரமே என்னை மீட்டருளும்.

கிறிஸ்துவின் திருஇரத்தமே என்னை உமது வசமாக்கும்

கிறிஸ்துவின் விலாவிலிருந்து ஓடிவந்த திருத் தண்ணீரே என்னக் கழுவியருளும்

கிறிஸ்துவின் திருப்பாடுகளே என்னைத் தேற்றியருளும்

ஓ என் நல்ல இயேசுவே எனக்கு செவி சாய்த்தருளும்

உம் திருக் காயங்களுக்குள் என்னைவைத்து மறைத்துக்கொள்ளும்

உம்மைவிட்டு ஒருபோதும் என்னைப் பிரிய விடதேயும்

தீய சக்திகளிடமிருந்து என்னைக் காத்தருளும்

மரணவேளையில் என்னை அழைத்து

உம் சன்நிதிக்குட்பட்ட அனைத்து புனிதர்களோடும்

உம்மை நித்தியத்திற்கும் போற்றிப் புகழும் பேற்றினை

என் தகுதியின்மையைப் பாராது

உமது பரிவிரக்கத்தை முன்னிட்டு எனக்குத் தந்தருளும்.  ஆமென்.