மறைக்கல்வி என்பது

 

துவக்கத்தில் மறைக்கல்வியை திருச்சபை முழுமைக்குமான பணியாக திருத்தூதர்களுக்கு அளிக்கப்பட்டது.  மாற் 16: 15 “இயேசு அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். 16நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்”. நற்செய்தியை உலகெங்கும் சென்று கற்பிப்பதன் வழியாக கிரிஸ்துவின் உடலாகிய திருச்சபையை கட்டியெழுப்பும் படி தனது திருத்தூதர்களுக்கு கட்டளையிட்டர்.  இயேசுகிறிஸ்து தனது திருத்தூதர்களுக்கு கொடுத்த அதே கட்டளையை பரிசுத்த ஆவியால் திருமுழுக்குப் பெற்ற  ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் கொடுத்துள்ளார். [4]  மறைக்கல்வி என்பது உயிரோட்டமான திட்டவட்டமான ஒழுங்கு முறையில் (organic and systematic) கிறிஸ்துவின் போதனைகளை முழுமையாக சிறுவர்கள் துவங்கி முதியவர் வரை  கற்பிபதே ஆகும்.  [5]  மறைக்கல்வி என்பது சில திட்டவட்டமான கூறுகளை அடிப்படையாகக் கொண்டது. அவை

v நற்செய்தி போதனைகளை அறிவிப்பதன் மூலம் நம்பிக்கையை விதைப்பது,

v நம்பிக்கை கொள்வதற்கான் அவசியத்தை அறிவுறுத்தல்

v கிறிஸ்துவுக்குள் வாழும் வாழ்வை சுவைக்கச் செய்தல்

v திருவருட் சாதனங்களை ஏற்கச் செய்தல்

v இவை அனைத்தையும் திருச்சபை சமூகத்தின் அங்கமாக்குதல்

v மறைப்பணி மற்றும் திருத்தூது (அப்போஸ்தலிக்க) பணிகளுக்கு சான்று பகர்தல்.[6]

மறைக்கல்வி என்பது திருச்சபையின் பிரிக்கமுடியாத அங்கமாகும். குறிப்பாக திருச்சபையை உலகமெங்கும் நிறுவும் மற்றும் உலகில் உள்ள எல்லா இனத்தாரையும் திருச்சபைக்குள் கொண்டுசேர்க்கும் பணியிலும் மறைக்கல்வி பெரும் பங்கு ஆற்றவல்லது.[7] திருச்சபையை புதுப்பித்தலிலும், அச்தற்கு புத்துயிர் அளிப்பதிலும் மறைக்கல்விக்கு சிற்ப்பான பங்கு உள்ளது. திருச்சபையின்  அருட்தந்தையர்களாக வாழ்ந்து பின்பு புனிதர்களாக உயர்த்தப்பட்ட புனித சிரில், புனித கிறிஸ்தொத்தம் அருளப்பர், புனித அம்புரோஸ் புனித அகுஸ்தினார் மற்றும் பல புனிதர்கள் எழுதியுள்ள திருச்சபை மற்றும் விசுவாச கொட்பாடுகள் மறைக்கல்வியின் ஆதாரமாக உள்ளன.[8,9]  இந்த கால கட்டங்களில் இருந்து 1985 வரை பல திருத்தந்தையர்கள்,  இரண்டாம் வத்திகான் சங்கம் போன்ற அமர்வுகள் மறைக்கல்வியை மென்மேலும் பலம் வாய்ந்ததாக வடிவைமத்துள்ளார்கள்.  திருச்சபைக்கும், கிறிஸ்துவ சமூகங்களுக்கும் 1980கள் ஒரு சோதனையான அல்லது சவாலான காலகட்டம். இரண்டாம் வத்திகன் சங்க அமர்வுக்குப்பின் (1962-1965) பெரிய கலாச்சார மாற்றங்களின் விளைவாக கீழ்கண்ட கேள்விகள் மட்டில் பெரிதும் கிறிஸ்தவர்கள் குழப்பத்திலும், சங்கடத்திலும் இருந்தனர். அவை

அ)  கிறிஸ்துவர்கள் அடிபடையில் எதை விசுவசிக்கிறார்கள்?

ஆ)  கத்தோலிக்க திருச்சபை என்ன போதிக்கிறது?

இ) கத்தோலிக்க திருச்சபை எதையும் போதிக்கும் நிலையில் உள்ளதா?

ஈ) மனித கலாச்சாரம் அதன் அஸ்த்திவாரத்திலிருந்து பெரிதும் மாறுபட்ட சூழலில் திருச்சபையின் கோட்படுகள் அர்த்தமுள்ளவைகளா;  வாழத்தகுந்தவைகளா?

நல்ல கிறிஸ்தவ வாழ்வு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் மத்தியிலும் கூட இத்தகைய கேள்விகள் எழ ஆரம்பித்த காலம்.  இத்தகைய காலகட்டத்தில்தான் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் ஒரு சவாலான முடிவை எடுத்தார்.  உலகத்திலிருக்கும் அனைத்து ஆயர்களும் ஒன்றிணைந்து மேற்குறிப்பிட்ட அடிப்படை கேள்விகளுக்கு முறையான பதில்களை உள்ளடக்கிய ஒரு நூலை அல்லது பதில்களின் தொகுப்பை (compendium) எழுதவேண்டுமென்று.    திருத்தந்தை 2ம்ஜான் பால்,  திருதந்தையாக திருச்சபையை வழிநடத்திய காலத்தில் திருச்சபைக்கு அளித்த மிக உறுதியான, அத்தியவசியமான கொடைதான் கத்தொலிக்க திருச்சபையின் மறைக்கல்வி.  ஆங்கிலத்தில் Catechism of the Catholic Church (CCC) என்று அழைக்கப்படுகிறது.

1985: கத்தோலிக்க ஆயர்களின் சிறப்பு அமர்வு (Extraordinary Synod of Catholic Bishops) கத்தோலிக்கதிருச்சபையின் மறைக்கல்வி பற்றிய பரிந்துரையை திருத் தந்தை 2ம் ஜான் பால் அவர்களிடம் சமர்ப்பித்தது. 

1986: திருத்தந்தை 2ம் ஜான் பால் 1986ல் கர்தினால்மார்கள் மற்றும் ஆயர்கள் அடங்கிய ஆய்வுக் குழு ஒன்றை நிறுவி கத்தோலிக்க மறைக்கல்வி பற்றிய அனைத்து சித்தாந்தங்களையும் உள்ளடக்கிய (Compendium of Catholic Doctrine)  தொகுப்பு ஒன்றை வடிவமைக்குமாறு பணித்தார். 

1989: ஆய்வுக்குழு தாங்கள் வடிவமைத்த மறைக்கல்விக்கான ஆவணத்தை உலகமெங்கும் உள்ள ஆயர்களுக்கு அனுப்பி அவர்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் அனுப்புமாறு வேண்டினர். 

1990: ஆயர்கள் அனுப்பிய 24,000 க்கும் மேற்பட்ட பரிந்துரைகளையும் ஆய்வு செய்தனர். 

1991: ஆயர்கள் பரிந்துரை செய்த கருத்துக்களையும் உள்ளடக்கி, மறைக்கல்விக்கான இறுதி படிவத்தை ஆவணமாக திருத்தந்தையிடம் சமர்பித்தனர். 

1992: திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல், ஜுன் மாதம் 25ம் நாள்  அந்த ஆவணத்தை உறுதிசெய்து அதிகாரப்பூர்வமாக அதற்கு ஒப்புதல் அளித்தார். 

1992: திருத் தந்தை 2ம் ஜான் பவுல், டிசம்பர் மாதம் 8ம் நாள் அந்த ஆவணத்தை அப்போஸ்தலிக்க சாசனத்தின் ஒரு அங்கமாக பிரகடனம் செய்தார்.

 

101  இயேசு நம்மை மீட்பதற்காக ஏன், மற்றெந்த வழிகளையும் விட, சிலுவைச் சாவை தேர்ந்தெடுத்தார்? 

 i.    இயேசுவின் காலத்தில் சிலுவையில் அறைந்து கொல்வது என்பது மற்றெல்லா தண்டனைகளைக் காட்டிலும் அவமானத்துக்குரியதாகவும், மிகக் கொடூரமானதாகவும் கருதப்பட்டது.  (உதாரணமாக ரோமைக் குடிமக்களை, அவர்கள் எத்தனை பெரிய தவறு செய்திருந்தாலும், அவர்களை சிலுவை மரணத்துக்கு உட்படுத்துவது தடை செய்யப்பட்டிருந்தது – அத்தனை அவமானச் சாவாகச் சிலுவைச்சாவு கருதப்பட்டது)

ii.    இயேசுவை கொலை செய்த இடமும் (சிலுவை), விதமும், மிகவும் அவமானத்துக்குறியதாக மட்டுமல்ல, மிகவும் கொடூரமானதாகவும் இருந்தன. எசா53:2-10.

iii.    மனிதர் அனைவரின் பாவங்களையும் போக்கி அனைவரையும் தந்தையுடன் ஒப்புரவாக்கவும், விண்ணரசை அவர்கள் உரிமையாக்கிக்கொள்ளவும், இதுவே உச்சக்கட்ட பரிகாரப்பலியாக இயேசு, நமது மீட்பர், கருதினார். [613-617, 622-623]

iv.    பிலி2:5-8 கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.

v.    தான் மனிதர்மேல் வைத்திருந்த அன்பை முழுமையாக வெளிப்படுத்த விரும்பிய தந்தை தன் ஒரே மகன் இயேசுவை சிலுவையில் ஆணிகளால் அறையப்பட்டு உயிர் துறக்க ஒப்படைத்தார்.

vi.    ” என் கஷ்டத்தையும், வேதனையையும் பற்றிக் கடவுளுக்கு என்ன தெரியும்” என எந்த மனிதரும் கூற முடியாத அளவுக்கு துன்பத்தை இயேசுவின் மேல் வைத்தார்.

102 “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்  என்று இயேசு கூறுவதன் பொருள் என்ன? கிறிஸ்தவர்கள் துன்பப்பட வேண்டும் என கடவுள் விரும்புகிறாரா?

கிறிஸ்தவர்கள் துன்பத்தை நாடிச்செல்லவேண்டும் என்பது இதன் பொருள் அல்ல;  கடவுள் மனிதர்கள் துன்பப்பட வேண்டும் என்று விரும்புவதும் இல்லை.  ஆனால் எதிர்பாராமல் அல்லது எதிர்பாராத சூழலில் நாம் துன்புற நேர்ந்தால் அந்த துன்பத்தை இயேசுவின் துன்பங்களோடு இணைத்து கடவுளுக்கு ஒப்புக்கொடுப்பது இறைவனுக்கு ஏற்புடைய செயலாகும் என்பதை 1பேது2:21ல் அறிந்துகொள்கிறோம் – “கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்று ஒரு முன்மாதிரியை வைத்துச் சென்றுள்ளார். எனவே நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்” . [618]

v நமக்கும் பிறருக்கும் ஏற்படும் துன்பங்களை நீக்குவது ஒரு கிறிஸ்தவனின் கடமை.  இருப்பினும் துன்பங்கள் உலகில் இருக்கத்தான் செய்யும்.

v நமது துன்பங்களை மனமுவந்து ஏற்றுக்கொள்வதும், தாங்கிக்கொள்வதும்; பிறர் துன்பங்களில் அவர்களுக்கு தோள் கொடுப்பதும் நல்ல கிறிஸ்தவப் பண்பு.

v அப்படிச் செய்யும் போது நமது துன்பங்கள் இயேசுவின் அளவுகடந்த அன்பில் ஐக்கியமாகி அதுவே ஒரு ஆன்மீக சக்தியாகி இந்த உலகத்தில் நல்ல மாற்றத்தைக் கொண்டுவரும்.

103 இயேசு இறந்தது உண்மையா?  அல்லது இறந்தது போல் ஒரு மாயையை உண்டாக்கி உயித்ததுபோல் எழுந்து வந்தாரா?

இயேசு இறந்ததும் அடக்கம் செய்யப்பட்டதும் முற்றிலும் உண்மை என்பது பல ஆதாரங்கள் வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளன;  அவற்றிர்க்கு நம்பத்தகுந்தவர்களால் சான்றும் பகரப்பட்டுள்ளன. [627]

“யோவா19:33-34 33பின்பு அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை. 34ஆனால் படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார் உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.” எனவே இயேசு சிலுவையில் மரித்தார் என்பது யூதர்களாலேயே பிரகடனப்படுத்தப்பட்ட நிகழ்வு.

104  கிறிஸ்து உயிர்த்ததை எற்றுக்கொள்ளாத ஒருவன் கிறிஸ்தவனாக இருக்க முடியுமா?

நிச்சயமாக முடியாது.

 “1கொரி15:14  கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்.” எனவே கடவுளின் மீட்புத் திட்டமே இயேசு மரித்து உயிர்த்தலே.  இந்த அடிப்படை வேத சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாத எவரும் கிறிஸ்தவராக இருக்கவே முடியாது. [631, 638, 651]

 

105  கிறிஸ்து உயிர்த்ததை சீடர்கள் எவ்வாறு நம்பினார்கள்

முதலில் நம்பிக்கை இழந்த சீடர்கள் பின்பு அவர் உயிர்த்ததை நம்பினார்கள். ஆம் இயேசு உயிர்த்தபின் பல இடங்களில் பல நேரங்களில் அவர்களுக்குத் தோன்றி அவர்களோடு உரையாடினார்;  அவர் தங்களோடு உயிருடன் இருப்பதை உணர்ந்தார்கள்.  உயிர்த்த இயேசுவோடு அவர்கள் கொண்டிருந்த அந்த உறவுதான் அவர்களிடமிருந்த அவநம்பிக்கை, பயம், விரக்தி, என்ற கட்டுகளை அறுத்தெறிந்தது; அந்த உறவுதான் மகிழ்ச்சி நிறைந்த நம்பிக்கையை அவர்களில் நிரப்பியது. இயேசுவின் இறப்பையும் உயிர்ப்பையும் உறுதியாக நம்பினார்கள், அறிக்கையிட்டார்கள்.  [640-644, 656]

லூக்24:21 எம்மாவு சீடர்களில் ஒருவரான கிளயோப்பா “அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம்.”

இயேசுவின் கொடூரமான சாவு அவருடைய சீடர்களின் நம்பிக்கை எதிபார்ப்பு அனைத்தையும் சுக்குநூறாக தகர்த்தெறிந்துவிட்டது.  இயேசுவின் கொடூரமான சிலுவைச் சாவிற்குப் பின் அவரது சீடர்கள் அவரைவிட்டு ஓடிவிட்டனர்;  பூட்டிய கதவுகளுக்கு பின்னே அடைபட்டுப் போனார்கள்.  இயேசுவின் மேல் வைத்திருந்த அனைத்து நம்பிக்கையையும் இழந்து போனார்கள்.  அதே சீடர்கள்தாம் பின்பு இயேசு உயிர்த்ததை உறுதியாக நம்பினார்கள்.

லூக்24: 31அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள்.  36சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று அவர்களை வாழ்த்தினார்.  50பின்பு இயேசு பெத்தானியா வரை அவர்களை அழைத்துச் சென்று தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார். 51அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார். 52அவர்கள் அவரை வணங்கிவிட்டுப் பெரு மகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள்.

யோவா20: 27பின்னர் அவர் தோமாவிடம், “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்” என்றார்.

28தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்றார்.

30வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார்.  31இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.

106   இயேசு உயிர்த்ததற்கு ஆதாரங்கள் உள்ளனவா?

இயேசு உயிர்த்ததற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை. ஆனால் இயேசுவின் காலத்தில் வாழ்ந்தவர்கள் மற்றும்  இயேசுவின் சீடர்கள் அளித்த மிக உறுதியான சாட்சியங்களும், இயேசுவின் வாழ்வில் இறுதிநாட்களில்  எருசலேமில் நடந்த நிகழ்வுகளும், வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள சான்றுகளும் இயேசு மரித்த மூன்றாம் நாள் உயிர்த்ததை மிக உறுதியாக எடுத்துரைக்கின்றன. [639-644, 647, 656-657]

v  1கொரி15: 3நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே; மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, 4அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். 5பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். 6பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்து விட்டனர். 7பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். 8எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.

v  லூக்24: 2கல்லறை வாயிலிருந்து கல்புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். 3அவர்கள் உள்ளே நுழைந்தபோது அங்கே ஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை. 4அதைக் குறித்து அவர்கள் குழப்பமுற்றார்கள். அப்போது திடீரென, மின்னலைப் போன்று ஒளிவீசும் ஆடை அணிந்த இருவர் அவர்களுக்குத் தோன்றினர். 5இதனால் அப்பெண்கள் அச்சமுற்றுத் தலைகுனிந்து நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அப்பெண்களை நோக்கி, “உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்? என்றனர்.

v  யோவா20: 6அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார் 7இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. 8பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார்.

v  அன்றிலிருந்து இன்றுவரை பலரும் இயேசுவின் உயிர்த்தெழுந்த அனுபவத்தை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். இயேசுவும் நம்மோடு வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.

107   இயேசு உயிர்த்தபின், அவர் உலகில் வாழ்ந்தபோது மனிதரால் தொட்டு உணரக்கூடிய, உடலைப் பெற்றிருந்தாரா?

v இயேசு தம் சீடர்களை தன் உடலை தொட்டு உணர அனுமதித்தார்

v அவர்களோடு உணவருந்தினார்

v தனது பாடுகளின் போது ஏற்பட்ட காயங்களைக் காட்டினார்

v இருப்பினும் அது இந்த உலகைச் சார்ந்த உடல் அல்ல, மாறாகத் தன் தந்தையின் விண்ணக அரசைச் சார்ந்த உடலாக  அது இருந்தது.

v இடம் மற்றும் காலத்தின் நியதிகளுக்கு உட்பட்ட மனித உடல் அல்ல அது. எனவேதான்  அவரால்

q மூடிய கதவுகள் வழியாக உள்ளே வரமுடிந்தது

q சீடர்களுக்கு பல இடங்களில் காட்சியளிக்க முடிந்தது

q பல சமயங்களில் சீடர்களால் அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. [645-646]

Ø யோவா20:14 இப்படிச் சொல்லிவிட்டு அவர் (மகதலா மரியா) திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால் அங்கே நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்து கொள்ளவில்லை. (மத் 28:1 - 10; மாற் 16:1 - 8; லூக் 24:1 - 12)

Ø லூக்24:14அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே சென்றார்கள். 15இப்படி அவர்கள் உரையாடிக் கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார். 16ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன.

எனவே உயிர்ப்பு என்பது அவர் இவ்வுலக வாழ்வுக்கு மீண்டும் வருவதன்று. மாறாக வேறு ஒரு வாழ்வுக்குள் அதாவது விண்ணக வாழ்வுக்குள் நுழையும் வழியாகவே  இயேசுவின் உயிர்ப்பு இருந்தது.  அது மாட்சிமைக்குறிய உடல்; தன் தந்தையோடு அரசாட்சி செய்யும் உடல்.  உரோ6:9-10 9இறந்து உயிருடன் எழுப்பபட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்; இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல என நாம் அறிந்திருக்கிறோம். 10அவர் இறந்தார்; பாவத்தை ஒழிக்க ஒரே ஒருமுறை இறந்தார். இப்போது அவர் வாழ்கிறார்; அவர் கடவுளுக்காகவே வாழ்கிறார்.

108 இயேசுவின் உயிர்ப்பு இந்த உலகத்தில் எத்தகைய மாற்றத்தைக் கொண்டுவந்தது?

சாவு என்பது நமது வாழ்வின் முடிவல்ல என்ற நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொண்டுவந்தது.  சாவு இயேசுவின் மீது மட்டுமல்ல அவரில் நம்பிக்கை வைத்துள்ள நம் அனைவரின் மீதும் கூட ஆட்சி செலுத்த முடியாது. . [655, 658]

v  உரோ6:11அவ்வாறே, நீங்களும் பாவ வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இறந்தவர்கள்; கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்கள் என்பதை எண்ணிக் கொள்ளுங்கள்.. 14ஏனெனில் நீங்கள் இப்போது சட்டத்துக்கு உட்பட்டவர்கள் அல்ல; மாறாக, அருளின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள்.

109    இயேசுவின் விண்ணேற்றம் என்பதன் பொருள் என்ன? இயேசுவின் விண்ணேற்றம் நமக்கு விடுக்கும் செய்தி என்ன?

இறைத்தன்மை மறைக்கப்பட்டு, சாதாரண மனிதத் தோற்றத்தோடு நாற்பது நாட்களாக தம்மைத் திருத்தூதர்களுக்குக் காண்பித்த பிறகு கிறிஸ்து விண்ணேற்றம் அடைந்து தந்தையின் வலப்பக்கத்தில் அமர்ந்தார். தந்தையோடும் தூய ஆவியோடும் நித்தியத்திற்கும் வாழ்கிறார்.  இயேசுவின் விண்ணேற்றத்தோடு நம் கண்களால் மனிதத் தோற்றத்தில் இந்த உலகில் அவரைப் பார்ப்பது முடிவுக்கு வருகிறது. தனது விண்ணேற்றத்தால் இயேசு மனுக்குலம் முழுவதோடும்கடவுளின் மாட்சியில் நுழைகிறார்.  யோவா12:32 “நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும் போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்”.  இயேசுவின் விண்ணேற்றத்தால் தந்தையாம் கடவுள், மனித சாயலில் தன் மகன் வழியாக மனிதரோடு இன்னும் நெருக்கமாகிறார். [659-667]

i.      விண்ணேற்றத்திற்குப்பின் தமது மனிதத் தன்மையோடு இறை மகனுக்குரிய நிலையான மாட்சியில் ஆட்சிபுரியும் ஆண்டவராக உள்ளார். கொலோ1:16 ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. 

ii.      இறைத் தந்தையிடம் நமக்காக பரிந்து பேசுபவராக இருக்கிறார். மேலும் நமக்காக அவர் ஏற்பாடு செய்துள்ள இடத்திற்கு நாம் ஒரு நாள் சென்றடைவோம் என்னும் எதிநோக்கை நமக்குத் தருகிறார்.

iii.      திப1:11“கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்”.  ஆம் உலகம் முடியும் போது வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட இயேசு மீண்டும் வருவார்.

110   இயேசு உலகனைத்திற்கும் ஆண்டவர் என ஏன் கூறுகிறோம்?

உலகமும் அதில் உள்ள அனைத்தும் அவருக்காகவே படைக்கப்பட்டன.   மனுக்குலத்தை மீட்டவரும், அதை தீர்ப்பிட இருப்பவரும் அவரே.  அனைவரும் மண்டியிட்டு ஆராதிக்கப்பட வேண்டியவரும் அவரே. [668-674, 680]

யோவான் 1:3 அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை.   கொலோ1:16 ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன.

கொரிந்தியர் 8:6 ஆனால் நமக்குக் கடவுள் ஒருவரே; அவரே நம் தந்தை. அவரிடமிருந்தே அனைத்தும் வருகின்றன; அவருக்காக நாம் இருக்கின்றோம். அவ்வாறே, நமக்கு ஆண்டவரும் ஒருவரே; அவரே இயேசு கிறிஸ்து. அவர் வழியாகவே அனைத்தும் வருகின்றன; அவர் மூலமாகவே நாம் வாழ்கிறோம்.

லூக் 21:26-28 ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.” ((மத் 24:29 - 31; மாற் 13:24 - 27)

பிலிப்பியர் 2: 10-11 ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக “இயேசு கிறிஸ்து ஆண்டவர்” என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

 

111    உலக முடிவு எவ்வாறு இருக்கும்?

உலகம் முடியும் போது அனைவரும் காண இயேசு கிறிஸ்து மாட்சியோடு வானிலிருந்து இறங்கி வருவார்[675-677]

மத்24:3-14; மாற் 13:3 - 13; லூக் 21:7 – 19; திவெ 21:4

      i.        பலர் என் பெயரை வைத்துக் கொண்டு வந்து, ‘நானே மெசியா’ என்று சொல்லிப் பலரை நெறி தவறச் செய்வர்.

    ii.        போர் முழக்கங்களையும் போர்களைப்பற்றிய செய்திகளையும் கேட்கப் போகிறீர்கள்.

   iii.        நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பல இடங்களில் பஞ்சமும் நில நடுக்கங்களும் ஏற்படும்.

   iv.        பின்பு உங்களைத் துன்புறுத்திக் கொல்வதற்கென ஒப்புவிப்பர். என் பெயரின் பொருட்டு எல்லா மக்கள் இனத்தவரும் உங்களை வெறுப்பர். அப்பொழுது பலர் நம்பிக்கையை இழந்துவிடுவர்; ஒருவரையொருவர் காட்டிக்கொடுப்பர்; ஒருவரையொருவர் வெறுப்பர்.

    v.        நெறிகேடு பெருகுவதால் பலருடைய அன்பு தணிந்துபோகும்.

   vi.        உலகமெங்கும் உள்ள எல்லா மக்களினத்தாரும் ஏற்றுக்கொள்ளுமாறு விண்ணரசைப்பற்றிய இந்நற்செய்தி உலகமெங்கும் அறிவிக்கப்படும்.

  vii.        அதன் பின்பு முடிவு வரும்.

viii.        இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்.

112    உலகின் முடிவில் வாழ்வோரையும் இறந்தோரையும் கிறிஸ்து எவ்விதம் தீர்ப்பிடுவார்?

i.    மத்25:31-46  31“வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். 32எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர். 33ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார். 34பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.  41பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். 46இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்.

ii.    மத்தேயு 3:12; லூக்கா 3:17.  அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார்; தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்”

iii.    மத்தேயு 13:30,40. அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், ‘முதலில் களைகளைப் பறித்துக் கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள். எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும்.

iv.    1 கொரிந்தியர் 3:13. ஆனால், அவரவருடைய வேலைப்பாடு தெரிந்துவிடும்; தீர்ப்பு நாள் அதைத் தெளிவுப்படுத்தும். அந்நாள் நெருப்பு மயமாய் வெளிப்படும். அந்நெருப்பு அவரவருடைய வேலை எத்தகையது என்பதைக் காட்டும்.

v.    2 கொரிந்தியர் 5:10 ஏனெனில் நாம் அனைவருமே கிறிஸ்துவின் நடுவர் இருக்கை முன்பாக நின்றாக வேண்டும். அப்போது உடலோடு வாழ்ந்தபோது நாம் செய்த நன்மை தீமைக்குக் கைம்மாறுபெற்றுக் கொள்ளுமாறு ஒவ்வொருவரின் செயல்களும் வெளிப்படும். [678-679, 681-682]

அதிகாரம் - 3

தூய ஆவியாரை விசுவசிக்கிறேன்

113    “தூய ஆவியாரை நம்புகிறேன்” எனத் திருச்சபை அறிக்கையிடுவதின் பொருள் என்ன?

மூன்றாம் ஆளாகிய கடவுள் தூய ஆவியார் எனவும்; இவர் தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படுகிறவர் எனவும் விசுவசித்து, அறிக்கையிட்டு அவரை வழிபடுதலுமே “தூய ஆவியாரை நம்புகிறேன்” என்பதன் பொருள் ஆகும். [683- 686]

v தூய ஆவி நம் இதயங்களில் பொழியப்ப்டும் போது  ‘விண்ணகத் தந்தையின் பிள்ளைகள் நாம் என்ற’ பேற்றை பெற்றுள்ளோம் என்பதை அறிந்து கொள்கிறோம்.

v தூய ஆவியாரின் வல்லமையை நாம் பெறும் போது இந்த உலகத்தின் போக்கை நம்மால் மாற்ற இயலும்.

v இயேசு தான் இறப்பதற்கு முன் தன் சீடர்களுக்கு ஒரு உறுதி அளித்தார். யோவா14:  நான் உங்களை விட்டு பிரிந்தபின் “உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்”.  பெந்தகோஸ்தே நாளன்று தூய ஆவியார் சீடர்கள்மேல் இறங்கி வந்தபோது இயேசு கூறியதன் பொருளை உணர்ந்துகொண்டார்கள்.

v இறைவாக்கு உரைக்கவும், நோயாளிகளைக் குணப்படுத்தவும், பல வல்ல செயல்கள் செய்யவும் அவர்களால் முடிந்தது.  தாங்கள் கொண்டிருந்த விசுவாசத்தின் மட்டில் மகிழ்ச்சியையும், தூய ஆவியின் வல்லமையையும் அறிந்துகொண்டார்கள்.

 

114    இயேசுவின் வாழ்வில் தூய ஆவியாரின் பங்கு என்ன?

   i.    காலங்களின் தொடக்கம் முதல் இறுதிவரை தந்தை தம் மகனை அனுப்பும் போதெல்லாம் தூய ஆவியாரையும் அனுப்புகிறார்.

 ii.    தூய ஆவியாரின் துணையின்றி நாம் இயேசு கிறிஸ்துவை அறிந்துகொள்ள முடியாது.(யோவா15:26)

iii.    இயேசுவின் இவ்வுலக வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் தூய ஆவியாரின்  செயலைக் காண முடியும்.  [689-691, 702-731]

v தூய ஆவியார்தான் இயேசு மரியாளின் உதிரத்தில் உற்பவிப்பதற்கு காரணமானவர் (மத்1:18).

v தூய ஆவியார்தான் இயேசு கடவுளின் மகன் என்று சான்று பகர்ந்தார்,

Ø இயேசு திருமுழுக்குப் பெற்று எழுந்தபோது  லூக்3: 22தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்”

Ø லூக்4: 18-19“ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.”

v இவ்வுலக வாழ்வில் தூய ஆவியானவரே இயேசுவை வழிநடத்தினார் மாற்1:12 உடனே தூய ஆவியால் அவர் பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

v இவ்வுலக வாழ்வில் இறுதிவரை இயேசுவுக்குத் துணை நின்றார் (யோவா19:30 அந்த இரசத்தைக் குடித்ததும் இயேசு, “எல்லாம் நிறைவேறிற்று” என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்).

v தான் உயிர்த்தபின் இயேசு தமது சீடர்களுக்கு தூய ஆவியாரை துணையாளராகக் கொடுத்தார். யோவா20:22இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்.

v பெந்தகோஸ்தே நாளன்று தம் சீடர்கள் வழியாகத் தூய ஆவியாரை திருச்சபைக்குத் துணையாளராகவும், வழிகாட்டியாகவும் கொடுத்தார் (திப2:1-4).

115    தூய ஆவியாரின் பல்வேறு பெயர்கள் யாவை?

Ø தமத்திருத்துவத்தின் மூன்றாம் ஆளுக்கு உரித்தான பெயர் ‘தூய ஆவியார்’

Ø இயேசு அவரைத் ‘துணையாளர்’, ‘தேற்றுபவர்’,  ‘பரிந்துரையாளர்’, உண்மையின் ஆவியானவர் என்றும் அழைத்தர்.

Ø புதிய ஏற்பாட்டில் ‘கிறிஸ்துவின் ஆவியார்’,  ‘ஆண்டவரின் ஆவியார்’,  ‘கடவுளின் ஆவியார்’, ‘மாட்சியின் ஆவியார்’, ‘வாக்குறுதியின் ஆவியார்’ மற்றும்  ‘கண்டித்து உணர்த்தும் ஆவியார்’ எனவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Ø ஆதிக்கிறிஸ்தவர்கள் தூய ஆவியாரை குணப்படுத்தும் தைலமாகவும், உயிருள்ள ஊற்றுத் தண்ணீராகவும்,  சுழல் காற்றாகவும், சுட்டெரிக்கும் நெருப்பாகவும் உணர்ந்தனர். [691-693]

116    தூய ஆவியாரைக் குறித்துக்காட்ட என்னென்ன அடையாளங்கள் பயன் படுத்தப் படுகின்றன?

v கிறிஸ்துவின் குத்தித் திறக்கப்பட்ட இதயத்திலிருந்து பொங்கி வழிவதும், திருமுழுக்குப் பெற்றவர்களின் தாகம் தீர்ப்பதுமான ‘உயிருள்ள தண்ணீர்’

v உறுதிப்பூசுதல் மற்றும் நோயில்பூசுதல் போன்ற அருள் அடையாளங்களில்  ‘எண்ணெய்’

v தூய்மைப்படுத்தும் ‘தீ சுவாலை’

v இறைமாட்சியை வெளிப்படுத்தும் ‘ஒளிரும்/இருண்ட மேகம்’,  ‘புயல் காற்று’

v தூய ஆவியாரை பொழியும் ‘கைகள்’

v வெள்ளப்பெருக்கு வடிந்துவிட்டதை நோவாவுக்கு வெளிப்படுத்தவும், இயேசுவின் திருமுழுக்கின்போது  இயேசுவை கடவுளாக சான்றுபகர ‘புறா’ .

117    “இறைவாக்கினர் வழியாகத் தூய ஆவியார் பேசியுள்ளார்” என்பதன் பொருள் என்ன?

தூய ஆவியால் தூண்டப்பட்டு இறைவன் பெயரால் பேசுபவரே “இறைவக்கினர்”.  பழைய ஏற்பாட்டு காலத்தில் இறைவன் தன் சார்பாகத் தயக்கமின்றி பேசவும், இஸ்ரயேல் மக்களை அவர்கள் எதிபார்த்திருந்த மெசியாவின் வருகைக்காக தயார்ப் படுத்தவும் தான் தேர்ந்துகொண்ட மனிதர்களை பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிரப்பினார். [683-688, 702-720]

v எசாயா, ஜெரேமியா, எசெக்கியேல் போன்ற இறைவக்கினர்கள் வழியாக பேசியவர் தூய அவியானவரே.

v இத்தகைய இறைவாக்கினர் வரிசையில் இறுதியாக வந்த திருமுழுக்கு யோவான் இயேசுவின் வருகையை முன்னறிவித்தது மட்டுமல்லாமல், அவர் வந்தபின் அவரைச் சுட்டிக்காட்டினார்;  அவரைப்பற்றி சான்று பகர்ந்தார்.

v “எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை மத்3:11. 

v “இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார் மாற்1:2.

v யோவா1: 29, 32-34 “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். …. தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: “தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் ‘தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்’ என்று என்னிடம் சொல்லியிருந்தார். நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன்.”

v எபி 1:1-2 1பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார்.

118   தூய ஆவியார் மரியா வழியாக எவ்வாறு செயலாற்றினார்?

கிறிஸ்துவின் வருகைக்காகப் பழைய ஏற்பாட்டின் எதிர்பார்ப்புகள், தயாரிப்புகள் அனைத்தையும் தூய ஆவியார் மரியா வழியாக நிறைவுக்குக் கொண்டுவந்தார். மரியாவும் கடவுளின் திட்டத்திற்குத் தன்னை முழுமையாகக் கையளித்தார் – லூக்1:38 பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். தூய ஆவியார் மரியாவை கடவுளின் தாயாக உயர்த்தியதின் வழியாக கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்லாது மாந்தர் அனைவருக்கும் ஒரு அன்னையை அருளியுள்ளார். [721-726]

i.    இறை மகனை மனித உடலோடு பெற்றெடுக்கும் பொருட்டு, மரியாவைத் தனிப்பட்ட முறையில் தமது அருளால் நிரப்பி அவரை அமல உற்பவியாக்கினார்; அதாவது கன்னிமையை மேன்மைப்படுத்தினார்.

ii.    புதுமைகளுக்கெல்லாம் பெரிய புதுமையான வார்த்தை மனுவுருவானதை தூய ஆவியால் சாத்தியமாக்க மரியா உதவினார்.

iii.    தூய ஆவியாரின் வல்லமை மரியாவோடு இருந்ததால் இயேசுவின் சோதனைகள், துன்பங்கள், ஏன் சிலுவைச்சாவிலும் கூட இயேசுவுக்கு துணையாக, ஆறுதலாக, பக்கபலமாக இருந்தார்.  அந்த சிலுவையின் அடியில்தான் இயேசு மரியாவை இந்த மனுக்குலத்தின் தாயாக உயர்த்தினார்.

iv.    அனைத்தின் மகுடமாக பெந்தக்கோஸ்து நாளில் மரியா பன்னிருவரோடு இருந்து தூய ஆவியாரின் வல்லமையைப்பெற்று திருச்சபையின் செயல்படுகளுக்கு உறுதுணையாகவும், வழிகாட்டியாகவும் இருந்தார்.

119    பெந்தக்கோஸ்த்து நாளில் நிகழ்ந்தது என்ன?

இயேசு தாம் உயிர்த்த ஐம்பதாம் நாளான பெந்தக்கோஸ்த்து நாளன்று தூய ஆவியை அன்னை மரியாள் மீதும், திருத்தூதர்கள் மீதும் (திருச்சபையின் மீதும்) நிறைவாகப் பொழிந்தார். அதனால் கோழைகளாக இருந்த திருத்தூதர்கள் துணிவுடன் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்ந்தார்கள். அன்றுதான் தாய் திருச்சபையின் பிறந்த நாள்; கத்தொலிக்கத் திருச்சபை என்ற சகாப்த்தத்தின் துவக்க நாள். [731-733]

v கிறிஸ்துவின் பணியும் ஆவியாரின் பணியும் திருச்சபையின் பணியாக மாறின.

v ஆயிரக்கணக்கானோர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு திருத்தூதர்களிடம் தூய ஆவியால் திருமுழுக்குப் பெற்றனர்.

v திருத்தூதர்கள் பேசியதை மக்கள் தத்தம் மொழிகளில் பேசக்கேட்டு மலைத்துப் போயினர். இந்த நிகழ்வால் திருச்சபை எல்லா இனத்தவருக்கும், எல்லா மொழி பேசுபவர்களுக்கும் சொந்தமானது என உணர்த்தப்பட்டது.

v இன்றுவரை தூய ஆவியானவர் திருச்சபையின் உயிராகவும், ஆதாரமாகவும் இருந்து வழிநடத்தி வருகிறார்.

120    திருச்சபையில் தூய ஆவியார் எவ்வகையில் செயலாற்றுகிறார்?

தூய ஆவியார் திருச்சபையை  

ü கட்டி எழுப்புகிறார்

ü உயிரூட்டுகிறார்,

ü புனிதப்படுத்துகிறார்.

ü வழிநடத்துகிறார்

ü தூண்டுகோலாய் இருக்கிறார்

ü நம்மை மூவொரு கடவுளோடு இன்னும் அதிகமாக ஐக்கியப்படுத்துகிறார் மற்றும்

[733-741, 747]

i.    கடந்த ஈராயிரமாண்டுகளாகத் திருச்சபைக்கு ஏற்பட்டத் துன்பங்கள், சவால்கள், இடையூறுகள், அச்சுறுத்தல்கள், தோல்விகள் அனைத்திலுமிருந்து அதனைக் கட்டிக்காத்து வந்திருக்கிறார்.  இந்தக் காலக்கட்டதில் வாழ்ந்து மரித்த, புனிதர்கள் மற்றும் மறைசாட்சிகள் தூய ஆவியாரின் இந்த பணிக்குச் சாட்சிகள். 

ii.    மக்களைத் திருச்சபையின் பணிகளுக்கு அழைத்து அவர்கள் பணிக்குத் தேவையான கனிகளைக் கொடுத்து அவர்களை உறுதிப் படுத்துகிறார்.

iii.    பிறப்பு நிலை (ஜென்ம) பாவத்தால் நாம் இழந்த இறைச் சாயலை திருமுழுக்கு வழியாக மீண்டும் பெற்றுத் தருகிறார்.

iv.    நமது பாவங்களை இயேசுவின் திருஇரத்தத்தால் கழுவி (ஒப்புறவு அருட்சாதனம் வழியாக) நம்மை மூவொரு கடவுளுக்குள் ஐக்கியமாக்குகிறார்.

v.    திருவருட்சாதனங்களால் நம்மை பலப்படுத்தி நம்மை இறைச்சயலில் வளர்த்து வருகிறார்.  நற்செய்தியை நம் வாழ்வாக்குகிறார்.  இன்றும் தூய உள்ளத்தோடு அவரிடம் கேட்பவர்களுக்கு அவரது கனிகளைப் பொழிகிறார்.

யோவா16:12“நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. 13உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.

திப2: 4அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள்.  5அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூதமக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். 6அந்த ஒலியைக்கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக்கேட்டுக் குழப்பமடைந்தனர்.

121    நமது வாழ்வில் தூய ஆவியார் எவ்வாறு செயலாற்றுகிறார்?

என்னை இறைவனின் விருப்பத்திற்குச் செவிமடுக்க வைக்கிறார்.  நான் செபிக்கவும் மற்றவர்களோடு செபத்தில் ஒன்றித்திருக்கவும் செய்கிறார்.  “நமது ஆன்மாவின் சாந்தமான விருந்தாளி தூய ஆவியார்” என்று புனித அகஸ்த்தினார் கூறுகிறார். [738-741]

    i.    நாம் தனிமையில், அமைதியில் அவரை நினைக்கும்போது நம்மில் வருகிறார், நம்மோடு பேசுகிறார்.  நமது மனச்சாட்சியின் குரலாகவும், இது நல்லது, இது தீயது, இதைச் செய், இதை செய்யாதே என்று நமக்கு உணர்த்தும் ஒரு உந்துசக்தியுமாவார்.  இறைவேண்டலின் ஆசிரியரும் அவரே.

  ii.    உடலோடும், உயிரோடும் நம்மில் வாழ்கிறார்;  எனவேதான் (1கொரி6:19) தூய பவுல்  “உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல” என்று எழுதுகிறார்.

 iii.    மேலும் கூறுகிறார்

உரோமையர் 13:14 தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்.

எபேசியர் 4:24 கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொள்ளுங்கள். அவ்வியல்பு உண்மையான நீதியிலும் தூய்மையிலும் வெளிப்படும்.

எபேசியர் 6:11 அலகையின் ஏமாற்று வழிகளை எதிர்த்து நிற்கும் வலிமை பெறும்படி கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் அணிந்து கொள்ளுங்கள்.

   iv.        கிறிஸ்து திருவருட் சாதனங்கள் வழியாகத் திருச்சபையின் உறுப்பினர் அனைவருக்கும் தூய ஆவியாரை அதாவது கடவுளின் அருளை வழங்குகிறார்.

 “தூய கத்தோலிக்கத் திருச்சபையை நம்புகிறேன்”

இறைத் திட்டத்தில் திருச்சபை

122    “திருச்சபை” என்னும் சொல்லின்பொருள் என்ன?

kyriake  என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் அனைத்து நாடுகளிலிருந்தும் “அழைக்கப்பட்ட  கடவுளின் பிள்ளைகள்”  என்பதாகும் .   ekklesia  என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் திருமுழுக்கின் வழியாக  கிறிஸ்து என்ற உடலின் உருப்புக்கள்” என்பதாகும்.  இந்த இரு அர்தங்களை மையமாக வைத்தே ஆங்கிலத்தில்  “Church” என்ற சொல்லும்,  தமிழில்  “திருச்சபை” என்ற சொல்லும் பெறப்பட்டுள்ளன. [748-757]

v , மூவொரு கடவுளை விசுவசித்து தூய ஆவியாரால் திருமுழுக்குப் பெற்றவர்களே “அழைக்கப் பட்டவர்கள்” ஆவர். இவர்கள் கடவுளின் பிள்ளைகளாகவும், கிறிஸ்துவின் உறுப்புக்களாகவும், தூய ஆவியாரின் கோவில்களாகவும் திகழ்கின்றனர்.

v இந்த “அழைக்கப் பட்டவர்கள்”  ஆகிய நம் அனைவரையும் ஒன்றிணைத்த அவையே (சபையே) “திருச்சபை” ஆகும்.

v தூய பவுலின் வரிகளில்   எபே5:23“ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பதுபோல ---------------- கிறிஸ்துவே திருச்சபையாகிய உடலின் மீட்பர். கொலோ1:18 “திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே”. ஆம் கிறிஸ்துவே திருச்சபையின் தலை, நாம் திருச்சபையின் உடல்.

v திருவருட் சாதனங்களை பெற்று இறை வார்த்தையில் வாழும் போது கிறிஸ்து நம்முள்ளும் நாம் கிறிஸ்த்துவுக்குள்ளும் இருக்கிறோம் (வாழ்கிறோம்).  இந்த உறவில் கட்டியெழுப்பப் பட்டதுதான் திருச்சபை.

v கிறிஸ்துவே மணமகன்; திருச்சபையே அவரது மணமகள் என்று இயேசு கூறியதிலிருந்து (யோவா3:29) கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் உள்ள உறவு பிரிக்க இயலா உறவு என்பது மட்டுமல்ல, நாம் பாவிகளாய் இருந்தாலும் கூட அவர் நம்மேல் கொண்ட அன்பு, உறவு மாறாதது என்பதும் தெளிவுபடுத்தப்படுகிறது.

123    இயேசு திருச்சபையை ஸ்தாபித்ததின் மற்றும் பராமரிப்பதன் நோக்கம் என்ன?

கிறிஸ்து திருச்சபையை நிருவியதற்கு இரு பெரு காரணங்களைக் கூறலாம்

i.      நம்மை, தனியொரு மனிதனாக அல்ல மாறாக ஒட்டுமொத்த மனுக்குலத்தையும் மீட்க.

ii.      மனுக்குலம் முழுவதையும் “ஒரே மந்தையும் ஒரே ஆயனும்” என நடத்திச் செல்ல. [758-781, 802-804]

v தொநூ4:9 ஆண்டவர் காயினிடம், “உன் சகோதரன் ஆபேல் எங்கே?” என்று கேட்டார்.  ஒவ்வொரு மனிதனும் தனக்கு அடுத்துருப்பவர் மீது பொறுப்புள்ளவன் என்ற நியதி இறைவனின் படைப்புத் திட்டதிலேயே உள்ள ஒன்று.

v தனிமனித சிந்தனையும் வாழ்க்கைமுறையும் சுயநல நாட்டமுடையது,  பிறர் அன்புக்கு எதிரானது.   மூவொரு கடவுள் சமூக உறவின் வெளிப்பாடு.  அதனாலேயே அவர் மனிதனை சமூக உறவில் படைத்தார்.  சமூக உறவில் வாழவேண்டுமென்பதே அவரது திட்டம், விருப்பம்.  அவரது மீட்ப்புத் திட்டமும் தனிமனிதனை அடிப்படையாகக் கொண்டது அல்ல; மாறாக ஒட்டுமொத்த மனுக்குலத்தை மையமாகக் கொண்டது. இதுவே இயேசு திருச்சபையை ஸ்தாபித்ததின் மற்றும் பராமரிப்பதன் நோக்கம்.

v லேவியர் 19:18 பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்!

v மாற்கு 12:31 ‘உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக’ என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை” என்றார்.

v லூக்கா 10:27 அவர் மறுமொழியாக, ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’ என்று எழுதியுள்ளது” என்றார்.

v உரோமையர் 13:9 ஏனெனில், “விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பிறருக்குரியதைக் கவர்ந்திட விரும்பாதே” என்னும் கட்டளைகளும், பிற கட்டளைகளும், “உன் மீது அன்பு கூர்வது போல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” என்னும் கட்டளையில் அடங்கியுள்ளன.

v யாக்கோபு 2:8 “உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக!” என்னும் இறையாட்சியின் சட்டம் மறைநூலில் உள்ளது. இதை நீங்கள் கடைப்பிடித்தால் நல்லது.

124    திருச்சபையின் பணி என்ன?        

இயேசு கிறிஸ்து தொடங்கி வைத்த இறையாட்சியை அனைத்து நடுகளின் மக்களுக்கும் அறிவித்து அதை நிறுவுவதே திருச்சபையின் பணி. மற்றும் இறை வார்த்தையை உலகின் கடையெல்லை வரை அறிவிப்பதும் ஆகும். [763-769, 774-776, 780]

 i.   இந்த இறை ஆட்சியின் விதையாகவும், தொடக்கமாகவும் திருச்சபை இந்த மண்ணுலகில் அமைந்துள்ளது.

ii.   இயேசு கிறிஸ்து நமக்குக் கொடையாகக் கொடுத்த திருவருட்சாதனங்களைத் தொடர்ந்து நிறைவேற்றி வருவது.

iii.    அத்தனை பலவீனங்கள், எதிர்ப்புக்கள், அச்சுறுத்தல்கள் மத்தியிலும் திருச்சபை, இந்த உலகில் இயேசு விதைத்துச் சென்ற, இறையரசை வளர்த்துக் கட்டிக்காத்து வருவது.

iv.    இதன் வழியாக திருச்சபை விண்ணகத்தின் முன் சுவையாகத் திகழ்வது.

125    திருச்சபை ஒரு நிறுவனம் என்ற நிலையில் இல்லாமல் ஒர் மறைபொருளாகத் திகழ்வது எவ்வாறு?

காணக்கூடிய மனித பண்புகளையும், காண இயலாத இறைப் பண்புகளையும் தன்னுள் கொண்டிருப்பதாலேயே திருச்சபை ஒரு பணிசெய்யும் நிறுவனமாக இல்லாமல் ஒரு மறைபொருளான சமூகமாகத் திகழ்கிறது. [770-773, 779]

Ø  திருச்சபையை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ‘சாதனைகள், சோதனைகள், தவறுகள், ஏன் குற்றங்களையும் கூட உள்ளடக்கிய ஒரு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டுள்ள நிறுவனமாகத்தான் தோன்றும். இதையே காணக்கூடிய மனித பண்புகள் எனக் குறிப்பிடுகிறோம்.   ஆனால் இது மிகவும் மேலோட்டமான பார்வை.

Ø  ஆனால் கிறிஸ்து நாம் பாவம் செய்தோம் என்பதற்காக நம்மை வெறுக்கவில்லை, நாம் அவரை புறக்கணித்தோம் என்பதற்காக நம்மை ஒதுக்கவில்லை.  மாறாக பாவிகளையும் நேசித்தார், பாவிகளைத் தேடிவந்தார்.  அவரை நாம் தினமும் நோகச் செய்தாலும், காட்டிக்கொடுத்தாலும், மறுதலித்தாலும்கூட நம்மை நேசிப்பவராகவே இருக்கிறார்.  இதையே காண இயலாத இறை பண்பு என்கிறோம்

திருச்சபையில் பாவம் என்ற மனிதமும் அன்பு, இறக்கம், மன்னிப்பு என்ற தெய்வீகமும் பிரிக்க முடியாத உறவுகளாய் உள்ளன.  இதைத்தான் “திருச்சபை ஒரு மறைபொருளாய்த் திகழ்கின்றது” என்று கூறுகிறோம்.

126    “கடவுளின் மக்கள்’ என்பதின் தனித் தன்மை அல்லது தனிச் சிறப்பு என்ன?

“கடவுளின் மக்கள்” “திருச்சபை” இவை ஒரே அர்த்தமுள்ள இரு சொற்கள் எனக் கொள்ளலாம் (synonemes). இறைவனே இதை ஏற்படுத்தியவர்.  இயேசுவே இதன் தலைவர்.  பரிசுத்த ஆவியாரே அதன் வல்லமை.  திருமுழுக்கே இதன் நுழை வாயில்.  நாம் அனவரும் கடவுளின் மக்கள் என்பதே அதன் மாட்சி.  அன்பே அதன் சட்டம் அதுவே அதன் சாசனம்.  கடவுளின் பிள்ளைகளுக்குறிய மாண்பையும், சுதந்திரத்தையும் தங்கள் தனித்துவமாகக் கொண்டவர்கள். [781-786]

v  நாம் அனைவரும்

Ø  இறைவனுக்கு, இறைவனில் நம்பிக்கை உள்ளவர்களாகவும்

Ø  இறை ஆட்சியைத் தேடுபவர்களாகவும்

Ø  இறை ஆட்சியை இந்த மண்ணில் மலரச் செய்பவர்களாகவும்  இருக்கிறோம்.

v  உலக மக்களினங்களுக்கு மத்தியில் இறைமக்களுக்கு இணையானவர்கள் எவருமில்லை.

v  இந்த உலகிற்கு உப்பாக வாழ்பவர்கள்.

v  உலகின் இருளை அகற்றும் ஒளி அவர்கள்.

v  இறை ஆட்சியை தங்கள் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டவர்கள்( மத்6:33).

v  கிறிஸ்துவின் குருத்துவப் பணியிலும் இறைவாக்குப் பணியிலும் அவருக்கு உடன் உழைப்பாளர்களாக வாழ்பவர்கள்.

v  ஏழைகளுக்கும் துன்புறுவோருக்கும் கிறிஸ்துவின் வழியில் தொண்டு செய்பவர்கள். 

v   “ஏனெனில் சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வலிமை மிக்கவையோ,  உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்பும் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்ற உறுதியான நம்பிக்கை (உரோ838-39) கொண்டிருப்போர்.

127    “திருச்சபை கிறிஸ்துவின் உடல்” என்பதின் பொருள் என்ன?

திருமுழுக்கும் திவ்யநற்கருணையும் கிறிஸ்தவர்களையும் கிறிஸ்துவையும் பிரிக்க இயலாத உறவில் இணைக்கின்றன. மனித உடலும் தலையும் எவ்வாறு பிரிக்க இயலாதவாறு இணைந்துள்ளதோ அதேபோல் திருச்சபை கிறிஸ்துவோடு ஒன்றாய் உள்ளது. [787-795]

v  கிறிஸ்து தனது பணிவாழ்வின் துவக்கத்திலிருந்தே

Ø  தனது சீடர்களை தனது பணியில் ஈடுபடுத்தினார்

Ø  இறையாட்சியின் மறைபொருளை அவர்களுக்கு வெளிப்படுத்தினார்

Ø  தனது பணியில், மகிழ்சியில், துன்பங்களில் பங்களித்தார்

Ø  நானே திராட்சைச் செடி; நீங்கள் அதன் கொடிகள் என்று தனக்கும் தன் சீடர்களுக்கும் உள்ள உறவை ஆழமாக வெளிப்படுத்தினார்.

Ø  எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர் என்று தன்னையே திருச்சபைக்குத் தந்தார்.

v  மேலே கூறப்பட்டுள்ள அனைத்து செய்திகளும் “திருச்சபை கிறிஸ்துவின் உடல்” என்பதன் மூன்று கூறுகளைச் சுட்டிக் காட்டுகின்றன

                i.        கிறிஸ்துவர்கள் அனைவரும் கிறிஸ்துவோடு ஒரே உடலாய் இருக்கிறோம் என்பதால் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்குள் ஒருவரோடு ஒருவர் இணைக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது ஒரு மறைபொருள்.  இந்த பண்பு கிறிஸ்து நமக்கு உணர்த்தும் மிகப்பெரிய இறையியல்.

              ii.        திருச்சபையின் தலையாக கிறிஸ்து உள்ளார்

             iii.        கிறிஸ்துவின் மணமகளாகத் திருச்சபை திகழ்கிறது

127  கிறிஸ்துவின் மணமகளாகத் திருச்சபைத் திகழ்கிறது” என்பதன் பொருள் என்ன?

ஒருமணமகன் தன் மண மகளை எவ்வளவு உண்மையாகவும் ஆழமாகவும் நேசிப்பானோ அந்த அளவு கிறிஸ்து திருச்சபையை நேசிக்கிறார்.  முடிவு பரியந்தம் இந்த பந்தத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறார் [796].

i.    ஒருவன் தன் காதலியைக் காண, பேச, அன்பு செய்ய எந்த அளவு ஏங்கிக் கொண்டிருப்பானோ அந்த அளவு கிறிஸ்து இறைமக்களின் அன்புக்காக ஏங்குகிறார்.

ii.    மணமகள் தன்னோடு இருப்பதில் மணமகன் எவ்வளவு ஆனந்தம் கொள்வானோ அந்த அளவு கிறிஸ்தவர்கள் அவரோடு இணைந்திருக்கும் போது இயேசு ஆனந்தம் கொள்கிறார்.

iii.    மணமகள் மணமகனை உதாசினப் படுத்தினாலோ, விலகிச்சென்றாலோ மணமகன் எவ்வளவு வேதனைப்படுவானோ அந்த அளவு இயேசு கிறிஸ்துவை நாம் அன்பு செய்யாத போதும், அவரைவிட்டு பாவத்தால் விலகிச்செல்லும் போதும் கிறிஸ்து அதே வேதனையை படுகிறார்.

iv.    கிறிஸ்துவின் இத்தகைய அன்புக்கு பதில் அன்பு செலுத்துகிறோமா அல்லது பாவத்தால் அவரை உதாசினப்படுத்தி அவரை விட்டு விலகிச் சென்று அவரது திருஇருதயத்தை நோகச் செய்கிறோமா?

 

128    “திருச்சபை தூய ஆவியாரின் கோவில்” என்பதன் பொருள் என்ன?

இந்த உலகில் தூய ஆவியாரின் வல்லமை முழுமையாக நிறைந்துள்ள இடம்தான் கத்தோலிக்கத் திருச்சபை. எனவேதான் கத்தோலிக்கத் திருச்சபையை தூய ஆவியார் வாழும் கோவில் என்று ஏற்றுக்கொள்கிறோம்.  [797-801, 809]

யூதர்கள் எருசலேம் தேவாலயத்தில் இறைவனை வழிபட்டார்கள்.  இப்போது அந்த தேவாலயம் இல்லை.  திருச்சபைதான் இன்றைய ‘எருசலேம் தேவாலயம்’ எனக் கருதப் படுகிறது.  ஆனால் இந்த புதிய ‘எருசலேம் தேவாலயம்’ எந்த ஒரு குறிப்பிட்ட இடத்திலும் கட்டப் பட்டது அல்ல.  மத்:18:20 – “ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”  எனவே

v எங்கெல்லாம் நாம் கூடிச் செபிக்கிறோமோ அங்கெல்லாம் திருச்சபை ஸ்தாபிக்கப் படுகிறது.  பரிசுத்த ஆவியார் அதற்கு உயிர் அளிக்கிறார். 

v தூய ஆவியார் இறைவார்த்தையிலும், திருவருட்சாதனங்களின் அரும் அடையாளங்களிலும் உள்ளார். 

v இறைமக்களின் உள்ளங்களில் நிறைந்துள்ளார், 

v அவர்களின் செபத்தில் வெளிப்படுகிறார்.

v அவர்களை வழி நடத்துகிறார்; 

v தனது தனி வரங்களால் அவர்களை நிறப்புகிறார்; 

v அவரது கொடைகளை அவர்களுக்கு அளிக்கிறார்.

v யாரெல்லாம் தூய ஆவியாரின் நட்புறவில் இணைகிறார்களோ அவர்கள் அவரின் வல்லமையை, புதுமைகளை இன்றும் உணர்கிறார்கள்.

இதுவே நமது கத்தோலிக்க விசுவாசம். 

 “மனித உடலுக்கு உயிர்/ஆன்மா இருப்பதுபோல், கிரிஸ்துவின் உறுப்புகளுக்கு, அதாவது திருச்சபையாகிய கிறிஸ்துவின் உடலுக்குத் தூய ஆவியார் இருக்கிறார்”–புனித அகுஸ்தீன்

2கொரி6:16; 1கொரி3:16-17; 12:7,13எபே2:21; 4:16; திப20:32;

129    தூய ஆவியாரின் தனி வரங்கள் என்றால் என்ன? அவை யாவை?

தனிப்பட்டவர்கள் மீது பொழியப்படும் தூய ஆவியாரின் சிறப்பான கொடைகளே  ‘தனிவரங்கள்’ எனப்படும்.   அவை ஞானம், அறிவு, நம்பிக்கை, வல்ல செயல், இறைவாக்குரைத்தல், பகுத்தறிவு, பரவசப் பேச்சு, அப்பேச்சை விளக்கும் ஆற்றல் என்பன. இவை பிறர் நலன்களுக்காகவும், உலகின் தேவைகளுக்காகவும், குறிப்பாகத் திருச்சபையைக் கட்டி எழுப்புவதற்காகவும் பொழியப்படுகின்றன. [799-801]. 

1கொரி12:8-10; எபே4:7-13; கலா5:22-23

 

I Believe in One, Holy, Catholic, and Apostolic Church

ஒரே, தூய, கத்தோலிக்க திருத்தூது (அப்போஸ்தலிக்க) திருச்சபையை விசுவசிக்கிறேன்

130    ஏன் ஒரு திருச்சபைதான் இருக்க முடியும்? கிறிஸ்துவின் ஒரே திருச்சபை எதில் உள்ளது?

கிறிஸ்து ஒருவரே. எனவே கிறிஸ்துவின் உடலும் ஒன்றே. கிறிஸ்து ஒரே மணமகன்.  ஏனவே கிறிஸ்துவின் மணமகளும் ஒன்றே.  எனவேதான் கிறிஸ்துவின் திருச்சபையும் ஒன்றே. திருச்சபை என்ற உடலும், அதன் தலையாக கிறிஸ்துவும் பிரிக்க இயலா நிலையில் உள்ளன.

கிறிஸ்துவின் ஒரே திருச்சபை இவ்வுலகில் நிறுவப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட சமூகமாக உள்ளது.  அது திருத்தூதர் பேதுருவின் வழித்தோன்றல்களான திருத்தந்தையர்கள் மற்றும் அவர்களோடு ஒன்றிணைந்து இறைப்பணி செய்யும் ஆயர்களாலும் வழிநடத்தப் பட்டு வருகிறது.   [811-816, 866, 870]

கிறிஸ்து தனது திருச்சபையை திருத்தூதர்களை அடித்தளமாகக் கொண்டு கட்டி எழுப்பினார்.  அந்த அடித்தளம் இன்றுவரை அந்த கட்டிடத்தை தாங்கி வருகிறது.  திருத்தூதர்களின் விசுவாசமும் நம்பிக்கையும், திருத்தூதர் பேதுரு துவங்கி இன்றுவரை திருத்தந்தையர்களின் தலைமையில் திருப்பணியாளர்கள் முலம் நம்மில் விதைக்கப் படுகின்றன.  கிறிஸ்துவால் திருத்தூதர்களிடம் கொடுக்கப்பட்ட திருவருட் சாதனங்களும் அதே ஆற்றலுடன் இன்றுவரை நம்மில் செயலாற்றுகின்றன.

எபே4:4-6  4நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பது போல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. 5அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே. 6எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர்.

131    கத்தோலிக்கரல்லாத கிறிஸ்தவர்கள் மட்டில் கத்தோலிக்கத் திருச்சபையின் கொள்கை மற்றும் அணுகுமுறை யாது?

தந்தை மகன் தூய ஆவியாரின் பெயரால் திருமுழுக்குப் பெற்ற அனைவரும் கிறிஸ்துவின் திருச்சபையைச் சேர்ந்தவர்கள்.  இந்த கோட்பாட்டின் படி கத்தோலிக்கத் திருச்சபையின் முழு ஒன்றிப்பிலிருந்து பிரிந்து சென்ற பிற திருச்சபைகளைச் சார்ந்தவர்களையும் கிறிஸ்தவர்களென்றும், கத்தோலிக்க சமூகத்தின் சகோதரர்கள், சகோதரிகள் என்றும் மதித்து நம் தாய்த் திருச்சபை அன்புடன் எற்றுக்கொள்கிறது. [817-819]

 

  i.    கிறிஸ்துவின் போதனைகளுக்கு மாறுபட்ட விளக்கங்களை கொடுத்ததாலும்,

ii.    இறை வார்த்தைகளை மாறுபட்டு சித்தரித்ததாலும்,

iii.    கத்தோலிக்கத் திருச்சபையின் வேத சத்தியங்களையும், கோட்பாடுகளையும் முழுமையாக எற்றுக்கொள்ள மறுத்ததாலும்,

iv.    சில தனிமனித குறைபடுகள் மற்றும் தவறுகளாலும்,

v.    ஒருவரை ஒருவர் புரிந்து ஏற்றுக் கொள்வதிலும் விட்டுக்கொடுத்தலிலும் முறையான அணுகுமுறையும் இல்லாததாலும்

திருச்சபையின் தொடக்க காலத்தில் இருந்தே கருத்து வேறுபாடுகளும், பிளவுகளும் அவ்வப்போது தலை தூக்கின. இருப்பினும் திருத்தூதர்கள் இத்தகைய மாற்றுக்கருத்துக்களை வன்மையாகக் கண்டித்ததால் பிரிவினைகள் தவிர்க்கப்பட்டன.  அடுத்தடுத்து வந்த நூற்றாண்டுகளில் இந்த ஏற்றுக்கொள்ளாமையும், பிளவுகளும்  அதிகமாகவும் ஆழமாகவும் தோன்றியதால் பெரிய சமூகங்கள் கத்தோலிக்கத் திருச்சபையின் முழு ஒன்றிப்பிலிருந்து பிரிந்ததால் பிரிவினை திருச்சபைகள் தோன்றின.  இத்தகைய நிகழ்வுகளுக்குக் கத்தோலிக்கத் திருச்சபையின் மற்றும் பிரிவினை திருச்சபைகளின் அதாவது இரு பக்க பிரதிநிதிகளுமே காரணமாக இருந்திருக்கிறார்கள். இன்றைய கிறிஸ்துவர்களை இந்த வரலாற்று பிரிவினை நிகழ்வுகளில் குற்றம் இழைத்தவர்களாகக் கருத முடியாது. 

இத்தகைய வேதனை மிக்க பிளவுகளுக்கு மத்தியிலும் நமக்கு ஆறுதலாய் இருப்பது: முதலாவது: கத்தோலிக்கத் திருச்சபையிலும், கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து பிரிந்து சென்ற மற்ற திருச்சபைகளிலும் மற்றும் திருச்சபை சாரா கிறிஸ்துவ குழுக்களிலும் (Ecclesial communities) உள்ள அனவரின் மீட்புப் பணியிலும் தூய ஆவியானவர் உடன் உழைக்கிறார். 

இரண்டாவது: பல்வேறு திருச்சபைகளிலும் உள்ள திருவிவிலியம், திருவருட் சாதனங்கள், விசுவாசம், நம்பிக்கை,  அன்பு மற்றும் அருட்கொடைகள் அனைத்தும் கிறிஸ்துவிடம் இருந்தே வருகின்றன.

மூன்றாவது: கிறிஸ்துவின் தூய ஆவியார் அனைத்து திருச்சபைகளிலும் உள்ளிருந்து செயலாற்றி அவற்றை ஒன்றிணைத்து வருகிறார்.  காரணம் ஒன்றாய் இணைந்திருப்பவை ஒன்றாய் செயலாற்றுகின்றன்…ஒன்றாய் வளர்ச்சி பெறுகிண்றன.

132    கிறிஸ்தவர்களின்  ஒன்றிப்புக்காக நாம் செய்யவேண்டியது என்ன?

யோவா17:21.  “எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக!”

கிறிஸ்து தனது திருச்சபைக்கு அருளிய பெரிய கொடையும்,  தனது திருச்சபைக்காத் தந்தையிடம் மன்றாடியதும் ‘திருச்சபையின் ஒற்றுமையே’.  அதே சமயம், இயேசு தான் இறப்பதற்கு முன் பெரிதும் கவலைப்  பட்டதும் தான் நிறுவ உள்ள திருச்சபையின் ஒற்றுமையைப் பற்றித்தான்.  இத்தகைய நற்செயலுக்காக நாம் ஆற்றக்கூடிய செயல்களைப் பற்றி தெரிந்து அதில் ஈடுபடுவதே இறைவனுக்கு ஏற்ற செயலாகும்.  [820-822]

                                            i.   

http://images.clipartpanda.com/wooden-cross-drawing-RTdRbLxRc.gif

 

https://openclipart.org/image/2400px/svg_to_png/225703/cross.png

 
அனைத்து கிறிஸ்தவர்களின் ஒற்றுமையையும் முழு ஒன்றிப்பிலிருக்கும் ஒரே திருச்சபையும் உருவாக்குவது ஒவ்வொரு கிறிஸ்தவனின், கிறிஸ்தவளின் அடிப்படை கடமை, அவர்கள் எந்த வயதினராய்  இருந்தாலும்.

ii.   

https://s-media-cache-ak0.pinimg.com/736x/10/74/f4/1074f4ea33cf32f402eb9e7c1e8f7c97.jpg

 
 திருச்சபையில் உள்ள பிரிவினைகள் கிறிஸ்துவின் உடலில் உள்ள காயங்கள் என்பதை அறிவோம்.  அந்த காயங்கள் கிறிஸ்துவுக்கு மிகுந்த வேதனையையும் கசப்பையும் கொடுக்கின்றன என்பதை அறிவோம்.

                                         iii.    பிரிவினைகள் ஒருவர் மேல் ஒருவருக்கு பகைமையையும் குரோதத்தையும் ஏற்படுத்த வல்லது.  இந்த பகைமை கிறிஸ்துவ விசுவாசத்தை பெரிதும் பலவீனப்படுத்தவல்லது மட்டுமல்ல,  கிறிஸ்துவ விசுவாசத்தின் நம்பகத்தன்மையை பெரிதும் பாதிக்க வல்லது.

http://www.kingjamesbibleonline.org/images/king-james-bible.png

 

http://www.ourcatholicprayers.com/images/Monstrance3.jpg

 
எனவே காலதாமதமின்றி நாம் ஆற்றவேண்டிய செயல்கலாவன

                                            i.    திருச்சபைகளின் இணைப்புக்காக

                                          ii.    கிறிஸ்துவோடு இணைந்து

v செபிப்பது

v அதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து ஆற்றுவது,

v முயற்சியின் பலன்களை முழுமை பெறச் செய்வது.

                                         iii.    திருச்சபைகளின் ஒன்றிணைப்பின் வழி திருச்சபைக்கு நிரந்தரமான புத்துயிர் அளிக்கும் முயற்சியில் ஒருவர் ஒருவர் மேல் மிகுந்த நம்பிக்கை கொள்ள வேண்டும். 

iv.    நமது வாழ்வை நற்செய்தியின் மதிப்பீட்டின் படி அமைத்துக்கொள்ள வேண்டும்.  ஏனெனில் விவிலியமே அனைத்து திருச்சபையினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது செபமாகும்.

v.    சகோதர பாசத்தோடு ஒருவர் மற்றவரைப் பற்றியும் ஒரு திருச்சபை அடுத்திருக்கும் திருச்சபை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.

vi.    சபைகளுக்குள்ளே சிறப்பாக பல்வேறு சபைகளில் உள்ள இறையியல் வல்லுனர்கள், நல் உறவுடன்,  நட்புறவுடன் கூடிய கலந்துரையாடலில் பங்குகொள்ள வேண்டும். 

vii.    ஒருகிணைந்த செப வழிப்பாட்டை ஏற்பாடு செய்து அனைவரும் சேர்ந்து செபிக்க வேண்டும்

viii.    அனைத்து சபை கிறிஸ்தவர்களும் ஒன்றிணைந்து மனித நேயத்துடன் கூடிய சமுதாய மேம்பாட்டு திட்டங்களில் சேவை செய்ய வேண்டும்.

 யோவா17:21-23. 21 “எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக!” இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும். 22நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன். 23இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என்மீது அன்பு கொண்டுள்ளதுபோல் அவர்கள்மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்து கொள்ளும்.

133     திருச்சபை எவ்வாறு தூயதாக உள்ளது?

திருச்சபையை நிறுவியவரும், அதன் உள்ளிருந்து செயலாற்றுபவரும் கடவுள் ஆதலால் திருச்சபை தூயது ஆகும்.  தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் திருமுழுக்குப் பெறும் ஒவ்வொருவரும் தூய்மைப்படுத்தப்படுகிறார்கள். [823-829]

v  கிறிஸ்து திருச்சபையை தனது மனையாளாகக் கருதி, அவளைத் தூய்மையாக்க தம்மையே அதற்குக் கையளித்தார். அவளைத் தனது உடலாகப் பேணிக் காக்கின்றார்.  கிறிஸ்துவின் உடலாய் இருப்பதால் திருச்சபை புனிதமடைகிறது.

v  தூய ஆவியாரின் வல்லமையால் உயிர் பெறுகிறது.

v  மூவொரு கடவுள் நம்மைத் தொடும் போது அன்பில் வளர்கிறோம், புனிதமடைகிறோம், முழுமை பெறுகிறோம். 

v  அப்படி கடவுளால் தொடப்பட்டு கடவுளின் அன்பைப் பெற்று, அந்த அன்பை நம்மோடு பகிர்ந்து, விண்ணகத்திலிருந்து நம்மோடு உறவில் வாழ்ந்து, நமக்காக இறைவனிடம் பரிந்து பேசிக் கொண்டிருப்பவர்கள்தான் புனிதர்கள். 

v  அத்தகைய புனிதர்களும் அவர்களுள் முதன்மையானவரும், இறைவனின், கத்தோலிக்கத் திருச்சபையின் மற்றும் நமது தாயுமான அன்னை மரியாளும் விண்ணகத்திலிருந்து கத்தோலிக்கத் திருச்சபையை தொடர்ந்து புனிதப்படுத்தி வருகிறார்கள்.

v  நாமும் அந்த புனித நிலையை அடைய நமக்கு வழிகாட்டுகிறார்கள்.

v  இத்திருச்சபையில்தான் நம் மீட்புக்கான வழிமுறைகள் நிறைந்துள்ளன.  இத்திருச்சபையிலிருந்துதான் நாமும் புனிதத்தின் ஊற்றை பெற்றுக்கொள்கிறோம்.

134    ஏன் “கத்தோலிக்கத்’ திருச்சபை என்கிறோம்.

‘கத்தோலிக்’ என்ற சொல்லுக்கு ‘எங்கும் -Universal’, ‘முழுவதும் - Totality’,  ‘அனைத்தும் - Whole’ என்று பலவிதமாக பொருள் கொள்ளலாம். நம் திருச்சபையை  ‘கத்தோலிக்’ என்று அழைப்பதற்கு இரு கருத்துக்களைக் கூறலாம்.

          முதலாவது: நம் திருச்சபைக்குள் கிறிஸ்து உள்ளார்.  கிறிஸ்து எங்கெல்லாம் உள்ளாரோ அங்கெல்லாம் நம் திருச்சபை உள்ளது என்பது அதில் அடங்கியுள்ள உண்மை. இந்த அடிப்படைக் கருத்தின்படி பெந்தகோஸ்தே நாள் தொடங்கி கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் நாள்  மட்டும் அது கத்தோலிக்கத் திருச்சபையாகவே திகழும்.

          இரண்டாவது: மத்28:19-20 எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று கூறினார்.  கிறிஸ்துவே தம் சீடர்களுக்கு கொடுத்த கட்டளையின் படி திருச்சபை உலகமெங்கும் ஸ்தாபிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். [830-831, 849-856]

எபே5:26-30. ஏனெனில் கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தி, அதற்காகத் தம்மையே ஒப்புவித்தார். 26வார்த்தையாலும் நீரினாலும் அதனைக் கழுவித் தூயதாக்குமாறு இவ்வாறு செய்தார். 27அத்திருச்சபை, கறை திரையோ, வேறு எக்குறையோ இல்லாமல் தூய்மையும் மாசற்றதுமாய் மாட்சியுடன் தம்முன் விளங்குமாறு இப்படிச் செய்தார். 28அவ்வாறே கணவர்களும் மனைவியரைத் தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள். தம் மனைவியின்மீது அன்பு கொள்கிறவர், தம்மீதே அன்பு கொள்கிறவராவார். 29தம்முடைய உடலை எவரும் வெறுப்பதில்லை. அதைப் பேணி வளர்க்கிறார். அவ்வாறே, கிறிஸ்துவும் திருச்சபையைப் பேணி வளர்த்து வருகிறார். 30ஏனெனில் நாம் அவரது உடலின் உறுப்புகள்.

135    திருச்சபைக்கும் யூதர்களுக்கும் உள்ள உறவு எத்தகையது?

இறைவன் அவர்களை

v தனது மக்களாகத் தேர்ந்துகொண்டதாலும்,

v அவர்களை அன்பு செய்ததாலும்

v முதன்முதலில் அவர்களோடு பேசியதாலும் (இறைவனுடைய வார்த்தைகளை முதன் முதலில் பெற்றுக்கொண்டவர்கள்.)

v அவரே ஒரு யூதராகப் பிறந்ததாலும்

யூதர்களை நமது மூத்த சகோதரர்களாகக் கருதுகிறோம்.  இந்த உண்மைகளே நம்மையும் யூதர்களையும் இணைக்கிறது.  கிறிஸ்துவே வாழும் இறைவனின் மகன் என்ற விசுவாசத்தில் நாமும் யூதர்களும் வேறுபட்டு இருக்கிறோம்.  இருப்பினும் மெசியாவின் இரண்டாம் வருகைக்கு காத்திருத்தலில் நாம் யூதர்களுடன் ஒன்றுபட்டுள்ளோம். [839-840]

Ø நமது விசுவாசத்தின் துவக்கம் அவர்களது விசுவாசம்

Ø அவர்களுடைய வேத நூல் நமது விவிலியத்தின் பழையஏற்பாடாகவும் முதல் பகுதியாகவும் அமைந்துள்ளது.

Ø  இரண்டாம் வத்திக்கான் சங்கம் கிறிஸ்துவை சிலுவையில் அறைந்ததற்கு யூஊதர்கள் மேல் மட்டு குற்றம் சுமத்தக் கூடாது என்று தெளிவு படுத்தியுள்ளது..

Ø The Judeo-Christian concept of man and morality, which is informed by the Ten Commandments, is the foundation of Western democracies. It is shameful that for hundreds of years Christians were unwilling to admit this close relation to Judaism

and for pseudo-theological reasons helped foment an anti-Semitism that all too often had lethal effects. During the Holy Year 2000, Pope John Paul II expressly asked forgiveness for this. “Do not think that I have come to abolish the law and the prophets; I have come not to abolish them but to fulfil them.”Mt 5:17

136    நமது திருச்சபை மற்ற மதங்களை எவ்வாறு கண் நோக்குகிறது?

நமது திருச்சபை

q மற்ற மதங்களில் உள்ள நன்மை மற்றும் உண்மைகளை மதிக்கிறது.

q ‘மத சுதந்திரம் ஒரு மனித உரிமை’  என்ற கோட்பாட்டை மதிக்கிறது. 

q இருப்பினும் ‘கிறிஸ்து ஒருவரே மனித குலத்தின் மீட்பர்; அவரே வழியும், உண்மையும், வாழ்வும்’ என்பதை விசுவசித்து அறிக்கையிடுகிறது. [841-848]

இறைவனைத் தேடி நாடும் ஒவ்வொரு மனிதரும் நமக்கு நெருக்கமானவர்களே. இந்த நோக்கில் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் நம்மோடு இன்னும் அதிகமாக ஒத்திருக்கிறார்கள்

      i.    அனைத்தையும் கடந்த, எல்லாம் வல்ல கடவுள் ஒருவரே என்ற கோட்பாட்டை விசுவசிப்பவர்கள் அவர்கள். [ கிறிஸ்துவம், யூதம் மற்றும் இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களும் மோனோதீஸம் = Monotheism =  ‘இறைவன் ஒருவரே’ என்ற மறைபொருளைக் கொண்ட மதங்கள்.]

    ii.    கடவுளே அனைத்தையும் படைத்தவர்; ஆபிரகாம் ஒருஇறைவாக்கினர் என்று விசுவசிப்பவர்கள்.

   iii.    அவர்கள் வேத புத்தகமாகிய குறானில் இயேசுவை இறைவாகினர்களில் ஒருவர் என்றும், மரியாள் அவரின் தாய் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

தனது மனச்சாட்சியின் படி வாழும் ஒருவர் கிறிஸ்துவையோ அல்லது கத்தோலிக்கத் திருச்சபயையோ அறியாதிருந்தாலும் அவரும் மீட்பை, முடிவில்லா வாழ்வை அடைவார் என்பது திருச்சபையின் போதனை. 

ஆனால் கிறிஸ்துவே வழியும், உண்மையும் வாழ்வும் என்று அறிந்த ஒருவர் கிறிஸ்துவை பின்பற்றவில்லையெனில் அவர் மீட்பை கண்டடைய முடியாது.  அவரைப் பொறுத்தவரை திருச்சபையால் அன்றி மீட்பு இல்லை (இதையே திருச்சபை Extra ecclesiam nulla salus அல்லது outside of the church there is no salvation என்று கூறுகிறது).

137    நமது திருச்சபையை  ‘அப்போஸ்தலிக்கத் திருச்சபை’ என்று ஏன் அழைக்கிறோம்?

 i.    அப்போஸ்தலர்களை அடித்தளமாகக்கொண்டு ஸ்தாபிக்கப் பட்டதாலும்,

ii.    அவர்களுடய விசுவாச பாரம்பரியத்தை நாம் மிக பற்றுறுதியாக ஏற்றுக்கொள்வதாலும்

iii.    அவர்களுடைய வழித்தோன்றல்களாகிய திருத்தந்தை மற்றும் ஆயர்களால் திருச்சபை ஆளப்படுவதாலும்

நமது திருச்சபையை அப்போஸ்த்தலிக்கத்  திருச்சபை என்று அழைக்கிறோம். [857-860, 869, 877]

v அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவின் பணிவாழ்வின் உடன் உழைப்பாளிகளாய் இருந்தவர்கள்.

v கிறிஸ்துவின் வாழ்வுக்கும், அரும் அடையாளங்களுக்கும், போதனைகளுக்கும், இறப்பு மற்றும் உயிர்ப்புக்கும் சாட்சிகளாய் இருந்தவர்கள்.

v தூய ஆவியை அவர்கள் மேல் பொழியப்பட்டவர்கள்.

v கிறிஸ்துவிடமிருந்து அப்போஸ்தலிக்க அதிகாரத்தைப் பெற்று உலகின் கடை எல்லைவரை நற்செய்தியை பறைசாற்றவும், திருச்சபையை நிறுவவும் கிறிஸ்துவின் தூதர்களாய் அனுப்பப் பெற்றவர்கள்.

v திருச்சபையில் ஒற்றுமையையும் ஸ்திரத்தன்மையையும் நிலை நிறுத்தியவர்கள்.

v திருத்தூதுப் பணியின் அப்போஸ்தலிக்க வாரிசுகளாகத், தேர்ந்து கொள்ளப்பட்டவர்களின் சிரமேல் கரங்களை வைத்து அப்பொஸ்தலிக்க  அதிகாரத்தை ஆயர்களுக்கும் அவர்கள் வழியாக குருக்களுக்கும் வழங்கியவர்கள்.

138    பரிசுத்த கத்தோலிக்க அப்போஸ்தலிக்கத் திருச்சபையின் கட்டமைப்பு எவ்வாறு அமைந்துள்ளது?

v திருச்சபை அங்கத்தினர்களை பொது நிலையினர் மற்றும் குருக்கள்/துறவரத்தார் என இரு வகைப்படுத்தலாம். அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்ற  கருத்தில் இருவரும் ஒரே மதிப்புடையவர்கள்.  வெவ்வேறு பணிகளைச் செய்கிறார்கள்  என்பதைத் தவிர அனைத்திலும் இரு பிரிவினருமே ஒரே முக்கியத்துவம் கொண்டவர்களே. 

v பொதுநிலையினர்: உலகில் உள்ள மாந்தர் அனைவரையும் இறையரசின் பாதையில் இட்டுச் செல்வதே பொதுநிலையினரின் பணியாகும்

v அருட்பொழிவுசெய்யப்பட்ட பணியாளர்கள்: திருச்சபை ஆளுகை, போதித்தல் மற்றும் அர்ச்சித்தல் ஆகிய பணிகள் இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

v இந்த இரு நிலையிலுமே கற்பு, தரித்திரம்,  கீழ்ப்படிதல் ஆகிய வார்த்தைப்பாடுகளை ஏற்று, இறைவனுக்குத் தங்களை சிறப்பாக மற்றும் முழுமையாக அர்ப்பணித்தவர்கள் இருக்கிறார்கள். [871-876, 934,935]

கிறிஸ்தவர்கள்

q திருமுழுக்கின் வழியாக  கடவுளின்  மக்களாகி, கிறிஸ்துவுக்குள் ஓருடலாக ஆக்கப்பட்டவர்கள்

q இதன் வழியாக கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் குருத்துவத்திலும், இறைவாக்குப் பணியிலும், அதிகாரம் தாங்குவோரின் அவையிலும் அவரவர்களுக்கு உரிய வழியில் பங்கு பெறுகிறார்கள்.

q திருச்சபைக்கு இறைவன் கட்டளையிட்டுள்ள பணியில் நமது அழைத்தலுக்கு எற்றவாறு பங்கு கொள்ள வேண்டும்.  அதன் வழியாக கிறிஸ்துவின் உடலை கட்டிஎழுப்புவதில், திருமுழுக்கால் புதுப்பிறப்பு அடைந்த ஒவ்வொருவரும், தத்தம் சக்திக்கேற்ப, பங்கு கொள்ள வேண்டும்.

q தமது வாழ்வால் நற்செய்தியின் மதிப்பீடுகளுக்கு சாட்சிகளாய் இருப்பது நமதுகடமையுமாகும்.

q இறைவன் ஒவ்வொருவரையும் வெவ்வேறு பாதைகளில் தன்னுடன் பயணிக்க வைக்கிறார்.

v  பொதுநிலையினர் அனைத்துமக்களோடும் கலந்து வாழ்வதால் அவர்கள் குடும்பம், செய்யும் தொழில் மற்றும் ஆற்றும் பணி வழியாக இறைஅரசைக் கட்டி எழுப்பத் தேர்ந்தெடுக்கிறார்.  இந்த நோக்கங்களுக்காகத் திருமுழுக்கு மற்றும் உறுதி பூசுதல் வழியாக தேவையான கொடைகளை அளிக்கிறார்.

v  வேறு சிலரிடம் வேத போதக பணியை ஒப்படைத்துள்ளார். அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகள்: ஆளுகை, போதனை மற்றும் அருசாதனங்கள் வழியாக பொதுநிலையினரை அர்ச்சித்தல்.  இவர்கள் தங்கள் விருப்பதின் படி எந்தவொரு பணியையும் ஆற்றமுடியாது.  அவர்கள் சார்ந்துள்ள துறவர சபைகள் வழியாக இறைவனே அவர்கள் ஆற்றவேண்டிய பணிகளுக்கு அனுப்புகிறார். அதற்கு தேவையான தெய்வீக ஆற்றலை அந்தந்த சபைகள் வழியாகவே அளிக்கிறார். அந்த ஆற்றலைக்கொண்டே கிறிஸ்துவின் இடத்தில் இருந்து அருட்சாதனங்களை நிறைவேற்றுகிறார்கள். 

q எத்தகைய அழைப்பானாலும் அது இறைவனிடமிருந்தேவருகிறது என்று அறிந்து ஏற்றுக்கொள்ளவேண்டும்.  அனைத்து அழைப்புகளுக்கும் ஒரே நோக்கமே:  இயேசு கிறிஸ்து ஏற்படுத்திய திருச்சபையை அவரின் இரண்டாம் வருகையின் மட்டும் உலகின் கடை எல்லைவரை கொண்டுசென்று அனைவரையும் இறை ஆட்சிக்கு உட்படுத்துவது.

139    பொதுநிலையினர் எதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்?

சமுதாயத்தில் மக்கள் நடுவே தங்களது கிறிஸ்தவ வாழ்வாலும், பிறர் அன்பு சேவையாலும் (மத்25:35-40) இறையாட்சியை வளரச் செய்யவே அழைக்கப்பட்டுள்ளார்கள்.  [897-913, 940-943]

Ø  பொதுநிலையினர் இரண்டாம் தர கிறிஸ்தவர்கள் அல்ல.  ஏனெனில் பொது குருத்துவதில் சில பணிகளை அவர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள்.

Ø  நமது அன்றாட வாழ்வில் அனைத்து சூழ்நிலைகளிலும் உள்ள மக்கள் (படிக்கும் பள்ளி, கல்லூரி, நம் குடும்பம் அமைந்துள்ள் பகுதி) நற்செய்தியை அறியச்செய்வதும்,  இயேசு கிறிஸ்துவை அறியச்செய்வதும், அவரை அன்பு செய்ய வைப்பதுமே நமது முதன்மையான அழைத்தல்.

Ø   நாம் பணி செய்தாலும், தொழில் செய்தாலும்,  அரசியலில் இருந்தாலும் நமது விசுவாச வாழ்வு அங்கெல்லாம் ஒர் தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தவேண்டும்.

Ø  திருச்சபையின் பணிகளுக்கு நாம் ஒத்துழைக்க வேண்டும். ஆலய மற்றும் பங்கு பணிகளை முன்னின்று செய்யலாம்; பங்கு குழுக்களில் உறுப்பினர்களாக இருந்து சேவை செய்யலாம். 

Ø  சிறுவர்களும் இளைஞர்களும் திருச்சபையின் தேவைகளுக்கு நாம் எந்தவகைகளில் உதவலாம் என்பதில் எப்போதும் கருத்தாய் இருக்கவேண்டும்.

140    திருச்சபை ஏன் ஜனநாயக அமைப்பாக விளங்க முடியாது?

ஜனநாயக அமைப்பில் ஆள்பவர்களுக்கு ஆள்வதற்கு வேண்டிய அதிகாரம் மக்களிடமிருந்து வருகிறது.  ஆனால் திருச்சபையில் அனைத்து அதிகாரங்களும்  கிறிஸ்துவிடமிருந்து வருகிறது.  எனவேதான் திருச்சபையில் அதிகாரம் கிறிஸ்து>திருத்தந்தை>ஆயர்கள்>குருக்கள் என்ற “படிநிலைக் கட்டமைப்பு” (Hierarchical Structure) முறையில் செயல்படுகிறது. இருப்பினும் “கூட்டுப் பொறுப்பு” அல்லது ”பொறுப்புப் பகிர்வு” (Collegial Structure) என்ற விதிமுறையில் கிறிஸ்து திருச்சபையை நடத்திச் செல்கிறார். [874-879]

படிநிலைக் கட்டமைப்பு: திருச்சபயின் “படிநிலைக் கட்டமைப்பில்” அருட்பொழிவு செய்யப்பட்ட குருக்கள் வழியாக கிறிஸ்துவே செயலாற்றுகிறார் என்பதே நமது விசுவாசம்.  இன்னும் விளக்கமாக சொல்லவேண்டுமானால் குருக்கள் தங்கள் சொந்த சக்தியாலோ ஆற்றலாலோ எந்த ஒரு இறைவனின் கொடையையும் மக்களுக்கு அளிப்பதில்லை, அளிக்கவும் முடியாது. உதாரணமாக குருக்கள் கிறிஸ்துவின் அதிகாரத்தினாலேயேயும் ஆற்றலாலேயும்தான் திருவருட்சாதனங்களை நிறைவேற்றுகிறார்கள் மற்றும் போதிக்கிறார்கள்.

கூட்டுப் பொறுப்பு அல்லது பொறுப்புப் பகிர்வு கட்டமைப்பு:

Ø கிறிஸ்து தனது முழு அதிகாரத்தையும் முழு விசுவாசத்தையும் தனது பன்னிரு திருத்தூதர்களிடம் ஒப்படைதார்.

Ø இந்த திருத்தூதர்களின் வழிவந்துகொண்டிருக்கும் அருட்பொழிவு செய்யப்பட்ட  அருட்பணியாளர்கள் திருத்தந்தையை தலைவராகவும்,  வத்திக்கானை தலைமைப் பீடமாகவும் (Petrine ministry presiding) கொண்டு திருச்சபையை ஆள்கிறார்கள்.

Ø கத்தோலிக்கத் திருச்சபையின் பல்வேறு அமைப்புகள்/ குழுக்கள் (councils of the church) (உதாரணம்: அன்பியங்கள், பங்கு பேரவை, பங்கு, மறைமாவட்டம், தமிழக ஆயர்கள் கூட்டமைப்பு போன்ற) இந்த கட்டமைப்பின் அடிப்படை மற்றும் அத்தியாவசியமான அங்கங்களாகும்.

Ø தூய ஆவியின் பலவகைப்பட்ட கொடைகளை மக்களுக்குப் பெற்றுத்தருவதற்கும், திருச்சபை உலகெங்கும் செயலாற்றுவதற்கும் (Universality of the Church) அருட்பணியாளர்களின் நிர்வாக அமைப்புகளும் (Synods) பொதுநிலையினரின் நிர்வாக அமைப்புகளும் (councils) மிகுந்த பயன் உள்ளவைகளாக உள்ளன.

141    திருத் தந்தையின் பொறுப்பு யாது?       

தூய பேதுருவின் ஸ்தானத்தில் அவர் பணியாற்றுவதாலும், ஆயர்கள் கல்லூரியின்/ கூட்டமைப்பின்  தலைவராக இருப்பதாலும்

   i.    அகில உலக ஆயர்களுக்குத் தலைவராக விளங்குகிறார்.

 ii.    திருச்சபையின்  முழுமையான ஒருமைப்பாட்டிற்கு முலமும், ஆதாரமும், உத்திரவாதமும் அவரே.

iii.    கீழ் கண்ட பணிகளுக்கு முதன்மை அதிகாரியாக அதிகாரம் பெற்றவராக இருக்கிறார்

a.   மேய்ப்புப் பணி / ஆயர் பணி

b.   கத்தோலிக்கக் கோட்பாடுகளில் இறுதி முடிவெடுத்தல்

c.    ஒழுங்கு நடவடிக்கைகள் மீது இறுதி முடிவெடுத்தல். [880-882, 936-937]

v கிறிஸ்து பன்னிருவரை திருத்தூதர்களாக நியமித்த போது ஒரு நிலையான, உறுதியான அப்போஸ்தலிக்க அமைப்பாக (College)) நிறுவினார். மத்தேயு 16:18எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு*; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்.  19விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார். இவ்வாராக இயேசு பேதுருவுக்குத் திருத்தூதர்களிடையே சிறப்பான முதன்மை ஸ்தானத்தைக் கொடுத்தார்.  இதன் வழி அவர் ஆதித் திருச்சபையின் தலைமை அதிகாரத்தைப் பெற்றார்.

v உரோமையை தலைமைப் பீடமாகக் கொண்ட திருத்தந்தை (தலைமை ஆயர்) தூய பேதுருவின் ஸ்தானத்திலும், திருச்சபையின் ஆயர்கள் மற்ற பதினோரு திருத்தூதர்களின் ஸ்தானத்திலும் ஒருவரோடு ஒருவர் முழுமையான புரிதலிலும், ஒற்றுமையிலும்  இருந்து திருச்சபையை ஆண்டுவருகிறார்கள்.

v உரோமை திருச்சபைக்கு அவர் (பேதுரு) தலைவராக இருந்ததாலும், உரோமை அவர் வேதசாட்சியாக மரித்த இடமாக இருந்ததாலும் உரோமையே தொடக்கத்திருச்சபையின் அதிகார மையமாகவும், திருச்சபையின் செயல்பாடுகள் பற்றிய உத்தரவுகளைப் பிறப்பிக்கும் தலைமை பீடமாகவும் திகழ ஆரம்பித்தது.

v உரோமையிலிருந்து பிறப்பிக்கப்படும் அனைத்து கோட்பாடுகளும், கொள்கை முடிவுகளும், உத்தரவுகளும் உண்மையான, முழுமையான, களங்கமற்ற மற்றும் தூய்மையான அப்போஸ்தலிக்க நம்பிக்கை மற்றும் வேத சத்தியங்கள் என்பதால் ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒவ்வொரு கிறிஸ்தவ சமூகமும் உரோமை தலைமைப் பீடத்தை, அதன் வழிகாட்டுதலை, அதன் உத்தரவுகளை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

v இன்றுவரை உரோமையில் உள்ள தலைமை ஆயர் (திருத் தந்தை) தூய பேதுருவாகவே ஏற்றுக்கொள்ளப் படுகிறார்.  இயேசுக்கிறிஸ்துவே திருச்சபையின் தலைமை ஆயராக இருந்து திருத்தந்தை வழியாகச் செயலாற்றுகிறார் என்பதே நமது விசுவாசம்.

v எனவே திருத்தந்தை தலைமை ஆயராகவும், கத்தோலிக்கத் திருச்சபையின் கோட்பாடுகளின் பொறுப்பாளியாகவும் இருந்து உண்மையான விசுவாசத்தைக் கட்டிக்காத்து அதனை உலகமெங்கும் அறிவிப்பதைக் கண்காணிக்கின்றார்.

v விசுவாசம் மற்றும் ஒழுக்கம் இவற்றில் ஏற்றுக்கொள்ள முடியாத / மன்னிக்கமுடியாத தவறிழைக்கப் படும்போது

        i.    தவறான வேதபோதனையில் ஈடுபடும் ஆணையத்தின் (Commissions) போதிக்கும் அதிகாரத்தை  திரும்பப்பெறுதல்.

      ii.    அருட்பொழிவு செய்யப்பட்ட அருட்பணியாளர்களிடமிருந்து குருத்துவ அருட்சாதனத்தை ரத்து செய்தல்.

   iii.        Unity in matters of faith and morals, which is guaranteed by the Church’s →MAGISTERIUM, or teaching authority, with the Pope at the head, is one reason for the remarkable resilience and influence of the Catholic Church.

142    ஆயர்கள் திருத்தந்தைக்கு எதிராக பேசவோ செயலாற்றவோ முடியுமா?  அதேபோல் திருத்தந்தை ஆயர்களுக்கு எதிராக பேசவோ செயலாற்றவோ முடியுமா?

i.      ஆயர்கள் திருத்தந்தைக்கு எதிராக பேசவோ செயலாற்றவோ முடியாது;  மாறாக திருத்தந்தையுடன் இணைந்து அவரின் கட்டளைப்படிதான் பேசவோ செயலாற்றவோ முடியும்.

ii.      தெளிவாக வரயறுக்கபட்டுள்ள கோட்பாடுகளின் (cases) மட்டில் ஆயர்களின் ஒப்புதல் இன்றி திருத்தந்தை முடிவுகள் எடுக்க முடியும்.  [883-885, 880-890]

143    திருத்தந்தை தவறிழைக்கமுடியாதவரா?

ஆம். 

Yes. But the →POPE speaks infallibly only when he defines a dogma in a solemn ecclesiastical act (“ex cathedra”), in other words, makes an authoritative decision in doctrinal questions of faith and morals. Magisterial decisions of the college of bishops in communion with the Pope also possess an infallible character, for example, decisions of an ecumenical council. [888-892]

The infallibility of the →POPE has nothing to do with his moral integrity or his intelligence. What is infallible is actually the Church, for Jesus promised her the Holy Spirit, who keeps her in the truth and leads her ever deeper into it. When a truth of the faith that has been taken for granted is suddenly denied or misinterpreted, the Church must have one final voice that authoritatively says what is true and what is false. This is the voice of the Pope. As the successor of Peter and the first among the bishops, he has the authority to formulate the disputed truth according to the Church’s Tradition of faith in such a way that it is presented to the faithful for all times as something “to be believed with certainty”. We say then that the Pope defines a dogma. Therefore such a dogma can never contain

something substantially “new”. Very rarely is a dogma defined. The last time was in 1950.

144

 

What is the task of the bishops?

Bishops have responsibility for the local Church that is entrusted to them and a share in the responsibility for the whole →CHURCH. They exercise their authority in communion with one another and for the benefit of the whole Church under the leadership of the →POPE. [886-887,893-896, 938-939]

Bishops must first of all be →APOSTLES—faithful witnesses of Jesus, who personally called them to follow him and then sent them. So they bring Christ to mankind and mankind to Christ. This happens through their preaching, the celebration of the sacraments, and their governance of the →CHURCH. As a successor of the apostles, a bishop exercises his ministry by virtue of his own apostolic authority; he is not an agent or a sort of assistant to the Pope. Yet he acts with and under the Pope.    

 

 

Evangelical counsels, consecrated life

 

145    அருட்பணி அழைத்தலை ஏற்றுக்கொண்டவர்கள் தங்கள் வாழ்வு முழுவதும் ஏழ்மையிலும், திருமணம் செய்துகொள்ளாது கற்போடும் மற்றும் கீழ்படிதலிலும் வாழவேண்டும் எனவும் ஏன் விரும்புகிறார்?

இறைவன் நம் மேல் அன்பு கொண்டுள்ளது மட்டுமல்ல நமது அன்பிற்காக ஏக்கத்தோடும் உள்ளார்.  நாம் அவருக்கு செலுத்தும் அன்பின் ஒர் வகைதான் நம்மையே முழுவதும் அவருக்கு அற்பணிப்பது.  எவ்வாறென்றால்  கிறிஸ்துவைப்போல் முழுமையான ஏழ்மை, கற்பு மற்றும் கீழ்ப்டிதலில்   வாழ்வது.  ஒருவர் இவ்வாறு வாழும்போது தனது அன்பு, சிந்தனை மற்றும் செயல் அனைத்தும் இறைவனையும் அடுத்திருப்பவர்களை மட்டுமே சார்ந்திருக்கும்.  [914-933, 944-945]

q திருச்சபை நிறுவப்பட்ட காலத்திலிருந்து தனிப்பட்ட சில கிறிஸ்தவர்கள் இறையாட்சியின் மதிப்பீடுகளுக்காக தங்களை முழுவதுமாக இயேசுவின் கரங்களில் ஒப்படைத்துவிட்டனர்.  

q மனிதரின் பார்வையில் மிக மதிப்புமிக்கதாகக் கருதப்பட்ட அவர்களது சொத்து, குறிக்கோள், லட்சியம், உலக இன்பங்கள் மற்றும் குடும்ப வாழ்வின் வழி கிடைக்கும் அன்பு, மகிழ்ச்சி அனைத்தையும் இறைவனுக்காகவும் இறையாட்சிக்குள் மற்றவரையும் கொண்டுவருவதற்காகவும் முழுமையாக இழந்தனர். அதுவே இறைவனை அன்புசெய்ய தங்களுக்கு முழு சுதந்திரத்தை அளிக்க வல்லது என்பதை உறுதியாக நம்பினார்கள்,

q உலகம்தான், உலகைச் சார்ந்தவைதான், அனைத்தும் என்பதை உதறித் தள்ளிவிட்டு தன் மணாளனான கிறிஸ்துவிடம் சேர்ந்து நித்திய காலத்திற்கும் அவரை முகமுகமாய் தரிசித்து அவரோடு வாழ்வதே உண்மையான உன்னதமான மகிழ்ச்சி என்பதை ஏற்றுக்கொண்டவர்கள்.

q திருமுழுக்கின்போது விதைக்கப்பட்ட அர்ப்பணம் என்ற பண்பு இத்தகைய வாழ்வின் வழிதான் முழுமைபெற முடியும் என்று விசுவசித்தவர்கள்.

“I Believe in . . . the Communion of Saints”

புனிதர்களின் உறவை விசுவசிக்கிறேன்

146    புனிதர்களின் உறவு என்றால் என்ன?

திருமுழுக்கின் வழியாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவரை முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் அன்புசெய்யும் அனவரும் (அவர்கள் உயிரோடு இருப்பவர்களானாலும் இறந்தவர்களானாலும்) ஒரே உறவில் வாழ்கிறோம்.  இந்த உறவையே அல்லது இந்த மறை உண்மையையே புனிதர்கள் உறவு என்கிறோம்.  இந்த உறவின் (Reachout) பரிமாணம் விண்ணகத்தையும், மண்ணகத்தையும் உள்ளடக்கியது.  நாம் அனைவரும் கிறிஸ்துவுக்குள் ஒரே உடலாய் இருக்கிறோம் என்பதே இந்த மறை உண்மையின் பொருள். [946-962]

Ø நாம் எண்ணுவதைவிட அல்லது கற்பனை செய்யக்கூடியதை விட திருச்சபை பெரிதும், உயிர் உள்ளதும் ஆகும்.

Ø இதன் உறுப்பினர்கள் 

q உயிரோடு இருப்பவர்களையும்,  இறந்தவர்களையும் [இறந்தவர்கள் என்பது வான்வீட்டில் வாழும் ஆன்மாக்களையும், இன்னும் உத்தரிக்கும் நிலையில் இருக்கும்  ஆன்மாக்களையும் உள்ளடக்கியது.]

q நமக்கு தெரிந்தவர்களையும் தெரியாதவர்களையும்

q பெரிய புனிதர்களையும், அதிகம் பேசப்படாதவர்களையும்(inconspicuous)

    உள்ளடக்கியது. 

Ø இறப்பையும் தாண்டி ஒருவரையொருவர் அன்பு செய்ய முடியும், ஒருவருக்ககொருவர் உதவ முடியும். 

Ø நமது பாதுகாவலர்கள், நாம் பெரிதும் மதிக்கும் புனிதர்கள் மட்டுமல்லாது வான்வீட்டில் இறைவனோடு இருக்கிறார்கள் என்று நாம் நம்பும் நமது உறவினர்கள், மற்றும்  நமது நண்பர்களையும் நமது ஜெபத்தின் மூலமும், வேண்டுதல்கள் மூலமும் நமக்காக இறைவனிடம் ஜெபிக்கவும் பரிந்துபேசவும் கேட்கலாம்.

Ø அதேபோல் நமது பரிந்துரை ஜெபத்தாலும், தவ முயற்சிகளாலும் உத்தரிக்கும் நிலையில் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் ஆன்மாக்களுக்கு இறைவனிடமிருந்து பாவமன்னிப்பைப் பெற்றுக்கொடுத்து அந்த ஆன்மாக்களை மோட்ச ராஜ்யத்தில் கொண்டு சேர்க்க முடியும்.

Ø கிறிஸ்துவுக்காக நாம் செய்யும் செயல்கள், ஏற்றுக்கொள்ளும் துன்பங்கள் அனைத்தையும் பிறருடைய தேவைகளுக்காகவும், நன்மைகளுக்காகவும் ஒப்புக்கொடுக்க முடியும்.  இதன் எதிர்வினையாக கிறிஸ்துவுக்கு எதிராக நாம் செய்யும் பாவங்கள் நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் [நம் குழந்தைகள், அவர்கள் வழி சந்ததியினரையும்] பாதிக்கும் என்பதும் இந்த உறவின் ஒரு கசப்பான உண்மையும் கூட.

MARY'S MOTHERHOOD WITH REGARD TO THE CHURCH

147    புனிதர்கள் உறவில் அன்னை மரியாளுக்கு ஏன் அனைவருக்கும் மேலான இடம் அளிக்கப்பட்டுள்ளது?

i.    மரியாள் இறைவனின் தாய்

ii.    எனவே அன்னை மரியாளை விட அல்லது அவருக்கு இணையாக இந்த உலகில் எவருமே கிறிஸ்துவோடு பந்தத்தில் இருந்திருக்க முடியாது.

iii.    இந்த பந்தம் விண்ணகத்திலும் உள்ளது.  எனவேதான் தாயாம் திருச்சபைஅன்னையை தமத்திருத்துவத்தின் தாயாக உயர்த்தி;  விண்ணக மண்ணக அரசியாக பிரகடனப் படுத்தியுள்ளது.

iv.    கிறிஸ்து தான் மரிக்கும் முன் ‘இதோ உன் தாய்’ எனக்கூறி, நம் அனைவரின் தாயாக உயர்த்தினார்.  இந்த தாய் உறவினால்தான் அன்னை மரியாளுக்கு புனிதர்கள் உறவில் அனைவருக்கும் மேலான நிலை அளிக்கப்பட்டுள்ளது. [972]

இறைவனின் சித்தம் மிகவும் ஆபத்தானதும், வேதனை மிக்கதும் என அறிந்திருந்தும் அதற்கு மழுமனதோடு கீழ்படிந்தார்.  அன்னை மரியாள் இந்த உலகில் வாழ்ந்ததுபோல் வாழ்பவர்களும், மரியாள் கொண்டிருந்த நம்பிக்கை, தாழ்ச்சி, கீழ்படிதல் ஆகிய பண்புகளில் வாழ்பவர்களும் உறுதியாக விண்ணரசை அடைவார்கள்.

148    அன்னை மரியாள் நமக்கு உதவ முடியுமா?

முடியும்.  திருச்சபையின் தொடக்க காலத்திலிருந்தே நடந்துள்ள நிகழ்வுகள் இந்த உண்மையை நமக்கு தெளிவுபடுத்துகின்றன.  லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் இதற்கு சாட்சியமாகவும் உள்ளனர். [967-970]

v இயேசு தனது தாயை நமக்கும் தாயாக விட்டுச்சென்றதால் அன்னை மரியாள் நமக்கும் தாய்.

v நல்ல அன்னையர் என்றும் தம் பிள்ளைகளுக்கு துணையாக இருப்பர்.  நம் அன்னை மரியாளும் அப்படியே.

v அன்னை மரியாள் இந்த உலகத்தில் வாழ்ந்த போதே இயேசுவிடம் மற்றவர்களுடைய தேவைகளுக்காக பரிந்து பேசியுள்ளார்- கானாவூர் திருமணத்தில் மணமக்களின் சங்கடத்தைப் போக்கியவர்.

v எலிசபெத் கருவுற்றிருந்த காலத்தில் அவருக்கு உதவ விரைந்து சென்றவர்.

v பெந்தகோஸ்தெ நாளில் சீடர்கள் நடுவே இருந்து செபித்தவர்.

v அன்னை தமது பிள்ளைகள்மேல் கொண்டுள்ள அன்பு, பாசம், பரிவு என்றுமே குறைவு படாதது. எனவே நாம் உறுதியாக நம்பலாம் – அன்னை மரியாள் நமக்காக என்றும் இறைவனிடம் பரிவோடு பரிந்துபேசி நமக்கு வேண்டியவற்றைப் பெற்றுத்தருவார்.  இந்த நமது நம்பிக்கையால்தான் “இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வெண்டிக்கொள்ளும்” என அன்னையிடம் செபிக்கிறோம்.

149    அன்னை மரியாளை நாம் ஆராதிக்கலாமா?

கண்டிப்பாகக் கூடாது.  இறைவன் மட்டுமே ஆராதனைக்கு உரியவர். அனால் அன்னைக்கு நமது வணக்கத்தை செலுத்தலாம்.  அன்னை மரியாள் இறை இயேசுவின் தாய் என்பதாலும், அவர் விண்ணக மண்ணக அரசியாகப் போற்றப்படுவதாலும் புனிதர்கள் அனைவருக்கும் செலுத்தக்கூடிய சாதாரண வணக்கத்தைக் காட்டிலும் சிறப்பான வணக்கத்தை அன்னை மரியாளுக்கு செலுத்துகிறோம். [971]

v அராதனை என்பது படைத்தவரை, படைப்புக்கள் அனைத்தின் மீதும் அதிகாரம் கொண்டவரைக் கடவுள் என்று ஏற்று அவரை மட்டுமே வழிபடுவது.

v அன்னை மரியாள் நம்மைப் போல ஒரு படைப்பே.

v நன்பிக்கையின் அடிப்படையில் நமக்கும் தாய் அவர். தாய்க்கு உரிய வணக்கத்தை அவருக்கு செலுத்துகிறோம்.

v லூக்1:48  “ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்”. அன்னையே தன்னை தாழ்நிலையில் இருக்கும் இறைவனின் அடிமை என்று தெளிவு படுத்தியுள்ளார்.

v எனவேதான் அன்னைக்கு திருச்சபையால் அங்கிகரிக்கப்பட்ட திருத்தலங்கள் உள்ளன;  திருயாத்திரை செல்லும் இடங்கள் உள்ளன; திருச்சபை திருநாட்களை குறித்துக் கொடுத்துள்ளது; அன்னைக்கு பாடல்களையும் செபங்களையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது

v அத்தகைய சிறந்த செபங்களில் ஒன்றுதான் செபமாலை.  இது ஒரு மறை உண்மைகளின் தொகுப்பு ஆகும்.  எனவேதான் செபங்கள் அனைத்திலும் சிறந்ததாகவும் அன்னைக்கு பிடித்த ஒன்றாகவும் கருதப்படுகிறது.

 

Anonymous Author