பெரிய வெள்ளி –ஆரதணை

 

பெரிய வெள்ளி –ஆரதணை

மறைக் கல்வி மாணவர்கள்

பாடல்: 1. தூயவர், தூயவர்

தூயவர், தூயவர், தூயவர், மூவுலகிறைவனாம் ஆண்டவர்! 

வானமும் வையமும் யாவும் நும் மாட்சிமையால் நிறைந்துள்ளன!

உன்னதங்களிலே ஓசான்னா! (2)

ஆண்டவர் திருப்பெயரால் வருபவர் ஆசீர் பெற்றவரே!

உன்னதங்களிலே ஓசான்னா! (2) 

தியானம்:

என் அன்புச்சகோதரமே நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது. எனக்கு இல்லாமலிருந்த துயரம் ஒன்றுகூட இல்லை.  சரீர வேதனையோ; மனத்துயரமோ; இருதய வலியோ; உள்ளத்தின் சஞ்சலமோ எல்லாமே எனக்கிருந்தன.  இவைகள் அனைத்தையும் நான் அனுபவித்தேன்,  இந்த துன்ப  துயரங்கள் அனைத்தையும் நான் உணவாக உண்டேன்.  இவையெல்லாவற்றையும் கொண்டு என் தாகத்தை தீர்த்துக்கோண்டேன்.  எந்த அளவிற்கு அப்படிச் செய்தேனென்றால் அவற்றால் நான் உயிர் விட்டேன்.  இந்த துயரங்களின் கசப்பு இன்னும் இருக்கிறது

வாசகம்: யோவே2:12-17

12இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள் என்கிறார் ஆண்டவர்.13 நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள். அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்: நீடிய பொறுமையுள்ளவர், பேரன்புமிக்கவர்: செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர்.14 ஒருவேளை அவர் தம் மனத்தை மாற்றிக்கொண்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு தானியப் படையலையும் நீர்மப் படையலையும் நீங்கள் அளிக்குமாறு உங்களுக்கு ஆசி வழங்குவார். இதை யார் அறிவார்?15 சீயோனில் எக்காளம் ஊதி எச்சரியுங்கள்: புனிதமான உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்: வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள்.16 மக்களைத் திரண்டு வரச்செய்யுங்கள்: புனித கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்: முதியோரைக் கூடிவரச் செய்யுங்கள், பிள்ளைகளையும் பால் குடிக்கும் குழந்தைகளையும் ஒருசேரக் கூட்டுங்கள்: மணமகன் தன் அறையை விட்டு வெளியேறட்டும்: மணமகள் தன் மஞ்சத்தைவிட்டுப் புறப்படட்டும்.17 ஆண்டவரின் ஊழியர்களாகிய குருக்கள் கோவில் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழுதவண்ணம், "ஆண்டவரே, உம் மக்கள்மீது இரக்கம் கொள்ளும்: உமது உரிமைச்சொத்தை வேற்றினத்தார் நடுவில் நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதீர்" எனச் சொல்வார்களாக!

பாடல் – 2 :  அப்பா நான் தவறு செய்தேன்

அப்பா நான் தவறு செய்தேன் உன் அன்பை உதறிசென்றேன் நான் கெட்டலைந்து ஓடிவந்தேன், என்னைக் கண்பாரும் உந்தன் பிள்ளை நான்.          …… ………        அப்பா

பாடிவரும் பறவைகளும் காடுகளின் மிருகங்களும் உன் அன்பில் மகிழ்ந்திருக்க நான் உன்னைப் பிரிந்து சென்றேன்                                        ………………                    அப்பா

வாழ்வுதரும் வசனம் எல்லாம் நீர் என்று அறிந்த பின்னே  வேரு எங்கு நான் போவேன், எந்தன் புகலிடம் நீரே அப்பா                                 ……………                         அப்பா  

பதிலுரைப் பாடல்   திபா 130: 1-8

 பல்லவி: ஆண்டவரிடமே பேரன்பும் மீட்பும் உள்ளது.

Ø ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்;  ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். (பல்லவி)

Ø ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால்யார்தான் நிலைத்து நிற்கமுடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர்மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். (பல்லவி)

Ø  ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிடஆம்விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிடஎன் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. (பல்லவி)

Ø பேரன்பு ஆண்டவரிடமே உள்ளதுமிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. 8 எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! (பல்லவி)

தியானம்:

நான் கடவுளின் மகனாகவும், அமல உற்பவியான என் தாயின் மகனாகவும் இருந்தபடியால் மிகப் பிரகாசமான சரீரித்தைப் பெற்றிருந்தேன்.  அந்த பிரகாசம் இப்போது உங்களுக்காகக் கிழிக்கப்பட்டு, அடிக்கப்பட்டு துளைக்கப்பட்ட எண்ணிக்கையில்லா காயங்களிலிருந்து இரத்தம் வெளியேற்றப்பட்டு, ஒரு குக்ஷ்டரோகியினுடையதைப்போல் இருக்கிறது.  அத்தனை கொடூரமாய் அது அடிக்கப்பட்டு சிறுமைப்படுத்தப்பட்டது.  ஆம். தாவீது கூறியதுபோல் / ஒரு புழுவாகவும்,/ மனுக்குலத்தின் நிந்தையாகவும் ஜனங்களின் பரிகாசமாகவும் காணப்படுகிறேன். என் பிதாவின்மீதும், என் பிதாவின் பிள்ளைகளாகிய உங்கள் மீதும் எனக்கிருந்த நேசமானது எத்தகையது தெரியுமா? என்னை அடித்தவர்களுக்கு என் சரீரத்தை கையளிக்க வைத்தது.  என்னை கன்னத்தில் அறைந்தவர்களுக்கும். காறி உமிழ்ந்தவர்களுக்கும் என் முகத்தைக் காட்ட வைத்தது. மேலும் என் தலையை முட்களால் ஊடுருவக் குத்தச் செய்தவர்களுக்கும், என் எலும்புகளை வெளியே தெரியச்செய்தவர்களுக்கும் என் ஆடைகளைக் களைந்து அதனால் என் தூய்மையை மிகக் குரூரமான முறையில் நோவுரச் செய்தவர்களுக்கும் ஒரு மரத்தோடு என்னை ஆணியால் அறைந்து இறைச்சி விற்பவனின் கொக்கியில் தொங்கவிடப்பட்ட ஆட்டைப்போல் என்னை சிலுவையில் தொங்கவிட்டவர்களுக்கும் அந்த அன்புதான் என் ஜீவன் பிரியுமட்டும் என்னை கையளிக்கவைத்தது.

பாடல் –3 இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால் இயேசுவின் அன்பை
மறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர் -2 
மரித்துத் தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ                                                         இயேசுவின் 

அளவில்லா அன்பு அதிசய அன்பு ஆழமகலம் நீளம் எல்லை காணா அன்பு 
களங்கமில்லா அன்பு கருணை சேர் அன்பு -2
கல்வாரி மலை கண்ணீர் சொல்லிடும் அன்பு                                                                இயேசுவின் 
அலைகடலை விட பரந்த பேரன்பு அன்னைமார் அன்பெல்லாம் திரையிடும் அன்பு 
மலைபோல் எழுந்தன்னை வளைத்திடும் அன்பு -2
சிலையென பிரமையில் நிறுத்திடும் அன்பு -                                                                இயேசுவின் 

வாசகம் 2. எசாயா. 53:1-08

நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்? ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?2 இளந்தளிர்போலும் வறண்டநில வேர்போலும் ஆண்டவர் முன்னிலையில் அவர் வளர்ந்தார்: நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை: நாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை:3 அவர் இகழப்பட்டார்: மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்: வேதனையுற்ற மனிதராய் இருந்தார்: நோயுற்று நலிந்தார்: காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்: அவர் இழிவுபடுத்தப்பட்டார்: அவரை நாம் மதிக்கவில்லை.4 மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்: நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்: நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம்.5 அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்: நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்: நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்: அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.6 ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம்: நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்: ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார்.7 அவர் ஒடுக்கப்பட்டார்: சிறுமைப்படுத்தப்பட்டார்: ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை: அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார்.

பதிலுரைப் பாடல். திபா 145: 8-18

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்.

v  ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்எளிதில் சினம் கொள்ளாதவர்பேரன்பு கொண்டவர்.ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்;தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். (பல்லவி)

v  ன் ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர்.  தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார். (பல்லவி)

v  ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.  தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். (பல்லவி)

 

பாடல்:  இயேசுவின் நாமம் இனிதான நாமம்

 இயேசுவின் நாமம் இனிதான நாமம் இணையில்லா நாமம் இன்ப நாமம்

1. பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும் பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் --- இயேசுவின்

2. பரிமள தைலமாம் இயேசுவின் நாமம் பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம் --- இயேசுவின்

3. வானிலும் பூவிலும் மேலான நாமம் வானாதி வானவர் இயேசுவின் நாமம் --- இயேசுவின்

4. நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம் நம்பினோரை என்றும் கைவிடா நாமம் --- இயேசுவின்

5. முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம் மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம் --- இயேசுவின்

6. சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம் சாபப் பிசாசை துரத்திட்ட நாமம் --- இயேசுவின்

தியானம்

நான் குற்றம் சுமத்தப்பட்டேன்;  தீர்ப்பிடப்பட்டேன்;  விற்கப்பட்டேன்;  காட்டிக் கொடுக்கப்பட்டேன்;  மறுதலிக்கப்பட்டேன்;  கைவிடப்பட்டேன்;  பிச்சைக்காரனைவிட வறியவனாக்கப்பட்டேன்;  கன்றிப்போன என் உடலின் நிருவாணத்தை மூடும் என் அங்கியைக்கூட இழந்தேன்;  கொலைசெய்யப்பட்டேன் நான் என்மேல் சுமத்திகொண்ட பாவங்களால் என்    தந்தையாலும் கைநெகிழப்பட்டேன்.  உங்களுடைய பாவங்களின் எல்லா அசுத்தங்களாலும் நான் என் தூய்மையை இழந்தேன்..  துயரத்தின் இருட்டான பாதாளம் வரைக்குக் நான் வீசியெறியப்பட்டேன்.  உங்கள் பாவத்தின் சாபத்தால் சாகிற என் கண்களுக்கு பரலோகத்தின் வெளிச்சம் மறுக்கப்பட்டது.   என் இறுதி கதறலுக்கு பதில் கூறக்கூடிய தெய்வீக அன்பு கூட  இல்லாமல் ஆக்கப்பட்டேன்.

பாடல்:  நான் பாவி இயேசுவே

நான் பாவி இயேசுவே என் வாழ்வை மாற்றுமே

விழுந்துவிட்டேன் மனம் உடைந்து விட்டேன் என்னை தேற்றும் இயேசுவே . . . 2 -- நான் பாவி இயேசுவே

கலங்குகிறேன் மனம் குழம்புகிறேன் மன அமைதி தாருமே . . . 2 -- நான் பாவி இயேசுவே

வாசகம் 3. எசாயா. 53:9-11

அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார்: அவருக்கு நேர்ந்ததைப்பற்றி அக்கறை கொண்டவர் யார்? ஏனெனில், வாழ்வோர் உலகினின்று அவர் அகற்றப்பட்டார்: என் மக்களின் குற்றத்தை முன்னிட்டுக் கொலையுண்டார்.9 வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை: வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை: ஆயினும், தீயவரிடையே அவருக்குக் கல்லறை அமைத்தார்கள்: செத்தபோது அவர் செல்வரோடு இருந்தார். அவரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்: அவர் தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார்: எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்: ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும்.11 அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்: நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளராக்குவார்: அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார்.

தியானம்

ஆனால் நீங்கள் மிக அதிகமாய்க் காயப்படுதியது என் உணர்வுகளையும் என் உள்ளதையும்தான்.  அவ்விரண்டையும் நீங்கள் சிரிப்புக்குரியதாயும்,  கேலிக்குரியதாகவும் ஆக்கினீர்கள்; யூதாஸின் வழியாக நான் காட்டிய நட்பில் அடித்தீர்கள்; என்னை மறுதலித்த இராயப்பர் வழியாக எனது பிரமாணிக்கத்தில் அடித்தீர்கள்.  என்னைப்பார்த்து ’அவனைக் கொல்லும், அவனைக் கொல்லும்’ என்று கூச்சலிட்டவர்கள் வழியாக நான் செய்த அனைத்து நன்மைகளிலும் அடித்தீர்கள்;  அவர்களை எத்தனையோ நோய்களிலிருந்து நான் குணமாக்கியிருந்தேன்.  அவர்கள் செய்த கொடூர செயல்களால் என் அன்பில் அடித்தீர்கள். இவன் கடவுளை தூக்ஷிப்பவன் என்று பழி சுமத்தியவர்கள் வழியாக எனக்கும் என் தந்தைக்கும் உள்ள புனிதமான உறவில் அடித்தீர்கள். ஆனால் நானோ என் தந்தையின் விருப்பத்தின்மேல் நான் கொண்ட ஆவலினால் மனிதவதாரமெடுத்து என்னை மனிதர் கையில் ஒப்படைத்தேன்.  என் வாழ்நாள் முழுவதும் வேதனைப்பட்டேன்.  மனிதக் குரூரத்திற்கு என்னை விட்டுக்கொடுத்தேன்.   ஒரு வார்த்தையும் நான் சொல்லவில்லை.  முறைப்பாடும் கூறவில்லை.  என்மேல் குற்றம் சாட்டியவர்களையும், தீர்ப்பிட்டவர்களையும், கொலை செய்தவர்களையும் எரித்து சாம்பலாக்க எனது ஒரு பார்வையே போதுமானதாக இருந்தது.  ஆனால்  நான் சுயமாகவே அப்பலியை நிறைவேற்ற வந்தேன். அதனால் ஒரு செம்மறிக் குட்டியைப்போல் மனிதர்கள் என்னைப் பிடிக்கவும், உரியவும் கொல்லவும் நான் கையளித்தேன்.  ஏனென்றால் நான் செம்மறியாக இருந்தேன்.  அப்படியே எக்காலமும் இருப்பேன்.  என் உடலை கொண்டு உங்களுக்கு வாழ்வு கொடுக்கும்படியாக மட்டுமே அப்படிச்செய்தேன். நான் பெத்லெஹேமில் பிறந்தபோதே சாகத்தொடங்கினேன். தொடர்ந்து நான் என் வறுமையிலும், நாடு நீங்கிய நிலையிலும், ஓடிப்போகுதலிலும், உழைப்பிலும். சோர்விலும், கட்டிக் கொடுக்கப்படுதலிலும், கொடுமைகளிலும், பொய்களிலும், தேவதூஷணங்களிலும் தொடர்ந்து நான் இறந்து வந்தேன்.  மனிதனை கடவுளுடன் ஒப்புரவாக்க வந்தேன்.  மனிதனோ எனக்குக் கொடுத்தவை இவைதான்.

பாடல் – 6 - நேசரே உன் திரு பாதம் அமர்ந்தேன்

நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன் நிம்மதி நிம்மதியே
ஆர்வமுடனே பாடித்துதிப்பேன் ஆனந்தமே ஆனந்தமே                      (2)
அடைக்கலமே அதிசயமே ஆராதனை ஆராதனை

உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்து  உள்ளமே பொங்குதையா
நல்லவரே நன்மை செய்தவரே நன்றி நன்றி ஐயா                                 (2)
வல்லவரே நல்லவரே ஆராதனை ஆராதனை

 பலியான செம்மறி பாவங்கள் எல்லாம் சுமந்து தீர்த்தவரே
பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ பாக்கியம் பாக்கியமே             (2)
பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை

 

பதிலுரைப் பாடல்: திபா 46: 1-8

பல்லவி: ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்நமக்கு அரணாயும் இருக்கின்றார்.

v கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே. ஆகையால்நிலவுலகம் நிலைகுலைந்தாலும்மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும் எங்களுக்கு அச்சமென்பதே இல்லை. (பல்லவி)

v ஆறு ஒன்று உண்டுஅதன் கால்வாய்கள் உன்னதரான கடவுளின் திரு உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன. அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்அது ஒருபோதும் நிலைகுலையாதுவைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு. (பல்லவி)

v படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்யாக்கோபின் கடவுளே நமக்கு அரண். வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்! (பல்லவி)

வாசகம்4. இணைச்சட்டம்.30:10-18

எனவே, உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடு. சட்ட நூலில் எழுதப்பட்டுள்ள அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடி. உன் முழ இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பு.11ஏனெனில், இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இந்தக் கட்டளை உனக்குப் புரியாதது இல்லை: உன்னிடமிருந்து வெகு தொலையிலும் இல்லை.12 நாம் அதைக்கேட்டு, நிறைவேற்றுமாறு, நமக்காக யார் விண்ணகத்துக்குப் போய், அதைக் கொண்டு வருவார் என்று நீ சொல்லாதவாறு, அது விண்ணில் இல்லை.13 நாம் அதைக்கேட்டு நிறைவேற்றுமாறு, நமக்காக யார் கடல்கடந்து சென்று, அதை நம்மிடம் கொண்டு வருவார் என்று நீ சொல்லாதவாறு, அது கடல்களுக்கு அப்பால் இல்லை.14 ஆனால், நீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது: உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது.15 இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும் தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன்.16 அது இதுதான்: இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு. அவரைப் பின்பற்றி அவரது வழியில் நட. அவரது கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் கடைப்பிடி. அப்போது நீ வாழ்வாய், நீ பலுகுவாய். நீ உடைமையாகக் கொள்ளப்போகும் நாட்டில் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசிவழங்குவார்.17 ஆனால், உனது உள்ளம் விலகிச் சென்று, நீ செவிகொடாமல் கெட்டலைந்து, வேறு தெய்வங்களை வணங்கி, அவற்றுக்குப் பணிவிடை புரிந்தால்,18 இன்று நான் உனக்கு அறிக்கையிட்டுக் கூறுகிறேன். நீ நிச்சயம் அழிந்துபோவாய்.

பாடல்: தொடும் என் கண்களையே

1.    தொடும் என் கண்களையே உம்மை நான் காணவேண்டுமே இயேசுவே உம்மையே நான் காணவேண்டுமே

2.    தொடும் என் காதினையே உம் குரல் கேட்கவேண்டுமே இயேசுவே உம் குரலைக் கேட்கவேண்டுமே

3.    தொடும் என் ஆண்டவரே தொடும் என் வாழ்வினையே இயேசுவே உம்மை போல் என்னை மாற்றூமே

4.    தொடும் என் நாவினையே உம் புகழ் பாடவேண்டுமே இயேசுவே உம் புகழைப் பாடவேண்டுமே

5.    தொடும் என் மனதினையே மனப் புண்கள் றவேண்டுமே இயேசுவே மனப்புண்கள் ஆறவேண்டுமே

6.    தொடும் என் உடல்தனையே உடல் நோய்கள் தீரவேண்டுமே இயேசுவே உடல் நோய்கள் தீரவேண்டுமே

7.    தொடும் என் இதயத்தையே உம் அன்பு ஊறவேண்டுமே இயேசுவே உம் அன்பு ஊறவேண்டுமே

வாசகம் 5.  எசாயா. 58:5-9

ஒருவன் தன்னை ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான் உண்ணாநோன்பின் நாளாகத் தெரிந்து கொள்வது? ஒருவன் நாணலைப் போல் தன் தலையைத் தாழ்த்திச் சாக்கு உடையையும் சாம்பலையையும் அணிந்து கொள்வதா எனக்கு ஏற்ற நோன்பு? இதையா நீங்கள் நோன்பு என்றும் ஆண்டவருக்கு உகந்த நாள் என்றும் அழைக்கின்றீர்6  பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு!8அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்: விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்: உன் நேர்மை உனக்கு முன் செல்லும்: ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும்.9அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்: அவர் உனக்குப் பதிலளிப்பார்: நீ கூக்குரல் இடுவாய்: அவர் இதோ! நான் என மறுமொழி தருவார். 

பதிலுரைப் பாடல்: திபா 81: 6-13 ????

பல்லவி:பலியை அல்லஇரக்கத்தையே நான் விரும்புகின்றேன்.

v கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். (பல்லவி)

v ஏனெனில்பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாதுநான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை. 17 கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமேகடவுளே! நொறுங்கியகுற்றமுணர்ந்த உள்ளத்தை நீர் அவமதிப்பதில்லை. (பல்லவி)

v சீயோனுக்கு இன்முகம் காட்டி நன்மை செய்யும்எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டுவீராக!  அப்பொழுது எரிபலிமுழு எரிபலியெனும் முறையான பலிகளை விரும்புவீர். (பல்லவி)

வாசகம் : 10 பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 2: 4-11

நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்.5 கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்!6 கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை.7 ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி,8 சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.9 எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.10 ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்:11 தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக இயேசு கிறிஸ்து ஆண்டவர் என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

பதிலுரைப் பாடல் திபா 95: 1-9

பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்ஆண்டவர் குரலைக் கேட்டிடுவீர்.

v வாருங்கள்ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்;புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். (பல்லவி)

v வாருங்கள்தாள்பணிந்து அவரைத் தொழுவோம்நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள்நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். (பல்லவி)

v இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!  அன்று மெரிபாவிலும்பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல்,உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். (பல்லவி)

பாடல்:

இயேசுவே என்னுடன் நீ பேசு/ என் இதயம் கூறுவதைக் கேளு/ நான் ஒரு பாவி ஆறுதல் நீ கூறு 
நாள் முழுதும் என்னை வழி நடத்து

உன் திருப்பெயர் நான் பாடிடும் நேரம்/ உன் திரு இதயம் பேரானந்தம்/ உன் திரு வாழ்வெனக்கருளும்
இறைவா இறைவா உன் திரு நிழலில் நான் குடிகொள்ள‌
என்றும் என்னுடன் இருப்பாய்

வாசகம் : 11 உரோமையருக்கு எழுதிய திருமுகம். 6: 1-11

அப்படியானால் என்ன சொல்வோம்? அருள் பெருகுவதற்காக நாம் பாவத்தில் நிலைத்திருக்கலாமா?2 ஒருபோதும் கூடாது. பாவத்தைப் பொறுத்தமட்டில் செத்துவிட்ட நாம் எவ்வாறு தொடர்ந்து பாவ வாழ்க்கை வாழ முடியும்?3 திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா?4 இறந்த கிறிஸ்துவை மாட்சி மிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம்.5 அவர் இறந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம்.6 நாம் இனிமேல் பாவத்துக்கு அடிமைகளாய் இராதபடி, நம்முடைய பழைய மனித இயல்பு அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. 10 அவர் இறந்தார்: பாவத்தை ஒழிக்க ஒரே ஒருமுறை இறந்தார். இப்போது அவர் வாழ்கிறார்: அவர் கடவுளுக்காகவே வாழ்கிறார்.11 அவ்வாறே, நீங்களும் பாவ வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இறந்தவர்கள்: கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்கள் என்பதை எண்ணிக் கொள்ளுங்கள்.12 ஆகவே, உடலின் இச்சைகளுக்கு உங்களைக் கீழ்ப்படியச் செய்யும் பாவம் சாவுக்குரிய உங்கள் உடலின்மீது ஆட்சி செலுத்தவிடாதீர்கள்.13 நீங்களோ உங்கள் உறுப்புக்களைத் தீவினையின் கருவிகளாகப் பாவத்திற்கு ஒப்புவிக்காதீர்கள்: மாறாக, இறந்தும் வாழ்வோராய் உங்களைக் கடவுளிடம் ஒப்படையுங்கள்: கடவுளுக்கு ஏற்புடையதைச் செய்வதற்குரிய கருவிகளாய் உங்கள் உறுப்புகளை அவரிடமே ஒப்படையுங்கள்.14 பாவம் உங்கள் மீது ஆட்சி செலுத்தக் கூடாது: ஏனெனில் நீங்கள் இப்போது சட்டத்துக்கு உட்பட்டவர்கள் அல்ல: மாறாக, அருளின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள்.

பாடல்: ஏசுவின் பின்னால் நானும் செல்வேன்

 இயேசுவின் பின்னால் நானும் செல்வேன்  திரும்பிப் பார்க்க மாட்டேன்- 2

 சிலுவையே முன்னால் உலகமே பின்னால்  இயேசு சிந்திய குருதியினாலே  விடுதலை அடைந்தேனே

 

1. அச்சமும் இல்லை அதிர்ச்சியும் இல்லை   அடியேன் உள்ளத்திலே

  ஆண்டவர் இயேசு அடைக்கல மன்றோ  ஆதலில் குறையில்லை

  ஆண்டவர் முன்னால் அகிலமே பின்னால்  அன்பர் இயேசுவின் வார்த்தையினாலே

  விடுதலை அடைந்தேனே

2. தாயும் அவரே தந்தையும் அவரே   தரணியர் நமக்கெல்லாம்   சேயர்கள் நம்மை செவ்வழி நடத்தும்

  தெய்வம் அவரன்றோ

  ஆயனே முன்னால் அனைத்துமே பின்னால்  அழைக்கும் இயேசுவின் அன்பு மொழியிலே

  ஆறுதல் அடைந்தேனே

 

 

 

anonymous author

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக