நம்பிக்கை விட்டு செல்லுதல் Passing on Faith

 

நம்பிக்கை விட்டு செல்லுதல்

 

அருட்பணி. அருள்குமார் .

மண்டல ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு

மலரும் மனஉறவு இயக்கம்

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். ஊன் வீட்டில் இருக்கும்போதும் உன் வழிப்பயணத்தின்போதும்> நீ படுக்கும்போதும், எழும்போதும் அவற்றைப் பற்றிப்பேசு . 6:7

 கடவுளின்மீது நம்பிக்கை:

எல்லாத் தம்பதியரும் தங்கள் குழந்தைகளுக்கு கடவுள் நம்பிக்கையை எப்பொழுதெல்லாம்  நேரம் கிடைக்கின்றதே அப்போதெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும். கடவுள் நம்பிக்கையில் அவர்கள் தினந்தோறும் வளர இது உதவுகின்றது. அவர்களது எதிர்காலம் இதனால் சிறப்பாக அமைகின்றது. தம்பதியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆலயத்திலும் மற்றும் மற்ற இடங்களிலும் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் கடவுளின் நம்பிக்கையில் வளர்கின்றார்களா என்பது அவர்களுடைய செபவாழ்வு உதவகின்றது. தம்பதியர்கள் ஆண்மிக வழிகாட்டியாகவும் இருக்கவேண்டும். குடும்ப மறைக்கல்வி அதிகமான மாற்றத்தைக் கொடுக்கின்றது அதனால் குடும்பத்தில் திருத்தூது பணியை செய்ய முற்படவேண்டும். (. 278)

திருவிழா நேரங்கள்:

ஒவ்வொரு வருடமும் எங்கள் குடும்பத்தில் வழக்கமாக நடைபெறுகின்ற நிகழ்வு என்னவென்றால்: எங்கள் ஊர் புனித அந்தோணியார் திருவிழாவின் போது குடும்பமாக ஒன்று சேர்ந்து கொண்டாடுவது வழக்கம். திருவிழாவின் போது என் தாய் எங்களை கூப்பிட்டு புனித அந்தோணியாரின் சுருபத்தை பார்த்து தொட்டு முத்தம் கொடுக்க சொல்வார் நாங்களும் அதை செய்வோம் இது வழக்கம்போல் ஒவ்வொருவருடமும் நடைபெறுகின்ற நிகழ்வுதான். அந்த செயலில் எவ்வளவு  அன்பு இருக்கின்றது என்பதனை நான் இப்போது நினைத்துப்பார்க்கும் பொழுது எனது எளிய செப வாழ்வு என்னை மேன்மை படுத்துகிறது என்பதை நான் உணர்கின்றேன். இவ்வாறு நமது பெற்றோர்கள் கடவுள் நம்பிக்கையடையவர்களாக இருக்க வேண்டும். திருவிழாக்காலங்களில் நாங்கள் அனைவரும் கலந்துரையாடலில் ஈடுபட்டுடிருப்போம் அதனைத் தொடர்ந்து ஒன்றாக விருந்துணவு தயார்செய்து உண்பது வழக்கம் இந்நிகழ்வு நாங்கள் அன்பாக இனைந்து வாழ அதிகமாக உதவிசெய்கின்றது என்பதை நான் உணர்கின்றேன்.

குடும்பம் சக்கியை தருகின்றது:

குடும்ப சம்பரதாயங்கள் சடங்குகளும் ஒவ்வொருவருடமும் குடும்பத்தில் ஒற்றுமையையும் சக்தியையும் தருகின்றது. இந்த கலாச்சாரமும் குடும்ப பாரம்பரியமும் எப்பொழுதும் குடும்பத்தை கட்டிக்காக்கின்றது. இது உலத்தோடு தன்னிலை பெற்று பயணிக்க உதவிகின்றது. குடும்ப பாரம்பரியம் சட்டத்திட்டங்கள் விதிமுறைகள் குடும்பத்தில் கட்டுக் கோப்புடன் வாழ உதவுகின்ற கருவியாக இருக்கின்றது. இந்த குடும்ப பாரம்பரியம் தம்பதியர்களுக்கு வருகின்ற பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க உதவுகின்றது.

கற்ற நல்லவற்றை அடுத்த தலைமுறைக்கும் விட்டுச்செல்வது:

பொதுவாக எல்லா குடும்பங்களிலும் குடும்ப முரைகள் கலாச்சாரம் உணவு சேர்ந்து உட்கொள்ளுதல் போன்றவைகளை கற்றுக்கொடுத்தல் வளரும் தலைமுறைக்கு உதவியாக இருக்கும். குடும்பங்கள் ஒற்றுமையாக இருக்க விடுமுறை நாட்களில் குடும்ப விழாக்களிலும் சிறப்பாக பிறந்தநாள் நினைவு நாட்கள் திருமண நாள் இவைகள் குடும்பத்தில் ஒற்றுமையை பிரதிபலிக்கின்றன. இந்த குடும்ப கலாச்சாரம்  நெருக்கமடையவும் பாதுகாப்புக்கும் உதவிகிறது. குடுப்பத்தில் உதவுகின்ற மனப்பாண்மை எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றது. சிறப்பாக குழப்பங்கள் மற்றும் தனிமையில் இருக்கும்போதும் மற்ற குடும்பத்தில் உள்ள நபர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்றனர். குடும்ப பாரம்பரியம் எப்படி குடும்பத்தை  முன்னேற்றப்பாதையில் வளர்க்கவும் குழந்தைகளை நல்ல குழந்தைகளாக வளர்த்தெடுப்பதில் உறுதியாக இருக்கின்றார்கள்.

குடும்ப பாரம்பரியத்தை காத்தல்:

        குடும்பத்தில் வயதான பெற்றோரை  நன்முறையில் பாதுகாத்து வருதல் கடமை அதுமட்டுமல்ல அவர்களுடைய உடைமைகளுக்காக மட்டுமல்ல  மாறக  அவர்களில் அன்பு கூர்ந்து பாதுகாத்தல் கடமையாகும். சிலர் பொருளாதாரத்தை மையப்படுத்தி பெற்றோர்களையும் முதியவர்களையும் பாதுகாக்கக்கூடிய சூழல் இருந்துகொண்டுதான் இருக்கின்றது ஆனாலும் இளம் தம்பதியர்கள் நமது கலாச்சாரத்திற்கேற்ப பெரியவர்களை தம்மோடு வைத்து பாதுகாப்பதின் வழியாக அவர்களிடமிருந்து பாரம்பரியத்தையும் நல்ல கலாச்சாரத்தையும் கற்றுக்கொடுப்பவர்களாக இருக்கின்றார்கள். தம்பதியர்கள் சற்று சிந்தித்துப் பார்த்தால் நன்கு புரியும் குடும்பத்தில் ஒற்றுமை பலம் பாதுகாப்பு மற்றும் அடையாளப்படுத்துதல் இவை அனைத்தும் பாரம்பரியம் கற்றுத் தருவதாக பெரியவர்கள் இருக்கின்ற சூழலில் அவர்கள் இருக்கும் போது தம்பதியர்களுக்கு திருப்தியையும் மன நிறைவையும் குடும்பத்தில் நம்பகத்தன்மையையும் ஏற்படுத்துகின்றனர். குடும்த்தில் பழையவற்றை மாற்றி அல்லது அதை ஏற்றுக்கொண்டு புதிதாக ஏற்படுத்தப்பட்ட குடுப்பத்தில் மகிழ்ச்சியாக வாழ வழிவகை கலாச்சாரம் செய்கின்றது.

பாரம்பரியம் ஒரு அழகான அடையாளமாக நாம் ஏற்படுத்தி அனுபவங்களை வாழு முயற்சி செய்யும் போதுதான் அதை மற்றவர்களுக்கு நாம் கொடுக்கின்றோம். டிபனீ கேகன்.

சிந்திக்க வினாக்கள்: உங்களுடைய சிறப்பான குடும்ப பாரம்பரியம் ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கின்றீர்களா? விடுமுறை நாட்களில் சிறப்பாக குடும்பத்துடன் கொண்டாடிகின்றீகாளா? நீங்கள் சிறப்பான நிகழ்வுகளை நடத்துகின்றீர்களா?

குடும்ப பாரம்பரியம் முக்கிமாக இருக்க 5 காரணங்கள்:

1.       குடும்ப பாரம்பரிய நினைவுகள் நீங்காத ஒன்றாக இருக்கின்றது. நமது குழந்தைகள்பருவ நினைவுகள் குடும்பத்தில் பகிர்கின்றோம். நமது குடும்ப பி;ரச்சனைகளில் விடைக்கான நமது பாரம்பரிய படி விடைகான உதவுகின்றது.

2.       குடும்ப பாரம்பரியம் குடும்பத்தில் பொறுப்புக்களை முன்னோடுத்து நடக்கின்றது. உளவியளாலர்கள் கூறுவது மனிதன் சார்ந்திருப்பது ஒற்றுமைக்கு வழிவகை செய்கின்றது.

3.       நூம் சார்ந்திருப்பது உணவு நீர் வீடு இந்த நலனே கலாச்சாரத்தில் குடும்ப பாரம்பரியம். நம்  முகமுகாய் பார்த்து பரிமாறிக்கொள்வதில்தான் அமைகின்றது.

4.       கும்பம் பாரம்பரியம் மதிப்பீடுகளை வளர்க்க உதவுகின்றது. ஒவ்வொரு குடும்பத்திலும் தனித்தன்னை கொண்டதாக மாறா பற்றுருதியுடன் குடும்பங்கள் தனித்தன்மையுடன் செயல்படுகின்றது.

5.       குடும்ப பாரம்பரியம் குழந்தைகளுக்கு பாதுகாப்பைக் கொடுக்கின்றது. பல்கழைகழக குடும்ப பயிற்றுனர் எபி கிரிஸவோல்டு  எகல்டகர் கூறுகின்றார் இவ்வுலகில் நடைமுறை நிகழ்வுகள் பாரம்பரியமும் குடும்பத்திற்கு நல்லதை கொடுக்கின்றது. பாரம்பரியம் இளம் தலைமுறைக்கு பாதுகாப்பையும் கொடுக்கின்றது. இது  தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டேதான் இருக்கின்றது. குழந்தைகள் பொம்மைகளையும் மற்றும் பரிசுபொருட்களையும் நினைவில் வைத்திருப்பதில்லை மாறாக அவர்களுக்கு கிடைந்த சிறந்த குடும்ப அனுபவங்களை அவர்கள் நினைவு கூறுகின்றார்கள்.

நான் நம்புகின்றேன் உங்கள் குடும்பத்தில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். உங்கள் குடும்பம் தனித்தன்னை வாய்ந்த பாரம்பரியத்தை நீங்கள் கடைபிடித்துக் கொண்டுதான் இருக்கின்றீர்கள் அதை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள் அதற்கான நேரத்தை செலவிடுங்கள் குறிப்பாக கிருஸ்தவ மறையை போதியுங்கள் அப்பொழுதுதான் அவர்கள் இறைநம்பிக்கையிலே எப்பொழும் வளர்வார்கள் அதுமட்டுமல்ல அவர்கள் சந்திக்க இருக்கும் சவால்கள் அனைத்தும் இறைவனுடைய துணையால்  எல்லாம் அவர்கள் தைரியத்துடன் சந்திப்பார்கள் வெற்றி பெறுவர்கள்.

பாரம்பரியத்தை இறைநம்பிக்கை நம்முடைய குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து விட்டுச்செல்வோம்

சுதந்திரக்கொடி பரக்குது பாரீர்? எங்கேஎன் நாடு வளர்கின்றது?

 சுதந்திரக்கொடி பரக்குது பாரீர்? எங்கேஎன் நாடு வளர்கின்றது?

75 வது ஆண்டிலும் சுதந்திரக்கொடி பரந்துகொண்டுதான் இருக்கின்றது.

சுதந்திரத்தை சுவைக்க நினைக்கும்பொழுது மனதிலே சஞ்சலம், ஏன்? நாம் சுதந்திரம் பெற்றோம்! மகிழிந்திருக்க, மனம் விட்டு பேச, மனம் விட்டு எழுத…. ஊரிமைக்குறலைக்கொடுக்க ஆனால் அனைத்தும் அரசு அடிப்பணிய வைத்து ஆட்டிப்படைக்கின்றது. சுதந்திரமாக இருப்பவர்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் பதவி வைப்பவர்கள் மட்டும் தான் எனொன்றால் அது மிகையாகது எனினும் பாமரமக்களின் வருத்தமும் கொரிக்கைகளும் விண்ணப்பங்களும் எடுபடா சுழலில் எங்குதான் சுதந்திரம். சுதந்நதிரம் தினம் என்று 75 ஆண்டுகளில் இருந்தாலும் சுதந்திரமாக இருக்க நாம் நினைப்பது போதிய அடிப்படை உரிமைகளும் சலுகைகளும் அரசால் அதுகொடுக்கப்பட வேண்டும் அப்படிகொடுக்க முன்வராத அரசு எச்சூழலிலும் உரிமையை பரிக்கின்றதே தவிர அது முதலாளிகளின் கையில் தரைப்போய்விட்டது என்பதே கூற்று எடுபடா விவசாயிகளின் குரல், மாணவர்களின் குரல், பாமர மக்களின் குரல், என்று பல்வேறு தரப்பட்ட மக்கள் போராடினாலும் அரசு அதை அடக்கி ஆழுகிறதே தவிர மற்ற உரிமைகளை கொடுப்பதில்லை. காரணம் அனைத்திற்கும் விலை வைத்து அடித்தட்டுமக்களை வைத்தில் அடிக்கிறது. இதை மறைக்க சலுகைகளை இலவசம் என்ற பெயரிலும், விலையில்லா பொருட்கள் (விலைபோகும் பாமரர்களும் படித்தவர்களும்) என்று கொடுக்கும்போது வாங்கிதானே ஆகனும். ஆசை எவரை விட்டு வைத்தது. நோட்டுக்கு ஓட்டுப்போட்டு, ஒருத்தன உசத்துன அவன் வருகின்ற சலுகைகளை அவன் பக்கம் வைத்துக்கொண்டு கேட்பாரின்றி அவன் மனம் வைத்து செய்தால்தான் உண்டு இல்லையேல் மீண்டும் அப்பணத்தை இவ்வாறு பிடுங்குகின்றான் அவன் சேவை என்ற பெயரில் அவன் கடமையை செய்வதற்கு. நீ கொடுத்தால்தான் நான் கொடுப்போன் அல்லது கையொப்பம் இடுவேன். எனக்கு ஞாபகம் இருக்கின்றது: நான் 11 ம் வகுப்பு படிக்கும்போது கல்வி உதவித்தொகைப் பெறுவதற்காக கிரம நிர்வாக அலுவலகரை உதவித்தொகை விண்ணப்பத்துடன் உள்ளே சென்றேன் அவர் என் விவரங்களை கேட்டுவிட்டு யார் இவனை உள்ள விட்டது கிளர்க் என்று சத்தம் இந்த பையன் கவுனுச்சான? இல்ல சார். தம்பி நீ கொஞ்சம் வெளியே வெயிட் பன்றையா? சரிங்க சார். அந்த கிளர்க் 300 ரூபாய் கேட்டார் நான் இல்லை என்று கூறினோன். சிறிது நேரம் கழிந்து அவர் விண்ணப்பத்தைக் கொடுத்தார். அலுவலகர் கையொப்பம் இட்டார் அதில் எழுதப்பட்ட தொகைக்கு அதிகமாக இருந்ததினால் எனக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை. எங்கே அந்த அலுவலகருடைய மனசாட்சியும் சேவையும் என்னைக் கேள்விக்குரியாக்கிவிட்டது. எனக்கு கோபம் வந்தது. பணமில்லாமல் ஒரு கையொப்பம் கூட வாங்கமுடியாது என்பதை நான் அறிந்து கொண்டேன். நாம் சுதந்திர இந்தியாவில் தான் இருக்கின்றோம் ஆனால் பதவியில் இருப்பவர்கள் சுதந்திரமாக சட்டத்தையும் பணியினுடைய கடமைகளையும் மறந்து விட்டு செயல்படுகின்றார்களே!. இப்போது கொடு நான் கொடுக்கின்றேன்: வேலை, கையொப்பம், சலுகைகள், படிப்பு…எண்ணிலடங்கா வசூல். அரசியல் பணி ஏற்பின் போது உறுதி கூருகின்றார்கள் ஆனால் அவர்களுடைய உறுதிமொழியானது என்ன ஆயிற்று அதற்கு பிறகு. மக்களுக்கு நான் பணியாற்றுவேன் என்று முலக்கமிட்டவர் அதனை மறந்து செயல்படுகின்றறே!
நம் நாட்டின் வளர்ச்சி எப்படியிருக்கின்றது: அரசுடைமையாக்கப்பட்ட பலவற்றை தனியார் மையமாக்குதல் தான வளர்ச்சி? தனியாரிடம் கொடுத்துவிட்டு அரசு அதற்கு உண்டன தொகையை பெற்றுக்கொண்டு அமைதியாகிவிடுகின்றது. தனியார் அதற்கு விலை வைத்து மக்களிடம் வரியும் அதந்த பொருளுக்கான அல்லது சேவைக்காக அதிக பணம் வசூலிப்பது நாம் அறிந்ததே!. 
எரிப்பொருளின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டேதான் செல்கின்றது தவிர குறைந்த பாடியில்லை. அனைத்துப்பொருட்களும் விலை ஏறிக்கொண்டேதான் செல்கின்றது தவிர குறைவதற்கு எந்த சாத்தியக்கூறுகள் இல்லை. விதிவிலக்கு விவசாயப்பொருட்கள் மட்டும் தான். 
சுதந்திரமா? சுகாதரமற்ற நிலை : எங்கே தூய்மை இந்தியா? கழிவறையில்லா அரசு பள்ளிகள் அப்படி இருந்தாலும் சுகாதரமற்றதாக இறுக்கின்ற நிலை, தூய்மையான குடிநீர் இல்லாத நிலை, பேருந்து நிலையத்தின் கழிவறைகள் காசு கொடுத்தாலும் சுகாதரமற்ற கழிவறைகள், மருத்துவமணைகள் சுகாதர நிலை, டாஸ்மார்க் சுகாதரநிலை எப்படி இருக்கின்றது அதனோடு இருக்கின்ற பார்கள் அசுத்தமற்றதாக காட்சி அழிக்கின்றதல்லவா? ஏன் கிராமங்கள் இன்னும் திறந்தவழிகழிவறைகள் தானே பயன்படுத்துகின்றார்கள், மாவட்டங்கள் எங்கே தூய்மையான இருக்கின்றன? சுமார்ட் சிட்டியாவது சுகாதரமான கழிவறைகளும் இடங்களும் இருக்குமா? வளர்ந்து வருகின்ற இந்தியா? மாடன் இந்தியா? டிசிட்டல் இந்தியா? எல்லாம் பொய் கனவே! ஆன்லைனில் கல்வி பயில்கின்ற மாணவர்கள் வகுப்புகள் பங்கு பெருவதற்கு இன்டர்நெட் இல்லை அவர்களுக்கு கைபேசியும் இல்லை, மின்சாரமும் இல்லை. நாம் எதிலே வளர்ச்சி அடைந்துள்ளோம் எல்லாம் வாய் வார்த்தைகளாகவே இருக்கின்றது. எல்லாத்திட்டங்களும் அரசு சொகுசான குளிர்சாதன அறையிலே அனைத்து வசதிகளுடன் அமர்ந்து திட்டமிடுவதால் கிராமத்தின் நிலை அவர்கள் அறிவதில்லை. எங்கே கல்லூரி மாணவர்கள் தங்கள் ஆன்லைன் தேர்வை எழுதினார்கள் கடினப்பட்டு எழுதிய தேர்வு தாள்களை அனுப்ப சரியான வசதியில்லாத சூழல்தான் காணப்படுகின்றது. 
முன்னேருவோம் வளர்ச்சியை நோக்கி: கருப்பு பணத்தை ஒழித்துவிடுவேன் என்றவர் வெள்ளைப்பணத்தில் சந்தோசமாக இருக்கிறார். எங்கே அந்த கருப்பு பணம்? அவர் பேசிய கருப்புபணம் எங்கே? எல்லாம் வெறும் வாய் வார்த்தைகள்தான். தேர்தலில் வெற்றிபெறுதே நோக்கமே தவிர செயல்பாட்டிக்கும் நடைமுறைக்கும் இல்லை. சுதந்திர இந்தியாவில் கருப்பு பணம் என்ன ஆயிற்று?

பிரதமர் கேர் என்று வசூலான பணம் எங்கே போனது சுதந்திர இந்தியாவில் கேள்விகள் கேட்பது தவறு ஏனொன்றால் அதற்கு சுதந்திரம் இல்லை. அவருக்கு பணம் வசூல் செய்ய சுதந்திரம் இருக்கின்றது. 


அன்பின் மகிழ்ச்சி - திருத்தூது ஊக்கவுரை 36

 பிள்ளைகள் ஒரு குடும்பத்தின் உடைமை அல்ல என்பது நற்செய்தி நமக்கத் தொடாந்து நினைவு படுத்தியுள்ளது. இயேசு தம்  மண்ணகப் பெற்றோரின் பொறுப்பில் தம்மையே வைத்து அவர்களுக்கு கீழ்ப்படிவதில் மாதிரியாக விளங்குகிறார். லூக்; 2;51

அவர்கள் தங்கள் சொந்த வாழ்வை நடத்த உரிமையுடையவர்கள்.

பிள்ளைகள் வாழ்க்கைசார் முடிவுகளும் அவர்களின் கிறிஸ்தவ அழைப்பும் இறையாட்சிக்காக அவாகள் பெற்றோரை விட்டுப் பிரிந்திடுமாறு கோரலாம்

குடுப்பத்திற்குள்ளேயே பிற ஆழமான பினணப்புகளும் அவசியம்.  மத் 18;3-4


நமது பிள்ளைகளுக்கு சொந்த வாழ்வில் முடிவுகளை எடுக்க நாம் அவர்களை உற்சாகப்படுத்தி அந்த சுதந்திரத்தை கொடுக்கின்மறோமா?


மணமக்களின் மன்றாட்டு Family prayer / couples' prayer

 


மணமக்களின் மன்றாட்டு

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையே உள்ள ஒன்றிப்பைப்போன்று, உலகில் மக்களின் வளர்ச்சிக்காகவும், அன்பு வழி வாழ்வுக்காகவும்  திருமணத்தைப் புனிதப்படுத்தியுள்ள இறைவா, நாங்கள் இருவரும் திருமணத்தின் அருளாசீரை வணக்கமுடன் ஏற்றுள்ளோமாகையால் எங்கள் கடமைகளைக் குறைவின்றி நிறைவேற்ற அருள்வீராக. ஒரே உடலகா இணைக்கப்பட்டுள்ள நாங்கள் பிரமாணிக்கத்ததுடன் வாழ்ந்திடச் செய்வீராக.  எஙகள் அன்பின் பிணைப்பை உடைக்கக்கூடிய அனைத்து குறைபாடுகளிலிருந்தும் எங்களைப் பாதுகாத்தருளும். எங்களிடம் காணப்படக்கூடிய சிறு குறைகளை ஒருவருக்கொருவர் மன்னித்து மறந்துவிட்டு, நீங்கா அன்பில் நாங்கள் இருவரும் நிலைத்திருக்கச் செய்வீராக. பொறுமையும் தாழ்ச்சியும், மற்றவர்களிடம் இரக்கமும், தியாக உள்ளமும் எங்கள் வாழ்வின் அணிகலனாக விளங்கச் செய்தருளும்.  இன்பத்தை ஏற்பதுபோன்று, துன்பம் வரும்போது அதனை உமது திருவுளத்திற்குப் பணிந்து ஏற்று கிறிஸ்துவில் அதனை மாண்புள்ளதாக்கிட மன உறுதியை எங்களுக்குத் தந்தருளும். இதனால் பாவப் பிடியில் சிக்குண்டிருக்கும் குடும்பங்களைக் காத்து, அருள் வாழ்வை வழங்கிட நாங்கள் ஒத்துழைப்பதாக உறுதியளிக்கிறோம். தூய்மையும், இறையன்பும், எங்களின் திருமண அன்பும் ஒவ்வொரு நாளும் வளர்ந்திடச் செய்விராக, திருக்குடுமபத்தை நாங்கள் பின்பற்றி உம்முடைய திருவுளத்தைச் செயலாற்ற உதவியாருளும்.   - அமென்.    

                           திருக்குடும்பத்தை நோக்கி மன்றாட்டு

இயேசு, மரியா, யோசேப்பே, உண்மை அன்பின் பேரொளியை நாங்கள் உங்களில் தியானிக்கிறோம்: நம்பிக்கையுடன் உங்களை நோக்குகிறோம். நாசரேத்தூர்த் திருக்குடும்பமே, எங்கள் குடும்பங்களும் அன்புறவு, இறைவேண்டல் ஆகியவற்றின் இல்லங்களாகவும் நற்செய்தியின் உண்மையான பள்ளிகளாகவும் குட்டித் திருஅவைகளாகவும் திகழ்ந்திட அருள் தாரும். நாசரேத்தூர்த் திருக்குடும்பமே, வன்முறை, புறக்கணிப்பு, பிளவுகள் ஆகியவற்றைக் குடும்பங்கள் ஒருபோதும் சந்திக்காது இருக்கட்டும்: காயப்பட்டோர், பாதிக்கப்பட்டோர் ஆகிய அனைவரும் உடனடியாக ஆறுதலும் நலமும் பெறுவார்களாக. நாசரேத்தூர்த் திருக்குடும்பமே, குடும்பத்தின் புனிதத்தையும் மாண்பையும் இறைத் திட்டத்தில் அதன் அழகையும் நாங்கள் மீண்டும் நினைவில் கொள்ளச் செய்யும், இயேசு, மரியா, யோசேப்பே, எங்கள் மன்றாட்டைக் கனிவுடன் கேட்டருளும். - ஆமென்.

குடும்பத்தின் பாதுகாப்புகாகச்   செபம்

அதிதூதரான புனித மிக்கேலே, எங்கள் போரட்டத்தில் எங்களைக் காத்தருளும். பசாசின் கெட்ட கருத்தையும் சோதனைகளையும் அகற்றி எங்களுக்குத் துணையாயிரும் தாழ்மையான எங்கள் மன்றாட்டைக் கேட்டு இறைவன் பசாசுக்குக் கட்டளையிடுவாராக. விண்ணக சேனைக்குத் தலைவரான நீரும், ஆத்துமங்களை அழிக்கிறதற்கு இவ்வுலகில் சுற்றித் திரியும் பசாசுக்களையும் மற்ற கெட்ட சக்திகளையும் இறைவல்லமையின் பலத்தால் நரகத்தில் தள்ளுவீராக, எங்கள் குடும்பங்களை உமது பாதுகாப்பில் வைத்து எல்லாத் தீமைகளிலிருந்தும், ஆபத்துக்களிலிருந்தும் விடுவித்து காத்தருள்வீராக. - ஆமென்.

மலரும் மண உறவு தம்பதியர்களுக்குச் செபம்

Rounded Rectangle:       தம்பதியர்கள் மகிழ்வுடன் இருக்க மூன்று மந்திர வார்த்தைகள்:
தயவு செய்து, நன்றி, வருந்துகிறேன்

திருகுடும்பமாக எங்களை ஆசீர்வதித்து வழிநடத்தும் அன்பு இறைவா, நாங்கள் குடும்பமாக அன்பை சுவைக்க எங்களுக்கு உமது கொடைகளைக் கொடுத்துள்ளீர். அதே அன்பை நாங்கள் மற்ற தம்பதியர்களோடு பகிரவும் மலரும் மண உறவு வழியாக நாங்கள் பெற்றுக்கொண்ட அனுபவத்தைப் பகிரவும் எங்களுக்கு உமது ஆசீரைக் கொடுத்தருளும். தம்பதியராகிய எங்கள் மீது இரங்கி இல்லரத்தின் புண்ணியங்களிலும் அன்பின் உறவுகளிலும்                          நாங்கள் மகிழ்ந்திருக்கச் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்.

புதிய ஆலயம் கட்ட செபம் Prayers for Building the new Church

                               ஆலயம் கட்ட செபம்


எங்கள் அன்புத் தந்தையே இறைவா உம்மை வாழ்த்திப் போற்றி ஆராதித்து உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்களை எல்லாம் உமது மக்களாக வாழ அழைத்திருப்பதற்காக உமக்கு நன்றியும் புகழ்ச்சியும் ஆராதனையும் செலுத்த உமக்கு ஏற்ற இல்லம் அமைக்க நாஙகள் எடுக்கும் முயற்சிகளை ஆசிர்வதியும். நாங்கள் செய்யும் இந்த முயற்சிகளால் நாங்கள் இன்னும் ஒருவரையொருவர் நெருங்கி வரவும் அனைத்து வேறுபாடுகளையும் கடந்து ஒரே குடும்பமாக உருவாகவும் அருள்தாரும். எங்களுக்குத் தேவையான பொருள் உதவியையும் எல்லோரோடும் சேர்ந்து செயல்படும் நல்ல மனதையும் தாரும். உமக்கு ஆலயம் அமைக்கும் பணிக்கு என்னவெல்லாம் தேவையென்று நீர் நன்கு அறிவீர் அதை அனைத்தையும் செய்து உமக்கோர் ஆலயம் அமைக்கவும் இந்த முயற்சியினால் நாங்கள் ஒரே குடும்பமாக இணைந்து உம் திருமகன் போதித்த அன்புக்கு உயிருள்ள சாட்சிகளாய் விளங்க அருள்புரியும் - ஆமென்.