அமல அனைக்கு நம் குடும்பங்களை ஒப்புக்கொடுக்கிற ஜெபம்

 

அமல அனைக்கு நம் குடும்பங்களை ஒப்புக்கொடுக்கிற ஜெபம்

அமல அன்னையே,/ எம் இறைவனின் தாயே,/  உம்மை எங்கள் இல்லங்களின் தலைவியாகவும்,/ அரசியாகவும் போற்றுகிறோம்./ எங்கள் குடும்பங்களுக்கு/ நீர் காட்டும் அன்பிற்கும்,/ அரவனைப்பிற்கும்/, செய்துவரும் சகல நன்மைகளுக்கும்/ உமது பாதம் பணிந்து நன்றி செலுத்துகிறோம்/.  எங்கள் குடும்பங்களில் உள்ள/ சகலரையும் உம் பாதத்தில் சமர்ப்பிக்கிறோம்./ எம்மை ஆசீர்வதியும்./  பெற்றோர்களாகிய நாங்கள்/ திருக்குடும்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு/ நாங்கள்/ ஒருவரை ஒருவர் நேசிக்கவும்,/ துன்பத்திலும்/ சோதனை நேரங்களிலும்/ ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாகவும்,/ தாங்கிப்பிடிக்கும் துணையாகவும்/ இருக்க எங்களை ஆசீர்வதியும்./ எங்கள் அன்பாலும்,/ தியாகத்தாலும்/ நல்ல நடத்தையாலும்/ எங்கள் பிள்ளைகளுக்கு/ முன்மாதிரியாக இருக்க/ எங்களை வழிநடதும்./  இறைவனிடமிருந்து/ நீர் எங்களுக்கு பெற்றுத்தந்த/ பொக்கிஷமான/ எங்கள் குழந்தைகளுக்காக/ நாங்கள் உம் வழியாக/ இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம்./  எங்கள் குழந்தைகளை நிறைவாய் ஆசீர்வதியும்./  அவர்கள் அறிவிலும்,/ ஞானத்திலும்,/ நற்பன்புகளிலும், இறைபக்த்தியிலும்/ வளரவும்,/ கல்வியிலும்/ ஆற்றல்களிலும் சிறந்துவிளங்கவும்/ உம்மை நோக்கி ஜெபிக்கிறோம்./ 

விண்ணக அரசியே,/ அருமையான என் அம்மாவையும்/ அப்பவையும்/ எனக்கு பெற்றோராய் கொடுத்தமைக்காய்/ உமக்கு நன்றி அம்மா./  அவர்கள்/ எங்களுக்கு காட்டிவரும்/ அன்பிற்கும், அளவுகடந்த பாசத்திற்கும்/ எங்களுக்காய் ஏற்றுக்கொண்ட துன்பங்கள்,/ செய்த தியாகங்கள்/ அணைத்தையும்/ நாங்கள் என்றும் மறவோம்./ அம்மா என் பெற்றோர்களுக்கு/ நீண்ட ஆயுளையும்,/ நல்லசுகத்தையும்/ உமது ஆசீரவாதமாய்/ அவர்களுக்கு அளித்தருலும்./ எனது அன்பாலும்/  சொல்லாலும்,/ செயலாலும்,/ நடத்தையாலும்/ அவர்களை என்றும் பெருமைப்படுத்துவேன்./  ஆவர்களின் முதிய வயதிலும்,/ சுகவீனத்திலும்/ நான் அவர்களுக்கு ஆறுதலாகவும்,/ துணையாகவும்,/ உதவியாகவும் இருக்க/ என்னைப் பக்குவப் படுத்தியருளும்./ 

 அனைத்து குடும்பங்களையும்/ உம் பாதத்தில் அற்பனிக்கிறோம்./  சிறப்பாக உம் திருமகன்/ பெரிதும் அன்புசெய்யும்/ இந்த பங்கில் உள்ள/ எல்லா சிறு பிள்ளைகளையும்/ உம் கரங்களில் ஒப்புவிக்கிறோம்./  அவர்களை ஆசீர்வதியும்./  அவர்களுடைய இருதயத்தில் விசுவாசத்தையும்,/ தெய்வபயத்தையும் வளரச்செய்தருளும்/. ஜீவியகாலதில் அவர்களுக்கு/ உற்ற துணையாய் வழிநடத்தும்./

அனைத்து குடும்பங்களும்,/ எங்கள் வாழ்வாலும்/, பிறர் அன்பு பணியாலும்/ உமது மான்புக்கும்,/ உம் திருக்குமாரனும்,/ எம் இறைவனுமான/ இயேசுக்கிறிஸ்துவின் தெய்வீகத்துகும்/ சாட்சிகளாய் வாழ்வோம்/ என்று உறுதியளிகின்றோம்./ எங்களை ஆசீர்வதியும்,/ வழிநடத்தும் அம்மா.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Fifty steps to a happy marriage life

 50 steps to a happy marriage life  Start each day with a kiss. *    Wear your wedding ring at all times. *    Date once a week. *    ...