திருமணத்திற்கு முன் தயாரிப்பு வகுப்பு வேலை செய்யும் இளையோருக்கு

 திருமணத்திற்கு முன் தயாரிப்பு வகுப்பு

Call Center ல் வேலை செய்யும் இளையோருக்கு


1. இந்த இளையோர் அனுபவிக்கும் நன்மைகள்


கை நிறைய பணம்

சுதந்திரமாக வாழும் நிலை (யாரையும் சார்ந்திராத நிலை)

நாகரிகமான வாழ்வு (ஆடை, உணவு)

சமுதாயத்தில் மதிப்பு

அதிக நண்பர்கள் 


2. சந்திக்கும் இடர்கள்


1. மன அழுத்தம்

தூக்கமின்மையின் காரணமாக

வாடிக்கையாளர்களின் தேவையற்ற மற்றும் அநாகரிகமான பேச்சுக்களினால் 


2. வேறுபட்ட வேலை நேரம்

எல்லோரும் சந்தோஷமாக வாழும் நேரங்களில் - உறக்கம்.

மற்றவர்கள் உறங்கும் நேரத்தில் - உழைப்பு

எந்திரமயமான வாழ்க்கை.

உறவினர்களோடு சகஜமாக பழகமுடியாத நிலை.


3. பாதுகாப்பற்ற சூழல்

இளைஞர்களுக்கு அவ்வளவாக இல்லை. ஆனால் 

இளம்பெண்களுக்கு பாதுகாப்பற்ற சுழல்


4. உடல்நிலை பாதிப்புக்கள்

முதுகு வலி, கண் பார்வை மங்குதல், உறக்கமற்ற நிலை, பசியின்மை, ஜீரணமாக நிலை, உடல் எடை குறைவு 

பெண்களுக்கு – மாதவிடை விலக்கு தள்ளி போதல்


5. சமுதாயத்தில் தவறானபுரிதல் 

போதைக்கு அடிமை

நடத்தையின் மீது தவறான புரிதல் 


3. திருமணத்திற்கு பிறகு நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகள்ஃசவால்கள்

சந்தேகம் - பல நண்பர்கள், தேவையற்ற சந்தேகம்



திருமணத்தை அடுத்த 

உடலுறவு - மனைவிஃகணவன் சந்தேகம் - சந்தோஷமின்மை

அதைத் தேடி வெளியே செல்லும் சூழல்



கருத்தடை, கருச்சிதைவு



குழந்தை வளர்ப்பதில் பிரச்சினை

4. இந்தப் பின்னனியில் திருமணம் என்றால் என்ன? 

அது பற்றிய உங்கள் புரிதல் என்ன?


திருமணம் என்றால் என்ன? என்னும் கேள்விக்கு ஒரு மாணவன் அளித்த பதில்


ஒரு பெண்ணும் ஒரு மாப்பிள்ளையும் பங்குத்தந்தையின் முன் முழந்தாளிட்டு தாங்கள் இருவரும் கல்யாணம் செய்து கொள்வதாக விருப்பம் தெரிவிக்கின்றனர். பங்குத்தந்தை அவர்கள் இருவருடைய கைகளையும் இணைத்து, பிதாவே, இவர்களை மன்னியும்; ஏனெனில் இவர்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கின்றனர். என்று சொல்லி அவர்கள் கைகளில் தீர்த்தம் தெளிக்கிறார். 


இது ஒரு வேடிக்கையான பதில். ஆனால் உண்மையான பதில். 


திருமண வாழ்வில் நுழையும் பலர் அவ்வாழ்வு என்னவென்று அறியாமலே அதில் நுழைகின்றனர். அதன் விளைவு திருமணம் டுழஎந ல் ஆரம்பித்து ளுவழஎந ல் முடிகின்றது.


5. திருமணம் ஓர் உடன்படிக்கை


திருமணம் என்றால் அது ஒரு உடன்படிக்கை. வழக்கறிஞர் சொல்வது போன்று திருமணம் ஒரு ஒப்பந்தம் கிடையாது. ஒப்பந்தம் பொருட்களைச் சார்ந்தது. ஆனால், உடன்படிக்கை ஆட்களைச் சார்ந்தது. 


5.1 பழைய ஏற்பாடு 


விவிலியம் காட்டும் இறைவன் உடன்படிக்கையின் இறைவன்; இறைவன் இஸ்ரயேல் மக்களோடு உடன்படிக்கை செய்துகொண்டார். இந்த உடன்படிக்கையை கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயுள்ள உறவிற்கு ஒப்பிட்டுள்ளார் இறைவாக்கினர் ஓசே (2:19-20)


“முடிவில்லாக் காலத்திற்கும் உன்னை மணமுடிப்போம், நேர்மையிலும் நீதியிலும் நிலையான அன்பிலும் இரக்கத்திலும் உன்னை மணந்து கொள்வோம். பிரமாணிக்கத்துடன் நாம் உன்னை மணந்து கொள்வோம். நாமே ஆண்டவர் என்பதை நீயும் அறிந்துகொள்வாய்.”


உடன்படிக்கையின் அடிப்படைக் கூறுகளான அன்பும், பிரமாணிக்கமும் திருமணத்தில் இருப்பதால், திருமணம் ஓர் உடன்படிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.


5.2 புதிய ஏற்பாடு


புனித சின்னப்பர் எபேசியருக்கு (5:25-32) எழுதிய திருமுகத்தில், கிறிஸ்துவை மணமகனாகவும், திருச்சபையை மணமகளாகவும் வர்ணித்து, கிறிஸ்தவ மணமக்களிடையே உள்ள உறவு கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்குமிடையேயுள்ள புதிய, நித்திய உடன்படிக்கை அன்பின் மாதிரியில் ஊன்றி, அந்த உடன்படிக்கை அன்பைப் பிரதிபலிக்க வேண்டுமென்கிறார்.



5.3. இரண்டாம் வத்திக்கான் சங்கம்


“பல முகப்புக் கூறுள்ள இந்த அன்பு (திருமண அன்பு) இறை அன்பின் ஊற்றிலிருந்து பிறக்கிறது; நம் ஆண்டவர் கிறிஸ்து திருச்சபையுடன் கொண்டுள்ள ஒன்றிப்பின் மாதிரியில் அமைக்கப்பட்டிருக்கிறது; எனவே, இந்த அன்பின் மேல் கிறிஸ்து அறவற்ற முறையில் ஆசீர் பொழிந்துள்ளார். பிரமாணிக்கத்தையும் அன்பையும் அடிப்படையாகக் கொண்ட உடன்படிக்கையோடு கடவுள் முற்காலத்தில் தம் மக்களைச் சந்தித்தார். அதுபோலவே, இப்போது மனிதரின் மீட்பர், திருச்சபையின் மணமகன், திருமணம் என்கிற அருள் அடையாளத்தின் வழியாக கிறிஸ்தவ மண மக்களைச் சந்திக்க வருகிறார்” (இ.உ.தி. 48)


திருமண அன்பு பழைய ஏற்பாட்டில் இறைவனுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையேயுள்ள உடன்படிக்கையையும், புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவுக்கும் இடையேயுள்ள உடன்படிக்கையையும் வெளிப்படுத்துகின்றது என்று அறுதியிட்டுக் கூறுகின்றது இரண்டாம் வத்திக்கான் சங்கம்.


5.4 திருச்சபைச் சட்டம்


“திருமண உடன்படிக்கையின் மூலம் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தங்களிடையே வாழ்நாள் முழுவதற்குமான ஓர் உறவுச் சமூகத்தை ஏற்படுத்தியுள்ளார் (தி.ச. 1055, பிரிவு 1)


திருமணம் வெறும் ஒப்பந்தம் மட்டுமில்லை. பரந்;து விரிந்த பரிணாமத்தை உள்ளடக்கிய உடன்படிக்கை என்று ஏன் சொல்கிறோமென்றால் மணமக்கள் கடமை – உரிமை என்ற குறுகிய வட்டத்துக்குள் தங்களை அடைத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காகத் தான்.


6. திருமணம் ஒரு அருளடையாளம்


திருமணம் ஒரு அருளடையாளம், புனிதத்தின்  வாய்க்கால். இவ்வருள் அடையாளத்தின் மூலம் மணமக்கள் கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையேயுள்ள உடன்படிக்கை அன்பிற்குச் சான்று பகர்கின்றனர். ஒருவர் ஒருவரை அன்பு செய்யவும், ஒருவர் ஒருவருக்கு பிரமாணிக்கமாய் இருக்கவும், குழந்தைகளைப் பெற்று வளர்க்கவும் தேவையான அருளைத் திருமணத்தின் மூலம் பெறுகின்றனர். 


திருமணமென்னும் அருளடையாளத்தால் மணமக்கள் ஒருவகையில் திருநிலைப் படுத்தப்படுகின்றனர் என்று 2ம் வத்திக்கான் சங்கம் அறிக்கையிட்டுள்ளது; (இ.உ.தி. 48)


அருட்பணியாளர் - திருநிலைப்பட்டத்தால் திருநிலைப்பாடு

துறவறத்தார் - துறவற வார்த்தைப்பாட்டால் திருநிலைப்பாடு

மணமக்கள் - திருமணம் என்ற அருளடையாளத்தால் திருநிலைப்பாடு


மேலும், “உண்மையான திருமண அன்பு இறை அன்பால் ஆட்கொள்ளப்பட்டுள்ளது”” என்றும் சங்கம் கூறுகின்றது. இவ்வுண்மையை திருமணச் சடங்கு வெளிப்படுத்துகின்றது.


6.1 திருமணத்தின் திருப்பணியாளர்கள்


ஏனைய அருளடையாளங்களை அருட்பணியாளர் நிறைவேற்றுவதுபோல், திருமணமென்னும் அருளடையாளத்தை நிறைவேற்றுவதில்லை. மணமக்களின் சம்மதமே திருமணத்தில் அருளடையாளம். திருமண சமமதத்தை தெரிவிப்பது அருட்பணியாளர் அல்ல; மணமக்கள் தான். ஆகவே, திருமணம் என்னும் அருளடையாளத்தின் திருப்பணியாளர் – மணமக்களே.


அப்படியெனில், திருமணத்தில் அருட்பணியாளரின் பணி என்ன?


அருட்பணியாளர் மணமக்களின் சம்மதத்தை கேட்டு அதை ஏற்கின்ற 

அதிகாரம் பெற்ற சாட்சி.

மணமக்களை திருச்சபையின் பெயரால் ஆசீர்வதிப்பவர்.


7. திருமணத்தின் நோக்கம்


திருமண ஓலை எழுதவரும் மணக்களிடம், “நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள்?” என்ற கேள்வி கேட்பது வழக்கம். இக்கேள்விக்கு பலவிதமான பதில்கள் கிடைக்கும். அவற்றில் நால்வரின் பதில்கள் பின்வருமாறு:


என்ன சாமி, இப்படிக் கேட்டுப்புட்டீங்க? எனக்குன்னு ஒருத்தி வேணாமா?

எனக்கு உடம்புக்கு முடியலைன்னா, கை காலைப் பிடிச்சு அமுக்கிவிடுவதற்கு ஒருத்தி வேணாமா?

என்ன பாதர், மனுஷனுக்கு ஆசாபாசம் என்ற ஒன்று இருக்குதில்லே, அதை எப்படி தீத்துக்கிறது?

பரலோக அரசுக்கு ஆட்களை சேர்க்க நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் - அதாவது, மக்கட்பேற்றிற்காக. 


மேற்கூறிய புரிதல்கள் திருமணம் பற்றிய சரியான புரிதல்கள் அல்ல; அவைகள் திருமணத்தின் நோக்கங்களும் அல்ல. திருமணத்தின் நோக்கம் என்ன என்பதைப் புதிய திருச்சபைச் சட்டம் பின்வருமாறு வரையறுத்துள்ளது.


“திருமண உடன்படிக்கை தன் இயற்கை பண்பிலே, மணமக்களின் நலனுக்காகவும், மகப்பேறு, குழந்தை வளர்ப்பிற்காகவும் அமைந்துள்ளது” (தி.ச. 1055, பிரிவு 1)


பழையச் சட்டம் 1. மகப்பேறு

2. மணமக்களிடையே உள்ள பரஸ்பர உதவி, இச்சைகளின் தணிப்பு


புதியச் சட்டம் - மணமக்களின் நல்வாழ்வுஃஒன்றிணைப்பு மற்றும் மகப்பேறு - சரிநிகர்


7.1. திருமணத்தின் நோக்கம் - மணமக்களின் ஒன்றிப்பு


திருமணத்தின் நோக்கங்களில் ஒன்று மணமக்களின் ஒன்றிணைப்பு. மணமக்களிடையே இந்த ஒன்றிப்பை உருவாக்குவது அன்பு என்ற மகத்தான படைப்பாற்றல் மிக்க சக்தி. 


“மனிதன் தன் தந்தையையும், தாயையும் விட்டுத் தன் மனைவியோடு ஒன்றித்திருப்பான்” (தொ.நூ2:24)


பெற்றோர்களின் பாசத்தைவிட மணமக்களின் காதல் வலிமைமிக்கதாக மாறிவிடுகின்றது. காதலின் வலிமையை விவிலியம் அழுத்தமாக கூறுகின்றது


“காதல் சாவைப்போல் வலிமையுள்ளது, காதல் வைராக்கியம் பாதாளம் போல் கொடியது; அதன் சுடர்கள் நெருப்புச் சுடர்கள் போலும், அதன் கொழுந்து கொடிய தீக்கொழுந்தையொக்கும். பெருங்கடலும் அன்பைத் தணிக்க முடியாது, வெள்ளப் பெருக்கும் அதை மூழ்கடிக்க இயலாது” (இ.பா 8:67)


திருமண அன்பு இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ள மாபெரும் கொடை.

இறைவன் தான் படைத்த அனைத்தையும் உற்றுநோக்கிய போது, அவரின் படைப்புகள் நன்றாக இருந்தன. மிகவும் நன்றாக இருந்தன. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் அவரின் பார்வைக்க நன்றாகத் தோன்றவில்லை. அது ஆதாமின் தனிமை.


“மனிதன் தனிமையாய் இருப்பது நன்றன்று; ஆதலில் அவனுக்குச் சரிநிகரான ஒரு துணைவியை அவனுக்கென உண்டாக்குவோம்”


7.2. திருமணத்தின் நோக்கம் - மகப்பேறு


வையத்தில் வாழ்வாங்கு வாழ ஒருவர் பெற வேண்டிய பேறுகள் பதினாறு என்பர். “பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க” என்று மணமக்களை வாழ்த்துவது தமிழ் மரபு. இப்பதினாறு பேறுகளும் குழந்தைகள் என்று தவறாக இதற்கு பொருள் கூறுகின்றனர். 16 பேறுகள் பின்வருமாறு:


1. புகழ,; 2. கல்வி, 3. வலிமை, 4. வெற்றி, 5. நன்மக்கள், 6. பொன், 7. நெல், 8. நுகர்ச்சி, 9. நல்லூழ், 10. அழகு, 11. அறிவு, 12. இளமை, 13. பொறுமை, 14. துணிவு           15. நோயின்மை, 16. வாழ்நாள்.


மனிதன் பெற வேண்டிய இப்பதினாறு பேறுகளில் மிகச்சிறந்தது – மக்கட்பேறு


“பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற” (குறள் 61)


இறைவனுக்கு அஞ்சி வாழ்கின்ற மனிதனுக்கு இறைவன் தரும் பேறுகள் இரண்டு: 1. நல்ல மனைவி, 2. நல்ல பிள்ளைகள் என்று விவிலியம் கூறுகின்றது.


“கனிதரும் கொடி முந்திரி போல் உன் மனைவி என் வீட்டின் உட்புறத்தில் இருப்பாள் ஒலிவச் செடிகள் போல் உன் மக்கள் பந்தியில் உன்னைச் சூழந்திருப்பர். ஆண்டவருக்கு அஞ்சும் மனிதனுக்கு கிடைக்கும் ஆசி இதுவே” (திபா: 127:3-4)


திருமணத்தின் மாபெரும் கொடை குழந்தைகள்; பலுகிப் பெருகி நில உலகத்தை நிரப்புங்கள் (தொநூ 1:28) என்ற இறைவாக்கு, முதல் பெற்றோர்களுக்கு இறைவன் வழங்கிய ஆசியும் ஆணையும் ஆகும். இந்த ஆணையை நிறைவேற்றும் பொறுப்பு வாய்ந்த பெற்றோர்கள் கடவுளின் படைக்கும் திறனில் பங்கேற்பதுடன், கடவுளை மாட்சிப்படுத்துகின்றனர் என்று 2ம் வத்திக்கான் சங்கம் அறிக்கையிட்டுள்ளது (இ.உ.தி. 50)


7.3 மகப்பேறுப் பற்றி மானி;ட உயிர் (ர்ரஅயயெந ஏவையந) 

சுற்று மடலின் போதனை


திருமணப் பாலுறவு இரு தன்மைகளைக் கொண்டுள்ளது. ஒன்று கணவன் மனைவி அன்பினால் ஒருங்கிணைவது, மற்றொன்று மகப்பேறு. இவை இரண்டையும் ஒன்றிலிருந்து ஒன்றை மனிதன் குறுக்கிட்டு பிரித்தல் முறையற்றது. 


நாம் இருவர், நமக்கு இருவர் என்று தொடங்கி, 

நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று மாறி, 

நாம் இருவர், நமக்கு சைபர் என்று முடியும் நிலையில் உள்ளது 

இன்றைய குடும்பக்கட்டுப்பாட்டுப் பிரச்சாரம்.


இன்றைய உலகில் ‘உயிர்ப்பு எதிர்ப்பு மன நிலை’ உருவாகிக்கொண்டிருக்கிறது. மானிட உயிருக்கு உலகம் தரும் பதில் ‘வேண்டாம்’. ஆனால், மானிட உயிரை அதன் துவக்க நிலையிலிருந்து ஒவ்வொரு நிலையிலும் திருச்சபை பாதுகாக்கின்றது. எனவே, எல்லாவிதக் கருத்தடை முயற்சிகளையும், கருச்சிதைவையும் எதிர்க்கின்றது. 


7.4 கருத்தடையும், கருச்சிதைவும்


கருத்தடை என்பது கரு உருவாகாமல் தடை செய்வது; செயற்கைமுறைக் கருத்தடை பாவம் ஆகும். 


கருச்சிதைவு என்பது தாயின் வயிற்றில் உருவான கருவை மனிதனின் தலையீட்டால் அழிப்பது; கருச்சிதைவு பாவம் மட்டுமல்ல, அது ஒரு பாதகம். கருச்சிதைவு செய்து கொள்கிறவர்களுக்கும் அதற்கு உடந்தையாக இருக்கின்றவர்களுக்கும் திருச்சபையிலிருந்து நீக்கம் (நுஒ-உழஅஅரniஉயவழைn)  என்ற தண்டனையைத் திருச்சபைச் சட்டம் விதிக்கின்றது. (திச1398)  


“ஒரு தாய் தன் குழந்தையைத் தன் வயிற்றில் கொல்ல முடியும் என்றால், மனிதனுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?” – அன்னை தெரசா.

அதே வேளையில், விவேகம் இல்லாமல், பொறுப்புணர்வு இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு குழந்தைகளைப் பெற்றுத்தள்ள வேண்டுமென்று திருச்சபை ஒருக்காலும் கூறியதில்லை. மானிட உயிர் எண்ணிக்கையில் மட்டுமல்ல, தரத்திலும் சிறந்து விளங்க வேண்டும்.


மணமக்கள் குழந்தைகளைப் பெற்றெடுப்பதில் பொறுப்புணர்ச்சியுடன் செயல்படவேண்டும்; தங்களின் நலத்தைக் கருதுவதுடன் தங்களுக்கு ஏற்கனவே பிறந்துள்ள, மற்றும் வருங்காலங்களில் பிறக்கப்போவதாக எதிர்பார்க்கின்ற குழந்தைகள் நலத்தையும் கருத வேண்டும். இந்த முடிவைக் கடவுள் முன்னிலையில் மணமக்களே எடுக்க வேண்டும் (இ.உ.தி.50)


7.5 குடும்பக்கட்டுப்பாட்டில் திருச்சபையின் நிலை


தக்க காரணங்களுக்காக மணமக்கள் இனப்பெருக்க வளமற்ற கால இடைவெளியில் (ழெn-கநசவடைந pநசழைன) திருமணப் பாலுறவு கொள்வது முறையானதே என்று திருத்தந்தை 6ம் பவுல் ‘மானிட உயிர்’ என்ற தனது சுற்றுமடலில் தெளிவுப்படுத்தியுள்ளார். எனவே கிறிஸ்தவத் தம்பதிகள்  செயற்கை கருத்தடை முறைகளைக் கையாளாமல் இயற்கைக் குடும்ப கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே திருச்சபையின் விருப்பம்.

சில திருமணங்கள் மலட்டுத் திருமணங்களாக அமைந்து விடுகின்றன. மணமக்கள் எவ்வளவோ விரும்பியும் அவர்களுக்கு மகப்பேறு கிட்டுவதில்லை. இத்தகைய திருமணங்கள் உண்மையான திருமணங்கள் என்றும், திருமணம் பிள்ளைப் பேற்றுக்காக மட்டும் ஏற்படுத்தப்பட்டதல்ல என்றும், மகப்பேறு இல்லாத திருமணமும் உண்மையான திருமணமே என்றும் 2ம் வத்திக்கான் சங்கம் கூறியுள்ளது (இ.உ.தி. 50).


8. திருமணத்தின் இரு பண்புகள்


8.1. ஒருமைப் பண்பு


திருமணத்தின் முதல் மூலக்கூறு ஒருமைப் பண்பு. அதாவது, கிறிஸ்தவத் திருமணம் ஒரு தாரத் திருமணமாகும்; எனவே, அது பல தாரத் திருமணத்தை தடை செய்கிறது.


மணமக்களின் திருமண சம்மதத்தின் விளக்கம்

“நான் உன்னை என் வாழ்நாள் முழுவதும் அன்பு செய்கிறேன்; உன்னை மட்டும் அன்பு செய்கிறேன்.”


மணமக்களின் விசுவாசப் பிரமாணம்

“ஒரே மனைவியை விசுவசிக்கிறேன்; ஒரே கணவனை விசுவசிக்கிறேன்.”


ஒருவன் உள்ளத்தில் குடி இருக்க வேண்டியவள் ஒருத்தி மட்டும். கற்பு நெறி என்பது பெண்களை மட்டுமன்று, ஆண்களையும் கட்டுப்படுத்தும் நெறியாகும். 


“கற்புநிலை என்று சொல்லவந்தார் இரு

கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்”


கற்புநிலை என்பது ஆண் பெண் ஆகிய இரு பாலருக்குமே பொதுவானது என்று அடிகோடிட்டுள்ளார் பாரதி.


“பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு” (குறள் 148)


பிறருடைய மனைவியை நோக்காத பண்பே உண்மையான ஆண்மை; அதுவே, ஆண்களுக்கு அழககு, அறன், அருமையான ஒழுக்கம். இது வான்புகழ் வள்ளுவர் கண்ட வாழ்வு முறை.


அதே நேரத்தில், கற்பு என்பது பெண்களின் தலைசிறந்த அணிகலனாகும். 

“கற்புநிலையே சிங்காரம் - அது

தப்பினோர் அழகு சவ அலங்காரம”; (வேதநாயகம் பிள்ளை)


“ஒரே கிறிஸ்து, ஒரே திருச்சபை. அவ்வாறே ஒரே கணவன் ஒரே மனைவி. திருமண அன்பு எவ்வித விபச்சாரத்தையும், மண முறிவையும் புறம்பாக்குகிறது; ஆண்டவரால் உறுதிப்படுத்தப்பட்ட திருமணத்தின் ஒருமைப்பண்பு தெளிவாகத் துலங்குகிறது.” (இ.உ.தி.49)



8.2 முறிவுப்படாத் தன்மை


திருமணத்தின் இன்றியமையாத மற்றொரு மூலக்கூறு முறிவுப்படாத் தன்மை. அதாவது, கிறிஸ்தவத் திருமணங்கள் விவகாரத்துக்கு உட்பட்டவை அல்ல. மண முறிவு என்பது கிறிஸ்தவ அகராதியில் இல்லை. “கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்.” (மத்19:6)


“ஒருவருக்கொருவர் அளிக்கும் வாக்குறுதியில் முத்திரையிடப்பட்டதும், எலலாவற்றிலும் மேலாகக் கிறிஸ்துவின்  அருளடையாளத்தால் புனிதப்படுத்தப்பட்டதுமான திருமண அன்பு இன்பத்திலும், துன்பத்திலும் உடலாலும் உள்ளத்தாலும் தவறக்கூடாத முறையில்  பிரமாணிக்கம் கொண்டது. ஆகையால் அது எல்லாவித விபச்சாரத்தையும், மணமுறிவையும் புறம்பாக்குகின்றது” (இ.உ.தி.49) 


9. செய்யவேண்டியவைகள்

1.      Talk it Over          

-           if you doubt clarify the doubt.

-                      if not will end up in mess.

2.      Don’t indulge in extra marital sex because          

-           immoral

-                      brings bad reputation

-                      prone to acquire AIDS – Transmit to your wife, children

3.      Inner happiness is affected because of

-           guilty conscience

-                      and will enter into drinking and addiction to drugs

4.      Use Natural Family Planning; not Artificial condoms

5.      Never Abortion.   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Fifty steps to a happy marriage life

 50 steps to a happy marriage life  Start each day with a kiss. *    Wear your wedding ring at all times. *    Date once a week. *    ...