மாற்கு நற்செய்தி
1. சீமோனையும் அந்திரேயாவையும் எவ்விடத்திலிருந்து இயேசு தன் சீடர்களாக அழைத்தார்?
2. செபதேயுவின் மக்கள் பெயர் என்ன?
3. முடக்குவாதமுற்ற நபரை எத்தனை நபர்கள் சுமந்து வந்தார்கள்?
4. சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த லேவியின் தந்தை பெயர் என்ன?
5. சீமோனுக்கு இயேசு கொடுத்த பெயர் என்ன?
6. தம்மோடு இருக்கவும் நற்செய்தியை பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் நியமித்த 12 பேருக்கு இயேசு என்ன பெயரிட்டார்?
7. யாக்கோபு, யோவான் - இவ்விருவருக்கும் இயேசு கொடுத்த பெயர் என்ன?
8. விதைப்பவர் உவமையில் விதை எதற்கு இணையாக ஒப்பிடப்படுகிறது?
9. யாயிர் வீட்டிற்குள் அழைத்துச் செல்லப்பட்ட சீடர்கள் யாவர்?
10. யாயிரின் மகளை உயிர்பிக்க இயேசு கூறிய வார்த்தை என்ன?
11. தலித்தா கூம் என்பதன் பொருள் என்ன?
12. இயேசு பன்னிரு சீடர்களை இருவிருவராக அனுப்பும்போது எவையெல்லாம் எடுத்துச் செல்லக்கூடாது என்று கட்டளையிட்டார்?
13. இயேசு பன்னிரு சீடர்களை இருவிருவராக அனுப்பும்போது எடுத்தச் செல்ல அனுமதித்தவைகள் யாவை?
14. ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு உணவருந்திய ஆண்களின் எண்ணிக்கை எத்தனை?
15. அப்பங்களையும் மீன்களையும் பலுகச்செய்த புதுமைக்குப்பிறகு இயேசு சீடர்களை எந்த ஊருக்குச் செல்ல கட்டாயப்படுத்தினார்?
16. இயேசு கடல்மீது நடப்பதைக் கண்டு ……………. என்று எண்ணி அலறினார்கள்.
17. “இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகிறனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கின்றது” என்று கூறிய இறைவாக்கினர் யார்?
18. “உன் தாயையும் தந்தையையும் மதித்து நட! தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்” என்று உரைத்தவர் யார்?
19. கொர்பான் என்பதன் பொருள் யாது?
20. “மேசையின் கீழிருக்கும் நாய்குட்டிகள் சிறுபிள்ளைகள் சிந்தும் சிறுதுண்டுகளை தின்னுமே” என்று இயேசுவுக்கு பதில் கூறிய கிரேக்கப்பெண் எந்த இனத்தை சார்ந்தவள்?
21. காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரை குணமாக்க இயேசு பயன்படுத்திய வார்த்தை என்ன?
22. எப்பத்தா என்பதன் பொருள் என்ன?
23. நாலாயிரம் பேருக்கு உணவளிக்க இயேசு பயன்படுத்திய அப்பங்கள் எத்தனை?
24. நாலாயிரம் பேருக்கு உணவளித்தபின் இயேசு தம் சீடர்களுடன் எங்கு சென்றார்?
25. யாருடைய புளிப்பு மாவைக் குறித்து கவனமாயிருக்குமாறு இயேசு குறிப்பிடுகிறார்?
26. இவ்வகைப் பேய் ……………………., ……………………., அன்றி வேறு எதனாலும் வெளியேறாது.
27. ஒரு சிறுபிள்ளையை எடுத்து சீடர்கள் நடுவில் நிறுத்தி இயேசு கூறியது என்ன?
28. நரகத்தில் பாவிகளை தின்னும் ………… சாகாது, …………… அவியாது.
29. பலிப்பொருள் உப்பால் தூய்மையாக்கப்படுவது போல ஒவ்வொருவரும் ……………… தூய்மையாக்கப்படுவர்?
30. …………………….. ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லை.
31. யார் இறையாட்சிக்கு உட்படுவது கடினம்?
32. இயேசுவின் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதர சகோதரிகளையோ… நிலபுலன்களையோ விட்டுவிட்டவர் பெறுவது என்ன?
33. உங்களுள் பெரியவராய் இருக்க விரும்புகிறவர் ………….. இருக்கட்டும்.
34. பார்த்திமேயு நாசரேத்து இயேசுதான் போகிறார் என்று கேள்விபட்டு எவ்வாறு கத்தினார்?
35. கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு ………………. ஆயிற்று.
36. யாருடைய உருவம் தெனாரியத்தில் பொறிக்கப்பட்டிருந்தது?
37. ஏழைக் கைம்பெண் காணிக்கைப் பெட்டியில் எவ்வளவு தொகை செலுத்தினார்?
38. எந்த மலைமீது அமர்ந்திருந்தபொழுது பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா ஆகியோர் அவரிடம் வந்து இவையனைத்தும் நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன? எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டனர்?
39. யாருக்கு முதலில் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும்?
40. இயேசு யாருடைய வீட்டில் அமர்ந்திருந்தபொழுது இலாமிச்சை நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிலுடன் ஒரு பெண் வந்தார்?
41. நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்கு முன்பே …………….. போவேன் என்று இயேசு குறிப்பிட்டார்.
42. பிலாத்து “இவன் செய்த குற்றம் என்ன?” என்று கேட்டபொழுது மக்கள் கொடுத்த பதில் என்ன?
43. இயேசுவை கொல்கொத்தா மலைக்கு கொண்டு சென்றபோது அவருக்கு குடிக்க கொடுத்த பானம் எது?
44. இயேசுவை சிலுவையில் அறைந்த நேரம் என்ன?
45. “எலோயி, எலோயி லெமா செபக்தானி?” என்பதன் பொருள் என்ன?
46. “இவர் உண்மையாகவே இறைமகன்” என்று உரைத்தவர் யார்?
47. இயேசு சிலுவையில் உயிர்துறந்ததை தொலையிலிருந்து உற்றுநோக்கிய பெண்கள் யார்?
48. பிலாத்துவிடம் இயேசுவின் உடலைக் கேட்டவர் யார்?
49. ஓய்வு நாள் முடிந்ததும், இயேசுவின் உடலின்மீது பூசுவதற்கு நறமணப் பொருட்கள் வாங்கி பெண்கள் யார்?
50. யார் மீட்பு பெறுவர்?