மத்தேயு நற்செய்தி
1. இம்மானுவேல் என்ற சொல்லின் பொருள் என்ன?
2. யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில் என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார் என்று எந்த நகரத்தைப்பற்றி இறைவாக்கினர் குறிப்பிடுகிறார்?
3. கிழக்கிலிருந்து எருசலேம் வந்த ஞானிகள் குழந்தைக்கு கொடுத்த காணிக்கைப் பொருட்கள் யாவை?
4. ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, குழந்தையையும், அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எந்த நாட்டிற்கு தப்பி ஓடச் சொன்னார்?
5. “ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது; ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது; இராகேல் தன் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கிறாள்; ஆறுதல் பெற அவள் மறுக்கிறாள்; ஏனெனில் அவள் குழந்தைகள் அவளோடு இல்லை” என்று எந்த இறைவாக்கினர் உரைத்தது நிறைவேறியது?
6. ஏரோதுக்குப் பிறகு யூதாவை ஆட்சி செய்தவர் யார்?
7. அர்க்கெலாவிற்கு பயந்து யோசேப்பு தன் குடும்பத்தை எந்த ஊரில் குடியமர்த்தினார்?
8. “பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது” என்று யாரைக் குறித்து எந்த இறைவாக்கினர் உரைத்தார்?
9. திருமுழுக்கு யோவான் அணிந்திருந்த ஆடை என்ன?
10. திருமுழுக்கு யோவான் உண்ட உணவு என்ன?
11. திருமுழுக்கு யோவான் எந்த ஆற்றில் திருமுழுக்கு கொடுத்து வந்தார்?
12. திருமுழுக்கு யோவான் “விரியன் பாம்புகுட்டிகளே…” என்று யாரை குறிப்பிடுகிறார்?
13. இயேசுவின் திருமுழுக்கின்போது கடவுளின் ஆவி எவ்வடிவில் அவர்மீது இறங்கினார்?
14. இயேசுவின் திருமுழுக்கின்போது வானிலிருந்து ஒலித்த குரல் என்ன?
15. எத்தனை நாட்கள் இயேசு பாலை நிலத்தில் நோன்பிருந்தார்?
16. இயேசு தனது சீடர்களாக அழைத்த முதல் இரு நபர்கள் யார்?
17. யாக்கோபு, யோவான் இவர்களின் தந்தை பெயர் என்ன?
18. அழிக்க அல்ல; மாறாக நிறைவேற்றவே வந்தேன் என்று இயேசு குறிப்பிடுவது எது?
19. மத்தேயு நற்செய்தியின்படி இயேசு கற்பித்த செபம் எப்பகுதியில் (அதிகாரம், வசனம்) வருகிறது?
20. ---------------------------- உடலுக்கு விளக்கு?
21. இயேசு எந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்தபொழுது நூற்றுவத்தலைவர் தனது மகனுக்கு குணமளிக்கும்படி வேண்டினார்?
22. யாருடைய மாமியாருக்கு இயேசு குணமளித்தார்?
23. “அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்” என்று கூறிய இறைவாக்கினர் யார்?
24. “என்னைப் பின்பற்றி வா” என்று மத்தேயுவை அழைத்தபொழுது அவர் அமர்ந்திருந்த இடம் யாது?
25. இரத்தபோக்கினால் துன்புற்ற பெண் எத்தனை ஆண்டுகளாய் அவதியுற்றார்?
26. இயேசுவின் பன்னிரு சீடர்களின் பெயர்களை பட்டியிலிடுக?
27. “மனிதராய் பிறந்தவருள் யாரைவிட பெரியவர் தோன்றவில்லை” என்று இயேசு குறிப்பிடுகிறார்?
28. குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அப்பங்களை, தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாயிருந்தபொழுது இறை இல்லத்திற்குள் சென்று அதை எடுத்த உண்ட நபர் யார்?
29. பேய்களின் தலைவன் பெயர் யாது?
30. யாருக்கு எதிரான பழிப்புரை மன்னிக்கப்படாது?
31. மூன்று பகலும் மூன்று இரவும் பெரிய மீன் வயிற்றிலிருந்த இறைவாக்கினர் யார்?
32. ஒருவரை விட்டு வெளியேறுகிற தீயஆவி, இடம் கண்டுபிடிக்க இயலாதபொழுது மறுபடியும் திரும்பும்பொழுது எத்துணை பொல்லத ஆவிகளை அழைத்து வரும்?
33. இயேசுவினுடைய சகோதரர்கள் பெயர் என்ன?
34. ஏரோதியாளின் மகள் நடனமாடி ஏரோதை மகிழ்வித்தற்காக அவரிடம் கேட்ட அன்பளிப்பு யாது?
35. அனைவரும் வயிறார உண்டபின் எஞ்சிய துண்டுகளை எத்துனை கூடை நிறைய எடுத்தனர்?
36. படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கி கடல்மீது நடந்த சீடர் யார்?
37. படகிலிருந்தோர் இயேசுவை பணிந்து, ………………… என்றனர்.
38. இயேசுவின் உருமாற்றத்தின்போது உடனிருந்த சீடர்கள் யார்?
39. இயேசுவின் உருமாற்றத்தின்போது அவரோடு உரையாடிக்கொண்டிருந்த இருநபர்கள் யார்?
40. உயிர்த்தெழுதல் இல்லை என்ற கருத்தை கொண்டிருந்தவர்கள் யார்?
41. திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளான………, …………., …………. ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று இயேசு குறிப்பிடுகிறார்?
42. திருக்கோவிலுக்கும் பலிபீடத்திற்கும் நடுவே கொல்லப்பட்ட நபர் யார்?
43. விண்ணும் மண்ணும் ஒழிந்து போகும். ஆனால்,………….. ஒழியவே மாட்டாது?
44. இயேசுவின் பாடுகளின்போது தலைமைக் குருவாக இருந்தவர் யார்?
45. இயேசுவை காட்டிக்கொடுக்க யூதாசுக்கு என்ன கொடுக்கப்பட்டது?
46. கெத்சமனித் தோட்டத்தில் வேண்ட சென்றபொழுது இயேசு தன்னோடு அழைத்துச் சென்ற சீடர்கள் யார்?
47. யூதாசு பெற்ற 30 வெள்ளி காசுகளை கொண்டு வாங்கப்பட்ட நிலம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
48. இயேசுவின் சிலுவையை சுமக்க கட்டாயப்படுத்தப்பட்ட நபர் யார்?
49. சிலுவையில் இயேசுவின் தலைமேல் அவரது மரண தண்டனைக்கு காரணமாக எழுதி வைக்கப்பட்ட வசனம் யாது?
50. மத்தேயு நற்செய்தியின் இறுதி வசனம் என்ன?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக