விடுகதை 300

 விடுகதை



1. தாடி சாமியாருக்குக் கண் உண்டு கால் இல்லை கல்லால் அடித்தால் பல்லைக்காட்டுவார் அவர் யார்? தேங்காய் 

2. வீட்டுக்கு வீடு தவறாது வரும் புத்தாண்டின் முதல் விருந்தாளி. அவன் யார்? காலண்டர்.

3. எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் இவன் வயிறு நிரம்பாது அவன் யார்?

  கடல் 

4. ஆட்டத்தில் சொக்க வைப்பாள், பாம்பை மட்டும் பதற வைப்பாள், அவள் யார்?  மயில்

5. பார்த்தேன் - பார்த்தான், ரசித்தான் அவன் யார்? முகம் பார்க்கும் கண்ணாடி. 

6. பச்சைக்கு ஓட்டம், சிவப்புக்கு நிறுத்தம் அது என்ன?

  போக்குவரத்து சிக்னல்.

7. அண்ணன் இனிப்பான் தம்பி புளிப்பான் தங்கை மணப்பாள் - அவர்கள் யார்?  பால் - தயிர் - நெய்.

8. ஓரே குகையில் 50 திருடர்கள், வெளியே தலையைக் காணோம் அது என்ன?  தீப்பெட்டி 

9. எல்லா விஷயத்தையும் தெரிந்த எனக்குப் பேசத்தெரியாது. காலையில் வீடு தேடி வருவேன், நான் யார்?  நாளிதழ் 

10. எல்லா இடத்திலும் இருப்பேன். ஆனால் என்னைப் பிடிக்க முடியாது.                நான் யார்? காற்று.

11. இரட்டையாய்; பிறந்தவர்கள் ஒருத்தி மேலே ஏறினால் ஒருத்தி கீழே இறங்குவான் அது என்ன?  தராசு.

12. தாளைக் கொடுத்தால் தின்னும் தண்ணீர் குடித்தால் மடியும் அது என்ன?  நெருப்பு.

13. அடித்து நொறுக்கி அனலில் போட்டாலும் அருமையாயர் மணந்திடும் அது யாருக்கு?  சாம்பிராணி.

14. எப்போதும் பரிவதில்லை நணபர்கல்ல எப்போதும் சேர்வதில்லை பகைவருமல்ல அவர்கள் யார்?  தணடவாளம்.

15. தவழும் போது ஒரு பெயர் தரையில் விழுந்தால் வேறு பெயர் உருளும் போது வேறு பெயர் ஓடும் போது வேறு பெயர் அது யாருக்கு?  மேகம்.

16. கண்சிமிட்டும் ஒன்று மணி அடிக்கும் மற்றொன்று கண்ணீர் வடிக்கும் இன்னொன்று அது என்ன?  மின்னல், இடி, மழை.

17. யானை விரும்பம் சேனை விரும்பும் அடித்தால் வலிக்கும் கடித்தால் இனிககும் அது என்ன?  கரும்பு.

18. வந்தது தான் வந்தீர்களே வந்து ஒரு தரம் போனீர்களே போய் ஒரு தரம் வந்தீர்களே இனிப் போனால் வருவீர்களா? அது என்ன?  பல்

19. தண்ணீரிலே துள்ளாட்டம் தரையிலே தள்ளாட்டம் அது என்ன? மீன்.

20. வளர வளர வெட்டுவார்கள் தலை முடி அல்ல, வெட்ட வெட்ட வளருவேன் வாழையும் அல்ல, நான் யார்? நகம்.

21. வெளியில் போனால் உடன் வருவான், வீட்டக்கு வந்தால் வெளியில் இருப்பான் அவன் யார்;?  செருப்பு.

22. அச்ச இல்லாத சக்கரம், அழகு காட்டும் சக்ரம் அது என்ன? வளையல்.

23. காக்கைப் போல் கறுப்பு, வாயால் மென்றால் நீலம் அது என்ன? நாவல் பழம்.

24. பச்சை வீட்டுக்குச் சிவப்பு வாசல் அது என்ன? கிளி.

25. வெள்ளை, வெள்ளை மூக்குத்தி, வைரக்கல் மூக்குத்தி விடியும் முன்னே சிரித்திடும். விடிந்த பின்னே மறைந்திடும், அது என்ன? விடிவெள்ளி.

26. நான்கு உலக்கை குத்தி வர, இரண்டு முறம் புடைத்து வர, துடுப்பு ஒன்று துழாவி வர துரை மக்கள் ஏறிவருவர் அது என்ன? யானை.

27. வண்ணான் வெளுக்;காத வெள்ளை, மழை பெய்யாத தண்ணீர், குயவன்  செய்யாத பாண்டம் அது என்ன?  தேங்காய்.

28. ஏணி ஏணி மேலே கோணி, கோணி மேலே குழாய் மேலே குண்டு மேலே புல்லு, அது என்ன? வயிறு, கழுத்து, தலை. தலைமுடி.

29. கல்லிலே மலரும் பூ காசிக்கெல்லாம் போகும் பூ தலையில் வைக்காத பூ வாயில் வைக்கும் பூ அது என்ன?  சுண்ணாம்பு.

30. வெள்ளை நிறத்தில் கறுப்பு விதை போட்டான், கண்ணால் பார்க்கலாம், கையால் எடுக்க முடியாது, அது என்ன?  எழுத்து.

31. வீட்டிற்கு ஒரு முரட்டு சிப்பாய் காவல் அது என்ன? பூட்டு.

32. சடடையைக் கழற்றியதும் சடக்கென்று உள்ளே விழும் அது என்ன? வாழைப்பழம்.

33. பஞ்சை அதிகமாகச் சாப்பிட்டு படத்தே கிடக்குது அது என்ன?  தலையணை. 

34. குட்டிப் பசங்க வச்சிருக்காங்க சர்க்ரைத் தண்ணி. வேண்டாதவங்க வந்தாக்கா பின்னிடுவாங்க அவங்க யார்?  தேன் கூடு, தேனி.

35. நீந்தத் தெரியாத சின்னப் பையன், நீருக்குள்ள குதிக்கிறான் அவன் யார்?  கிணற்று வாளி.

36. நிலத்திலே முளைக்காத செடி, நிமிர்ந்து நிற்காத செடி, அது என்ன செடி?  தலைமுடி.

37. பூட்டு சாவி இல்லாத பெட்டி, காசு கொடுத்து வாங்கும் பெட்டி அது எந்தப் பெட்டி?  தீப்பெட்டி.

38. ஆண்டுக்கு ஆண்டு வரும் வரி, அடுத்தடுத்து வரும் வரி, அந்த வரி என்ன? ஜனவரி, பிப்ரவரி.

39. தடடினால் பறப்பான், தடவினால் சாவான் அது என்ன? கொசு. 

40. அகோரத் தாய்க்கு ஐம்பது குஞ்சுகள், பிஞ்சுகள் வாயெல்லாம் நஞ்சு, அவை என்ன?  தீக்குச்சிகள்.

41. சொம்பு நிறையக் கம்பு தொட்டுப் புட்டா வம்பு, அது என்ன? தேன். 

42. அப்பா புகை பிடிக்கிறார், அம்மா துணி துவைக்கிறார், குழந்தை அழுகிறாள் அவன் யார்? புகை வண்டி.

43. சொம்பு நிறையக் கம்பு தொட்டுப் புட்டா வம்பு அது என்ன?  தேன்.

44. வினா இல்லாமலே ஒரு விடை, அது என்ன?  பணிவிடை.

45. உரசினால் போதும் உயிர் முடிந்து போகும் அது என்ன?  தீக்குச்சி.

46. தலைக்கு மேலே வளர்ந்தவனை வளைக்க முடியும், ஒடிக்க முடியாது அவன் யார்?  தலைமுடி.

47. விரல் இல்லாமலே ஒரு கை அது என்ன கை?  உலக்கை.

48. பல் இருப்பவள் கடிக்கலே பல் இல்லாதவன் கடிக்கிறான் அவன் யார்?  சீப்பு, செருப்பு.

49. காலையில் ஊதும் சங்கு கறிசமைக்க உதவும் சங்கு அது என்ன?  சேவல்.  

50. பூ காயாகும் காய் கணியாகும் கனி காயாகும் அந்த காய் என்ன காய்?  பூசணிக்காய்.

51. பஞ்சு இல்லாமல் நூல் விற்கும் பலே தொழிலாளி யார்?  சிலந்தி.

52. போகும் இடமெல்லாம் தம்பி கோடு கிழிப்பான் தம்பி அவன் யார்?  நத்தை.

53. காட்டுக் கறிவேப்பிலை வளைத்து உடைக்க முடியவில்லை அது என்ன?  தலைமுடி.

54. காலடியில் கிடக்கிறானே என்று இவனை உதைக்க முடியாது அவன் யார்?  முன்.

55. பெட்டியைத் திறந்தால் பவளங்கள் அது என்ன?  மாதுளம்பழம்.

56. நாலு கால் வீரன் நன்றிக்கு உதாரணம் அவன் யார்?  நாய்.

57. ஆடவதற்கென்ச் சட்டை போடுவான் ஆடும் முன்பே கழட்டி விடுவான் அவன் யார்?  பம்பரம்.

58. பட்டமரத்தைத் தட்டினால் படைகள்வரும் அது என்ன?  முரசு.

59. தாய் தரையிலே கிடக்கிறாள் மகள் மகராசா முடியில் இருக்கிறாள் அது என்ன?  முத்துச்சிற்பி.

60. பச்சப் பெட்டியில் பத்துச்சரம் முத்து அது என்ன?  வெண்டைக்காய்.

61. விரிந்த ஏரியில் வெள்ளி ஓடம் மிதக்குது அது என்ன?  சந்திரன்.

62. தோலை உரித்தால் அழ மாட்டான் உரித்தவனை அழவைப்பான் அது என்ன? வெங்காயம்.

63. மூன்று திருடர்களைச் சுற்றி ஒரு டஜன் போலீஸ் அவர்கள் யார்?  கடிகாரம், முட்கள்.

64. ஓட்டு வீட்டுக்காரன் வீட்டோடு அலைவான் வீதியில் கூட அவன் யார்?  இளநீர்.

65. சுமக்கத் தெரிந்தவர் கூடவே உதைக்கத் தெரிந்தவர் அவர் யார்?  கழுதை.

66. இங்கே அடிபட்டவன் அங்கே சேதி சொல்கிறான் அவன் யார்?  தபால்.

67. இனிப்புப் பொட்டலத்திற்கு எண்ணாயிரம் பாதுகாவலர்கள் அது என்ன?  தேன்கூடு 

68. பெட்டியைத்த திறந்தால் பூட்டவே முடியலே அது என்ன?  தேங்காய்.

69. சுட்டாலும் சாகாதவன் தடுக்கி விழுந்தால் இறந்துவிடுவான் அவன் யார்?  மண்பானை.

70. மூக்கிலே பூவைத்தவன் முனங்காமல் போகமாட்டான் அவன் யார்?  சேவல்.

71. ஒத்தைக்கால் கோழிக்கு வயிறு நிறைய முட்டை அது என்ன?  மிளாகாய்.

72. ஓடிப்படர்வேன் கொடியல்ல ஒளி மிகத் தருவேன் முத்தமல்ல மனைகளை அலங்கரிப்பேன் மலரும் அல்ல நான் யார்?  மின்சாரம்.

73. சாமி கும்பிடப்போகும் போது எந்தக்காலை முன் வைத்துக் கும்பிடனும்?  தீபக்கால் 

74. உயரப் பறப்பவனக்கு வால் உண்டு கால் அல்ல அவன் யார்?  பட்டம்.

75. மாமா வீட்டுத் தோட்டத்தில் மத யானை படுத்திருக்கு எழுப்பினால் யானை இல்லை அது என்ன?  வைக்கோல்.

76. பதுங்கி பதுங்கி வருவர் கள்வரல்ல பாய்ந்து பாய்ந்து பற்றிப் பிடிப்பார் காவலரும் அல்ல அவர் யார்?  எலிபிடிக்கும் பூனை.

77. தொங்கி நிற்கும் பச்சைப் பாம்பு ஆளைக்கண்டாலும் அசையாது அது என்ன?  புடலங்காய்.

78. தாடி மீசைக்காரன் கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன் அவன் யார்?  தேங்காய்.

79. தொட்;டால் துவளுவான் ஆனால் ஓட மாட்டான் அவன் யார்?  தொட்டாச்சிணுங்கி.

80. கை பட்டதும் சிணுங்குவான் கதவு திறந்தால் அடங்குவான் அவன் யார்?  மெழுகுவர்த்தி.

81. கால் நான்கு நடக்காது கண் ஆயிரம் இமைக்காது அது என்ன?  கட்டில்.

82. காதைத் திருகினாள் கதை சொல்லுவான் அவன் யார்?  வானொலி.

83. உறிச்சிட்ட குரவி ஊர் ஊராய்ப் போகுது அது என்ன?  புளி.

84. நனைத்தாலும் நடுங்கமாட்டான் அவன் யார்?  குடை.

85. பறிக்கப் பறிக்கப் பெரிதாகிறது அது என்ன?  பள்ளம்.

86. வேலியைத் தாண்டி வெள்ளைக் குதிரை போகுது அது என்ன?  புகை.

87. எலும்பில்லாத பையன் கிளையில்லாத மரத்திலே அவன் யார்?  பேன், தலைமுடி.

88. அவனைத் தொடுவானேன் அபத்தை அணைப்பானேன் அவன் யார்?  மின்சாரம். 

89. இறக்கை உண்டு பறக்காது எட்டி உதைத்தால் தாங்காது பெயரிலேயே தீ கொண்ட பறவை அது என்ன?  தீக்கோழி.

90. உருவம் உண்டு உயிர் இல்லை ஆனாலும் உயரத்திலும் பறப்பான் அவன் யார்?  புகை. 

91. காற்றுக்குப் பருப்பவன் சிறு ஊசிக்கு முடிந்து போவான் அவன் யார்?  பலூன்.

92. உருக வைக்கும் கதை இல்லாமலே நெருங்கியவரை கண்ணீர் விட வைப்பான் அவன் யார்?  வெங்காயம்.

93. தலைக்கு குடை காலில் முள் அது என்ன?  குண்டூசி.

94. ஓசையிட்டபடி ஊரைச் சுமக்கும் அது என்ன? இரயில்.

95. பார்க்க முடியும் நூல் தைக்க முடியா நூல் அது என்ன?  சிலந்தி வலை.

96. ஏழுமலைக்கும் அந்தப்பக்கம் எருமைக் கடா கத்தது அது என்ன?  இடியோசை.

97. காலைக்கடிக்கும் செருப்பல்ல காவல் காக்கும் நாயல்ல அது என்ன?  முள்.

98. எல்லோருக்கும் முகம் காட்ட பிரியப்படுவான் முதுகை மட்டும் காட்ட மாட்டான் அது என்ன?  கண்ணாடி.

99. கொடுக்க முடியும் எடுக்க முடியாது அது என்ன?  கல்வி.

100. ஒற்றைக்கால் குள்ளனக்கு எட்டுக்கை அது என்ன? குடை.

101. சின்னஞ்சிறு குரவி இழுத்து இழுத்து வேலி அடைக்குது அது என்ன?            ஊசிநூல்.

101. அள்ளக் குறையாது குடிக்க உதவாதது அது என்;ன? கடல் நீர்.

102. கம்பியில் நடப்பான் காண முடியாது. வுPட்டுக்கு வீடு புகுந்து விளையாடுவான் தொட்டுவிளையாட முடியாது அவன் யார்?  மின்சாரம்.

103. வயிறு நிறையச்சாப்பிட்டால் வானத்தில் பறப்பான் அவன் யார்?  பலூன்.

104. கரையிலே போகிற கண்கவர் பாப்பாவுக்கு முதுகிலே மூன்று சுழி அது என்ன?  அணில்.

105. காதிகம் கண்டால் கண்ணீர் விடும் முக்காடு போட்டால் மூலையிலே அமரும் அது என்ன?  போனா.

106. கிட்ட இருக்குது பட்டணம் எட்டித்தான் பார்க்க முடியவில்லை அது என்ன?  முதுகு.

107. குளிக்காவிட்டால் சிவப்பு குளித்துவிட்டால் கறுப்பு அது என்ன?  நெருப்பு.

108. பச்சை பச்சையென்று இருக்கும் பாகற்காயுமல்ல உடலெல்லாம் முள்ளிருக்கும் பலாக்காயுமல்ல உடைத்துப் பார்த்தால் வெள்ளையாய் இருக்கும் தேங்காயும் அல்ல அது என்ன?  ஆமணக்கு.

109. குயவன் செய்யாத ஓடு சலவைத் தெழிலாளி வெளுக்காத வெளப்பு சீனி இல்லாத இனிப்பு மழையில்லாத நீர் அது என்ன?  தேங்காய்.

110. கூடவே வருவான் ஆனால் பேச மாட்டான் அது என்ன?  நிழல்.

111. இது ஒரு காலிலும் நிற்கும் இரண்டு கால்களிலும் நிற்கும் ஆனால் ஓடும் போது இரண்டு கால்களுமே தரையில் பாடாது அது என்ன?  மோட்டார் சைக்கிள்.

112. உணவை எடுப்பான் ஆனால் உண்ண மாட்டான் அவன் யார்?  அகப்பை. 

113. தண்ணீர் இல்லாமல் வளரும் தரையில்லாமல் படரும் அது என்ன?  தலைமுடி.

114. சின்னத்தம்பி சிவப்புத்தம்பி திறந்தவாய் மூடாத நல்ல தம்பி அவன் யார்?  தபால் பெட்டி.

115. காய்ந்த மரத்தில் கல் எடுத்துப்போட்டேன் காவல்காரப் பையன் கோபப்பட்டு வந்தான் அவன் யார்?  தேனீ.

116. மரத்துக்கு மரம் தாவுகள் குரங்கு அல்ல பட்டை அடித்திருப்பான் சாமியார் அல்ல அது என்ன?  அணில்.

117. அரசமரம் தூங்க ஆலமரம் தூங்க அவனியெல்லாம் உறங்க அவன் ஒருத்தன் மட்டும் உறங்கவில்லை அவன் யார்?  மூச்சு.

118. ஆற்றில் அலையுது தம்பி அழுக்கெல்லாம் விழுங்குவது தம்பி அது என்ன?  மீன்.

119. உருவம் இல்லாதவன் கத்துவான் ஓடுவன் தலைகீழாக கவிழ்வான் அவன் யார்?  நீர்வீழ்ச்சி.

120. ஊருக்கெல்லாம் ஒரே மூக்குத்தி ஒளி வீசும் மூக்குத்தி அவள் யார்?  சந்திரன்.

121. போவான் வருவான் கறுத்தப்பன் தலைகீழாய் நிற்பான் கறுத்தப்பன் அது என்ன?  வெளவால்.

122. ஓயாது இரையும் எந்திரமுமல்ல உருண்டோடி வரும்; பந்துமல்ல அது என்ன?  கடல் அலை.

123. கண்ணால் பறக்கும் கண்டதைப் பறிக்கும் பறித்ததைக் கொடுக்கும் அது என்ன?  கேமிரா.

124. வாயில்லை பேச ஆனால் வந்தவர்க்கு நீதியுண்டு என்னிடத்தில் நான் யார்?  தராசு.

125. இறந்த மாட்டை அலற அடிக்கிறான் அது என்ன?  மேளம்.

126. மஞசள் சட்டை மாப்பிளை மணமணக்கிறார் வீட்டிலே அவர் யார்?  எலுமிச்சை.

127. வெள்ளை மாளிகைக்கு வாசலும் இல்லை வழியும் இல்லை அது என்ன?  முட்டை.

128. தலையை வெட்ட வெட்ட கறுப்பு நாக்கை நீட்டுவது அது என்ன?  பென்சில்.

129. ஐந்து ஊருக்கு ஒரு மைதானம் அது என்ன?  செருப்பு.

130. பிறக்கும் போதும் இறக்கும் போதும் இல்லாதது இடையில் வுநடநழடழபல்து போகுது அது என்ன?  பல்.

131. வெள்ளை ரோட்டுலே கருப்புக் கார் அங்கும் இங்கும் அலையுது அது என்ன?   கண்.

132. இந்தக்குழாய்களின் வழியே ஏற்றுமதியும் இறக்குமதியும் நடைபெறுகிறது அது எந்த குழாய்?  மூச்சுக்குழாய்.

133. தலையில் அடித்தால் வாய்விட்டு அழுவான் அவன் யார்?  கை பம்பு.

134. அனலுக்கும் பிறப்பான் குளிருக்கும் பிறப்பான் அவன் யார்?  புகை.

135. தண்ணீரில் பிறந்து தண்ணீரிலே அழியும் பூ என்ன பூ?  உப்பு.

136. வலைபின்னி அதில் அவனே கசிறைப்படுவான் அவன் யார்?  சிலந்திப்பூச்சி.

137. கீழேயும் மேலேயும் மண் நடுவிலே அழகான பெண் அது என்ன?  மஞசள் செடி.

138. அவன் கழற்றிய சட்டையை அடுத்தவர் போட முடியாது அவன் யார்?  புளியங்காய் - பழம்.

139. புள்ளிகள் இருந்தும் கோலம்போட முடியவில்லை அது என்ன?  நட்சத்திரம்.

140. நம் தலையில் விழுவதை அவன் தலையில் போட்டுக் கொள்வான் அவன் யார்?  குடை.

141. இவன் இருந்தாலும் தொல்;;லை இல்லையென்றாலும் தொல்லை அவன் யார்?  சூரியன். 

142. வெந்து கரியாகி விருந்து படைப்பான் அவன் யார்?  வுpறகு.

143. பகலில் சுருண்டு கிடப்பான் இரவில் விரிந்து படுப்பான் அவன் யார்?  பாய்.

144. சின்னக் கதவுகள் எத்தனை தடவைகள் திறந்து முடினாலும் ஓசை தராத கதவுகள் அது என்ன?  கண்ணிமை.

145. ஒன்றாக இருந்தவர்கள் வெந்நீரில் பிரிந்தார்கள் அவர்கள் யார்?  முட்டை.

146. இவன் இருக்கிமிடத்தில் யாரும் இருக்கமுடியாது அவன் யார்?  ஓட்டை.

147. இருந்த இடத்தில் இருந்தபடியே ஆட்டம் இதில் சிலருக்கு கொண்டாட்டம் சிலருக்குத் திண்டாட்டம் அது என்ன?  சீட்டாட்டம்.

148. ஆளில்லாத வீட்டில் இவன்தான் கண்ணில் படுவான் இவன் யார்?  பூட்டு 

149. கையிலே அடங்குவார் கதை நூறு சொல்வார் யார்?  புத்தகம்.

150. கருமுகில் கண்டால் ஆடும் நாட்டியப்பாவை இவளுக்கு காடுமலை எல்லாமே நாட்டிய மேடை அவள் யார்?  மயில்.

151. உயரில்லாப் பாம்பு ஒன்று ஊறி ஊறி நகருது ஊருக்கு அருகில் வந்தால் ஊளையிட்டுக் கத்துது அது என்ன?  ரயில்.

152. சாக்கில் வந்த நண்பனை முகத்தின் மீது குத்தினார் குத்தி முடித்த பின்னாலே கொடுத்துவிட்டுச் செல்கிறார் அவர் யார்?  தபால்காரர்.

153. பழுத்தப்பின் காயாகும் அது என்ன காய்?  ஊறுகாய்.

154. ஒருவரையொருவர் துரத்திப் பிடித்து காக்கணக்கைக் காட்டுவார்கள் அவர்கள் யார்?  குடிகார முட்கள்.

155. வயிறாற உணவு வைத்தால் வளைய வளைய வருவாள் அவன் யார்? நாய். 

156. அன்ன நடை நடந்தாலும் அதிரும் தரைப்பகுதி அவன் யார்?  யானை.

157. மழைக்கும் அசையாது எருமையல்ல கூட்டுக்குள்ளே இருப்பான் அவன் யார்?  வேர்க்கடலை.

158. காவலுக்கும் வேலியாகும் காலுக்கு எதிரியாகும் அது என்ன?  முள்.

159. இலை கசப்பு, காய் கசப்பு பழம் மட்டும் கொஞ்சம் இனிப்பு அது என்ன?  வேப்ப இலை, காய், பழம்.

160. கிளையுள்ள மரம் ஆனால் இலையில்லாத மரம் காட்டுக்குள்ள நடமாடும் மரம் அது என்ன?  மான்.

161. சங்கீத பாட்டுக்காரன் மழையில் கச்சேரியே செய்வான் அவன் யார்?  தவளை.

162. சின்ன சின்ன பெட்டிக்குள்ளே சேதியேல்லாம் கண்ணுக்குள்ளே அது என்ன?  டெலிவிஷன்.

163. அவனியெல்லாம் தூங்க அவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்? கடல்.

164. அடை மழை பெய்த அடுத்த நாள் படை படையாய் வந்தது பரங்கி நாட்டு விமானம் அது என்ன?  ஈசல்.

165. இருப்பது இரண்டு கால் ஓடுவது குதிரை வேகம் இறகுகள் உண்டு பறக்காது அது என்ன?  நெருப்புக்கோழி.

166. பொழுது போனால் பூந்தோட்டம் விடிந்து போனால் வெறுந்தோட்டம் அது என்ன? நட்சத்திரங்கள்.

167. பள்ளிக்குச் செல்வான் பாடம் படிக்க மாட்டான் அவன் யார்?  பள்ளி பேருந்து.

168. பந்திக்கு வரும் முந்தி வெளியில் போகும் பிந்தி அது என்ன?  வாழையிலை.

169. சூடுபட்டு சிவந்தவன் வீடு கட்ட உதவுவான் அது என்ன?  செங்கல்.

170. இரைச்சலோடு செல்லும் விமானமுமல்ல இடியோசை தரும் மேகமுமல்ல அது என்ன?  வானவெடி.

171. தேடாமல் கிடைக்கும் பல் தேடும் செல்வத்தைக் குறைக்கும் பல் அது என்ன?  சோம்பல்.

172. எத்தனை வேகமாக சுற்றினாலும் என்றும் தலைசுற்றாது அவனுக்கு அவன் யார்?  மின்விசிறி.

173. திங்க முடியாத தங்க மாம்பழம் அது என்ன?  நெருப்பு.

174. பூத்த போது மஞ்சள் காய்த்த போது சிவப்பு பழுத்த போது கறுப்பு அது என்ன?  பேரீச்சம்பழம்.

175. செய்வதை திருப்பிச் செய்யும் குரங்கல்ல சிங்காரிக்க உதவும் சீப்பல்ல அது என்ன?  முகம் பார்க்கும் கண்ணாடி.

176. தண்ணீரில் மிதக்கும் கப்பல் அல்ல கனமாக இருக்கும் கல்லும் அல்ல வெயிலில் உருகும் வெண்ணெய்யும் அல்ல அது என்ன?  பனிக்கட்டி.

177. பூ கொட்ட கொட்ட பொறுக்க முடியவில்லை அது என்ன?  மழைத்துளி.

178. பூக்காத பூ என்ன பூ அது என்ன பூ?  குங்குமப்பூ.

179. புகையும் நெருப்பும் இல்லாமல் எரிவது எது அது எது?  ஏழையின் வயிறு.

180. பூவுறங்குது பொழுதுறங்குது நீயுறங்க வில்லை அது என்ன?  இதயம்.

181. பொரித்ததும் நடக்கும் அது என்ன?  கோழிக்குஞ்சு.

182. முயல் புகாத காடு எது?  முக்காடு.  

183. பக்கத்தில் இருப்பான் படுத்தால் மறைவான் அவன் யார்?  நிழல்.

184. பாறை மேல் கோரைக்குள் ஒருவன் அவன் யார்?  தலைப்பேன்.

185. மூடாத தொட்டியில் எடுக்க எடுக்க நீர் அது எது?  குpணறு.

186. வருவான் போவான் நின்ற இடத்தில் நிலையாக இருப்பான் அவன் யார்?  கதவு.

187. தன்னை அழுக்காக்கி தனர் இருக்கும் இடத்தை அழகுபடுத்திறான் அவன் யார்?  துடைப்பம்.

188. கடித்தால் கடிப்படாதவன் பிடித்தால் பிடிபடாதவன் அவன் யார்? தண்ணீர்.

189. அந்தரத்தில் தொங்குதடி அழகழகாச் செம்பு அதற்குள்ளே இருக்குதடி அமுதம்போல் தண்ணீர் அது என்ன?   இளநீர்.

190. அப்பா பணத்தை எண்ண முடியாது அம்மா புடவையை மடிக்க முடியாது அது என்ன?  வானமும் நட்சத்திரங்களும்.

191. இரவு பகல் விழித்திருக்கும் எப்போதும் ஒலித்திருக்கும் அது என்ன?  கடிகாரம்.

192. அடிக்கடி தாவுவான் அரசியலவாதியல்ல அவன் யார்?  குரங்கு.

193. ஆடி ஓடித் திரிந்து அடங்கிப் போன பின்னாலே நாலு பேரு தோள் மேலே நகர்ந்து போகும் அது என்ன?  பிணம்.

194. ஆறடி மனிதன் அதிர்ஷ்டத்தை கண்டிட அரை அடி இடத்தில் அமைந்துள்ள கோடுகள் அது என்ன?  கைரேகை.

195. பளிங்கு வெள்ளை உருண்டைக்குள்ளே பதுங்கி இருக்குது மஞ்சளும் வெள்ளையும் அது என்ன?  கோழி முட்டை.

196. கூட்டுக்குள்ளே குடியிருக்கும் குருவியல்ல கொலை செய்ய பாயுமது வீரனல்ல அது என்ன?  அம்பு. 

197. பிறப்போடு வந்தது இறப்போடு போய் விடும் அது என்ன?  மூச்சு.

198. அவன் நிறம் நீலம் அவன் எல்லை நெடுந்தூரம் அது என்ன?  கடல்.

199. அந்தி வரும் நேரம் அவளும் வரும் நேரம் அவள் யார்?  நிலா.

200. நீள வாலுடன் அங்குமிங்கும் ஓட ஓட வால் குறையும் துணிகள் இணையும் அது என்ன?  ஊசியும் நூலும்.

201. ஆயிரம் பேர் அணிவகுப்பிலும் பொட்டுத் தூசி கிளம்பாது அது என்ன?  எறும்பு.

202. இதுவரையில் இல்லாதது எப்போதும் இருப்பது யாரும் பாராதது அது என்ன?  நாளையதினம்.

203. அடித்தால் விலகாது அனைத்தால் நிற்காது அது என்ன?  தண்ணீர்.

204. உஙகள் அக்கா குளித்தாலும் கறுப்பு எங்க அக்கா குளிக்காமல் சிவப்பு.  அது என்ன?  கரி நெருப்பு

205. ஊருக்கு நடுவே உயர்ந்திருக்கும் உருவங்கள் பலவும் சுமந்திருக்கும் அது என்ன?  கோபுரம்.

206. இவன் அழுதால் தான் உலகம் சிரிக்கும் அவன் யார்?  வானம்.

207. இரண்டு கிணற்றுக்கு ஒரு பாலம் அது என்ன?  மூக்கு.

208. ஒரு நாடு போ என்கிறது ஒரு நாடு வா என்கிறது அது என்ன?  போ' லந்து வ ர்சா.

209. ஒரு காய் இல்லாமல் மானம் கெட்டது ஒரு கல் இல்லாமல் சுவை கெட்டது அது                  என்ன?  பருத்தி, உப்பு.

210. குருதியில் குளிப்பவன் நம் குருதியைக் காப்பவன் அவன் யார்?  இதயம்.

211. கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன் அவன் யார்?  பூட்டு.

212. உரையாத நீர் எது ?  வெந்நீர்.

213. உயரத்தில் பறப்பவனுக்கு தரையில் பிரேக் அது என்ன?  பட்டம்.

214. உலகுக்கெல்லாம் ஒரு துப்பட்டி அது என்ன?  வானம்.

215. கால் கை இல்லை காடும் மலையும் தாண்டுவான் அவன் யார்?   மேகம்.

216. என்னைப் பார்த்தல் உன்னைக்காட்டுவேன் அது என்ன?  கண்ணாடி.

217. ஏணக்கேணல் மூன்று ஏழாயிரம் மணிகள் அது என்ன?  கலப்பை.

218. ஒருவனை அழைக்காமல் ஊரையே கூப்பிடுவான் அவன் யார்?  காகம்.

219. தொப்பையனுக்கு ஒரு வாசல் தோழனுக்கு இரு வாசல் அது என்ன?  சட்டை.

220. பயந்தால் விடமாட்டான் பழகினால் மறக்க மாட்டான் அவன் யார்?  நாய்.

221. பகலில் தங்கத்தட்டு இரவில் வெள்ளித்தட்டு அது என்ன?  சூரியன், சந்திரன்.

222. பையில் இது இருந்தால் வேறு எதுவும் இருக்காது அது என்ன?  கிழிசல்.

223. மரம் வழுக்கும் காய் துவர்க்கும் பழம் இனிக்கும் அது என்ன?  வாழை.

224. முச்சந்தியில் மூன்று விளக்கு பார்த்து நடந்தால் பாதுகாப்பு அது என்ன?  சிக்னல்.

225. மாரி இல்லாமல் ஆமைக் கெட்டது ஆமை இல்லாமல் சீமைக் கெட்டது அது என்ன?  வேளாண்மை.

226. ஓரெழுத்து பறக்கும் அது என்ன?  ஈ.

227. மரமோ ஒன்று கிளையோ பன்னிரன்டு இலைகளோ முப்பது அது என்ன?  வருடம், மாதம் நாட்கள்.

228. முப்பத்திரன்டு காவலாளி நடுவில் ஒரு சின்னப் பெண் அது என்ன?  பற்கள் நாக்கு.

229. விண்ணைச் சிரிக்க செய்வான் கண்ணை பறிக்கச் செய்வான் அது என்ன?  மின்னல்.

230. வெளியில் இருப்பவனைத் தொட்டால் உள்ளிருப்பவன் அலறுவான் அவன் யார்?  அழைப்பு மணி.

231. லேத்துச் சிவப்பு செவ்வாய் பேட்டைக் கருப்பு உடைச்சா பருப்பு உண்டு பார்த்தால் கசப்பு அது என்ன?  குண்டு மணி.

232. ஓர் எழுத்து உமிழும் அது என்ன?  தூ.

233. ஓடையில் ஓடாத நீர் ஒரு ஊரும் அருந்தாத நீர்; அது என்ன?  கண்ணீர்.

234. சேர்த்து வைத்துக் கொள் என்றால் கேட்காது அவ்வப்போது வேண்டுமென்று அடம் பிடிக்கும் அது என்ன?  வயிறு.

235. பார்த்தவர் இரண்டு பேர் எடுத்தவர் ஐந்து பேர் சாப்பிட்டவர் ஒரே ஒருவர் அவர் யார்?  கண்கள் கைகள் விரல்கள் நாக்கு.

236. எடடுக்கால் ஊன்றி இருபால் படமெடுத்து வட்டக் குடைபிடித்து வருகிற அழகைப் பார் அது என்ன?  நண்டு.

237. வானத்திலே ஒரு கல் பூமியிலே ஒரு கல் அரிசியில் ஒரு கல் தண்ணீரில் ஒரு கல் வெற்றிலையில் ஒரு கல் அது என்ன?  கருங்கல், வழுக்கல், புழுங்கல், கலங்கல், சுண்ணாம்புக்கல்.

238. மரமென்றால் அடுப்பெரிக்க விறகுமாகது சீப்புண்டென்றால் தலை வாரமுடியாது பூவுண்டு கொண்டையிலே சூட முடியாது அது என்ன?  வாழை.

239. போய் வருபவை இரண்டு போனால் வராதவை இரண்டு எப்போதும் இருப்பவை இரண்டு அது என்ன?  இரவு-பகல், நேரம், இளமை, சூரியன்-சந்திரன்.

240. காட்டில் பச்சை கடையில் கறுப்பு வீட்டில் சிவப்பு அது என்ன?  மரம், கரி, தீ.

241. காலில்லாத பந்தலைப் பார்க்க பார்க்க விநோதம் அது என்ன?  ஆகாயம்.

242. நாலு காலுண்டு நடப்பதே இல்லை நம்மைப் போல கைகளுண்டு பிடிப்பதேயில்லை அது என்ன?  நாற்காலி.

243. சுமையும் தாங்கும் உதையும் கொடுக்கும் அது என்ன?  கழுதை.

244. சூடு பட்டவனுக்கு செல்வாக்கு அதிகம் அது என்ன?  செங்கல்.

245. சின்ன மச்சான் குனிய வைச்சான் அது என்ன?  முள்.

246. சின்னத்துரைக்குச் செல்லத் தொப்பி இரண்டு அது என்ன?  பட்டாணிக் கடலை.

247. பார்க்க கல்லானவன் கடிக்க இனிமையானவன் அவன் யார்?  கல்கண்டு.

248. அவன் விழுந்தான் இவன் எழுந்தாச்சு அவன் யார்?  சூரியன், சந்திரன்.

249. சேட்டு வீட்டுப் பாப்பா எட்டி எட்டிப் பாக்கிறா அது என்ன?  மூக்குச்சளி.

250. தண்ணீரோடு போகும் கல் எது ?  விக்கல்.

251. நாக்கு இல்லாதவன் நல்லது சொல்வான் அது என்ன?  புத்தகம்.

252. அந்தரானக் காட்டிலே நாலுபேர் நனையாமல் நிற்கிறார்கள் அவர்கள் யார்?  பசுவின் மடி.

253. உலகமெல்லாம் திரிவான் அவனை ஒருவரும் கண்டதில்லை அவன் யார்?  காற்று.

254. வெட்டிய பிறகுதான் தெரியும் சிவனுக்கு எத்தனை கண்கள் என்று அது என்ன?  நுங்கு.

255. உருவத்தில் சிறியவன் உழைப்பில் பெரியவன் அவன் யார்?  எறும்பு.

256. ஊரெல்லாம் மூடி இருக்கும் ஊறகாய் பானை திறந்திருக்கும் அது என்ன?  கிணறு.

257. ஊதினால் பறக்கும் அதன் மதிப்பை உலகமே மதிக்கும் அது என்ன?  ரூபாய் நோட்டு.

258. ஒரு தட்டில் ஆயிரம் ஓட்டைகள் அது என்ன?  சல்லடை.

259. ஒற்றைக்காதான் ஓடி ஓடி வேலி அடைக்கிறான் அவன் யார்?  ஊசி.

260. பாக்கு எண்ண முடியவில்லை பாய் சுருட்ட முடியவில்லை அது என்ன?  விண்மீன்.

261. காலால் உதைத்தால் காற்றால் உருளுவான் அவன் யார்?  சைக்கிள்.

262. காது இரண்டடையான் கனத்த பாரம் தாங்குவான் அவன் யார்?  பை.

263. எங்கள் வீட்டுக் கிணற்றிலே வெள்ளிக் கிண்ணம் விழுந்து கிடக்கிறது அது என்ன?  நிலா.

264. குண்டன் வாயில் குள்ளன் புகுந்தால் குபெர பட்டினத்திற்கு வழி தெரியும் அது என்ன?  பூட்டு சாவி.

265. சிற்கில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும் அது என்ன?  தபால்.

266. வெள்ளைப் பி;ள்ளையார் கோயிலுக்குப் பூட்டுமில்லை தொரப்புமில்லை அது என்ன?  முட்டை.

267. வெள்ளைக்காரன் பூக்க வெகு நேரம் காத்திருகிறார்கள் அவர் யார்?  சாதம்.

268. காட்டிலே பெண் பிறந்தது கன்னியர் கையாலே குத்தப்பட்டது அது என்ன?  பேன்.

269. திருப்பதி போனாலும் திரும்பாத பல்லக்கு அது என்ன?  பிணம்.

270. நல்லதை அனுப்பிவிட்டு கெட்டதை வைத்துக் கொள்வான் அவன் யார்?  சல்லடை.

271. அரக்கன் தலை அந்தரத்தில் தொங்குது அது என்ன?  திருஷ்டி பொம்மை.

272. கால் இல்லாதவன் காலுள்ளவனைப் பிடித்தான் அதைப் பார்த்து தலையில்லாதவன் சிரித்தான் அவன் யார்?  பாம்பு, தவளை, நண்டு.

273. நடக்க முடியாது நகரமால் இருக்காது அது என்ன?  கடிகாரம்.

274. நெட்டை அக்காள் தாக்குகிறாள், குட்டை அக்காள் தாங்குகிறாள் அது என்ன? உரல் உலக்கை.

275. நெடுக வளர்ந்தவனுக்கு நிழல் இல்லை?  தார்ரோடு.

276. பிறக்கும் போது சுரண்டிருக்கும் பிறந்த பின் பிரிந்து இருக்கும் அது என்ன? வாழையிலை.

277. மணி அடித்தால் மலை பாம்பு நிற்கும் அது என்ன? ரயில்.

278. கிளிகள் மூன்று நிறம் மூன்றும் கூட்டுக்குள் போனால் ஒரே நிறம் அது என்ன?  வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு.

279. கூடவே வரும் உதவி செய்யாது அது என்ன? காய்ந்த இலைகள்.

280. ஒற்றைக்கால் மனிதனுக்கு ஒன்பது கை அது என்ன?  மரம்.

281. மூணு பொண்ணு ஒரு முகம் மூத்த பொண்ணு ஆத்திலே அது என்ன?  முதலை, உடும்பு, பல்லி.

282. வயிறு புடைக்கத் தின்றால்தான் நிமி;ர்ந்து நிற்பான் அது என்ன?  கோணிப்பை.

283. கறுப்பு மாடு படுத்திருக்கு வெள்ளைமாடு மேலே போகுது அது என்ன?  கரியும் தீக்கொழுந்தும்.

284. குடிக்கத் தண்ணீர் உண்டு குளிக்க தண்ணீர் இல்லை அது என்ன?  தேங்காய்.

285. காய் காய்க்கும் ஆனால் பழம் பழுக்காத மரம் என்ன மரம்? முரங்கை மரம்.

286. தீனிக்குக் குறைவில்லை ஆனால் தீர்த்தம் உண்டால் மரணம் அது என்ன?  தீ

287. வீட்டைச் சுற்றி வேலி அது என்ன?  இமை.

288. கத்தியை எடுத்தேன் கண்டந்துண்டமாய் வெட்டினேன் துளி ரத்தமும் சிந்தவில்லை ஒருவருமே அழவில்லை அவை என்ன?  நகங்கள்.

289. குழந்தைக்கு எந்தக் கை பலமான கை?  ஆழுகை.

290. திறந்தால் சீறிக் கொண்டு வருவான் ஆனால் தாகமும் தீர்ப்பான் அவன் யார்?  சோடா கலர்.

291. கடித்தால் துவர்ப்பு தண்ணீர் குடித்தால் இனிப்பு அது என்ன?  நெல்லிக்காய்.

292. சரக் புரக் என சாலையில் போகிறவனுக்கு தானாக போக தெரியது அது என்ன? செருப்பு.

293. இரவில் பயமுறுத்தும் முட்டைக் கண்ணுக்கு பகலில் கண்ண தெரியது அவன் யார்?  ஆந்தை.

294. குளம்படி ஓசைக்காரன் சவாரிக்கு கெட்டிக்காரன் அவன் யார்?  குதிரை.

295. பையுடன் பிறந்தவள் பிள்ளையை அதில் சுமக்கிறாள் அவன் யார்?  கங்காரு.

296. சுமக்கத் தெரிந்த மனமே உனக்கு துவைக்கத் தெரியாதே அது என்ன? கழுதை.

297. ஒடோடி வந்தான் எதற்காக வந்hன் அவனுக்கே தெரியாது அதனால் திரும்பிப் போகிறான் அவன் யார்?  கடல் அலை.

298. மங்கையவள் முதகில் கருநாகம் தொங்குது அவன் யார்?  தலைமுடி.

299. சடக்கென்று வருவான் சத்திமிட்டுப் போவான் அவன் யார்? தும்மல்.

300. கறுத்தவன் கண்ணீர் விட்டால் வெள்ளிக் கம்பி வீதியில் அது என்ன?  மேகம் மழை.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Fifty steps to a happy marriage life

 50 steps to a happy marriage life  Start each day with a kiss. *    Wear your wedding ring at all times. *    Date once a week. *    ...