திருமணமும் பாலியலும்

 

திருமணமும் பாலியலும்

அத்தியாயம் - 1

முன்னுரை

1.1          பொது முன்னுரைதிருமணமும் பாலியலும்

                கடவுள் மனிதகுலத்திற்கு கொடுத்த கொடைகளில் மிகவும் அர்த்தமுள்ள, அழகுள்ள, மனநிறைவுள்ள, ஆனந்தமான கொடைகளில் மனித பாலியல் உறவும் ஒன்று. கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் பாலியல் உறவு தன்மை பொதுவாக இருந்தாலும், அது உடல் சார்ந்ததாக மட்டும் உள்ளது. ஆனால் மனித பாலியல் உறவு உடல் மற்றும் உள்ளம் சார்ந்ததாக இருக்கிறது. இந்த மகிழ்ச்சியான, மனநிறைவு கொடுக்கின்ற பாலியல் உறவு திருமணம் என்ற ஒரு தனிப்பட்ட மற்றும் புனித ஒப்பந்தத்தின் மூலம் பகிரப்படுவதுதான் கடவுளின் திட்டம், ஏன் மனித இயற்கையும் கூட.

                எனவே, திருமணப் பாலியல் உறவு என்பது அனைத்து நாகரீக மனித சமூகத்தில், மனித வாழ்வியல் அனுபவங்களில் மிக ஆழமான அர்த்தத்தை கொடுப்பது என்பது உலகம் அறிந்த உண்மை. அனைத்து சமயத்திலும், கலாச்சாரத்திலும், சமூகத்திலும் திருமணம் மனித வாழ்வின் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இவ்வளவு ஆழமும், அர்த்தமும் வாய்ந்த திருமணப் பாலியல் உறவு, மனித இச்சையாலும், அடங்கா பாலியல் ஆசையாலும் மற்றும் பல சமூக காரணிகளாலும், இன்று கொச்சைப்படுத்தப்பட்டு, திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவு என்பது மனிதர்களின் வாழ்க்கையில் வழக்கமான ஒன்றாக கருதப்பட்டு, மனித குலம் உருவான நாள் முதல் இன்று வரை சமூகத்தில் வழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த போலியான பாலியல் உறவை மறைமுகமாக நியாயப்படுத்தி இன்று வரை மனித சமூகத்தில் ஏற்றுக் கொண்டது தான் வேதனையான எதார்த்தம். இந்த எதார்த்தத்தை எதிர்த்து, நல்ல ஒரு திருமண பாலியல் புரிதலை கொடுத்து திருமணம் வாழ்வில் நிறைவான மகிழ்ச்சி, அன்பு காண உதவுவதே இக்கட்டுரையின் முதல் மற்றும் முக்கிய நோக்கமாகும்.

1.2. தலைப்பின் அவசியமும் முக்கியதுவம்

                என்னை பொறுத்த வரை, இன்று பல தம்பதியர்கள் இடையே தவறான புரிதல்கள் மற்றும் பிரச்சினைகள் ஏற்பட்டு, இறுதியில் மணமுறிவு அல்லது விவகாரத்து வரை செல்ல, முதல் மற்றும் மூலகாரணமாக இருப்பது திருமணத்திற்கு வெளியே ஏற்படும் பாலியல் உறவுதான். குறிப்பாக 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய பாலியல் புரட்சியும், இந்த சிந்தனைக்கு கூடுதல் உரமிட்டுள்ளது.  எனவே, மனித குலம் தோன்றிய நாள் முதல் இன்று வரை இந்த திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவு என்பது இருந்துகொண்டு தான் இருக்கிறது. இது யாரும் மறுக்க, மறைக்க முடியாத உண்மை. எனவே இந்த உண்மையை உணர்ந்த சமூகம் இன்று வரை இதுபற்றி சற்றும் கவலைப் படாமல், இந்த உண்மையை சகித்துக் கொண்டும், அதற்கு மறைமுகமாக அங்கீகாரம் கொடுத்து கொண்டும் இருப்பது, அற்புதமான திருமண பாலியல் உறவிற்கு சீர்கேடாக அமைகிறது. 

                இதனால் ஏற்படும் பல்வேறு குடும்ப பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் இருப்பதும், எனக்கு கவலையை அளிக்கிறது. ஒரு சில குருவானவர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்ட அனுபவங்களின் அடிப்படையிலும் மற்றும் எனக்கு கிடைத்த அனுபத்திலிருந்தும் ஒர் உண்மை தென்படுகிறது, அதாவது அனைத்து மனித சமூகத்திலும் 50- 70 சதவீத தம்பதிகள் திருமணத்திற்க வெளியே பாலியல் உறவில் ஈடுபடுகின்றனர். மேலும், குறிப்பாக 40 - 60 சதவீதம் இதில் ஆண்களும் 20 - 40 சதவீதம் பெண்களும் இதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று அண்மையில் அமெரிக்காவில் வெளியான அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.  இன்றைய சமூக நவீன ஊடகங்கள், நவீன கலாச்சாரம், மருத்துவ வளர்ச்சியும் வசதிகளும், நீலப்படங்கள் ஆகியன திருமண பாலியல் உறவு பற்றிய தவறான புரிதல்களை, தம்பதியர்களிடையே ஏற்படுத்தி, திருமணத்திற்கு வெளியில் பாலியல் சுகம் தேட வழிவகுக்கிறது. இதன் இறுதி விளைவு குடும்ப வாழ்வை சீர்குலைகிறது.

1.3 திருமணத்தில் பாலியல் உறவு

                அனைத்து மனித சமூகத்திலும் திருமணம் என்பது மனித வாழ்வின் ஒரு முக்கயமான ஒரு அங்கமாகும். ஒரு பெண்ணும், ஆணும் தங்களின் உள்ளம் மற்றும் உடல் சார்ந்த நிறைவுகளையும் அன்பையும் பரிமாறிகொண்டு சமூக வாழ்வில், சமூக அன்பில் ஈடுபட சமுதாயத்தின் முன் கொடுக்கும் வாக்குறுதியே திருமணம். இந்த திருமண மற்றும் இருமண திருமண அன்பின் உச்சி வெளிபாடே பாலியல் உறவாகும். இவ்வுறவில் தம்பாதிகள் மற்றவரின் உடல், உள்ள தேவையை அன்பின் அடிப்படையில் நிறைவுசெய்ய தன்னை முழுமையாக அர்பணிப்பதே உண்மையான திருமண பாலியல் உறவு எனலாம். ஆனால் இன்று திருமணமான முதல் இரவே மனைவுடன் அல்லது கணவருடன் அவர் அல்லது அவள் விருப்பம் இன்றி வழுக்கட்டாயமாக உடலுறவு கொள்வது, மேலும் கணவன் மனைவியை அல்லது மனைவி கணவனை ஒரு பாலியல் இன்பத்தின் ஒரு பொருளாக பார்ப்பது இன்றைய எதார்த்தம். இதுபோன்ற தவறான புரிதல்கள் வாழ்வில் அதிகரிக்கும் பொழுது ஒரு காலக்கட்டத்தில் திருமண பாலியல் உறவில் விரக்தி ஏற்பட்டு திருமணத்திற்கு வெளியே உறவுகொள்ள தள்ளப்படுகின்றன. 

1.4 திருமணத்திற்கு அப்பால் பாலியல் உறவுகள்

                திருமணமான ஓர் ஆண் அல்லது பெண், தன் மனைவி அல்லது  கணவன் அல்லாத மற்றொரு நபருடன் பாலியல் உறவு கொள்வது திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவு என வரையறுக்கப்படுகிறது. மேலும், ஒரு பெண்ணை அல்லது ஆணை மணந்து கொண்டு பல ஆண்களுடன் அல்லது பெண்களுடன் தன் மனைவிக்கு அல்லது கணவனுக்கு தெரிந்தே உடல் உறவு கொள்வதும் ஒரு விதத்தில் திருமணத்திற்கு வெளியே ஏற்படும் பாலியல் உறவாக கருதப்படுகிறது. இவ்வாறு நாளுக்கு நாள் திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவு அதிகரித்துக் கொண்டே வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. இது பற்றி நாம் சிந்திக்காமல், சீரமைக்காமல் இருப்பது மனித சமூகத்தை அழிவுக்கு ஈட்டுச் சொல்கிறது. 

1.5 திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவுகளின் வகைகள்

திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவுகளை 6 வகைகளாக பிரிக்கலாம். 

1)            ஓர் இரவு மட்டும்

                                இது போன்ற பாலியல் உறவில் ஈடுபடும் தம்பதிகள் தங்கள் வாழக்கையவில் ஒரு முறை அறிந்தோ அறியாமலோ அல்லது விரும்பியோ, விரும்பாமலோ மற்றும் ஒருசில நேரங்களில் உடலுறவு இன்பம் கூட தேடாது, ஏதோ ஒரு தனிமையை, துன்பத்தை, மன அழுத்தத்தை போக்க வேண்டி இது போன்ற திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவில் ஈடுபடுகிறார்கள். இதற்கு அடிமையான தம்பதிகள் பெரும் ஆபத்தை தேடிச் செல்கின்றனர். இவர்கள் தகுந்த ஆலோசனையை பெறாவிடில், திருமண வாழ்வில் பெரும் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும்.

 

2)            உணர்ச்சியின் மேல் மட்டத்தில் மட்டும்.

                                திருமண வாழ்வில் விரக்தி அல்லது பிரச்சினைகளைச் சந்திக்கும் பொழுது, ஒரு ஆண் அல்லது பெண் தமக்கு நெருங்கிய ஆண் அல்லது பெண்ணுடன் (பொதுவாக ஆண், பெண் நண்பரை நோக்கியும், பெண், ஆண் நண்பரை நோக்கியும்) உணர்ச்சிகள் சார்ந்த உதவி மற்றும் ஆறுதல் தேடலாம். ஆனால் சில நேரங்களில், நெருங்கிய நண்பர்களிடம் (பெண் - ஆண், ஆண் - பெண்ணிடம்) தனக்கு வேண்டிய உணர்ச்சிகள் சார்ந்த, ஆறுதல்கள் சார்ந்த உதவியை எதிர்பாhக்கும் பொழுது, நண்பர்களிடமே தங்களின் உடனடி உணர்வுகளின் உச்சத்திற்கு ஆளாகி பாலியல் உறவில் ஈடுபடவேண்டியுள்ளது. ஆனால் தன் கணவன், மனைவி அல்லாத ஒருவரிடம் உடலுறவில் ஈடுபட்டாலும், தனது மனைவி, கணவன் மீது கொண்டுள்ள உண்மையான அன்பு அழிக்கப்படுவது இல்லை. இதில் ஒருவரின் உடல் மட்டும் உணர்ச்சியின் உச்சத்தால் கெடுக்கப்பட்டுள்ளது.

 

3)            பாலியல் உணர்ச்சி வெறி

                                இதில் தம்பதியின் உடலும், உள்ளம் சேர்ந்து கெடுகக்;ப்படுகிறது. இந்த வகைப்பட்ட தம்பதிகள் தங்கள் கணவர் அல்லது மனைவியோடு சேர்ந்து வாழ விருப்பம் இன்றி, திருமண பாலியல் உறவை வெறுத்து, திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவை அதிகமாக தேடுபவர்கள். இவர்களை திரும்ப இணைந்து வாழ வைப்பது மிகவும் கடினம்.

4)            பாலியல் உறவுக்கு அடிமை

                                இந்த வகை தம்பதிகளில் ஆண்கள் தான் பெண்களை விட எளிமையாக இதற்கு அடிமையாகிறார்கள். இவர்கள் திருமண பாலியல் உறவில் சுகம் கண்ட போதிலும் தனிமைக்கும், மன அழுத்த்ததிற்கும் அடிமையாகி, அடிக்கடி திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவில் அதிகமாக ஈடுபடுகிறார்கள். இதனால் பல தம்பதிகள் திருமண வாழ்வில் பிரச்சினைக்கு ஆளாகி விவகாரத்து வரை சென்றுள்ளனர். இவர்களை திருத்தி, திரும்ப திருமண பாலியல் உறவில், திருமண வாழ்வில் வாழ வைப்பது எளிமையானது அல்ல.

5) நடுவயது சோதனை அல்லது பிரச்சினை

                பெரும்பாலும் நடுவயது நெருக்கடிக் காலத்தின்போது கணவன் உடல நலம் உள்ளவனாக இருந்து மனைவியிடம் உடலுறவு கொள்ள முற்பட்டால் அதுவே மனைவிக்கு எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்தலாம். எனவே தனது தேவையை நிறைவு செய்ய திருமணத்திற்கு வெளியில் பாலியல் உறவை நாடுகிறான். 

6)            கணினி உலக பாலியல் ஈடுபடுவோர் (உலடிநச ளநஒ ரளநசள)

                                இன்றைய நவீன தொழில்நுட்பத்தின், அறிவியலின் நன்மைகளை தவறாக பயன்படுத்துவதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. இவர்கள் மேல் கூறிய இந்த 5 வகை தம்பதிகளை போல் இல்லாமல் சற்று வேறுபட்டவர்கள். இவர்கள் கணினி (இணையம்) மூலம் தங்கள் தேவைக்கு ஏற்ற பாலியல் பங்காளிகளை தேர்தெடுத்தது பாலியல் உறவு கொள்வது பரவி வருகிறது. குறிப்பாக மேலை நாடுகளில் இது அதிக அளவில் திருமண பாலியல் உறவை பாதித்துள்ளது உலகம் அறிந்த உண்மை. இந்த ஐந்து வகைப்பட்ட திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவில் அதிகமாக தம்பதிகளை பாதிப்பது முதல் மற்றும் ஐந்தாவது வகை பாலியல் உறவு. எனவே, இதில் ஈடுபடுவோர் வாழ்நாள் முழுவதும் ஏதோ ஒரு குற்ற உணர்வுக்கு ஆளாகி அல்லபடுகின்றனர்.

 

 

 

அத்தியாயம் - 2

திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவுகள் பற்றிய வரலாற்றுப் பார்வை

2.1 திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவுகள் ஒர் வரலாற்றுப் பார்வை

                கற்காலத்திலிருந்து இன்றைய நவின காலம் வரை அனைதது மனித சமூகத்திலும். திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவு மறைமுகமாக புரையோடி இருந்தது என்பது இன்று நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஏதார்த்தமாகும். இதற்கு வரலாற்றில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. அரச சமூகம் முதல் ஆண்டி சமூகம் வரை இந்த தவறான பாலியல் உறவு இருந்திருக்கிறது. இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. வரலாற்றைப் புரட்டி பார்க்கும் பொழுது, கிறிஸ்தவம் முதல் அனைத்து சமயங்களும் திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவை வெகுவாக கண்டித்து, அதற்கு தகுந்த தண்டனையும் (விவாகரத்து, சாகடித்தல் கல்லால் எறிதல், சவுக்கடி) கொடுத்தது தெளிவாகிறது. மேலும், பெண்கள் திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவில் ஈடுபட்டால் அவர்; அவளது கணவரால் விவகாரத்து செய்யப்படவேண்டும். ஆனால், ஆண்கள் திருமண வெளியே பாலியல் உறுவில் ஈடுபட்டாலும் அவனுக்கு போதுமான சாட்சியம் இன்றி (அதாவது அவன் தனது வீட்டிலேயே அப்பெண்ணை தங்க வைத்து இருந்தால் அன்றி) தண்டனைகள் கொடுக்கப்படவில்லை. யூதசமயத்தில் திருமணம் ஆன ஆண் எந்த பெண்ணுடனும் உடலுறவு கொள்ளலாம். ஆனால், திருமணமான பெண் அவள் கணவனை தவிர வேறு யாரிடமும் பாலியல் உறவு வைத்துக் கொண்டால் அவள் விபச்சாரியாக கருதப்பட்டாள் என்பதற்கு பல வரலாற்று சான்றுகள் உள்ளன.  மேலும், திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவின் இன்பத்தை ஒர் ஆராய்ச்சியாக, ஒரு அத்தாட்சியாக கருதும் மனிதர்களும் அன்றும் இன்றும் பலர் உள்ளனர்.

2.1.1 திருமணத்திற்கு அப்பால் பாலியல் உறவுகள் பற்றிய மேலை நாட்டு புரிதல்

                2002 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஓர் ஆய்வி;ன் படி இன்று ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் மேலைநாட்டில் திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவில் ஈடுபடவிழைகின்றனர். திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவின் இன்பத்ததை ஓர் ஆரய்ச்சியாக கருதும் தம்பதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிககிறது. மேலும், திருமணத்திற்கு பிறகு நாம் யாரிடமும் பாலியல உறவு வைத்து கொள்ளலாம், விரும்பினால் கணவரின் அல்லது மனைவியின் ஒப்புதலோடு அல்லது தெரிவிப்போடு ஈடுபடலாம். இதில் தவறு ஒன்றும் இல்லை என்று கூறும் தம்பதிகளும் உண்டு. சில நாடுகளில் திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவில் ஈடுபடுவது சட்டப்படி அனுமதிக்கப்படுகிறது. 

                குறிப்பாக மேலை நாடுகளில் இளம் தம்பதிகள் முதல் வயதான தம்பதிகள் வரை தங்கள் மனைவி மற்ற ஆணிடமும் அதேபோல தனது கணவர் மற்ற பெண்ணிடமும் வெளிப்படையாக உறவு வைத்துக் கொள்ளும் வழக்கம் பழக்கமாகி வருகிறது. மேலும், இவ்வாறு திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவில் ஈடுபடும் பொழுது திருமண தாம்பத்திய வாழ்வு புத்துணர்ச்சியும், புது இன்பமும ஏற்படுகிறது என்பது பல மேலைநாட்டு தம்பதிகளின் எண்ணம். சீனாவில் இளையோர் நாளிதழில் வந்த செய்திநாம் திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவை பொறுத்து கொள்ளத்தான் வேண்டும் ஆதனால் திருமணத்pற்கு முன் பாலியல் உறவை ஆதரிக்க அனுமதிக்க வேண்டும்என்று கூறுகிறது. 

 

 

2.1.2 திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவுகள் பற்றி இந்தியப்புரிதல்கள்

                இந்தியாவில் மற்ற நாடுகளை விட அதிகமாக, சரியான பாலியல் உறவுகள் பற்றிய புரிதல்கள் இருந்ததற்கு பல வரலாற்று சான்றுகள் உள்ளன. பண்டைய இந்திய இயல், இசை நாடகம் மற்றும் இலக்கியங்களில் இது தெளிவாக புலப்படுகிறது. இந்தியர்கள் பாலியல் உறவை ஒரு கலையாக மற்றும் அறிவியலாக கருதினார்கள் என்பதற்கும் பல சான்றுகள் உள்ளன. மற்ற எல்லா நாடுகளுக்கும் முன் பாலியல் கல்வியை பண்டைய இந்திய இலக்கியங்கள். நாடகங்கள் வழியாக எடுத்துரைத்த பெருமை இந்தியர்களுக்கே உரியது. திருமணத்தில் கணவன் - மனைவி இடையே பாலியல் உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்ற அறநெறியையும் வகுத்த பெருமை இந்தியர்களுக்கே உண்டு. இதற்கு ஆதாரமாக பண்டைய இந்திய கோவில்கள் (அஜந்தா, எல்லோரா மற்றும் கஜீரா) விளங்குகின்றன.  இவ்வாறு திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவு ஒரு தடையாக, தவறாக கருதப்பட்ட பொழுதிலும் மனுஸ் சட்டப்படிஒரு ஆண் மகன் அல்லது கணவன் மற்ற பெண்களோடு உடலுறவு கொண்ட பொழுதிலும், அவன் மனைவி அவனை ஒரு கடவுளாகத்தான் கருத வேண்டும்.” (டுயற ழக ஆயரெ ஏஇ 54 ஏஐஐஇ 371)

இவ்வாறு பாலியல் கல்வி மற்றும் திருமண பாலியல் உறவுக்கு உலகத்திற்கு முன்னோடியாக திகழ்ந்த இந்தியர்களும் மறைமுகமாக திருமண வெளியே பாலியல் உறவு கொண்டார்கள் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.

                ராஜஸ்தான் மாநிலத்தில் இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் மேற்கொண்ட ஒரு ஆய்வின் படி 40மூ ஆண்களும், 17மூ பெண்களும் திருமணத்திற்கு முன் பாலியல் உறவில் மற்றும் திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவில் ஈடுபடுகின்றனர். ஒரு முறை திருமணத்திற்கு முன் பாலியல் உறவில் ஈடுபட்டவர் 15 முறை திருமண வெளியே பாலியல் உறவில் ஈடுபட துண்டப்படுகின்றன. என்பது ஆய்வின் முடிவு. இதன் தொடர்ச்சியாக தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி பெங்களுர் 27மூ சென்னை 28மூ, டில்லி 32மூ ஆந்திரா 28மூ, கல்கத்தா 33மூ பம்பாய் 29மூ தம்பதிகள், திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவில், தம்பதிகளின் தடையின்றி, சுதந்திரமாக ஈடுபட விரும்புகின்றனர். இந்திய ஆண்களை போன்றே இந்திய பெண்களும் இன்று திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவில் அதிக நாட்டம் காட்டுகின்றனர்.  

2.1.3 திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவுகள் பற்றி தமிழக புரிதல்

                தமிழர்கள் பாலியல் உறவுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. தமிழ் இலக்கியங்களிலும், (சிலப்பதிகாரம், திருக்குறள், நாளடியார், கம்பராமாயணம்) கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் திருமண பாலியல் உறவுகள் பற்றி அதிகமாகவே பேசப்பட்டுள்ளது என்பது உண்மையே. இருப்பினும திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவில் தமிழர்களும் ஈடுபடுகின்றனர் என்பதற்கும் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. உதாரணமாக கோவலன் - மாதவி உறவு. ஏன் இன்றைய சமுகத்திலும் இது அதிகமாகவே இருக்கிறது. இன்றைய தமிழக குடும்ப உறவுகள், கலாச்சாரம், சமூக, பொருளாதார அமைப்புகள் (ஆபைசயவழைn), இதற்கு மிகவும் உதவியாக அமைந்து விட்டன. மேலும், இன்றைய நவீன அறிவியல் சாதனங்களின் விளைவு, மன அழுத்தம், மனித தன்மையற்ற, போலியான உறவுகளும், இதற்கு துணை செய்து விடுகிறது இதற்கு உதாரணமாக தமிழ் நடிகை குஷ்பூ பகிர்ந்து கொண்ட கருத்து திருமணத்திற்கு முன் பாலியல் உறவு தவறு அல்ல என்று கூறியுள்ளார்.  அதற்கு பல எதிர்ப்புகள் வந்தன. ஆனால், திருமண வெளியே பாலியல் உறவுகள் இன்றும் மறைமுகமாக, சில நேரங்களில் வெளிப்படையாகவும், நடக்கின்றன. அதற்கு யாரும் எதிர்ப்பு கூறவில்லை ஏன் இதை பற்றி பேசுவும் விரும்பவதில்லை, காரணம் இது நமது சமூகத்தில் ஊறி போன ஒன்றாகி விட்டது. தமிழகத்தில் முன்பு கூட்டுக் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதனால் திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவுகளுக்கு வாய்ப்புகள் குறைவாக இருந்தது. ஆனால் இன்று தனிக் குடும்பங்களினால் திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவுகொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளது.

2.1.4 திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவுகள் பற்றிய இன்றைய புரிதல்கள்

                திருமணத்திற்கு அப்பால் பாலியல் உறவுகள் ஒவ்வொரு கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும், சமூகத்திலும் வெவ்வேறு விதத்தில் புரிந்து கொள்ளப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பாலியல் புரட்சியின் காரணமாக, பாலியல் விடுதலைக்கு முக்கியதுவம் கொடுக்கப்பட்டு இன்று மேலை நாடுகளில் திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவு வெளிப்படையாக நடைபெறுகிறது. மேலும், மேலைநாடுகளில் திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவு ஒரு புதிய கலாச்சாரமாக, கருதப்பட்டு ஒருவர் மனைவியை மற்றொரு திருமணமான நபர் அழைத்து உடலுறவு கொள்ளும் கலாச்சாரம் வெகு விரைவாக பரவி வருகிறது. இன்றைய நவின காலச்சாரத்தின் விளைவாக இன்று கணவன் மனைவியின் ஒப்புதல் அல்லது மனைவி கணவனின் ஒப்புதல் பெற்று, மற்றறொருவரின் கணவன் அல்லது மனைவியுடன் பாலியல் உறவு பரிமாறிக் கொள்வது ஒரு சில சமூகங்களில் ஏற்றுக் கொள்ளபடுகிறது. மேலைநாட்டு பத்திரிக்கை ஒன்றில் இவ்வாறு கூறப்பட்டுள்ளதுஆண்களாகிய நாங்கள் எங்கள் மனைவியை பிரமாணிக்கத்துடன் சட்டப்படி பிள்ளை பெற்று தர பயன்படுத்துகிறோம். ஆனால், மற்ற பெண்களை எங்களின் சுய மகிழ்ச்சிக்காக பாலியல் சந்தோஷத்திற்காக பயன்படுத்துகிறோம். பாலியல் புரிதல்கள் என்ற புத்தகத்தில், அதன் ஆசிரியர் இவ்வாறு கூறுகிறார்ஏறத்தாழ 60 - 80 சதவித ஆண்கள் திருமணத்திற்கு பிறகும் மனைவி தவிர மற்ற பெண்களுடன் குறைந்தது ஒன்று, இரண்டு முறையாவது உடலுறவில் ஈடுபடுகின்றனர்.

                மேலை நாட்டை சேர்ந்த கீன்சேய் மற்றும் அவரது நண்பர்கள் மேற்கண்ட தேசிய ஆய்வின் முடிவுகள் இவ்வாறு கூறுகின்றன. “அதாவது கிராமபுறத்தை விட நகர்புறங்களில் தான் அதிக அளவில் திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவு நடக்கிறது. மேலும், சிலர் திருமணமான ஒரே மாதத்தில் திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். பிறகு, பெரும்பாலும் இந்த உறவில் ஈடுபடுபவர்கள் 30 – 50 வயது நிறைவடைந்தவர்கள் தான் அதிகம்; குறிப்பாக ஆண்கள் 22.7மூ பெண்கள் 11.6மூ ஈடுபடுகின்றனர்.”  

                அவுட்லுக் (ழுரவடழழம 1997 மே 5) பத்திரிக்கையில்திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவு ஆறுதலையும் அதிக பட்ச மகிழ்ச்சியையும் தருகிறதுஎன்று கூறுகிறார் ஒரு திருமணமான பெண்மணி.  இவ்வாறு திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவு இன்று ஒரு வகையில் நியாயப்படுத்தப்பட்டு, சமூகத்தில் மறைமுகமாக ஊறி போன, ஒரு வழக்கமான நடைமுறையாகத்தான் பெரும்பாலான தம்பதிகள் கருதுகின்றனர். பெரும்பாலான தம்பதிகள் தங்களது கணவன் அல்லது மனைவி மற்ற நபர்களுடன் பாலியல் உறவு வைத்து இருப்பது தெரிந்தும், அதை கேட்க தைரியம் இல்லாமலும், அல்லது சகித்துக் கொண்டும் அல்லது அறியாமல் ஏதோ ஒரு முறை செய்துவிட்டார் என்று கருதுவதும் இன்று வழக்கமாகி விட்டது.

 

 

 

அத்தியாயம் - 3

திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவுகள் உருவாக முக்கிய காரணிகள்

3.1          திருமண பாலியல் பரிமாற்றத்தின் பிரச்சனைகள்:

                                இன்று அதி நவீன அரசியல் வளர்ச்சி மற்றும் நுகர்வு கலாச்சாரத்தின் விளைவாக திருமண பாலியல் பரிமாற்றத்தில் அல்லது உறவில் பல பிரச்சினைகளை இன்றைய தம்பதிகள் சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாகி உள்ளனர் என்பதே உண்மை. திருமண பாலியல் உறவு உடல் மற்றும் உள்ளம் சார்ந்தது என்ற புரிதல் இல்லாது மாறாக உடல் சார்ந்தாக மட்டும் எண்ணும் பொழுது தம்பதிகள் இடையே பல பிரச்சினைகள் உருவெடுக்கின்றன. ஒரு பாலியல் நிபுணர் கூற்றுபடிதிருமணத்தின் முதல் வெற்றி படி தம்பதிகளின் படுக்கை படியில் ஆரம்பிக்கிறது.  எனவே, இந்த தம்பதிகளின் பாலியல் உறவில் பிரச்சினை ஏற்படும் பொழுது அதுவும் சரியான புரிதலோடு நிவர்த்திசெய்யப்படாத பொழுது, தம்பதிகள் திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவில் ஈடுபடுகின்றனர். இதனால், குடும்பத்தின் அமைதியையும், மகிழ்ச்சியையும் அழித்து, இறுதியில் தம்பதிகளின் பிரிவுக்கு இட்டு செல்கிறது.

3.1.1 திருமண பாலியல் உறவில் திருப்தியின்மை

                திருமண பாலியல் உறவில் திருப்பதியின்மையே இன்று பல தம்பதிகள் திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவில் ஈடுபட முக்கிய காரணமாக இருக்கிறது. தம்பதிகளில் ஒருவர் மற்றொருவரின் பாலியல் உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் சரியாக புரிந்து கொள்ளாமல் உடலுறவு கொள்ளும் பொழுது, உடலுறவில் திருப்தியின்மை ஏற்பட்டு, போதுமான அளவு பாலியல் சுகம் கணவனிடமோ அல்லது மனைவியிடமோ கிடைக்காத பொழுது திருமணத்திற்கு வெளியே சுகம் தேடவிரும்புகின்றனர். மேலும், சில தம்பதிகளின் இயற்கையான மலட்டு தன்மையால் தனது மனைவியையோ அல்லது கணவனையோ அவர்களால் திருப்தி படுத்தமுடியவில்லை.  இதனால் அந்த கணவன் அல்லது மனைவி திருமண வெளியே பாலியல் உறவில் ஈடுபடுகின்றனர்.

3.1.2 திருமண பாலியல் உறவில் ஒத்துழையாமை               

                இதுவும் திருமண தம்பதிகள் திருமணத்திற்கு வெளியே சுகம் தேட ஒரு முக்கிய காரணமாகிறது. சில தம்பதிகள் அடிக்கடி பாலியல் உறவில் ஈடுபட தயங்குகின்றனர் அல்லது சரியான புரிதல் இன்றி உடலுறவை ஒரு பாவம் உள்ள செயலாக கருதுகின்றனர். இதனால் கணவன் மனைவி பாலியல் உறவு பரிமாற்றத்தில் முழு ஓத்துழைப்பு கிடைப்பதில்லை. கணவர் உடலுறவு கொள்ள விரும்பும் பொழுது மனைவி அதை வெறுத்து ஒதுங்கி செல்வது மற்றும்; மனைவி விரும்பும் பொழுது கணவன் ஒதுங்கி செல்வது அல்லது போதுமான அளவு பாலியல் உறவில் ஆர்வம் காட்டாமல் அமைதி காப்பதும் திருமணத்திற்கு வெளியே உடலறவு கொள்ள அழைத்து செல்கிறது.

3.2 சமூக காரணிகள்

3.2.1      சினிமாவின் (தாக்கம்) தொலைக்காட்சியின் தாக்கம்

                இன்றைய சினிமா மற்றும் (சினிமா) தொலைக்காட்சி தொடர்கள் இது போன்ற தவறான பாலியல் உறவுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. சினிமாக்கள் நம்மிடம் அதிக தாக்கத்தை உண்டாக்குகிறது என்பது உண்மையே இதன் அடிப்படையில் சினிமாக்களில் திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவு நியாயப்படுத்தப்படும் பொழுதும், அடிக்கடி இது போன்ற நிகழ்வுகள் காண்பிக்கப்படும் பொழுதும் சினிமாக்களை பார்க்கும் மக்கள் மனதில் திருமணத்திற்கு வெளியே பாலுறவு என்பது ஒரு வழக்கமான, ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக கருதும் வாய்ப்பு அதிகமாகிறது. மேலும், இன்றைய (சினிமா) தொலைக்காட்சி தொடர் கிட்டதட்ட அனைத்து தொடர்களும் திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவில் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும், ஈடுபடுவது இன்றைய ஓர் புதிய நுகர்வு கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக சித்தரிக்கப்படுகிறது. இது திருமணத்திற்கு வெளியே ஏற்படும் பாலியல் உறவுக்கு ஒரு அங்கீகாரமும் உரிமையும் கொடுப்பதாக கருதி இன்றும் பல தம்பதிகள் திருமணத்திற்கு வெளியே பாலியல்உறவில் ஈடுபட தூண்டப்படுகின்றனர்.

3.2.2 நீலப்படங்களின் தாக்கம்

                நீலப்படத்திற்கு அடிமையானவர்கள், தாங்கள் பார்த்து ரசித்த அனைத்து பாலியல் உறவு சார்ந்த நிகழ்வுகளையும், தங்கள் மனைவி அல்லது கணவரிடம் எதிர்பார்க்கின்றனர். எல்லா நீலப்படங்களும் மனிதனின் பாலுணர்வை அதிகமாக தூண்டுவதற்காக போலியான முறையில் மனித பாலியல் உறவு மிகைப்படுத்தி காண்பிக்கப்படுகிறது. ஆனால், இந்த நீலப்படங்களை பார்த்து ரசித்த மனிதர்கள் தங்கள் திருமண பாலியல் உறவில் அவ்வாறு சுகம் அனுபவிக்க முயலும் போது, அதற்கு தன் கணவன் அல்லது மனைவி ஒத்துழைப்பு கொடுக்காமல் இருக்கும் நிலையில், அவர்கள் திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவில் நாட்டம் காட்டுகின்றனர். 

3.2.3 அந்நிய கலாச்சார மோசம்,

                இந்திய கலாச்சாரத்தில் திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவு வழக்கத்தில் இருந்தாலும், இன்றைய அந்நிய கலாச்சாரத்தின் விளைவாக பெருமளவு திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவு நியாப்படுத்தப்பட்டு, இதனை திருமண வாழ்வின் தவிர்க்கமுடியாத ஒன்றாக கருதும் அளவுக்கு இன்று தம்பதிகள் மத்தியில் சிந்தனை மாறியுள்ளது. இது போன்ற அன்னிய கலாச்சாரத்தின் விளைவாக வெளிப்படையாகவே கணவன் தன் மனைவியை அல்லது மனைவி தன் கணவனை மற்றொரு திருமணமான நபரிடம் ஒர் இரவு பாலியல் இன்பத்திற்காக அனுப்பி வைப்பதும் மேலை நாடுகளில் வழக்கமாகி வருகிறது. இதனை பார்க்கும் பொழுதும், கேட்கும் பொழுதும் இந்திய தம்பதிகளும் இக்கலாச்சாரத்திற்கு ஆளாகின்றனர்.

3.2.4 விபச்சாரம்

                திருமண வாழ்வில் முழு நிறைவும், மகிழ்ச்சியும் காணும் தம்பதிகள் கூட சில நேரங்களில், அறிந்தும் அறியாமல், தவறி, தங்களின் பாலியல் உண்ர்ச்சியை நிறைவு செய்ய விபச்சாரிகளை தேடுகின்றனர். குறிப்பாக தன் மனைவி கருவுற்று அவள் தாய்வீடு தங்கி இருக்கும் காலத்தில், பாலியல் சுகம் தேடி விபச்சாரிகளிடம் செல்வதும் வழக்கமான ஒன்றாகி விட்டது.

3.2.5 நவின வாழ்க்கை முறையும் இடம் பெயர்வும் (ஆபைசயவழைn)

                இன்றைய நவீன வாழ்க்கை முறையும், தொழிலுக்காக இடம் பெயர்தலும் சில சமயங்களில் திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவில் ஈடுபட வழி வகுக்கிறது. இன்று பணத்திற்காக அதிக நேரம் உழைக்கும் கணினி தொழில் சார்ந்த அலுவலர்கள் போதுமான அளவு தன் மனைவி அல்லது கணவனிடம உறவு கொள்ளமுடியவில்லை. ஏன் என்றால் அவர்கள் வீட்டில் செலவிடும் நேரம் மிக மிக குறைவு. எனவே, அவர்கள் வேலை செய்யும் இடத்தில், அவர்களோடு பணிபுரியும் ஆண்கள் அல்லது பெண்களோடு பாலியல் உறவில் ஈடுபடுவதும் இன்று பெருகிவருகிறது.  மேலும், தொழில் காரணமாக தனது மனைவி, குழந்தைகளை விட்டு வெளியூர் செல்லும் ஆண்கள் பல நேரங்களில் திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவு கொள்கின்றனர். மேலும், இன்றைய அலைபேசி கலாச்சாரத்தின் வழியாக அலைபேசியில் பாலியல் சார்ந்த செய்திகளை பெற நேரிடுகிறது. இதற்கும் சில தம்பதிகள் ஆளாகி திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவு ஈடுபட விழைகின்றனர்.

 

3.3          பொதுவான காரணங்கள்

 

                மேற்சொன்ன காரணங்கள் தவிர இன்னும் சில காரணங்களை இங்கே பொதுவாக காணலாம். ஏழ்மை நிலையினால் சில பெண்கள் திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவு மேற்கொள்ளுகின்றனர். மேலதிகாரிகளின் அதிகார வற்புறுத்தலினாலும், தங்களுக்குண்டான காரியங்களை சாதித்;துக் கொள்வதற்காகவும் இது போன்ற உறவுகள் ஏற்படுகின்றன.அதிக குழந்தைகள், போதிய இடவதியின்மை, தனி குடும்ப சூழ்நிலை, நுகர்வு கலாச்சாரம், தனிமனித்துவம் போதிய பாலியல் கல்வியின்மை போன்றவைகளை பொதுவான காரணங்களாகக் குறிப்பிடலாம்.

 

அத்தியாயம் - 4

திருமணத்திற்கு வெளியே உண்டாகும் பாலியல் உறவுகளின் விளைவுகள்

4.1 கணவன் மனைவி இடையே தவறான புரிதல்

                இன்றைய நவீன மற்றும் நுகர்வு கலாச்சாரத்தின் விளைவாக பல திருமணமான ஆண்கள் மற்றும் பெண்கள் திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவு கொள்ளும் போது கணவன் மனைவி இடையே ஒரு தவறான புரிதல் உருவாகி, இறுதியில் குடும்ப உறவு அழிக்கப்படுகிறது. கணவன் மனைவியை, மனைவி கணவனை பற்றி சந்தேகப்படுவது அதிகரிக்கிறது. இதனால் உண்மையான திருமண அன்பு முறிவு பட்டு குடும்பத்தில் பல பிரச்சனைகளுக்கு இது வழி கோலுகிறது. மேலும், இதனால் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு மற்றவர்களும் இதன் தாக்கம் இருக்கிறது. கணவன் மனைவியை பற்றி இழிவாக பிறரிடம் பேசுவது மனைவி கணவனைப்பற்றி இழிவாக பேசுவது இறுதியில் குடும்பம் சீரழிகிறது.

4.2 திருமண வாழ்வு அர்த்தம் இழக்கிறது

                இவ்வாறு திருமண வெளியே பாலியல் உறவில் ஈடுபடும் பொழுது, ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்து உண்மையான அன்பு, திருமண அன்பு முறிவுபடுகிறது. புனித பவுல் கூறியது போல கணவனுக்கு மனைவியின் உடல் மீது அதிகாரம் உண்டு அதே போல் மனைவிக்கு கணவரின் உடல் மீது அதிகாரம் உண்டு. எனவே, பாலியல் உறவு திருமணத்தில் மட்டும் கணவன் - மனைவி இடையே நடக்க வேண்டும் என்ற புனித உடன்படிக்கை அர்த்தம் இழக்கிறது. ஒரு கணவன் அல்லது மனைவி மற்றவரின் கணவரோடு, மனைவியோடு உடலுறவு கொள்ளும் பொழுது உண்மையான திருமண அன்பு, பிரமாணிக்க தன்மை இழந்து, திருமண வாழ்வு அர்த்தம் இழக்கிறது. 

4.3 திருமணத்தின் பிரமாணிக்க தன்மை உடைகிறது.

                எந்த ஒரு தம்பதியும் திருமண வெளியே பாலியல் உறவை தேடும் பொழுது அவர்களின் திருமண பிரமானிக்க தன்மை உடைபடுகிறது. எந்த ஒரு காரணம் கொண்டும், திருமண வெளியே பாலியல் உறவு சுகம் அனுபவித்தாலும் அவர் திருமண பிரமாணிக்க தன்மையை இழந்து விடுகிறார்.

 கூடா ஒழுக்கம் திருமண வாக்குறுதிக்கு எதிரானது. எனவே தாம்பத்திய ஒழுக்கநெறிக்கு முரணானது. எனவே எபிரேயருக்கு எழுதிய திருமுகம் இப்படிச் சொல்கிறது: “திருமணத்தை அனைவரும் உயர்வாக மதியுங்கள். மணவறைப்படுக்கை மாசுபடாமல் இருக்கட்டும். இதற்கு எதிராக செயல்படும் போது திருமண வாக்குறுதி மீறப்படுகின்றது. திருமண அன்புக்கு ஊறுவிளைக்கின்றது. தங்கள் பிள்ளைகளுக்கும் பிறருக்கும் தவறான எடுத்துக்காட்டாகவும் இடறலாகவும் இருக்க நேரிடுகின்றது. 

4.4. திருமண கட்டு உடைகிறது (மணமுறிவு)

                இதுபோன்ற மறைமுக பாலியல் உறவுகள் கணவனுக்கு அல்லது மனைவிக்கு தெரியவரும் பொழுது, அந்த கணவன் அல்லது மனைவி தாங்கமுடியாத துன்பத்திற்கும் வேதனைக்கும் ஆளாகிறார்கள். மேலும், இதுபோன்ற தவறான பாலியல் உறவுகள் அடிக்கடி நடைபெறும் பொழுது, அதுவும் வெளிப்படையாக தெரியும் பொழுது குற்றம் மற்ற அந்த கணவன் அல்லது மனைவி தனது திருமண வாழ்வுக்கு இனிமேல் அர்த்தம் இல்லை என்று கடைசியாக விவகாரத்து கேட்கும் அளவுக்கு சென்றுவிடுகின்றனர். 

4.5 குடும்ப உறவுகள் பாதிக்கப்படுகிறது

                குடும்ப நபர்களுக்கும் மற்ற உறவினர்களுக்கும் திருமணமான ஒருவரின் தவறான பாலியல் உறவு (அதாவது திருமண வெளியே பாலியல் உறவு) தெரிய வரும் பொழுது அவர்களின் குடும்ப உறவுகள் மிகவும் பாதிக்கப்படுகிறது. இந்த பாதிப்பை ஈடு செய்வது மிகவும் கடினம். இதனால் சில குடும்பங்கள் உறவுகள், உறவினர்கள் அன்று தனிமை படுத்தப்படுவதும் உண்டு. அக்குடும்பத்தில் வாழும் மற்ற நபர்களின் சமூக, உறவுகள் பாதிக்கபடுகின்றன.

4.6 குடும்ப மதிப்பு மற்றும் சுய மரியாதை இழத்தல்

                திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவில் ஈடுபடும் தம்பதிகளின் குடும்ப மதிப்பு சமூகத்தில் குறைகிறது. அதே நேரத்தில் அத்தம்பதிகளின் சமூக உறவுகளும் பாதிக்கப்படுகின்றன. மேலும், அந்த தம்பதிகள் தங்களின் சுயமரியாதையை இழக்க நேரிடும். இவ்வாறு சுயமரியாதை இழந்து வாழும் பொழுது, அவர்கள் தங்கள் வாழ்வில் அர்த்தம் இழந்து உயிரையும், மாய்த்துக் கொள்ளும் சூழ்நிலைக்கும் ஆளாகலாம்.

4.7 குற்ற உணர்வுகளும் அதன் பாதிப்பும்

                திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவில் இன்பம் கண்ட தம்பதிகள் ஒரு காலத்தில் தாங்கமுடியாத, ஆறுதல் படுத்த முடியாத மற்றும் ஆலோசனை அளிக்க முடியாத குற்ற உணர்வுக்கு ஆளாகிறார்கள். வாழ்வில் ஒரு தடவை இச்செயலில் ஈடுபட்டாலும் அது அவர்களை வெகுவாக பாதிக்கிறது. இந்த குற்ற உணர்வுகள் அவர்களை அதிகமாக தாக்கும் பொழுது அவர்கள் தங்கள் உயிரையும் மாய்த்துக் கொள்ள தயங்குவது இல்லை.

4.8. பிற விளைவுகள்

                எய்ட்ஸ் நோய்க்கு உள்ளதால், பல்வேறுப்பட்ட பாலியல் சார்ந்த நோய்களுக்கு ஆளாதல், தனிமை, மன அழுத்தம், மற்றும் சரிசெய்ய முடியாத உளவியல் சார்ந்த நோய்களுக்கு பலியாகலாம். சில நேரங்களில் தாங்கள் (கணவன் அல்லது மனைவி) பாலியல் நோய்களுக்கு ஆளாவது மட்டும் அல்லாமல், ஒன்றும் அறியாத,  தனது துணைவி அல்லது துணைவன் பாலியல் நோய்க்கு ஆளாகி இறக்கும் சூழல் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இது நாம் ஏற்றுகொள்ள முடியாத எதர்த்தம்.   

 

 

 

 

 

 

 

 

 

அத்தியாயம் - 5

முடிவுரை

5.1          திருச்சபையின் பார்வையில்

மணமக்களிடையே நிகழும் முதல் பாலுறவினால் அவர்கள் ஒருடலாகின்றனா. மணமக்களிடையே நிகழும் பாலுறவுமனித முறையில் நிகழவேண்டும் என்று புதிய திருச்சபைச் சட்டம் வலியுறுத்துவதின் மர்மம் என்ன? பாலுறவு என்பது மணமக்களின் உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடு, அன்பின் உச்சக்கட்டம். என்வே, பாலுறவு மணக்களிடையே முழு அன்புடனும், முழு அறிவுடனும், முழுசம்மதத்துடனும் நிகழ்தல் வேண்டும். தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபச்சாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபச்சாரம் செய்கிறாள்என்பது இயேசுவின் தெளிவான விளக்கம் (காண் மாற்கு 10: 8-12: மத் 19: 5-9) தூய பவுல் அடிகளார் திருமணத்தை ஒரு தனிப்பட்ட, சிறப்பான அழைப்பாக கருதுகிறார்.

5.1.1 இரண்டாம் வத்திகான் சங்கத்தின் கருத்து                     

                2-ஆம் வத்திக்கான் (இன்றை உலகில் திருச்சபை) சங்கமும், மறைந்த திருத்தந்தை 2ம் ஜான்பாலும் சற்று அதிக அழுத்தம் கொடுத்து திருமண பாலியல் உறவின் உண்மையான அர்த்தத்தையும், ஆழத்தையும், அன்பையும் உணர்ந்து திருமணம் என்பது அன்பு வாழ்க்கை, சமூக வாழ்க்கை என்று திருமண உறவின் பரந்த நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரே கிறிஸ்து, ஒரே திருச்சபை, அவ்வாறே ஒரு கணவன் ஒரே மனைவி, திருமண அன்பு எவ்வித விபசாரத்தையும், மண முறிவையும் புறம்பாக்குகிறது: ஆண்டவரால் உறுதிப்படுத்தப் பட்ட திருமணத்தின் ஒருமைப்பண்பு, புனித தன்மை தெளிவாகத் துலங்குகிறது என்று இரண்டாம் வத்திக்கான் சங்கம் திருமணம் மற்றும் குடும்ப மதிப்புகள் என்ற தலைப்பில் அறிக்கையிட்டுள்ளது (இன்றைய உலகில் திருச்சபை, எண் 49 - 52).

5.1.2   மானுட உயிர் (ர்ரஅயயெந  ஏவையந)

1968 ஆம் ஆண்டு {லை 25 ஆம் நாள் திருத்தந்தை ஆறாம் பவுல் உலகமே எதிர்பார்த்திருந்த சுற்றுமடல் ஒன்றை வெளியிட்டார். “மானுடஉயிர்என்ற முதல் சொற்களை அது கொண்டிருந்தால் அப்படியே அது அழைக்கப்படுகிறது.திருமண அன்பு அல்லது தாம்பத்திய அன்பு என்பது ) மனித ஆளுமைத் தன்மை கொண்டது. பசி, தாகம் போன்ற உயிhய்ல பிரச்சனையாகப் பாலியல் உணர்வுகைளப் பார்க்க முடியாது. தாம்பத்திய உறவு மானிட விருப்பாற்றலின் செயல். மனித வாழ்வின் நிறைக்கு இட்டுச் செல்ல வல்லது. அதாவது, கணவனும் மனைவியும் ஒரே இதயமும் ஒரே உயிருமாக மாறி மானுட உறவின் நிறைவை அடையும் செயல் அது. ) இநத அன்பு முழுமையானது. ) இந்த அன்பு உண்மையானது. ஒருவருக்கொருவர் உண்மையுடன் வாழ்ந்திட இது அழைக்கின்றது. ) திருமண அன்பு தனி உரிமைத்தன்மை கொண்டது. ) திருமண அன்பு படைப்பாற்றல் மிக்கது. தம்பதியார் தங்கள் அன்பினால் ஓருடலாகி புதியதோர் உயிரினைப் பிறப்பிக்கின்றார்கள். இந்த விதத்தில் கடவுளின் படைப்புச் செயலில் பங்கேற்க வைக்கின்றது திருமண அன்பு.       

5.2. திருமணத்திற்கு அப்பால் பாலியல் உறவுகள் ஓர் - விமர்சனப்பார்வை

                திருமணமத்திற்கு வெளியே பாலியல் உறவில் எந்த ஒரு கணவனும் மனைவியும் பாலியல் சுகத்திற்காக அல்லது திருமண பாலியல் உறவின் ஆராய்ச்சிக்காக ஈடுபடுவது எப்பொழுதும் திருமண ஒப்பந்தத்தை பாதிக்கும். திருமணத்தின் பிரமாணிக்க தன்மைக்கு எதிரானது என்பது கிறிஸ்துவ கருத்தியல் மட்டும் அல்ல இன்றைய மானுடவியலாரின் கருத்தும் கூட. மனித சமூகத்தில் கற்காலம் முதல் இன்றைய நவின காலம் வரை திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவு இருந்தது என்பது உண்மை. ஆனால் இந்த மறைமுக உண்மையை பற்றி அன்று முதல் இன்று வரை பேசப்படாமல் மனித வாழ்வின் வழக்கமான ஒன்றாக ஏற்றுகொண்டது வருத்திற்குரிய எதார்த்தம்.

                இன்றைய பாலியல் சார்ந்த புரிதல்களை முன்வைத்து உண்மையான திருமண அன்பு, பிரமானிக் தன்மை பற்றிய போதுமான புரிதலை தம்பதிகளுக்கு, பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு, மேலும் திருமண வாழ்வை பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டும் தம்பதிகளுக்கும் கொடுப்பது இன்றைய திருச்சபையின் அரசின் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தலையான, முதன்மையான நோக்கமாக கருதி அதற்கான ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுவது நாம் அனைவரின் கடமை. மனைவியை உண்மையாகவே நேசிக்கும் கணவர்கள் கூட பல்வேறு காரணங்களால் மனைவியோடு பாலியல் உறவில் ஈடுபடமுடியாத பொழுது, ஒரு முறை வாழ்வில் திருமணத்திற்கு வெளியே பாலியல் சுகம் தேடுவது எதார்தம். இவர்களுக்கு திருமண பிராமாணிக்க தன்மையை உணர்த்தவேண்டும். அதாவது   தன் மனைவி மீது உண்மையான அன்பு இருந்தால் எந்த ஒரு கணவனும் அவன் மனைவியை விட்டு பிற பெண்ணிடம் உடலுறவு கொள்ள மாட்டான். அந்த வேதனையை பாலியல் சுகத்தை தன் மனைவியிடம் மட்டுமே அனுபவிப்பவனாக இருக்க வேண்டும். தன் மனைவியின் உடல், உள்ளநிலை அறிந்து தனது பாலியல் சுகத்தை, உணர்ச்சியை உணர்வை மனைவியின் நலனுக்காக, கணவரின் நலனுக்காக தியாகம் செய்யும் தம்பதிகள் மத்தியில் தான் உண்மையான திருமண அன்பு, முழுமை அடையும்.

                திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவில் ஈடுபடுபவரில் பெரும்பாலோனோர் 35 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள். எனவே, இந்த சோதனைகள் உள்ளாடும் பொழுது, ஆன்மீக சார்ந்த பாலியல் சிந்தனை தான் அவர்களை இந்த சோதனையிலிருந்து பாதுகாக்க முடியும். ஆகவே, தம்பதிகளின் பாலியல் உறவுகள் வெறும் உடல் உள்ளம் சார்ந்தது மட்டுமல்லது மாறாக ஆன்மீகம் சார்ந்ததாக இருக்க வேண்டும். 

மனித ஆளுமையின் ஆழமான ஒரு அங்கம் பாலியல்.  இந்த பாலியல்பினைப் பணத்துக்குப் பயன்படுத்துவது மனதுக்கு மிகவும் வேதனை தரக்கூடிய செயல் மட்டும் அல்ல, அவர்களுடைய மனித்தையே இழிவுபடுத்துவதாகும்;. பாலியல் இன்பம் என்பது தாமபத்திய அன்பின் வெளிப்பாட்டு செயலாகவும், இனபெருக்க செயலாகவும் இருக்கின்றது. பரத்தமை அன்பி;ல்லாத, உடல் சார்ந்த இன்பத்தை மட்டும் தருகிறது. எனவே தன் இயல்பிலே இது பெருந்தீமையாக கருதப்படுகிறது.

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு (குறள் 148)

                பிறனுடைய மனைவியை நோக்காத பண்பே உண்மையான ஆண்மை: அதுவே, ஆண்களுக்கு அழகு, அறன், அருமையான ஒழுக்கம். இது வான்புகழ் வள்ளுவர் கண்ட வாழ்வு முறையாகும்.  இதற்கும் மேலாக திருவள்ளுவர் இல்வாழக்கைப் பற்றிய கூரல் இல்வாழ்க்கையின் தத்ததுவமாக அமைகிறது.

அன்பும் அறனும் உடைத்தாயின் - இல்வாழக்கை

பண்பும் பயனும் அது

இதை உணர்ந்த தம்பதிகள் திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவை நாடமாட்டர்கள். தங்கள் திருமண வாழ்வில் என்றும் மகிழ்ச்சியும், மனநிறைவும் பெறுவார்கள் என்பதில் எள்ளவும் ஐயமில்லை.

பொருளடக்கம்

அத்தியாயம்                                                                                                                                                        பக்கம்

1. முன்னுரை………………………………………………………………………… 01

                1.1 பொது முன்னுரைதிருமணமும் பாலியலும்………………..……………………. 01

                1.2. தலைப்பின் அவசியமும் முக்கியதுவம்…………………………..…………………….        02

                1.3 திருமணத்தில் பாலியல் உறவு…………………………………………..……………..   02

                1.4 திருமணத்திற்கு அப்பால் பாலியல் உறவுகள்……………………………….…………    02

                1.5 திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவுகளின் வகைகள்………………….………..     02

2. திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவுகள் பற்றிய வரலாற்றுப் பார்வை.… 04

                2.1 திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவுகள் ஒர் வரலாற்றுப் பார்வை……….……..      04

                                2.1.1 திருமணத்திற்கு அப்பால் பாலியல் உறவுகள் பற்றிய மேலை நாட்டுப்புரிதல்.                04

                                2.1.2 திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவுகள் பற்றி இந்தியப்புரிதல்கள்....... 05

                                2.1.3 திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவுகள் பற்றி தமிழக புரிதல்.…….      05

                                2.1.4 திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவுகள் பற்றிய இன்றைய புரிதல்கள்.. 06

3. திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவுகள் உருவாக முக்கிய காரணிகள்.    07

                3.1 திருமண பாலியல் பரிமாற்றத்தின் பிரச்சனைகள்………………………..……………...    07

                                3.1.1 திருமண பாலியல் உறவில் திருப்தியின்மை………………….………………      07

                                3.1.2 திருமண பாலியல் உறவில் ஒத்துழையாமை…………………………………          07

                3.2 சமூக காரணிகள்……………………………………………………….………………   07

                                3.2.1      சினிமாவின் (தாக்கம்) தொலைக்காட்சியின் தாக்கம்…………….………… 07

                                3.2.2 நீலப்படங்களின் தாக்கம்………………………………………;……………...              08

                                3.2.3 அந்நிய கலாச்சார மோகம்……………………………………………………        08

                                3.2.4 விபச்சாரம்……………………………………………………………………..   08

                                3.2.5 நவின வாழ்க்கை முறையும் இடம் பெயர்வும் (ஆபைசயவழைn)……..…………..             08

                3.3          பொதுவான காரணங்கள்…………………………………………….………………               09

4. திருமணத்திற்கு வெளியே உண்டாகும் பாலியல் உறவுகளின் விளைவுகள்.…  10

                4.1 கணவன் மனைவி இடையே தவறான புரிதல்……………………………..……………   10

                4.2 திருமண வாழ்வு அர்த்தம் இழக்கிறது……………………………………….…………  10

                4.3 திருமணத்தின் பிரமாணிக்க தன்மை உடைகிறது……………………..………………..        10

                4.4. திருமண கட்டு உடைகிறது (மணமுறிவு)…………………………..………………….            10

                4.5 குடும்ப உறவுகள் பாதிக்கப்படுகிறது……………………..…………………………….               11

                4.6 குடும்ப மதிப்பு மற்றும் சுய மரியாதை இழத்தல்………………..……………………..            11

                4.7 குற்ற உணர்வுகளும் அதன் பாதிப்பும்……………………...…………………………..               11

                4.8. பிற விளைவுகள்...…………………………………………..………………………….         11

5. முடிவுரை……………………………………………….…………………………     12

                5.1 திருச்சபையின் பார்வையில்……………………………………………………………..     12

                                5.1.1 இரண்டாம் வத்திகான் சங்கத்தின் கருத்து……………………………………           12

                                5.1.2   மானுட உயிர் (ர்ரஅயயெந  ஏவையந)………………………………………………..           12

5.2. திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவுகள் ஓர் - விமர்சனப்பார்வை…………...………….       12

நூற்பட்டியல்………………………………………………………………………..…                14

 

நூற்பட்டியல்

 

1. புத்தகங்கள்

Podimattum, Felix. Sextual Spirituality. Delhi: Media House, 2001.

அமிர்தம். மலர்கின்ற பொழுதுகளில். சென்னை: புனித அன்னாள் சபை வெளியீடு, 2003.

இருதயராஜ் லு. அன்புடை நெஞ்சங்கள். திருச்சிராப்பள்ளி: தமிழ் இலக்கிய கழகம், 2006.

குழந்தை, hன். பொதுநிலையினர்க்கான அஞ்சல் வழி இறையியல் கல்வி: கிறிஸ்துவ இல்லறவியல். திருச்சிராப்பள்ளி: தமிழ்நாடு பொதுநிலையினர் பணிக்குழு, 2003.

குமமேரசன் மு. பாலியல் சந்தேகங்கள். சென்னை: மருத்துவ அறிவியல் மலர் பதிப்பகம், 2001.

புஷ்பராஜன் . பொதுநிலையினர்க்கான அஞ்சல் வழி இறையியல் கல்வி: குடும்ப வாழ்வில் பொதுநிலையினர். திருச்சிராப்பள்ளி: தமிழ்நாடு பொதுநிலையினர் பணிக்குழு, 2003.

 

2. கட்டுரைகள்

Arrti. “Teenage Sex.” Indian Currents 31 (2007) 26 – 27.

ஆரோக்கியம் வே. “ஊடகங்கள் ஆக்கத்திற்கா அழிவிற்கா.” திருஇருதய தூதன் செப் (2006) 18 -19.

 

 3. வெளிவராத பதிப்புகள்

பீட்டர், ஜாண். “திருமணமும் பாலியமும்.” (வகுப்பு குறிப்புகள்: தூய பவுல் கல்லூரி திருச்சி, 2007).

 

4. இணையதள ஆதாரங்கள்

http://www. ems.com

http:// www. history ems.com

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Fifty steps to a happy marriage life

 50 steps to a happy marriage life  Start each day with a kiss. *    Wear your wedding ring at all times. *    Date once a week. *    ...