பாவம்
1.
பாவம் என்றால் என்ன?
¦ கடவுளின்
கட்டளைகளை மீறுவது, இறைவனின் பார்வையில் தீச்செயல் புரிவது
¦ தன்
நியாயமற்ற ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள இறைவனின் நியதிகளை மீறி தன்னைப் படைத்தவரையே எதிர்த்து
செயல்படுவது
¦ தன்
சுயநலத்திற்காக இயற்கையை நாசப்படுத்துவது,
தனிமனித சுதந்திரத்திலும், உரிமைகளிலும் தலையிடுவது
¦ மனித
உறவுகளையும், ஒற்றுமையையும் சீர்குலைப்பது
இவை
அனைத்தும் பாவம் ஆகும்.
2.
பாவம் என்பதற்கு திருஅவை அளிக்கும் விளக்கங்கள் யாவை?
¦ இறைவன்
தன் அன்பால் மனிதருக்கு வகுத்து அளித்துள்ள இறைத் திட்டத்திற்கு எதிராக எண்ணத்தாலும், சொல்லாலும் செயலாலும் சுய
அறிவோடு வேண்டுமென்றே செயல்படுவது.
¦ இறைவனையே
வெறுக்கும் அளவுக்கு சுயநலத்துடன் வாழ்வது.
¦ பகுத்தறிவுக்கும்,
உண்மைக்கும், மனச்சான்றுக்கும் முறண்பட்டு எண்ணுவது, பேசுவது, செயல்படுவது.
¦ மனித
மாண்பையும் மனுக்குலத்தின் ஒற்றுமையும் சீர்குலைப்பது.
¦ பொருளாசையின்
தூண்டுதலால் இறைவன்மேலும் அடுத்திருப்பவர்கள்
மேலும் கொண்டிருக்க வேண்டிய உண்மையான அன்பை புறக்கணித்தல்.
¦ இத்தகைய
செயல்கள் இறைவனுக்கு எதிரான பாவங்கள் ஏனெனில் இவை இறைவனுக்கு கீழ்ப்படியாமையை வெளிப்படுத்துகிறது. (திபா.51:4).
¦ கிறிஸ்து
பாவத்தின் கொடூரத்தை தம் திருப்பாடுகளில் முழுமையாக வெளிப்படுத்தி தம் தெய்வீக அன்பால்
அதன்மேல் வெற்றிகொண்டார்.
¦ எனவே
கிறிஸ்து தன் தந்தையின் மீட்புத் திட்டத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்ததை நாம் முன் உதாரணமாகக் கொண்டு வாழ வேண்டும்.
3.
பாவங்களின் வகைகள் யாவை?
i.
பாவங்களை பொதுவாக இறைவனுக்கு எதிரானவை
(இறைப்பற்று இல்லாமை, கடவுளை வெறுத்தல், இழித்துரைத்தல்), மனிதருக்கு எதிரானவை (பில்லி
சூனியம், பகைமை, சண்டை, சச்சரவு, பொறாமை, சினம், சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை,
அழுக்காறு,), தனக்கு எதிரானவை (குடிவெறி, களியாட்டம், நெறிகேடு, பேராசை, ) என்று மூன்று
வகைகளாக பிரிக்கலாம்.
ii.
ஆன்மீகம் சார்ந்த, உடல் மற்றும் உலகு சார்ந்த
பாவங்கள் எனவும் பிரிக்கலாம்.
iii.
எண்ணத்தால், சொல்லால், செயலால் செய்தவை
மற்றும் செய்யத்தவறியவை எனவும் வகைப்படுத்தலாம்.
iv.
எதற்கு எதிராக நமது எண்ணம், பேச்சு, செயல்
என்பதைப் பொருத்தும் வகைப்படுத்தலாம்.
உதாரணமாக:
v கடவுளுக்கு
எதிராக
v மனிதருக்கு
எதிராக
v நற்பண்புகளுக்கு
எதிராக
v அளவுக்கு
மீறியதால் அல்லது குறைபாட்டால் (பெருந்தீனி, ஆடம்பர வாழ்க்கை; பிறர் அன்புசெயலில் நாட்டமின்மை)
v இறைவனின்,
திருச்சபையின் கட்டளைகளை மீறுதல்
4.
கனாகனத்தின் (gravity) அடிப்படையில் பாவம் எத்தனை வகைப்படும்? அவைகள் எவ்வாறு
பிரித்துணரப்படுகின்றன?
கனாகனத்தின் அடிப்படையில்
பாவங்கள் சாவான பாவம், அற்பப்பாவம் என இரு வகையாக பிரிக்கப்படுகின்றன.
சாவான பாவம்
v முழு
அறிவுடனும், முழு விருப்பத்துடனும் இறைவனுக்கு எதிராக பெரியதொரு தீச்செயலைச் செய்யும்
போது அது சாவான பாவமாகும்.
v சாவான
பாவம் நம்மில் இருக்கும் அன்பு, இரக்கம் மற்றும்
புனிதத்தை இழக்கச் செய்கிறது.
v திருமுழுக்கு
மற்றும் ஒப்புறவு அருள்சாதனங்கள் வழியாக மட்டும் மன்னிக்கப்படுகிறது.
v நாம்
மனம் திருந்தி இறைவனின் மன்னிப்பை பெறாவிட்டால் முடிவில்லா நரகத்திற்கு நம்மை இட்டுச்செல்கிறது.
அற்பப்பாவம்
Ø கடவுளுடன்
நாம் கொண்டுள்ள நல்லுறவை முறிப்பதில்லை ஆனால் அது இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவை
வலுவிழக்கச் செய்கிறது.
Ø நம்மில்
இருக்கும் அன்பு, இரக்கம் மற்றும் புனிதத்தை
இழக்கச் செய்வதில்லை மாறாக காயப்படுத்துகிறது
Ø முழு
அறிவுடனும் முழு விருப்பத்துடனும் செய்யாத பாவம் அற்பப்பாவமாக் கருதப்படுகிறது.
Ø அற்பப்பாவம்
ஒழுக்க நெறிமுறைகளை சிதைவுற செய்கிறது.
Ø இருப்பினும்
இறைவேண்டல், அன்பு மற்றும் இரக்கச்செயல்கள் அற்பப்பாவத்திலிருந்து நம்மைத் தூய்மைப்படுத்துகின்றன.
5.
ஒரு பாவம் சாவான பாவம்
என்பதற்கான கூறுகள் யாவை?
ஒரு பாவம் சாவான பாவம் என்பதற்கு பல கூறுகளைக் கூறலாம்
Ø பெரியதொரு
தீச்செயலை நோக்கமாகக் கொண்டிருத்தல்
Ø முழு
அறிவோடு செய்வது
Ø முழு
விருப்பத்தோடு செய்வது
Ø இறைவனின்
சட்டங்களை அறிந்திருந்தும், அவற்றை மீறினால் தண்டனை என்ன என்பதை அறிந்திருந்தும் செய்வது
Ø பாவத்திற்காக
மனம் வருந்தி இறைவனின் மன்னிப்பைப் பெறாத நிலையில் நித்திய நரகத்திற்கு இட்டுச்செல்வது.
6.
சாவான பாவத்திற்கு உதாரணமாக எத்தகைய பாவங்களைக்
கூறலாம்?
பத்துக்கட்டளைகளில்
குறிப்பிடப்பட்டுள்ளவைகளையே நல்ல உதாரணமாகக் கூறலாம்.
v உன் "ஆண்டவராகிய கடவுள் நாமே"நம்மைத் தவிர வேறு கடவுள்
இல்லை.
v கடவுளுடைய திருப்பெயரை வீணாக சொல்லாதே.
v கடவுளின் திருநாள்களை புனிதமாக அனுசரி.
v தாய் தந்தையை மதித்து நட.
v கொலை செய்யாதே.
v மோகப்பாவம் செய்யாதே.
v களவு செய்யாதே.
v பொய்ச்சாட்சி சொல்லாதே.
v பிறர் தாரத்தை விரும்பாதே.
v பிறர் உடமையை விரும்பாதே.
v இவைகளை மீறுதல் சாவான பாவங்கள் ஆகும்.
7.
ஒருவர் சாவானபாவத்தை பாவம் என்று அறியாமல்
செய்தால் அந்த சாவான பாவத்திற்கு உரிய தண்டனைக்கு உட்படுவாரா? இல்லையா?
உட்படமாட்டர்.
ஆனால்
கடவுள் தனது கட்டளைகளையும், ஒழுக்க நெறிகளையும், நல்லது எது தீயது எது என பகுத்தறியும்
ஆற்றலையும் மனிதனின் உள்ளத்தில் பொறித்துள்ளார். எனவே இது பாவம் என்று அறியாமலேயே செய்துவிட்டேன்
என்று யாரும் தப்பித்துக்கொள்ள இயலாது.
8.
தீய பண்புகள் யாவை? உதாரணம் தருக?
v இவை
நற்பண்புகளுக்கு எதிரானவை.
v மனச்சான்றை
மழுங்கடித்து தீமையின்பால் நாட்டம் கொள்ளச் செய்து பாவத்தில் விழச் செய்பவை.
v ஏழு
தலையான பாவங்களான தற்பெருமை, சீற்றம், காமவெறி, பேராசை, பெருந்தீனி,பொறாமை,சோம்பல்
ஆகியவற்றோடு தொடர்புடையவை.
9.
தனிநபரின் பாவங்களுக்கும் சமுதாய சீர்கேட்டிற்கும்
உள்ள தொடர்பு யாது? அல்லது எப்போது தனிநபர் பாவங்கள் சமுதாய அமைப்புகளாக மாற்றம் பெறுகின்றன?
¦ தனிநபருடைய
பாவங்கள் சமுதாய சீர்கேட்டிற்கு அடிப்படையாக அமைகின்றன.
¦ எவ்வாரெனில்
இத்தகைய பாவங்களை பலர் செய்யும்போது (ஊழல்,
திருட்டு, சிற்றின்ப நாட்டம், வன்முறை, அநீதி) சமுதாயத்தில் சீர்கேட்டை அல்லது எதிர்மறையான தாக்கங்களை
ஏற்படுத்துகின்றன. பெரும்பாலும் இவை தொடர் நிகழ்வுகளாவே மாறிவிடுகின்றன.
¦ இதன்
விளைவாக (இறைவனின் கட்டளைக்கு முறணான) சில சூழல்களும், செயல்பாடுகளும், நிறுவனங்களும்
சமுதாயத்தின் அங்கமாகவே/ அமைப்புகளாகவே (TASMAC, PUBs)அமைந்து விடுகின்றன.
¦ இவை
அனைத்திற்கும் தனிநபர்களின் பாவங்களே காரணிகளாக இருக்கின்றன.
10. மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கு ஒருவர் பொறுப்பாக
இருக்க முடியுமா?
இல்லை
இருப்பினும் கீழ்கண்ட
காரணங்களுக்காக அவர் பொறுப்பாக இருக்க வாய்ப்புண்டு.
v தவறாக
வழிநடத்துதல்
v இச்சையைத்தூண்டுதல்
v பாவம்
செய்ய உடந்தையாய் இருத்தல்
v பாவம்
செய்ய ஊக்கப்படுத்தல்
v செய்வது
பாவம் என்று எச்சரிக்காமல் இருத்தல்
v பாவத்தில்
இருந்து வெளிவர உதவாமல் இருத்தல்
11. விவிலியத்தில்
பாவங்கள் என குறிப்பிடப்பட்டுளவை யாவை?
பரத்தைமை, விபசாரம்,
கெட்ட நடத்தை, காமவெறி, தகாத பாலுறவ, கட்டுக்கடங்காத பாலுணர்வு, ஒருபால் புணர்ச்சி,
தீய நாட்டம், சிலைவழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை, சச்சரவு, பொறாமை, சினம்,
சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம், நெறிகேடு,
பொல்லாங்கு, பேராசை, கொலை, வஞ்சகம், தீவினை, புறங்கூறுதல், அவதூறு பேசுதல், செருக்கு,
வீம்பு பாராட்டுதல், பெற்றோருக்குக் கீழ்ப்படியாமை; சொல் தவறுதல், இரக்கம் இல்லாமை,
திருட்டு, பழித்து பேசுதல், வெட்கக்கேடான பேச்சு, உலகப்போக்கைப் பின்பற்றுதல், பொய்
பேசுதல், பொய்ச்சான்று கூறுதல், பொய்யாணையிடுதல், தன்னலம், பண ஆசை, வீம்பு, தன்னடக்கமின்மை,
வன்முறை, நன்மையை நாடாமல் தீமையை நாடுவது, துரோகம், கண்மூடித்தனம், தற்பெருமை, இறைப்பற்று இல்லாமை, கடவுளை வெறுத்தல், இழித்துரைத்தல்,
கலா.5:19-21; உரோ.1:28-321கொரி.6:9-10 எபே.5:3-5.
திமோ.1:9-10 மத்.15:19-20, 2திமோ.3:2-5
12. பாவம் எவ்வாறு பெருகுகிறது?
v ஒருவன்
மீண்டும் மீண்டும் பாவம் செய்யும்போது
i. தீமைகளால்
எளிதாக ஈர்க்கப்படுகிறான்
ii. அவனது
மனச்சான்று செயலற்று போகிறது
iii. அவனது
நன்மை தீமை பகுத்துணரும் ஆற்றலை இழக்கச் செய்கிறது.
v இவ்வாறு
பாவம் நாளடைவில் ஓருவரின் இயல்பாக மாறிவிடுகிறது.
இதன் விளைவாக
பாவம்
i.
அடுத்ததுத்து பாவம் செய்ய வழிவகுக்கிறது.
ii.
பாவம் செய்வதில் ஆவலாகவும், உறுதியாகவும்
இருக்கச் செய்கிறது
இதுவே பாவம் பெருகுவதற்கு காரணமாகிறது.
13. பாவத்தின்
விளைவுகள் யாவை?
பாவத்தில்
ஈடுபடுவோர் இறையாட்சியை உரிமைப் பேறாக அடைவதில்லை
பாவிகள்
சாவுக்குரியவர்கள்.
பாவிகள்
மற்றவர்களையும் பாவத்திற்கு இட்டுச்செல்கிறார்கள்.
பாவங்கள்
கடவுளின் சினத்தை வரவழைக்கின்றன.
14. ஒருவர்
தான் பாவம் செய்துவிட்டோம் என்பதை எப்போது உணர்கிறார்?
ஒருவரின் மனச்சான்று
அவர் இறைவனுக்கு எதிராக பாவம் செய்துவிட்டார் எனச் சுட்டிக்காட்டும் போதும் மேலும்
தனது பாவத்தை அறிக்கையிட்டு மனம் திரும்பி இறைவனிடம் திரும்பிச்செல்ல தூண்டும்போதும் அவர் தான் பாவம் செய்ததை உணர்கிறார். [1797, 1848]
15. ஒரு
பாவி ஏன் கடவுளிடம் திரும்பிவந்து அவரின் மன்னிப்பை இறைஞ்ச வேண்டும்?
v பாவம்
நம்மிடமுள்ள புனிதத்தை இழக்கச்செய்து இறைவனின் அருளைப்பெற தகுதியற்றவர்களாக ஆக்குகிறது.
v கடவுள்
அனைத்து நன்மைகளுக்கும் ஊற்றாகவும் வாய்க்காளாகவும் உள்ளார். பாவம் இறைவனுக்கு எதிரானது
என்பதால் அது அவரிடமிருந்து நம்மைப் பிரிக்கிறது. எனவே அவரது அன்பையும் பரிவையும் மீண்டும்
பெற செய்த பாவத்திற்கு வருந்தி அதை விலக்கி
அவரோடு ஒப்புறவாக வேண்டியது அவசியமாகிறது. [1847]
16. இறைவன்
இரக்கம் நிறைந்தவர் என்பதை நாம் எவ்வாறு அறிகிறோம்?
Ø இயேசு
பாவிகளின்மீது கொண்டுள்ள பரிவை உணர்த்துவதே நற்செய்தியின் மையக்கருத்து.
Ø திருவிவிலியத்தின்
பல பகுதிகள் இறைவன் இரக்கம் நிறைந்தவர் என்பதைக் காட்டுகின்றன. ஊதாரிமைந்தன் உவமை அவரின் இரக்கத்தை முழுமையாக உணர்த்துவதாக
அமைந்துள்ளது.
Ø பாசமிகு
தந்தை தன் ஊதாரிமைந்தன் தன் தவறை உணர்ந்து திரும்பிவந்தபோது நிபந்தனையின்றி மன்னித்து ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் அதற்காக விருந்தளித்து தன் மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறார்.
Ø இறைவனின்
இரக்கத்தை எந்த சூழலிலும் சந்தேகிக்கக் கூடாது என்பதே இந்த உவமை நமக்குக் கற்றுத்தரும்
பாடம்.
Ø இயேசுவின்
இந்த பரிவிரக்கத்தின் முழுமைதான் மீட்பின் அருட்சாதனமாக விளங்கும் நற்கருணை.
[1846, 1870]
17.
எவ்வாறு நற்செய்தி இறைவனுடைய இரக்கத்தின்
வெளிப்பாடாக உள்ளது?
i.
வானதூதர் தூய யோசேப்புக்கு சொல்லியது
“அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து
மீட்பார். மத்.1:21”
ii.
இறுதி இரவு உணவின் போதும் இயேசு கூறுவதும்
இதுவே- “ஏனெனில் இது எனது உடன்படிக்கையின்
இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்.
iii.
மத்:26:28” மீட்பின் அருள்சாதனமாகிய நற்கருணை கடவுளின் பேரிரக்கத்தின் அடையாளமாக விளங்குகிறது.
iv.
இவை அனைத்தும் நமக்கு உணர்த்துவது இறைவன்
நம் மீது அளவுகடந்த இரக்கம் கொண்டுள்ளார் என்பதே.
v.
நற்செய்தி என்பது இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவன் பாவிகள் மீது அளவுகடந்த இரக்கம் கொண்டுள்ளார்
என்பதை வெளிப்படுத்துவதே.
18.
“பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி
வழிந்தது(உரோ.5:20) என்பதன் அர்த்தம் யாது?
i. இறைவன்
நமது சம்மதம் இல்லாமல் நம்மைப் படைத்தார்;
அனால் நமது அனுமதி அல்லது விருப்பம் இல்லாமல் நம்மை மீட்க இயலாது.
ii.
எனவே அவரது இரக்கத்தைப் பெற நாம் பாவிகள்
என்பதை உணர்ந்து முழுமனதோடு ஏற்று அறிக்கையிடவேண்டும். “பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால்
நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது. மாறாக நம் பாவங்களை நாம்
ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத்
தூய்மைப்படுத்துவார்”. 1யோவா.1:8-9.
iii. இந்த
இறைவனின் இரக்கத்தைத்தான் திருத்தூதர் பவுல்
உரோ.5:20ல் “ஆனால் பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது.” என்று குறிப்பிடுகிறார்.
19.
கடவுளின் இரக்கத்தை பெற நாம் செய்ய வேண்டியது என்ன?
¦ இறைவன்
தனது வார்த்தையாலும், ஆவியின் ஒளியாலும் பாவத்தின் கனாகனத்தை நாம் உணரச் செய்கிறார்.
¦ இந்த
உணர்வே பாவ மன்னிப்பைப் பெற நம்மைத் தகுதியுள்ளவர்களாக ஆக்குகிறது.
¦ எனவே
நாம் நமது பாவங்களையும் அதன் கனாகனத்தையும் உணர இறைவனிடம் தூய ஆவியாரின் ஒளிக்காக செபிக்கவேண்டும்
.
20.
சாவான பாவம் செய்த ஒருவர் பாவமன்னிப்பைப் பெற்று
இறைவனோடு ஒப்புறவாக செய்யவேண்டியது என்ன?
¦ தான்
செய்தது சாவான பாவம் என்பதை அறிய வேண்டும். அதனால் தனக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு
முறிந்துவிட்டதை உணர வேண்டும்.
¦ தான்
பாவியென்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். இனிமேல் இத்தகைய பாவத்தை செய்யமாட்டேன் என்ற தீர்மானம்
மேற்கொள்ளவேண்டும்.
¦ ஒப்புறவு
அருள்சாதனத்தில் தனது பாவத்தை குருவிடம் அறிக்கையிட்டு பாவமன்னிப்பை இறைஞ்சவேண்டும்.
¦ குருவானவர்
அளிக்கும் பாவ பரிகாரத்தை நிறைவேற்ற வேண்டும்.
”கத்தோலிக்க
திருஅவையில் பாவமன்னிப்பு இல்லையென்றால் நமது நித்திய பேரின்ப வாழ்வுக்கு எதிர்நோக்கோ
உத்திரவாதமோ இல்லை. எனவே திருஅவை வழியாக இப்பெரும்கொடையை நமக்கு அளித்துவரும் இறைவனுக்கு
நன்றி கூறுவோம்.” புனித அகுஸ்தினார்.
21. பாவத்தைப்
பற்றிய திருஅவையின் கோட்பாடுகளும் கிறிஸ்தவர்கள் அறிந்துகொள்ளவேண்டிய படிப்பினைகளும்
யாவை?
Ø பாவம்
என்பது இறைவனின் கட்டளைகளுக்கு எதிராக எண்ணுவது, பேசுவது, ஆசைப்படுவது, செயல்படுவது
Ø பாவம்
என்பது இறைவன் நம் உள்ளத்தில் பதித்துவைத்துள்ள மனச்சான்று மற்றும் பகுத்தறியும் ஆற்றலுக்கு
எதிராக செயல்படுவது
Ø மனிதன்
தன் இதயத்தை தனது சுயநலத்திற்காகவும், விரும்பியதைஅடையவும் கடினப்படுத்திக் கொள்வதின்
விளைவுதான் பாவம்.
Ø பாவம்
மனித நேயத்தையும், மனித ஒற்றுமையையும், சமூகத்தையும் சிதைக்க வல்லது.
Ø பாவம்
செய்வதின் நோக்கமே பாவத்தின் கனாகனத்தை மதிப்பிடும் முதன்மைக் காரணியாக உள்ளது.
Ø முழு
அறிவுடனும், முழு விருப்பத்துடனும் இறைவனுக்கு எதிராக பெரியதொரு தீச்செயலைச் செய்யும்
போது அது சாவான பாவமாகும். இறைவனின் மன்னிப்பைப்பெறாமல் சாவானபாவத்தோடு மரித்தால் நித்திய
நரகத்தைத் தண்டனையாகப் பெறுவோம்.
Ø அற்பப்பாவம்
கடவுளுடன் நாம் கொண்டுள்ள நல்லுறவை முறிப்பதில்லை
ஆனால் அது இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவை வலுவிழக்கச் செய்கிறது. இறைவேண்டல், அன்பு
மற்றும் இரக்கச்செயல்கள் அற்பப்பாவத்திலிருந்து நம்மைத் தூய்மைப் படுத்துகின்றன.
Ø கடவுளின் இரக்கத்தையும் பாவமன்னிப்பையும் பெற நாம் நம்
பாவங்களை ஏற்றுக்கொண்டு அவற்றிற்காக மனம் வருந்தி, அவற்றை வெளிப்படுத்தி, ஒப்புறவு
அருள்சாதனத்தின் வழியாக நமது பாவங்களிலிருந்து தூய்மை அடையமுடியும்.
Ø (Rom
11:32-33). ஏனெனில், அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் அனைவரையும் கீழ்ப்படியாமைக்கு
உட்படுத்தினார். கடவுளின் அருள் செல்வம் எத்துணை மிகுதியானது! அவருடைய ஞானமும் அறிவும்
எத்துணை ஆழமானவை! அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு
அப்பாற்பட்டவை!
இறைவன் நமது பாவங்களை
மன்னிப்பார் என்ற நம்பிக்கையை நாம் எவ்வாறு
பெற்றுள்ளோம்?
i. நமது பாவங்களை மன்னிக்க
தனக்கு அதிகாரம் உண்டு என்பதை இயேசுவே உறுதியாக வெளிப்படுத்தியுள்ளார். “மண்ணுலகில்
பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்”. மத்.9:6; மாற்.2:10;
லூக்.5:24.
ii. நமது பாவங்களிலிருந்து
நம்மை மீட்க கிறிஸ்து தம் தந்தைக்கு தம்மையே
பாவ பரிகார பலியாகக் கொடுத்துள்ளார். “அம்மகனால்தான்
நாம் பாவமன்னிப்பாகிய மீட்பைப் பெறுகிறோம். கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு
ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்; இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப்
பெறுகிறோம் கொலோ1:14; எபே.1:7.
iii. திருஅவை அளிக்கும் திருவருள்
சாதனங்கள் வழியாக இறைவன் அருளும் பாவமன்னிப்பை
பெறுகிறோம் என்பதில் ஐயம் இல்லை.
நமது பாவங்களை மன்னிக்குமாறு
நாம் வேண்டும்போது நமது மன நிலை எவ்வாறு இருக்க வேண்டும்?
நான் செய்த பாவங்களுக்கு இறைவனின்
மன்னிப்பை வேண்டும் முன்
i. கட்டிக்கொண்ட பாவங்களால்
நான் கடவுள் வெறுக்கத்தக்க பரிதாபமான நிலையில் இருக்கிறேன் என்பதை மனமார உணர்ந்து அறிக்கையிட
வேண்டும்.
ii. எனது பாவங்களில் இருந்து
மன்னிப்புப் பெற இறைவனின் பேரிரக்கத்தை கெஞ்சி மன்றாட வேண்டும்.
iii. நான் கடவுள்முன் நிற்கக்கூட தகுதியற்ற பாவி என்ற மனநிலையைக் கொண்டிருக்கவேண்டும்.
Ä
‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம்
செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்’ என தாழ்ச்சியோடு அறிக்கையிட்ட
ஊதாரி மைந்தனின் மனநிலையைக் கொண்டிருக்கவேண்டும்.லூக்.15:18
Ä
“தொலையில்
நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு,
‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்று வேண்டிய வரிதண்டுபவரின் மனநிலையைக்
கொண்டிருக்கவேண்டும். லூக்.18:13.
“எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பதுபோல”
என்ற முன் நிபந்தனையை ஏன் இயேசு
இந்த மன்றாட்டில் வைத்துள்ளார்?
Ä மனித இயல்பில் நமக்குத் தீங்கு இழைத்தவர்களையும் துன்பம்
வருவித்தவர்களையும் மன்னிப்பது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
Ä இத்தகைய தருணங்களில் நாம் இயேசுவை மனதில் கொண்டுவர வேண்டும். தனக்கு மரண தண்டனை பெற்றுத்தந்து, சித்திரவதை செய்து, சிலுவையில் அறைந்து கொடூரமாகக் கொன்றவர்களையும் மன்னிக்குமாறு தன் தந்தையிடம்
மன்றாடியதை நினைவுக்குக் கொண்டுவர வேண்டும்.
Ä நமது
தகுதியற்ற நிலையிலும் நம்மை அன்பு செய்து பராமரித்து வரும் இறைவனை நினைக்க வேண்டும்.
Ä நமக்கு எதிராகக் குற்றம் செய்வோரை மன்னிப்பது கிறிஸ்தவ மதிப்பீடுகளின் சிகரம்
ஆகும்.
Ä நாம் அடுத்திருப்பவர்கள்மேல் இரக்கம் கொள்ளாமல், ஒருவரை ஒருவர் மன்னிக்காமல்
இறைவனின் இரக்கத்தையும் மன்னிப்பையும் கேட்பதற்கு நமக்கு என்ன தகுதி இருக்கிறது?
Ä நாம் அடுத்திருப்பவர் மேல் இரக்கம் கொள்வதும் மன்னிப்பதும், இறைவன் நம்மேல் இரக்கம் கொள்வதும் மன்னிப்பதும் பிரித்துப் பார்க்கவே இயலாதது. ஒன்று நடந்தால்தான் மற்றொன்று நடக்கும்.
Ä எனவேதான் “எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை
மன்னியும் “ என்று செபிக்க இயேசு கற்றுக்கொடுத்தார்.
Ä மனித இயல்பில் இது இயலாது எனினும் கிறிஸ்துவோடு ஒன்றித்திருப்பதாலும், தூய ஆவியாரின்
துணையோடும் நமக்கு எதிராகக் குற்றம் செய்வோரை மன்னிப்பது சாத்தியமே.கலா. 5:25. [2838-2845,
2862]
மலைப் பொழிவில் இந்த கருத்தை இயேசு முன்வைப்பதிலிருந்து இதன் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளமுடியும். "[138] நாம் நமக்கு எதிராகக் குற்றம் செய்வோரை மன்னிக்கும்போதுதான் இறைவனின் பரிவிரக்கத்தைப் பெறுகிறோம்.
Ä மனித இயல்பில் நமக்குத் தீங்கு இழைத்தவர்களையும் துன்பம்
வருவித்தவர்களையும் மன்னிப்பது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
Ä இத்தகைய தருணங்களில் நாம் இயேசுவை மனதில் கொண்டுவர வேண்டும். தனக்கு மரண தண்டனை பெற்றுத்தந்து, சித்திரவதை செய்து, சிலுவையில் அறைந்து கொடூரமாகக் கொன்றவர்களையும் மன்னிக்குமாறு தன் தந்தையிடம்
மன்றாடியதை நினைவுக்குக் கொண்டுவர வேண்டும்.
Ä நமது
தகுதியற்ற நிலையிலும் நம்மை அன்பு செய்து பராமரித்து வரும் இறைவனை நினைக்க வேண்டும்.
Ä நாம் அடுத்திருப்பவர்கள்மேல் இரக்கம் கொள்ளாமல், ஒருவரை ஒருவர் மன்னிக்காமல்
இறைவனின் இரக்கத்தையும் மன்னிப்பையும் கேட்பதற்கு நமக்கு என்ன தகுதி இருக்கிறது?
Ä நாம் அடுத்திருப்பவர் மேல் இரக்கம் கொள்வதும் மன்னிப்பதும், இறைவன் நம்மேல் இரக்கம் கொள்வதும் மன்னிப்பதும் பிரித்துப் பார்க்கவே இயலாதது. ஒன்று நடந்தால்தான் மற்றொன்று நடக்கும்.
Ä எனவேதான் “எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை
மன்னியும் “ என்று செபிக்க இயேசு கற்றுக்கொடுத்தார். [2838-2845, 2862]
Ä நமது வாழ்வின் ஒவ்வொரு நொடியும் உலக (அலகையின்) மாய கவர்ச்சிகளால் கடவுள் நம்மைப் படைத்ததின் நோக்கத்தை மறந்து, அவரின் கட்டளைகளை அசட்டை செய்து, பாவத்தை கட்டிக்கொள்ளும் சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
Ä இயேசுவே இவ்வுலகில் வாழ்ந்தபோது மனித சுபாவத்தில் அலகையால் சோதிக்கப்பட்டார். எனவே மனித பலவினம் எத்தகையது என்பதை அறிவார். மனித பலத்தால்மட்டும்
அவற்றை மேற்கொள்ள முடியாது என்பதையும் அறிந்துள்ளார்.
Ä எனவேதான்
அவர் நமக்குக் கொடுத்த செபத்தில் பவங்களை கட்டிக்கொள்ளும் சூழல்களில் இறைவனை நாட அவரின்
பலத்தை இறைஞ்ச கற்பித்துள்ளார்.
Ä எனவேதான் அனைத்து பாவ சூழ்நிலைகளிருந்தும் நம்மை காக்கும்படி இறைவனை வேண்டுகிறோம். [2846-2849]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக