யோவான் நற்செய்தி
1. கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் என்ன?
2. இயேசுவிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் என்ன உரிமை அளித்தார்?
3. இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டவைகள் யாவை?
4. "மெசியா" என்பதன் பொருள என்ன?
5. நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, அவரைக் குறித்துக் கூறியது என்ன?
6. யாரைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை?
7. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் …………………… வருகிறார்கள்.
8. யாக்கோபு தம் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே இருந்த ஊர் எது?
9. கப்பர்நாகுமில் அரச அலுவலரின் மகனை பிழைக்கச் செய்தது இயேசுவின் எத்தனையாவது அருள் அடையாளம்?
10. எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் ஐந்து மண்டபங்கள் கொண்ட குளத்தின் பெயர் என்ன?
11. "இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?" என்று கூறியவர் யார்?
12. மக்கள் இயேசுவை நோக்கி, "எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டதற்கு இயேசு கூறிய பதில் என்ன?
13. உண்மையான உணவு;; உண்மையான பானம் எது?
14. வாழ்வு தருவது எது?
15. யாரைக் குறித்து இயேசு “உங்களுள் ஒருவன் அலகையாய் இருக்கிறான்” என்று கூறினார்?
16. எங்கிருந்து மெசியா வருவார் என்று மறைநூல் கூறுகிறது?
17. "ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?" என்று கேட்டவர் யார்?
18. …………………………… நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்.
19. யார் பிறப்பதற்கு முன்பே நான்; இருக்கிறேன் என்று இயேசு குறிப்பிடுகிறார்?
20. தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவருடைய கண்களில் பூசி, எந்த குளத்தில் போய் கழுவுமாறு இயேசு கூறினார்?
21. சிலோவாம் என்ற வார்த்தையின் பொருள் என்ன?
22. ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் யார்?
23. வாயில் வழியாக நுழைபவர் யார்?
24. யார் தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள?
25. இலாசர் எந்த ஊரில் வாழ்ந்து வந்தார்?
26. இலாசரின் சகோதரிகள் யார்?
27. "நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்" – யாருடைய கூற்று?
28. இலாசரைக் கல்லறையில் வைத்து எத்தனை நாள் ஆகியிருந்தது?
29. பெத்தானியா எருசலேமுக்கு அருகில் எத்தனை கிலோ மீட்டர் தொலையில் இருந்தது?
30. "ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்" – யாருடைய கூற்று?
31. “இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது” – யாருடைய கூற்று?
32. மரியா இயேசுவின் காலடிகளில் பூசிய தைலத்தின் பெயர் என்ன?
33. குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு இயேசுவை எதிர்கொண்டுபோய், என்ன சொல்லி ஆர்ப்பரித்தனர்?
34. பிலிப்பிடம் "ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்" என்று கேட்டவர்கள் யார்?
35. “தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும்" என்று இயேசு கூறியபொழுது வானிலிருந்து ஒலித்தது என்ன?
36. "ஆண்டவரே, நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்? ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?" என்று எந்த இறைவாக்கினர் கூறியிருந்தார்?
37. இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் எண்ணத்தை அலகை யாருடைய உள்ளத்தில் எழச்செய்திருந்தது?
38. இயேசு கொடுத்த புதிய கட்டளை எது?
39. "ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்" – யாருடைய கூற்று?
40. எதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை?
41. இயேசு அனுப்பும் துணையாளர் வந்து யாவற்றை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துகள் தவறானவை என எடுத்துக்காட்டுவார்?
42. இயேசு தம் சீடர்களோடு ……………………..என்னும் நீரோடையைக் கடந்து சென்றார்?
43. தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவரது வலக்காதை வெட்டிய சீடர் யார்?
44. காது வெட்டப்பட்ட தலைமைக் குருவின் பணியாளர் பெயர் என்ன?
45. தலைமைக் குருவாய் இருந்த கயபாவின் மாமனார் பெயர் என்ன?
46. "உண்மையா? அது என்ன?" என்று இயேசுவிடம் கேட்டவர் பெயர் என்ன?
47. இயேசு முள் முடியும் செந்நிற மேலுடையும் அணிந்தவராய் வெளியே வந்தபொழுது பிலாத்து கூறிய கூற்று என்ன?
48. "மண்டை ஓட்டு இடம்" என்னுமிடத்திற்கு எபிரேய மொழிப் பெயர் என்ன?
49. இயேசு இறுதிய என்ன கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்?
50. “ரபூனி" என்ற எபிரேயச் சொல்லின் பொருள் என்ன?