லூக்கா நற்செய்தி வினாடி வினா

 லூக்கா நற்செய்தி

1. லூக்கா நற்செய்தி யாருக்கு கடிதமாக எழுதப்படுகிறது?

2. அபியா வகுப்பைச் சேர்ந்த குருவின் பெயர் என்ன?

3. எலிசபெத்து யாருடைய வழி வந்தவர்?

4. செக்கரியாவிற்கு தோன்றி தூதர் பெயர் என்ன?

5. எம்மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.


6. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி கூறிய வாழ்த்து என்ன?

7. மரியாளிடமிருந்து பிறக்கும் குழந்தை எந்த குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார்?

8. மரியா புறப்பட்டு எந்த மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்?

9. செக்கரியா எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, …………………………..என்று எழுதினார்?

10. தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்த அரசர் யார்?

11. சிரிய நாட்டில் யார் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது?

12. யோசேப்பு மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து எந்த ஊருக்குச் சென்றார்?


13. ";ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை" என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தவர் யார்?


14. மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆன இறைவாக்கினர் யார்?

15. அன்னா யாருடைய மகள்? அவர் எந்த குலத்தைச் சார்ந்தவர்?

16. இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எங்குப் போவார்கள்?

17. திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த 15ஆம் ஆண்டில், யார் யூதேயாவின் ஆளுநராக இருந்தார்?

18. இத்துரேயா, திரக்கோனித்துப் பகுதிகளுக்கு ஆளுநராக இருந்தவர் யார்?

19. திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில் தலைமைக் குருக்களாக இருந்தவர்யார்?

20. யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிக்கு சென்று யோவான் பறைசாற்றி வந்தது என்ன?

21. வரி தண்டுவோர் திருமுழுக்குப் பெற செய்ய வேண்டியது என்ன?

22. படைவீரர் திருமுழுக்குப் பெற செய்ய வேண்டியது என்ன?

23. இயேசு தனது பணியை ஆரம்பிக்கும்போது அவரது வயது என்ன?

24. ஆதாம் யாரின் மகன்?

25. ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று இயேசு வாசிக்க எழுந்தபோது எந்த இறைவாக்கினருடைய சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது?


26. சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெணண்ணிடம் அனுப்பப்பட்ட இறைவாக்கினர் யார்?

27. எலிசாவால் குணமடைந்த நபர் யார்?

28. இயேசு யாருடைய படகில் ஏறி மக்களுக்கு கற்பித்தார்?

29. சீமோனுடைய பங்காளிகள் யார்?

30. தேர்ச்சி பெற்ற எவரும் யாரைப் போலிருப்பர்?

31. நூற்றுவர் தலைவர் தம் பணியாளரை குணப்படுத்த இயேசுவை அழைத்துவர யாரை அனுப்பினார்?

32. யோவானைவிட பெரியவர் யாரென்று இயேசு குறிப்பிடுகிறார்?

33. மகதலா மரியாவிடமிருந்து எத்தனை பேய்கள் விரட்டப்பட்டன?

34. இயேசுவின் காலில் விழுந்து தம்முடைய வீட்டிற்கு வருமாறு வேண்டினத் தொழுகைக்கூடத் தலைவர் யார்?


35. “நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்?” என்று சீடர்களிடம் இயேசு கேட்டபொழுது பேதுரு மறுமொழியாக கூறியது என்ன?


36. தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையைவிட எந்நகருக்கு கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும்?


37. நல்ல சமாரியன் உவமையில், கள்வர் கையில் அகப்பட்ட மனிதர் எருசலேமிலிருந்து எந்த நகருக்கு சென்று கொண்டிருந்தார்?


38. விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் ………………… கொடுப்பது உறுதி?

39. யாருடைய அடையாளத்தைப் போன்று மானிட மகனும் அடையாளமாய் இருப்பார்?

40. சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர் யார்?

41. சீலோவாமிலே கோபுரம் விழுந்து எத்தனைப் பேரைக் கொன்றது?

42. இளைய மகன் மனம்மாறி திரும்பி வந்தபொழுது தந்தை அவனுக்கு கொடுத்தது என்ன?

43. திருச்சட்டமும் இறைவாக்கினர்களும் யாருடைய காலம் வரையிலும் தான்?

44. யாருடைய காலத்தில் நடந்ததுபோலவே மானிட மகனுடைய காலத்திலும் நடக்கும்?

45. வரிதண்டுவோருக்குத் தலைவராயிருந்த செல்வர் பெயர் யாது?

46. எந்த ஊர்களை இயேசு நெருங்கி வந்தபோது இரு சீடர்களை அனுப்பி கழுதை குட்டியை அவிழ்த்துக் கொண்டு வரச்சொன்னார்?


47. பாஸகா விழாவிற்கு மற்றொரு பெயர் என்ன?

48. பாஸ்கா விருந்துண்ண் ஏற்பாடு செய்ய இயேசு அனுப்பிய இரண்டு சீடர்கள் யார்?

49. பகைவராய் இருந்த யார் இயேசுவின் விசாரணையின்போது நண்பர்களாயினர்?

50. எருசலேமிலிருந்து எம்மாவிற்கு உள்ள தூரம் எவ்வளவு?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Fifty steps to a happy marriage life

 50 steps to a happy marriage life  Start each day with a kiss. *    Wear your wedding ring at all times. *    Date once a week. *    ...