திருமணத்திற்கு முன் தயாரிப்பு வகுப்பு வேலை செய்யும் இளையோருக்கு

 திருமணத்திற்கு முன் தயாரிப்பு வகுப்பு

Call Center ல் வேலை செய்யும் இளையோருக்கு


1. இந்த இளையோர் அனுபவிக்கும் நன்மைகள்


கை நிறைய பணம்

சுதந்திரமாக வாழும் நிலை (யாரையும் சார்ந்திராத நிலை)

நாகரிகமான வாழ்வு (ஆடை, உணவு)

சமுதாயத்தில் மதிப்பு

அதிக நண்பர்கள் 


2. சந்திக்கும் இடர்கள்


1. மன அழுத்தம்

தூக்கமின்மையின் காரணமாக

வாடிக்கையாளர்களின் தேவையற்ற மற்றும் அநாகரிகமான பேச்சுக்களினால் 


2. வேறுபட்ட வேலை நேரம்

எல்லோரும் சந்தோஷமாக வாழும் நேரங்களில் - உறக்கம்.

மற்றவர்கள் உறங்கும் நேரத்தில் - உழைப்பு

எந்திரமயமான வாழ்க்கை.

உறவினர்களோடு சகஜமாக பழகமுடியாத நிலை.


3. பாதுகாப்பற்ற சூழல்

இளைஞர்களுக்கு அவ்வளவாக இல்லை. ஆனால் 

இளம்பெண்களுக்கு பாதுகாப்பற்ற சுழல்


4. உடல்நிலை பாதிப்புக்கள்

முதுகு வலி, கண் பார்வை மங்குதல், உறக்கமற்ற நிலை, பசியின்மை, ஜீரணமாக நிலை, உடல் எடை குறைவு 

பெண்களுக்கு – மாதவிடை விலக்கு தள்ளி போதல்


5. சமுதாயத்தில் தவறானபுரிதல் 

போதைக்கு அடிமை

நடத்தையின் மீது தவறான புரிதல் 


3. திருமணத்திற்கு பிறகு நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகள்ஃசவால்கள்

சந்தேகம் - பல நண்பர்கள், தேவையற்ற சந்தேகம்



திருமணத்தை அடுத்த 

உடலுறவு - மனைவிஃகணவன் சந்தேகம் - சந்தோஷமின்மை

அதைத் தேடி வெளியே செல்லும் சூழல்



கருத்தடை, கருச்சிதைவு



குழந்தை வளர்ப்பதில் பிரச்சினை

4. இந்தப் பின்னனியில் திருமணம் என்றால் என்ன? 

அது பற்றிய உங்கள் புரிதல் என்ன?


திருமணம் என்றால் என்ன? என்னும் கேள்விக்கு ஒரு மாணவன் அளித்த பதில்


ஒரு பெண்ணும் ஒரு மாப்பிள்ளையும் பங்குத்தந்தையின் முன் முழந்தாளிட்டு தாங்கள் இருவரும் கல்யாணம் செய்து கொள்வதாக விருப்பம் தெரிவிக்கின்றனர். பங்குத்தந்தை அவர்கள் இருவருடைய கைகளையும் இணைத்து, பிதாவே, இவர்களை மன்னியும்; ஏனெனில் இவர்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கின்றனர். என்று சொல்லி அவர்கள் கைகளில் தீர்த்தம் தெளிக்கிறார். 


இது ஒரு வேடிக்கையான பதில். ஆனால் உண்மையான பதில். 


திருமண வாழ்வில் நுழையும் பலர் அவ்வாழ்வு என்னவென்று அறியாமலே அதில் நுழைகின்றனர். அதன் விளைவு திருமணம் டுழஎந ல் ஆரம்பித்து ளுவழஎந ல் முடிகின்றது.


5. திருமணம் ஓர் உடன்படிக்கை


திருமணம் என்றால் அது ஒரு உடன்படிக்கை. வழக்கறிஞர் சொல்வது போன்று திருமணம் ஒரு ஒப்பந்தம் கிடையாது. ஒப்பந்தம் பொருட்களைச் சார்ந்தது. ஆனால், உடன்படிக்கை ஆட்களைச் சார்ந்தது. 


5.1 பழைய ஏற்பாடு 


விவிலியம் காட்டும் இறைவன் உடன்படிக்கையின் இறைவன்; இறைவன் இஸ்ரயேல் மக்களோடு உடன்படிக்கை செய்துகொண்டார். இந்த உடன்படிக்கையை கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயுள்ள உறவிற்கு ஒப்பிட்டுள்ளார் இறைவாக்கினர் ஓசே (2:19-20)


“முடிவில்லாக் காலத்திற்கும் உன்னை மணமுடிப்போம், நேர்மையிலும் நீதியிலும் நிலையான அன்பிலும் இரக்கத்திலும் உன்னை மணந்து கொள்வோம். பிரமாணிக்கத்துடன் நாம் உன்னை மணந்து கொள்வோம். நாமே ஆண்டவர் என்பதை நீயும் அறிந்துகொள்வாய்.”


உடன்படிக்கையின் அடிப்படைக் கூறுகளான அன்பும், பிரமாணிக்கமும் திருமணத்தில் இருப்பதால், திருமணம் ஓர் உடன்படிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.


5.2 புதிய ஏற்பாடு


புனித சின்னப்பர் எபேசியருக்கு (5:25-32) எழுதிய திருமுகத்தில், கிறிஸ்துவை மணமகனாகவும், திருச்சபையை மணமகளாகவும் வர்ணித்து, கிறிஸ்தவ மணமக்களிடையே உள்ள உறவு கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்குமிடையேயுள்ள புதிய, நித்திய உடன்படிக்கை அன்பின் மாதிரியில் ஊன்றி, அந்த உடன்படிக்கை அன்பைப் பிரதிபலிக்க வேண்டுமென்கிறார்.



5.3. இரண்டாம் வத்திக்கான் சங்கம்


“பல முகப்புக் கூறுள்ள இந்த அன்பு (திருமண அன்பு) இறை அன்பின் ஊற்றிலிருந்து பிறக்கிறது; நம் ஆண்டவர் கிறிஸ்து திருச்சபையுடன் கொண்டுள்ள ஒன்றிப்பின் மாதிரியில் அமைக்கப்பட்டிருக்கிறது; எனவே, இந்த அன்பின் மேல் கிறிஸ்து அறவற்ற முறையில் ஆசீர் பொழிந்துள்ளார். பிரமாணிக்கத்தையும் அன்பையும் அடிப்படையாகக் கொண்ட உடன்படிக்கையோடு கடவுள் முற்காலத்தில் தம் மக்களைச் சந்தித்தார். அதுபோலவே, இப்போது மனிதரின் மீட்பர், திருச்சபையின் மணமகன், திருமணம் என்கிற அருள் அடையாளத்தின் வழியாக கிறிஸ்தவ மண மக்களைச் சந்திக்க வருகிறார்” (இ.உ.தி. 48)


திருமண அன்பு பழைய ஏற்பாட்டில் இறைவனுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையேயுள்ள உடன்படிக்கையையும், புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவுக்கும் இடையேயுள்ள உடன்படிக்கையையும் வெளிப்படுத்துகின்றது என்று அறுதியிட்டுக் கூறுகின்றது இரண்டாம் வத்திக்கான் சங்கம்.


5.4 திருச்சபைச் சட்டம்


“திருமண உடன்படிக்கையின் மூலம் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தங்களிடையே வாழ்நாள் முழுவதற்குமான ஓர் உறவுச் சமூகத்தை ஏற்படுத்தியுள்ளார் (தி.ச. 1055, பிரிவு 1)


திருமணம் வெறும் ஒப்பந்தம் மட்டுமில்லை. பரந்;து விரிந்த பரிணாமத்தை உள்ளடக்கிய உடன்படிக்கை என்று ஏன் சொல்கிறோமென்றால் மணமக்கள் கடமை – உரிமை என்ற குறுகிய வட்டத்துக்குள் தங்களை அடைத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காகத் தான்.


6. திருமணம் ஒரு அருளடையாளம்


திருமணம் ஒரு அருளடையாளம், புனிதத்தின்  வாய்க்கால். இவ்வருள் அடையாளத்தின் மூலம் மணமக்கள் கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையேயுள்ள உடன்படிக்கை அன்பிற்குச் சான்று பகர்கின்றனர். ஒருவர் ஒருவரை அன்பு செய்யவும், ஒருவர் ஒருவருக்கு பிரமாணிக்கமாய் இருக்கவும், குழந்தைகளைப் பெற்று வளர்க்கவும் தேவையான அருளைத் திருமணத்தின் மூலம் பெறுகின்றனர். 


திருமணமென்னும் அருளடையாளத்தால் மணமக்கள் ஒருவகையில் திருநிலைப் படுத்தப்படுகின்றனர் என்று 2ம் வத்திக்கான் சங்கம் அறிக்கையிட்டுள்ளது; (இ.உ.தி. 48)


அருட்பணியாளர் - திருநிலைப்பட்டத்தால் திருநிலைப்பாடு

துறவறத்தார் - துறவற வார்த்தைப்பாட்டால் திருநிலைப்பாடு

மணமக்கள் - திருமணம் என்ற அருளடையாளத்தால் திருநிலைப்பாடு


மேலும், “உண்மையான திருமண அன்பு இறை அன்பால் ஆட்கொள்ளப்பட்டுள்ளது”” என்றும் சங்கம் கூறுகின்றது. இவ்வுண்மையை திருமணச் சடங்கு வெளிப்படுத்துகின்றது.


6.1 திருமணத்தின் திருப்பணியாளர்கள்


ஏனைய அருளடையாளங்களை அருட்பணியாளர் நிறைவேற்றுவதுபோல், திருமணமென்னும் அருளடையாளத்தை நிறைவேற்றுவதில்லை. மணமக்களின் சம்மதமே திருமணத்தில் அருளடையாளம். திருமண சமமதத்தை தெரிவிப்பது அருட்பணியாளர் அல்ல; மணமக்கள் தான். ஆகவே, திருமணம் என்னும் அருளடையாளத்தின் திருப்பணியாளர் – மணமக்களே.


அப்படியெனில், திருமணத்தில் அருட்பணியாளரின் பணி என்ன?


அருட்பணியாளர் மணமக்களின் சம்மதத்தை கேட்டு அதை ஏற்கின்ற 

அதிகாரம் பெற்ற சாட்சி.

மணமக்களை திருச்சபையின் பெயரால் ஆசீர்வதிப்பவர்.


7. திருமணத்தின் நோக்கம்


திருமண ஓலை எழுதவரும் மணக்களிடம், “நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள்?” என்ற கேள்வி கேட்பது வழக்கம். இக்கேள்விக்கு பலவிதமான பதில்கள் கிடைக்கும். அவற்றில் நால்வரின் பதில்கள் பின்வருமாறு:


என்ன சாமி, இப்படிக் கேட்டுப்புட்டீங்க? எனக்குன்னு ஒருத்தி வேணாமா?

எனக்கு உடம்புக்கு முடியலைன்னா, கை காலைப் பிடிச்சு அமுக்கிவிடுவதற்கு ஒருத்தி வேணாமா?

என்ன பாதர், மனுஷனுக்கு ஆசாபாசம் என்ற ஒன்று இருக்குதில்லே, அதை எப்படி தீத்துக்கிறது?

பரலோக அரசுக்கு ஆட்களை சேர்க்க நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் - அதாவது, மக்கட்பேற்றிற்காக. 


மேற்கூறிய புரிதல்கள் திருமணம் பற்றிய சரியான புரிதல்கள் அல்ல; அவைகள் திருமணத்தின் நோக்கங்களும் அல்ல. திருமணத்தின் நோக்கம் என்ன என்பதைப் புதிய திருச்சபைச் சட்டம் பின்வருமாறு வரையறுத்துள்ளது.


“திருமண உடன்படிக்கை தன் இயற்கை பண்பிலே, மணமக்களின் நலனுக்காகவும், மகப்பேறு, குழந்தை வளர்ப்பிற்காகவும் அமைந்துள்ளது” (தி.ச. 1055, பிரிவு 1)


பழையச் சட்டம் 1. மகப்பேறு

2. மணமக்களிடையே உள்ள பரஸ்பர உதவி, இச்சைகளின் தணிப்பு


புதியச் சட்டம் - மணமக்களின் நல்வாழ்வுஃஒன்றிணைப்பு மற்றும் மகப்பேறு - சரிநிகர்


7.1. திருமணத்தின் நோக்கம் - மணமக்களின் ஒன்றிப்பு


திருமணத்தின் நோக்கங்களில் ஒன்று மணமக்களின் ஒன்றிணைப்பு. மணமக்களிடையே இந்த ஒன்றிப்பை உருவாக்குவது அன்பு என்ற மகத்தான படைப்பாற்றல் மிக்க சக்தி. 


“மனிதன் தன் தந்தையையும், தாயையும் விட்டுத் தன் மனைவியோடு ஒன்றித்திருப்பான்” (தொ.நூ2:24)


பெற்றோர்களின் பாசத்தைவிட மணமக்களின் காதல் வலிமைமிக்கதாக மாறிவிடுகின்றது. காதலின் வலிமையை விவிலியம் அழுத்தமாக கூறுகின்றது


“காதல் சாவைப்போல் வலிமையுள்ளது, காதல் வைராக்கியம் பாதாளம் போல் கொடியது; அதன் சுடர்கள் நெருப்புச் சுடர்கள் போலும், அதன் கொழுந்து கொடிய தீக்கொழுந்தையொக்கும். பெருங்கடலும் அன்பைத் தணிக்க முடியாது, வெள்ளப் பெருக்கும் அதை மூழ்கடிக்க இயலாது” (இ.பா 8:67)


திருமண அன்பு இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ள மாபெரும் கொடை.

இறைவன் தான் படைத்த அனைத்தையும் உற்றுநோக்கிய போது, அவரின் படைப்புகள் நன்றாக இருந்தன. மிகவும் நன்றாக இருந்தன. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் அவரின் பார்வைக்க நன்றாகத் தோன்றவில்லை. அது ஆதாமின் தனிமை.


“மனிதன் தனிமையாய் இருப்பது நன்றன்று; ஆதலில் அவனுக்குச் சரிநிகரான ஒரு துணைவியை அவனுக்கென உண்டாக்குவோம்”


7.2. திருமணத்தின் நோக்கம் - மகப்பேறு


வையத்தில் வாழ்வாங்கு வாழ ஒருவர் பெற வேண்டிய பேறுகள் பதினாறு என்பர். “பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க” என்று மணமக்களை வாழ்த்துவது தமிழ் மரபு. இப்பதினாறு பேறுகளும் குழந்தைகள் என்று தவறாக இதற்கு பொருள் கூறுகின்றனர். 16 பேறுகள் பின்வருமாறு:


1. புகழ,; 2. கல்வி, 3. வலிமை, 4. வெற்றி, 5. நன்மக்கள், 6. பொன், 7. நெல், 8. நுகர்ச்சி, 9. நல்லூழ், 10. அழகு, 11. அறிவு, 12. இளமை, 13. பொறுமை, 14. துணிவு           15. நோயின்மை, 16. வாழ்நாள்.


மனிதன் பெற வேண்டிய இப்பதினாறு பேறுகளில் மிகச்சிறந்தது – மக்கட்பேறு


“பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற” (குறள் 61)


இறைவனுக்கு அஞ்சி வாழ்கின்ற மனிதனுக்கு இறைவன் தரும் பேறுகள் இரண்டு: 1. நல்ல மனைவி, 2. நல்ல பிள்ளைகள் என்று விவிலியம் கூறுகின்றது.


“கனிதரும் கொடி முந்திரி போல் உன் மனைவி என் வீட்டின் உட்புறத்தில் இருப்பாள் ஒலிவச் செடிகள் போல் உன் மக்கள் பந்தியில் உன்னைச் சூழந்திருப்பர். ஆண்டவருக்கு அஞ்சும் மனிதனுக்கு கிடைக்கும் ஆசி இதுவே” (திபா: 127:3-4)


திருமணத்தின் மாபெரும் கொடை குழந்தைகள்; பலுகிப் பெருகி நில உலகத்தை நிரப்புங்கள் (தொநூ 1:28) என்ற இறைவாக்கு, முதல் பெற்றோர்களுக்கு இறைவன் வழங்கிய ஆசியும் ஆணையும் ஆகும். இந்த ஆணையை நிறைவேற்றும் பொறுப்பு வாய்ந்த பெற்றோர்கள் கடவுளின் படைக்கும் திறனில் பங்கேற்பதுடன், கடவுளை மாட்சிப்படுத்துகின்றனர் என்று 2ம் வத்திக்கான் சங்கம் அறிக்கையிட்டுள்ளது (இ.உ.தி. 50)


7.3 மகப்பேறுப் பற்றி மானி;ட உயிர் (ர்ரஅயயெந ஏவையந) 

சுற்று மடலின் போதனை


திருமணப் பாலுறவு இரு தன்மைகளைக் கொண்டுள்ளது. ஒன்று கணவன் மனைவி அன்பினால் ஒருங்கிணைவது, மற்றொன்று மகப்பேறு. இவை இரண்டையும் ஒன்றிலிருந்து ஒன்றை மனிதன் குறுக்கிட்டு பிரித்தல் முறையற்றது. 


நாம் இருவர், நமக்கு இருவர் என்று தொடங்கி, 

நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று மாறி, 

நாம் இருவர், நமக்கு சைபர் என்று முடியும் நிலையில் உள்ளது 

இன்றைய குடும்பக்கட்டுப்பாட்டுப் பிரச்சாரம்.


இன்றைய உலகில் ‘உயிர்ப்பு எதிர்ப்பு மன நிலை’ உருவாகிக்கொண்டிருக்கிறது. மானிட உயிருக்கு உலகம் தரும் பதில் ‘வேண்டாம்’. ஆனால், மானிட உயிரை அதன் துவக்க நிலையிலிருந்து ஒவ்வொரு நிலையிலும் திருச்சபை பாதுகாக்கின்றது. எனவே, எல்லாவிதக் கருத்தடை முயற்சிகளையும், கருச்சிதைவையும் எதிர்க்கின்றது. 


7.4 கருத்தடையும், கருச்சிதைவும்


கருத்தடை என்பது கரு உருவாகாமல் தடை செய்வது; செயற்கைமுறைக் கருத்தடை பாவம் ஆகும். 


கருச்சிதைவு என்பது தாயின் வயிற்றில் உருவான கருவை மனிதனின் தலையீட்டால் அழிப்பது; கருச்சிதைவு பாவம் மட்டுமல்ல, அது ஒரு பாதகம். கருச்சிதைவு செய்து கொள்கிறவர்களுக்கும் அதற்கு உடந்தையாக இருக்கின்றவர்களுக்கும் திருச்சபையிலிருந்து நீக்கம் (நுஒ-உழஅஅரniஉயவழைn)  என்ற தண்டனையைத் திருச்சபைச் சட்டம் விதிக்கின்றது. (திச1398)  


“ஒரு தாய் தன் குழந்தையைத் தன் வயிற்றில் கொல்ல முடியும் என்றால், மனிதனுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?” – அன்னை தெரசா.

அதே வேளையில், விவேகம் இல்லாமல், பொறுப்புணர்வு இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு குழந்தைகளைப் பெற்றுத்தள்ள வேண்டுமென்று திருச்சபை ஒருக்காலும் கூறியதில்லை. மானிட உயிர் எண்ணிக்கையில் மட்டுமல்ல, தரத்திலும் சிறந்து விளங்க வேண்டும்.


மணமக்கள் குழந்தைகளைப் பெற்றெடுப்பதில் பொறுப்புணர்ச்சியுடன் செயல்படவேண்டும்; தங்களின் நலத்தைக் கருதுவதுடன் தங்களுக்கு ஏற்கனவே பிறந்துள்ள, மற்றும் வருங்காலங்களில் பிறக்கப்போவதாக எதிர்பார்க்கின்ற குழந்தைகள் நலத்தையும் கருத வேண்டும். இந்த முடிவைக் கடவுள் முன்னிலையில் மணமக்களே எடுக்க வேண்டும் (இ.உ.தி.50)


7.5 குடும்பக்கட்டுப்பாட்டில் திருச்சபையின் நிலை


தக்க காரணங்களுக்காக மணமக்கள் இனப்பெருக்க வளமற்ற கால இடைவெளியில் (ழெn-கநசவடைந pநசழைன) திருமணப் பாலுறவு கொள்வது முறையானதே என்று திருத்தந்தை 6ம் பவுல் ‘மானிட உயிர்’ என்ற தனது சுற்றுமடலில் தெளிவுப்படுத்தியுள்ளார். எனவே கிறிஸ்தவத் தம்பதிகள்  செயற்கை கருத்தடை முறைகளைக் கையாளாமல் இயற்கைக் குடும்ப கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே திருச்சபையின் விருப்பம்.

சில திருமணங்கள் மலட்டுத் திருமணங்களாக அமைந்து விடுகின்றன. மணமக்கள் எவ்வளவோ விரும்பியும் அவர்களுக்கு மகப்பேறு கிட்டுவதில்லை. இத்தகைய திருமணங்கள் உண்மையான திருமணங்கள் என்றும், திருமணம் பிள்ளைப் பேற்றுக்காக மட்டும் ஏற்படுத்தப்பட்டதல்ல என்றும், மகப்பேறு இல்லாத திருமணமும் உண்மையான திருமணமே என்றும் 2ம் வத்திக்கான் சங்கம் கூறியுள்ளது (இ.உ.தி. 50).


8. திருமணத்தின் இரு பண்புகள்


8.1. ஒருமைப் பண்பு


திருமணத்தின் முதல் மூலக்கூறு ஒருமைப் பண்பு. அதாவது, கிறிஸ்தவத் திருமணம் ஒரு தாரத் திருமணமாகும்; எனவே, அது பல தாரத் திருமணத்தை தடை செய்கிறது.


மணமக்களின் திருமண சம்மதத்தின் விளக்கம்

“நான் உன்னை என் வாழ்நாள் முழுவதும் அன்பு செய்கிறேன்; உன்னை மட்டும் அன்பு செய்கிறேன்.”


மணமக்களின் விசுவாசப் பிரமாணம்

“ஒரே மனைவியை விசுவசிக்கிறேன்; ஒரே கணவனை விசுவசிக்கிறேன்.”


ஒருவன் உள்ளத்தில் குடி இருக்க வேண்டியவள் ஒருத்தி மட்டும். கற்பு நெறி என்பது பெண்களை மட்டுமன்று, ஆண்களையும் கட்டுப்படுத்தும் நெறியாகும். 


“கற்புநிலை என்று சொல்லவந்தார் இரு

கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்”


கற்புநிலை என்பது ஆண் பெண் ஆகிய இரு பாலருக்குமே பொதுவானது என்று அடிகோடிட்டுள்ளார் பாரதி.


“பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு” (குறள் 148)


பிறருடைய மனைவியை நோக்காத பண்பே உண்மையான ஆண்மை; அதுவே, ஆண்களுக்கு அழககு, அறன், அருமையான ஒழுக்கம். இது வான்புகழ் வள்ளுவர் கண்ட வாழ்வு முறை.


அதே நேரத்தில், கற்பு என்பது பெண்களின் தலைசிறந்த அணிகலனாகும். 

“கற்புநிலையே சிங்காரம் - அது

தப்பினோர் அழகு சவ அலங்காரம”; (வேதநாயகம் பிள்ளை)


“ஒரே கிறிஸ்து, ஒரே திருச்சபை. அவ்வாறே ஒரே கணவன் ஒரே மனைவி. திருமண அன்பு எவ்வித விபச்சாரத்தையும், மண முறிவையும் புறம்பாக்குகிறது; ஆண்டவரால் உறுதிப்படுத்தப்பட்ட திருமணத்தின் ஒருமைப்பண்பு தெளிவாகத் துலங்குகிறது.” (இ.உ.தி.49)



8.2 முறிவுப்படாத் தன்மை


திருமணத்தின் இன்றியமையாத மற்றொரு மூலக்கூறு முறிவுப்படாத் தன்மை. அதாவது, கிறிஸ்தவத் திருமணங்கள் விவகாரத்துக்கு உட்பட்டவை அல்ல. மண முறிவு என்பது கிறிஸ்தவ அகராதியில் இல்லை. “கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்.” (மத்19:6)


“ஒருவருக்கொருவர் அளிக்கும் வாக்குறுதியில் முத்திரையிடப்பட்டதும், எலலாவற்றிலும் மேலாகக் கிறிஸ்துவின்  அருளடையாளத்தால் புனிதப்படுத்தப்பட்டதுமான திருமண அன்பு இன்பத்திலும், துன்பத்திலும் உடலாலும் உள்ளத்தாலும் தவறக்கூடாத முறையில்  பிரமாணிக்கம் கொண்டது. ஆகையால் அது எல்லாவித விபச்சாரத்தையும், மணமுறிவையும் புறம்பாக்குகின்றது” (இ.உ.தி.49) 


9. செய்யவேண்டியவைகள்

1.      Talk it Over          

-           if you doubt clarify the doubt.

-                      if not will end up in mess.

2.      Don’t indulge in extra marital sex because          

-           immoral

-                      brings bad reputation

-                      prone to acquire AIDS – Transmit to your wife, children

3.      Inner happiness is affected because of

-           guilty conscience

-                      and will enter into drinking and addiction to drugs

4.      Use Natural Family Planning; not Artificial condoms

5.      Never Abortion.   


Infatuation and Love

 

Infatuation is the initial, instant attraction and intense desire for a person of the opposite sex.

Love is a friendship that has caught fire. It takes root, develops and grows one day at a time. The process is slow.

****************

Infatuation lacks confidence. When he/she is away you wonder if he/she is cheating you. Sometimes you check perhaps even discreetly.

Love means trust. You are calm, secure and unthreatened. Your beloved feels the same also and this makes both even more trustworthy.

****************

Infatuation is marked by a feeling of insecurity. You are excited and eager, but not genuinely happy. There are nagging doubts, unanswered questions or some unclear actions about your beloved that you would not like to examine too closely. It might spoil the dream.

Love is quiet understanding and mature acceptance of imperfection. It is real. It gives you strength and grows beyond you to bolster your beloved. You are warmed by his/her presence even when he/she is away. Miles of distance do not separate you. You want him/her nearer, but near or far, you know he/she is yours and you can wait.

****************

Infatuation has an element of sexual excitement. If you are honest, you can admit it is difficult to be in one another's company, for the underlying fear that it will end in intimacy.

Love is the maturation of friendship. You are confident that you must be friends before you can be lovers.

****************

Infatuation is usually temporary and eventually fades. It, however, might lead you to do things you will regret later, but love never will.

Love is an upper. It makes you look up. Love usually lasts longer and goes deeper than strong sexual Feelings. It makes you think up and makes you a better person.

****************

Infatuation makes you feel anxious, nervous and jealous. You feel convinced that you can't live without the other person. You are unable to see the person for who they really are because he/she is perfect in your eyes.

Love makes you feel excited. You are willing to respect the other person's opinions and accept the good or bad qualities. You share similar values and beliefs and you see the person for who they really are.

****************

Infatuation says, "We must get married right away! I can't risk losing you!"

Love says, "Be patient. Do not panic. Plan your future with confidence. There are rewards in waiting."

அமல அனைக்கு நம் குடும்பங்களை ஒப்புக்கொடுக்கிற ஜெபம்

 

அமல அனைக்கு நம் குடும்பங்களை ஒப்புக்கொடுக்கிற ஜெபம்

அமல அன்னையே,/ எம் இறைவனின் தாயே,/  உம்மை எங்கள் இல்லங்களின் தலைவியாகவும்,/ அரசியாகவும் போற்றுகிறோம்./ எங்கள் குடும்பங்களுக்கு/ நீர் காட்டும் அன்பிற்கும்,/ அரவனைப்பிற்கும்/, செய்துவரும் சகல நன்மைகளுக்கும்/ உமது பாதம் பணிந்து நன்றி செலுத்துகிறோம்/.  எங்கள் குடும்பங்களில் உள்ள/ சகலரையும் உம் பாதத்தில் சமர்ப்பிக்கிறோம்./ எம்மை ஆசீர்வதியும்./  பெற்றோர்களாகிய நாங்கள்/ திருக்குடும்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு/ நாங்கள்/ ஒருவரை ஒருவர் நேசிக்கவும்,/ துன்பத்திலும்/ சோதனை நேரங்களிலும்/ ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாகவும்,/ தாங்கிப்பிடிக்கும் துணையாகவும்/ இருக்க எங்களை ஆசீர்வதியும்./ எங்கள் அன்பாலும்,/ தியாகத்தாலும்/ நல்ல நடத்தையாலும்/ எங்கள் பிள்ளைகளுக்கு/ முன்மாதிரியாக இருக்க/ எங்களை வழிநடதும்./  இறைவனிடமிருந்து/ நீர் எங்களுக்கு பெற்றுத்தந்த/ பொக்கிஷமான/ எங்கள் குழந்தைகளுக்காக/ நாங்கள் உம் வழியாக/ இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம்./  எங்கள் குழந்தைகளை நிறைவாய் ஆசீர்வதியும்./  அவர்கள் அறிவிலும்,/ ஞானத்திலும்,/ நற்பன்புகளிலும், இறைபக்த்தியிலும்/ வளரவும்,/ கல்வியிலும்/ ஆற்றல்களிலும் சிறந்துவிளங்கவும்/ உம்மை நோக்கி ஜெபிக்கிறோம்./ 

விண்ணக அரசியே,/ அருமையான என் அம்மாவையும்/ அப்பவையும்/ எனக்கு பெற்றோராய் கொடுத்தமைக்காய்/ உமக்கு நன்றி அம்மா./  அவர்கள்/ எங்களுக்கு காட்டிவரும்/ அன்பிற்கும், அளவுகடந்த பாசத்திற்கும்/ எங்களுக்காய் ஏற்றுக்கொண்ட துன்பங்கள்,/ செய்த தியாகங்கள்/ அணைத்தையும்/ நாங்கள் என்றும் மறவோம்./ அம்மா என் பெற்றோர்களுக்கு/ நீண்ட ஆயுளையும்,/ நல்லசுகத்தையும்/ உமது ஆசீரவாதமாய்/ அவர்களுக்கு அளித்தருலும்./ எனது அன்பாலும்/  சொல்லாலும்,/ செயலாலும்,/ நடத்தையாலும்/ அவர்களை என்றும் பெருமைப்படுத்துவேன்./  ஆவர்களின் முதிய வயதிலும்,/ சுகவீனத்திலும்/ நான் அவர்களுக்கு ஆறுதலாகவும்,/ துணையாகவும்,/ உதவியாகவும் இருக்க/ என்னைப் பக்குவப் படுத்தியருளும்./ 

 அனைத்து குடும்பங்களையும்/ உம் பாதத்தில் அற்பனிக்கிறோம்./  சிறப்பாக உம் திருமகன்/ பெரிதும் அன்புசெய்யும்/ இந்த பங்கில் உள்ள/ எல்லா சிறு பிள்ளைகளையும்/ உம் கரங்களில் ஒப்புவிக்கிறோம்./  அவர்களை ஆசீர்வதியும்./  அவர்களுடைய இருதயத்தில் விசுவாசத்தையும்,/ தெய்வபயத்தையும் வளரச்செய்தருளும்/. ஜீவியகாலதில் அவர்களுக்கு/ உற்ற துணையாய் வழிநடத்தும்./

அனைத்து குடும்பங்களும்,/ எங்கள் வாழ்வாலும்/, பிறர் அன்பு பணியாலும்/ உமது மான்புக்கும்,/ உம் திருக்குமாரனும்,/ எம் இறைவனுமான/ இயேசுக்கிறிஸ்துவின் தெய்வீகத்துகும்/ சாட்சிகளாய் வாழ்வோம்/ என்று உறுதியளிகின்றோம்./ எங்களை ஆசீர்வதியும்,/ வழிநடத்தும் அம்மா.

 

பாவம் Sin?

 

பாவம்

1.    பாவம் என்றால் என்ன?

¦ கடவுளின் கட்டளைகளை மீறுவது, இறைவனின் பார்வையில் தீச்செயல் புரிவது

¦ தன் நியாயமற்ற ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள இறைவனின் நியதிகளை மீறி தன்னைப் படைத்தவரையே எதிர்த்து செயல்படுவது

¦ தன் சுயநலத்திற்காக இயற்கையை நாசப்படுத்துவது,  தனிமனித சுதந்திரத்திலும், உரிமைகளிலும் தலையிடுவது

¦ மனித உறவுகளையும், ஒற்றுமையையும் சீர்குலைப்பது

இவை அனைத்தும் பாவம் ஆகும்.

2.     பாவம் என்பதற்கு திருஅவை அளிக்கும் விளக்கங்கள் யாவை?

¦ இறைவன் தன் அன்பால் மனிதருக்கு வகுத்து அளித்துள்ள இறைத் திட்டத்திற்கு  எதிராக எண்ணத்தாலும், சொல்லாலும் செயலாலும் சுய அறிவோடு வேண்டுமென்றே செயல்படுவது.

¦ இறைவனையே வெறுக்கும் அளவுக்கு சுயநலத்துடன் வாழ்வது.

¦ பகுத்தறிவுக்கும், உண்மைக்கும், மனச்சான்றுக்கும் முறண்பட்டு எண்ணுவது, பேசுவது, செயல்படுவது.

¦ மனித மாண்பையும் மனுக்குலத்தின் ஒற்றுமையும் சீர்குலைப்பது.

¦ பொருளாசையின் தூண்டுதலால் இறைவன்மேலும்  அடுத்திருப்பவர்கள் மேலும் கொண்டிருக்க வேண்டிய உண்மையான அன்பை புறக்கணித்தல்.

¦ இத்தகைய செயல்கள் இறைவனுக்கு எதிரான பாவங்கள் ஏனெனில் இவை இறைவனுக்கு  கீழ்ப்படியாமையை வெளிப்படுத்துகிறது. (திபா.51:4).

¦ கிறிஸ்து பாவத்தின் கொடூரத்தை தம் திருப்பாடுகளில் முழுமையாக வெளிப்படுத்தி தம் தெய்வீக அன்பால் அதன்மேல் வெற்றிகொண்டார்.

¦ எனவே கிறிஸ்து தன் தந்தையின் மீட்புத் திட்டத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்ததை நாம்  முன் உதாரணமாகக் கொண்டு வாழ வேண்டும்.

3.    பாவங்களின் வகைகள் யாவை?

i.        பாவங்களை பொதுவாக இறைவனுக்கு எதிரானவை (இறைப்பற்று இல்லாமை, கடவுளை வெறுத்தல், இழித்துரைத்தல்), மனிதருக்கு எதிரானவை (பில்லி சூனியம், பகைமை, சண்டை, சச்சரவு, பொறாமை, சினம், சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, அழுக்காறு,), தனக்கு எதிரானவை (குடிவெறி, களியாட்டம், நெறிகேடு, பேராசை, ) என்று மூன்று வகைகளாக பிரிக்கலாம். 

ii.        ஆன்மீகம் சார்ந்த, உடல் மற்றும் உலகு சார்ந்த பாவங்கள் எனவும் பிரிக்கலாம்.

iii.        எண்ணத்தால், சொல்லால், செயலால் செய்தவை மற்றும் செய்யத்தவறியவை எனவும் வகைப்படுத்தலாம்.

iv.        எதற்கு எதிராக நமது எண்ணம், பேச்சு, செயல் என்பதைப் பொருத்தும் வகைப்படுத்தலாம்.

உதாரணமாக:

v  கடவுளுக்கு எதிராக

v  மனிதருக்கு எதிராக

v  நற்பண்புகளுக்கு எதிராக

v  அளவுக்கு மீறியதால் அல்லது குறைபாட்டால் (பெருந்தீனி, ஆடம்பர வாழ்க்கை; பிறர் அன்புசெயலில் நாட்டமின்மை)

v  இறைவனின், திருச்சபையின் கட்டளைகளை மீறுதல்

4.    கனாகனத்தின் (gravity) அடிப்படையில் பாவம் எத்தனை வகைப்படும்? அவைகள் எவ்வாறு பிரித்துணரப்படுகின்றன?

கனாகனத்தின் அடிப்படையில் பாவங்கள் சாவான பாவம், அற்பப்பாவம் என இரு வகையாக பிரிக்கப்படுகின்றன.

சாவான பாவம்

v  முழு அறிவுடனும், முழு விருப்பத்துடனும் இறைவனுக்கு எதிராக பெரியதொரு தீச்செயலைச் செய்யும் போது அது சாவான பாவமாகும்.

v  சாவான பாவம் நம்மில் இருக்கும் அன்பு,  இரக்கம் மற்றும் புனிதத்தை இழக்கச் செய்கிறது.

v  திருமுழுக்கு மற்றும் ஒப்புறவு அருள்சாதனங்கள் வழியாக மட்டும் மன்னிக்கப்படுகிறது.

v  நாம் மனம் திருந்தி இறைவனின் மன்னிப்பை பெறாவிட்டால் முடிவில்லா நரகத்திற்கு நம்மை இட்டுச்செல்கிறது.

அற்பப்பாவம்

Ø  கடவுளுடன் நாம் கொண்டுள்ள நல்லுறவை முறிப்பதில்லை ஆனால் அது இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவை வலுவிழக்கச் செய்கிறது.

Ø  நம்மில் இருக்கும் அன்பு,  இரக்கம் மற்றும் புனிதத்தை இழக்கச் செய்வதில்லை மாறாக காயப்படுத்துகிறது

Ø  முழு அறிவுடனும் முழு விருப்பத்துடனும் செய்யாத பாவம் அற்பப்பாவமாக் கருதப்படுகிறது.

Ø  அற்பப்பாவம் ஒழுக்க நெறிமுறைகளை சிதைவுற செய்கிறது.

Ø  இருப்பினும் இறைவேண்டல், அன்பு மற்றும் இரக்கச்செயல்கள் அற்பப்பாவத்திலிருந்து நம்மைத் தூய்மைப்படுத்துகின்றன.

5.    ஒரு பாவம் சாவான பாவம் என்பதற்கான கூறுகள் யாவை?

ஒரு பாவம் சாவான பாவம் என்பதற்கு பல கூறுகளைக் கூறலாம்

Ø  பெரியதொரு தீச்செயலை நோக்கமாகக் கொண்டிருத்தல்

Ø  முழு அறிவோடு செய்வது

Ø  முழு விருப்பத்தோடு செய்வது

Ø  இறைவனின் சட்டங்களை அறிந்திருந்தும், அவற்றை மீறினால் தண்டனை என்ன என்பதை அறிந்திருந்தும் செய்வது

Ø  பாவத்திற்காக மனம் வருந்தி இறைவனின் மன்னிப்பைப் பெறாத நிலையில் நித்திய நரகத்திற்கு இட்டுச்செல்வது.

6.    சாவான பாவத்திற்கு உதாரணமாக எத்தகைய பாவங்களைக் கூறலாம்?

பத்துக்கட்டளைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவைகளையே நல்ல உதாரணமாகக் கூறலாம்.

v  உன் "ஆண்டவராகிய கடவுள் நாமே"நம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை.

v  கடவுளுடைய திருப்பெயரை வீணாக சொல்லாதே.

v  கடவுளின் திருநாள்களை புனிதமாக அனுசரி.

v  தாய் தந்தையை மதித்து நட.

v  கொலை செய்யாதே.

v  மோகப்பாவம் செய்யாதே.

v  களவு செய்யாதே.

v  பொய்ச்சாட்சி சொல்லாதே.

v  பிறர் தாரத்தை விரும்பாதே.

v  பிறர் உடமையை விரும்பாதே.

v  இவைகளை மீறுதல் சாவான பாவங்கள் ஆகும்.

 

7.    ஒருவர் சாவானபாவத்தை பாவம் என்று அறியாமல் செய்தால் அந்த சாவான பாவத்திற்கு உரிய தண்டனைக்கு உட்படுவாரா? இல்லையா?

உட்படமாட்டர்.

ஆனால் கடவுள் தனது கட்டளைகளையும், ஒழுக்க நெறிகளையும், நல்லது எது தீயது எது என பகுத்தறியும் ஆற்றலையும் மனிதனின் உள்ளத்தில் பொறித்துள்ளார். எனவே இது பாவம் என்று அறியாமலேயே செய்துவிட்டேன் என்று யாரும் தப்பித்துக்கொள்ள இயலாது. 

8.     தீய பண்புகள் யாவை? உதாரணம் தருக?

v இவை நற்பண்புகளுக்கு எதிரானவை.

v மனச்சான்றை மழுங்கடித்து தீமையின்பால் நாட்டம் கொள்ளச் செய்து பாவத்தில் விழச் செய்பவை.

v ஏழு தலையான பாவங்களான தற்பெருமை, சீற்றம், காமவெறி, பேராசை, பெருந்தீனி,பொறாமை,சோம்பல் ஆகியவற்றோடு தொடர்புடையவை.

9.     தனிநபரின் பாவங்களுக்கும் சமுதாய சீர்கேட்டிற்கும் உள்ள தொடர்பு யாது? அல்லது எப்போது தனிநபர் பாவங்கள் சமுதாய அமைப்புகளாக மாற்றம் பெறுகின்றன?

¦ தனிநபருடைய பாவங்கள் சமுதாய சீர்கேட்டிற்கு அடிப்படையாக அமைகின்றன.

¦ எவ்வாரெனில் இத்தகைய பாவங்களை   பலர் செய்யும்போது (ஊழல், திருட்டு, சிற்றின்ப நாட்டம்,  வன்முறை, அநீதி)    சமுதாயத்தில் சீர்கேட்டை அல்லது எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலும் இவை தொடர் நிகழ்வுகளாவே மாறிவிடுகின்றன.

¦ இதன் விளைவாக (இறைவனின் கட்டளைக்கு முறணான) சில சூழல்களும், செயல்பாடுகளும், நிறுவனங்களும் சமுதாயத்தின் அங்கமாகவே/ அமைப்புகளாகவே (TASMAC, PUBs)அமைந்து விடுகின்றன.

¦ இவை அனைத்திற்கும் தனிநபர்களின் பாவங்களே காரணிகளாக இருக்கின்றன.

10.  மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கு ஒருவர் பொறுப்பாக இருக்க முடியுமா?

இல்லை

இருப்பினும் கீழ்கண்ட காரணங்களுக்காக அவர் பொறுப்பாக இருக்க வாய்ப்புண்டு.

v  தவறாக வழிநடத்துதல்

v  இச்சையைத்தூண்டுதல்

v  பாவம் செய்ய உடந்தையாய் இருத்தல்

v  பாவம் செய்ய ஊக்கப்படுத்தல்

v  செய்வது பாவம் என்று எச்சரிக்காமல் இருத்தல்

v  பாவத்தில் இருந்து வெளிவர உதவாமல் இருத்தல்

11. விவிலியத்தில் பாவங்கள் என குறிப்பிடப்பட்டுளவை யாவை?

பரத்தைமை, விபசாரம், கெட்ட நடத்தை, காமவெறி, தகாத பாலுறவ, கட்டுக்கடங்காத பாலுணர்வு, ஒருபால் புணர்ச்சி, தீய நாட்டம், சிலைவழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை, சச்சரவு, பொறாமை, சினம், சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம், நெறிகேடு, பொல்லாங்கு, பேராசை, கொலை, வஞ்சகம், தீவினை, புறங்கூறுதல், அவதூறு பேசுதல், செருக்கு, வீம்பு பாராட்டுதல், பெற்றோருக்குக் கீழ்ப்படியாமை; சொல் தவறுதல், இரக்கம் இல்லாமை, திருட்டு, பழித்து பேசுதல், வெட்கக்கேடான பேச்சு, உலகப்போக்கைப் பின்பற்றுதல், பொய் பேசுதல், பொய்ச்சான்று கூறுதல், பொய்யாணையிடுதல், தன்னலம், பண ஆசை, வீம்பு, தன்னடக்கமின்மை, வன்முறை, நன்மையை நாடாமல் தீமையை நாடுவது, துரோகம், கண்மூடித்தனம், தற்பெருமை,  இறைப்பற்று இல்லாமை, கடவுளை வெறுத்தல், இழித்துரைத்தல், கலா.5:19-21; உரோ.1:28-321கொரி.6:9-10 எபே.5:3-5.  திமோ.1:9-10 மத்.15:19-20, 2திமோ.3:2-5

12.  பாவம் எவ்வாறு பெருகுகிறது?

v  ஒருவன் மீண்டும் மீண்டும் பாவம் செய்யும்போது

       i.     தீமைகளால் எளிதாக ஈர்க்கப்படுகிறான்

      ii.     அவனது மனச்சான்று செயலற்று போகிறது

    iii.     அவனது நன்மை தீமை பகுத்துணரும் ஆற்றலை இழக்கச் செய்கிறது.

v  இவ்வாறு பாவம் நாளடைவில் ஓருவரின் இயல்பாக மாறிவிடுகிறது.

இதன் விளைவாக பாவம்

       i.      அடுத்ததுத்து பாவம் செய்ய வழிவகுக்கிறது. 

      ii.      பாவம் செய்வதில் ஆவலாகவும், உறுதியாகவும் இருக்கச் செய்கிறது

இதுவே பாவம் பெருகுவதற்கு காரணமாகிறது.

13. பாவத்தின் விளைவுகள் யாவை?

­  பாவத்தில் ஈடுபடுவோர் இறையாட்சியை உரிமைப் பேறாக அடைவதில்லை

­  பாவிகள் சாவுக்குரியவர்கள்.

­  பாவிகள் மற்றவர்களையும்  பாவத்திற்கு இட்டுச்செல்கிறார்கள்.

­  பாவங்கள் கடவுளின் சினத்தை வரவழைக்கின்றன.

14. ஒருவர் தான் பாவம் செய்துவிட்டோம் என்பதை எப்போது உணர்கிறார்?

ஒருவரின் மனச்சான்று அவர் இறைவனுக்கு எதிராக பாவம் செய்துவிட்டார் எனச் சுட்டிக்காட்டும் போதும் மேலும் தனது பாவத்தை அறிக்கையிட்டு மனம் திரும்பி இறைவனிடம் திரும்பிச்செல்ல தூண்டும்போதும்  அவர் தான் பாவம்  செய்ததை உணர்கிறார்.  [1797, 1848]

15. ஒரு பாவி ஏன் கடவுளிடம் திரும்பிவந்து அவரின் மன்னிப்பை இறைஞ்ச வேண்டும்?

v  பாவம் நம்மிடமுள்ள புனிதத்தை இழக்கச்செய்து இறைவனின் அருளைப்பெற  தகுதியற்றவர்களாக ஆக்குகிறது.

v  கடவுள் அனைத்து நன்மைகளுக்கும் ஊற்றாகவும் வாய்க்காளாகவும் உள்ளார். பாவம் இறைவனுக்கு எதிரானது என்பதால் அது அவரிடமிருந்து நம்மைப் பிரிக்கிறது. எனவே அவரது அன்பையும் பரிவையும் மீண்டும் பெற செய்த பாவத்திற்கு வருந்தி அதை விலக்கி  அவரோடு ஒப்புறவாக வேண்டியது அவசியமாகிறது. [1847]

16. இறைவன் இரக்கம் நிறைந்தவர் என்பதை நாம் எவ்வாறு அறிகிறோம்?

Ø  இயேசு பாவிகளின்மீது கொண்டுள்ள பரிவை உணர்த்துவதே நற்செய்தியின் மையக்கருத்து.

Ø  திருவிவிலியத்தின் பல பகுதிகள் இறைவன் இரக்கம் நிறைந்தவர் என்பதைக் காட்டுகின்றன.  ஊதாரிமைந்தன் உவமை அவரின் இரக்கத்தை முழுமையாக உணர்த்துவதாக அமைந்துள்ளது.

Ø  பாசமிகு தந்தை தன் ஊதாரிமைந்தன் தன் தவறை உணர்ந்து திரும்பிவந்தபோது  நிபந்தனையின்றி மன்னித்து ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல்  அதற்காக விருந்தளித்து தன் மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறார். 

Ø  இறைவனின் இரக்கத்தை எந்த சூழலிலும் சந்தேகிக்கக் கூடாது என்பதே இந்த உவமை நமக்குக் கற்றுத்தரும் பாடம்.

Ø  இயேசுவின் இந்த பரிவிரக்கத்தின் முழுமைதான் மீட்பின் அருட்சாதனமாக விளங்கும் நற்கருணை. [1846, 1870]

17.     எவ்வாறு நற்செய்தி இறைவனுடைய இரக்கத்தின் வெளிப்பாடாக உள்ளது?                       

i.        வானதூதர் தூய யோசேப்புக்கு சொல்லியது “அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார். மத்.1:21”

ii.        இறுதி இரவு உணவின் போதும் இயேசு கூறுவதும் இதுவே-  “ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்.

iii.        மத்:26:28” மீட்பின் அருள்சாதனமாகிய நற்கருணை  கடவுளின் பேரிரக்கத்தின் அடையாளமாக விளங்குகிறது.

iv.        இவை அனைத்தும் நமக்கு உணர்த்துவது இறைவன் நம் மீது அளவுகடந்த இரக்கம் கொண்டுள்ளார் என்பதே.  

v.        நற்செய்தி என்பது இயேசு கிறிஸ்துவின் வழியாக  இறைவன் பாவிகள் மீது அளவுகடந்த இரக்கம் கொண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்துவதே.

18.   “பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது(உரோ.5:20) என்பதன் அர்த்தம் யாது?

      i.      இறைவன் நமது சம்மதம் இல்லாமல் நம்மைப் படைத்தார்;  அனால் நமது அனுமதி அல்லது விருப்பம் இல்லாமல் நம்மை மீட்க இயலாது.

    ii.      எனவே அவரது இரக்கத்தைப் பெற நாம் பாவிகள் என்பதை உணர்ந்து முழுமனதோடு ஏற்று அறிக்கையிடவேண்டும். “பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது. மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார்”. 1யோவா.1:8-9.

   iii.      இந்த இறைவனின் இரக்கத்தைத்தான்  திருத்தூதர் பவுல் உரோ.5:20ல் “ஆனால் பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது.” என்று குறிப்பிடுகிறார்.

19.          கடவுளின் இரக்கத்தை பெற நாம் செய்ய வேண்டியது என்ன?

¦ இறைவன் தனது வார்த்தையாலும், ஆவியின் ஒளியாலும் பாவத்தின் கனாகனத்தை நாம் உணரச் செய்கிறார்.

¦ இந்த உணர்வே பாவ மன்னிப்பைப் பெற நம்மைத் தகுதியுள்ளவர்களாக ஆக்குகிறது. 

¦ எனவே நாம் நமது பாவங்களையும் அதன் கனாகனத்தையும் உணர இறைவனிடம் தூய ஆவியாரின் ஒளிக்காக செபிக்கவேண்டும் .

20.    சாவான பாவம் செய்த ஒருவர் பாவமன்னிப்பைப் பெற்று இறைவனோடு ஒப்புறவாக செய்யவேண்டியது என்ன?

¦ தான் செய்தது சாவான பாவம் என்பதை அறிய வேண்டும். அதனால் தனக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு முறிந்துவிட்டதை உணர வேண்டும்.

¦ தான் பாவியென்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். இனிமேல் இத்தகைய பாவத்தை செய்யமாட்டேன் என்ற தீர்மானம் மேற்கொள்ளவேண்டும்.

¦ ஒப்புறவு அருள்சாதனத்தில் தனது பாவத்தை குருவிடம் அறிக்கையிட்டு பாவமன்னிப்பை இறைஞ்சவேண்டும்.

¦ குருவானவர் அளிக்கும் பாவ பரிகாரத்தை நிறைவேற்ற வேண்டும். 

”கத்தோலிக்க திருஅவையில் பாவமன்னிப்பு இல்லையென்றால் நமது நித்திய பேரின்ப வாழ்வுக்கு எதிர்நோக்கோ உத்திரவாதமோ இல்லை. எனவே திருஅவை வழியாக இப்பெரும்கொடையை நமக்கு அளித்துவரும் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.” புனித அகுஸ்தினார்.

21. பாவத்தைப் பற்றிய திருஅவையின் கோட்பாடுகளும் கிறிஸ்தவர்கள் அறிந்துகொள்ளவேண்டிய படிப்பினைகளும் யாவை?

Ø  பாவம் என்பது இறைவனின் கட்டளைகளுக்கு எதிராக எண்ணுவது, பேசுவது, ஆசைப்படுவது, செயல்படுவது

Ø  பாவம் என்பது இறைவன் நம் உள்ளத்தில் பதித்துவைத்துள்ள மனச்சான்று மற்றும் பகுத்தறியும் ஆற்றலுக்கு எதிராக செயல்படுவது 

Ø  மனிதன் தன் இதயத்தை தனது சுயநலத்திற்காகவும், விரும்பியதைஅடையவும் கடினப்படுத்திக் கொள்வதின் விளைவுதான் பாவம்.

Ø  பாவம் மனித நேயத்தையும், மனித ஒற்றுமையையும், சமூகத்தையும்  சிதைக்க வல்லது.

Ø  பாவம் செய்வதின் நோக்கமே பாவத்தின் கனாகனத்தை மதிப்பிடும் முதன்மைக் காரணியாக உள்ளது.

Ø  முழு அறிவுடனும், முழு விருப்பத்துடனும் இறைவனுக்கு எதிராக பெரியதொரு தீச்செயலைச் செய்யும் போது அது சாவான பாவமாகும். இறைவனின் மன்னிப்பைப்பெறாமல் சாவானபாவத்தோடு மரித்தால் நித்திய நரகத்தைத் தண்டனையாகப் பெறுவோம்.

Ø  அற்பப்பாவம் கடவுளுடன் நாம் கொண்டுள்ள நல்லுறவை முறிப்பதில்லை ஆனால் அது இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவை வலுவிழக்கச் செய்கிறது. இறைவேண்டல், அன்பு மற்றும் இரக்கச்செயல்கள் அற்பப்பாவத்திலிருந்து நம்மைத் தூய்மைப் படுத்துகின்றன.

Ø  கடவுளின் இரக்கத்தையும் பாவமன்னிப்பையும் பெற நாம் நம் பாவங்களை ஏற்றுக்கொண்டு அவற்றிற்காக மனம் வருந்தி, அவற்றை வெளிப்படுத்தி, ஒப்புறவு அருள்சாதனத்தின் வழியாக நமது பாவங்களிலிருந்து தூய்மை அடையமுடியும்.

Ø  (Rom 11:32-33). ஏனெனில், அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் அனைவரையும் கீழ்ப்படியாமைக்கு உட்படுத்தினார். கடவுளின் அருள் செல்வம் எத்துணை மிகுதியானது! அவருடைய ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை!


இறைவன் நமது பாவங்களை மன்னிப்பார் என்ற நம்பிக்கையை  நாம் எவ்வாறு பெற்றுள்ளோம்?

i.      நமது பாவங்களை மன்னிக்க தனக்கு அதிகாரம் உண்டு என்பதை இயேசுவே உறுதியாக வெளிப்படுத்தியுள்ளார். “மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். மத்.9:6; மாற்.2:10; லூக்.5:24.

ii.     நமது பாவங்களிலிருந்து நம்மை மீட்க கிறிஸ்து  தம் தந்தைக்கு தம்மையே பாவ பரிகார பலியாகக் கொடுத்துள்ளார்.  “அம்மகனால்தான் நாம் பாவமன்னிப்பாகிய மீட்பைப் பெறுகிறோம். கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்; இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம் கொலோ1:14; எபே.1:7.

iii.    திருஅவை அளிக்கும் திருவருள் சாதனங்கள் வழியாக  இறைவன் அருளும் பாவமன்னிப்பை பெறுகிறோம் என்பதில் ஐயம் இல்லை.

நமது பாவங்களை மன்னிக்குமாறு நாம் வேண்டும்போது நமது மன நிலை எவ்வாறு இருக்க வேண்டும்?

நான் செய்த பாவங்களுக்கு இறைவனின் மன்னிப்பை வேண்டும் முன்

i.   கட்டிக்கொண்ட பாவங்களால் நான் கடவுள் வெறுக்கத்தக்க பரிதாபமான நிலையில் இருக்கிறேன் என்பதை மனமார உணர்ந்து அறிக்கையிட வேண்டும். 

ii.  எனது பாவங்களில் இருந்து மன்னிப்புப் பெற இறைவனின் பேரிரக்கத்தை கெஞ்சி மன்றாட வேண்டும்.

iii. நான் கடவுள்முன் நிற்கக்கூட  தகுதியற்ற பாவி என்ற மனநிலையைக்  கொண்டிருக்கவேண்டும்.

Ä  ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்என தாழ்ச்சியோடு அறிக்கையிட்ட ஊதாரி மைந்தனின் மனநிலையைக் கொண்டிருக்கவேண்டும்.லூக்.15:18

Ä “தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்என்று வேண்டிய வரிதண்டுபவரின் மனநிலையைக் கொண்டிருக்கவேண்டும். லூக்.18:13.

 “எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பதுபோல” என்ற முன் நிபந்தனையை ஏன் இயேசு இந்த மன்றாட்டில் வைத்துள்ளார்?

Ä மனித இயல்பில் நமக்குத் தீங்கு இழைத்தவர்களையும் துன்பம் வருவித்தவர்களையும்  மன்னிப்பது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

Ä இத்தகைய தருணங்களில் நாம் இயேசுவை மனதில் கொண்டுவர வேண்டும். தனக்கு மரண தண்டனை பெற்றுத்தந்து, சித்திரவதை செய்து, சிலுவையில் அறைந்து கொடூரமாகக் கொன்றவர்களையும் மன்னிக்குமாறு தன் தந்தையிடம் மன்றாடியதை நினைவுக்குக் கொண்டுவர வேண்டும்.

Ä  நமது தகுதியற்ற நிலையிலும் நம்மை அன்பு செய்து பராமரித்து வரும் இறைவனை நினைக்க வேண்டும்.

Ä நமக்கு எதிராகக் குற்றம் செய்வோரை மன்னிப்பது கிறிஸ்தவ மதிப்பீடுகளின் சிகரம் ஆகும்.

Ä நாம் அடுத்திருப்பவர்கள்மேல் இரக்கம் கொள்ளாமல், ஒருவரை ஒருவர் மன்னிக்காமல் இறைவனின் இரக்கத்தையும் மன்னிப்பையும் கேட்பதற்கு நமக்கு என்ன தகுதி இருக்கிறது?

Ä நாம் அடுத்திருப்பவர் மேல் இரக்கம் கொள்வதும் மன்னிப்பதும், இறைவன் நம்மேல்  இரக்கம் கொள்வதும் மன்னிப்பதும் பிரித்துப் பார்க்கவே இயலாதது. ஒன்று நடந்தால்தான் மற்றொன்று நடக்கும்.

Ä எனவேதான்  “எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும்என்று செபிக்க இயேசு கற்றுக்கொடுத்தார்.

Ä மனித இயல்பில் இது இயலாது எனினும் கிறிஸ்துவோடு ஒன்றித்திருப்பதாலும், தூய ஆவியாரின் துணையோடும் நமக்கு எதிராகக் குற்றம் செய்வோரை மன்னிப்பது சாத்தியமே.கலா. 5:25. [2838-2845, 2862]


மலைப் பொழிவில் இந்த கருத்தை இயேசு முன்வைப்பதிலிருந்து இதன் முக்கியத்துவத்தை  உணர்ந்துகொள்ளமுடியும். "[138] நாம் நமக்கு எதிராகக் குற்றம் செய்வோரை மன்னிக்கும்போதுதான் இறைவனின் பரிவிரக்கத்தைப் பெறுகிறோம்.


Ä மனித இயல்பில் நமக்குத் தீங்கு இழைத்தவர்களையும் துன்பம் வருவித்தவர்களையும்  மன்னிப்பது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

Ä இத்தகைய தருணங்களில் நாம் இயேசுவை மனதில் கொண்டுவர வேண்டும். தனக்கு மரண தண்டனை பெற்றுத்தந்து, சித்திரவதை செய்து, சிலுவையில் அறைந்து கொடூரமாகக் கொன்றவர்களையும் மன்னிக்குமாறு தன் தந்தையிடம் மன்றாடியதை நினைவுக்குக் கொண்டுவர வேண்டும்.

Ä  நமது தகுதியற்ற நிலையிலும் நம்மை அன்பு செய்து பராமரித்து வரும் இறைவனை நினைக்க வேண்டும்.

Ä நாம் அடுத்திருப்பவர்கள்மேல் இரக்கம் கொள்ளாமல், ஒருவரை ஒருவர் மன்னிக்காமல் இறைவனின் இரக்கத்தையும் மன்னிப்பையும் கேட்பதற்கு நமக்கு என்ன தகுதி இருக்கிறது?

Ä நாம் அடுத்திருப்பவர் மேல் இரக்கம் கொள்வதும் மன்னிப்பதும், இறைவன் நம்மேல்  இரக்கம் கொள்வதும் மன்னிப்பதும் பிரித்துப் பார்க்கவே இயலாதது. ஒன்று நடந்தால்தான் மற்றொன்று நடக்கும்.

Ä எனவேதான்  “எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும்என்று செபிக்க இயேசு கற்றுக்கொடுத்தார். [2838-2845, 2862]


Ä நமது வாழ்வின் ஒவ்வொரு நொடியும் உலக (அலகையின்) மாய கவர்ச்சிகளால் கடவுள் நம்மைப் படைத்ததின் நோக்கத்தை மறந்து, அவரின் கட்டளைகளை அசட்டை செய்து, பாவத்தை கட்டிக்கொள்ளும் சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்

Ä இயேசுவே இவ்வுலகில் வாழ்ந்தபோது மனித சுபாவத்தில் அலகையால் சோதிக்கப்பட்டார். எனவே மனித பலவினம் எத்தகையது என்பதை அறிவார்மனித பலத்தால்மட்டும் அவற்றை மேற்கொள்ள முடியாது என்பதையும் அறிந்துள்ளார்.

Ä  எனவேதான் அவர் நமக்குக் கொடுத்த செபத்தில் பவங்களை கட்டிக்கொள்ளும் சூழல்களில் இறைவனை நாட அவரின் பலத்தை இறைஞ்ச கற்பித்துள்ளார்.

Ä எனவேதான் அனைத்து பாவ சூழ்நிலைகளிருந்தும் நம்மை காக்கும்படி இறைவனை வேண்டுகிறோம்.  [2846-2849]