மனமாற்றத்திற்கும் வாழ்வை புதுப்பிப்தற்குமான நேரம்
ஊதாரி மைந்தன் திரும்பி வருதல் (லூக் 15:21)
தவக்காலம்
அருளின் காலம் எனவே கடவுளிடம்
திரும்பி வந்து நம் நேரத்தை
கடவுளுக்கு கொடுப்போம். தம்பதியர்களாக தவக்காலத்தில் ஆன்மீகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நேரம் மட்டுல்ல மாறாக
தம்பதியர்கள் மற்ற வேலைகள் இருப்பினும்
தங்களுக்காக தகுந்த நேரம் ஒதுக்கி
இருவரும் பகிர்தல் செபம், தானம், தர்மம்
செய்வதைவிட மேலானது. எனவே தவக்காலம் சுட்டிகாட்டுவது,
இயேசுவின் உயிர்ப்பை கொண்டாடுவதில் தான் நம் நம்பிக்கை
அடங்கியிருக்கிறது. தவக்காலம் உயிர்ப்பு பொருவிழாவை மகிழ்சியோடு கொண்டாடுவதற்கான தயாரிப்பின் காலம்.
தவக்காலம்
(LENT Season )
LEND – குடும்பத்திற்காக
தன்னிடம் இருப்பதைக் கொடுத்தல் (தம்பதியார்கள்)
ERASE – பாவங்களை
களைதல் (தூய்மைப்படுத்துதல்)
NEAR – கடவுளின்
அருகாமையில் செல்லுதல் (புனிதத்தை நோக்கி)
TOWARDS – மாற்றத்தை
நோக்கி பயணம் (புது வாழ்வு)
நமது
உடலை ஆரோக்கியமாக வைக்கத் தேவை உடற்பயிற்சி
அதுபோலவே நமது ஆன்மீக வாழ்வை
நெறிப்படுத்த செபம், தியானம் என்ற
ஆன்மீகப் பயிற்சி தேவைப்படுகிறது. தவக்காலம்
ஆன்மீக காரியங்களில் முழுமையாக ஈடுபட்டு மனம்மாற்றம் பெற்றிட திருவழிபாடுகள் நமக்கு
அழைப்பு கொடுக்கின்றது. விவிலியத்திலே எவ்வாறு விபச்சாரத்தில் பிடிப்பட்டபெண்,
பாவியான பெண் இயேசுவினுடைய கால்களை
கழுவினாள், ஊதாரி மைந்தன் திரும்பி
வந்து, தந்தையே வானகத்துக்கும் உமக்கும்
எதிராக பாவம் செய்தேன் என்றான்.
இந்த பாவிகளுடைய உறவினர்களும் மக்களும் அவர்களுடைய பாவத்தை முன்னிருத்தி பார்த்தார்கள்
உள்ளங்களை பார்க்கவில்லை ஆனால் இயேசு அவர்களுடைய
பாவக்கரைகளை பார்க்கவில்லை மாறாக அவர்களுடைய உள்ளத்தைப்
பார்க்கிறார். அவர்களுடைய உண்மையான மனவருந்துதல் காரணமாக இயேசு அவர்களை
மன்னித்து ஏற்றுக்கொள்கின்றார். இதைப்போன்று நாமும் நம்முடைய பாவம்
நிறைந்த வாழ்வை நினைத்து பார்ப்போம்
நமது குற்றத்தை நாம் ஏற்றுக்கொள்வோம். உண்மையாக
மனவருந்தி மனம் திருந்தி மன
மாற்றம் பெற்று இயேசுவிடம் வருவோம்.
நமது பலவீனத்தின் மத்தியிலும் நாம் ஒவ்வொருவரையும் ஏற்றுக்கொண்டு
அன்பு செய்து, மன்னித்து வாழும்
பொழுது நாம் அவற்றை மற்றவர்களுக்கும்
கொடுக்கின்றோம்.
செபம்
நம்மை கடவுளிடம் கொண்டும் செல்லும் கருவியாக இருக்கின்றது.
செபம் கடவுளுக்கும் நமக்கும் நடக்கின்ற உரையாடல். நாம் நினைத்ததை அவரிடம்
எடுத்துக் கூறுகின்றோம். அதைத்தான் இயேசு அப்போஸ்தலர்களுக்கும் கற்றுக்கொடுக்கின்றார்.
- நற்குணம் ஒன்று இந்த தவக்காலத்தில்
நான் கடைபிடிக்கக்கூடியது. எ.கா: எனது
வேலையை மகிழ்வோடு செய்வேன், பெறுப்புடன் செய்வேன், நம்பிக்கையுடன் செய்வேன்.
குடும்பத்திலிருந்துதான்
தானம் ஆரம்பிக்க வேண்டும் தம்பதியர்கள் தங்களுக்குள்ளேயே பகிர்தல் இருக்க வேண்டும் இது
பொருளாளவில் மட்டுமல்ல உடலளவிலும் கூட. தானம் நாம்
வாழும் பொருளாதார நிலையிலிருந்து நம்மால் செய்ய முடிந்ததை
செய்ய முற்படுதல், இதைத்தான் திருதந்தை பெனடிக்ட் 16 கூறுகிறார், நமது கண்கள் உறவினர்களுடைய
தேவைகளை கண்டுகொள்ளாதபோது கடவுள் முன் நாம்
குருடராக தென்படுகின்றோம். நம்மோடு வாழ்கின்றவர்களின் தேவைகளை
அறிந்து உதவுபவர்களாக நாம் மாற திருதந்தை
அழைப்பு விடுக்கின்றார். ஒவ்வொரு தம்பதியரும் தங்களால்
முடிந்த அளவு சேமித்து தேவையிலிருக்கின்ற
குழந்தைக்கு பணமாகவே பொருளாகவே கொடுத்து
உதவும்போது உயிர்ப்பு பெருவிழா மிகவும் மகிழ்சியுடையதாகவும் அர்ந்தமுள்ளதாகவும்
இருக்கும்.
- தானம் செய்யும் போது
நாம் இயேசுவை பிரதிபளிக்கின்றோம். அதுமட்டுமல்ல
நாம் கடவுளின் அருகில் செல்கின்றோம்.
தம்பதியாகளாக என்ன தானம் செய்யமுடியும்
என்று சிந்தித்து பாருங்கள்.
தம்பதியர்களாக
தவம் - விரதம் இருப்பது பல்வேறு
காரணங்களுக்காக ஆனால் தவக்காலம் ஆன்மீகத்தில்
ஊன்றவும், புதுப்படைப்பாக புது வாழ்வு பெறவும்
தான். தவம் உடலையும் ஆன்மாவையும்
கட்டுப்படுத்தி ஆன்மீகத்திற்கு கொண்டு செல்கிறது. இறைவார்த்தை
“மனிதன் வாழ்வது அப்பத்தினால் மட்டுமன்று
மாறாக கடவுளிடமிருந்து வருகின்ற ஒவ்வொரு வார்த்தைகளிலிருந்தும் வாழ்கின்றான் மத்
4:4. இயேசு நாற்பதுநாள் தவம் இருந்தார், எலியாவும்
40 நாள் தவம் இருந்தார். தவத்தின்
மூலம்தான் நம்மை மேம்படுத்தவும் உறவுகளை
வழுப்படுத்தம் முடியும். நாம் தூய்மையான வாழ்வு
வாழ்வதற்கு சில மாற்றங்கள் செய்ய
வேண்டும். திருமுழுக்கு யோவான் மனமாற்றத்திற்காக மக்களை
அழைக்கின்றார் நீங்கள் கடவுளிடம் செபத்தோடும்
தவத்தோடும் ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள். தவக்காலம் மனமாற்றத்தின் காலம் எனவே தவத்தோடு
நாம் நம் உறவுகளை புதுப்பிக்க
முயற்சி செய்வோம்.
- நமது உடல்பசி ஆண்டவரை
தேடுகின்ற ஆன்மீக பசியாக இருக்கின்றதா?
- உணவில்லாமல் நாம் மயங்கிவிடுகின்றோம் ஆனால்
இயேசு இல்லாமல் நம் நிலை என்ன?
- கடவுள் நமக்கு தேவையா?
அவரில்லாத போது எனது உணர்வுகள்
என்ன?
- கடவுளை தாகத்தோடு தேடுகின்றோனா?
தவம்
நம்பிக்கையாளரை தூய்மைப்படுத்தி கடவுளை முன்னிருத்தி ஆன்மீகத்தில்
வளரவைக்கின்றது. தவம் மனமாற்றத்திற்கு தன்னையே
வருத்தி தூய்மைப்படுத்துகிறது. தவம் கடவுளை முன்னிலைப்படுத்தி
நம்மை நெருக்கமடையச் செய்கின்றது.
தவக்கதால்த்தை
அர்த்தமுள்ளதாக மாற்ற தம்பதியர்களுக்கான வழிமுறைகள்;:
1. தவம்
- கோபம், வெறுப்பு விடுத்து அன்பை கொடுத்தல்
2. தவம்
- பிரிவினை விடுத்து ஒற்றுமை
3. தீர்ப்பிடுதல்
விடுத்து – நான் எப்படி இருக்கின்றேன்
என்று சுய ஆய்வுசெய்தல்?
4. குறைகூறுதல்
விடுத்து – பாராட்டுதல்
5. அதிக
செலவு செய்வதை விடுத்து – தேவையானவற்றிக்கு
செலவிடுதல்
தம்பதியர்களும்
அனைவரும் மூன்று
விதமான ஒறுத்தல் முயற்சிகளை தவக்காலத்தில் செய்ய திருஅவை அழைப்பு
விடுக்கிறது அவை: செபம், தவம்,
தானம்.
தானம்
- என் உள்ளத்தை கொடுத்தல்
தவம்
- இரக்கத்தை காட்டுத்தல்
செபம்
- தினமும் இறைவார்த்தையில் செபித்தல்
Don Bosco NEST
Tirupur 641 606
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக