1 கொரிந்தியர்
1. கொரிந்து மக்களிடையே சண்டை சச்சரவுகள் இருப்பதாகக் எவ்வீட்டார் பவுலுக்கு தெரியப்படுத்தினர்?
2. பவுலிடமிருந்து திருமுழுக்கு பெற்றவர்கள் யார்?
3. மனித ஞானத்தின் அடிப்படையிலான சொற்களில்;நற்செய்தியை அறிவித்தலாகாது. அவ்வாறு அறிவித்தால் எது பொருளற்றுப் போய்விடும்?
4. சிலுவை பற்றியச் செய்தி யாருக்கு மடமை? யாருக்கு வல்லமை?
5. அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்கு எவ்வாறு கிறிஸ்து இருக்கிறார்?
6. பெருமை பாராட்ட விரும்புகிறவர் யாரைக் குறித்தே பெருமை பாராட்ட வேண்டும்.?
7. கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் அறிகிறவர் யார்?
8. எதன் வழியாக பவுல் கொரிந்து மக்களை கிறிஸ்தவர்களாக ஈன்றெடுத்தார்?
9. ………………………..பேச்சில் அல்ல, செயல்பாட்டில்தான் இருக்கிறது?
10. ………………, …………………. போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு பாஸ்காவைக் கொண்டாடுவோமாக என்று பவுல் அழைக்கிறார்?
11. இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்ளாதவர்கள் யார்?
12. உடல் ………………………. அல்ல, ………………………….. உரியது.
13. யுhரை உயிர்த்தெழச் செய்த கடவுள் தம் வல்லமையால் நம்மையும் உயிர்த்தெழச் செய்வார்?
14. ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் …………………………. ஒன்றித்திருக்கிறார்.
15. மனிதர் செய்யும் எப்பாவமும் எதற்குப் புறம்பானது?
16. ஏதில் ஈடுபடுவோர் தம் சொந்த உடலுக்கெதிராகவே பாவம் செய்கின்றனர்?
17. கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் எது?
18. யார் திருமணம் செய்து கொள்ளட்டும் என்று பவுல் குறிப்பிடுகிறார்?
19. …………………….ல் உருகுவதைவிடத் திருமணம் செய்து கொள்வதே நல்லது.
20. விருத்த சேதனம் செய்வதிலும் பயனில்லை; செய்யாமல் இருப்பதிலும் பயனில்லை; மாறாக பயன்தருவது எது?
21. யாரைக் கடவுள் அறிவார்?
22. நமக்குக் கடவுள் ஒருவரே; அவர் யார்?
23. வலுவற்ற மனச்சான்றைக் காயப்படுத்திச் சகோதரர் சகோதரிகளுக்கு எதிராகப் பாவம் செய்தால், அது ……………………………. எதிரான பாவம் ஆகும்.
24. பவுலின் திருத்தூதுப்பணிக்கு அடையாளச் சின்னமாய் அமைவது எது?
25. "போர் அடிக்கும் மாட்டின் வாயைக் கட்டாதே" என்று எந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?
26. நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு. – அதிகாரம் மற்றும் வசனத்தைக் குறிப்பிடுக!
27. நம் முன்னோர் மோசேயோடு இணைந்திருக்கும்படி எதனால் திருமுழுக்குப் பெற்றார்கள்?
28. பரத்தைமையில் ஈடுபட்டதனால் ஒரேநாளில் எத்தனை பேர் மடிந்தனர்?
29. சிலைகளுக்குப் பலியிடப்பட்டவை ……………….. அல்ல, …………………….. பலியிடப்பட்டவையாகும்.
30. இறைச்சிக் கடையில் விற்கப்படும் எதையும் உண்ணலாமா? உண்ணக்கூடாதா?
31. மண்ணுலகமும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் யாருடையவை?
32. உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் எதற்காக செய்யவேண்டும் என்று பவுல் அறிவுறுத்துகிறார்?
33. ஒவ்வொரு பெண்ணுக்கும் தலைவர் ஆண்; ஆணுக்குத் தலைவர் யார்?
34. கிறிஸ்துவுக்குத் தலைவர் யார்?
35. அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் எதை அறிவிக்கிறோம்?
36. ஒருவர் எப்பொழுது ஆண்டவரின் உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறார்?
37. ஆண்டவருடைய உடல் என உணராமல் உண்டு பருகுபவருக்கு நேரிடுவது என்ன?
38. கடவுளின் ஆவியால் ஆட்கொள்ளப்பட்டுப் பேசும் எவரும் …………………………………… எனச் சொல்ல மாட்டார்?
39. யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் எதற்காகத் திருமுழுக்குப் பெற்றோம்?
40. மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் எது இல்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன் என்று பவுல் குறிப்பிடுகிறார்?
41. நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் எது தலைசிறந்தது?
42. பரவசப்பேச்சு பேசுகிறவர் யாரிடம் பேசுகிறார்?
43. இறைவாக்கு உரைப்பவர் யாரிடம் பேசுகிறார்?
44. தம்மை மட்டுமே வளர்ச்சியுறச் செய்கிறவர் யார்?
45. திருச்சபையை வளர்ச்சியுறச் செய்கிறவர் யார்?
46. இறந்தோர் உயிர்த்தெழ மாட்டார் எனில் யாரும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகிவிடும்?
47. …………………………………… அடிபணியவைக்கும்வரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும்?
48. கடைசிப் பகைவன் யார்?
49. எங்கு பவுல் கொடிய விலங்குகளோடு போராடினார்?
50. அக்காயா நாட்டில் முதன் முதல் கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டவர்கள் யார்?