உரோமையர் வினாடி வினா

 உரோமையர்


1. எதைத் தருவதாகக் கடவுள் தம் இறைவாக்கினர் வழியாக ஏற்கெனவே திருமறை நூலில் வாக்களித்திருந்தார்.


2. யாரிடமிருந்து உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! என்று பவுல் குறிப்பிடுகிறார்?


3. எதை முன்னிட்டு வெட்கப்படமாட்டேன் என்று பவுல் குறிப்பிடுகிறர்?


4. யார் தம் நம்பிக்கையால் வாழ்வு அடைவர் என மறைநூலில் எழுதியுள்ளது?


5. யாருடைய நெறிகேடுகளின் மீதும் கடவுளின் சினம் விண்ணினின்று வெளிப்படுகிறது?


6. கடவுள் எதற்காக பரிவுகாட்டுகிறார்?


7. கடவுள் ஒவ்வொருவருக்கும் எதற்கேற்ப கைம்மாறு செய்வார்?


8. கடவுள் யாருக்கு நிலைவாழ்வை வழங்குவார்?


9. நன்மை செய்யும் அனைவருக்குமே ………….…, ………………, ……………… கிடைக்கும்.


10. திருச்சட்டத்துக்கு உட்பட்டு எவரும் பாவம் செய்தால் எதனால் தீர்ப்பளிக்கப்படுவார்?


11. எதன் வழியாகக் கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்குகிறார்?


12. ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் ………………………………………………அமைந்தது.


13. யார் வழியாய் அருள் ஆட்சி செய்கிறது?


14. எதனால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம்?


15. கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், …………………… என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை.


16. பாவத்துக்குக் கிடைக்கும் கூலி என்ன?


17. கடவுள் நமக்கு கொடுக்கும் அருள்கொடை என்ன?


18. ஊனியல்பின்படி வாழ்ந்தபோது, எதனை ஒரு வாய்ப்பாக்கிக் கொண்டு பாவ இச்சைகள் நம்முடைய உறுப்புகளில் செயலாற்றின?


19. ……………………………………இல்லையேல் பாவத்திற்கு உயிரில்லை.


20. கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு இனி எது கிடையாது?


21. ஆவிக்குரிய மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது என்ன?


22. ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் யாருக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது?


23. யார் கடவுளின் மக்கள்?


24. கடவுளுக்கு உகந்த முறையில் இறைமக்களுக்காகப் பரிந்துபேசுகிறவர் யார்?


25. "ஈசாக்கின் மூலமே உன் வழிமரபு விளங்கும்" என்று யாருக்குச் சொல்லப்பட்டது?


26. யார் கடவுளின் பிள்ளைகளாகவும் ஆபிரகாமின் வழிமரபினர்களாகவும் கருதப்படுகின்றனர்.


27. மனிதர் விரும்புவதாலோ உழைப்பதாலோ எதுவும் ஆவதில்லை; ……………………………..லேயே எல்லாம் ஆகிறது?


28. "படைகளின் ஆண்டவர் நம்மில் சிலரையேனும் எஞ்சியிருக்கச் செய்யாவிடில் சோதோமைப்போல் நாம் ஆகியிருப்போம்; கொமோராவுக்கு ஒப்பாகியிருப்போம்" என்று முன்னுரைத்தவர் யார்?


29. யார் திருச்சட்டத்தின் நிறைவு?

30. எவ்வாறு அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என உள்ளுர நம்பினால் மீட்புப் பெறுவோம்?


31. "ஒன்றும் இல்லாத இனத்தால் அவர்களுக்கு எரிச்சலூட்டுவேன்; மதிகெட்ட வேற்றினத்தால் அவர்களுக்குச் சினமூட்டுவேன்" என்று சொன்னவர் யார்?


32. "தேடாதவர்கள் என்னைக் கண்டடைய இடமளித்தேன்; நாடாதவர்களுக்கு என்னை வெளிப்படுத்த இசைந்தேன்" என்று கூறியவர் யார்?


33. பவுல் எக்குலத்தைச் சார்ந்தவர்?


34. எக்கொடையை நாம் பெற்றிருந்தால் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு ஏற்றவாறு அதைப் பயன்படுத்த வேண்டும்?


35. கடவுளின் சினத்தின் பொருட்டு மட்டும் அல்ல, ………………… பொருட்டும் பணிந்திருத்தல் வேண்டும்.


36. வாழ்ந்தாலும், இறந்தாலும் நாம் யாருக்கு உரியவர்களாய் இருக்கிறோம்?


37. எதற்காக கிறிஸ்து இறந்தும் வாழ்கிறார்?


38. இறையாட்சி என்பது எவற்றை அடிப்படையாகக் கொண்டதல்ல?


39. இறையாட்சி என்பது எவற்றை அடிப்படையாகக் கொண்டது?


40. கடவுளுக்கு உகந்தோராயும் மக்களின் மதிப்புக்கு உரியோராயும் இருப்பவர்கள் யார்?


41. உறுதியான மனநிலையோடு செய்யப்படாததெல்லாம் ……………………………


42. எதற்காக கிறிஸ்து விருத்தசேதனம் செய்து கொண்டவர்களுக்குத் தொண்டர் ஆனார்?


43. பவுலின் குருத்துவப் பணி என்பது எது?


44. …………………….. தொடங்கி ………………………. மாநிலம் வரை எங்கும் சுற்றிக் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் பணியை முடித்துவிட்டேன் என்று பவுல் குறிப்பிடுகிறார்?


45. எருசலேமில் வாழும் ஏழை இறைமக்களுக்கு சிறிது பொருளுதவி செய்ய முன்வந்தவர்கள் யார்?


46. எருசலேமில் வாழும் இறைமக்களுக்கு யார் கடன்பட்டவர்கள்?


47. கெங்கிரேயாவில் இருக்கும் சபையில் திருத்தொண்டராய் இருந்தவர் பெயர் என்ன?


48. பவுலின் உயிரைக் காக்கத் தலைகொடுக்கவும் முன்வந்தார்கள் யார்?


49. ஆசியாவில் கிறிஸ்துவை முதன் முதல் ஏற்றுக் கொண்டவர் யார்?


50. யாருடைய அன்னை தனக்கும் அன்னைப் போன்றவர் என்று பவுல் கூறுகிறார்?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக