திருத்தூதர் பணிகள்
1. இயேசுவை சீடர்களிடமிருந்து எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்து எது?
2. "கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்" என்று கூறியது யார்?
3. "அக்கலிதமா" என்பதன் பொருள் யாது?
4. "அவன் வீடு பாழாவதாக! அதில் எவரும் குடிபுகாதிருப்பாராக!"; "அவனது பதவியை வேறொருவர் எடுத்துக்கொள்ளட்டும்!" என்று எந்நூலில் எழுதப்பட்டுள்ளது?
5. யூதாசிற்குப் பதிலாக பதினொரு திருத்தூதர்களோடு சேர்த்துக்கொள்ளப்பட்ட நபர் யார்?
6. எந்த நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள்?
7. இறைவேண்டல் செய்யும் நேரமாகிய பிற்பகல் மூன்று மணிக்கு கோவிலுக்குச் சென்றவர்கள் யார்?
8. பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்தவரை நாள்தோறும் கோவிலின் எந்த இடத்தில் வைப்பர்?
9. நலமடைந்த நபர் பேதுருவையும் யோவானையும் விடாமல் பற்றிக் கொண்டிருக்க, எல்லா மக்களும் திகிலுற்று எவ்விடத்திற்கு ஒரு சேர ஓடிவந்தனர்?
10. பேதுரு, யோவான் வார்த்தைகளை கேட்டு நம்பிக்கை கொண்ட ஆண்களது எண்ணிக்கை எத்தனை?
11. தலைமைச் சங்கத்தார் "இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது" என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டதற்கு பேதுருவும் யோவானும் மறுமொழியாக கூறியது என்ன?
12. சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்புக்கு திருத்தூதர்கள் இட்ட பெயர் யாது?
13. தன்னுடைய நிலத்தை விற்று அந்த தொகையில் ஒரு பகுதியைத் தன் மனைவி அறியத் தனக்கென்று வைத்துக் கொண்டு, மறு பகுதியைத் திருத்தூதரின் காலடியில் கொண்டுவந்து வைத்தவர் மற்றும் அவரது மனைவியின் பெயர் என்ன?
14. யார் நடந்து செல்லும்போது அவர் நிழல் சிலர் மேலாவது படுமாறு மக்கள் உடல்நலமற்றோரைக் கட்டில்களிலும் படுக்கைகளிலும் கிடத்திச் சுமந்துகொண்டுவந்து வீதிகளில் வைத்தார்கள்?
15. "நீங்கள் போய்க் கோவிலில் நின்று வாழ்வு பற்றிய வார்த்தைகளையெல்லாம் மக்களுக்கு எடுத்துக் கூறுங்கள்" என்று கூறியவர் யார்?
16. “கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது; நீங்கள் கடவுளோடு போரிடுபவர்களாகவும் ஆவீர்கள்." – யாருடைய கூற்று?
17. கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை என்று யாருக்கு எதிராக முணுமுணுத்தனர்?
18. பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவதற்கு நியமித்த எழுவர் பெயர்கள் யாவை?
19. ஸ்தேவானோடு வாதாடியவர்கள் யார்?
20. தலைமைச் சங்கத்தில் அமர்ந்திருந்த அனைவரும் ஸ்தேவானை உற்றுப் பார்த்தபோது அவரது முகம் யாருடைய முகம்போல் இருக்கக் கண்டனர்?
21. ஸ்தேவான் மீது கல்எறிந்தபோது சாட்சிகள் தங்கள் மேலுடைகளை எந்த இளைஞரிடம் ஒப்படைத்தார்கள்?
22. யார் ஸ்தேவானை அடக்கம்செய்து, அவருக்காக மாரடித்துப் பெரிதும் புலம்பினர்?
23. யார் வீடுவீடாய் நுழைந்து ஆண்களையம் பெண்களையும் இழுத்துக்கொண்டுபோய், அவர்களைச் சிறையிலடைக்கச் செய்து, திருச்சபையை அழித்துவந்தார்?
24. தூய ஆவியை பணம் கொடுத்து வாங்க முன்வந்தவன் யார்?
25. "நீ எழுந்து எருசலேமிலிருந்து காசாவுக்குச் செல்லும் வழியாகத் தெற்கு நோக்கிப் போ" என்று யார் யாரிடம் கூறினார்?
26. எத்தியோப்பிய அரச அலுவலர் தமது தேரில் அமர்ந்து எந்த இறைவாக்கு நூலைப் படித்துக் கொண்டிருந்தார்?
27. சவுல் எத்தனை நாள் பார்வையற்றிருந்தார்?
28. சவுல் மேன்மேலும் வல்லமை பெற்றவராய், ……………………………. என்பதை மெய்ப்பித்துத் தமஸ்குவில் வாழ்ந்து வந்த யூதர்கள் அனைவரும் மனம் குழம்பச் செய்தார்?
29. யார் சவுலுக்குத் துணை நின்று அவரைத் திருத்தூதர்களிடம் அழைத்துச் சென்றார்?
30. எட்டு ஆண்டுகள் முடக்குவாதத்தால் படுக்கையில் கிடந்த பெண்ணின் பெயர் என்ன?
31. தபித்தா என்னும் பெயருடைய பெண் சீடரின் மற்றொரு பெயர் யாது?
32. இத்தாலியா எனப்பட்ட படைப்பிரிவின் நூற்றுவர் தலைவர் பெயர் என்ன?
33. ஸ்தேவானை முன்னிட்டு உண்டான துன்புறுத்தலால் மக்கள் எதுவரை சிதறிப்போயினர்?
34. எங்கு முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள்?
35. தீர், சீதோன் மக்கள் மீது கடுஞ்சினம் கொண்டிருந்தவர் யார்?
36. பர்னபாவும் சவுலும் தங்கள் திருத்தொண்டை முடித்தபின், யாரைக் கூட்டிக்கொண்டு, எருசலேமிலிருந்து திரும்பிச் சென்றார்கள்?
37. எலிமா என்றாலே …………………………. என்பது தான் பொருள்.
38. பவுல் செய்ததைக் கூட்டத்தினர் கண்டு "தெய்வங்கள் மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன" என்று எந்த மொழியில் மக்கள் குரலெழுப்பினர்?
39. பர்னபாவைச் …………………… என்றும், பவுலை………………… என்றும் அழைத்தார்கள்.
40. யாரைத் தங்களுடன் கூட்டிச் செல்லப் பர்னபா விரும்பினார்?
41. நாம் கடவுளுடைய பிள்ளைகளாய் இருப்பதால்,எது போன்ற உருவங்களைப் போலக் கடவுள் இருப்பார் என நாம் எண்ணுவது முறையாகாது?
42. அக்கிலா, பிரிஸ்கிலா இவர்கள் செய்த தொழில் என்ன?
43. மாயவித்தைகளைச் செய்துவந்தவர்கள் சுட்டெரித்த நூல்களின் விலை என்ன?
44. பலகணியில் உட்கார்ந்திருந்து பவுலின் உரையைக் கேட்டுக்கொண்டிருந்தபோது தூக்கத்தில் மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்த இளைஞன் பெயர் என்ன?
45. யாருடைய காலடியில் அமர்ந்து பவுல் திருச்சட்டங்களில் நுட்பமாகப் பயிற்சி பெற்றார்?
46. சதுசேயப் பிரிவினர் எவைகளெல்லாம் இல்லை என்று கூறி வந்தனர்?
47. பெலிக்சுக்குப் பின் ஆளுநராக பதவியேற்றவர் யார்?
48. பெஸ்தைச் சந்திக்கச் செசரியா வந்தவர்கள் யார்?
49. பவுலை மனித நேயத்துடன் நடத்தி, அவர் தம் நண்பர்களிடம் செல்லவும் அவர்கள் அவரைக் கவனித்துக் கொள்ளவும் அனுமதித்தவர் பெயர் என்ன?
50. காய்ச்சலினாலும் வயிற்று அளைச்சலாலும் நோயுற்றுக் கிடந்து, பவுலால் குணமடைந்தவர் யார்?