25 ஆம் ஆண்டு திருமணத் திருவழிபாடு
(பங்கில் சிறப்பு மரியாதை செய்தல், சிறப்பு இடம் ஆலயத்தில் கொடுத்து திருப்பலி காணச்செய்தல், தொடக்கத்தில் குருவோடு வரும்போது மெழுகுதிரி ஏந்தி வருதல், நிணைவு பரிசு கொடுத்தல், திருப்பலி முடிந்த பிறகு கேக்- இனிப்பு கொடுத்தல், அனுபவ பகிர்வு- இறை அனுபவம்)
வருகை பவனி
விரிவுரையாளர்: கிறிஸ்துவின் அன்புள்ள சகோதரர்களே சகோதரிகளே! மங்கலம் நிறைந்த இத்திருமண நன்றி திருப்பலியில் பங்குகொள்ள இறைவனுடைய ஆலயத்தில் நாம் கூடியுள்ளோம். படைப்பின் தொடக்கத்தில் இறைவன் மனிதனை ஆணும் பெண்ணுமாக படைத்தார். இருவரும் ஒரே உடலாக அன்புறவில் வாழ வேண்டுமென்று ஆசீர்வதித்தார். ஆண்டவராகிய இயேசு திருமணத்தை ஒரு அருட்சாதனமாக உயர்த்தினார். இப்போது மணமக்கள் ----------------- இருவரும் திருமண அருட்சாதனத்தைப்பெற்று இறைவனின் ஆசியுடன் 25 ஆண்டுகள் குடும்பத்தில் பிரமாணிக்கமாக வாழ்ந்து கடவுளுக்கு நன்றி பலி செலுத்த வந்துள்ளனர். அவர்களின் மகிழ்ச்சியில் நாமும் பங்குகொள்வோம். அவர்களுக்காக நாமும் இறைவனிடம் வேண்டுவோம். இப்பொழுது குரு, நம் அனைவர் பெயராலும் மணமக்களை வரவேற்கின்றார்.
ஆலய முற்றத்தில்
குரு: அன்புமிக்க வெள்ளி விழா கொண்டாடும் தம்பதியர்களே! திருமண அருட்சாதனத்தின் வழியாக இறைவனின் அருளைப்பெற்று அவரது திருச்சன்னதியை நாடி வந்திருக்கின்றீர்கள். உங்களோடு இன்று திருச்சபை மகிழ்கின்றது. ‘பரமனின் ஆலயத்தில் பக்தியுடன் வருக இறைவனின் ஆசீர் நிரம்பப் பெறுக’ என்று இங்கு கூடிவந்துள்ள இறைமக்கள் பெயரால் உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.
(குரு தீர்த்தம் தெளித்து மணமக்களுக்கு ஆசீர் அளித்து வரவேற்கின்றார்)
விரிவுரையாளர்: குருக்களுடனும், மணமக்களின் உறவினர்கள், நண்பர்களுடனும் சேர்ந்து நாம் அனைவரும் மணமக்களை மகிழ்ச்சியுடன் ஆலயத்திற்குள் அழைத்து வருவோம்.
வருகைப்பாடல்…
குத்துவிளக்கு ஏற்றுதல்:
தீ என்ற ஓரெழுத்தைக் கொண்டு, திரி என்ற ஈரெழுத்தை ஒளியேற்ற, தந்தை என்ற மூன்றெழுத்து மூலம், அன்னை என்ற மூன்றெழுத்து வழியே, பிள்ளை என்ற மூன்றெழுத்து கருவானது. எனவே ஐமுக விளக்கின் முதல் திரியை ஏற்றிட வெள்ளிவிழா மணமக்களை அன்புடன் அழைக்கின்றோம்.
பாவத்தோடு உலக வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் நம்மை பரிசுத்தமாக்குவது திருச்சபையும், அருட்சாதனக் கொண்டாட்டங்களும் தான். திருச்சபையின் ஞானம் பெற்ற குருமார்களின் உபதேசங்கள் அமைதியின் விதைகள். அவ்விதைகளைப் பரப்பும் விருட்சங்களாக தங்கள் வாழ்வு அமைய நான்காம் குழந்தைகள் (மகன் -மகள்)திரியனை ஏற்றுகிறார்கள்.
இன்பத்திலும் துன்பத்திலும் உறுதுணையாய் நம் உடனிருப்பவர் உறவினர்களும், நல்ல நண்பர்களும் தான். அவர்களைப் போல் மணமக்கள் என்றும் அன்புடன் இருக்க மூன்றாம் திரியினை நண்பர் ஏற்றுகிறார்கள்.
ஒளிரும் விளக்குதான் பிற விளக்குகளை ஒளிரச் செய்ய முடியும். பெற்றோர், ஆசிரியர், உறவினர், நண்பர்கள், திருச்சபையின் ஒளிரும் விளக்குகளாய் விளங்கும்; குடும்ப வாழ்வை ஏற்று வெற்றிகரமாக பயணிக்கும குடும்;பத்திற்கு அடையாளமாய் ஐந்தாம் திரியை (பொதுநிலையினர்- உறவிணர்கள்) ஏற்றுகிறார்கள்.
அர்ப்பண வாழ்வின் அடையாளமானவர் ஆன்மீகவாதிகள். துரும்பினைத் தூணாய் உயர்த்துபவர் துறவியர். அருகம் புல்லினை ஆலமரமாய் ஆக்குபவர் ஆசிரியர். மணமக்களை உருவாக்கிய குருக்கள், எனவே இத்திரியினை குரு ஏற்றுகிறார்கள்.
திருப்பலி துவக்கம்
குரு: பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே
எல்: ஆமென்.
குரு: எல்லாம் வல்ல இறைவனிடமும் (மன்னிப்பு மன்றாட்டு)
குரு: ஆண்டவரே இரக்கமாயிரும்
எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்
குரு: கிறிஸ்துவே இரக்கமாயிரும்
எல்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்
குரு: ஆண்டவரே இரக்கமாயிரும்
எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்
வானவர் புகழ் கீதம் உன்னதங்களிலே . . . . .
சபை மன்றாட்டு: திருப்பலிப் புத்தகம் காண்க:661
குரு: நலமெல்லாம் நல்கிடும் இறைவா, நிலைத்த மணவுறவினால் (பெயர்-----------------------பெயர்-----------------------------) இவர்களை இணைத்து 25 ஆண்டுகளாய் இன்பத்திலும் துன்பத்திலும் கருத்தொருமித்து வாழும் வரமளித்தீர். இவர்களது அன்பைப் பெருக்கி, பனிதப்பழுத்தி இல்லற வாழ்வில் தொடர்ந்து இவர்கள் (தம் மக்களோடு) ஒருவருக்பொருவர் துணையாய் இருந்து மகிழச் செய்தருளம்.
உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் ஒரே இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் சுதனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்
முதல் வாசகம்: தொடக்க நூலிலிருந்து வாசகம்
அதிகாரம் 2: இறைவசனங்கள் 18 முதல் 24 முடிய.
ஆண்டவராகிய கடவுள், “மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதன்று அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்” என்றார். கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான். தனக்கு தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை. ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும்பொழுது அவன் விலா எலும்பு ஒன்று எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார். ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்த எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்து வந்தார். அப்பொழுது மனிதன், “இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையும் சதையுமானவள் ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால் இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்” என்றான். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.
வாசகர்: இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
எல்: இறைவா உமக்கு நன்றி.
தியானப் பாடல்…
இரண்டாம் வாசகம்:
புனித பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்.
அதிகாரம் 3: இறைவசனங்கள் 1 முதல் 9 முடிய.
திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்குப் பணிந்திருங்கள். இதனால், அவர்களுள் சிலர் கடவுளுடைய வார்த்தையை ஏற்காதிருந்தாலும் மரியாதையுடைய உங்கள் தூய நடத்தையைக் கண்டு, கவரப்பட்டு நல்வழிப்படுத்தப்படுவர். அப்போது வார்த்தையே தேவைப்படாது. முடியை அழகுபடுத்துதல், பொன் நகைகளை அணிதல், ஆடைகளை அணிதல் போன்ற வெளிப்படையான அலங்காரமல்ல, மாறாக, மனித உள்ளத்தில் மறைந்திருக்கும் பண்புகளாகிய பணிவும் அமைதியுமே உங்களுக்கு அழியாத அலங்காரமாய் இருக்கட்டும். கடவுள் பார்வையில் அதுவே விலையுயர்ந்தது.
முற்காலத்தில் கடவுள் மேல் நம்பிக்கை கொண்டிருந்த தூய பெண்களும் இவ்வாறுதான் தங்களை அணி செய்துகொண்டார்கள். தங்கள் கணவருக்குப் பணிந்திருந்தார்கள். அவ்வாறே, சாரா ஆபிரகாமைத் “தலைவர்” எனறழைத்து அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தார். நீங்களும் நன்மை செய்து, எவ்வகை அச்சுறுத்தலுக்கும் அஞ்சாது இருப்பீர்கள் என்றால் சாராவின் புதல்வியராய் இருப்பீர்கள்.
அவ்வாறே, திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியர் வலுக்குறைந்தவர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து, அவர்களோடு இணைந்து வாழுங்கள். வாழ்வு தரும் அருளுக்கு உடன் உரிமையாளராக இருப்பதால் அவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள். அப்போதுதான் நீங்கள் தடையின்றி இறைவேண்டல் செய்ய முடியும்.
இறுதியாக, நீங்கள் எல்லாரும் ஒருமனப்பட்டிருங்கள். பிறரிடம் இரக்கமும் சகோதர அன்பும் பரிவுள்ளமும் மனத்தாழ்மையும் கொண்டிருங்கள். தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள். பழிச்சொல்லுக்குப் பழிச்சொல் கூறாதீர்கள். மாறாக, ஆசி கூறுங்கள். ஏனென்றால் கடவுள் வாக்களித்த ஆசியை உரிமையாக்கிக் கொள்வதற்கே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
வாசகர்: இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
எல்: இறைவா உமக்கு நன்றி
அல்லேலூயா…
நற்செய்தி வாசகம்…
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம்மோடும் இருப்பாராக
குரு: தூய யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 9-12
எல்: ஆண்டவரே, உமக்கு மகிமை
இயேசு தம் சீடர்களை நோக்கி கூறியதாவது
என் தந்தை என்மீது அன்பு கொண்டுள்ளதுபோல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன் என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவரது அன்பில் நிலைத்திருப்பது போல, நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும், உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன். “நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் ஒருவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை”.
குரு: இது கிறிஸ்துவின் நற்செய்தி
எல்: கிறிஸ்துவே உமக்கு புகழ்
திருமண வெள்ளி விழா ஃ பொன்விழா மறையுரை
அன்புக்குரியவர்களே!
இன்று நன்றியின் நாள்! நன்றி யாருக்கு? இறைவனுக்கு!
இதோ, பிரமாணிக்கமாக வாழ்ந்த தம்பதியருக்கு நன்றி!
அன்று, 25 ஆண்டுகளுக்கு முன் - நீங்கள் திருச்சபையின் முன்னிலையில் உங்கள் சம்மதத்தை தெரிவிக்கும் வகையில் உங்கள் கரங்களைச் சேர்த்துப் பிடித்தீர்கள். அதே கரங்களை இப்பொழுது உற்று நோக்குங்கள்.
கணவனின் கரங்கள்:
1. அன்று 25 ஆண்டுகளுக்கு முன் இளமையாயிருந்த கரங்கள - இன்று, காலை முதல் மாலை வரை ஓயாமல் வேலை செய்து, உழைத்து, உரு குலைந்து, ஓடாய்த் தேய்ந்து போயுள்ளது. உழைத்து உழைத்து இன்று உருமாரி, கரடு முரடாக இருக்கும் அந்தக் கரங்களுக்கு நன்றி
2. அன்று 25 ஆண்டுகளுக்கு முன் வெறுங் கையை மட்டும்தான் நீட்டினார். ஆனால் அதன் பிறகு, தான் நீட்டிய கரங்கள் குடும்பத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் கொடுத்த அந்தக் கரங்களுக்கு நன்றி.
3. கடந்த 25 ஆண்டுகளாக அனைவரையும் சுமந்த கரங்கள், துள்ளித் திரிந்த குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்ற கரங்கள், இறைவனை வழிபட ஆலயத்திற்கு அழைத்துச் சென்ற கரங்கள், மனைவியையும், குழந்தைகளையும், வாழ்வின் உயர் நிலைக்கு கரம்பிடித்து வழி நடத்திய அந்த கரங்களுக்கு நன்றி.
4. கடந்த 25 ஆண்டுகளாக அனைவரையும் அன்பு செய்து அரவணைத்துக் கொண்ட கரங்கள், தவறு செய்பவர்களைக் கண்டித்துத் திருத்திய கரங்கள், இன்பத்திலும், துன்பத்திலும், உடல் நலத்திலும், நோயிலும் உடனிருந்து உதவி செய்த அந்த கரங்களுக்கு நன்றி.
மனைவியின் கரங்கள்:
1. அன்று 25 ஆண்டுகளுக்கு முன்பு மென்மையாக இருந்த கரங்கள், இன்று எப்படியுள்ளது பாருங்கள். பிள்ளைகளைப் பெற்றெடுத்து. அமுதூட்டி, பாராட்டி, சீராட்டி தன் கரங்களைத் தொட்டிலாக்கி சுமந்த கரங்கள், சமையல் அறையில் வேளா வேளைக்கு உணவு சமைத்து, பாத்திரம் தேய்த்து, தேய்ந்துபோன கரங்கள், துணிகளைத் துவைத்து, வீட்டைச் சுத்தம் செய்த கரங்கள் - ஆம் ஒரு பணிப் பெண்ணைப்போல் பணி செய்து கட்டிக் காத்த கரங்களுக்கு நன்றி!
2. கடந்த 25 ஆண்டுகளாக அன்பால் அரவணைத்தக் கரங்கள். தனது கண்ணீரை மட்டுமல்ல, பலருடைய கண்ணீரையும் துடைத்து ஆறுதல் அளித்தக் கரங்கள். ஏழைகளுக்கு உணவளித்து உதவிய கரங்கள். எந்த நேரத்தில் வந்தாலும் சலிக்காமல் உறவினர்களை உபசரித்த கரங்கள். வியாதியின் பொழுது ஊண் இன்றி, உறக்கம் இன்றி, ஒரு செவிலியரைப்போல உடனிருந்து பணிபுரிந்த கரங்களுக்கு நன்றி!
3. கடந்த 25 ஆண்டுகளாக தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் இறைவனிடம் மண்டியிட்டு மணி கணக்காக தொழுத கரங்கள், மாலையில் விளக்கேற்றி குடும்பத்தைச் செபத்திற்கு அழைத்தக் கரங்கள். குழந்தைகளுக்கு உண்ணவும், உடுக்கவும் கற்றுக்கொடுத்து, குழந்தைகள் உறங்கும் வரை தாலாட்டி அரவணைத்து, அன்பு செய்து உதவிய கரங்கள், முதன் முதலாக சிலுவை அடையாளம் வரையக் கற்றுக் கொடுத்து, எழுத, படிக்க கரம் பிடித்து வழி நடத்தியக் கரங்களுக்கு நன்றி!
4. கடந்த 25 ஆண்டுகளாக தன் கையில் ஒப்படைத்த பணத்தை கவனமாக செலவு செயது, வயிற்ளைக் கட்டி, வாயைக் கட்டி, சேமித்து வைத்து ஆபத்தான அவசரமான காலங்களில் ஆசையோடு அள்ளித் தந்தக் கரங்களுக்கு, ஒன்றை ஓராயிரமாக்கி, குடும்பத்தை நிர்வகித்த அந்த அன்னையின் கரங்களுக்கு நன்றி!
கடந்த 25 ஆண்டுகளாக நன்மை செய்த கரங்களுக்கு நன்றி கூறும் நேரம் இது! அன்று நீங்கள் அளித்த சம்மதத்தின் அடையாளமாக உங்கள் வலது கரங்களைச் சேர்த்துப் பிடியுங்கள் என்று குருவானவர் சொன்னபோது, நாணத்தால் வெட்கப்பட்டு உங்களது கையை நீட்டினீர்கள்.
இப்பொழுது உங்களது இரு கரங்களையும் கூப்பி ஒருவர் ஒருவரது முகத்தைப் பார்த்து,
“நன்றி” என்று அனைவர் முன்னும், திருச்சபையின் முன்னிலையில் சொல்லி உங்கள் நன்றியைத் தெரிவியுங்கள்.
ஒருவர் ஒருவருக்கு செய்த பணிவிடைக்காக நன்றி சொல்லுங்கள்.
தன் நலம் பாராது குடும்பத்திற்காக தன்னையே ஒரு மெழுகாக அழித்துக்கொண்ட தியாகத்திற்காக நன்றி சொல்லுங்கள்.
வெகுமதியையும:, பாராட்டையும், நன்றியைiயும் எதிர்ப்பாராது குடும்ப நலனையே பெரிதாகக் கருதி உழைத்து, உழைத்து, உருக் குலைந்துபோன அந்த தன் நலமில்லா தாய்மை உள்ளத்திற்காக “நன்றி” என்று சொல்லுங்கள். கை நிறைய பணம் இருந்தாலும் தவறான வழியிலும், சுய நலமான வழியிலும் செலவு செய்யாமல் குடும்பத்திற்காகவே முழுமையாக செலவு செய்த நேர்மையான உள்ளத்திற்காக நன்றி சொல்லுங்கள்.
வெறுப்பான வார்த்தைகளாலும், கடுமையான வார்த்தைகளாலும் சுட்டெரித்து காயப்படுத்திய நேரத்திலும் அiதியுடனும், அடக்கத்துடனும் குடும்பத்தை நடத்தி வந்த பண்பான உள்ளத்திற்காக நன்றி சொல்லுகங்கள்.
எரிச்சல் உண்டாக்கிய நேரத்திலும், கோபம் ஏற்படுத்திய நேரத்திலும் பொருமையாக பணி செய்த அந்த பணிவான உள்ளத்திற்காக நன்றி சொல்லுங்கள்.
நீங்கள் நல்லது செய்தபோதும், வருத்தம் தரக்கூடிய செயல்கள் செய்தபோதும் உங்களையே சுற்றி சுற்றி வந்த பாசமான உள்ளத்திற்காக நன்றி சொல்லுங்கள்!
எவ்வளவு வசதியிருந்தும், உரிமையிருந்தும் தாழ்ச்சியோடும், தன்னடக்கத்தோடும் வாழ்ந்த வந்த அந்த எளிமையான உள்ளத்திற்காக நன்றி சொல்லுங்கள்.
நீயா, நானா என்ற ஒரு சூழ்நிலை வந்தபோதும் நான் அல்ல நீ மட்டும் எனக்குப் போதும் என்று விட்டுக்கொடுத்து தாழ்ந்துபோன தாழ்ச்சியான உள்ளத்திற்காக நன்றி சொல்லுங்கள்.
புகழ்ச்சிக்குரிய செயல்கள் செய்தபோதும், பெருமைக்குரிய செயல்கள் செய்தபோதும், தாழ்ச்சியோடு நடந்துகொண்ட தன்னடக்கத்திற்காக நன்றி சொல்லுங்கள்.
மொத்தத்தில்
உங்களுக்கு எல்லாவற்றிலும், எல்லாமாகவும் இருந்து உடன் தோள் கொடுத்து வழி நடத்தி பகிர்ந்து கொண்டு வாழ்ந்த வந்த காலங்களுக்காக நன்றி, நன்றி, நன்றி என்று நன்றி சொல்லுங்கள்!
இருவரும் சேர்ந்து இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்!
குடும்பத்தினருடனும், குழந்தைகளுடனும், நண்பர்கள், உற்றார், உறவினர்களுடனும் சேர்ந்து இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்!
ஏனெனில் இந் நாள் நன்றியின் நாள்.
இறைவனின் இரக்கத்தை வெகுவாகப் பெற்றுக்கொண்டதற்காக இறைவனுக்கு நன்றி கூறும் நன் நாள்.
வரிவுரையாளர்: இப்போது திருமணப் புதுபிக்கம் சடங்கு ஆரம்பமாகின்றது. வெள்ளிவிழா நயகர்களே! அன்று 25ஃ50 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் அளித்த வாக்குறுதியை இப்பொழுது புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
குரு: அன்புமிக்க மணமக்களே! திருச்சபையின் திருப்பணியாளர் முன்பாகவும், இத்திருக் கூட்டத்தின் முன்னிலையிலும் உங்கள் அன்பை நம் ஆண்டவர் முத்திரையிட்டுக் காத்தருளுமாறு இங்கு வந்திருக்கின்றீர்கள். உங்கள் அன்பை கிறிஸ்து நிறைவாக ஆசீர்வதிக்கின்றார். இந்த திருவருட்சாதனத்தை புதுபிப்பதின் வழியாக உங்களுக்கு அருள்வளமீந்து நீங்கள் ஒருவருக்கொருவர் என்றும் பிரமாணிக்கமாயிருக்கவும், திருமணத்தின் ஏனைய கடமைகளை ஏற்று நிறைவேற்றி கொண்டிருக்கின்றீர்கள், எனவே இப்போது மணமக்கள் இறைவன் முன்னிலையிலும் திருச்சபையின் முன்னிலையிலும் இவர்கள் ஏற்றுக்கொண்ட பிரமாணிக்கத்தை மீண்டும் புதுப்பிக்கின்றார்கள். இதன் மூலம் இறைவனுடைய ஆசீPர் இவர்களில் நிலைத்திருந்து குடும்பத்தை ஆசீர்வதிக்கட்டும்.
(இருவரும் கைகளைச் சேர்த்துப் பிடிக்கிறார்கள்)
தம்பதியர்: “இன்பத்திலும், துன்பத்திலும், உடல் நலத்திலும், நோயிலும் ஒருவர் ஒருவருக்குப் பிரமாணிக்கமாயிருந்து, ஒருவரை ஒருவர் தொடர்ந்து நேசிக்கவும், மதிக்கவும் வாக்களிக்கிறோம்.”
குரு: எல்லாம் வல்ல இறைவன் நீங்கள் புதுப்பித்த இந்த சம்மதத்தை ஏற்றுக் கொண்டு தொடர்ந்து உங்களை ஆசீர்வதிப்பாராக.
(மாலைகள் அல்லது மோதிரங்கள் இருந்தால் அவற்றை குருவானவர் ஆசீர்வதித்து தம்பதியருக்கு வழங்குகிறார்)
குரு: எல்லாம் வல்ல இறiவா! அன்பின் அடையாளமாக இவர்கள் கொண்டு வந்த இந்த…. (இவற்றை) ஆசீர்;வதியும். பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே.
எல்: ஆமென்.
(குருவானவர் தீர்த்தம் தெளித்து தம்பதியர் கையில்… வழங்குகிறார். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அணிவிப்பார்கள்.)
விசுவாசிகளின் மன்றாட்டுகள்
குரு: அன்புள்ள சகோதரமே! இக் குடுபத்தில் அன்பு எப்போதும் தொடர்ந்து வளர வேண்டுமென இவர்களுக்காக மன்றாடுவோம்.
உங்கள் பதில்: ஆண்டரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
1. உலகிலும் திருச்சபையிலும் அமைதி நிலவ வேண்டுமெனவும், மென்மெலும் திருச்சபையின் ஒற்றுமை வளர வேண்டுமெனவும் ஆண்டவரை மன்றாடுவோம்
2. திருமணத்தில் இணைக்கப்பெற்ற இவர்கள் தொடர்ந்து மகிழ்ச்pயாக வாழவேண்டுமென ஆண்டவரை மன்றாடுவோம்.
3. ----------------------- ஆகிய இவ்விருவரும் ஆண்டவரின் அன்புக்கும் அடையாளமாக முன்மாதிரியான குடும்பமாக வாழ வேண்டுமென ஆண்டவரை மன்றாடுவோம்
4. கானாëர் திருமணத்தில் மணமக்களை ஆசீர்வதித்ததுபோல இம்மக்களையும் ஆசீர்வதிக்க வேண்டுமென ஆண்டவரை மன்றாடுவோம்
5. --------------------- ஆகிய இவ்விருவரும்; இல்லம் கறிஸ்துவின் திருப்பெயருக்கு சாட்சியாக விளங்க வேண்டுமென ஆண்டவரை மன்றாடுவோம்
6. இங்கே கூடியிருக்கும் குடும்பங்களும் தங்கள் திருமண அருளை புதுப்பித்துக் கொள்ள வேண்டுமென ஆண்டவரை மன்றாடுவோம்
குரு: ஆண்டவரே உம் மக்களாகிய இவ்விருவருக்கும் உண்மையான அன்பை நீர் வழங்குவதால் அவர்கள் நிறைந்த ஒற்றுமையோடு வாழ வேண்டுமென ஆண்டவரை மன்றாடுவோம். நீர் இணைத்த இவ்விருவரையும் ஒன்றும் பிரிகாதிருப்பதாக. நீர் ஆசீர்வதிக்கும் இவர்களை எத்தீங்கும் தீண்டாதிருப்பதாக. இம் மன்றாட்டுகளை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக எங்களுக்கு தந்தருள உம்மை மன்றாடுகின்றோம்
காணிக்கைப் பாடல்…
குரு: சகோதர சகோதரிகளே நாம் அனைவரும் ஒப்புக்கொடுக்கும் திருமண வெள்ளிவிழாக் கொண்டாட்டத் இத்திருப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி செபியுங்கள்.
எல்: ஆண்டவர் தமது திருப்பெயரின் புகழ்ச்சிக்காகவும், மகிமைக்காகவும், நமது நன்மைக்காகவும், தமது திருச்சபையின் அனைத்து நலனுக்காகவும், உமது கையினின்று இப்பலியை ஏற்றுக் கொள்வாராக.
காணிக்கை மன்றாட்டு- (திபு :661)
குரு: அனைத்தையம் ஆண்டு நடத்தும் இறைவா,
உம் மக்கள் (பெயர்--------------------------------------------------------------------)
இவர்களுக்காக நன்றி செலுத்தி
நாங்கள் அளிக்கும் இக்காணிக்கைகளைக் கனிவுடன் ஏற்றருளும்.
இத்திருப்பலியிலிருந்து இவர்கள் அமைதியும் அகமகிழ்சிசியும் நிறவாய்ப் பெறவேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
தொடக்கவுரை திபு: 648 அ 653
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம்மோடும் இருப்பாராக
குரு: இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள்
எல்: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
குரு: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்
எல்: அதுவே தகுதியும் நீதியுமானது
குரு: ஆண்டவரே, தூயவரான தந்தையே! என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியுமாகும். திருமண உடன்படிக்கையை நீர் ஏற்படுத்தி, மன ஒற்றுமையின் இனிய நுகத்தாலும், அமைதியின் முறிவுறாத பிணைப்பாலும் மணமக்களை இணைத்தருளினீர். இதனால், திருமண வாழ்வு மக்கள் பேற்றினால் வளமையுற்று, உமக்குப் புதிய அன்புப் பிள்ளைகளைத் தருவதற்கு உதவுகின்றது. ஏனெனில் ஆண்டவரே, உமது பராமரிப்பினாலும் அருளினாலும் திருமணத்தின் இரு பயன்களைச் சொல்லற்கரிய முறையில் விளைவிக்கின்றீர். பிறப்பினால் உலகம் அணி செய்யப்படுகின்றது. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக வரும் மறுபிறப்பினால் திருச்சபை வளர்ச்சி பெறுகிறது. அவர் வழியாகவே வானதூதர், புனிதர் அனைவரோடும் நாங்களும் சேர்ந்து, உமக்குப் புகழ்ச்சி பண் இசைத்து முடிவின்றி பாடுவதாவது.
தூயவர் பாடல்…
நற்கருணை மன்றாட்டு…
குரு: இது விசுவாசத்தின் மறைபொருள்
எல்: ஆண்டவரே! . . . . .
குரு: இவர் வழியாக இவரோடு, இவரில் . . . . .
எல்: ஆமென்! ஆமென்! ஆமென்!
(தீப, தூப, மலர் - அஞ்சலி)
குரு: மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு தேவப் படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து பாடுவோம்.
எல்: பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக. உம்முடைய இராச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக, எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை சோதனையில் விழவிடாதேயும். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
திருமண சிறப்பு ஆசீர்…
(-------------------------------- ---------------------------------தம்பதியர்கள் முழங்காலிடவும். குருக்கள், பெரியோர்கள் கரம் நீட்டி ஆசி செபத்தில் பங்கேற்பர்)
குரு: அன்புமிக்க சகோதர சகோதரிகளே, கிறிஸ்துவில் மணமுடித்த இம்மணமக்களை ஆண்டவர் தம் அருளின் ஆசியால் நிரப்பவும், திருமணத்தில் இணைந்த இவ்விருவரையும் (நற்கருணை வழியாக) அன்பினால் ஒன்றுபடுத்தவும் வேண்டுமென்று மன்றாடுவோம்.
எல்லாம் வல்ல இறைவா! நீர் உமது வல்லமையினால் ஒன்றுமில்லாமலே அனைத்தையும் படைத்தீர். படைப்புகளின் உற்பத்தியெல்லாம் ஒழுங்குபடுத்திய பின், உமது சாயலாக மனிதனைப் படைத்து, அவனுக்குப் பெண்ணை இணைபிரியாத் துணையாக ஏற்படுத்தினீர். இவ்வாறு அவர்கள் இனி இருவரல்லர், ஒரே உடல். எனவே, நீர் ஒன்றாக இணைக்கத் திருவுளம் கொண்டதை மனிதர் ஒருபோதும் பிரித்தலாகாது எனக் கற்பித்தீர்.
ஆகவே, திருமண வாழ்க்கையில் இணைக்கப்பெற்று, 25 ஆண்டுகளாக உமது கைவன்மையால் வழிநடத்தப்பட்டு, உமது ஆசியை நாடி நிற்கும் இவர்களை --------------------------தயவாய்க் கண்ணோக்கியருளும். இவர்களிடம் உமது அன்பும் அமைதியும் குடிகொண்டிருக்க அருள்புரியும். இம்மணமக்கள் தம் வாழ்வில் பிரமாணிக்கமாய் இணைந்திருந்து, நற்செய்திப் படிப்பினையால் உறுதியடைந்து, அனைவர் முன்னும் கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாய்த் திகழ்வார்களாக. இவர்கள் தாங்கள் விரும்பும் முதுமை எய்தியபின், விண்ணரசில் உம் புனிதரோடு பேரின்ப வாழ்வையும் பெறவேண்டுமென்று எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்
குரு: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன் என்று உம் அப்போஸ்தலர்களுக்கு மொழிந்தீரே, எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திருச்சபையின் விசுவாசத்தையே கண்ணோக்கி, எங்களுக்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருளத் திருவுளம் கொள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
எல்: ஆமென்
குரு: ஆண்டவருடைய சமாதானம் உங்களோடு என்றும் இருப்பதாக.
எல்: உம்மோடும் இருப்பதாக.
குரு: ஒருவருக்கொருவர் கிறிஸ்துவின் சமாதானத்தை பகிர்ந்து கொள்வோம்
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,
எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.
திருவிருந்துப் பாடல்…
நன்றி மன்றாட்டு (மணமக்கள்)
அன்பில் நிலைத்திருந்து வாழ்வதற்காக திருமணத்தைப் புனிதப்படுத்தியுள்ள இறைவா! நாங்கள் இருவரும் திருமணத்தின் அருளாசீரை வணக்கமுடன் ஏற்றுக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் எங்களின் திருமண அன்பு ஒவ்வொரு நாளும் வளர்ந்திடச் செய்வீராக. ஆகையால் எங்கள் கடமைகளை திருக்குடும்பத்தை நாங்கள் பின்பற்றி குறைவின்றி உம்முடைய திருவுளத்தை நிறைவேற்ற அருள்வீராக. ஒரே மனமுடையவராய் இணைக்கப்பட்டுள்ள நாங்கள் பிரமாணிக்கத்துடன் 25 ஆண்டுகள் வாழச் செய்தற்கு நன்றி. இதுவரைச் செய்த நன்மைகளுக்காகவும் இனிவரும் நாட்களில் எங்களை தொடர்ந்து ஆசீர்வதிப்பதற்காகவும் இறைவா உமக்கு நன்றி கூறுகின்றோம்.
நன்றி மன்றாட்டு…661
குரு: அருள் வழங்கும் இறைவா, உம் மக்கள் (---------------------------- ---------------------------------) என்றும் இத்தம்பதியரைத் (தம் மக்களௌhடும், உற்றார் அறவிரோடும்) உமது குடும்பத்தின் திருப்பந்தியில் அமரச் செய்தீர்: தங்கள் கடும்ப வாழ்வில் இவர்கள் தொடர்ந்து உண்மையுடன் நிலைத்திருந்து, விண்ணக விருந்துக்கு வந்து சேருமட்டும் அமது அருளால் ஒன்றித்திருக்கச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம்மோடும் இருப்பாராக
(இறைவனின் ஆசீர் பெற தலைவணங்கி மன்றாடுவோம்.)
திபு: 649 அ 659
என்றும் வாழும் தந்தையாகிய இறைவன், நீங்கள் ஒருவருக்கொருவர் காட்டும் அன்பினால் உங்களை ஒருமனப்படுத்தி, கிறிஸ்துவின் அமைதி உங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும் என்றும் குடிகொள்ளச் செய்தருள்வாராக.
எல்: ஆமென்
குரு: உங்கள் மக்களால் ஆசியும், நண்பர்களிடமிருந்து ஆறுதலும் பெற்று, அனைவரோடும் நல்லுறவுடன் நீங்கள் வாழ்வீர்களாக.
எல்: ஆமென்.
குரு: உலகிலேயே நீங்கள் இறையன்பில் நிலைத்திருந்து இறையரசின் சாட்சியாளர்களாக திகழ்வீர்களாக! அவரின் தயவைப் பெற்ற அனைவரும் இறைவனின் வீட்டில் உங்களை ஒரு நாள் நன்றியுணர்வுடன் வரவேற்பார்களாக.
எல்: ஆமென்
குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை, மகன், தூய ஆவி உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!
எல்: ஆமென்
குரு: சென்று வாருங்கள் திருப்பலி நிறைவேறிற்று
எல்: இறைவனுக்கு நன்றி!
நிறைவுப் பாடல்…
திருக்குடும்பத்தின் பண்புகள்
புனித சூசையப்பர்:
1. நீதிமான் (மத். 1:19)
2. மரியாளை ஏற்றுக்கொண்டார் (மத். 1:24)
3. கடின உழைப்பாளி (மத். 13:55)
அன்னை மரியாள்
1. ஆண்டவருக்கு அடிமையானவள் (லூக். 1:38)
2. கணவனை நேசித்து அவரோடு பெத்லகேமிற்குச் சென்றவள் (லூக் 2:5)
3. கணவனோடும், பிள்ளையோடும் எகிப்திற்கு வாழச் சென்றவள் (மத். 2:14-15)
4. பக்தியுள்ளவள், அதனால் பிள்ளையை எருசலேம் ஆலயத்துக்கு அழைத்துச் சென்றவள் (லூக் 2:42)
5. எலிசபெத்துக்கு உதவி செய்தவள் (லூக் 1:39-42)
6. மகனிடம் பரிந்து பேசியவள் (அரு. 1:1-12)
இயேசு
1. பெற்றோருக்குப் பணிந்து மதித்து வாழ்ந்தார் (லூக் 2:51)
2. அனைவருக்கும் உகந்தவராய் வாழ்ந்தார். (லூக் 2:52)
3. ஞானம் பெற்றவராய் இருந்தார். (லூக் 2:40)
குடும்பத்துக்கு தேவையானது:
1. ஒருவர் ஒருவரை வாழ்த்துதல்
2. பொது இடங்களில் புண்படுத்தாமல் இருத்தல்
3. கணவன் - மனைவி மதித்து வாழ்தல்
4. நல்வழிப்படுத்துதல்
5. ஒருவர் ஒருவருக்குத் தியாகம் செய்தல்
6. குடும்பத்தோடு சேர்ந்து நேரத்தைச் செலவிடுதல்
7. தினமும் குடும்பமாகச் செபித்தல்
குடும்பத்துக்கு தேவையற்றது:
1. பிறரோடு ஒப்பிட்டுப் பேசாதிருப்பது
2. பாரபட்சம் காட்டாமல் இருப்பது
3. புறக்கணித்துப் பேசாமலிருப்பது
4. வசதியை வைத்து மதிப்பிடாமல் இருப்பது
திருப்பலியில் இடம் பெறும் இறைவார்த்தைகள்
1. பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே. (மத் 28:19 – திருமுழுக்குக் கொடுங்கள்)
2. நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியின் நட்புறவும் உங்களோடு என்றும் இருப்பதாக. (2கொரி 13:13 முடிவரை)
3. ஆண்டவரே இரக்கமாயிரும், (லூக் 18:13 ஆயக்காரன் செபம்)
கிறிஸ்துவே இரக்கமாயிரும். (லூக் 18:38 – எரிக்கோ குருடன் செபம்)
4. தீர்த்தம் தெளித்தல் - திருச்சபை பாரம்பரியம், (பழைய ஏற்பாடு பாரம்பரியம்) எசே 36:25 (தூய நீரை உங்கள் மீது தெளிப்பேன் - புதிய ஆவி – சதையான இதயம்)
5. மன்னித்து, மன்னிப்புப் பெறுதல் (மத் 5:23-24)
6. உன்னதங்களிலே இறைவனுக்கு, மாட்சிமை உண்டாகுக.
உலகினிலே நன் மனத்தவர்க்கு அமைதியும் ஆகுக. (லூக் 2:13-14) வானவர் கீதம்
7. அ. முதல் வாசகம் (பழைய ஏற்பாடு) இறைத்தந்தை கடவுள் மனிதரோடு பேசுகிறார்
ஆ. பதிலுரைப்பாடல் - மக்கள் பதில்
இ. இரண்டாம் வாசகம் - புதிய ஏற்பாடு
(திருமுகங்கள்) அப்போஸ்தலர் திருச்சபையோடு பேசுகின்றனர்.
ஈ. அல்லேலூயா - இறைமக்கள் ஆர்பரிப்பு பதிலுரை
உ. நற்செய்தி வாசகம் (இயேசு மக்களோடு பேசுகிறார்.)
ஊ. மறையுரை – திருச்சபையின் பிரதிநிதி (குருவின் மூலம்) இறை மக்களோடு பேசுகிறார்.
8. விசுவாச அறிக்கை – அப்போஸ்தலர் நிசேயா – திருச்சபையின் விசுவாசம் இறை மக்கள் பதில் - ஏற்றுக்கொள்கிறேன்.
9. இறை மக்கள் மன்றாட்டு “கேளுங்கள் தரப்படும் மத் 7:7”
10. காணிக்கை: ஆண்டவரே அனைத்துலகின் இறைவா… பழைய ஏற்பாடு விவிலியம் செபம்...
பெரிய குரு ஃ இயேசு பயன்படுத்தியது. பாரம்பரியம்.
11. தூயவர் தூயவர்… (திருவெளிப்பாடு 4:8)
12. “இது என் உடல், இது என் இரத்தம்”
மத் 26: 26-28, மாற் 14: 22-24, லூக் 22: 17-20, 1 கொரி 11: 23-25
13. “கிறிஸ்து மரித்தார், கிறிஸ்து உயிர்த்தார், கிறிஸ்து மீண்டும் வருவார்”
விசுவாசத்தின் மறைபொருள் - என திருத்தூதர்களின் போதனையின் - சாராம்சம், கருபொருள்.
14. ‘கர்த்தர் கற்பித்த செபம்’ மத் 6:9-13 ஃ லுக் 11:2-4.
15. உங்களுக்கு அமைதி உரித்தாகுக. யோ 20: 19-21 ஃ லூக் 24: 36
“அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல” யோ 14:27.
16. “உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே” எசாயா 53:7 யோ 1:29
17. “இதோ கடவுளின் ஆட்டுக்குட்டியாம். இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்”
“இதோ இறைவனின் செம்மறி, இதோ உலகின் பாவங்களைப் போக்குபவர்” (அரு 1:29)
18. ஆண்டவரே தேவரீர் என்னுள்ளத்தில் எழுந்தவர நான் தகுதியற்றவன். ஒரு வார்த்தை மட்டும் சொன்னால் போதும். என் ஆன்மா குணமடையும். “ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும் என் பையன் நலமடைவான” மத் 8:8, லூக் 7:7
19. “கிறிஸ்துவின் உடல்”
“எனது சதையை உணவாக கொடுக்கிறேன்” யோ 6:51
“எனது சதை உண்மையான உணவு” யோ 6:55
20. “ஆண்டவர் உங்களோடு இருப்பாராக”
“இதோ உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” மத் 28:20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக