துவக்கத்தில்
மறைக்கல்வியை திருச்சபை முழுமைக்குமான பணியாக திருத்தூதர்களுக்கு அளிக்கப்பட்டது. மாற் 16: 15 “இயேசு அவர்களை நோக்கி, “உலகெங்கும்
சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். 16நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப்
பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்”. நற்செய்தியை
உலகெங்கும் சென்று கற்பிப்பதன் வழியாக கிரிஸ்துவின் உடலாகிய திருச்சபையை கட்டியெழுப்பும்
படி தனது திருத்தூதர்களுக்கு கட்டளையிட்டர்.
இயேசுகிறிஸ்து தனது திருத்தூதர்களுக்கு கொடுத்த அதே கட்டளையை பரிசுத்த ஆவியால்
திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும்
கொடுத்துள்ளார். [4] மறைக்கல்வி என்பது உயிரோட்டமான
திட்டவட்டமான ஒழுங்கு முறையில் (organic and systematic) கிறிஸ்துவின் போதனைகளை முழுமையாக
சிறுவர்கள் துவங்கி முதியவர் வரை கற்பிபதே
ஆகும். [5] மறைக்கல்வி என்பது சில திட்டவட்டமான கூறுகளை அடிப்படையாகக்
கொண்டது. அவை
v நற்செய்தி
போதனைகளை அறிவிப்பதன் மூலம் நம்பிக்கையை விதைப்பது,
v நம்பிக்கை
கொள்வதற்கான் அவசியத்தை அறிவுறுத்தல்
v கிறிஸ்துவுக்குள்
வாழும் வாழ்வை சுவைக்கச் செய்தல்
v திருவருட்
சாதனங்களை ஏற்கச் செய்தல்
v இவை
அனைத்தையும் திருச்சபை சமூகத்தின் அங்கமாக்குதல்
v மறைப்பணி
மற்றும் திருத்தூது (அப்போஸ்தலிக்க) பணிகளுக்கு சான்று பகர்தல்.[6]
மறைக்கல்வி
என்பது திருச்சபையின் பிரிக்கமுடியாத அங்கமாகும். குறிப்பாக திருச்சபையை உலகமெங்கும்
நிறுவும் மற்றும் உலகில் உள்ள எல்லா இனத்தாரையும் திருச்சபைக்குள் கொண்டுசேர்க்கும்
பணியிலும் மறைக்கல்வி பெரும் பங்கு ஆற்றவல்லது.[7] திருச்சபையை புதுப்பித்தலிலும்,
அச்தற்கு புத்துயிர் அளிப்பதிலும் மறைக்கல்விக்கு சிற்ப்பான பங்கு உள்ளது. திருச்சபையின் அருட்தந்தையர்களாக வாழ்ந்து பின்பு புனிதர்களாக
உயர்த்தப்பட்ட புனித சிரில், புனித கிறிஸ்தொத்தம் அருளப்பர், புனித அம்புரோஸ் புனித
அகுஸ்தினார் மற்றும் பல புனிதர்கள் எழுதியுள்ள திருச்சபை மற்றும் விசுவாச கொட்பாடுகள்
மறைக்கல்வியின் ஆதாரமாக உள்ளன.[8,9] இந்த கால
கட்டங்களில் இருந்து 1985 வரை பல திருத்தந்தையர்கள், இரண்டாம் வத்திகான் சங்கம் போன்ற அமர்வுகள் மறைக்கல்வியை
மென்மேலும் பலம் வாய்ந்ததாக வடிவைமத்துள்ளார்கள்.
திருச்சபைக்கும், கிறிஸ்துவ சமூகங்களுக்கும் 1980கள் ஒரு சோதனையான அல்லது சவாலான
காலகட்டம். இரண்டாம் வத்திகன் சங்க அமர்வுக்குப்பின் (1962-1965) பெரிய கலாச்சார மாற்றங்களின்
விளைவாக கீழ்கண்ட கேள்விகள் மட்டில் பெரிதும் கிறிஸ்தவர்கள் குழப்பத்திலும், சங்கடத்திலும்
இருந்தனர். அவை
அ) கிறிஸ்துவர்கள் அடிபடையில் எதை விசுவசிக்கிறார்கள்?
ஆ) கத்தோலிக்க திருச்சபை என்ன போதிக்கிறது?
இ)
கத்தோலிக்க திருச்சபை எதையும் போதிக்கும் நிலையில் உள்ளதா?
ஈ)
மனித கலாச்சாரம் அதன் அஸ்த்திவாரத்திலிருந்து பெரிதும் மாறுபட்ட சூழலில் திருச்சபையின்
கோட்படுகள் அர்த்தமுள்ளவைகளா; வாழத்தகுந்தவைகளா?
நல்ல
கிறிஸ்தவ வாழ்வு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் மத்தியிலும் கூட இத்தகைய கேள்விகள் எழ ஆரம்பித்த
காலம். இத்தகைய காலகட்டத்தில்தான் திருத்தந்தை
இரண்டாம் ஜான் பவுல் ஒரு சவாலான முடிவை எடுத்தார். உலகத்திலிருக்கும் அனைத்து ஆயர்களும் ஒன்றிணைந்து
மேற்குறிப்பிட்ட அடிப்படை கேள்விகளுக்கு முறையான பதில்களை உள்ளடக்கிய ஒரு நூலை அல்லது
பதில்களின் தொகுப்பை (compendium) எழுதவேண்டுமென்று. திருத்தந்தை
2ம்ஜான் பால், திருதந்தையாக திருச்சபையை வழிநடத்திய
காலத்தில் திருச்சபைக்கு அளித்த மிக உறுதியான, அத்தியவசியமான கொடைதான் கத்தொலிக்க திருச்சபையின்
மறைக்கல்வி. ஆங்கிலத்தில் Catechism of
the Catholic Church (CCC) என்று அழைக்கப்படுகிறது.
1985:
கத்தோலிக்க ஆயர்களின் சிறப்பு அமர்வு (Extraordinary Synod of Catholic Bishops) கத்தோலிக்கதிருச்சபையின்
மறைக்கல்வி பற்றிய பரிந்துரையை திருத் தந்தை 2ம் ஜான் பால் அவர்களிடம் சமர்ப்பித்தது.
1986:
திருத்தந்தை 2ம் ஜான் பால் 1986ல் கர்தினால்மார்கள் மற்றும் ஆயர்கள் அடங்கிய ஆய்வுக்
குழு ஒன்றை நிறுவி கத்தோலிக்க மறைக்கல்வி பற்றிய அனைத்து சித்தாந்தங்களையும் உள்ளடக்கிய
(Compendium of Catholic Doctrine) தொகுப்பு
ஒன்றை வடிவமைக்குமாறு பணித்தார்.
1989:
ஆய்வுக்குழு தாங்கள் வடிவமைத்த மறைக்கல்விக்கான ஆவணத்தை உலகமெங்கும் உள்ள ஆயர்களுக்கு
அனுப்பி அவர்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் அனுப்புமாறு வேண்டினர்.
1990:
ஆயர்கள் அனுப்பிய 24,000 க்கும் மேற்பட்ட பரிந்துரைகளையும் ஆய்வு செய்தனர்.
1991:
ஆயர்கள் பரிந்துரை செய்த கருத்துக்களையும் உள்ளடக்கி, மறைக்கல்விக்கான இறுதி படிவத்தை
ஆவணமாக திருத்தந்தையிடம் சமர்பித்தனர்.
1992:
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல், ஜுன் மாதம் 25ம் நாள் அந்த ஆவணத்தை உறுதிசெய்து அதிகாரப்பூர்வமாக அதற்கு
ஒப்புதல் அளித்தார்.
1992:
திருத் தந்தை 2ம் ஜான் பவுல், டிசம்பர் மாதம் 8ம் நாள் அந்த ஆவணத்தை அப்போஸ்தலிக்க
சாசனத்தின் ஒரு அங்கமாக பிரகடனம் செய்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக