பாவ மன்னிப்பை நம்புகிறேன்
[மறைக் கல்வியின் பாகம் இரண்டு- ‘கிறிஸ்தவ மறைபொருள்களின் கொண்டாட்டம்’ என்ற
பகுதியில் திருச்சபையின் அருட்சாதனங்கள் பற்றி விரிவாகக் கற்க உள்ளோம். இங்கு பாவ மன்னிப்பில்
திருமுழுக்கு மற்றும் ஒப்புறவு அருட்சாதனங்களின் பங்கு பற்றிய திருச்சபையின் அடிப்படை
விசுவாசத்தை மட்டும் சுருக்கமாக கற்க உள்ளோம்]
150 பாவங்கள்
எவ்வாறு மன்னிக்கப் படுகின்றன?
கிறிஸ்து உயிர்த்து விண்ணகம் செல்லும்
முன் தூய ஆவியை திருத்தூதர்கள் மேல் பொழிந்து உலகில் மனிதரின் பாவங்களை மன்னிக்கும்
அதிகாரத்தை அவர்களுக்குக் கொடுத்தார் (யோவா 20:22-230). 1. திருமுழுக்கு வழியாக நாம் பிறப்புநிலை பாவத்திலிருந்து
கழுவப்பட்டு கிறிஸ்துவோடு இணைக்கப் படுகிறோம்.
2. திருமுழுக்கு பெற்றபின் நாம் உலகில் வாழும் நாட்களில் உலக தீய நாட்டங்களினால்
கட்டிக்கொள்ளும் பாவங்களுக்கு ஒப்புறவு அருட்சாதனம் (Sacrament of Penance) வழியாக மன்னிப்பைப் பெற்று மீண்டும் இறைவனோடு இணைகப்படுகிறோம். [976-980]
151 திருச்சபை பாவத்தை மன்னிக்க முடியுமா?
முடியும். இயேசு தானே பாவங்களை மன்னித்தார். அதோடு பாவங்களை
மன்னித்து மனிதரை பாவத்திலிருந்து விடுவிக்கும் பணியையும் அதிகாரத்தையும் திருச்சபைக்கு
வழங்கியுள்ளார். [981-983,
986-987]
v பாவத்தை
ஏற்று, அதற்காக மனம் வருந்தி, அதனை அறிக்கயிட்டு, மன்னிப்புப்பெற முன்வரும் எவருக்கும்
தனது குருத்துவப் பணியின் அதிகாரத்தால் குருவானவர் அவரின் பாவங்களை மன்னிக்க முடியும்.
v குருவானவர் பாவக்கறைகளை முழுமையாகா நீக்கியதின்விளைவாக ஒருவர்
பாவத்தைக் கட்டிக்கொள்ளாத போது எத்தகைய பரிசுத்தத்தோடு இருந்தாரோஅதே பரிசுத்தமாக அவர்
தூய்மையாக்கப்படுகிறார். இயேசு பாவங்களை மன்னிக்கும்
இறைவல்லமையில் குருவானவருக்கு பங்களித்திருப்பதால் மட்டுமே இது சாத்தியமாகிறது.
v லூக்24:47‘பாவமன்னிப்புப்
பெற மனம் மாறுங்கள்’ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்படவேண்டும்’. யோவா20:23எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ,
அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார்.
v திருத்தூதர்களும்
அவர்கள் வழி வருபவர்களும் (ஆஆயர்கள், குருக்கள்) இயேசுவிடமிருந்து பெற்றுக்கொண்ட அதிகாரத்தின்
வழியாக இந்த ஒப்புறவு பணியைச் செய்துவருகிறார்கள்.
v பாவ
வழியை விட்டு விலகி வரும் எவருக்கும் இரக்கத்தின் வாயிலை, மன்னிப்பின் வாயிலை திருச்சபை
எப்போதும் திறந்தே வைத்திருக்க வேண்டும். காரணம்
இயேசு அனைவரையும் மீட்கவே தன்னை பலியாகக் கொடுத்தார். எவ்வளவு பெரிய பாவமாக இருந்தாலும், ஒருவர் உண்மையிலேயே வருந்தி, திருந்தி மன்னிப்பு வேண்டினால் திருச்சபையால் மன்னிக்க இயலும்.
உடலின் உயிர்ப்பை நம்புகிறேன்
152 இறந்தோர் உயிர்த்தெழுவர் என்று ஏன் விசுவசிக்கிறோம்.
கிறிஸ்து மரித்து உயிர்த்தார், நித்தியத்திற்கும்
வாழ்கிறார், தனது நித்திய வாழ்வில் நமக்கும்
பங்கு அளிக்கிறார். கிறிஸ்துவின் இந்த வாக்குறுதியின்
அடிப்படையில்தான் “இறந்தோர் உயிர்த்தெழுவர்”
விசுவசிக்கிறோம். [988-991]
யோவா11:25“உயிர்த்தெழுதலும்
வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.
1கொரி15:13-14,
19-20 13இறந்தோர் உயிர்த்தெழ மாட்டார் எனில் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை
என்றாகிவிடும். 14கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய
நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும். 19கிறிஸ்துவிடம்
நாம் கொண்டுள்ள எதிர்நோக்கு இவ்வுலக வாழ்வை மட்டும் சார்ந்திருந்தால் எல்லா மக்களையும்விட
இரங்குதற்கு உரியவராய் இருப்போம். 20ஆனால் இப்போதோ, இறந்த கிறிஸ்து உயிருடன்
எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர்
என்பதை உறுதிப்படுத்துகிறது
152 உடல் என்னும்
சொல்லின் பொருள் என்ன?
உலக
பாவ நாட்டங்களுக்கு பலவீனமானதும் மற்றும் சாவுக்கு உட்படக் கூடியதுமான மனிதனை “உடல்’”
என்று குறிப்பிடப்படுகிறது. [990]
153 ‘உடலின்
உயிர்ப்பு’ என்பதன் பொருள் என்ன?
நமது
இறப்புக்குப்பின் நமது ஆன்மா வாழ்கிறது. அதுபோல்
இறப்பிற்குப்பின் சாவுக்குறிய நமது உடலும் ஒரு நாள் சாவுக்கு உட்பட முடியாத ‘உடலாக’ எழுப்பப்படும் என்பதே ‘உடலின் உயிர்ப்பு’ என்பதன் பொருள். [990]
154 உடலின் உயிர்ப்பை ஏன் விசுவசிக்கிறோம்?
மனுக்குலத்தை
மீட்டெடுக்க இறைவன் இயேசுக்கிறிஸ்துவின் வழியாக
மனித உடலெடுத்து உலகிற்கு வந்தார். இறைவன்
மனித உடலை தாழ்வுக்குறிய ஒன்றாகக் கருதவில்லை.
எனவே ஆன்மாவை மட்டும் அல்ல ஆன்மாவோடு உடலையும் மீட்க சித்தமானார். [988-991,
997-1001, 1015]
நாம்
நம்பும் இரு மறை உண்மைகள்:
i.
கிறிஸ்து
உண்மையாகவே சாவிலிருந்து உயிர்த்தார்; நித்தியத்திற்கும் வாழ்கிறார்.
ii.
கிறிஸ்துவே
இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்:மத் 22:32.‘ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின்
கடவுள் நானே’ என்று அவர் கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின்
கடவுள்”. மாற் 12:27அவர் இறந்தோரின் கடவுள்
அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். நீங்கள் தவறான கருத்துக் கொண்டிருக்கிறீர்கள்”. லூக் 20:38அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக,
வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே” என்றார்.
iii.
கிறிஸ்துவை
உயித்தெழச் செய்த அதே இறைவன் இறுதிநாளில் நம் அனைவரையும் உயிர்த்தெழச்செய்வார். நாமும் கிறிஸ்துவோடு நித்தியத்திற்கும் வாழ்வோம்
1
கொரி15:20 ஆனால் இப்போதோ, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன்
எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.
1
கொரிந்தியர் 15:52 ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது
இது நிகழும். எக்காளம் முழங்கும்போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்;
நாமும் மாற்றுரு பெறுவோம்.
உரோ8:21அது
அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய
பெருமையையும் விடுதலையையும் தானும் பெற்றுக்கொள்ளும் என்கிற எதிர்நோக்கோடு இருக்கிறது
155 நாம் இறக்கும்
போது என்ன நிகழ்கிறது?
நாம்
இறக்கும் போது
i.
நமது
ஆன்மா நமது உடலில் இருந்து பிரிக்கப்படுகிறது.
ii.
உடல்
உருக்குலைய ஆரம்பிக்கிறது
iii.
அதே
சமயம் ஆன்மா இறைவனிடம் செல்கிறது.
iv.
இறுதி
நாளில் உயித்தெழப்போகும் தன் உடலுடன் இணையக் காத்திருக்கிறது.
[992-1004, 1016-1018]
v எவ்வாறு
நாம் உயித்தெழுவோம் என்பது ஒரு மறைபொருள்.
v உயித்தெழுந்தபின்
நமது உடலின் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பது நமக்கு எதுவுமே தெரியாது.
v பழைய எருசலேம் தேவாலயம் ஒரு இடத்தில்
அமைந்துள்ள ஒரு ஆலயம், ஒரு கட்டிடம். அது அழிவுற்று
புதிய எருசலேம் மலர்ந்தது. அது எந்த ஒரு இடத்திலும்
கட்டப்பட்டதல்ல மாறாக உலகமெங்கும் கிறிஸ்துவை விசுவசித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட மாந்தர்
அனைவரையும் குறிக்கிறது.
v தூய
பவுல் ஒன்றை மிகத்தெளிவாக சுட்டிக்காட்டுகிறார்: 1கொரி15:43-44
மதிப்பற்றதாய் விதைக்கப்படுவது மாண்புக்குரியதாய் உயிர்பெற்று எழுகிறது. 1கொரி15:35-37“இறந்தோர்
எப்படி உயிருடன் எழுப்பப்படுவார்கள்? எத்தகைய உடலோடு வருவார்கள்?” என ஒருவர் கேட்கலாம்.
அறிவிலியே, நீ விதைக்கும் விதை மடிந்தாலொழிய உயிர்பெறாது. முளைத்த பயிராக நீ அதை விதைக்கவில்லை;
மாறாக வெறும் கோதுமை மணியையோ மற்றெந்த விதையையோதான் விதைக்கிறாய்.
லூக்கா
18:30; யோவான் 3:15; யோவான் 3:16;
யோவான் 4:14; யோவான் 4:36; யோவான் 5:39;
யோவான் 6:27; யோவான் 6:40; யோவான் 6:68;
யோவான் 12:25; யோவான் 17:3; திருத்தூதர்
பணிகள் 13:48; உரோமையர் 5:21; உரோமையர் 6:22; உரோமையர் 6:23; 1 யோவான் 1:2;
1 யோவான் 2:25; 1 யோவான்
3:15; 1 யோவான் 5:13; 1 யோவான் 5:20.
156
நாம்
கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளும்போது நமது இறப்பின் போது கிறிஸ்து எவ்வாறு நமக்கு உதவுகிறார்?
கிறிஸ்துவில்
நம்பிக்கை கொள்ளும் ஒவ்வொருவரையும் அவர்களது மரண வேளையில் அவர்களை சந்தித்து முடிவில்லா
பேரின்ப வீட்டிற்கு அவரே அவர்களை அழைத்துச் செல்வார். புனித தெரெசா (லிசியுக்ஸ்) கூறுகிறார்:
இந்த உலகில் இருந்து என்னை எடுத்துச் செல்வது இறைவன் – சாவல்ல. [1005-1014, 1016,
1019]
v கிறிஸ்துவின்
பாடுகளையும் மரணத்தையும் நம் கண்முன் கொண்டுவந்தால் மரணம் என்பது ஒரு எளிதான நிகழ்வாகத்தான்
நமக்குத் தோன்றும்.
v இறைவன்
நம்மை அழைக்கும் போது ‘இதோ வருகிறேன்’ என்று சொல்வது நாம் இறைவன் மேல் கொண்டுள்ள அன்பின்
மற்றும் நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.
v கிறிஸ்துவும்
கெத்சமனித் தோட்டதில் அதையேதான் செய்தார்.
v மரண
வேளையில் ஒருவர் அவ்வாறு கூறும் போது கிறிஸ்துவின் சிலுவைப்பலியில் அவர் தன்னையும்
இணைத்துக்கொள்கிறார். எனவே பெரிய பாவம் அவரிடம் இல்லாத நிலையில் இயேசுவோடு அவரும் உயிர்த்து
விண்ணகம் செல்கிறார்.
v 2திமோ2:11“நாம்
அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்;
v உரோ14:8
8வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம்; இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம்.
ஆகவே, வாழ்ந்தாலும், இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம். “I Believe . . . in Life Everlasting”
நிலைவாழ்வை
விசுவசிக்கிறேன்
நிலைவாழ்வு
என்றால் என்ன?
இறப்பிற்க்குப்
பிறகு உடனேதொடங்கும் வாழ்வு இது. முடிவே இல்லாத
தன்மை உடயையதால் இந்த வாழ்வை நிலைவாழ்வு என்று அழைக்கிறோம். ஒரு மனிதன் இறந்த அந்த
நொடியில் அவனது ஆன்மா ஒரு குறிப்பிட்ட தீர்ப்பின் வழியாக நித்தியத்திற்குமான ஒரு சம்பாவனையை
பரிசாக அல்லது தண்டனையாகப் பெறுகிறது. தீர்ப்பை
வழங்குவது ‘வாழ்வோரின் மற்றும் இறந்தோரின் ஒரே நீதிபதியான’ கிறிஸ்துவே.
157 தீர்ப்பு
எத்தனை வகைப்படும்? அவை யாவை?
தீர்ப்பு
இரண்டு வகைப்படும்.
i. தனித் தீர்ப்பு: ஒரு மனிதன் இறந்த அந்த
நொடியில் அவன் ஆன்மாவுக்கு வழங்கப்படுவது தனித் தீர்ப்பு. ஒருவரின் நம்பிக்கைக்கும், பிறர்
அன்பு செயல்களுக்கும் ஏற்பத் தன் அழியா ஆன்மாவில் கடவுளிடமிருந்து கைமாறு பெற்றுக்கொள்வர். அந்த கைமாறு இருவகைப்படும்.
v உடனடியாகவோ
அல்லது தகுந்த தூய்மையாக்குதலுக்குப் பிறகோ (உத்தரிக்கும் நிலையின் முடிவுக்குப் பிறகோ)
விண்ணகப் பேரின்பத்தை அடைவர்.
v நரகத்தின்
முடிவில்லா தண்டனையை அடைவர்.
ii.
பொதுத்
தீர்ப்பு: இது இறுதித் தீர்ப்பு எனவும் அழைக்கப் படுகிறது. உலகின் இறுதி நாளில் கிறிஸ்துவின்
இரண்டாம் வருகை இருக்கும். அப்போது கிறிஸ்து
நடுவர் இருக்கையில் அமர்ந்து அளிக்கும் தீர்ப்பே பொதுத் தீர்ப்பு என அழைக்கப் படுகிறது.
மத்25:31-46. [1021-1022]
v தனித்
தீர்ப்பில் ஆன்மா ஏற்கனவே கைமாறாகப் பெற்றுக்கொண்ட வெகுமதியிலோ அல்லது தண்டனையிலோ உயிர்த்த
உடல் நித்தியத்திற்கும் வாழும்.
158 விண்ணகம்
என்றால் என்ன?
இறைவனின்
கருணையிலும், நட்புறவிலும் மரிக்கும் ஒருவர் முழுவதும் தூய்மை ஆக்கப்பட்டபின் நித்தியத்திற்கும்
கிறிஸ்துவோடு வாழ்கிறார். நித்தியத்திற்கும்
இறைவனை அவரது உண்மையான தோற்றத்தில் முகமுகமாய் தரிசுத்துக் கொண்டிருப்பார்.
விண்ணேற்பு அடைந்த கிறிஸ்துவோடும், வானதூதர்கள், புனிதர்கள் அனைவரோடும் அன்னை மரியாளோடும்
விண்ணக மாட்சியில் நித்தியத்திற்கும் வாழ்வார்.
இத்தகைய பாக்கியத்தால் அவர் கடவுளைப்போலவே தோன்றுவார். தூய மூவொரு கடவுளின் அன்பிலும், உறவிலும், மாட்ச்சியிலும்,
மற்றும் அன்னை மரியாள், வானதூதர்கள், புனிதர்கள் அனைவரோடும் நித்தியத்திற்கும் முடிவில்லா
பேரின்பத்தில் வாழும் ஒரு உன்னத நிலையையே விண்ணகம் என்று அழைக்கிறோம். [1023-1026,
1053]
கொரி13:12
ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம்; ஆனால் அப்போது
நாம் நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன்; அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல்
முழுமையாய் அறிவேன்.
159
உத்தரிக்கும்
நிலை அல்லது தூய்மைபெறும் நிலை என்றால் என்ன?
இறைவனின் நட்புறவிலும், கருணையிலும்
இறந்தவர்களிடம், விண்ணக பேரின்பத்தில் நுழைய தடயையாய் இருக்கும், இன்னும் கழுவப்பட
வேண்டிய, பாவ கறைகள் இருக்கக் கூடும். இத்தகையவர்களின்
ஆன்மா விண்ணக பேரின்பத்தில் நுழைய அவசியமான புனிதத் தன்மையை அடைய தூய்மைப் படுத்தும்
நிலைக்கு உட்படுத்தப் படுகிறார்கள். இந்த நிலையைத்தான் “உத்தரிக்கும் ஸ்தலம்” அல்லது “தூய்மை பெறும் நிலை” என்று அழைக்கிறோம். [1030-1031]
v “தூய்மை
பெறும் நிலை” நரகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலை.
v ‘தூய
ஆவியாருக்கு எதிராக கட்டிக்கொள்ளும் பாவங்களுக்கு’ என்றுமே மன்னிப்பு கிடையாது என்று
கிறிஸ்துவே தெளிவுப்டுத்தியுள்ளார்.
v சில
பாவங்களுக்கு இந்த உலகிலேயே ஒப்புறவு அருட்சாதனம் வழியாக மன்னிப்புப் பெறலாம். மன்னிப்புப் பெறாத இத்தகைய பாவங்களிலிருந்து அடுத்த
நிலையில் (“தூய்மை பெறும்
நிலை”) தூய்மை
அடையலாம் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
v இந்த
கோட்பாட்டை கத்தோலிக்கத் திருச்சபையும் “ஃப்ளோரன்ஸ்
மற்றும் ட்ரெண்ட் அமர்வில்” வகுத்துள்ளது.
v மத்26:75;
மாற்14:72; லூக்22:61,62 ‘ஆண்டவர் திரும்பி, பேதுருவைக் கூர்ந்து நோக்கினார்: “இன்று
சேவல் கூவு முன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்” என்று ஆண்டவர் தமக்குக் கூறியதைப்
பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே சென்று மனம் நொந்து அழுதார்’. அந்த நேரத்தில் பேதுருவுக்கு இருந்த உணர்வுகள்,
அனுபவித்த மன வேதனை, பட்ட அவமானம் இவற்றை “தூய்மை பெறும் நிலை”யில் இருக்கும் ஆன்மாவின்
வேதனையை ஒப்பிடலாம்.
v நம்மில்
பெருபாலானோர் இறக்கும் தருவாயில் பேதுருவின் நிலையிலேதான் இருப்போம்.
v நம்
மரணவேளையில் இயேசு அன்போடும் கருணையோடும் நம்மை நோக்கும் போது நமது அருவருக்கத்தக்க பாவங்களும், பிறர் அன்பில்லா செய்ல்களும்
நம் கண்முன் வந்து பேதுரு அனுபவித்த அதே அவமானமும், வேதனை மிகுந்த துக்கமும் நம்மை
சுட்டெரிப்பதை அனுபவிப்போம். அதற்காக மனம்
நொந்து அழுவோம். இந்த வேதனைதான் நம்மை நமது
பாவங்களிலிருந்து முற்றிலுமாகத் தூய்மைப்படுத்தி முடிவில்லா பேரின்பத்தைக் கொடுக்கும்
விண்ணத்தில் நம்மை கொண்டுசேர்க்கும்.
160 “தூய்மை பெறும் நிலையில் உள்ள ஆன்மாக்களுக்கு நாம்
உதவ முடியுமா? எவ்வாறு?
நம்மால்
உதவ முடியும். திருமுழுக்கால் புதுப்பிறப்படைந்த
அனைவரும் கிறிஸ்துவுக்குள் ஒரே உறவில் ஒருவரோடு ஒருவர் இணைக்கப் பெற்றுள்ளோம். இந்த
மறைஉண்மையின்படி தூய்மை பெறும் நிலையில் வேதனைப் பட்டுக்கொண்டிருக்கும் ஆன்மாக்களோடு
இணைக்கப்பட்டுள்ளோம். எனவே தூய்மை பெறும் நிலையில் வேதனையில் வாழும் அந்த ஆன்மாக்களுக்கு நாம் உதவ
முடியும்.
ஒரு
மனிதன் இறந்தபின் தனக்குத்தானே எதுவும் செய்துகொள்ள முடியாது. அந்த வல்லமை இறப்போடு முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் இவ்வுலகில் வாழும் நாம் அவர்கள் தேவைகளுக்கு
உதவ முடியும்.
v திருச்சபை பாரம்பரியத்தில் இறந்தவர்களுக்காக
செபிக்கும் பழக்கத்தின் நோக்கம் இதுவே.
v திருச்சபையின் தொடக்க காலத்திலிருந்தே
இறந்தோரின் ஆன்மா தூய்மைப் படுத்தப்பட
Ø இற்ந்தோரை நினைவுகூறல்
Ø செபித்தல்
Ø அனைத்திலும் உயர்ந்ததான திருப்பலி ஒப்புக்கொடுத்தல்
Ø பிறருக்கு தான தர்மம் செய்தல்
Ø தவ முயற்சிகளைக் கடைப்பிடித்தல்
போன்ற செயல்களை திருச்சபை பரிந்துரை
செய்கிறது. அத்தகைய ஆன்மாக்களுக்காக அவர்களின் மீட்ப்புக்காக இத்தகைய உதவிகளைச் தாராளமாகச்
செய்வது நமது கடமையும் ஆகும். [1032, 1414]
161 நரகம் என்றால்
என்ன?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக