அர்ப்பண வாழ்வின் அருள்சாதனங்கள்

 

சமூக – பணி/அர்ப்பண வாழ்வின் அருள்சாதனங்கள்

இறைவாக்கு பின்ணனி

¦  2திமோ.1:6 உன் மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன்.

¦  1திமோ.3:1சபையைக் கண்காணிக்கும் பொறுப்பை நாடுகிற எவரும் மேன்மையானதொரு பணியை விரும்புகிறார்.

¦  தீத்.1:5 5நான் உனக்குப் பணித்தபடியே கிரேத்துத் தீவில் நீ மேலும் செய்ய வேண்டியவற்றை ஒழுங்குசெய்து நகர்தோறும் மூப்பர்களை ஏற்படுத்த உன்னை அங்கே விட்டு வந்தேன்.

1.       திருஅவையின் ஒருமைப்பாட்டை கட்டியெழுப்பும் அருள்சாதனங்கள் யாவை?

திருமுழுக்கும், உறுதிபூசுதலும் பெற்ற ஒவ்வொருவரும் (பொதுகுருத்துவத்தில் திருநிலை படுத்தப்பட்ட ஒவ்வொருவரும்) திருஅவையின் ஒருமைப்பாட்டை கட்டியெழுப்பும்  ஒரு குறிப்பிட்ட சிறப்பு பணியினை ஆற்ற அழைக்கப்பட்டுள்ளனர்.  இந்த பணிக்காக இரு வகையான அருள்சாதனங்களை இறைவன் அளித்துள்ளார் – அவை: i)  குருத்துவம் / அர்ப்பணவாழ்வு / திருப்பட்ட வாழ்வு / திருத்தூது பணிகளின் -அருள்சாதனம் ii) திருமண அருள்சாதனம். இவை இரண்டுமே  ‘கடவுளின் பணிக்காக’ பிரத்தியேகமாக (exclusively) ஏற்படுத்தப்பட்ட அருள் சாதனங்கள். [1533-1535]

2.      இந்த இரு திருவருள் சாதனங்களுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

Ø  இவ்விரண்டுமே பிறரின் நன்மைக்காக எற்ற்படுத்தப்பட்டவை - உதாரனமாக

                    i.     குருத்துவம்: கிறிஸ்துவ மக்களுக்கு திருப்பலி நிறைவேற்ற,  அருள்சாதனங்களை வழங்க. எந்த ஒரு குருவும் தனது வாழ்வுக்காக குருப்பட்டம் பெறுவதில்லை

                  ii.     திருமணம்: திருஅவைக்கு தொடர்ந்து இறைவன் கொடுக்கும் மக்களைப்பெற்றெடுத்து அவர்களை நல்ல கிறிஸ்தவர்கள்ளக உருவாக்குதல்

(No one is ordained just for himself, and no one enters the married state merely for his/her own sake.)

Ø  இவ்விரு அருள்சாதனங்களுமே இறைமக்களுக்கு பணிபுரிவதற்கும், திருஅவையின் அங்கத்தினர்களை அல்லது கடவுளின் மக்களைக் கட்டி எழுப்புவதற்கும் ஏற்படுத்தப்பட்டவை.

Ø  இவ்விரு அருள்சாதனங்களுமே கடவுளின் அன்பை இந்த உலகிற்கு கொண்டுவரும் வாய்க்கால்கள் ஆகும்.  தொநூ. 12:2 உனக்கு ஆசி வழங்குவேன் …….. நீயே ஆசியாக விளங்குவாய்.

Ø  குருப்பட்டம் மீட்பின் ஒரு கருவி…குருப்பட்டம் வழங்கப்படுவது தனி ஒரு மனிதன் வாழ அல்ல மாறாக ஒட்டுமொத்த திருஅவையின் வாழ்விற்காக – புனித தாமஸ் அக்வினாஸ் -(1225-1274)

குருத்துவ அருள்சாதனம் The Sacrament of Holy Orders

3.      பொது குருத்துவத்துக்கும் பணிக்குருத்துவத்துக்கும் உள்ள வேறுபாடு யாது?

பொதுக்குருத்துவம்:

¦ ஒவ்வொரு கிறிஸ்தவளும், கிறிஸ்தவனும் கடவுளின் மகள், மகன். எனவே  ஒவ்வொரு கிறிஸ்தவனும் கிறிஸ்தவளும் கிறிஸ்துவின் பிரசன்னத்தை இவ்வுலகில் உணரச்செய்யவேண்டும். 

¦ அதாவது நமது கிறிஸ்தவ வாழ்வாலும் நாம் பிறரோடு கொள்ளும் நட்புறவாலும் அவர்கள் நம்மில் கிறிஸ்துவை காணவேண்டும். இதுவே திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவருமே யேசுவின் குத்துவத்தில் பங்குபெறுகிறோம் என்பதன் பொருள். 

¦ எனவே நமது குருத்துவம் என்பது நாம் வாழும் சமுதாயத்தில் கிறிஸ்துவாக வாழ வேண்டும்; நமது சொல்லாலும் செயலாலும் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.  

பணிக்குருத்துவம்:     

¦ பொதுக்குருத்துவத்தில் பங்குபெறும் நம்மில் சிலரை  கிறிஸ்து அழைத்து                 i) ‘போதித்தல்’ (munus docendi),

ii)திருப்பலி போன்ற திருவழிபாடுகளை நிறைவேற்றல், விசுவாசிகளுக்கு திருவருள்சாதனக்களை வழங்குதல்(munus liturgicum)

iii)மேய்ப்பர்களாக ஆளும் ஆற்றல், அதிகாரம் (munus regendi)

ஆகிய பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படைத்து விசுவாசிகளுக்கு உதவும்படி பணித்திருக்கிறார். [1546,1547, 1592]

 

4.      குருத்துவம் என்றால் என்ன?

v இது ஒரு திருவருள்சதனம்.

v கிறிஸ்து தனது திருத்தூதர்களிடம் ஒப்படைத்த மீட்புத் திட்டத்திற்கான (Economy of Salvation) பணிகள் உலகம் முடியும் மட்டும் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும், தொடர்ந்து நிறைவேற்றப்படவேண்டும்

v இதனையே திருத்தூதுப் பணி(apostolic ministry) என்றுஅழைக்கிறோம்

v இப்பணிக்குத் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், தகுந்த தயாரிப்புகளுக்குப்பின் அப்பணிக்கான அங்கிகாரத்தையும் அதிகாரத்தையும் தூய ஆவியின் கொடையாக பெறும் அருள் அடையாளமே குருத்துவம் ஆகும்.

5.     அர்ப்பனவாழ்விற்கு திருநிலைப்படுத்தும்போது / குருத்துவ அருள்சாதனத்தைப் பெறும்போது என்ன நிகழ்கிறது?

v ஒருவர் குருப்பட்ட திருவருள் சாதனத்தைப் பெறும்போது  ‘புனித அதிகாரமான’ (sacred authority)  தூய ஆவியாரின் கொடையை ஆயர் வழியாக கிறிஸ்துவே அவருக்கு வழங்குகிறார்.

v ஒரு குருவானவர் உலகு சார்ந்த எதோ ஒரு உத்தியோகத்திற்காகவோ,  பொறுப்பிற்காகவோ, வேலைசெய்யவோ பணியில் அமர்த்தப்பட்டவர் அல்ல. 

v மாறாக தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள, விசுவாச வாழ்வின் உடன்பிறப்புகளான சகோதர சகோதரிக்களுக்காக ஆன்மீகப் பணியாற்ற வரையறுக்கப்பட்ட (a definite power and a mission)  அதிகாரத்தையும், ஆற்றலையும் (உம். அப்பரசத்தை கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும்மாற்றுதல், பாவங்களை மன்னித்தல்) பெறுகிறார். [1538]

6.      அர்ப்பன சபைகள் அல்லது குருத்துவம் பற்றிய திருஅவையின் புரிதல் என்ன? (அல்லது) குருத்துவம் இறைவனின் மீட்புத்திட்டத்தில் எத்தகைய பங்கு வகிக்கிறது?

¦ பழைய உடன்படிக்கையின் குருக்கள்  தங்களை /தாங்கள் விண்ணகம் சார்ந்தவறிற்கும் மண்ணகம் சார்ந்தவற்றிற்கும்; கடவுளுக்கும் மக்களுக்கும் இணைப்பாளர்களாக பணிசெய்வதை தங்கள் கடமையாகக் கருதினார்கள். [1திமோ.2: 5ஏனெனில் கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர்.]

¦ கடவுளுக்கும் மனிதருக்கும் இணைப்பாளர் கிறிஸ்து ஒருவரே என்பதால் பழைய உடன்படிக்கையின் குருத்துவத்தை

v முடிவுக்குக் கொண்டுவந்தார்,

v நிறைவுற செய்தார்

¦ கிறிஸ்துவுக்குப்பிறகு கத்தோலிக்க குருக்கள் என்பவர்கள் கிறிஸ்துவின் குருத்துவத்தின் பணியாளர்கள், என்பதே திருஅவையின் கோட்பாடு.  (Only Christ [is] truly priest. But the others are his ministers.)

¦ கத்தோலிக்க குருக்கள் திருவருள் சாதனங்களை நிறைவேற்றுவது தங்கள் சொந்த தகுதியாலோ, சக்தியாலோஅல்லது தங்கள் தூய்மையான நிலையாலோ அல்ல மாறாக கிறிஸ்துவின் பிரதினிதியாக மட்டுமே [“in persona Christi”]. 

¦ குருத்துவ திருநிலைப்படுத்துதல் வழியாக கிறிஸ்துவின் மீட்கும், குனப்படுத்தும் மன்னிக்கும், தூய்மைப்படுத்தும் ஆற்றல்கள் அவருக்கு அருளப்படுகின்றன. இதனாலேயே ஒரு குருவானவர் பணியாளர் என்ற நிலையிலிருந்து உயர்வாக உள்ளார்.  நல்ல ஒரு குருவானவர் வியக்கத்தக்க ஆற்றலை கிறிஸ்து தனக்கு அளித்துள்ளதை தாழ்சியான உள்ளத்தோடு உணர்ந்து கடமையாற்றுகிறார். [1539-1553, 1592]

7.      குருத்துவதின் படிநிலை (degrees of the sacrament) யாது?

v மூன்று படிநிலைகள் உள்ளன

v ஆயர் (episcopate) குருவானவர் (presbyterate) திருத்தொண்டர் (diaconate) [1554, 1593]

8.      ஆயர் திருநிலைப்படுத்துதலின் போது என்ன நிகழ்கிறது?

ஆயராக ஒரு குருவானவர்  திருநிலைப்படுத்தும்போது

i.        குருத்துவத்தின் முழுமையை பெறுகிறார்.

ii.        திருத்தூதர்களின் வாரிசுகளாக ஆக்கப்படுகிறார்,

iii.        ஆயர்கள் குழுமத்தின் இணைகிறார். 

iv.        மற்ற ஆயர்களுடனும் திருத்தந்தையுடனும் இனைந்து திருஅவையின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பொறுப்பாளர் ஆகிறார்.  குறிப்பாக, கற்பித்தல், புனிதப்படுத்துதல், ஆளுதல் ஆகிய பொறுப்புகளை நிரைவேற்ற திருஅவை அவரை நியமிக்கிறது. 

v.        இவ்வாறு ஆயர்பணி உண்மையான மேய்ப்புப் பணியின் அடையாளம் ஆகும்.    திருத்தூதுபணிஎன்பது உயர்ந்த, மதிப்புமிக்க, மகத்தான, கண்ணியமான, ஒப்பற்ற பணி.   இத்தகைய பணியினை ஆற்ற  கிறிஸ்து திருத்தூதர்கள் மேல் கைகளைவைத்து தூய ஆவியாரின் சிறப்பான வரங்களை பொழிந்தருளினார். 

vi.        கிறிஸ்து தமது திருத்தூதர்களை மேய்ப்பர்களாக நியமித்த நிகழ்வே ஆயராக திருநிலைப் படுத்துதலிலும் நிகழ்கிறது.

vii.        அதேபோல் ஆயர்களும் தனக்கு அடுத்தநிலையில் உள்ளவர்களுக்கு அவர்கள் தலைமீது கைகளை வைத்து தூய ஆவியாரின் கொடைகளை அளித்தார்கள்.  இந்த பாரம்பரியம் கிறிஸ்துவின் காலம்தொட்டு இன்றுவரை ஆயர் திருநிலைப்படுத்துதல் (episcopal consecration )வழியாக காத்துவரப்படுகிறது. [1555-1559]

9.      திருதந்தைக்கும் ஆயர்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

திருத்தந்தையும் அடிப்படையில் ஒரு ஆயரே.  ஆனல் ஆயர்களுக்குள் முதன்மையானவர், ஆயர்களின் குழுமத்தின் தலமைபொறுப்பை வகிப்பவர்.  குருத்துவ படிநிலயில் முதல் நிலையில் இருந்து திருச்சபையை ஆழ்பவர்.

10.  ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்துவனின் வாழ்வில் ஆயர் எத்துனை முக்கியமானவர்?

ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிபொறுப்பு யாது?

v ஆயர் இந்த உலகத்தில் கிறிஸ்துவின் பதிலாளராக (vicar = "earthly representative of Christ" ).செய்லபடுகிறார்.   அதாவது தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தலத்திருச்சபையின் விசுவாசிகளை பேணிக்காப்பதில்  கிறிஸ்துவின் பதிலாளராக மேய்ப்புப் பணியை தலைமையேற்று நடத்துகிறார்.

v அதேசமயம் ஆயர் குழுமத்தில் உறுப்பினராக இருந்து திருத்தந்தையோடும் மற்ற ஆயர்களோடும் இணைந்து திருச்சபை முழுவதுக்குமான (அனைத்து தளத்திருஅவக்குமான) மேய்ப்புப் பணியில் அக்கறையுடன் பங்கு கொள்கிறார்.

v அதாவது ஒரு ஆயர் திருஅவையின் விதிமுறைகளின்படி அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தலத் திருச்சபையின் விசுவாசிகளுக்கே  தலைமை பொறுப்பாளர் என்றபோதிலும்; திருத்தூதர்களின் முறையான வழித்தோன்றல்  என்பதாலும், கிறிஸ்து தம் திருத்தூதர்களித்த கட்டளையின்படியும் ஒரு ஆயர் மற்ற ஆயர்களுடன் இணைந்து ஒட்டுமொத்த திருஅவைக்கும் திருத்தூதுப் பணி ஆற்ற கடமைப்பட்டுள்ளனர். [1560]

11.  ஆயரால் நிறைவேற்றப்படும் திருப்பலி தனி சிறப்பு கொண்டுள்ளதாக ஏன் கருதப்படுகிறது?

நல்லாயனும், நம் தலைமைக்குருவுமான கிறிஸ்துவின் பதிலாளராக (Vicar) ஆயர் கருதப்படுவதால் ஆயர் நிறைவேற்றும் திருப்பலி கிறிஸ்துவே தலைமையேற்று நடத்தும் சிறப்பு கொண்டது.  [1561]

12.  தலத்திருஅவையில் ஆயருக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கும் இடையில் உறவு எப்படி இருக்கவேண்டும்?

ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர் ஆயர் தனக்காக கிறிஸ்துவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர் என்பதை உணர்ந்து அவருக்கு  பணிந்து நடப்பதை தனது கடமை எனக்கருதவேண்டும். ஆயர் குருக்களோடும் திருத்தொண்டர்களோடும் இணைந்து தனது மேய்ப்புப் பணியினை செய்வதால் அவர் தல திருஅவையின் காணக்கூடிய அடித்தளமும் ஆதாரமாகவும் விளங்குகிறார்.  [1560-1561]

“கிறிஸ்து தன் தந்தைக்கு பணிந்து நடந்ததுபோல் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்  ஆயரின் தலைமைத்துவத்தை ஏற்று அவருக்கு பணிந்து நடக்க வேண்டும்”.  அந்தியோக்கு இஞ்ஞாசியார்.

13.  குருத்துவ திருநிலைப்பாட்டின்போது என்ன நிகழ்கிறது?

குருத்துவ திருநிலைப்பாட்டின் போது ஆயர் குருவாக ஆவதற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள்மீது இறைவனின் அருளையும், ஆற்றலையும் இறங்கச்செய்கிறார்.

இதன்மூலம் அவர் ஆன்மாமீது நித்தியத்திற்கும் அழிக்க/நீக்க இயாலாத “குருவாக திருநிலைபடுத்தப்பட்டவர் (குருவாக அபிக்ஷேகம் செய்யப்பட்டவர்)” என்ற முத்திரை பதிக்கப்படுகிறது.

i.     ஆயர் தலைமையேற்று நிறைவேறும் திருப்பலியில் குருப்பட்டம் பெற இருப்பவரின் பெயர் சொல்லி அழைக்கும் போது திருநிலைப்பாட்டு நிகழ்வு துவங்குகிறது.

ii.     ஆயரின் மறையுரைக்குப்பின் குருவாக அபிஷேகம் பெற இருப்பவர் ஆயருக்கும் அவருக்குப்பின் ஆயராக வருபவர்களுக்கும்  கீழ்படிவேன் என்ற உறுதிமொழி கொடுப்பார். 

iii.     ஆயர் குருப்பட்டம் பெற இருப்பவரின் தலைமேல் தன் கரங்களை வைத்து அபிஷேக செபத்தை சொல்லும்போதுதான் அவர் குருவாக திருநிலைப்படுத்தப்படுகிறார்.

அத்தருணத்திலிருந்து ஒரு முழுமையான குருவாக கிறிஸ்துவின் மீட்புப்பணியை செய்ய ஆரம்பிக்கிறார்.

ஆயரின் உடன் உழைப்பளி என்ற நிலையில்

i.          இறைவார்த்தையை எடுத்துரைப்பார்

ii.          திருவருள்சாதனங்களை விசுவாசிகளுக்கு நிறவேற்றிவைப்பார்

iii.          அனைத்திற்கும் மேலாக திருப்பலி நிறைவேற்றுவார். [1562-1568]

 

14.  குருத்துவ படிநிலயின் முதல் அல்லது ஆரம்பபடி எது?

v தியாகோன் (DEACON) அல்லது திருதொண்டர் என்ற நிலையே குருத்துவத்தின் முதல் படியாகும். 

v தியாகோன் என்பதன் பொருள் ‘தொண்டு செய்பவர்’.  இதன் வழி அவர் குருத்துவ நிலைக்கு அல்லாமல் தொண்டர் நிலைக்குமட்டுமே உயர்த்தப்படுகிறார்.

v தியாகோன் என்பதன் மூலம் diakonia. இதன் பொருள் தொண்டு / அருள்பணி செய்பவர்.

v அத்தோடு மறைக்கல்வி கற்பித்தல், நற்செய்தி அறிவித்தல், திருப்பலியில் மறையுரை ஆற்றுதல், திவ்யநற்கருணை வழங்குதல் திருமண சடங்குகளின் போது உதவுதல் அடக்க சடங்கை நடத்துதல்; , திருவழிபாடு நிகழ்வுகளில் உதவுதல் போன்றவற்றிலும் பங்குகொள்வார்கள்.திப.6:3-6.

v இந்த அருளடையாளத்தை ஆயரே தம் திருக்கரங்களால் நிறைவேற்றுவதால் அவர் ஆயருடன் சிறப்பான விதத்தில் இணைக்கப்பட்டு திருத்தொண்டருக்கு ஒதுக்கப்பட்ட பணியினை ["diakonia."]ஆற்றத் துவங்குகிறார்.

v இவ்வாறு கிறிஸ்துவின் மேய்ப்புப் பணியிலும் பிறர் அன்புப் பணியிலும் சிறப்பான விதத்தில் பங்கு பெறுகிறார். 

v குருத்துவ அருள் அடையாளத்தைப்போலவே திருத்தொண்டரின் மேலும் அழிக்க இயலாத  “திருத்தொண்டர்” என்ற முத்திரைபதிக்கப்படுகிறது. இந்த முத்திரயே அவர்களை கிறிஸ்துவின் சாயலை  ஒத்திருக்கசெய்கிறது.   [55]

15.  திருத்தொண்டராக திருநிலைப்படுத்தும்போது (diaconal ordination) என்ன நிகழ்கிறது?

திருத்தொண்டர் திருநிலைப்படுத்துதலின்போது அந்த அருளடையாளத்தைப் பெறுபவர் குருத்துவ திருவருள்சாதனத்துக்கு உட்பட்ட சிறப்பு தொண்டராக பணியமர்த்தப்படுகிறார்.  இதன் வழியாக மத்.20:28 கிறிஸ்துவின் “தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகதம் உயிரைக் கொடுப்பதற்கும்’  என்ற விருதுவாக்கை தனதாக ஏற்றுக்கொள்கிறார்.   உலகு சார்ந்த பலிபீடம் சார்ந்த அறச் செயல்கள்சார்ந்த பணிகளில் அனைவருக்கும் தொண்டு செய்பவராக மாறுகிறார்.  மறைசாட்சியான ஸ்தேவானை தங்களது முன்மாதிரியாகக் கொள்கிறார்கள். திப. 6:8

ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார்.

16.  யாரெல்லாம் குருத்துவ அருள்சாதனத்தைப் பெற முடியும்?

Ø திருஅவையால் திருத்தொண்டராகவோ, குருவாகவோ,  ஆயராகவோ திருநிலைப்படுத்த அழைக்கப்படும்

Ø திருமுழுக்குப் பெற்ற எந்த ஒரு ஆண் கத்தோலிக்க கிறிஸ்தவரும், 

Ø முறையான தயாரிப்புக்குப் பின் இந்த திருவருள்சாதனத்தைப் பெற முடியும். [1577-1578]

17.  குருத்துவ திருநிலைப்படுத்துதல் எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது?

சூழல்:

Ø ஒரு ஆயரோ, குருவோ, திருத்தொண்டரோ தனக்காக இந்த அருள் அடையாளத்தை பெறுவதில்லை மாறாக அந்த தல விசுவாசிகளுக்கு பணியாற்றவே; எனவே விசுவாசிகள் அதிக அளவில் இந்த கொண்டாட்டத்தில் பங்குகொள்ள திருஅவை அழைக்கிறது.

Ø இதற்காக இந்த கொண்டாட்டதை

            i.     ஞாயிற்றுகிழமைகளில்

           ii.     அந்தந்த மறைமாவட்டத்தின் பேராலயத்தில்,

         iii.     பொருத்தமான நாளில்,

         iv.     தகுந்த பக்திசிரத்தையுடன்,

          v.     பெருவிழாவாக

நடத்துவது பொருள் உள்ளதாக இருக்கும் என்பது திருஅவையின் கருத்து.

Ø  மூன்றுதிருநிலைப்படுத்தும் நிகழ்வுகளும் (ஆயர், குருவானவர்,  திருத்தொண்டர்) ஏறக்குறைய ஒரே சடங்கு முறையில் அல்லது சடங்கு அமைவில் அமைந்துள்ளன.

Ø  திருப்பலியின் நடுவே இந்த சடங்கை நடத்துவதுதான் மிகப் பொருத்தமான சூழலாக இருக்கும்.[ 1572]

திருப்பொழிவு

Ø  திருப்பொழிவு அருள் அடையாளத்தின் திருநிலைப்படுத்தும் நிகழ்வின் முக்கியமான சடங்கு (essential rite of the sacrament):  திருநிலைப்படுத்தப்படுபவின் தலைமீது ஆயர் தன் கைகளை வைப்பதிலும் திருப்பொழிவு பெறுபவரின் பணிக்கு ஏற்ற கொடைகளை தூய ஆவியார்  பொழியுமாறு ஆயர் சொல்லும் அர்ச்சிப்பு செபமுமே திருநிலைப்படுத்தும் சடங்கின் அத்தியாவசிய பகுதியாகும். [1573]

கொண்டாட்டதின் (மாறுபட்ட திருவழிபாட்டு பாரம்பரியங்களால் சிறிய வேறுபாடுகள் காணப்பட்டலும்) பொதுவான செயல்முறை: இலத்தீன் வழிபாட்டு பாரம்பரியத்தின்படி

v துவக்க சடங்குகள்

v திருப்பட்டம் பெற இருப்பவரை தெரிவு செய்தலும் ஆயருக்கு அறிமுகப் படுத்துதலும்

v ஆயரின் அறிவுரைகள்

v தெரிவு செய்யப்பட்டவரை ஆயர் சோதித்தறிதல்

v புனிதர்களின் பிரார்த்தனை

v தெரிவுசெய்யப்பட்டவர் திருஅவையின் வழிகாட்டுதலின்படியும் கோட்பாடுகளின்படியும் இந்த புனித திருநிலைப்பாட்டிற்கு தயாரிக்கப்பட்டுள்ளார் என அவரை தயாரித்தவர்கள் சான்றளித்தல்

v தூய ஆவியார் அவர் பணியை புனிதப்படுதுகிறார் என்பதை உணர்த்த புனித் கேரிஸம் எண்ணெய்யால் அபிஷேகம் செய்தல் (ஆயர், குருத்துவ திருநிலைப்படுத்துதல் மட்டும்) இவை அல்லாது

v ஆயர் திருநிலைப்படுத்தும் சடங்கில் 

ü  திருவிவிலியம் வழங்குதல்,

ü  ஆயர் திருஅவையுடன் மணஒப்பந்தமாகிறார் என்பதைக்குறிக்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது

ü  ஆயர் தலத்திருஅவையின் தலைமைக் குரு என்பதை உணர்த்த  தொப்பி அணிவிக்கப்படுகிறது

ü  நல்லாயனாம் கிறிஸ்துவைப்போல் கவனமுடன் மேய்ப்புப்பணி செய்வார் என்பதை உணர்த்த ஆயனின் கைத்தடியைப் போன்ற செங்கோல் கொடுக்கப்படுகிறது.

v குருவாகத்திருநிலைபடுத்தப்படுபவருக்கு “விசுவாசிகள் அளிக்கும் காணிக்கைகளை ஆண்டவருக்கு காணிக்கையாக்குவதக் குறிக்க அப்பத் தட்டும் ரசப்பாத்திரமும் (paten and chalice) அளிக்கப்படுகிறது.

v திருத்தொண்டராக திருநிலைப்படுத்தப்படுபவ்ருக்கு இறைவார்த்தையை அறிவிக்கவேண்டும் என்பதை உணர்த்த திருவிவிலியம் அளிக்கப்படுகிறது.

18.  குருத்துவ திருநிலைப்பாட்டின் விளைவுகள் யாவை?

~       அழிக்க இயலா (நித்தியத்திற்குமான) பண்புகள்

Ø ஆயர்/குருவானவர் தூய ஆவியாரின் சிறப்பான கருணையால் கிறிஸ்துவுக்குள் இணைக்கப் படுகிறார்.  இவ்வாறாக திருஅவையில் கிறிஸ்துவின் கருவியாக செயல்படத் துவங்குகிறார்

Ø கிறிஸ்துவின் பிரதிநிதியாக, தல திருஅவையின் தலைவராக  பணியாற்ற அதிகாரம் பெறுகிறார்

Ø கிறிஸ்துவின் முப்பெரும் பண்புகளான குரு, இறைவாக்கினர், அரசர் அகியவற்றில் பங்குபெருகிறார்.

Ø திருமுழுக்கு, உறுதிப்பூசுதல் போன்று ஒரே ஒருமுறை வழங்கப்படும் அருள்சாதனம்

~       திருமுழுக்கு, உறுதிப்பூசுதல் போன்று ஒரே ஒருமுறை வழங்கப்படும் அருள்சாதனம்.  மீண்டும் மீண்டுமாகவோ அல்லது தற்காலிகமாகவோ  வழங்கக்கூடிய அருள்சாதனம் அல்ல.

~       தவிர்க்கமுடியாத அல்லது கடுமையான காரணங்களுக்காக ஒரு குருவானவரிடமிருந்து குருத்துவ அருள்சாதனத்தை ரத்து செய்யலாம்.  அப்போதிருந்து அவர் குருத்துவத்தின் அதிகாரத்தையும், கடமைகளையும் ஆற்றுவது தடை செய்யப்படுகிறது.

~       அதேசமயம், குருத்துவம் என்பது என்றுமே நீக்க இயலாத அழிக்க இயலாத நித்தியத்திற்குமாக அவருள் பதிக்கப்பட்ட முத்திரை என்பதால், அவர் பொதுநிலையினரின் அந்தஸ்த்திலும் கருதப்படுவது இல்லை.  புனித அகுஸ்தினாரின் கடுமையான வார்த்தைகளில் “குருத்துவ அருள் அடையாளங்கள் பரிக்கப்பட்ட ஒருவர் சாத்தானுக்கு ஒப்பானவர்”.

19.  அருள்பணியாளரின் (ஆயர், குரு, திருத்தொண்டர்) பணி எந்த அதிகாரத்தின் அடிப்படையில் நிறைவேற்றப்படுகிறது?

v திருநிலைப்படுத்தப்பட்ட அருள்பணியாளர்கள் தங்களின் திருப்பணியை தனது சொந்த அதிகாரத்தாலோ. தலைத்திருச்சபையின் தலைவர் என்ற அதிகாரத்தாலோ, அல்லது சமூகத்தின் கட்டளையாலோ செய்வதில்லை.

v மாறாக கிறிஸ்துவின் அதிகாரத்திலும், திருஅவையின் பெயரிலுமே செய்கின்றனர்.

v இறைமக்களுக்கு பணிபுரியவே இயேசு குருத்துவத்தை நிறுவி அதற்கான அதிகாரத்தையும்  அருள்பணியாளர்களுக்குக் கொடுத்துளார்.

20.  திருத்தூதுப் பணி எவ்வாறு உலகம் முடியும் மட்டும் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது? திருத்தூதுபணிஎன்பது உயர்ந்த, மதிப்புமிக்க, மகத்தான, கண்ணியமான, ஒப்பற்ற பணி.  இறைவனின் மீட்புத் திட்டத்தில் திருத்தூதுப்பணி பெரும் பங்காற்றுகிறது.   இத்தகைய பணியினை ஆற்ற  கிறிஸ்து திருத்தூதர்கள் மேல் கைகளைவைத்து தூய ஆவியாரின் சிறப்பான வரங்களை பொழிந்தருளினார்.  அதேபோல் ஆயர்களும் தனக்கு அடுத்தநிலையில் உள்ளவர்களுக்கு அவர்கள் தலைமீது கைகளை வைத்து தூய ஆவியாரின் கொடைகளை அளித்தார்கள்.  இந்த பாரம்பரியம் கிறிஸ்துவின் காலம்தொட்டு இன்றுவரை ஆயர் திருநிலைப்படுத்துதல் (episcopal consecration )வழியாக காத்துவரப்படுகிறது. [1556]

21. குருத்துவ அருள்சாதனத்தை யார் வழங்கலாம்?

குருத்துவ திருவருள்சாதனம் ஒரு அப்போஸ்தலிக்க/திருத்தூது சார்ந்த திருவருள் சாதனம் என்பதால், திருத்தூதர்களின் வழிதோன்றல்களான ஆயர்கள் மட்டுமே இத்திருவருள் சாத்னத்தை வழங்கமுடியும். [1576]

22.  தமது மந்தையான திருஅவையை கிறிஸ்து எவ்வாறு தமது இரண்டாம் வருகையின்மட்டும் நடத்திச்செல்கிறார்?

¦ கிறிஸ்துவே தனது அப்போஸ்தலர்க்ளை தெரிவு செய்து தனந்து அதிகாரத்திலும் மீட்புப்பணியிலும் பங்கு கொள்ளச்செய்தார். 

¦ தாம் விண்ணேற்றம் அடைந்து தந்தையின் வலப்ப்புரம் அமர்ந்தபின் தம் மந்தையை நிராதரவாக விட்டுவிடவில்லை.

¦ மாறாக தம்மை விசுவசித்து ஏற்றுக்கொண்டவர்களை (திருஅவையை)  தம் திருத்தூதர்களின், அவர்கள் வழி வருபவர்களின் (ஆயர்களின்) இடையறாத பதுகாபில் வைத்துள்ளார்.  இவ்வாறு கிறிஸ்து ஆயர்களையும், மேய்ப்பர்களையும் நமக்குக் கொடையாகக் கொடுத்துள்ளார்.  ஆயர்கள் வாழியாக கிறிஸ்து என்றும் நம்மை வழிநடத்துகிறார். [1575]

23.  குருத்துவ அருள்சாதனத்தைப் பெற நிபந்தனைகள் உள்ளனவா?

¦ குருத்துவ அருள்சாதனமு தனக்கு வழ்ங்கப்படவேண்டும் என எவரும் உரிமைகொண்டாட முடியாது.  கிறிஸ்துவால் அழைக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே.

¦ இறைவனின் அழைப்பை தான் பெற்றுள்லதாக ஒருவர் உணர்ந்தால் திருஅவையில்  ‘குருக்களாக தெரிவு செய்யும் பொறுப்பிலும் அதிகாரத்திலும்’ உள்ளவர்களிடம் தனது ஆவலை பணிவுடன் எடுத்துக்கூறலாம்.

¦ மற்ற அருள்சாதனங்களைப்போலவே குருத்துவமும் ஒருவரின் தகுதியாலோ உரிமையாலோ பெறக்கூடிய ஒன்றல்ல; மாறாக இறைவனின் பேரிரக்கத்தாலும் கருணையாலும் மட்டுமே ஒருவருக்கு விலைமதிப்பற்ற கொடையாகாக்  கிடைக்கக் கூடிய ஒன்று. [1578]

24.  குருத்துவ வாழ்வுக்கு கற்பு (துறவு/மணத்துறவு /பிரமசரியம்) ஏன் அவசியம் எனக் கருதப்படுகிறது?  குருத்துவ வாழ்வுக்கும் கற்பு நிலைக்கும் உள்ள தொடர்பு என்ன?

v நிரந்தர திருத்தொண்டர் நிலைக்கு அர்பணித்துக்கொண்டவரகள் தவிர மற்ற குருத்துவ நிலையில் (ஆயர், குருக்கள்) இருப்பவர்களுக்கு கற்பு என்பது கண்டிப்பான ஒன்று என்பது கத்தோலிக்க (இலத்தீன்) திருஅவையின் உறுதியான நிலைப்பாடு.

v இறையாட்சி பணிக்கு  “முழுமையாக” என்னை அர்பணிக்கிறேன் என்பதின் உறுதியான நிலைப்பாடுதான் குருவானவரின் கற்புநிலை வாழ்வு. (அல்லது)

v இறையாட்சி பணிக்காக, திருஅவையின் பணிக்காக  தான் ஒரு புதுவாழ்வை, புனிதமான வாழ்வை மேற்கொண்டவன் என்று மனமகிழ்வோடு அறிக்கையிட்டு வாழும் வாழ்வே கற்புநிலை வழ்வு.

கீழை திருச்சபையில் இது (கற்பு நிலை வாழ்வு) தனிநபர் விருப்பமாகவும், தெரிவாகவும் கடப்பிடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒருவர் திருநிலைப்படுத்தப்பட்டபின் திருமணம் செய்துகொள்ள அனுமதி இல்லை.[1579,1580]

1.      திருஅவையின் ஒருமைப்பாட்டை கட்டியெழுப்பும் அருள்சாதனங்கள் யாவை?

2.     இந்த இரு திருவருள் சாதனங்களுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

3.     குருத்துவம் என்றால் என்ன?

4.      பொது குருத்துவத்துக்கும் பணிக்குருத்துவத்துக்கும் உள்ள வேறுபாடு யாது?

5.     அர்ப்பனவாழ்விற்கு திருநிலைப்படுத்தும்போது / குருத்துவ அருள்சாதனத்தைப் பெறும்போது என்ன நிகழ்கிறது?

6.     அர்ப்பன சபைகள் அல்லது குருத்துவம் பற்றிய திருஅவையின் புரிதல் என்ன? (அல்லது) குருத்துவம் இறைவனின் மீட்புத்திட்டத்தில் எத்தகைய பங்கு வகிக்கிறது?

7.     குருத்துவதின் படிநிலை (degrees of the sacrament) யாது?

8.     ஆயர் திருநிலைப்படுத்துதலின் போது என்ன நிகழ்கிறது?

9.     திருதந்தைக்கும் ஆயர்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

10. ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்துவனின் வாழ்வில் ஆயர் எத்துனை முக்கியமானவர்?

ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிபொறுப்பு யாது?

11. ஆயரால் நிறைவேற்றப்படும் திருப்பலி தனி சிறப்பு கொண்டுள்ளதாக ஏன் கருதப்படுகிறது?

12. தலத்திருஅவையில் ஆயருக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கும் இடையில் உறவு எப்படி இருக்கவேண்டும்?

13. குருத்துவ திருநிலைப்பாட்டின்போது என்ன நிகழ்கிறது?

14. குருத்துவ படிநிலயின் முதல் அல்லது ஆரம்பபடி எது?

15. திருத்தொண்டராக திருநிலைப்படுத்தும்போது (diaconal ordination) என்ன நிகழ்கிறது?

16. யாரெல்லாம் குருத்துவ அருள்சாதனத்தைப் பெற முடியும்?

17. குருத்துவ திருநிலைப்படுத்துதல் எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது?

18. குருத்துவ திருநிலைப்பாட்டின் விளைவுகள் யாவை?

19. அருள்பணியாளரின் (ஆயர், குரு, திருத்தொண்டர்) பணி எந்த அதிகாரத்தின் அடிப்படையில் நிறைவேற்றப்படுகிறது?

20. திருத்தூதுப் பணி எவ்வாறு உலகம் முடியும் மட்டும் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது?

21. குருத்துவ அருள்சாதனத்தை யார் வழங்கலாம்?

22. தமது மந்தையான திருஅவையை கிறிஸ்து எவ்வாறு தமது இரண்டாம் வருகையின்மட்டும் நடத்திச்செல்கிறார்?

23. குருத்துவ அருள்சாதனத்தைப் பெற நிபந்தனைகள் உள்ளனவா?

24. குருத்துவ வாழ்வுக்கு கற்பு (துறவு/மணத்துறவு /பிரமசரியம்) ஏன் அவசியம் எனக் கருதப்படுகிறது?  குருத்துவ வாழ்வுக்கும் கற்பு நிலைக்கும் உள்ள தொடர்பு என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Fifty steps to a happy marriage life

 50 steps to a happy marriage life  Start each day with a kiss. *    Wear your wedding ring at all times. *    Date once a week. *    ...