கிருஸ்து பிறப்பு விழா குழந்தை இயேசுவின் ஆசீருக்காக வீடுகளில் செபிக்கின்ற செபம்

 

கிருஸ்து பிறப்பு விழா குழந்தை இயேசுவின் ஆசீருக்காக

வீடுகளில் செபிக்கின்ற செபம்

 

குரு: தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே - ஆமென்.

       ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

             உம் ஆன்மவோடும் இருப்பாராக

மன்றாடுவோமாக:

அன்பான இயேசுவே உம்மக்களாகிய எங்களுக்கு மபெரும் மகிழ்ச்சி ஊட்டும் நற்செய்தியாகவும் இம்மண்ணில் பிறந்த இயேசுவே, உமது திருப்பிறப்பை கொண்டாட இருக்கும் இந்த திருகுடும்பத்தை ஆசீர்வதித்தருளும். வானத்தூதர்கள் அறிவித்த அந்த சமாதானத்தையும் இடையர்கள் அடைந்த மகிழ்ச்சியையும் இந்த குடும்பம் கண்டு உணர ஆசீர்தாரும். உமது நலன்களாலும் உமது ஆசீராலும் இக்குடும்பத்தை நிறப்பியருளும். குழந்தை இயேசுவே எங்களுடைய ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் அன்பு, அமைதி, சமாதானம், மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்க செய்தருளும். நீர்தாமே இத்திருக்குடும்பத்தை உமது பிரசன்னத்தால் வழிநடத்தி, உமது ஆசீரால் நிறப்பியருளும்.

 

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

உம் ஆன்மாவோடும் இருப்பாராக

குரு: + தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே - ஆமென்.

 

 

1 பேதுரு 2 பேதுரு 1, 2, 3 யோவான் வினாடி வினா

 1 பேதுரு

1. திருத்தூதன் பேதுரு தனது மடலை யாருக்கு எழுதுகிறார்?

2. விண்ணுலகில் நமக்கென்று என்ன வைக்கப்பட்டுள்ளது?

3. நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்புக்காக எவ்வாறு பாதுகாக்கப்பட்டு வருகிறோம்?

4. அழியக்கூடிய பொன் எதனால் புடமிடப்படுகிறது?

5. இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது  நம் நம்பிக்கை நமக்குப் எவற்றைத் தருவதாய் விளங்கும்?

6. நம் நம்பிக்கையின் குறிக்கோள் என்ன?

7. ஆளைப் பார்த்தல்ல, அவரவர் செயல்களின் படியே தீர்ப்பு வழங்குகிறவர் யார்?

8. நம் மூதாதையரிடமிருந்து வழிவழியாய் வந்த வீணான நடத்தையினின்று நம்மை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை என்ன?

9. புதிதாய்ப் பிறந்த குழந்தைகள்போல, எவ்வகைப் பாலை அருந்த ஆர்வமாயிருக்க பேதுரு அழைக்கிறார்?

10. கடவுள் பார்வையில் அதுவே விலையுயர்ந்ததும், நம்க்கு அழியாத அலங்காரமாய் இருக்கவும் பேதுரு விரும்பும் பண்புகள் யாவை?

11. ஆபிரகாமைத் "தலைவர்" என்றழைத்து அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தவர் யார்?

12. ஆண்கள் எப்பொழுது தடையின்றி இறைவேண்டல் செய்ய முடியும்?

13. வாழ்க்கையில் இன்பம் காணவும் நல்ல நாள்களைக் காணவும் விரும்புவோர் செய்ய வேண்டியது என்ன?

14. ஆண்டவரின் கண்கள் யாரை நோக்குகின்றன?

15. ஆண்டவரின் முகம் யாருக்கு எதிராக இருக்கின்றது?

16. தீமை செய்து துன்புறுவதை விட, கடவுளுக்குத் திருவுளமானால், என்ன செய்து துன்புறுவதே மேல்?

17. யார் பாவத்தை விட்டு விடுகின்றனர்?

18. திரளான பாவங்களையும் போக்கக்கூடியது எது?

19. நம் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிவதால் நாம் எவ்வாறு இருக்க வேண்டும்?

20. பேதுரு தம் நம்பிக்கைக்குரிய சகோதரன் என கருதும் நபர் யார்?

2 பேதுரு

21. மறை நூலிலுள்ள எந்த இறைவாக்கும் எவரது சொந்த விளக்கத்திற்கும் உட்பட்டது அல்ல. சரியா? தவறா?

22. இறைவாக்கு என்பது என்ன?

23. பாவம் செய்த வான தூதர்களைக் கடவுள் தண்டிக்காமல் செய்தது என்ன?

24. இறைப்பற்றில்லாத உலகின்மீது வருவிக்கப்பட்டது என்ன?

25. இறைப்பற்றில்லாதோரின் அழிவு எப்படி இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக  எரித்துச் சாம்பலாக்கப்பட்ட இரு நகரங்கள் யாவை?

26. கட்டுப்பாடற்றுக் காமவெறியில் உழன்றோரைக் கண்டு மனம் வருந்தியவர் யார்?

27. கூலிக்காகத் தீவினை செய்ய விரும்பிய நபர் பெயர் என்ன?

28. இயேசு கிறிஸ்துவை அறிந்து, உலகத்தின் அழிவு சக்திகளிலிருந்து தப்பினவர்கள் மீண்டும் அவற்றில் சிக்கி அவற்றால் ஆட்கொள்ளப்பட்டால் ஏற்படும் விளைவு என்ன?

29. யார்; பார்வையில் ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் இருக்கின்றன?

30. ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலந்தாழ்த்துவதற்கான காரணம் என்ன?

1, 2, 3 யோவான்

31. தந்தையோடு இருந்ததும் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதுமான அந்த ……………………… பற்றி உங்களுக்கு அறிவிக்கிறோம்.

32. நாங்கள் அவரிடமிருந்து கேட்டறிந்து உங்களுக்கு அறிவிக்கும் செய்தி இதுவே என்று யோவான் குறிப்பிடும் செய்தி என்ன?

33. ………………………………………….. எனச் சொல்லிக் கொண்டு அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதோர் பொய்யர்?

34. இறை வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் எது உண்மையாகவே நிறைவடைகிறது?

35. …………………………………………., ……………………………………….., ……………………………….. தந்தையிடமிருந்து வருவன அல்ல.

36. ……………………………………அல்ல என்று மறுப்போரைத் தவிர வேறு யார் பொய்யர்?

37. யார் எதிர்க் கிறிஸ்துகள்?

38. ………………………………….மீறுவதே பாவம்.

39. அலகையைச் சார்ந்தவர் யார்?

40. சாவிலேயே நிலைத்திருக்கின்றவர்கள் யார்?

41. தம் சகோதரர் சகோதரிகனை வெறுப்போர் அனைவரும் யார்?

42. கடவுள் நம் …………………………………………..விட மேலானவர்?

43. இயேசுவை ஏற்று அறிக்கையிட மறுக்கும் தூண்டுதல் எதுவும் கடவுளிடமிருந்து வருவதல்ல. சரியா? தவறா?

44. ………………………………….. என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்?

45. தீச்செயல் அனைத்துமே பாவம்; ஆனால் எல்லாப் பாவமுமே சாவுக்குரியவை அல்ல. சரியா? தவறா?

46. கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது. – அதிகாரம் மற்றும் வசனம் குறிப்பிடுக.

47. யோவான் 2வது மடல் யாருக்கு எழுதப்படுகிறது?

48. யோவான் 3வது மடல் யாருக்கு எழுதப்படுகிறது?

49. தம்மைத் தலைவராக ஆக்கிக் கொள்ள விரும்பி யோவானின் அதிகாரத்தை ஏற்க மறுத்தவர் பெயர் என்ன?

50. யாரைக் குறித்து உண்மையும் யோவானும் சான்று பகர்கின்றனர்?



எபிரேயர் வினாடி வினா

 எபிரேயர்


1. முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள் இவ்விறுதி நாள்களில் யார் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்?

2. வான தூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப்பேறாகப் பெற்றவர் யார்?

3. தம் முதற்பேறான மகனை உலகிற்கு அனுப்பியபோது, கடவுள் கூறியது என்ன?

4. “தம் தூதரைக் காற்றுகளாகவும் தம் பணியாளரைத் தீப்பிழம்புகளாகவும் செய்கிறார்" என்று கடவுள் யாரைக்குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறார்?

5. “நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்" என்று கடவுள் வானதூதரைப் பார்த்துக் கூறினார்- சரியா? தவறா?

6. யார் வழி எடுத்துரைக்கப்பட்ட செய்தி உறுதியாயிருந்தது?

7. வரவிருக்கும் உலகினை கடவுள் வானதூதரின் அதிகாரத்திற்குப் பணியச் செய்யவில்லை – சரியா? தவறா?

8. “மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்?... என்ற வசனம் விவிலியத்தில் வேறொரு இடத்தில் இடம் பெற்றிருக்கிறது. அப்புத்தகம், அதிகாரம் மற்றும் வசனத்தை குறிப்பிடுக?

9. இயேசுவுக்கு எதனால் மாட்சியும் மாண்பும் முடியாகச் சூட்டப்பட்டது?

10. சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் எதன் வழியாகவே இயேசு அழித்து விட்டார்?

11. கடவுளின் குடும்பத்தினர் அனைவரிடையேயும் யார் நம்பிக்கைக்குரியவராய் இருந்தார்?

12. ஒவ்வொரு வீட்டையும் கட்டி எழுப்ப ஒருவர் இருப்பது போல, எல்லாவற்றையும் கட்டி எழுப்புகிறவர் ஒருவர் இருக்கிறார்; அவர் யார்?

13. மோசேயின் ஊழியமாயிருந்தது எது?

14. எவற்றை நாம் உறுதியாகப் பற்றிக் கொண்டால் கடவுளுடைய குடும்பத்தாராய் இருப்போம்?

15. எது வாழும் கடவுளை விட்டு விலகும்?

16. உங்களுள் எவரும் பாவத்தால் ஏமாற்றப்பட்டு, கடின உள்ளத்தினர் ஆகாதவாறு, ஒவ்வொரு நாளும் ………………………………. என எண்ணி, நாள்தோறும் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுங்கள்.

17. கடவுளது குரலைக் கேட்டும் கிளர்ச்சி செய்தவர்கள் யார்?

18. “நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்" என்று கடவுள் யாரைப்பற்றி ஆணையிட்டுக் கூறினார்?

19. “கடவுள் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்" என்ற வசனம் விவிலியத்தில் வேறொரு இடத்தில் இடம்பெற்றிருக்கிறது. அப்புத்தகம், அதிகாரம் மற்றும் வசனத்தை குறிப்பிடுக?

20. யார் மனிதரிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, பாவங்களுக்குக் கழுவாயாகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காக மக்கள் சார்பாகக் கடவுள் முன் பணிபுரிய ஏற்படுத்தப்படுகிறார்?

21. கிறிஸ்து தலைமைக் குருவாகத் தம்மையே உயர்த்திக் கொண்டார் – சரியா? தவறா?

22. இயேசு இறைமகனாயிருந்தும், எவ்வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்?

23. ஒரு முறை ஒளியைப் பெற்று, விண்ணகக் கொடையைச் சுவைத்தவர்கள் ……………………………………………. பெற்றவர்கள் ஆவர்?

24. சாலேம் நகரின் அரசர் யார்?

25. அரசர்களை முறியடித்துத் திரும்பியபொழுது ஆபிரகாமை எதிர்கொண்டு போய் அவருக்கு ஆசி அளித்தவர் யார்?

26. மெல்கிசதேக்கு என்னும் பெயரின் முதற்பொருள் என்ன?

27. மெல்கிசதேக்கு ………………………………. எனச் சான்றுபெற்றவர்?

28. …………………………………………. வழியே இஸ்ரயேல் மக்கள் சட்டத்தைப் பெற்றவர்கள்.

29. நம் ஆண்டவர்  எக்குலத்தில் தோன்றினார்?

30. யார் குருக்கள் ஆனபோது ஆணை எதுவும் இடப்படவில்லை?

31. திருச்சட்டப்படி யார் குருக்களாக ஏற்படுத்தப்படுகிறார்கள்?

32. ஒவ்வொரு தலைமைக் குருவும் ……………………………,     …………………………… செலுத்தவே ஏற்படுத்தப்பட்டிருக்கிறார்.

33. “மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்ட முறைப்படி நீ இவற்றையெல்லாம் செய்யுமாறு கவனித்துக்கொள்" யார் யாரிடம் கூறியது?

34. ஒரு விளக்குத் தண்டும் ஒரு மேசையும் படையல் அப்பங்களும் இருந்த  இடத்தின் பெயர் என்ன?

35. இரண்டாம் திரைக்குப் பின், ……………………………… என்னும் கூடாரம் இருந்தது?

36. இரண்டாம் கூடாரத்தில் யார் மட்டுமே செல்வார்? அவர் எத்தனை முறை செல்வார்?

37. இரண்டாம் கூடாரத்தில் தலைமைக் குரு எதற்காக இரத்தத்தைப் படைப்பார்?

38. பலியாகப் படைத்த இரத்தம் வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் இரத்தம் - சரியா? தவறா?

39. மோசே கன்றுக்குட்டிகள், வெள்ளாட்டுக்கடாக்கள் இவற்றின் இரத்தத்தைத் தண்ணீரோடு கலந்து கருஞ்சிவப்புக் கம்பளி நூலால் கட்டிய ஈசோப்புச் செடியால் உடன்படிக்கை ஏட்டின்மீதும் மக்கள் அனைவர்மீதும் தெளித்தார்; தெளிக்கும்போது கூறிய வார்த்தை என்ன?

40. ………………………………………………... இன்றி பாவமன்னிப்பு இல்லை.

41. எவற்றின் இரத்தம் பாவங்களைப் போக்காது?

42. இயேசுவின் உடலைக் கோவிலின் ……………………………… ஒப்பிடலாம்.

43. மோசேயின் சட்டத்தைப் புறக்கணித்தவர், இரக்கம் பெறாமல், எத்தனை சாட்சிகளின் வாக்கு மூலத்தின்படி சாக வேண்டியிருந்தது?

44. எதனால் ஆபேல் காயினுடைய பலியைவிட மேலான பலியைக் கடவுளுக்குச் செலுத்தினார்?

45. நம்பிக்யையாலேயே சாவுக்குட்படாதபடி கடவளால் எடுத்துக் கொள்ளப்பட்டவர் யார்?

46. கண்ணுக்குப் புலப்படாதவை குறித்துக் கடவுளால் எச்சரிக்கப்பட்டபோது, தம் குடும்பத்தைக் காப்பாற்ற, கவனத்தோடு ஒரு பேழையை அமைத்தவர் யார்?

47. மோசே பிறந்தபோது, குழந்தை அழகாய் இருக்கக்கண்டு, அவருடைய பெற்றோர் அரசனுடைய ஆணைக்கும் அஞ்சாது, அவரை எத்தனை மாதம் ஒளித்து வைத்திருந்தனர்?

48. ஒரே ஒரு வேளை உணவுக்காகத் தம் தலைப்பேற்று உரிமையை விற்றவர் யார்?

49. யார் கடவுளின் தீர்ப்புக்கு ஆளாவர்கள்?

50. நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர் யார்?


யாக்கோபு


51. யாக்கோபு தனது மடலை யாருக்கு எழுதுகிறார்?

52. ஐயப்பாடு கொள்பவர்கள் யாரைப் போன்றவர்கள்?

53. யார் ஆண்டவரிடம் ஏதாவது பெற முடியும் என நினைக்காதிருக்கட்டும் என்று யாக்கோபு குறிப்பிடுகிறார்?

54. சோதனை வரும்போது, …..…………………………………. என்று யாரும் சொல்லக்கூடாது?

55. கடவுள் எவரையும் சோதிப்பதில்லை. ஒவ்வொருவரும் தம் சொந்தத் தீய நாட்டத்தினாலே சோதிக்கப்படுகின்றனர் – சரியா? தவறா?

56. பாவம் முழு வளர்ச்சியடைந்து எதனை விளைவிக்கிறது?

57. ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருபவைகள் யாவை?

58. தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி எவற்றால் நம்மை ஈன்றெடுக்க கடவுள் விரும்பினார்?

59. வார்த்தையைக் கேட்டு அதன்படி நடவாதோர் எதற்கு ஒப்பாவார்?

60. தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமயவாழ்வு எது?

61. தீர்ப்பை வெல்லக்கூடியது எது?

62. உயிர் இல்லாத உடல் போல, ………………………………………. செத்ததே?

63. நெறிகெட்ட உலகின் உரு எது?

64. எவ்விடத்தில் குழப்பமும் எல்லாக் கொடுஞ் செயல்களும் நடக்கும்?

65. விண்ணிலிருந்து வரும் ஞானத்தின் தலையாய பண்பு என்ன?

66. அமைதி ஏற்படுத்துவோர் விதைத்த அமைதி என்னும் விதையிலிருந்து  என்ன கனி விளைகிறது?

67. கடவுளைப் பகைப்பது என்பது யாது?

68. நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால், அது என்ன?

69. யாரேனும் துன்புற்றால் செய்ய வேண்டியது என்ன? மகிழ்ச்சியாயிருந்தால் செய்ய வேண்டியது என்ன?

70. மழை பெய்யக்கூடாது என்று உருக்கமாக இறைவனிடம் வேண்டி மூன்று ஆண்டு ஆறு மாதம் மழையில்லாது போகச் செய்தவர் யார்?

யூதா


71. யூதாவின் சகோதரர் பெயர் என்ன?

72. தலைமைத் தூதரின் பெயர் என்ன?

73. "ஆண்டவர் உன்னைக் கடிந்து கொள்வாராக" என்று கூறியவர் யார்?

74. பொய் காட்சியாளர்களோடு ஒப்பிடப்படும் விவிலிய கதாப்பாத்திரங்கள் மூவர் பெயர்களைக் குறிப்பிடுக?

75. ஆதாமுக்குப்பின் ஏழாந்தலைமுறையாக தோன்றியவர் யார்?


1 திமொத்தேயு 2 திமொத்தேயு தீத்து பிலமோன் வினாடி வினா

 1 திமொத்தேயு

1. விசுவாச அடிப்படையில் என் உண்மையான பிள்ளை என்று பவுல் யாரை குறிப்பிடுகிறார்?

2. பவுல் மாசிதோனியாவுக்குப் போகும்போது திமொத்தேயுவை எங்கு இருக்கும்படி கேட்டுக் கொண்டார்?

3. விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்ட கடவுளின் திட்டத்திற்காகக் பயன்படாமல், ஊக ஆய்வுகளுக்கே இடம் தருக்கூடியவை யாவை?

4. பவுல் கொடுத்த கட்டளையின் நோக்கம் என்ன?

5. திருச்சட்டம் யாருக்காக இயற்றப்பட்டது.

6. இக்கூற்று உண்மையானது; எல்லாராலும் ஏற்றுக்கொள்ளத் தக்கது என்று பவுல் குறிப்பிடும் கூற்று என்ன?

7. மனச்சான்றை உதறித் தள்ளிவிட்டதால் விசுவாசம் என்னும் கப்பல் உடைந்து போகச் செய்த இருவர் பெயர்கள் என்ன?

8. முதன்முதலில் பவுல் தரும் அறிவுரை என்ன?

9. நம் மீட்பராகிய கடவுளின்முன் சிறந்ததும் ஏற்புடையதுமானது என்ன?

10. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவர் யார்?

11. கடவுள் பற்று உள்ளவர்கள் எனச் சொல்லிக் கொள்ளும் பெண்களுக்கு ஏற்ற அணிகலன்கள் என்ன?

12. பெண்கள் எவற்றில் நிலைத்திருந்தால் தாய்மைப் பேற்றின் வழியாக மீட்புப் பெறுவார்கள்?

13. சபைக் கண்காணிப்பாளராக இருப்பவரிடம் பவுல் எதிர்பார்க்கும் குணநலன்கள் யாவை?

14. திருச்சபையில் புதிதாகச் சேர்ந்த ஒருவர் கண்காணிப்பாளராக இருக்கக்கூடாததன் காரணம் என்ன?

15. எல்லா வகையிலும் பயன் தரக்கூடியது எது?

16. நடை பிணங்கள் என்று பவுல் யாரைக் குறிப்பிடுகிறார்?

17. ஒருவர் கைம்பெண்ணாகப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட வேண்டிய வயது என்ன?

18. இளம் கைம்பெண்கள் குறித்து பவுலின்  விருப்பம் என்ன?

19. ஒரு மூப்பருக்கு எதிரான குற்றச்சாட்டை, எத்தனை சாட்சியங்கள் இல்லாமல் ஏற்றுக்கொள்ளாதே என்று பவுல் அறிவுறுத்துகிறார்?

20. எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர் எது?

2 திமொத்தேயு

21. திமொத்தேயுவின் தாய் பெயர் என்ன?

22. திமொத்தேயுவின் பாட்டி பெயர் என்ன?

23. பவுலை பன்முறை  உளம் குளிரப் பண்ணியவர் யார்?

24. பவுலிடமிருந்து விலகிய இருவர் பெயர் என்ன?

25. கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது. சரியா? தவறா?

26. உயிர்த்தெழுதல் ஏற்கெனவே நிகழ்ந்து விட்டதென்று அவர்கள் சொல்லி, உண்மையை விட்டு விலகிப் போய் விட்ட இருவர் பெயர்கள் என்ன?

27. கடவுள் இட்ட அடித்தளத்தில் பொறிக்கப்பட்டுள்ள இரு வசனங்கள் யாவை?

28. மோசேயை எதிர்த்து நின்றவர்கள் யார்?

29. கிறிஸ்து இயேசுவிடம் இணைந்து இறைப்பற்றுடன் வாழ விரும்புவோர் அனைவரும் இன்னலுறுவர். சரியா? தவறா?

30. ………………….. அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது?

31. கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது எது?

32. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் செய்ய வேண்டியது என்ன?

33. உலகப்போக்கை விரும்பி பவுலை விட்டு அகன்று, தெசலோனிக்கா சென்றவர் யார்?

34. பவுல் யாரை எபேசுக்கு அனுப்பினார்?

35. துரோவாவில் கார்ப்புவிடம் விட்டு வந்த எவற்றையெல்லாம் எடுத்து வரவேண்டுமென்று பவுல் திமொத்தேயுவிடம் கூறுகிறார்?

36. பல தீமைகளைச் செய்தவன் பெயர் என்ன?


பொருத்துக


37. கிரேஸ் - தல்மாத்தியா

38. தீத்து - கலாத்தியா

39. எரஸ்து - மிலேத்து

40. துரோப்பிம் - கொரிந்து


தீத்து


41. பவுல் எந்த தீவில் அவர் செய்ய வேண்டியவற்றை ஒழுங்குசெய்து, நகர்தோறும் மூப்பர்களை ஏற்படுத்த விட்டுவிட்டு வந்தார்?

42. யார் கடவுள் பணியில் பொறுப்பாளர்களாய் இருப்பதால், அவர்கள் குறைச்சொல்லுக்கு ஆளாகாதிருக்க வேண்டும்?

43. வயது முதிர்ந்த ஆண்கள் எவ்வாறு வாழ பவுல் அழைப்பு கொடுக்கிறார்?

44. வயது முதிர்ந்த பெண்கள் எவ்வாறு வாழ பவுல் அழைப்பு கொடுக்கிறார்?

45. மீட்பராம் கடவுளின் அருள் யாருக்கு வெளிப்பட்டுள்ளது?

46. கடவுள் எவ்வாறு நம்மை மீட்டார்?

47. எவற்றையெல்லாம் விலக்குமாறு பவுல் தீத்துவுக்கு கட்டளையிடுகிறார்?

48. யாரை தீத்துவிடம் அனுப்பும்போது அவர் நிக்கப்பொலி நகருக்கு வந்து சேரவேண்டுமென்று பவுல் விரும்புகிறார்?


பிலமோன்


49. பிலமோன் மடல் யாருக்கு எழுதப்படுகிறது?

50. பவுல் தன்னை ஏற்றுக் கொள்வது போல யாரை ஏற்றுக்கொள்ள பிலமோனிடம் வேண்டுகிறார்?






கொலோசையர் வினாடி வினா

 கொலோசையர்

1. விண்ணகத்தில் வைக்கப்பட்டிருக்கும் நன்மைகளை எதிர்நோக்குவதால் விளைந்தவை யாவை?

2. கிறிஸ்துவின் உண்மையான திருத்தொண்டர் என்று பவுல் யாரைக் குறிப்பிடுகிறார்?

3. ஆவி உங்களுக்கு அருளிய அன்பைக் குறித்து பவுலிடம் எடுத்துரைத்தவர் யார்?

4. எவற்றை செய்து கடவுளைப்பற்றிய அறிவில் வளரவேண்டும் என்று பவுல் விரும்புகிறார்?

5. எதற்காக மகிழ்ச்சியோடு, தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்த பவுல் அழைக்கிறார்?

6. மகனால் படைக்கப்பட்டவை யாவை?

7. சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால், கடவுள் திருவுளம் கொண்டது என்ன?

8. ஊனுடல் எடுத்த தம் மகனது சாவின் வழியாகக் கடவுள் நம்மிடமிருந்து விரும்புவது என்ன?

9. பவுல் வழங்கும் இறைவார்த்தை ஊழிஊழியாக, தலைமுறை தலைமுறையாக மறைந்திருந்த இறைத்திட்டத்தைப் பற்றியது. அத்திட்டம் என்ன?

10. கிறிஸ்து …………………………. என்னும் எதிர்நோக்கை அவரே அளிக்கிறார்?

11. யாருக்காக பவுல் மிகவும் வருந்தி உழைக்கிறார்?

12. எச்செல்வங்கள் அனைத்தும் கிறிஸ்துவில் மறைந்துள்ளன?

13. இறைத் தன்மையின் முழுநிறைவும் …………………………………ல் குடிகொண்டிருக்கிறது?

14. கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளவர்கள் யார்?

15. கிறிஸ்துவே உண்மை. இவை எல்லாம், வர இருந்தவற்றின் வெறும் நிழலே என்று பவுல் குறிப்பிடுவது என்ன?

16. கிறிஸ்துவோடு இறப்போமாயின் எவற்றிலிருந்து விடுவிக்கப்படுகிறோம்?

17. இச்சையைத் தணிப்பதற்குப் பயன்படாதவைகள் யாவை?

18. கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவர்களானால் எவற்றை நாட வேண்டும்?

19. உலகப்போக்கிலான  இயல்புகள் என்று பவுல் குறிப்பிடுபவை யாவை?

20. நம் வாயினின்று வரக்கூடாதவை எவை?

21. புதுப்பிக்கப்பட்ட நிலையில் நம்மிடம் எவ்வகையான வேறுபாடில்லை என்று பவுல் குறிப்பிடுகிறார்?

22. கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களாகிய நாம் எவற்றால் நம்மை அணிசெய்ய வேண்டும்?

23. அனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச் செய்வது எது?

24. எவற்றை நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள் என்று பவுல் அழைக்கிறார்?

25. உங்கள் பேச்சு எப்பொழுதும்………………………...,…………………………இருப்பதாக!

26. திக்கிக்குடன் பவுல் அனுப்பி வைத்த மற்றொரு சகோதரர் யார்?

27. பவுலின் உடன் கைதி பெயர் என்ன?

28. பர்னபாவின் ஒன்றுவிட்ட சகோதரர் யார்?

29. லவோதிக்கேயா, எராப்பொலி நகரத்தைச் சேர்ந்தவர்களுக்காகவும் கடுமையாக உழைக்கிறவர் யார்?

30. ஆண்டவரது பணியில் தாம் பெற்றுள்ள திருத்தொண்டை நிறைவேறி முடிக்கக் கவனமாயிருக்குமாறு பவுல் யாரிடம் சொல்லச்சொல்கிறார்?


1 தெசலோனிக்கர்


31. கடவுள்மீது தெசலோனிக்கத் திருச்சபை நம்பிக்கை கொண்டிருப்பது……………………………..., ………………………………..  மட்டும் அல்ல, எல்லா இடங்களிலும் தெரியவந்துள்ளது.

32. வரப் போகும் சினத்திலிருந்து நம்மை மீட்பவர் யார்?

33. தெசலோனிக்கத் திருச்சபையிடம் வருமுன்பே எந்நகரில் தாங்கள் துன்புற்றதாக பவுல் கூறுகிறார்?

34. போதனை என்னும் போர்வையில் தாங்கள் பொருள் பறிக்கப் பார்க்கவில்லை. அதற்கு யார் சாட்சி என்று பவுல் கூறுகிறார்?

35. ஆண்டவராகிய இயேசுவையும் இறைவாக்கினரையும் கொன்றவர்கள் யார்?

36. மனித இனத்திற்கே எதிரிகள் யார்?

37. பவுல் ஒருமுறை அல்ல, இருமுறை தெசலோனிக்கத் திருச்சபைக்கு வரத் திட்டமிட்டும் அவரை தடுத்தது யார்?

38. கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் கடவுளின் உடன் உழைப்பாளர் என்று பவுல் யாரைக் குறிப்பிடுகிறார்?

39. தெசலோனிக்கத் திருச்சபையின் நம்பிக்கையையும் அன்பையும் குறித்து நல்ல செய்தி பவுலிடம் கூறியவர் யார்?

40. கடவுள் நம்மை ………………………… அல்ல, …………………………….. அழைத்தார்?

41. ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், யாரை முந்திவிட மாட்டோம்?

42. கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்; அப்பொழுது முதலில் உயிர்த்தெழுபவர்கள் யார்?

43. ஆண்டவருடைய நாள் எவ்வாறு வரும்?

44. எவற்றை மார்புக் கவசமாகவும், தலைச்சீராவாகவும் அணிந்துகொள்ள பவுல் அழைக்கின்றார்?

45. கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் என்ன?


2 தெசலோனிக்கர்

46. தெசலோனிக்க திருச்சபைக்குரிய மடலை எழுதும் மூவரின் பெயர் என்ன?

47. ஆண்டவர் இயேசு வல்லமையுள்ள தம் தூதரோடு வானிலிருந்து வெளிப்படும் போது நிகழுவது என்ன?

48. நெறிகெட்ட மனிதன் யாருடைய ஆற்றலால் வருவான்?

49. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் பவுல் கட்டளையிடுவது என்ன?

50. "உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது" – அதிகாரம் மற்றும் வசனம் குறிப்பிடுக?


Mr Shakthivel Past pupil of Don Bosco NEST skill training and job place...

https://youtu.be/cB8D71qxeJE தொன் போஸ்கோ கல்வி மற்றம் சமூதாய மாற்றத்திற்கான நிறுவனம்   திருப்பூர் மாநகரில் 26 ஆண்டுகாளாக மேலாக சிறந்த தொழ...