எபிரேயர் வினாடி வினா

 எபிரேயர்


1. முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள் இவ்விறுதி நாள்களில் யார் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்?

2. வான தூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப்பேறாகப் பெற்றவர் யார்?

3. தம் முதற்பேறான மகனை உலகிற்கு அனுப்பியபோது, கடவுள் கூறியது என்ன?

4. “தம் தூதரைக் காற்றுகளாகவும் தம் பணியாளரைத் தீப்பிழம்புகளாகவும் செய்கிறார்" என்று கடவுள் யாரைக்குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறார்?

5. “நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்" என்று கடவுள் வானதூதரைப் பார்த்துக் கூறினார்- சரியா? தவறா?

6. யார் வழி எடுத்துரைக்கப்பட்ட செய்தி உறுதியாயிருந்தது?

7. வரவிருக்கும் உலகினை கடவுள் வானதூதரின் அதிகாரத்திற்குப் பணியச் செய்யவில்லை – சரியா? தவறா?

8. “மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்?... என்ற வசனம் விவிலியத்தில் வேறொரு இடத்தில் இடம் பெற்றிருக்கிறது. அப்புத்தகம், அதிகாரம் மற்றும் வசனத்தை குறிப்பிடுக?

9. இயேசுவுக்கு எதனால் மாட்சியும் மாண்பும் முடியாகச் சூட்டப்பட்டது?

10. சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் எதன் வழியாகவே இயேசு அழித்து விட்டார்?

11. கடவுளின் குடும்பத்தினர் அனைவரிடையேயும் யார் நம்பிக்கைக்குரியவராய் இருந்தார்?

12. ஒவ்வொரு வீட்டையும் கட்டி எழுப்ப ஒருவர் இருப்பது போல, எல்லாவற்றையும் கட்டி எழுப்புகிறவர் ஒருவர் இருக்கிறார்; அவர் யார்?

13. மோசேயின் ஊழியமாயிருந்தது எது?

14. எவற்றை நாம் உறுதியாகப் பற்றிக் கொண்டால் கடவுளுடைய குடும்பத்தாராய் இருப்போம்?

15. எது வாழும் கடவுளை விட்டு விலகும்?

16. உங்களுள் எவரும் பாவத்தால் ஏமாற்றப்பட்டு, கடின உள்ளத்தினர் ஆகாதவாறு, ஒவ்வொரு நாளும் ………………………………. என எண்ணி, நாள்தோறும் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுங்கள்.

17. கடவுளது குரலைக் கேட்டும் கிளர்ச்சி செய்தவர்கள் யார்?

18. “நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்" என்று கடவுள் யாரைப்பற்றி ஆணையிட்டுக் கூறினார்?

19. “கடவுள் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்" என்ற வசனம் விவிலியத்தில் வேறொரு இடத்தில் இடம்பெற்றிருக்கிறது. அப்புத்தகம், அதிகாரம் மற்றும் வசனத்தை குறிப்பிடுக?

20. யார் மனிதரிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, பாவங்களுக்குக் கழுவாயாகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காக மக்கள் சார்பாகக் கடவுள் முன் பணிபுரிய ஏற்படுத்தப்படுகிறார்?

21. கிறிஸ்து தலைமைக் குருவாகத் தம்மையே உயர்த்திக் கொண்டார் – சரியா? தவறா?

22. இயேசு இறைமகனாயிருந்தும், எவ்வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்?

23. ஒரு முறை ஒளியைப் பெற்று, விண்ணகக் கொடையைச் சுவைத்தவர்கள் ……………………………………………. பெற்றவர்கள் ஆவர்?

24. சாலேம் நகரின் அரசர் யார்?

25. அரசர்களை முறியடித்துத் திரும்பியபொழுது ஆபிரகாமை எதிர்கொண்டு போய் அவருக்கு ஆசி அளித்தவர் யார்?

26. மெல்கிசதேக்கு என்னும் பெயரின் முதற்பொருள் என்ன?

27. மெல்கிசதேக்கு ………………………………. எனச் சான்றுபெற்றவர்?

28. …………………………………………. வழியே இஸ்ரயேல் மக்கள் சட்டத்தைப் பெற்றவர்கள்.

29. நம் ஆண்டவர்  எக்குலத்தில் தோன்றினார்?

30. யார் குருக்கள் ஆனபோது ஆணை எதுவும் இடப்படவில்லை?

31. திருச்சட்டப்படி யார் குருக்களாக ஏற்படுத்தப்படுகிறார்கள்?

32. ஒவ்வொரு தலைமைக் குருவும் ……………………………,     …………………………… செலுத்தவே ஏற்படுத்தப்பட்டிருக்கிறார்.

33. “மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்ட முறைப்படி நீ இவற்றையெல்லாம் செய்யுமாறு கவனித்துக்கொள்" யார் யாரிடம் கூறியது?

34. ஒரு விளக்குத் தண்டும் ஒரு மேசையும் படையல் அப்பங்களும் இருந்த  இடத்தின் பெயர் என்ன?

35. இரண்டாம் திரைக்குப் பின், ……………………………… என்னும் கூடாரம் இருந்தது?

36. இரண்டாம் கூடாரத்தில் யார் மட்டுமே செல்வார்? அவர் எத்தனை முறை செல்வார்?

37. இரண்டாம் கூடாரத்தில் தலைமைக் குரு எதற்காக இரத்தத்தைப் படைப்பார்?

38. பலியாகப் படைத்த இரத்தம் வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் இரத்தம் - சரியா? தவறா?

39. மோசே கன்றுக்குட்டிகள், வெள்ளாட்டுக்கடாக்கள் இவற்றின் இரத்தத்தைத் தண்ணீரோடு கலந்து கருஞ்சிவப்புக் கம்பளி நூலால் கட்டிய ஈசோப்புச் செடியால் உடன்படிக்கை ஏட்டின்மீதும் மக்கள் அனைவர்மீதும் தெளித்தார்; தெளிக்கும்போது கூறிய வார்த்தை என்ன?

40. ………………………………………………... இன்றி பாவமன்னிப்பு இல்லை.

41. எவற்றின் இரத்தம் பாவங்களைப் போக்காது?

42. இயேசுவின் உடலைக் கோவிலின் ……………………………… ஒப்பிடலாம்.

43. மோசேயின் சட்டத்தைப் புறக்கணித்தவர், இரக்கம் பெறாமல், எத்தனை சாட்சிகளின் வாக்கு மூலத்தின்படி சாக வேண்டியிருந்தது?

44. எதனால் ஆபேல் காயினுடைய பலியைவிட மேலான பலியைக் கடவுளுக்குச் செலுத்தினார்?

45. நம்பிக்யையாலேயே சாவுக்குட்படாதபடி கடவளால் எடுத்துக் கொள்ளப்பட்டவர் யார்?

46. கண்ணுக்குப் புலப்படாதவை குறித்துக் கடவுளால் எச்சரிக்கப்பட்டபோது, தம் குடும்பத்தைக் காப்பாற்ற, கவனத்தோடு ஒரு பேழையை அமைத்தவர் யார்?

47. மோசே பிறந்தபோது, குழந்தை அழகாய் இருக்கக்கண்டு, அவருடைய பெற்றோர் அரசனுடைய ஆணைக்கும் அஞ்சாது, அவரை எத்தனை மாதம் ஒளித்து வைத்திருந்தனர்?

48. ஒரே ஒரு வேளை உணவுக்காகத் தம் தலைப்பேற்று உரிமையை விற்றவர் யார்?

49. யார் கடவுளின் தீர்ப்புக்கு ஆளாவர்கள்?

50. நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர் யார்?


யாக்கோபு


51. யாக்கோபு தனது மடலை யாருக்கு எழுதுகிறார்?

52. ஐயப்பாடு கொள்பவர்கள் யாரைப் போன்றவர்கள்?

53. யார் ஆண்டவரிடம் ஏதாவது பெற முடியும் என நினைக்காதிருக்கட்டும் என்று யாக்கோபு குறிப்பிடுகிறார்?

54. சோதனை வரும்போது, …..…………………………………. என்று யாரும் சொல்லக்கூடாது?

55. கடவுள் எவரையும் சோதிப்பதில்லை. ஒவ்வொருவரும் தம் சொந்தத் தீய நாட்டத்தினாலே சோதிக்கப்படுகின்றனர் – சரியா? தவறா?

56. பாவம் முழு வளர்ச்சியடைந்து எதனை விளைவிக்கிறது?

57. ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருபவைகள் யாவை?

58. தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி எவற்றால் நம்மை ஈன்றெடுக்க கடவுள் விரும்பினார்?

59. வார்த்தையைக் கேட்டு அதன்படி நடவாதோர் எதற்கு ஒப்பாவார்?

60. தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமயவாழ்வு எது?

61. தீர்ப்பை வெல்லக்கூடியது எது?

62. உயிர் இல்லாத உடல் போல, ………………………………………. செத்ததே?

63. நெறிகெட்ட உலகின் உரு எது?

64. எவ்விடத்தில் குழப்பமும் எல்லாக் கொடுஞ் செயல்களும் நடக்கும்?

65. விண்ணிலிருந்து வரும் ஞானத்தின் தலையாய பண்பு என்ன?

66. அமைதி ஏற்படுத்துவோர் விதைத்த அமைதி என்னும் விதையிலிருந்து  என்ன கனி விளைகிறது?

67. கடவுளைப் பகைப்பது என்பது யாது?

68. நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால், அது என்ன?

69. யாரேனும் துன்புற்றால் செய்ய வேண்டியது என்ன? மகிழ்ச்சியாயிருந்தால் செய்ய வேண்டியது என்ன?

70. மழை பெய்யக்கூடாது என்று உருக்கமாக இறைவனிடம் வேண்டி மூன்று ஆண்டு ஆறு மாதம் மழையில்லாது போகச் செய்தவர் யார்?

யூதா


71. யூதாவின் சகோதரர் பெயர் என்ன?

72. தலைமைத் தூதரின் பெயர் என்ன?

73. "ஆண்டவர் உன்னைக் கடிந்து கொள்வாராக" என்று கூறியவர் யார்?

74. பொய் காட்சியாளர்களோடு ஒப்பிடப்படும் விவிலிய கதாப்பாத்திரங்கள் மூவர் பெயர்களைக் குறிப்பிடுக?

75. ஆதாமுக்குப்பின் ஏழாந்தலைமுறையாக தோன்றியவர் யார்?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக